புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_m10ஷிர்டி சாய் பாபா - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷிர்டி சாய் பாபா


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:33 am

First topic message reminder :

ஷிர்டி சாய் பாபா - Page 3 TN_20140304174343334238

உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதிகாலையில், ஷிர்டி பாபா வசிக்கும் மசூதிக்குச் சென்ற யாரோ ஒரு பெண்தான், முதன்முதலில் அந்த விந்தையான காட்சியைக் கண்டிருக்கிறாள். உடனே ஓடோடி வந்து, பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்ல, விறுவிறுவென்று செய்தி பரவிவிட்டது. எல்லோரும் அவசர அவசரமாக பாபா வாழும் மசூதியை நோக்கி ஓடலானார்கள். பலருக்கு வேகமாக ஓட முடியாத நிலை... காலராவால் அவர்கள் உடல் மிகவும் தளர்ந்திருந்தது. சில நாட்களாகவே காலரா அந்த கிராமத்தில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. 1910ம் ஆண்டல்லவா அது! அப்போது காலராவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மருத்துவ வழி முறைகள் பிரபலமாகவில்லை. ஷிர்டி மக்கள், தங்கள் கிராமத்தில் வாழும் பாபாவையே சரணடைந்து வாழ்ந்தார்கள். தெய்வசக்தி, இந்த மண்ணில் பாபா என்ற மனித உடலில் இறங்கிப் பல திருவிளையாடல்களைப் புரிந்து வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நேற்றிரவு ஏராளமான பேர் அவர் வசிக்கும் மசூதிக்குச் சென்று தங்களைக் காலராவில் இருந்து காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தார்கள். பிறவிப் பிணியிலிருந்தே மக்களைக் காப்பாற்றக் கூடியவர், உடல் பிணியிலிருந்து காப்பாற்ற மாட்டாரா? பாபா தெய்வீகப் புன்முறுவலோடு பேசலானார்: நீங்களெல்லாம் என் குழந்தைகள் இல்லையா! உங்களைக் காப்பாற்றத் தானே உலகிற்கு வந்திருக்கிறேன்!

படைத்தல், காத்தல், அழித்தல் என்று நான் செய்யும் முத்தொழிலில் காத்தல் தொழிலை நான் நிகழ்த்துவதற்கான காலம் அல்லவா இது! குழந்தைகளே! தீய சக்திகள் தான் உலகில் நோயைப் பரப்புகின்றன. நோய்க்கு மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. கிளையை வெட்டினாலும் மரம் மீண்டும் வளரும். மரத்தை அழிக்க மரத்தின் வேரை அழிக்க வேண்டும். நீங்கள் நோய்க்கு உங்களால் இயன்ற மருந்து சாப்பிடுங்கள். அது கிளையை வெட்டும் வேலை. ஆனால், நோயை உண்டுபண்ணும் பகைச் சக்தி என்ற மரத்தின் வேரை அல்லவா வெட்ட வேண்டுமல்லவா! அந்தச் செயலை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் மனத்தில் உள்ள காமம், குரோதம் முதலிய பகைச் சக்திகளை நீங்கள் வெட்டிச் சாய்த்துவிட்டால் உடல் பிணி மட்டுமல்ல, பிறவிப் பிணியே குணமாகிவிடும்,. அமிர்தத் துளிகள் போல் பாபா பேசிய பேச்சைக் கேட்டு மக்கள் நிம்மதியோடு வீடு  திரும்பினார்கள். இதெல்லாம் நேற்றின் கதை. ஆனால், இன்று அதிகாலை பாபாவைப் பற்றி விந்தையான அந்தச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாள் அவரைக் காலையில் தரிசித்த பெண்மணி. அடியவர் கூட்டம் பாபா முன் குழுமியது. அவர் மாவரைக்கும் கல் இயந்திரத்தின் முன்னால் கால்நீட்டி அமர்ந்திருந்தார். பக்கத்தில் முறத்தில் கோதுமை குவிக்கப்பட்டிருந்தது.

அவர் ஒரு சாக்கைத் தரையில் விரித்து, அதன் மேல் திருகையை வைத்திருந்தார். இந்த யந்திரம், இந்தச் சாக்கு, இந்தக் கோதுமை எல்லாம் எங்கிருந்து தான் வந்ததோ! அவர் காற்றிலிருந்து கூட எதையும் வரவழைக்கும் ஆற்றல் உள்ளவர் அல்லவா! தன் நீண்ட அங்கியின் கைப்புறத்தை மடித்துவிட்டுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கோதுமையை எடுத்துத் திருகையின் மேலிருந்த குழியில் போட்டார் பாபா. பின் கோதுமையை மாவாக அரைக்கலானார். அரைபட்ட மாவு வழிந்து கீழே கொட்டத் தொடங்கியது. பாபாவின் முகத்தில் சீற்றம். அவர் அழுத்தி அழுத்தி திருகையின் மரக் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டே கோதுமையோடு பேசத் தொடங்கினார்.ம்! ஓடு! இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விடு! என் குழந்தைகளையா துன்புறுத்துகிறாய்? என்ன தைரியம் உனக்கு? இவர்கள் பக்கம் நீ கையை நீட்டினால், நீதான் அரைபட்டுச் சாகவேண்டும். புரிகிறதா? இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன செய்வது? முதலிலேயே அல்லவா புத்தி வந்திருக்க வேண்டும்? இந்த எல்லைக்குள் இனி வரக்கூடாது. சத்தியம் செய்துகொடு. ம். ஓடியே போய்விடு! - பாபா இப்படி ஏதேதோ சொன்னவாறே, அந்த யந்திரத்தின் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தார். அரைபட்ட கோதுமை மாவு சரசரவெனக் கீழே கொட்டியது.

பாபா கைவலிக்க மாவரைப்பதைப் பார்த்துக் கூட்டத்திலிருந்த சில பெண்மணிகள் ஓடோடி வந்தார்கள். பாபா! இந்த வேலை எல்லாம் உங்களுக்குப் பழக்கமில்லை. உங்களுக்குக் கைவலிக்கும். சற்றுத் தள்ளிக்கொள்ளுங்கள். நாங்கள் அரைக்கிறோம். அவர்கள் அன்பால் விளைந்த உரிமையோடு பாபாவின் கையைப் பிடித்து நகர்த்தி விட்டு, திருகையின் மரப்பிடியைப் பிடித்து அரைக்கலானார்கள். பாபா சிரித்தவாறே அவர்கள் மாவரைக்க அனுமதி அளித்துவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டார். பாபா சிரிக்காமல் என்ன செய்வார்? அண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளுக்கு மாவரைக்கும்போது கைவலிக்கும் என்று பதறுகிறார்களே இந்தப் பெண்கள்! ஆனால், அந்தப் பெண்கள் தன்மேல் செலுத்திய பக்தி, பாபாவின் மனத்தில் கல்கண்டாய்த் தித்தித்தது. பாபா அடியவர்களிடமிருந்து பக்தியை மட்டும் தானே எதிர்பார்க்கிறார்! எத்தனையோ அடியவர்கள் அவருக்கு என்னென்ன பொருட்களையோ காணிக்கையாய்க் கொண்டு வருகிறார்கள். ஜகஜ்ஜோதியாய் அகில உலகையும் தன் பிரகாசத்தால் துலங்கச் செய்யும் சூரியனுக்கு, கற்பூர ஆரத்தி காண்பிப்பது மாதிரி! அடேய். நான் கேட்பது உன் தீய குணங்களை.

அதைக் கொண்டுவந்து என் காலடியில் போடு. இனித் தீய நினைவுகளில் கூட ஆழமாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடு!- பாபாவின் கண் பார்வை பக்தர்களை அதட்டுகிறது.... எல்லா கோதுமையும் அரைபட்டதும் மாவை என்ன செய்யவேண்டும் எனப் பணிவோடு கேட்கிறார்கள் பெண்கள். மாவை நான்கு கூறாகப் பிரியுங்கள். ஷிர்டி கிராமத்தின் நான்கு எல்லைகளிலும், இந்த மாவை வேலி போல் தூவிவிட்டு வாருங்கள். உடனடியாக இதைச் செய்யுங்கள்! வந்த கூட்டம் மொத்தமுமே நான்காகப் பிரிந்தது. அந்த மாவு பயபக்தியோடு கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் வேலிபோல் தூவப்பட்டது. மறுகணம் காலரா அந்த எல்லையைத் தாண்டி வெளியேறிவிட்டது. காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆரோக்கியம் அடைந்தார்கள். பாபாவின் பாதங்களில் பணிந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள். பாபா அரைத்தது கோதுமையை அல்ல. காலராவைத் தூண்டிய தீய சக்தியை! இப்படி ஷிர்டி பாபா செய்த அற்புதங்கள் எத்தனையோ...பாபாவின் புனிதத் திருச்சரிதமே அற்புதமானது. சுந்தரகாண்டம் போல், நாராயணீயம்போல் ஷிர்டி பாபாவின் சரித்திரமும் பாராயணம் செய்வதற்கு உரியது. அந்தச் சரிதத்தைப் படிக்கும் அனைவருக்கும் எல்லா மங்கலங்களையும் தரக் கூடியது. கடவுளே மனித வடிவெடுத்த அந்த மகானின் புனிதத் திருச்சரிதம் இனி.....



ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:41 am


அவரது வாயில் நுரை தள்ளத் தொடங்கியது. அவர், தனக்கு என்ன நடந்ததென்றே அப்போதுதான் புரிந்து கொண்டார். சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். பார்த்தவர்கள் அத்தனை பேரும் பதறித் துடித்தார்கள். யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. அந்தக் கொடிய விஷத்தின் பாதிப்பால் அவர் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் என்ன செய்வது இப்போது? அதிர்ச்சியில் தத்தளித்தார்கள் அவர்கள். ஆனால், மாதவராவுக்குத் தான் பாபா மேல் தீவிர நம்பிக்கை உண்டே? இதுவரை தன் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றியவர் மனித வடிவில் வந்திருக்கும் அந்தக் கடவுள் தானே! இந்தச் சிக்கலில் இருந்தும் அந்தக் கடவுள் தன்னைக் காப்பாற்ற மாட்டாரா என்ன! பாபாவிடம் சரணடைந்தால் தப்பித்துவிடலாம் என அவர் சரியாகவே முடிவெடுத்தார். ஒருகணம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக பாபா தங்கியிருந்த மசூதிக்கு வாயில் நுரை தள்ளத் தள்ள ஓடி வந்தார். அவருடன் மற்றவர்களும் கவலையோடு அவரைப் பின்தொடர்ந்து ஓடிவந்தார்கள். என்னைக் காப்பாற்றுங்கள் பாபா. என்னைக் காப்பாற் றுங்கள்! உங்களையே சரணடைந்திருக்கும் என்னைக் கைவிட்டு விடாதீர்கள்! என்று கதறியவாறே அவர் மசூதிப் படிகளில் தன்னால் இயன்றவரை வேகமாக ஏறத் தொடங்கினார். கொட்டியதோ கொடிய விஷமுள்ள கருநாகம்.

அது கடித்தால் மரணம் என்பது நிச்சயம். கடும் விஷத்தின் பாதிப்பிலிருந்து பாபா எப்படி இவரைக் காப்பாற்ற முடியும்? சிலர் சந்தேகப்பட்டார்கள். பலர், பாபா நினைத்தால் இவரைக் காப்பாற்றி விட முடியும் என்று முழுமையாக நம்பினார்கள். மசூதியில் படிமேல் ஏறிக் கொண்டிருந்தவரைக் கூர்மையாகப் பார்த்தார் பாபா. வாயில் நுரை தள்ளத் தள்ளப் படிகளில் மேலேறி வரும் தன் அடியவனைப் பாம்பு கடித்திருக்கிறது என்பது உடனேயே அவருக்குத் தெரிந்து விட்டது. அவரது கண்பார்வையின் கூர்மை பார்த்தவர் களைத் திகைக்க வைத்தது. அடுத்த கணம் தன்னையே நம்பி வந்த அந்த அடியவரைப் பார்த்து, ஏறாதே! நான் கட்டளையிடுகிறேன். ஏறாதே! நில்! இறங்கு! உடனடியாகக் கீழே இறங்கு! என்று பாபா ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டார். அவரது உரத்த கூச்சல் திடுக்கிடும் அளவு அச்சம் தருவதாக இருந்தது. கேட்ட மக்கள் அனைவரும் வெலவெலத்தார்கள். தான் எந்தத் தவறும் செய்யவில்லையே! பாபா தன்னைக் காப்பாற்றுவார் என்றல்லவோ தேடிவந்தோம், இப்போது நாம் நம்பி வந்த பாபா இப்படிச் சொல்கிறாரே, என்ன செய்வது என பாபாவின் தீவிர அடியவரான மாதவராவ் திகைத்துச் செய்வதறியாது அப்படியே படிகளில் மேலே ஏறாது நடுவில் நின்றார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தினரும் கூட அருளேவடிவான பாபா, இப்படிச் சொல்ல என்ன காரணம் என்றறியாமல் விக்கித்து நின்றனர்.



ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:42 am

ஆனால், அடுத்த கணம்தான் மாதவராவுக்கும் சரி... கூடியிருந்த மக்களுக்கும் சரி... பாபா சொன்ன வார்த்தைகளின் பொருள் புரியத் தொடங்கியது. உண்மையில் பாபா ஏறாதே! இறங்கு! என்று ஆணையிட்டது மாதவராவுக்கல்ல! மாதவராவின் உடலில் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருந்த கடுமையான விஷத்திற்கு! பஞ்ச பூதங்களுமே பாபாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் என்னும்போது விஷம் என்ன பிரமாதம்? அதுவும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும்? பாபாவின் ஆணைக்குப் பணிந்து, அடுத்த கணமே மாதவராவின் உடலில் ஏறிக்கொண்டிருந்த விஷம் சரசரவென இறங்கத் தொடங்கியது. கொட்டுவாயின் வழியாக விஷம் வெளியேறியதையும், மாதவராவ் உடல் நீல நிறம் மாறிப் பழைய நிறம் பெறத் தொடங்கியதையும் பார்த்துப் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். படிகளில் தடதடவென மேலே ஏறிச்சென்ற மாதவராவ், என்னைக் காப்பாற்றிய தெய்வமே! என்று பாபாவின் பாதங்களில் பணிந்தார்.

அடியவர்களைக் காக்கும் அந்தத் தாமரைப்பூம் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவினார். அவரை அள்ளியெடுத்த பாபா, என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்! என்றவாறே மாதவராவின் விழிகளில் வழிந்த கண்ணீரைத் தம் விரல்களால் துடைத்து விட்டார். அன்பே வடிவான பாபாவின் அளப்பரிய கருணையைக் கண்டு பக்தர்கள் நெகிழ்ந்தார்கள். இவ்விதம் பாபாவின் மகிமைகள் பரவினாலும், தொடக்க காலத்தில் ஷிர்டியிலும் சிலர் பாபாவைப் பைத்தியக்காரர் என நினைத்ததுண்டு! கானகத்தில் திரிவது, உடை பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பது, பித்துப் பிடித்தாற்போல் மரத்தடிகளில் பல மணிநேரம் கண்மூடி அமர்ந்திருப்பது இதெல்லாம் பைத்தியக்காரரின் அடையாளங்கள் என்பது அவர்களின் எண்ணம். மகான்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் வெளித்தோற்றத்தில் அதிக வித்தியாசமில்லை என்பதை அவர்கள் அறியவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சரைக் கூடப் பைத்தியம் என்றுதானே தொடக்கத்தில் மக்கள் கருதினார்கள்! அவர் சாதாரணப் பைத்தியம் அல்ல, ஆன்மிகப் பைத்தியம்.. கடவுளை நேரில் தரிசித்துக் கடவுளாகவே மாறியவர் அவர் என்பதெல்லாம் மக்களுக்கு மெல்ல மெல்லத் தானே புரிய வந்தன! பாபாவைப் பைத்தியம் என நினைத்தார்கள் சில எண்ணெய் வியாபாரிகள்.

பாபாவைத் தேடி வெளியூரிலிருந்தெல்லாம் அடியவர்கள் வருவதைப் பார்த்து அவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்த அற்புதமும் நிகழ்த்திக் காட்டப்படவில்லை. எனவே அவர்கள் பாபாவைத் தெய்வம் என நம்ப மறுத்தார்கள். ஆனால், அவர்களும் பாபாவைப் பூரணமாக நம்பி ஏற்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பாபா, தன் மசூதியில் திசைக்கு ஒன்றாக நான்கு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். விளக்குகள் எரிய எண்ணெய் வேண்டுமே! தமக்கான உணவை யாசிப்பதுபோல, விளக்கிற்கான எண்ணெயையும் அவர் பல கடைகளில் யாசித்துப் பெறுவதுண்டு. தொடர்ந்து பாபாவுக்கு எண்ணெய் வணிகர்கள் மூலம் எண்ணெய் கிடைத்து வந்தது. ஒருமுறை பாபா எண்ணெய் கேட்டு வந்தபோது, அந்த வணிகர்கள் யோசித்தார்கள். இந்தப் பைத்தியத்திற்கு எண்ணெய் கொடுக்க வேண்டிய அவசியமென்ன? தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, எல்லா வியாபாரிகளுமே எண்ணெய் தர மறுத்துவிட்டார்கள். பாபாவின் மசூதியில் விளக்கெரிய எண்ணெய் தருவது மாபெரும் புண்ணியச் செயல் என்பதை அந்த அறிவிலிகள் அறியவில்லை. பாபா ஏற்றும் விளக்குகளால் தான் அந்த ஊரின் தீமைகள் சுட்டெரிக்கப்படுகின்றன என்பதையும் அவர்கள் உணரவில்லை.




ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:42 am


பாபா தமக்கு எண்ணெய் தரப்படாததைப் பற்றி எதுவும் கூறவில்லை. புன்முறுவலோடு மசூதியை நோக்கி நடந்தார். வியாபாரிகள் கண்சிமிட்டித் தங்களுக்குள் நகைத்துக் கொண்டார்கள். இவர் இன்று எப்படி விளக்குகளை ஏற்றுவார் பார்க்கலாம் என்று சில வணிகர்கள் மசூதிக்கு வேடிக்கை பார்க்க வந்தார்கள். பாபா மண்பானையில் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரைக் குவளையில் எடுத்தார். பின் அந்தத் தண்ணீரை எல்லா விளக்குகளிலும் ஊற்றினார். அதன்பின் திரியை ஏற்றினார். பாபாவின் கட்டளைக்கு அந்தத் திரிகள் பணிந்தன. தண்ணீரை அவை எண்ணெயாகக் கருதத் தொடங்கின. எல்லா விளக்குகளும் தண்ணீரால் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தன. இதைப் பார்த்த எண்ணெய் வணிகர்கள் மனத்தில் அச்சம் தோன்றியது. ஊருக்குள் ஓடிச் சென்று மக்களிடமும் சக வணிகர்களிடமும் இந்த அற்புதம் பற்றி திகைப்புடன் விவரித்தார்கள். மக்களும் வணிகர்களும் பெருந்திரளாக ஓடோடி வந்து தண்ணீரால் விளக்குகள் எரியும் அதிசயத்தைக் கண்டு பிரமித்துப் போனார்கள். எல்லா வணிகர்களும் பாபாவின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். பாபா எண்ணெய் கேட்டது தனக்காக அல்ல. தங்களின் பாவங்களைப் போக்குவதற்காகத்தான் என்பதை அவர்கள் அப்போதுதான் புரிந்து கொண்டார்கள். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் பாபாவுக்குக் கட்டுப்பட்டவை என்ற பேருண்மையையும் அறிந்துகொண்டார்கள்.

பாபா கலகலவென்று நகைத்தார். எல்லோரையும் தட்டிக் கொடுத்தார். வேறு எதுவும் பேசவில்லை. அவர் பேசாத விஷயங்களையெல்லாம் தண்ணீரால் எரிந்துகொண்டிருந்த தீபங்கள் ஒளிமொழியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தன. தென்னகத்து மகானான வள்ளலார் வாழ்வில் கூட, அவர் தண்ணீரால் விளக்கேற்றிய சம்பவம் வருகிறதே! பக்தி என்னும் எண்ணெய் ஊற்றி அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞானம் என்னும் சுடரை எரியச் செய்பவர்கள் அல்லவா மகான்கள்? ஒருநாள் மாலை மயங்கும் நேரம். ஒரு நீதிபதி பாபாவை தரிசிக்க வந்தார். பாபா உண்பதற்குஎன்று பிரியத்தோடு போண்டா பொட்டலம் வாங்கி வந்திருந்தார் அவர். போண்டாவை ருசித்துச் சாப்பிட்டார் பாபா. பொட்டலத்தில் கட்டப்பட்டிருந்த மெல்லிய நூலை ஞாபகமாகத் தன் ஆள்காட்டி விரலில் சுற்றிக் கொண்டார். போண்டா சாப்பிட்டு முடித்ததும் அந்த நூலை தான் தங்கியிருந்த மசூதியின் வெளியே தள்ளித் தள்ளி இருந்த இரு தென்னை மரங்களின் இடையே இணைத்துக் கட்டினார். அப்போது அங்கே நீதிபதியையும், பாபாவையும் தவிர வேறு யாருமில்லை. அந்த நூலால், இரண்டு தென்னை மரங்களை இணைத்துக் கட்ட வேண்டிய அவசியமென்ன என்று நீதிபதிக்குப் புரியவில்லை. நான் ஓய்வெடுக்கப் போகிறேன். நீங்கள் புறப்பட்டுப் போவதானால் போகலாம்! என்றார் பாபா. அடுத்த கணம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்து நீதிபதிக்குக் கிறுகிறுவென்று தலை சுற்றியது....!



ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:42 am

நீதிபதியின் தலைசுற்றிய காரணத்தைக் கேட்டால், நமக்கும் தலை சுற்றும். காரணம், ஓய்வெடுக்கப் போவதாகச் சொன்ன பாபா, தாவி ஏறி, ஒரு நூலில் படுத்துக் கொண்டு ஆனந்தமாக உறங்கலானார். ஒரு மனிதர் தரையில் படுக்கலாம். பாயில் படுக்கலாம். கட்டிலில் படுக்கலாம். ஆனால், ஒரு மெல்லிய நூலில் எப்படிப் படுக்க முடியும்? நீதிபதிக்குத் தன் கண்ணையே நம்ப முடியவில்லை.ஆனால், நம்ப முடியாததைஎல்லாம் நிகழ்த்திக் காட்டுவதுதானே பாபாவின் மகிமை!ஒரு நூலில் படுக்குமளவு, தம்மை எப்படி கனமே இல்லாதவராகஆக்கிக் கொண்டார்? நீதிபதிக்கு எதுவும் புரியவில்லை.கண்களில் பக்திக் கண்ணீர் பெருக, நெடுநேரம் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி, பாபாவைக் கீழே விழுந்து வணங்கி மனத்தில் அவரைபூஜித்தவாறே இல்லம் திரும்பினார்.பாரததேசம்சுதந்திரம் அடைவதற்கு முன், ஷிர்டியில்தரிசனம் தந்த பாபாவை, திலகர்உள்ளிட்டசுதந்திரத் தியாகிகள்பலரும் சென்றுசந்தித்திருக்கிறார்கள்.

நாட்டு மக்களிடம் சுதந்திர எழுச்சியை ஊட்டியவர்களில் மிக முக்கியமானவர் அல்லவா லோகமான்ய பால கங்காதர திலகர்! இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் விநாயகரை வழிபடுவதால், விநாயகர்வழிபாட்டின் மூலம் பாரத மக்களிடையேஒற்றுமையை உருவாக்க முடியும்என்பதை உணர்ந்தார் அவர். நாடெங்கும்விநாயகர்சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட வழிவகுத்து,ஊர்வலங்கள் நடத்தி, அதன்மூலம் பாரத மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியைத்தூண்டினார். பகவத் கீதைக்கு உரை எழுதி அதன்மூலம்பெரும்புகழ் பெற்றார். பாபாவின் மகிமை குறித்து அறிந்த அவர், பாபாவை நேரில் சென்று சந்தித்தார். 1912 மார்ச் 12ல், அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மகாத்மா காந்தியும் பரமாச் சாரியாரும் (காஞ்சிப்பெரியவர்) சந்தித்த சந்திப்பைப் போல், பாபாவும், திலகரும்சந்தித்த சந்திப்பும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.தாதா சாஹப் கபார்டே என்ற வழக்கறிஞர், பாபாவின்அடியவராகவும் திலகரின் நண்பராகவும் இருந்தார்.அவர்தான், திலகரை பாபாவிடம் அழைத்து வந்தார். பாபாவைப் பரவசத்தோடு தரிசித்த திலகர், அவரது கமலப்பூம் பாதங்களில் தலை வைத்து வணங்கினார்.

பாபாவை தத்தாத்ரேயரின்அவதாரம் (சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சம் கொண்டவர்தத்தாத்ரேயர்) என்றேதிலகர் நம்பினார்.பாபா, திலகருக்கு அந்தரங்கமாகச் சில அறிவுரைகள் கூறினார்.இந்தியா சுதந்திரம் பெற்றதில், பாபாவின் அருளாசியும்அறிவுரைகளும் கூடப் பின்னணியில் இருந்தன என்பதை இந்தச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.திலகர் பாபாவைச் சந்தித்துச் சென்ற பின்னர், பாபா வசித்தபிரதேசமான அகமத் நகர்மாவட்டத்தின் ஆணையர், அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார். சுதந்திரப் போரில் பாபாவுக்கு என்ன பங்கு என்று கண்காணிக்க விரும்பினார். பாபாவின் நடவடிக்கைகளைக் கண்டறிந்து, ரகசிய அறிக்கைகளைத் தமக்கு அனுப்புமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். எல்லோரையும் கண்காணிக்கும் கடவுளையே, கண்காணிக்க முயன்ற அந்த அதிகாரியின் பேதைமையை என்னென்பது! கட்டாயம் இந்தியா சுதந்திரம் அடையும் என்று பாபா ஆசிகூறியதாகவும், ஆனால் அகிம்சை முறையிலேயே அது நிகழும் என்று பாபா திட்டவட்டமாகத்திலகரிடம் அறிவித்ததாக கூறுகிறார்கள். எனினும், பாபா - திலகர் சந்திப்பு பற்றி ஓரளவு அறிய முடிகிறதேயன்றி, அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது பற்றிய முழுமையான விவரங்கள் கிட்டவில்லை.




ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:42 am


அப்போது நடந்தது பிரிட்டிஷ்அரசாங்கமாதலால், பாபாவும்திலகரும் பேசிய பேச்சின்விபரங்கள், மிக ரகசியமாகப்பாதுகாக்கப்பட்டதேஇதற்குக் காரணம்.ஷிர்டியில், காஷிராம்என்றொரு துணி வியாபாரிஇருந்தார். பாபாவின் தீவிர பக்தர். உண்ணும் போதும், உறங்கும்போதும், துணி விற்கும்போதும் பாபாவை நினைத்தவாறே வாழ்ந்து வந்தார். பாபா மனிதவடிவில் வந்துள்ள தெய்வம் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தார். பாபாவை அடிக்கடித்தரிசிப்பதில் அவருக்குத் தீராதஆர்வமுண்டு. பாபாவின் புனிதத் திருமுகத்தையும், அதில்பொங்கும் கருணையையும்திகட்டத் திகட்டப் பார்த்துக்கொண்டே இருப்பதில் அவருக்கு ஒரு தனி ஆனந்தம். நிவேதனப் பொருள் எதையேனும் ஆழ்ந்த பக்தியோடு எடுத்துக் கொண்டு பாபாவைப் பார்க்கச் செல்வது அவர் வழக்கம்.அப்படித்தான் ஒருமுறை,ஒரு சிறு துணிப்பையில்,பாபாவுக்காகக் கொஞ்சம் சர்க்கரை எடுத்துக் கொண்டு, பாபாவைதரிசிக்கப் புறப்பட்டார். பாபாவை நினைக்கும் போதெல்லாம், மனமேசர்க்கரையாய்த் தித்திக்கிறதே!இந்தச் சர்க்கரையை பாபாஉண்ணும் அழகைக் கண்ணால் பருக வேண்டும்... இவ்விதம் நினைத்தவராய், துணிக்கடையைப் பூட்டிவிட்டு, பாபாதங்கியிருந்த மசூதி நோக்கி,சர்க்கரைப் பையுடன் சாலையில் நடக்கலானார்.

பாபா நினைவே துணையாக அவர் நடந்தபோது, வழியில் தன்னைச் சிலர்ரகசியமாகப் பின்தொடர்வதை அவர் கவனிக்கவில்லை.பின் தொடர்ந்தவர்கள்திருடர்கள்! துணி வியாபாரி, கையில் ஏதோ ஒரு சிறு பையை இறுகப் பற்றியவாறு நடப்பதைப் பார்த்த அவர்கள், அந்தப் பையில் அந்தப் பையில் அன்றைய துணி வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணமோ, வேறு விலை உயர்ந்த பொருளோ இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.பாபா நினைத்தால் சர்க்கரையைக் கூடத் தங்கமாகவோ பணக் கற்றையாகவோ மாற்றக் கூடியவர்தான். ஆனால், அப்போது அந்தப் பையில் இருந்தது வெறும் சர்க்கரைதான். இதை அந்தத் திருடர்கள் அறியவில்லை.வெறும் சர்க்கரைப் பையையா, இப்படி ஒருவன் மார்போடு சேர்த்து இறுகக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பான்?சந்தேகமில்லால் பையில்ஏதோ விலைமதிப்புள்ள பொருள் இருக்கிறது என்று திருடர்கள் தவறாக முடிவு கட்டினார்கள்.துணைக்கு யாருமில்லாத பகுதியில், துணி வியாபாரி நடந்தபோது அவர்கள் துணிவோடு வியாபாரியை வழிமறித்தார்கள். கத்தியைக் காட்டி காஷிராம்காதுகளில் இருந்த கடுக்கன்களைக் கழற்றித் தரச் சொன்னார்கள்.பயந்துபோன, காஷிராம் உடனே கடுக்கன்களைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பின்னர்,கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைக் கழற்றித் தரச்சொன்னார்கள். கையில்கத்தியோடு வந்திருக்கிறார்களே? உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கிலியையும் கொடுத்து விட்டார். அதன்பின், அவர் இறுகப்பற்றியிருந்த அந்தச் சிறுபையைத் தருமாறு அதட்டினார்கள் அவர்கள்.என்னது! இந்தப் பையை இவர்களிடம் கொடுப்பதா? பாபாவுக்கான சர்க்கரை அல்லவா இது? தெய்வத்திற்கான நிவேதனப் பொருளை யாராவது பன்றிகளுக்குப் போடுவார்களா? நகையும், கடுக்கனும் போனால் போகிறது. கடவுளுக்கான நிவேதனப் பொருள்பறி போகலாமா?இப்படி எண்ணியதுகாஷிராமின் மனம். அடுத்த கணம் முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.



ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:43 am

ஆம்...அந்த சமயத்தில்,ஷிர்டி மசூதியில் பாபாவைதரிசித்துக் கொண்டிருந்தவர்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.திடீரென பாபா ஆவேசத்தோடு எழுந்து நின்றார். ஏன் இவர்இப்படி ஆவேசப்படுகிறார் என்று பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபாதன் கைகளையும், கால்களையும் யாரோடோ சண்டையிடுவது போல் காற்றில் வீசத்தொடங்கினார். எதன்பொருட்டு இது நடக்கிறது?பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பாபா உக்கிரத்தோடு காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோவைப் பழமாய்ச்சிவந்திருந்தன. முகம் குங்குமப்பூப்போல் சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. திருடர்கள் முன் பயத்தோடுநின்றுகொண்டிருந்த காஷிராமின் உடலில் ஒரு கணம் ஆவேசம்வந்தது போல் தோன்றியது. தன் கையில் பற்றிக் கொண்டிருந்த பையை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டார்.தன் கைகளாலும், கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமாகத்தாக்கத் தொடங்கினார்.அவரோ அதிக பலமில்லாத நோஞ்சான். ஒரே ஒருவர் தான் அவர். திருடர்கள் பலசாலிகள். அவர்கள் எண்ணிக்கையில் நான்கைந்து பேர்!ஆனால், காஷிராமின் உடலில் தென்பட்ட அசாத்தியமான வலிமையைப் பார்த்துத் திருடர்கள் விக்கித்துப் போனார்கள்.

கடுக்கன், சங்கிலி எல்லாவற்றையும்அங்கேயே போட்டுவிட்டு தப்பித்தால் போதும் என்று ஓடலானார்கள்! காஷிராம் விடுவதாக இல்லை. காற்றை விட வேகமாக ஓடி,அவர்கள் முன்னால் போய்மீண்டும் நின்றார். அவர்களை ஒரு கொத்தாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின் சங்கிலி, கடுக்கன் இவற்றோடு முக்கியமாக நிவேதனச் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டுமசூதி நோக்கி நடக்கலானார். திருடர்கள் அச்சத்தோடும், காவல்துறையினர்பிரமிப்போடும் அவரைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவர் மசூதியில் நுழைந்துபாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார். சர்க்கரைப் பையை அவரிடம் கொடுத்து சர்க்கரையை ஏற்குமாறு வேண்டினார்.அப்போதுதான் பாபாவின்ஆவேசம் தணிந்தது. அன்பனே! திருடர்களைக் காவல் துறையினரிடம்ஒப்படைத்து விட்டாயல்லவா? என்று அமைதியாக, அவர் கேட்டபோதுதான் காஷிராமுக்கே, சண்டையிட்டது தான் அல்ல, பாபா என்பது புரிந்தது.பாபாவின் தாமரைப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார் அவர். தம் அடியவர்களைக் காப்பாற்ற பாபா எப்படியெல்லாம் ஓடோடி வருகிறார் என்றறிந்து நெக்குருகி நின்றார்கள் பக்தர்கள்.

அவரவரும் அவரவர் உடம்பை நன்கு பராமரிக்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பம். அடியவர்கள், தீய பழக்கங்கள் அற்றவர்களாய், நல்ல உணவைச் சாப்பிட்டு உடல் நலத்தைப் பேண வேண்டியது அவசியம் என்பதை பாபாஅடிக்கடி அறிவுறுத்தினார். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே! என்ற திருமூலர் தத்துவமே, பாபாவின்உபதேசமாகவும் இருந்தது. உடம்பைப் புறக்கணிக்கவும் வேண்டாம். கொஞ்சிக் கொஞ்சி செல்லமாகக் கொண்டாடவும் வேண்டாம். ஆனால், முறையாக அதைப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.உடல் என்கிற குதிரையில் தான் ஆன்மா சவாரி செய்கிறது. வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆன்மா சவாரி செய்யும் இந்த உடல் நலமாக இருக்க வேண்டியது அவசியம். குதிரையில் சவாரி செய்யும் பயணி, குதிரையின் நலனைஎவ்வளவு எச்சரிக்கையோடுபாதுகாப்பானோ, அதுபோல் நாமும் உடலைக் காக்கவேண்டும்.கடவுளை அடைதல் என்ற உயர்ந்த லட்சியத்தை சாத்தியப்படுத்தவே உடல் அருளப்பட்டுள்ளது. ஆன்ம ஞானம் பெறுவதற்கு உடலின் ஆரோக்கியம் முக்கியமானது. பாபா, உடலை வருத்திக் கொண்டு பக்தி செய்யுமாறுகூறியதில்லை. அன்பர்களைத் தாயன்போடு நேசித்த அவர், அவர்களது உடல் நலனிலும்தாய்மைக் கனிவோடு அக்கறை செலுத்தினார்.




ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:43 am


அதுமட்டுமல்ல, எல்லாஜீவராசிகளிலும் பாபாவேகுடிகொண்டிருப்பதை அறிந்து, ஜீவகாருண்யத்தோடு வாழவேண்டியது அவசியம்என்பதையும் வலியுறுத்தினார். பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஷிர்டியில் ஒருவீட்டில் தங்கியிருந்தார். ஒருமுறை, அவர் மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தார். கரண்டியால் ரசத்தை அவர்கலக்கிக் கொண்டிருந்த போது,பசியுள்ள ஒரு நாய் விடாமல் குரைக்கத் தொடங்கியது. நாய்பசியால் தான் குரைக்கிறதுஎன்பதை உணர்ந்த தர்கட்டின் மனம் உருகியது. கையில் கிடைத்த ரொட்டித் துண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்குவந்தார். காய்ந்த ரொட்டித்துண்டைப் பரிவோடு நாயின் முன் வீசினார். வாலைக் குழைத்து ஓடிவந்த அந்த நாய், ரொட்டித் துண்டை வாயால் கவ்விக் கொண்டது. தன் பசி தீர அதை மொறுமொறுவென உண்ணத் தொடங்கியது. தர்கட்டை நன்றியோடு பார்த்தது. ஷிர்டி பாபாவின் கண்கள் ஒளியால் மின்னுவதைப் போல் அதன் கண்களும் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன.நாய் உண்பதைப் பார்த்து நிறைவடைந்த தர்கட், சமையலறை நோக்கிச் சென்றார். சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, பாபாவைப் பார்ப்பதற்காகமசூதிக்குச் சென்றார்.

தர்கட்டை அன்போடு பார்த்த பாபா பேசலானார்.அம்மா! நான் மிகுந்த பசியோடு இருந்தேன். நீ கொடுத்த உணவால் பசியாறினேன். என் வயிறு நிறைந்தது. எப்போதும், இன்று நீ நடந்து கொண்ட விதத்தை நினைவில் கொள்.இப்படியே தொடர்ந்துநடப்பாயாக. என் பசிக்குஉணவிட மறந்துவிடாதே!தர்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபாவுக்கு அவள் இன்று உணவிடவேஇல்லையே? அவள் தயக்கத்தோடு பாபாவிடம் விளக்கம்கேட்டாள்: சுவாமி! நான் இன்றுஉங்களுக்கு உணவு வழங்கவே இல்லையே? நீ அன்போடு அளித்த மொறுமொறுப்பான காய்ந்த ரொட்டியை நான் தானே அம்மா சாப்பிட்டேன்? நீ என் பசியைக் கண்டு இரக்கத்தோடு அதை எனக்கு வீசிப் போட்டாயே? அதற்குள்ளாகவா மறந்துபோனாய்? எல்லா உயிரினங்களிலும் நான் தானே இருக்கிறேன்? எல்லாமாகவும் நான்தானே உலவிக் கொண்டிருக்கிறேன்?பசிக்கும் ஜீவன் எதற்குஉணவளித்தாலும், அதுஎன்னையே வந்து சேரும். நீ அளித்த ரொட்டி என்னை வந்து சேர்ந்துவிட்டது! இதைக் கேட்ட திருமதி தர்கட் மெய் சிலிர்த்தார். எங்கும் நிறை ஞானப் பிரம்மத்தின் முன் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டார். ஷிர்டியில் நானாவலிஎன்கிற பாபா பக்தன் இருந்தான். பாபாவுக்கான தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வான் அவன்.திடீரென்று ஒருநாள் பக்தர்கள் கூடியிருக்கும் சந்தர்ப்பத்தில் நேரே பாபாவிடம் வந்தான்.இப்போது உங்கள் ஆசனத்தில் நான் அமரவேண்டும். உடனே எழுந்திருங்கள்!என்று பாபாவை அதட்டினான்! பக்தர்கள்திகைப்போடு பாபாவைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:43 am

பாபா சற்றுநேரம், அந்த இளைஞனைக்கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். தந்தையைக் குழந்தை அதட்டுவது மாதிரி அவருக்குத்தோன்றியிருக்க வேண்டும். தயக்கமே இல்லாமல் தன்இருக்கையிலிருந்து எழுந்தார். நானாவலியைஅதில் அமர்த்தினார்.சிறிதுநேரம் பாபாவின் இருக்கையில் அமர்ந்திருந்த நானாவலி, பிறகு இருக்கையை விட்டு எழுந்தான். பாபாவை மீண்டும் அவரது இருக்கையில் அமருமாறு வேண்டினான். பிறகு, பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்துவிட்டுச் சென்றுவிட்டான்!தம் ஆசனத்தில் மறுபடி அமர்ந்துகொண்ட பாபா,கடகடவென்று நகைத்தார்.கூடியிருந்த பக்தர்கள் இந்த நிகழ்ச்சி எதை உணர்த்துகிறது என்று மனத்தில் ஆராய்ந்தார்கள். பாபாவின் லீலைகள்ஒவ்வொன்றுக்கும் ஓர்உட்பொருள் இருக்குமே? மனிதர்கள் தங்கள் பதவி ஆசை, நாற்காலி ஆசை போன்றவற்றை எந்நேரத்திலும் துறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை பாபா உணர்த்துகிறாரா? தம் பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தாம்எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கிவரத் தயார் என்று அறிவிக்கிறாரா?எது எப்படியிருந்தாலும் ஒன்று மட்டும்பக்தர்களுக்குப் புரிந்தது. ஆன்மிகவாதிகளில், சிலர்செல்வச் செருக்கோடும் அகங்காரத்தோடும்இயங்குகிறார்களே! அவர்களைப் போன்றவர்அல்ல பாபா. உண்மையிலேயே பதவி ஆசைஉள்ளிட்ட எந்த ஆசையும் அற்ற தூய துறவி அவர் என்பதை உணர்ந்து பக்தர்கள் நெகிழ்ந்தார்கள்.

பாபாவின் பக்தர்கள், அவரைத் தங்கள் விருப்பம்போல் கொண்டாடினார்கள். அதற்கு பாபா அனுமதி அளித்திருந்தார். சிலர் அவர் முன் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவார்கள். ஒருசிலர் இசைக்கருவிகளை வாசிப்பார்கள். பலர் மெய்மறந்து, தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.வேறு சிலர் அவருக்குச் சாமரம் வீசுவார்கள். பாபாவை, ராமபிரானின் அவதாரமாகவே சில அடியவர்கள் கருதுவதும் உண்டு. ராமனுக்குப்பட்டாபிஷேக வைபவத்தின் போது, லட்சுமணனும் சத்துருக்கனனும் கவரி வீசி சேவை புரிந்ததுபோலவே, தாங்கள் பாபாவுக்கு விசிறி வீசுவதாக நினைத்து அவர்கள் ஆனந்தம் அடைவதுண்டு. தங்கள் வீட்டில் செய்த உணவுப் பொருளையும் கல்கண்டு, திராட்சை போன்றவற்றையும் பாபாவுக்கு நிவேதனமாகக் கொண்டு வருபவர்களும் உண்டு.பக்தி உணர்வின் மேலீட்டால் எல்லாவகைப்பட்ட ஆனந்தங்களையும் பக்தர்கள் அடைவதற்கு பாபா வழிவகுத்திருந்தார். எதற்கும் தடை சொன்னதில்லை, ஒன்றே ஒன்றைத் தவிர. தமது பாதங்களை பக்தர்கள் தண்ணீரால் கழுவுவதற்கும், தமக்கு மங்கள ஆரத்தி எடுப்பதற்கும் அனுமதித்திருந்த பாபா, யாரேனும் தம் நெற்றியில் சந்தனம் பூச வந்தால் மட்டும், சிரித்தவாறே தவிர்த்து விடுவார். பாபாவின் தீவிர அடியவரான மகல்சாபதி மட்டும், பாபாவின் கழுத்தில் சந்தனம் பூச அனுமதிக்கப்பட்டிருந்தார். மற்றபடி, பாபாவின் நெற்றியில் யாருமே சந்தனம் பூசியதில்லை.பாபா ஏன் அதை அனுமதித்ததில்லை என்பதற்கு என்ன காரணம் கூற முடியும்? அதெல்லாம்,பாபா மட்டுமே அறிந்த பரம ரகசியம்.

ஒருவேளை பாபா சிவனின் அவதாரம் தானோ? தமது நெற்றிக் கண்ணின் சூடு, சந்தனத்தால்குளிர்ச்சி அடைவதை அவர் விரும்பவில்லையோ? மண்ணுலகின் கீழான தீமைகளைச் சுட்டெரிக்க அவதரித்த அவருக்கு, தம் செயல்பாட்டுக்காக நெற்றிக் கண்ணின் உஷ்ணம் தேவைப்பட்டதோ? அந்த ரகசியங்களை எல்லாம் யாரறிவார்?ஆனால், அன்று அது நிகழ்ந்தது. அதுவரை யாரும் காணாத அபூர்வக் காட்சி. பாபாவின்நெற்றியில் சந்தனம் பூச அவர் அனுமதித்த,அதுவரை நடவாத விந்தையான சம்பவம்....டாக்டர் பண்டிட் என்பவர், பாபாவை முதல்முறையாக தரிசிப்பதற்காக ஷிர்டி வந்தார். பாபாவைக் கீழே விழுந்து வணங்கியபின், மசூதியில் பாபாவின் திருமுகத்தை தரிசனம் செய்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார். வாழும் தெய்வம் பாபா என்பதை அவர் உள்மனம் புரிந்துகொண்டதாகவே தோன்றியது. அவர் விழிகள் பக்திப் பரவசத்தால் பளபளத்தன. தம்மை முதல் முறையாக தரிசிக்க வந்திருக்கும்பண்டிட்டை, சிறிதுநேரம் பிரியமாகப்பார்த்துக் கொண்டிருந்தார் பாபா. அவரின்மனத்திற்குள் ஊடுருவி அவரைப் பார்ப்பது போல் இருந்தது பாபாவின் தீட்சண்யமான பார்வை.




ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:44 am


பிறகு பண்டிட்டிடம், தாதாபட் கேல்கர் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்து, நான் அனுப்பியதாக அவனைச் சென்று பார்த்துவா! நீ போகும்போதுசந்தனம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களோடு அவன் என் தரிசனத்திற்காகப் புறப்பட்டுக் கொண்டிருப்பான். நீ அவனோடு மசூதிக்குத்திரும்பி வா! என்று கூறி அனுப்பி வைத்தார்.பாபாவின் வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்ட பண்டிட், மசூதியை விட்டு எழுந்துசென்று, தாதாபட் கேல்கர் வீட்டை விசாரித்து,அங்குபோய் நின்றார். பாபா தம்மை அவரிடம் அனுப்பியதாகத் தெரிவித்தார். அவரை அன்போடு வரவேற்ற கேல்கர்,பூஜைக்கான ஊதுபத்தி, கற்பூரம், சந்தனம், மலர்கள், நிவேதனப் பொருட்களான திராட்சை, கல்கண்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு பண்டிட்டையும் அழைத்துக் கொண்டு பாபாவின் மசூதிக்கு வந்து சேர்ந்தார். பூஜைப் பொருட்களை பாபாவின் எதிரில் வைத்துவிட்டு கேல்கர் அமர்ந்தபோது, பண்டிட்டும் அருகே அமர்ந்தார்.பாபாவையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த பண்டிட், உணர்ச்சி வசப்பட்டவராய் திடீரென்று எழுந்தார். பூஜைப் பொருட்களில்இருந்த சந்தனத்தை எடுத்துத் தண்ணீர் விட்டு நன்கு குழைத்தார்.

அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார்என பக்தர்கள் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். பண்டிட், பாபா அருகே சென்று குழைத்த சந்தனத்தை முப்பட்டைத் திருநீறுபோல் பாபாவின் நெற்றியில் இட்டுவிட்டார். அவர் இந்த உலகையே மறந்துஇயங்குவதாய்த் தோன்றியது. பாபா ஏதொன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.பக்தர்களுக்கு வியப்பு. முக்கியமாக,மகல்சாபதிக்குப் பெரும் வியப்பு. கழுத்தில்மட்டுமே சந்தனம் பூச அனுமதித்து வந்த பாபா,எப்படி இன்று நெற்றியில் பூச அனுமதி தந்தார்?இரவு நெடுநேரம் வரை அந்தக் கேள்விக்கு பதில் கிட்டாமலே இருந்தது. பண்டிட் விடைபெற்றுச்சென்றுவிட்டார். பாபா, அந்த முப்பட்டைச் சந்தனம் துலங்கும் நெற்றியுடன் சிரித்தவாறே வீற்றிருந்தார்.கேல்கர் வியப்போடு, பாபாவிடம் பலரும்கேட்க விரும்பிய அந்தக் கேள்வியை நேரடியாகக் கேட்டே விட்டார்: பாபா! நீங்கள் உங்கள் நெற்றியில் சந்தனம்பூச அனுமதித்ததில்லையே? இன்று மட்டும் பண்டிட்டுக்கு அந்த அனுமதியை எப்படி அளித்தீர்கள்? அனைவரும் பாபாவின்பதிலுக்காக ஆவலாய்க் காத்துக்கொண்டிருந்தார்கள்.நகைத்தவாறே பாபா பதில் சொல்லத்தொடங்கினார். பாபாவின் பதிலைக் கேட்டகேல்கர் உள்ளிட்ட அத்தனை அன்பர்களும்வியப்பின் உச்சிக்கே சென்றார்கள்.அவ்வளவு அற்புதமான பதில் அது. அப்படியொரு பதிலை பாபா சொல்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை..



ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 1:44 am

இதோ அந்த அற்புத பதில்! நான் எவ்விதம் அதை மறுக்க முடியும்? பண்டிட், என்னை அவரது குருவானகாகாபுராணிக் என்றல்லவோ எண்ணுகிறார்? காகாபுராணிக்கிற்கு, ரகுநாத மகராஜ் என்றொரு பெயருண்டு. இப்போது, பாபா என்று இன்னொரு பெயரும் இருப்பதாக பண்டிட் கருதுகிறார். என் வடிவில் தம்குருவையே அவர் காண்கிறார். அவரது குரு பக்தியை நாம் அங்கீகரிக்க வேண்டுமல்லவா? எல்லா குருவாகவும் இருப்பது நான்தானே? தம் குருநாதருக்குப் பூசுவது போலவே, என் நெற்றியிலும் சந்தனம் பூசினார். அவர் என் நெற்றியில் சந்தனம் பூசும்போது நான் பாபா அல்ல. காகாபுராணிக் தான்! இதைக் கேட்ட பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.பின்னர் பண்டிட்டிடம் அதுபற்றி விசாரித்தார்கள். பண்டிட்இருகரம் கூப்பி பாபாசொன்னதை அப்படியே ஒப்புக்கொண்டார். மனிதர்களின் மன ஆழத்தில் ஓடும் எண்ணஓட்டங்களை உள்ளது உள்ளவாறே கண்டறிவதில் பாபாவுக்கிருந்த அபாரமானஆற்றலை எண்ணி எல்லோரும் அதிசயித்தார்கள்.

அதேநேரம், இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைŒக்தியாக உள்ளிருந்து எல்லோர் எண்ணங்களையும் கண்காணித்துக்கொண்டிருப்பவர் பாபாதானே! என்ற உண்மையையும் சிலர் வெளிப்படுத்தினார்கள்.பொதுவாகவே உயர்நிலை மகான்கள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.ஐம்புலன்களைஅடக்கி ஆள்வதில்பூரணமான வல்லமை பெற்றதனால், ஐம்பூதங்களை அடக்கி ஆளவும் வல்லமைபெற்றுவிடுகிறார்கள் போலும்.உரன் என்னும்தோட்டியால் ஓரைந்தும் காப்பான் என, ஐம்புலன்கள் என்கிற யானையை மன உறுதி என்றஅங்குசத்தால்அடக்குபவனே மெய்ஞானி என்றல்லவோவள்ளுவம் சொல்கிறது! ஐம்பூதங்களை அடக்கும் அந்த அபாரமானஆற்றலை மனித குலநன்மையின் பொருட்டாகஅத்தியாவசியத் தேவைநேர்ந்தால் மட்டுமே மகான்கள் பயன்படுத்துவார்கள்.

ஸ்ரீஅரவிந்த அன்னை, தான் பயணம் செய்த கப்பலைப் புயல் தாக்கியபோது, உடலை விட்டுத் தனது உயிரைப் பிரித்து வானில் சென்று , புயலைத் தோற்றுவித்த தீய சக்திகளை அதட்டினார்.அவ்விதம் புயலை நிறுத்தி,தன்னுடன் கப்பலில் பயணம் செய்த அத்தனை மக்களையும் காப்பாற்றினார். பாபாவின்வாழ்விலும் அவர் ஐம்பூதங்களையும் தம் கட்டுப்பாட்டில்வைத்திருந்ததைக் குறிக்கும்சம்பவங்கள் பல உண்டு. ஒருநாள் மாலை நேரம்.இருள் கவியத் தொடங்கியிருந்தது. திடீரெனக் கடும் புயலும் பெருமழையும் ஷிர்டியைத்தாக்கலாயின. அரைமணிநேரத்தில் தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில்இருந்த வீடுகளுக்குள்ளே வெள்ளம் கடகடவெனப்புகுந்தது. வீட்டுக்குள் வைத்திருந்த கோதுமை மாவும் பிற உணவுப் பொருட்களும் நீரில் கரைந்து ஓடின. கூரைகள் பிய்த்துக் கொண்டு காற்றில்பறந்தன. மக்கள் பரிதவிப்போடு இல்லங்களை விட்டு வெளியே வந்து நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனகும்பல் கும்பலாகக் கொட்டும் மழையில் நனைந்து நின்றார்கள்.

இப்போது என்ன செய்வது? இந்தப் புயலிலிருந்தும்மழையிலிருந்தும் எப்படித்தப்பிப்பது? அப்போதுதான் அந்த விந்தையான காட்சியைமக்கள் பார்த்தார்கள்.ஆறறிவுடைய மனிதர்களுக்கு இல்லாத புத்தி, ஐந்தறிவுடைய மிருகங்களுக்கு இருக்கும்போல் தோன்றுகிறதே!ஆடுமாடுகள் கூட்டம்கூட்டமாக பாபாவின் மசூதிக்கு ஓடோடிச் செல்வதை அவர்கள் கவனித்தார்கள். கொட்டும்மழையில் கோவர்த்தனகிரியைத் தூக்கி நின்று கோகுலத்துஆனிரைகளைக் காப்பாற்றிய கண்ணனின் அவதாரம்தான் பாபா என்பது ஆடுமாடுகளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவை மசூதி வாயிலில் பாபாவின் கருணை வேண்டி நின்றன.அந்த அற்புதக் காட்சியைப் பார்த்த எல்லா மக்களும்,ஆனிரைகளைப் பின்பற்றித்தாங்களும் மசூதி நோக்கி ஓடலானார்கள். எல்லோரும் பாபா! எங்களைக் காப்பாற்றுங்கள்! என்று உரத்துக் குரல்கொடுத்தவாறே, அவரிடம் தஞ்சம் புகுந்தார்கள்.மனித குலத்தை ரட்சிப்பதற்கென்றே வந்த அவதாரமல்லவா பாபா? மக்களையும், ஆடுமாடுகளையும் பரிவோடு பார்த்தார் அவர். பின் திடீரெனச் சீற்றத்தோடு எழுந்து மசூதிக்கு வெளியே வந்தார். ஆகாயத்தை உற்றுப் பார்த்தார்.




ஷிர்டி சாய் பாபா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக