புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
83 Posts - 44%
ayyasamy ram
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
62 Posts - 33%
i6appar
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
3 Posts - 2%
prajai
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10எழுத்தாளர் கழனியூரன்... Poll_m10எழுத்தாளர் கழனியூரன்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் கழனியூரன்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 9 Sep 2014 - 21:31

எழுத்தாளர் கழனியூரன்... 4NQHK2AaQ6a1uNO9rgVg+m110b
-
கவிதைகள், சிறுகதைகள், நாட்டுப்புறக் கதைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட, தன்னுடைய ஊர் பெயரிலேயே 'கழனியூரன்’ என்ற புனைபெயரை உருவாக்கிக்கொண்ட எழுத்தாளர் சேக் அப்துல்காதர், தன் சொந்த ஊரான கழுநீர்குளம் குறித்து இங்கே பேசுகிறார்.

''ஊரைச் சுற்றி கழனி(வயல்)களும் குளங்களும் சூழ்ந்துள்ளதால் கழுநீர்குளம் என்று பெயர் பெற்றது. ஒருகாலத்தில் ஊர்க் குளத்தில் செங்கழுநீர்ப் பூக்கள் பூத்துக் குலுங்கியதால் இந்தப் பெயர் பெற்றதாகச் சொல்வார்கள். அன்னப் பறவை என்ற பறவை இனமே அழிந்ததைப்போல, இன்று செங்கழுநீர்ப் பூக்களும் அழிந்துவிட்டன. எங்கள் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட ஊர் அத்தியூத்து. அங்கு இன்றும் வசித்து வருகிறார் முன்னாள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் முனைவர் சா.வே.சுப்பிரமணியன். எனவே, தமிழ் உணர்வுக்கு எள்ளளவும் பஞ்சம் இல்லை. சா.வே.சு. தன் வீட்டு மாடியில் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து உள்ளார். இந்த நூலகத்தைப் பயன்படுத்த வருபவர்கள், நூலகத்தை ஒட்டிய அறைகளில் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். விரும்பினால், சா.வே.சு. ஐயா வீட்டிலேயே உண்டு, உறைந்து, தமிழ்ப் பயிலலாம்.

மண்தான் கழுநீர் குளத்துக்கும் மக்களுக்கும் எல்லாமுமாக இருக்கிறது. மண்ணைக் கிண்டித்தான் வாழ்கிறார்கள்... வயிறு வளர்க்கிறார்கள். உழைப்பு என்ற ஒற்றைச் சொல்தான் கழுநீர்குளத்து மக்களின் உயிர்ப்புச் சொல். ஐப்பசி, கார்த்திகை இரண்டு மாதங்களும் நெல் நடவுக் காலம். திருக்கார்த்திகை பண்டிகை நாளுக்கு மறுநாள் 'முடக் கார்த்திகை’ நாள் என்று சொல்கிறார்கள். இடைவிடாது உழைக்கும் மக்கள், முடக் கார்த்திகை நாள் அன்று மட்டும் ஓய்வு எடுப்பார்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் வயலில் இறங்கி நெல் நடவு செய்ய மாட்டார்கள்.

எங்கள் வீட்டில் இருந்து இரண்டு தெரு அடுத்து உள்ள மறவா நடுநிலைப்பள்ளியில் நான் படித்தேன். பின் வீரகேரளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாறினேன். அதற்கு இரண்டு மைல் தூரம் நடந்தே செல்ல வேண்டும். இரு பக்கமும் வயல். நடுப் பாதையில் வீசும் தென்றலை சுவாசித்துக்கொண்டே  நானும் என் நண்பர்களும் நடந்து செல்வோம். பள்ளி விடுமுறை நாட்களில் எங்களுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் வயல் வேலைகள் செய்வேன். நாற்று நடவு முதல் அறுவடை வரை எல்லாம் அத்துப்படி எனக்கு. எங்கள் புன்செய் நிலத்தின் தலைமாட்டில் ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கிறது பெரிய ஆலமரம். புத்தனுக்குப் போதிமரம் போல, எனக்கு இந்த ஆலமரம். இந்த ஆல மரத்தடியில் திறந்தவெளி தர்கா உள்ளது. அந்தப் பகுதி வழியே போகிறவர்கள், வருகிறவர்கள் என, எல்லா சமய மக்களும் இந்த தர்காவில் வேண்டிக் கொள்வார்கள். மரக் கிளைகளில் அமர்ந்து தான் பாடப் புத்தகங்களைப் படிப்பேன். கவிதை எழுதத் தோணும்.

போது கையில் பேனா இருக்காது. வாழை இலையின் பின்புறம் கருவேல மரத்து முள்ளைவைத்துக் கீறிக் கவிதைகள் எழுதி இருக்கிறேன். வயலில் வேலை செய்து முடித்து, மதிய உணவுக்காகத் தக்காளி, வெங்காயம், மிளகாயைத் தோட்டத்திலேயே பறித்து மண் பானையில் போட்டு அடுப்புத் தீயே ஏற்றாமல் உப்பு மட்டும் சேர்த்துக் குழம்புவைப்போம். அதன் சுவையே தனி. அறுவடை முடிய இரவு நேரம் ஆகிவிட்டால் வயலிலேயே நெற்கதிர்களுக்குக் காவலாகக் கையில் கம்புடன் கொட்டக் கொட்ட நிலவொளியில் விழித்திருப்போம். களத்து மேடே எங்களுக்குத் தலையணை. இரவு முழுவதும் வேலை ஆட்கள் நிறையக் கதைகளைச் சொல்வர். கி.ராஜநாராயணன் தன் துணைவியரோடு இவ்வூருக்கு வருகை புரிந்து இருக்கிறார். மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் பேரன் தீப.நடராஜன், தோப்பில் முகமது மீரான் எனப் பல இமயம் தொட்ட எழுத்தாளர்களின் பாதம் பட்ட ஊர் இது.

என் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பலரும் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. நான் படித்தது, பணி செய்வது என எல்லாமே இந்தக் கிராமம்தான். ஆணி அடித்ததைப் போல் எங்கும் இடம்பெயராத ஓர் எழுத்தாளன் நான். சில எழுத்தாளர்கள் பணி நிமித்தம் மற்றும் பல காரணங்களால் வேறு ஊருக்கு இடம்பெயரும் நிலை கிட்டும். ஆனால், பிறந்ததில் இருந்தே சொந்த ஊருடனும் சொந்த ஊர் மக்களுடன் வாழும் பேறு பெற்றவன் நான்!''

-இ.கார்த்திகேயன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 9 Sep 2014 - 21:36

எழுத்தாளர் கழனியூரன்... LHEDVFoPSe86EkZOYW1j+m109a
-
எழுத்தாளர் கழனியூரன்... NLVmezXS6asujsCuOgvw+m109b
-
நன்றி: விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக