புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
155 Posts - 79%
heezulia
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
320 Posts - 78%
heezulia
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_m10தண்டிக்கப்படாத அநியாயங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டிக்கப்படாத அநியாயங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Sep 2014 - 21:07

வாசற் கேட்டை திறந்து, பவித்ரா உள்ளே நுழைவதைப் பார்த்ததும், அவளை நோக்கி வந்தார் தயாளன். முகம் வாடி சோர்ந்து போயிருக்கும் அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
''என்னம்மா பவித்ரா... அம்மாவோட கண்டிஷன் இப்ப எப்படி இருக்கு.''

''அதே நிலைமை தான் மாமா. மேல் மூச்சு வாங்கறது அதிகமாகியிருச்சு; அப்பப்ப கண் திறந்து பாக்கறாங்க. நாம பேசறது புரியுது; ஆனா, பதில் பேச முடியல. டாக்டர் காலையில வந்து பாத்துட்டு, 'பல்ஸ் குறைஞ்சிட்டு வருது; எப்ப எது வேணுமின்னாலும் நடக்கலாம்'ன்னு சொல்லிட்டு போயிட்டாரு.''

குரல் உடைந்து பேசும் அவளைப் பார்த்து, ''சரிம்மா... இப்படி சீரியசான கண்டிஷன்ல அம்மாவ விட்டுட்டு நீ எதுக்கு இங்க வந்தே... யாருகிட்டயாவது சொல்லிவிட்டுருந்தா நானே வந்துருப்பேன்ல,'' என்றார்.
''உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன் மாமா.''
''என்ன உதவிமா... தயங்காம கேளு.''
''உங்க நண்பர கூட்டிட்டு வர முடியுமா மாமா; அம்மாவோட கடைசி நேரத்துல அவர் வந்து பாத்துட்டு போனா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.''

அப்பா என்று சொல்ல பிரியப்படாமல், நண்பர் என்று சொல்லும் அளவுக்கு அவள் மனதில் வெறுப்பு மண்டிக் கிடப்பதை, அவரால் உணர முடிந்தது. படிப்பறிவு இல்லாமல், அவனே உலகம் என்று வாழ்ந்த காந்திமதியை, ஐந்து வயது பெண் குழந்தையுடன், 20 ஆண்டுகளுக்கு முன் தவிக்க விட்டு போனவன்தானே வாசு.
'வாசு... நீ செய்யறது ரொம்ப தப்பு; பாவம் காந்திமதி. அவளுக்கு நீ துரோகம் செய்யலாமா?'என்று நண்பனிடம் கேட்டான் தயாளன்.

'தயாளா... இது என் சொந்த விஷயம்; தயவு செய்து இதில நீ தலையிடாத. காந்திமதியோடு நான் வாழற வாழ்க்க அர்த்தமில்லாதது; என் மனசு முழுக்க நந்தனா தான் இருக்கா. என் வாழ்க்க இனி அவளோடுதான்னு முடிவு செய்துட்டேன்; அந்த பட்டிக்காட்டுக்கு பரிஞ்சு பேசி என் மனச மாத்தப் பாக்காதே...'என்று முகத்திலடித்தாற் போல் பேசிவிட்டான் வாசு.

வாசு கூறியதை காந்திமதியிடம் சொல்லி வருத்தப்பட்டான் தயாளன்.
'விடுங்க அண்ணே... எப்ப அவரு என்னை வேண்டாம்ன்னு ஒதுக்கிட்டாரோ, அப்புறம் இதுல பேச என்ன இருக்கு. அவர் இஷ்டப்படற வாழ்க்கைய அமைச்சுக்கட்டும்; எனக்கு, என் பவித்ரா போதும். அவள நல்லபடியா வாழ வைப்பேன்; அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு...' என்றாள்.

'காந்திமதி... இது உன் வாழக்கைம்மா. இதை அடுத்தவ தட்டிப் பறிக்கிறத பாத்துட்டு சும்மா இருக்கலாமா... கோர்ட்டுக்குப் போனாலும் உன் பக்கம் தான் ஜெயிக்கும். சட்டபடி நீதான் அவன் மனைவி; அதை நிரூபிச்சு, உன் வாழ்க்கைய தக்க வச்சுக்கம்மா...' என்றார் தயாளன்.

விரக்தியாகச் சிரித்தவள், 'வேண்டாம்ண்ணே... எனக்கு அதில விருப்பமில்ல; அவர் இஷ்டப்படுற வாழ்க்கைய வாழ்ந்துட்டு போகட்டும்...' என்று ஒதுங்கி, தன் மகளுடன் புது வாழ்க்கையை ஆரம்பித்தாள்.
ஓட்டலில் சமையல் வேலை பார்த்து, மகளைப் படிக்க வைத்து, ஒரு பெரிய கம்பெனியில சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் அளவுக்கு அவள் தகுதியை உயர்த்தியவள், தன் உடம்பை சரிவர கவனிக்காததால் காசநோயும், ஆஸ்துமாவும் ஒரு சேரத் தாக்க, தன் வாழ்வின் கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.
''என்ன மாமா... பதிலே சொல்லாம இருக்கீங்க.''

''ஒண்ணுமில்லம்மா பழைய நினைவு... எப்ப அவன் உங்கம்மாவக் விட்டுட்டு போனானோ அப்பவே அவன், என் நண்பன்ங்கிற தகுதிய இழந்துட்டான். அவனுடன் பேச்சு வார்த்தையே இல்ல. ஆனா, அவன் சென்னையில பெரிய தொழிலதிபராக சகல வசதிகளோடு வாழ்ந்துட்டிருக்கான்கிறது மட்டும் எனக்கு தெரியும். உனக்காக போய் கூட்டிட்டு வரேன்; நீ வீட்டுக்கு போ. மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா கட்டாயம் வருவான்,''என்றார் தயாளன்.

குளிரூட்டப்பட்ட, 'ஏசி' அறையில் கோட்டு, சூட்டுடன் உட்கார்ந்திருக்கும் வாசுவைப் பார்த்தான் தயாளன்.
''நீ வேணான்னு ஒதுக்கி வச்சுட்டு வந்தவ தான் காந்திமதி; அவளுடைய வாழ்க்கைய அழிச்சவன் நீ. ஒரு பொண்ண கல்யாணம் செய்து, ஒரு குழந்தையையும் கொடுத்துட்டு உன் சுயநலத்துக்காக அவ வாழ்க்கைய நிர்மூலமாக்கிட்டு இங்கே சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கே.

இப்பவும் உன்கிட்ட உதவி கேட்டோ, காசு பணத்துக்காகவோ உன் மக என்னை அனுப்பி வைக்கல; மரண படுக்கையில இப்பவோ, நாளையோ உயிர் விடப்போகும் தன்னோட தாயை, நீ வந்து பாத்துட்டு போகணும்ன்னு தான் பிரியப்படறா... தொட்டுத் தாலி கட்டின மனைவின்னு உன் மனசாட்சிக்கு தெரியும்; மறுப்பு சொல்லாம என்னோடு கிளம்பு,'' என்று கண்டிப்புடன் கூறியதும், மறுபேச்சு பேசாமல் தயாளனை பின் தொடர்ந்தார் வாசு.நடுக்கூடத்தில் படுத்திருந்தாள் காந்திமதி. சுற்றிலும் சொந்தங்களும், தெரிந்தவர்களும் உட்கார்ந்திருந்தனர். மார்புக்கூடு மட்டும் ஏறி, இறங்கிய வண்ணம் இருந்தது.

அருகில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள் பவித்ரா. வாசுவுடன் தயாளன் உள்ளே நுழைய அங்கே கூடியிருந்தவர்கள் அவர்களையே பார்த்தனர்.

''அம்மா பவித்ரா... உங்கப்பா வந்திருக்காரு,'' என்றார் தயாளன். அவரை ஏறெடுத்தும் பார்க்காமல், எழுந்து கண்மூடி படுத்திருக்கும் தாயின் கைகளை லேசாக அசைத்து, ''அம்மா... நான் கூப்பிடறது கேட்குதாம்மா... உன்னோட புருஷன் வந்திருக்காரு; கண் திறந்து பாரும்மா,''என்றாள் பவித்ரா.
மூடிய விழிகளில் லேசான அசைவு; மெல்ல கண் திறந்தவள், அருகில் நிற்கும் வாசுவை பார்க்க விருப்பம் இல்லாதவள் போல், தலையைத் திருப்பி, கண்களை மூடினாள்.

''மாமா... இவர அழைச்சிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி. இங்கே இருக்கிறவங்க எல்லாரும் தெரிஞ்சுக்குங்க; இவர் தான் எங்கம்மாவோட புருஷன். நான், இந்த உலகத்துக்கு வர காரணமாக இருந்தவர். எங்கம்மாவ நாலு பேர் நடத்தை கெட்டவள்ன்னு பேசியதையும், புருஷன் விட்டுட்டுப் போயிட்டான்னு எங்கம்மா காதுபடவே கேவலமாக பேசியதையும் சகிச்சிக்கிட்டு எனக்காக வாழ்ந்தவங்க தான் எங்கம்மா.

''இதோ நிக்கிறாரே... இவர் செய்த அநியாயத்துக்கு, நாங்க தண்டனை அனுபவிச்சோம். எங்கம்மா தனி மனுஷியா கஷ்டப்பட்டு என்னை வளர்த்து ஆளாக்கினாங்க. எங்க வாழ்க்கைய சூனியமாக்கியவர், இன்னொரு கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்துட்டிருக்காரு.இவர் வாழுற வாழ்க்க எங்கம்மா இவருக்கு போட்ட பிச்சை!

''எங்கம்மா மாதிரி பொண்ணுங்க இப்படி விட்டுக்கொடுத்து வாழறதால தான், இந்த மாதிரி மனுஷங்க செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்காம சந்தோஷமாக வாழ்ந்திட்டிருக்காங்க.

''நான் இவரை வரச்சொன்னதுக்கு காரணம்... எங்கம்மா ஒரு உத்தமி; எங்களோட தனிமை வாழ்க்கைக்கு காரணம் இவர்தான்னு நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்கணும். அப்பதான் எங்கம்மாவோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்ன்னு தான் வரச் சொன்னேனே தவிர, இவரைப் பாத்தா தான் எங்கம்மா நற்கதி அடைவாங்ககிறதுக்கு இல்ல; மாமா... இவரோட பொன்னான நேரத்துக்கிடைய இங்கே வந்ததுக்கு நன்றி... இனி இவர் போகலாம்,''என்று சொல்ல, அங்கே கூடியிருந்தவர்கள் அவரை வெறுப்புடன் பார்த்தனர். தலை குனிந்து மவுனமாக வெளியேறினார் வாசு.

அம்மாவின் அருகில் வந்த பவித்ரா, ''அம்மா... நான் பேசினதெல்லாம் உன் காதில விழுந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். உன் மனசில எந்த வருத்தமும் வேணாம்; எங்கம்மா தன்னோட வாழ்க்கைய விட்டுக் கொடுத்து, எனக்காக வாழ்ந்தவங்கன்னு எல்லாருக்கும் நிரூபிச்சுட்டேன். என்னைப் பத்தி கவலைப்படாதேம்மா; உன் மக நிச்சயமாக நல்லபடியா வாழ்வேன். ஒரு நல்லவர தேர்ந்தெடுத்து, என் வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்குவேன். ஆனா, எந்த காரணத்துக்காகவும் என் புருஷன யாருக்கும் விட்டுக் கொடுக்காம, என் உரிமைகளோடு சந்தோஷமாக வாழ்வேன்மா; இப்ப உனக்கு நிம்மதி தானே,'' என்றாள்.

கண் திறந்து மகளைப் பார்த்தாள் காந்திமதி. அவளின் முகத்தில் நிம்மதி படர்வதை பவித்ராவால் உணர முடிந்தது. அம்மாவின் கைகளை அன்போடு பற்றினாள்; இவ்வளவு நேரம் ஏறி, இறங்கிய மார்புக்கூடு அமைதியானது.

பரிமளா ராஜேந்திரன்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed 3 Sep 2014 - 22:23

தண்டிக்கப்படாத அநியாயங்கள்! 3838410834 தண்டிக்கப்படாத அநியாயங்கள்! 103459460 தண்டிக்கப்படாத அநியாயங்கள்! 1571444738

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu 4 Sep 2014 - 11:35

தண்டிக்கப்படாத அநியாயங்கள்! 1571444738 தண்டிக்கப்படாத அநியாயங்கள்! 3838410834 தண்டிக்கப்படாத அநியாயங்கள்! 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu 4 Sep 2014 - 15:53

அருமை அருமை !!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தண்டிக்கப்படாத அநியாயங்கள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக