புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
31 Posts - 51%
heezulia
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
14 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
4 Posts - 7%
kavithasankar
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
1 Post - 2%
mruthun
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
219 Posts - 43%
heezulia
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
202 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
24 Posts - 5%
i6appar
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
13 Posts - 3%
prajai
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Guna.D
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 5:22 pm

First topic message reminder :


Posted Date : 13:02 (04/09/2014)Last updated : 13:09 (04/09/2014)
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Jaya%205(29)
நீதிபதி முடிகவுடரின் கண்டிப்பு!

18 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்திலும் ஏக எதிர்பார்ப்பு. அந்த நீண்ட நெடிய வழக்கை ஆரம்பத்தில் இருந்து அலசுவோமா..?

21.6.96 ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1.7.91 முதல் 30.4.96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபி-யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க ஆணையிட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு, ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Sasi,%20ilavarasi
2004 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனார். இதனையடுத்து தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, 2004 ல் இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பெங்களூரிலும் பல நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர்.

எனவே அந்த காலக்கட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டு இந்த வழக்கின் 7 ஆவது நீதிபதியாக முடிகவுடர் நியமனத்துக்குப் பிறகு நடந்தவற்றை சற்று விரிவாக பார்க்கலாம்...

2013 அக்டோபர் 2 ஆம் தேதி வழக்கை விசாரிக்க ஆரம்பித்த முடிகவுடர், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது குறித்து கேள்வி எழுப்பினார். ‘‘இது என்னுடைய நீதிமன்றம். இந்த வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றம் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதுநாள் வரை இந்த வழக்கு எப்படி நடந்தது என்று எனக்கு ஆட்பேசணை இல்லை. இனி என்னுடைய ஒவ்வொரு வாய்தாவுக்கும் இந்த வழக்கின் குற்றவாளிகள் (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) நான்கு பேரும் ஆஜராக வேண்டும். மீண்டும் 30 ஆம் தேதிக்கு வாய்தா போடுகிறேன். அன்று நான்கு பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன்’’ என்று கண்டிப்பு காட்டினார்.

இது ஜெயலலிதா தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. உச்ச நீதிமன்றத்தை அணுகி, ‘நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் நடந்திருக்கிறது. கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் எங்கள் அனைவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘முடிகவுடர் நியமனத்தில் என்ன விதிமீறல்கள் இருக்கிறது? அதற்கு சான்று ஏதாவது வைத்திருக்கிறீர்களா? வெறும் ஊகத்தின் அடிப்படையில் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது’’ என்றவர்கள், தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தால், ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும் 30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டனர்.

30 ஆம் தேதி வாய்தாவுக்கு சசிகலா, இளவரசி, சுதாகர் கோர்ட்டுக்கு வருவது உறுதியானதால், அ.தி.மு.க வக்கீல்கள் காலையிலேயே கோர்ட்டில் குவிந்திருந்தனர். சரியாக 10.30 மணிக்கு ஒயிட் அண்ட் ஒயிட் ஜிப்பாவில் சுதாகரன் வந்தார். 10 நிமிடங்கள் கழித்து ஒரே காரில் இளவரசியும் சசிகலாவும் கோர்ட் வளாகத்துக்குள் வந்திறங்கினார்கள். 6 ஆவது மாடியில் வழக்கு நடைபெறுவதால், ஜெ. தரப்பு வழக்கறிஞர்கள் ஒவ்வொரு மாடியிலும் லிப்ட் அருகே நின்று சசிகலா லிஃப்டில் செல்ல யாரும் இடையூறாக இருந்திடக் கூடாது என்று பாதுகாத்து அழைத்துச் சென்றனர்.

சசிகலா வழக்கத்துக்கு மாறாக மிகவும் வருத்தத்தோடு காணப்பட்டார். கழுத்தில் நகைகள் எதுவும் இல்லை. சிம்பிளாக இருந்தார். நேராக கோர்ட்டுக்குள் சென்று மூவரும் கூண்டுக்குள் ஏறி நின்று கைகளைக் கட்டி நீதிபதி முடிகவுடரைப் பார்த்து வணக்கம் வைத்தனர். முடிகவுடர் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமரச் சொன்னார். கூண்டுக்குள்ளேயே பெஞ்ச் போடப்பட்டிருந்தது. வலது பக்கத்தில் சசிகலாவும், இடது பக்கத்தில் இளவரசியும், நடுவில் சுதாகரனும் நீதிபதியை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள்.

நீதிபதி முடிகவுடர்: ‘‘இன்னும் எத்தனை நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது?’’

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார்: ‘‘தெரியவில்லை.’’

நீதிபதி முடிகவுடர்: ‘‘இந்த வழக்கை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி போடுகிறேன்’’

குமார்: ‘‘உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் இருப்பதாகவும், கோர்ட்டில் ஆஜராவதில் நான்கு பேருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்த வழக்கை நான்கு வார காலத்துக்கு தள்ளிப்போட வேண்டும். குறைந்தது மூன்று வார காலத்துக்காவது தள்ளிப்போட வேண்டும்.’’

நீதிபதி முடிகவுடர், ‘‘இதை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்களா?’’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் கேட்டதற்கு அவர், ‘‘நான் ஆட்சேபிக்கவில்லை’’ என்றதால், நீதிபதி முடிகவுடர் வழக்கை நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிப்போடுவதாக சொன்னார்.

வழக்கு முடிந்ததும், வந்ததைப் போலவே சுதாகரன் தனி காரிலும், சசிகலா, இளவரசி இருவரும் தனி காரிலும் சென்றனர்.

- வி.கே. ரமேஷ்

புதிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வருகையும், அதைத் தொடர்ந்த பரபரப்புகளும் நாளை...





avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 2:16 am

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் 7 நாட்கள்! ( மினி தொடர்: பகுதி - 10)


‘‘சசிகலா என் உறவினர் அல்ல!’’- ஜெயலலிதா

பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதங்கள் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட் லிமிடெட் ஆகிய ஐந்து நிறுவனங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்து இருந்தனர்.

வாதம் தொடங்கிய மூன்றாவது நாள்... இதனை முதலில் எடுத்துக்கொண்டு விசாரித்த நீதிபதி குன்ஹா, ‘‘இந்த வழக்கு 1996 முதல் நடைபெற்று வருகிறது. பெங்களூருக்கு மாற்றப்பட்டும் 10 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம் மனு தாக்கல் செய்யாமல், வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்று கண்டித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

அதன் பிறகு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தன் வாதங்களை தொடங்கினார். ‘‘தனிமனித சுதந்திர பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக ஜெயலலிதாவின் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினார்கள். ஐந்து நாட்கள் ஆய்வு என்ற பெயரில் மீடியாக்களை அனுமதித்து படம் பிடித்து வெளியிட்டது தவறு. ஹவுஸ் ஓனர் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கும்போதுதான் ஆய்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதனை அப்பட்டமாக மீறினார்கள்.

வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்தார் என்ற வழக்குக்கு கைதுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்களிடம் விசாரித்து இருக்கலாம். விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவும் போலீஸ் உயர் அதிகாரி வி.சி.பெருமாளும், தவறான உள்நோக்கத்துடன் சதி செய்து எங்கள் மனுதாரரிடம் முறையாக விசாரிக்காமல் தன்னிச்சையாகக் கைது நடவடிக்கையும் செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கைப் பதிவுசெய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம நாயுடு, எட்டு கமிட்டிகள் அமைத்து ஜெயலலிதாவின் வீடு, அலுவலகத்தை சோதனை நடத்தி சொத்துகளை மதிப்பீடு செய்தார். அன்றைய தி.மு.க அரசால் நியமிக்கப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதில் இருந்தனர். அவர்கள், கட்டடங்களின் மதிப்பை பொதுப்பணித் துறை விலை மதிப்புப் பட்டியலில் உள்ள மதிப்பைவிட 100 மடங்கு அதிகமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். என் மனுதாரருக்கு வந்த வருமானங்களை, நல்லம நாயுடு வேண்டுமென்றே சேர்க்காமல் விட்டுவிட்டார்.

போயஸ் கார்டன் மதிப்பு 13 கோடி என்று பதிவுசெய்யப்பட்டது. அது முழுக்க முழுக்கத் தவறானது. இதுபோன்று பல கட்டடங்களின் மதிப்பு கூடுதலாகப் போடப்பட்டுள்ளது. என் மனுதாரர் வாங்கிய சொத்துகள் அனைத்தும், வழக்கு நடக்கும் காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. ஆனால், வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கியதாக, உண்மைக்குப் புறம்பாகப் போட்டிருக்கிறார்கள். சொத்து மதிப்பையும் மிகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். அதே வேளையில் நமது எம்.ஜி.ஆர், சூப்பர் டூப்பர் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் டெபாசிட் செய்த தொகையெல்லாம் காட்டவே இல்லை.

இந்திய வரலாற்றிலேயே முதன்முதலில் இந்த வழக்கில்தான், ஒரு திருமணத்துக்கு ஆன செலவுகளை மதிப்பீடு செய்திருப்பதாக நான் கருதுகிறேன். இந்த வழக்கில் சுதாகரனின் திருமணத்துக்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து எப்படி துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியும்?
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Kumar%20(1)(2)
சுதாகரனின் திருமணச் செலவை ஜெயலலிதா செய்ததாகப் பொய் சாட்சிகள் மூலம் ஜோடித்து இருக்கிறார்கள். ஆனால், இந்தத் திருமணச் செலவை நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார்தான் செய்தார். அதற்கு, வருமான வரியும் கட்டியுள்ளார். அரசுத் தரப்பு சாட்சியங்களாக 1,074 பேரை சேர்த்ததில் ராம்குமாரையும் சேர்த்திருக்கிறார்கள். அவரை கோர்ட்டில் விசாரிக்காதது ஏன்?

இந்த வழக்கில் பல்வேறு கம்பெனிகளின் சொத்துக்களாக 18 கோடியைக் காட்டுகிறார்கள். ஆனால் ஜெ. பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் ஆகிய இரண்டு கம்பெனிகளில் மட்டும்தான் ஜெயலலிதா பார்ட்னராக இருக்கிறார். வேறு எந்த கம்பெனிக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது. மற்ற கம்பெனிகளையும், அதன் சொத்துக்களையும் இந்த வழக்கில் சேர்த்தது தவறு.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Sudakaran
இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் எனது கட்சிக்காரரான ஜெயலலிதாவின் உறவினர்கள் அல்ல. 3 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன், என் கட்சிக்காரரான ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் அல்ல.

1988 பினாமி சட்டப்படி தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், ரத்த சம்பந்தமான உறவினர்கள் பெயரில்தான், பினாமி சொத்துகள் இருக்க முடியும். இந்த மூன்று பேரும் என்னுடைய கட்சிக்காரரின் உறவினர்கள் அல்லாத நிலையில், அவர்கள் பெயரில் உள்ள சொத்துகளையும் சேர்த்து எப்படி வழக்கு பதிவுசெய்ய முடியும்?

கம்பெனியின் பங்குதாரர்களாக, பார்ட்னராக இருந்தார்கள் என்பதை வழக்காக எப்படி போட முடியும்? இது முழுக்க முழுக்க தி.மு.க-வின் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட வழக்குத்தான்’’ என்று நீண்ட விளக்கம் அளித்தார் வழக்கறிஞர் குமார்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ஜெயலலிதா தரப்பு வாதங்கள் நாளையும் தொடரும்...


rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sat Sep 13, 2014 9:20 pm

இந்தவழக்கின் இறுதி தீர்ப்புக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருப்பவர் .....




கலைஞர் கருணாநிதி


சிவம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 9:45 pm

rksivam wrote:இந்தவழக்கின் இறுதி தீர்ப்புக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருப்பவர் .....




கலைஞர் கருணாநிதி


சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1087256

இப்போதுள்ள ஒரே வாய்ப்பாக இதைக்கருதுகிறார்..பார்க்கலாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 13, 2014 9:51 pm

கசிந்து வந்த தகவல் - அம்மணிக்கு எதிராக தான் தீர்ப்பு இருக்கும் என தெரிந்து கோகுல இந்திராவை தயாராக்கி வருகிறார்களாம் நமை ஆள்வதற்கு...




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 13, 2014 10:46 pm

யினியவன் wrote:கசிந்து வந்த தகவல் - அம்மணிக்கு எதிராக தான் தீர்ப்பு இருக்கும் என தெரிந்து கோகுல இந்திராவை தயாராக்கி வருகிறார்களாம் நமை ஆள்வதற்கு...

சாத்தியமே இல்லை தல! இவரைப் போன்ற திமிர்பிடித்த அரசியல்வாதிகளை அவ்வளவு எளிதில் யாரும் அடக்கிவிட முடியாது! இவரது சொம்புகள் ஏதாவது செய்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்!



ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 13, 2014 10:51 pm

சிவா wrote:சாத்தியமே இல்லை தல! இவரைப் போன்ற திமிர்பிடித்த அரசியல்வாதிகளை அவ்வளவு எளிதில் யாரும் அடக்கிவிட முடியாது! இவரது சொம்புகள் ஏதாவது செய்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்!
சொம்புகளை நெளித்து பேரிச்சம்பழத்துக்கு போட்டு நல்ல தீர்ப்பை வழங்கினால் நல்லாருக்கும் - பார்ப்போம் இன்னும் ஒரு வாரத்தில் என்ன நடக்கிறது என்று.




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 6:41 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 6 நாட்கள்!(மினி தொடர்: பகுதி - 11)
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Jaya%205(29)(1)
ஒற்றை செருப்பை யாராவது அணிவார்களா?

"போயஸ் கார்டனில் 11.2.1997-ல் கைப்பற்றப்பட்ட 914 பட்டுப் புடவைகளின் மதிப்பு 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய். 6,195 பாலிஸ்டர் மற்றும் காட்டன் புடவைகளின் மதிப்பு 27 லட்சத்து எட்டாயிரத்து 720 ரூபாய் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். 12 ஆயிரம் புடவைகளை 6 1/2 மணி நேரத்தில் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.ஒரு புடவையை 2 செகண்டில் எப்படி மதிப்பீடு செய்ய முடியும்? மதிப்பீடு செய்த ரிப்போர்ட்டும் சமர்ப்பிக்கவில்லை.புடவைகளை மதிப்பீடு செய்த பாலசுந்தரத்தை கோர்ட்டில் விசாரிக்கவும் இல்லை.என் கட்சிக்காரர் செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்.

வழக்கு நடைபெற்ற காலகட்டத்துக்கு முன்பே அவர் நிறைய புடவைகள் வைத்திருந்தார்.என் கட்சிக்காரரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு செய்யப்பட்டது"என்று வழக்கறிஞர் குமார் எட்டாவது நாள் வாதத்தை எடுத்து வைக்க...நீதிபதி அதை உன்னிப்பாகக் கவனித்தார்.

ஒன்பதாவது நாளும் புடவைகளைப் பற்றிய வாதம் தொடர்ந்தது."ஒரு புடவையை 2 செகண்டில் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.ஒரு புடவையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால்,அந்தப் புடவையில் உள்ள நூல், ஜரிகையைக் கருக்கி அதில் வரும் வாசனையைப் பொறுத்து அது ஒரிஜினல் பட்டுப்பூச்சியில் இருந்து தயாரிக்கப்பட்ட புடவைதானா என்பதை அறிய வேண்டும்.சிந்தடிக் புடவையாக இருந்தால்,கருக்கும்போது மெழுகு போல உருகும்.அதில் எது ஜரிகை,வெள்ளி,தங்கம் என்பதை கைதேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்.இது எதையும் பின்பற்றவில்லை.

இந்த வழக்கில் ஏ1 ஆக சேர்க்கப்பட்டுள்ள என் மனுதாரருக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் வீட்டில் ஃபங்ஷன் நடந்தால் வருவார்கள்,போவார்கள்.அப்படி இருக்கும்போது எப்படி இந்தப் புடவைகள் அனைத்தும் என் மனுதாரருடையதுதான் என்று சொல்ல முடியும்? இந்தப் புடவைகள் அனைத்தும் வழக்கு நடைப்பெற்ற காலத்தில் வாங்கியது என்பதற்கு எந்த சான்றும் கிடையாது. அதேபோல போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகளின் மதிப்பு ரூ.2,00,902.45 என்று மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.

இந்தச் செருப்புகள் ஜென்ஸ்,லேடீஸ் அணியக் கூடியது எனும்போது,எப்படி அனைத்தும் என் மனுதாரருக்குச் சொந்தமாகும்? அதேபோல் நிறைய ஒற்றைச் செருப்புகளையும் சேர்த்து கணக்கிட்டு இருப்பது தவறு.ஒற்றைச் செருப்பை யார் போடுவார்கள்? முறையாக என் மனுதாரருடைய காலின் அளவை எடுத்து அந்த அளவில் உள்ள செருப்புகளை மட்டுமே மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. என் மனுதாரர் வீட்டில் 14 பேர் இருக்கிறார்கள்.கேம்ப் ஆபீஸ் இருக்கிறது. அவர் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருக்கிறார்.அதனால், கட்சிக்காரர்கள் பலரும் வீட்டுக்கு வருவார்கள்.எல்லோருடைய செருப்புகளையும் சேர்த்து என்னுடைய கட்சிக்காரருக்கு சொந்தமானது என்பது எந்த விதத்தில் பொருந்தும். அதுவும் வழக்கு நடைபெற்ற காலத்தில் வாங்கப்பட்டவை என்பதற்கும் சான்று இல்லை" என்று சொல்லி அதிரவைத்தார் குமார்.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   - Page 3 Kumar%20(1)(4)
தொடர்ந்த அவர், "போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட ஏழு விலை உயர்ந்த வாட்ச்களின் மதிப்பு 9,03,000 ரூபாய் என்றும், 91 சாதாரண வாட்ச்களின் மதிப்பு 6,87,350 ரூபாய் என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள்.இந்த வாட்ச்களை தகுதியற்ற வல்லுநர்களைக் கொண்டு மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.அனைத்து வாட்ச்களையும் பொத்தாம்பொதுவாக மதிப்பீடு செய்து மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.இதுவும் வழக்கு நடைபெற்ற காலத்தில் வாங்கப்பட்டவை அல்ல" என்று விவரித்தார்.

பத்தாவது நாள் வாதத்தில்,"அரபு மொழியில் 'ஃபார்மிசைடு ஃபீஸ்ட்' என்று சொல்வார்கள்.கற்பனையிலேயே வாழை மரத்தை வளர்த்து, கற்பனையிலேயே அதில் இலையை அறுத்து, கற்பனையிலேயே சமையல் செய்து, கற்பனையிலேயே இலையில் சாப்பாடு போட்டு, கற்பனையிலேயே சாப்பிடுவார்கள்.உண்மையில் சாப்பிட்டீர்களா என்றால் சாப்பிட்டோம் என்பார்கள்.

அதுபோல சுதாகரன் திருமணத்தைப் பார்க்காமல், எங்களிடம் கேட்காமல், கற்பனையிலேயே மதிப்பீடு செய்து மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்" என்று வாதத்தை எடுத்து வைத்த வழக்கறிஞர் குமார், "திருமணத்துக்கு ஆன செலவுகளை நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார் செலுத்தியிருக்கிறார். அதற்கு வரியும் செலுத்தியிருக்கிறார்" என்று அன்றைய வாதத்தை முடித்தார்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சுதாகரன் திருமணத்தைப் பற்றிய வாதம் நாளை...


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 20, 2014 9:17 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் 5 நாட்கள்! (மினி தொடர்: பகுதி - 12)

சுதாகரன் திருமணத்தை வாழ்த்துவதற்காகவே ஜெயலலிதா சென்றார்!

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் வாதம் தொடர்கிறது... ''சுதாகரனுக்கும், சத்தியலட்சுமிக்கும் 7.9.1995ல் திருமணம் நடந்தது. அன்று மணமக்களை வாழ்த்துவதற்காக அப்போதைய தமிழக முதல்வராக இருந்த என் மனுதாரர் ஜெயலலிதா அழைக்கப்பட்டார்.

மணமக்களை வாழ்த்த அவர், அங்கு வருவதைத் தெரிந்துகொண்ட அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரை வரவேற்க, சென்னை எம்.ஆர்.சி நகர் சாலைகளில் அலங்கார வளைவுகளையும், பேனர்களையும் வைத்ததோடு, சில இடங்களில் விருந்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருமணப் பந்தலுக்கு 5,21,23,532 ரூபாய் செலவு ஆனதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அலங்காரப் பந்தலை சினிமா துறையில் புகழ்பெற்ற சினி ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அமைத்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. 1999ல் வருமானவரித் துறை அறிக்கையில் தோட்டா தரணி, ‘எனக்கு இரண்டு குடும்பத்தினரும் வேண்டப்பட்டவர்கள். அதனால் நான் பணம் எதுவும் வாங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தொண்டர்களுக்கு வழங்கிய சாப்பாடு, மினரல் வாட்டர், தாம்பூலத்துக்கான செலவுகளை சிலர் ஏற்றுக்கொண்டதற்கு ஏற்கெனவே சாட்சியம் அளித்துள்ளனர். திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய வி.ஐ.பி.களுக்கு 100 வெள்ளித்தட்டுகளை சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன் வாங்கிக் கொடுத்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.

திருமணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியும், மாண்டலின் சீனிவாசனின் சங்கீத நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. சிவாஜி குடும்பத்து விழா என்பதால் அந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் பணம் எதுவும் வாங்கவில்லை என்று சாட்சியளித்துள்ளனர். கன்னியாகுமரி கரகாட்டக் கலைஞர்களுக்கு ராம்குமார் 7,000 ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளார். இப்படி திருமணத்துக்குப் பலரும் செலவு செய்திருக்க... அத்தனையும் என் கட்சிக்காரர் ஜெயலலிதா செய்ததாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது.

வி.என்.சுகாதரனின் திருமணத்துக்கு 6 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது தவறானது. திருமணத்துக்கான செலவுகளை யார் செய்தது என்பதை கடந்த மூன்று நாட்களாக குறிப்பிட்டுள்ளேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத் திருமணம் என்பதால், அவரது குடும்பத்தினர் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினர். சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு சிவாஜியின் இரண்டாவது மகன் பிரபு நடித்த படங்களை வெளிநாடுகளில் விநியோகம் செய்ததன் மூலம் கிடைத்த பணம் முழுவதும் இந்தத் திருமணத்துக்காக செலவு செய்துள்ளனர். இதை அவர்கள் நீதிமன்றத்திலும் சாட்சியம் அளித்துள்ளனர்" என்று குமார் சொல்லிக் கொண்டு போக... நீதிபதி குன்ஹா குறுக்கிட்டார்.

''இந்தத் திருமணம் நடைப்பெற்ற சமயத்தில் சிவாஜி உயிரோடு இருந்தாரா?" என்று கேட்டதும், குமார் சற்று தயக்கத்துடன் யோசித்தார். அரசு வழக்கறிஞர் மராடி எழுந்து, ''சிவாஜி உயிரோடு இருந்தார்" என்றார். நீதிபதி, ''வழக்கு சம்பந்தமாக சிவாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டதா?" என்று கேட்டார். அதற்கு குமார், இல்லை என்று சொன்னார்.

''என் கட்சிக்காரர் ஜெயலலிதாவிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 871 விதமான தங்க ஆபரணங்கள் இருந்தது. 1987-88ல் 7 கிலோ 56 கிராமும், 1988-89ல் 1 கிலோ 26 கிராமும், 1989-90ல் 4 கிலோ 312 கிராமும், 1990-91ல் 8 கிலோ 385 கிராமும் வாங்கியிருந்தார். மொத்தம் 4 ஆண்டுகளில் 21 கிலோ 280 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். ஆக, இந்த நகைகள் அனைத்தும் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. இதற்கு முறையாக வருமான வரியும் கட்டியுள்ளார்.

வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, 30.3.1991ல் 1 கிலோ 931 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். இவையும் வழக்கு காலத்துக்கு முன்பு வாங்கப்பட்டது. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 468 வகையான நகைகளில், 1992 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தங்கப் படகும், செங்கோட்டையன் இரட்டை இலையும், கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசு என 27 பேர் தங்க மாம்பழம், தங்கவேல் என்பவர் தங்க பேனா என 27 வகையான நகைகள் கொடுத்தார்கள். இதன் மதிப்பு 3 கிலோ 365 கிராம். இந்த நகைகள் அனைத்தும் கட்சிக்கு சொந்தமானது. தலைமைக் கழகத்தில் வைக்க இடம் இல்லை என்பதால் ஜெயலலிதா வீட்டில் வைத்திருந்தார்கள். எனவே இதையும் ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

சுதாகரனின் திருமணத்துக்கு ஜெயலலிதா பரிசாக 11,94,381.50 ரூபாய் மதிப்புள்ள 777 கிராம் தங்கம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறவர்கள், அதைக் கைப்பற்றவில்லை. கோர்ட்டில் குறியீடு செய்யவும் இல்லை. அதனால், இந்த வழக்கில் அந்தத் தொகையையும் கணக்கில்கொள்ளக் கூடாது. ஆக மொத்தத்தில் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே 27 கிலோ 588 கிராம் தங்க நகைகள் இருந்தது என்பது தவறானது.

போயஸ் கார்டனின் 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றியதாக கோர்ட்டில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதன் மதிப்பு 48,80,000 ரூபாய் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், என் மனுதாரரிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 1,250 கிலோ வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்தார். அதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து வரியும் கட்டியுள்ளார். வருமானவரி தீர்ப்பாயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கியுள்ளது" என்று குமார் சொல்ல... நீதிபதி குறுக்கிட்டு, ''அந்த உத்தரவை வைத்து இந்த வழக்குக்குத் தடை வாங்கி இருக்கலாமே?" என்று கேட்க, "அந்த காலகட்டத்தில் தடை வாங்கவில்லை" என்றார் குமார்.

தொடர்ந்து வாதிட்ட குமார், "நல்லம நாயுடு தலைமையில் செயல்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் என் கட்சிக்காரரின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்டினார்கள். ஆனால், அவருக்கு விவசாய நிலத்தில் கிடைத்த வருவாய்களை திட்டமிட்டு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.

ஹைதராபாத் திராட்சை தோட்டம் மற்றும் அதே மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பஷிராபாத்தில் உள்ள விவசாய நிலங்களில் விளைந்த திராட்சை, கத்திரி, வாழை, தேங்காய், மாம்பழம், சீத்தாபழம், பப்பாளி பழங்கள் விவசாயம் செய்ததில் 1992-93 ஆம் ஆண்டில் கிடைத்த வருமானம் 9,50,000 ரூபாய். 1993-94ல் கிடைத்த வருமானம் 10,50,000 ரூபாய். 1994-95ல் கிடைத்த வருமானம் 11,00,000 ரூபாய். 1995-96ல் கிடைத்த வருமானம் 10,00,000 ரூபாய். 1996-97ல் கிடைத்த வருமானம் 11,50,000 ரூபாய். ஆக, வழக்கு நடைபெறும் ஐந்து ஆண்டுகளில் விவசாய நிலத்தில் கிடைத்த மொத்த வருமானம் 52,50,000 ரூபாய். ஆனால், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 5 வருடங்களில் இந்த நிலங்களில் கிடைத்த வருமானமாக 5,78,340 ரூபாயாக குறைத்து மதிப்பிட்டுள்ளனர்" என்றார்.

அத்தனையும் உன்னிப்பாகக் கவனித்து குறித்துக்கொண்டார் நீதிபதி குன்ஹா.

வீ.கே.ரமேஷ்

படம்: ரமேஷ் கந்தசாமி

சசிகலா தரப்பின் வாதம் நாளை...


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 20, 2014 9:25 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! ( மினி தொடர்: பகுதி- 13)

ஜெயலலிதாவும் சசிகலாவும் பிசினஸ் பார்ட்னர்கள்!’

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கரின் வாதத்தில் இருந்து...

‘‘இந்த வழக்கில் என் மனுதாரர் சசிகலா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, அவர் தொடங்கியுள்ள கம்பெனிகளுக்கு ஜெயலலிதா பணம் கொடுத்தார் என்பதுதான். இந்த வழக்கு காலத்துக்கு முன்பே அவர்கள் இருவருக்கும் நட்பு இருந்தது. இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள். ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களில் இருவரும் பங்குதாரர்கள்.

வழக்கு காலகட்டத்துக்கு முன்பே என் மனுதாரர் பல பிசினஸ்களை நடத்தி வந்தார். 1986 ஆம் ஆண்டு வினோத் வீடியோ விஷன் தொடங்கி, அதன் பிறகு மெட்டல் கிங், கிரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ ரியல் எஸ்டேட், ஜெ.எஸ். ஹவுஸிங், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக் ஷன், சக்தி கன்ஸ்ட்ரக் ஷன் உள்ளிட்ட 19 கம்பெனிகளில் சசிகலா பங்குதாரராக உள்ளார். இவை அனைத்தும் வழக்கு காலகட்டத்துக்கு முன்பே தொடங்கப்பட்டவை.

ஜெயலலிதாவின் பணத்தில் சசிகலா இந்தக் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். அதற்குக் காரணமாகச் சொல்வது இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்பதைத்தான். இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்பதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கக் கூடாது. ஜெயலலிதாவின் பணத்தை சசிகலா பங்குதாரராக உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சமர்பிக்கவில்லை. ஆக, ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலா பணம் வாங்கினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!

சசிகலா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்குக் கட்டடம், நிலம் வாங்கியபோது விற்பனை பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையைக் காட்டிலும் கூடுதல் தொகை கொடுத்து சொத்துகளை வாங்கியதாகவும், ஒரு குறிப்பிட்ட தொகையை காசோலையாகவும், மீதி தொகையை ரொக்கமாகவும் கொடுத்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். ஆனால், சசிகலா ரொக்கமாகப் பணம் கொடுத்தார் என்பதற்கு எந்த ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை.

இது சம்பந்தப்பட்ட சாட்சிகள்கூட நீதிமன்றத்தில் பணமாகப் பெற்றோம் என்று சொல்லவில்லை. ரொக்கப் பணம் கொடுத்து ஒப்பந்தம் எதுவும் தாக்கல் செய்யவில்லை. வாய்மொழியாக கொடுத்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதை ஆதாரமாகக் கருதவும் கூடாது. ஏற்கெனவே 2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், ‘எவிடன்ஸ் ஆக்ட் 91, 92 ஆவது பிரிவின்படி சொத்து வாங்கும்போது அதற்கான விற்பனை பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வாய்மொழியாக இவ்வளவு தொகை கொடுத்தேன்... அவ்வளவு தொகை கொடுத்தேன் என்று சொல்வதை சட்டப்படி ஏற்க முடியாது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுபோல இந்த வழக்கில் வாய்மொழி உத்தரவுகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

சசிகலா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு சொந்தமான கட்டடத்தை அரசு பொறியாளர்கள் ரவிசங்கர், திருத்துவராஜை வைத்து மிகைப்படுத்தி மதிப்பீடுசெய்து தாக்கல் செய்திருப்பது தவறு. அரசு தரப்பு பொறியாளர்கள் யாரும் தங்களுடைய விளக்கத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. மேலும், வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கிய சொத்துகளை வழக்கு காலகட்டத்தில் வாங்கியதாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர். வழக்கு காலகட்டத்தில் எந்த சொத்தும் சசிகலா வாங்கவில்லை.

அப்போதைய அரசின் உத்தரவுபடி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய பொறியாளர்களை வைத்து என் மனுதாரர் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் கட்டட மதிப்புகளை மிகைப்படுத்திக் காட்டி இருக்கின்றனர். எந்தெந்த தேதிகளில் எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தையும் குறிப்பிடவில்லை. கட்டடங்கள் கட்டி ஆறு மாதங்களுக்குப் பிறகே மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இது சரியான மதிப்பீடு இல்லை. எனவே, என் மனுதாரர் பங்குதாரராக இருக்கும் கம்பெனிகளின் சொத்து மதிப்பீடு பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. சசிகலா குற்றமற்றவர்!’’ என்றார்.

குறிப்பு: தீர்ப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதால் இத்தொடரில் 'தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்' என தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

-- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சுதாகரன், இளவரசி தரப்பு வாதம் நாளை...




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 20, 2014 9:26 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! ( மினி தொடர்: பகுதி- 14)
'நல்ல நண்பர்கள் சேர்ந்து இருப்பதும் ஒரு குடும்பம்தான்!'

சுதாகரன், இளவரசி ஆகிய இருவரின் சார்பில் மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதத்தை எடுத்து வைத்தார். அதில் இருந்து...

‘‘இந்த வழக்கு உண்மையில் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்ததான வழக்கு அல்ல. முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துக்காக பொது வாழ்க்கையில் உள்ள ஜெயலலிதாவையும் அவரது நண்பர்களையும் பழிவாங்கும் நோக்கத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் போட்ட தமிழக ஊழல் தடுப்பு போலீஸார், எஃப்.ஐ.ஆர் போட்டது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது வரை ஊழல் தடுப்புச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. அவசரகதியில் விதிமுறைகள் மீறி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று ஜனநாயகம் மலர்ந்த பிறகு 1980 ஆம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் பெரும்பாலும் தொழில் தொடங்கி நடத்தவில்லை. 1980-க்குப் பிறகு மக்கள் பிரதிநிதிகள், ஆட்சிப் பொறுப்பில் உள்ள பொது ஊழியர்கள் தனியாக தொழில் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அதுபோல, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து, அதை மற்ற குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி மூலம் பல கம்பெனிகளில் பினாமி பெயரில் முதலீடு செய்துள்ளதாக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அதற்கான எந்த ஆவணங்களையும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. சாட்சியங்களும் உறுதி செய்யவில்லை. அதே நேரத்தில் இவர்கள் ஜெயலலிதாவின் நண்பர்கள், பினாமிகளும் அல்ல.

வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துகளைச் சேர்த்து இருந்தால், ஊழல் தடுப்பு போலீஸார் அதுகுறித்து அவரிடமே விசாரித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவருடைய நண்பர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்துக்காக என் மனுதாரர்கள் சுதாகரன், இளவரசியை குற்றவாளிகளாக இந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? ஜெயலலிதாவுக்கும் என் மனுதாரருக்கும் ரத்த சம்பந்தமான உறவோ, தொழில் தொடர்பான பார்ட்னர்ஷிப்போ கிடையாது. இவர்களுக்கு இடையே பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் சேர்ந்து இருப்பது மட்டுமே குடும்பம் கிடையாது. நல்ல நண்பர்கள் சேர்ந்து இருப்பதும் ஒரு குடும்பம்தான். அப்படித்தான் ஜெயலலிதாவும் என் மனுதாரர்களும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

என் மனுதாரர்களுக்கு தனியே பல நிறுவனங்கள் இருக்கின்றன. அதன் மூலம் அவர்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். அதில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பணம் முதலீடு செய்துள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. ஆகவே என் மனுதாரர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) இ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 409, 120 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்கு போட்டது தவறு.

இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பேர் மீதும் குற்றப்பத்திரிகையில் பதிவுசெய்யப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளும் தவறாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு 1: ஜெயலலிதா 1.7.91 முதல் 30.4.96 வரை முதல்வராக இருந்தபோது கணக்கில் காட்டப்படாத அதிகப்படியான சொத்துகளைச் சேர்த்து அதனை சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் மாற்றி சொத்துகள் வாங்கியதாகவும், இவர்களால் தொடங்கப்பட்ட 32 கம்பெனிகள் மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்றும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆனால், இவர்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடுவதைப்போல 32 கம்பெனிகள் மட்டும் எங்களுடையது அல்ல. நாங்கள் வருமானவரித் துறையில் 35 கம்பெனிகளைக் குறிப்பிட்டு இருக்கிறோம். இதில் இருந்தே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தவறு என்பது புலப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியே விசாரித்துதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் யாரிடமும் விசாரிக்காமலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

குற்றச்சாட்டு 2: ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகப்படியான சொத்துகளைச் சேர்க்க சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் உறுதுணையாக இருந்து கூட்டு சதித்திட்டம் தீட்டி சொத்துகள் ஈட்டியதாகவும், அதனால் இந்த மூவரும் குற்றம்செய்யத் தூண்டியவர்கள் என்ற முறையில் இவர்கள் மூவரும் கூட்டு சதிகாரர்கள் என்று இந்திய தண்டனைச் சட்டம் 107 (குற்றம் செய்யத் தூண்டுதல்) 120(பி) (கூட்டு சதி) என்று ஊழல் தடுப்பு போலீஸார் பதிவுசெய்திருக்கிறார்கள்.

ஆனால், 1956 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த லில்லிஷாலி வழக்கில் இதே சட்டப் பிரிவின் கீழ் பதிவுசெய்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் எந்தெந்த வகையில் குற்றம் செய்யத் தூண்டினார்கள், எப்படியெல்லாம் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்கள் என்ற விவரத்தை தெளிவாகக் குறிப்பிடப்படாததால் அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அதேபோல இந்த வழக்கிலும் குற்றம் செய்யத் தூண்டியதாகவும், சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ள என் மனுதாரர்கள் எப்படி குற்றம் செய்யத் தூண்டினார்கள், எந்தெந்த சொத்துகளைக் கூட்டு சதித் திட்டம் தீட்டி வாங்கினார்கள், யார் யாரெல்லாம் இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று எதுவும் குறிப்பிடாததால், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

குற்றச்சாட்டு 3: ஜெயலலிதா ஈட்டிய அதிகப்படியான சொத்துகள் சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் முதலீடு செய்ததும், 32 கம்பெனிகள் மற்றும் நிறுவனங்களைத் தொடங்கி நான்கு பேரும் 66 1/2 கோடி முதலீடு செய்துள்ளதற்கு சரியான கணக்குகள் ஒப்படைக்காததால், இவர்கள் மீது 13(1) இ ஊழல் தடுப்புச் சட்டம் புரிந்தவர்களாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், ஜெயலலிதா அதிகப்படியான சொத்துகளை ஈட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அந்தச் சொத்துகளை இவர்கள் மூவர் பெயரில் கம்பெனிகள் வாங்கப்பட்டது என்பதற்கு எந்த ஆவணங்களோ, சாட்சியங்களோ கோர்ட்டில் ஊழல் தடுப்பு போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை. 32 கம்பெனிகளுக்கு யார் யார் பங்குதாரர்கள், இயக்குநர்கள் என்பதையும், அந்த நிறுவனங்களில் பெயரில் எந்தெந்த சொத்துகள் எவ்வளவு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடவில்லை. எனவே, இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடும் குற்றசாட்டுகளை நீக்க வேண்டும்‘’ - இவ்வாறு தனது வாதத்தை எடுத்து வைத்தார் அமீத் தேசாய்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அமீத் தேசாயின் வாதம் நாளையும் தொடர்கிறது...


Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக