புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
17 Posts - 89%
heezulia
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
353 Posts - 79%
heezulia
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
8 Posts - 2%
prajai
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

104-க்கு கால் பண்ணுங்க!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 12:48 pm

மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நான் ஒதுங்கிய இடம் கோஷா ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும் அரசினர் கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை. உள்ளே 108 ஆம்புலன்ஸுகள் அடிக்கடி போய் வருவதைப் பார்த்து, 'ஏதோ எமர்ஜென்ஸி' என்று உள்ளே நுழைந்தேன். அந்த மருத்துவமனை வளாகத்தில்தான், தமிழகத்தின் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸின் கன்ட்ரோல் ரூம் இருக்கிறது. தமிழகம் முழுவதும் 684 ஆம்புலன்ஸ்கள் ஓடுகின்றன.
104-க்கு கால் பண்ணுங்க! P27b
அங்கிருந்த டெஸ்கில் 50 பேர் பரபரவென பேசியபடி இருந்தனர். பொதுமக்கள் 108-க்கு டயல் செய்ததும் அவர்களின் கால் இந்த கன்ட்ரோல் ரூம் போனுக்குத்தான் வருகிறது. அவர்களிடம் விவரங்களைக் கேட்டு உடனடியாக அந்த ஏரியாவுக்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸுக்குத் தகவல் அனுப்பி வைப்பது இவர்களின் வேலை. இங்கே டாக்டர்கள் டெஸ்க்கும் இருக்கிறது. ஆம்புலன்ஸில் இருப்பவர்களின் நிலைமையைக் கேட்டு டாக்டர்கள் டிப்ஸ் கொடுக்கிறார்கள். இப்படியாக, 160 பேர் மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஆத்தூரிலிருந்து ஒரு போன்...

''இங்கே டோல்கேட் பக்கத்துல ஒரு பஸ்ஸும் லாரியும் மோதி விபத்து. பஸ்ஸில் இருக்கிறவங்க வலியால கத்திட்டு இருக்காங்க. உடனே ஆம்புலன்ஸை அனுப்புங்க..''

அதையடுத்து, அருகில் இருந்த நான்கு ஆம்புலன்ஸுகளை விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைப்பதில் மும்முரமானர்கள்.

அதே நேரம் தஞ்சாவூரிலிருந்து போன்...

''ஐயா... என் பொண்ணு தீ வைச்சுகிட்டா. உடம்பு முழுக்க தீக்காயம். துடிச்சிட்டு இருக்கா. எப்படியாவது காப்பாத்துங்க''

அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு, வேனில் இருந்த ஊழியரிடம், கன்ட்ரோல் ரூமில் இருந்து விசாரிக்கிறார்கள்.
104-க்கு கால் பண்ணுங்க! P26
''70% தீக்காயம். என்ன செய்யலாம்?''

''உடனே, சலைன் வாட்டர் ஏற்றுங்கள். எவ்வளவு சீக்கிரமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியுமோ கொண்டு போங்கள்''- டாக்டர் அட்வைஸ் கொடுக்கிறார்.

கடலூரிலிருந்து போன்...

''சார்.. நெஞ்சுவலிக்குது. மூச்சு வாங்குது. வியர்த்துக்கொட்டுது. வலது கையைத் தூக்கவே முடியலை!''- பாதிக்கப்பட்டவரே பேசுகிறார்.

இந்தத் தகவல் சொன்னவரின் முகவரிக்கு ஆம்புலன்ஸ் விரைகிறது.

''வென்டிலேட்டர் இணைத்துவிட்டோம். இதயத்துடிப்பு தாறுமாறாக இருக்கிறது. ஆஸ்பத்திரியை நெருங்கிவிட்டோம்'' என்று ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தருகிறார்.

சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்தரியில் இருந்து அவசர அழைப்பு...

''தலையில் காயம். அவரை உடனடியாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும். உடனே வரவும்'' என்று போன் வர, 108 கன்ட்ரோல் ரூம் வளாகத்தில் நின்ற ஆம்புலன்ஸ் நீல விளக்குகள் ஒளிர... சைரன் எழுப்பியபடி கிளம்பியது. நானும் தொற்றிக்கொண்டேன்.
104-க்கு கால் பண்ணுங்க! P27a
வேனில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளர் நாகேந்திரன், ''இப்படித்தான் சார்... நேத்து பீச் ரோட்டுல பைக் ஸ்கிட் ஆகி ஒருத்தர் விழுந்து கிடந்தாரு. முகமெல்லாம் சிதைஞ்சு கிடந்துச்சு. தூக்கிட்டுப்போய் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அவரோட குடும்பத்தை நினைச்சா கஷ்டமாயிருக்கு. அவரை நம்பி எத்தனை ஜீவன் இருக்கோ?'' என்றார்.

வேன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. ஒரு இளைஞர் நினைவிழந்து கிடந்தார். அருகில் அவரது குடும்பத்தினர் பதற்றத்துடன் நின்றிருந்தனர்.

''ஐயா... எங்க பையன் பேரு ராஜன். 17 வயசுதாங்க ஆகுது. கொஞ்சம் முன்னாடி, பைக் ஆக்ஸிடென்ட். மூக்குல ரத்தம் வருது. தலைக்காயமா இருக்கு. இங்கே பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க...'' என்று சொல்லி கதறினர்.

ஸ்ட்ரச்சரில் படுக்கவைத்து வேனில் ஏற்றினர். ஆம்புலன்ஸின் பின்புறம் மினி எமர்ஜென்சி வார்டு இருந்தது. ஹார்ட் அட்டாக், தலைக்காயம், உடல் உறுப்புகள் துண்டானால் அவற்றைப் பாதுகாக்கப் பெட்டி என்று ஏகப்பட்ட உபகரணங்கள் தயார் நிலையில் இருந்தன. ராயப்பேட்டை டூ பொது மருத்துவமனை செல்லும் வழியில், இளைஞரின் உடல்நிலை குறித்து கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுத்தபடி இருந்தனர்.

ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நுழைந்தது. நான் சென்ற ஆம்புலன்ஸில் இருந்த இளைஞரை எமர்ஜென்சி வார்டுக்குள் ஸ்ட்ரச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு ஓடினார்கள். சென்னை மற்றும் புறநகர், வடமாவட்டங்களில் எங்கு விபத்து நடத்தாலும் பெரிய மருத்துவமனை என்பதால் இங்கேதான் ஆம்புலன்ஸில் தூக்கி வருகிறார்கள்.
104-க்கு கால் பண்ணுங்க! P27
ரிட்டர்ன் டு கன்ட்ரோல் ரூம். கால் சென்டர் மாடியில், 104 ஹெல்த் ஹெல்ப் லைன் கால் சென்டர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 'சார், நான் கிண்டியில இருந்து பேசுறேன். காலையில இருந்து வயிறு வலியாக இருக்கு. என்ன மாத்திரை சாப்பிடலாம்?’ என்று கேட்டார் ஒருவர். அவர் பெயரையும், முகவரியையும் கேட்டு அவருக்கு ஒரு ஐ.டி நம்பர் கொடுத்தார்கள். பிறகு, அவரது லைன், டாக்டருக்கு மாற்றப்பட்டது. அவரது பிரச்னைகளை கேட்டார் டாக்டர். 'வயிறு வலிக்கு எடுத்ததும் மாத்திரை போட வேண்டாம். நார்ச் சத்துள்ள காய்கறிகள் நிறைய சாப்பிடுங்க. காலையில் ரெகுலரா வாக்கிங் போங்க... அதுக்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் டாக்டரைப் பாருங்க’ என்று வழிகாட்டினார். மருத்துவம் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் இங்கே 24 மணி நேரமும் ஆலோசனை வழங்குகிறார்கள். அதேபோல், தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏதாவது குறைபாடு என்றாலும், கிராமப்புறங்களில் மர்மக்காய்ச்சல், தொற்றுநோய் எதுவானாலும் இதே எண்ணுக்குப் போன் மூலம் தகவல் தரலாம். இதற்காகவே, 2,500 செல்போன் நம்பர்களை அங்கிருக்கும் முக்கிய அதிகாரிகளுக்கு கொடுத்து வைத்திருக்கிறார்கள். எங்கிருந்தாவது புகார் வந்தால், இந்த செல்போனுக்கு ஹெல்ப் லைனில் இருந்து போன் போகிறது.

தென் சென்னையில் இருந்து வந்த ஒரு போன் கால்...

''எனக்கு மனசே சரியில்லை. தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன். யாருகிட்டயாவது பேசணும்போல இருந்தது. அதான் போன் பண்ணினேன்'' என்று பேச ஆரம்பித்தார் ஒருவர். அவரை சமாதானப்படுத்திப் பேசினார் கால் சென்டர் ஹேமலதா. நைஸாக அவரது சகோதரரின் போன் நம்பரை வாங்கிவிட்டார். இன்னொரு லைனில் அவரது சகோதரருக்குத் தகவல் சொல்லி அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பினார்கள். அதுவரை அவரிடம் பேச்சுகொடுத்தபடியே இருந்தார் ஹேமலதா.

கால் சென்டரில் இருப்பவர்களிடம் நான் கேட்டேன். ''ஏதாவது மிரட்டல் கால்கள் வந்திருக்கா?''

''நேத்துகூட உயர் நீதிமன்றம் அருகில் குண்டு வெடிக்கும் என்று கால் வந்தது. போலீஸுக்குச் சொல்லிட்டோம். கடலூரில் இருந்து ஒரு பெண்மணி விவகாரத்து ஆன அவரது கணவரை மாட்டிவிடுவதற்காக ஒரு தந்திரம் செய்தார். திருமண பரிசாக கணவர் வாங்கிக்கொடுத்த செல்போனில் இருந்து மிரட்டல் விடுத்திருக்கிறார். அதில் மாட்டிக்கொண்டார். இப்படி அடிக்கடி வரும். வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி விஷயத்தை போலீஸுக்குச் சொல்லிவிடுவோம்'' என்றனர்.

''கடந்த ஆறு வருடங்களில் 108-க்கு மூணு கோடி அவசர போன்கள் வந்துள்ளன. அவற்றில் பல லட்சம் பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். குறிப்பாக, எட்டு லட்சம் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக இதில் பயணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தது மனசுக்கு நிறைவாக இருந்தது'' என்று சொன்னார்கள்.

ஆந்தை கண்ணில் நல்ல விஷயங்கள் படக்கூடாதா என்ன?


ஜூனியர் விகடன்

14 Sep, 2014


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக