புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
56 Posts - 73%
heezulia
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
8 Posts - 3%
prajai
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பாமரன்! Poll_c10பாமரன்! Poll_m10பாமரன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 7:55 pm

பாமரன்!
பாமரன்! P30b
பல தருணங்களில், பிரச்னை எதுவானா லும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள், அந்தப் பிரச்னைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத சாமான்ய மனிதர்கள்தான்.

நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஓர் ஆசிரியர், ஒரு டாக்டர், வழக்கறிஞர், பாதிரியார் மற்றும் பாமரன் ஒருவன் என ஐந்து பேர் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சினிடையே வக்கீல், ''நான் எல்லோரது வழக்குகளும் ஜெயிக்க வாதாடுகிறேன். நான் இல்லையென்றால் நாட்டில் பிரச்னைகள் அதிகமாகி யிருக்கும்'' என்றார். பாதிரியாரோ, ''நான் எல்லோரும் சுகமாக வாழ, கடவுளை தினமும் வேண்டுகிறேன். அதனால்தான் நாட்டில் அமைதி நிலவுகிறது'' என்று சொன்னார். ''நான் எல்லோரையும் நோயிலிருந்து காப்பாற்றுகிறேன். எனவே, நான் கடவுளுக்குச் சமமானவன்'' என்றார் டாக்டர். ஆசிரியரோ, ''நான் எல்லோருக்கும் கல்வி தந்து அறிவை வளர்க்கிறேன். என் பணியே உயர்ந்தது! மாதா, பிதாவுக்கு அடுத்து குருவைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் தெய்வம் சொல்லப்பட்டுள்ளது!'' என்று பெருமையுடன் சொன்னார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பாமர மனிதன், ''அது சரி, உங்கள் அனைவருக்கும் நான்தானே பணத்தைக் கொட்டி அழுகிறேன். ஆகவே, உங்களைவிட நானே உயர்ந்தவன்'' என்றானாம் விரக்தியுடன்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 8:32 pm

பிரச்னை ஒரு பிரச்னையல்ல!
பாமரன்! P40
அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டுச் சுவர்களில் வரிசையாக ஆணிகள் அடித்துப் படங்களை மாட்டிக் கொண்டிருந்தான் ரகு. அப்போது அவனுடைய மகன், ''அப்பா, ப்ரியா நம்ம புதுக் கார் மேல ஆணியால் கிறுக்குறா!’ என்று கத்திக் கொண்டு ஓடி வந்தான்.

ரகு பதறியபடி வெளியே ஓடிப் போய்ப் பார்த்தான். எதிரே ஆணியும் கையுமாக வந்த குழந்தை ப்ரியாவை கோபத்தில் ஓங்கி அறைந்தான். அவள் நிலை தடுமாறிக் கீழே விழ, கல்லில் தலை மோதி, காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்தது.

பதறிப்போன ரகு, குழந்தையை அள்ளியெடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். தலைக்குக் கட்டுப் போட்டு, மருந்து, மாத்திரைகளுடன் திரும்பினான்.

மருந்து உட்கொண்ட மயக்கத்தில் குழந்தை தூங்கிவிட, அவளை உள்ளே படுக்க வைத்து விட்டு, வாசலுக்கு வந்த ரகு, அப்போதுதான் காரை பார்த்தான். அதில், 'Daddy I Love You’ என்று ஆணியால் கிறுக்கியிருந்தாள் ப்ரியா. குழந்தை எழுதியிருந்த வாசகத்தைக் கண்டதுமே அவன் நெஞ்சம் நெகிழ்ந்தது; காரில் ஆணியால் கீறிவிட்டாள் என்கிற கோபம் மறைந்தது. குழந்தையை அவசரப்பட்டு அடித்துவிட்டதை எண்ணிக் குலுங்கி குலுங்கி அழுதான் ரகு.

ஆமாம்... பிரச்னைகள், சில தருணங்களில் பிரச்னைகளாகவே இருப்பதில்லை!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 8:35 pm

இப்படியும் ஒரு தீர்வா?
பாமரன்! P144
பிரச்னைக்குத் தீர்வு காண பல வழிகள் உண்டு. 'இப்படியும் ஒரு தீர்வு இருக்கலாம்’ என்று, திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் நகைச்சுவையாகச் சொன்ன கதை ஒன்று...

ஒரு கிராமத்தில் வேலன் என்பவன் வசித்து வந்தான். அவன் அடக்கமும் பொறுமையும் உள்ளவன். அவன் மனைவியோ கோபமும் ஆத்திரமும் மிக்கவள். முரண்பாடான குணங்கள் கொண்ட அவர்களின் திருமண வாழ்க்கையில் தினமும் சண்டை சச்சரவுகள், அபிப்ராய பேதங்கள், மன உளைச்சல்கள்.

அவன் எது சொன்னாலும் அவள் நேர்மாறாகத் தான் செய்வாள்.செய்யாதே என்று சொல்வதை வீம்பாகச் செய்வாள். ஊர் வம்பு பேசாதே என்றால், அன்றைக்கு அவளின் முக்கிய வேலையே ஊர் வம்பு பேசுவதுதான். திருத்திப் பார்த்தான். பொறுத்துப் பார்த்தான். முடியவில்லை. ஒருகட்டத்தில் மனம் நொந்து, குடும்ப வாழ்க்கையை வெறுத்து, சந்நியாசியாக முடிவு செய்து, ஒரு சாமியாரிடம் உபதேசம் பெறச் சென்றான். சாமியார் இவனது பிரச்னையைக் கேட்டுவிட்டு, குடும்பப் பாசமும், மனைவியிடம் அன்பும் கொண்ட அவனால் துறவறம் மேற்கொள்ள முடியாது என அறிந்தார்.

கூடவே, ''வேலா! நீ எது சொன்னாலும் உன் மனைவி நேர்மாறாகச் செய்கிறாள் என்கிறாய். நீ விரும்பியது நடக்க வேண்டும். அவ்வளவுதானே! இது மிகச் சுலபம். நீ என்ன விரும்புகிறாயோ, அதற்கு நேர்மாறாக உன் மனைவியிடம் சொல்! 'இன்றைக்கு எதுவும் சமைக்காதே’ என்று சொன்னால், நீ விரும்பியபடி சமைத்துப் போடுவாள். 'சும்மா வீட்டிலேயே உட்கார்ந்திருக்காதே! போய் திண்ணையில் உட்கார்ந்து, அக்கம்பக்கத்தாருடன் ஏதாவது வம்பு பேசிவிட்டு வா!’ என்று சொல். உன் மனைவி ஊர் வம்பு பேசுவது நின்றுவிடும்'' என்றார். வேலன், சாமியார் சொன்னபடியே செய்தான். அவன் பிரச்னையும் தீர்ந்தது.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 8:41 pm

அன்பால் புலியையும் வெல்லலாம்!
பாமரன்! P28a
குருவும் சிஷ்யனும் காட்டு வழியே சென்றுகொண்டி ருந்தனர். அப்போது, திடீரென புலியின் உறுமல் அருகில் கேட்டது. சிஷ்யன் நடுநடுங்கிப் போனான். ''குருவே, இங்கிருந்து ஓடிவிடலாமா?'' என்று பரிதாபமாகக் கேட்டான்.

''ஓடிவிடலாம்தான். ஆனால், புலி நம்மைத் துரத்தாமல் விடாது. புலியை எதிர்த்துப் போராடலாம் என்றாலோ, நம்மிடம் ஆயுதம் எதுவுமில்லை. பேசாமல், கடவுளை வேண்டிக் கொண்டு, கண்களை மூடி, தியானத்தில் அமரலாம். ஆனால், கடவுளின் தீர்ப்பு யார் பக்கம் இருக்கும் என்று நமக்குத் தெரியாது. எனவே, சற்றுப் பொறுமையாக இரு!'' என்ற குரு, தன் மனத்தை ஒருமுகப்படுத்தி, தியானத்தில் ஈடுபட்டார். புலி சற்று நேரத்தில், வேறு வழியில் சென்று மறைந்தது.

''குருவே, என்ன அற்புதம் செய்து புலியை விரட்டினீர்கள்?'' என்று கேட்டான் சிஷ்யன்.

''ஒன்றும் பெரிதாகச் செய்ய வில்லை. என் மனத்திலிருந்து எதிர்மறை எண்ணங்களை வெளி யேற்றி, ஆழ்மன சக்தியை வெளிக் கொண்டு வந்தேன். புலியின் மன நிலையை அது பாதித்து, அமைதியை ஏற்படுத்தியது. எனவே, அது சாந்தமாகி, விலகிச் சென்றது. நம் உள் மனமும் அறிவும் ஒருமுகப்பட்டு, அமைதியும் சாந்தமும் நிலவும்போது, அந்த சாந்த நிலை வெளியேயும் பரவி, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அமைதியடையச் செய்கிறது!'' என்றார் குரு.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 9:00 pm

'பிள்ளையார் சொன்ன கணக்கு!’
பாமரன்! P28b
சுந்தர் பத்தாம் வகுப்பு மாணவன். நன்கு படித்து, நிறைய மார்க் வாங்கவேண்டும், முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்பது அவனது ஆசை. அவனது குடும்பம் தெய்வ பக்தியும் நம்பிக்கையும் கொண்ட குடும்பம்.

தேர்வுக்குப் பத்து நாட்களுக்கு முன்பு அவன் தாத்தா, ''அடேய் சுந்தர்! ஸ்கூலுக்குப் போகும் வழியில், தெருக்கோடியில் இருக்கும் பிள்ளையாரை பிரதட்சிணம் செய்து வழிபட்டுவிட்டுப் போ. அவர் அருளால், வகுப்பில் நீ முதல் ஆளாக வருவாய்'' என்றார். எப்படியாவது படிப்பில் முதலிடத்துக்கு வரவேண்டும்; அதற்குப் பிள்ளையாரும் உதவினால் நல்லதுதானே என்று சுந்தரும் அதற்கு ஒப்புக் கொண்டான். அன்று முதல் பிள்ளையாரைச் சுற்றி வந்து வழிபட ஆரம்பித்தான்.

அவனது நம்பிக்கை தீவிரமாயிற்று. ஒன்றுக்குப் பத்து முறை பிள்ளையாரை வலம் வந்தான். அதற்காகச் சில மணி நேரம் முன்பே வீட்டிலிருந்து புறப்படுவதை வழக்கமாக்கிக்கொண்டான். பரீட்சை வந்தது. நன்றாகவே எழுதினான். ரிசல்ட்டும் வந்தது. ஆனால், ஏனோ அவன் முதல் ரேங்க்கில் பாஸாகவில்லை.

இதனால், பிள்ளையார்மீது கோபம் கொண்டான். தான் வழக்கமாக வழிபடும் கோயிலுக்குச் சென்று, ''என்ன பிள்ளையாரப்பா! உன்னை நம்பி தினமும் பக்தியோடு சுற்றிக் கும்பிட்டேனே! அதற்கு நீ தந்த பலன் இதுதானா? நான் அதிக மதிப்பெண் எடுத்து பரீட்சையில் முதல் ரேங்க்கில் பாஸாகவில்லையே! உன்னைச் சுற்றி வந்து கும்பிட்ட நேரத்தில் பரீட்சைக்குப் படித்திருந்தால், நல்ல மார்க் கிடைத்திருக்கும்; விரும்பியபடி முதல் ரேங்க்கில் பாஸாகியிருப்பேன். என்னை ஏமாற்றிவிட்டாயே... ஏன்?'' என்று ஆவேசமாகக் கேட்டான்.

உடனே விநாயகர் தோன்றி, ''குழந்தாய்! உனக்கு ஒன்று நினைவிருக்கிறதா? முதல் நாள் நீ பரீட்சைக்குப் போகும்போது, வேகமாக ஒரு தண்ணீர் லாரி உன்மேல் இடிப்பதுபோல வந்தது அல்லவா?'' எனக் கேட்டார்.

''ஆமாம், வந்தது. நல்ல காலம்... அப்போது அங்கு நின்றிருந்த பெரியவர் ஒருவர் என் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினார். அதற்கென்ன?'' என்று கேட்டான் சுந்தர்.

உடனே விநாயகர், ''அந்தப் பெரியவர் நான்தானப்பா! நீ என்னைச் சுற்றி வந்ததால் உண்டான புண்ணிய பலனை உனக்குக் கொடுத்து, உன் உயிரைக் காப்பாற்றினேன். உனக்குப் பரீட்சை முக்கியமாக இருந்தது. எனக்கு உன் உயிர் முக்கியமாகத் தெரிந்தது. உன் புண்ணிய பலனால் உயிர் பிழைத்தாய். ஆக, நீ விரும்பியது போன்று அந்தப் பலனானது உனது பரீட்சைக்குப் பலன் தரவில்லை. போகட்டும், நீ எப்போதும் போல் கவனமாகப் படி; நல்ல மதிப்பெண் கிடைக்கும். தொடர்ந்து ஆலய வழிபாடு செய். அதனால் புண்ணியம் சேரும். உன் முயற்சிகள் கைகூடும். ஆனால், உன் பிரார்த்தனைக்கான பலனை எப்போது, எப்படி உனக்குத் தருவது என்பதை நான் முடிவு செய்துகொள்கிறேன்'' என்று கூறி மறைந்தார்.

ஆம்... இறைவன் நாம் வேண்டுவதைக் கொடுப்பதில்லை; நமக்கு வேண்டியதைக் கொடுக்கிறார்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 9:05 pm

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன

'ஏழு ஷாடிகள்’ கதை

பாமரன்! P44
ஒரு கிராமத்தில், கந்தன் என்ற வியாபாரி இருந்தான். பணம் சேர்ப்பதிலேயே குறிக்கோளாக இருந்து, நிறைய செல்வங்களைச் சேர்த்தான். இருந்தாலும் திருப்தி அடையாமல், மேலும் மேலும் பொன்னும் பொருளும் சேர்க்க ஆசைப்பட்டான்.

ஒரு நாள், பக்கத்து ஊரில் வியாபாரம் செய்து விட்டு ஊர் திரும்புவதற்குள் இரவாகிவிட்டது. எனவே, வழியில் பாழடைந்த மண்டபம் ஒன்றில் தங்கினான். நள்ளிரவில் ஒரு பூதம் தோன்றியது. ''கந்தா! நீ அதிர்ஷ்டக்காரன். என்னிடம் ஏழு ஜாடிகளில் பொன்னும் பொருளும் உள்ளன. இவை உனக்குத்தான்! இவற்றை நீ எடுத்துச் செல். இதில், ஆறு ஜாடிகளில் பாதியளவே பொன்- பொருள் உள்ளன. ஏழாவது ஜாடியில் முக்கால் அளவு செல்வம் உள்ளது. இதை இப்படியே நீ உனதாக்கிக் கொண்டு செலவழித்து மகிழலாம்.

அல்லது, நீ இதுவரை சம்பாதித்த பொருளையெல்லாம் பணமாக்கி, ஏழாவது ஜாடியை நிரப்ப முயற்சி செய். அது நிரம்பியவுடன் மற்ற ஆறு ஜாடிகளிலும் தானாகவே பொன்- பொருள் நிரம்பி வழியும். ஆனால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஏழாவது ஜாடியை உன்னால் நிரப்ப முடியாவிட்டால், எல்லா ஜாடிகளும் மறைந்துவிடும்'' என்று கூறிவிட்டு அந்த பூதம் மறைந்துபோனது.

மறுநாள், அந்த ஏழு ஜாடிகளையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றான் கந்தன். ஒரு வார காலத்துக்குள் தனது வீடு, வாசல், தோட்டம் எல்லாவற்றையும் விற்றுப் பொன்னாக்கி, ஏழாவது ஜாடியில் போட்டான். ஜாடி நிரம்பவில்லை. மேலும் வியாபாரம் செய்து ஈட்டிய பொருள்களையெல்லாம் ஏழாவது ஜாடியில் போட்டான். அப்போதும் அது நிரம்பவில்லை. பூதம் சொன்ன காலக்கெடு முடிந்தது. அப்போதும் ஏழாவது ஜாடி நிரம்பாததால், பூதம் சொன்னதுபோல் ஏழு ஜாடிகளும் மறைந்துவிட்டன.

பாவம் கந்தன்... எப்போதுமே அந்த ஏழாவது ஜாடி நிரம்பாது என்பது அந்த பூதத்துக்குத் தெரியும். இவனுக்குத் தெரியாது!

'இருப்பதை மறந்து, பறப்பதைத் தேடாதே!’ என்பது பழமொழி. கிடைத்ததைக் கொண்டு திருப்திப்படாமல், பேராசை கொண்டு வாழ்ந்தால் இந்தக் கதிதான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 02, 2014 9:08 pm

அனைத்தும் அருமை...
-
பாமரன்! 103459460

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 9:20 pm

ஆதிசங்கரர் பெற்ற ஞானம்...
பாமரன்! P32a
ஒவ்வொருவருக்குள்ளும் பிரம்மம் அடங்கியுள்ளது என்பதை, 'அஹம் பிரம்மாஸ்மி’ என்ற அத்வைத தத்துவத்தின் மூலம் உலகுக்கு எடுத்துக்காட்டியவர், ஜகத்குரு ஆதிசங்கரர்.

ஒருமுறை, காசி மாநகரத்து வீதியில் அவர் சென்றுகொண்டிருந்த போது, புலையன் ஒருவன் எதிர்ப்பட்டான். அழுக்கான மேனி, பரட்டைத் தலை, கந்தல் துணிகள் அணிந்தவனாக, நான்கு நாய்கள் பின்தொடர வந்தான் அவன். அவனை தூரத்திலேயே கவனித்துவிட்ட ஆதிசங்கரர், குளித்துமுடித்து திருநீறு பூசி, ஜபம் செய்துவிட்டு வரும் தன்னுடைய புனிதமான மேனி, அவன்மீது தீண்டி மாசு அடைந்துவிடக் கூடாது என்று எண்ணினார். எனவே, பாதையில் இருந்து சற்று விலகி, அந்தப் பாதையில் சிறிது தீர்த்தம் தெளித்துவிட்டு, மேலே நடந்தார். அதைக் கவனித்த புலையன், சட்டென்று அவரை வழிமறிப்பதுபோல் எதிரில் வந்து நின்றான்.

''எதைப் பார்த்து தாங்கள் விலகினீர்கள்? என் உடலைப் பார்த்தா? தோற்றத்தைப் பார்த்தா? அல்லது, ஆன்மாவைப் பார்த்தா?'' என்று கேட்டான்.

'அஹம் பிரம்மாஸ்மி எனக் கூறும் தாங்கள், எல்லா உடல்களிலும் ஆன்மாவாக நிறைந்திருப்பவன் இறைவனே என்ற அத்வைத தத்துவத்தைக் கூறும் நீங்கள், என்னைக் கண்டு ஏன் விலகினீர்கள்?’ என்று அவன் கேட்டதுபோல் ஆதிசங்கரருக்குத் தோன்றியது. அந்த நிமிடம், அவன் புலையனாகத் தோன்றாமல், சாட்சாத் பரமேஸ்வரனாகவே அவர் கண்களுக்குத் தோன்றினான்!

உடல்களில், அறிவாற்றல்களில், மனங்களில் பேதங்கள் தோன்றினாலும், ஆன்மா என்பது ஒன்றுதான். அது தெய்வீக சக்தியின் அம்சம். அதில் பாகுபாடுகள் இல்லை. அதை ஆதிசங்கரர் உணர்ந்தார். அதையே பின்னர் உலகம் அனைத்துக்கும் உணர்த்தினார்.

ஒவ்வொருவருக்குள்ளும் அழிவில்லாத தெய்வ சக்தியாகத் திகழ்கிறது ஆன்மா. அதனைக் கொண்டு நாம் செய்யும் சாதனைகளே அமானுஷ்யமான மானுட சக்தி!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 9:23 pm


அடிப்பதும் அணைப்பதும் ஒன்றே!
பாமரன்! P22
ஒரு கிராமத்தின் வழியே நடந்துகொண்டிருந்த சந்நியாசி ஒருவர், அங்கே பாதையோரம் அமர்ந்திருந்த கிராமத்துத் தலைவனின் காலை தவறுதலாக மிதித்துவிட்டார். தனது தவற்றை உணர்ந்து, எந்தத் தயக்கமும் இன்றி, அந்தக் கிராமத்துத் தலைவனிடம் மன்னிப்பும் கேட்டார்.

ஆனால், அவனோ சரியான முரடன். அவன் கடுங்கோபத்துடன் சந்நியாசியைச் சுடுசொற்களால் திட்டினான். கையிலிருந்த கழியால் அவரை அடிக்கவும் செய்தான். உடல்நலம் குன்றியிருந்த அந்தச் சந்நியாசி அடி தாங்காமல் மயங்கி விழுந்தார். கிராமத் தலைவனோ எதையும் சட்டை செய்யாமல், அங்கிருந்து போய்விட்டான்.

நல்லவேளையாக, சந்நியாசியின் சீடர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். குருவின் நிலை கண்டு வருந்தி, அவருக்கு முதலுதவி செய்தனர். சீடர்களில் ஒருவன், ''குருவே! இப்போது தங்களுக்கு சேவை செய்வது யாரென்று தெரிகிறதா?'' என்று கேட்டான்.

அதற்கு அவர், ''ஓ, தெரிகிறதே! சற்று முன் என்னை அடித்த அதே கைகள்தானே இப்போது எனக்குப் பணிவிடை செய்கின்றன'' என்றார்.

ஆமாம்! ஞானிகளுக்கு அடிக்கிற கையும், அணைக்கிற கையும் ஒன்றுதான். ஏனெனில், அவர்கள் மனிதர்களைப் பார்ப்பதில்லை.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 9:26 pm

கிருஷ்ணனும் துர்வாசரும்!
பாமரன்! P38a
ஒருமுறை பிரம்மலோகத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. 'நைஷ்டிக பிரம்மசாரி யார்? நித்தியமாக உபவாசம் இருப்பவர் யார்?’ என்ற கேள்விகளை நாரதர் எழுப்பினார்.

அதற்கு பிரம்மதேவன், ''நித்தியமான நைஷ்டிக பிரம்மசாரி பகவான் கிருஷ்ணன்; நித்தியமாக உபவாசம் இருப்பவர் துர்வாச மகரிஷி'' என்று

பதில் தந்தார். 'பதினாயிரம் கோபிகளோடு ராஸ லீலை புரியும் கிருஷ்ணனா பிரம்மசாரி? பசி பொறுக்க முடியாமல் தினமும் நான்கு வேளை உணவருந்தும் துர்வாசரா நித்ய உபாசகர்?’ என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர் நாரதரும் மற்ற தேவர்களும்.

அப்போது பிரம்மதேவர், ''நாரதா! நீ துவாரகை சென்று ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து, 'நித்திய உபவாசி யார்?’ என்று கேள். அதற்கான பதிலை ஆதாரத்துடன் பகவான் விளக்குவார். அதுபோலவே துர்வாசரிடம் சென்று, 'நைஷ்டிக பிரம்மசாரி யார்?’ என்று கேள். 'பகவான் கிருஷ்ணனே’ என்று துர்வாசர் ஆதாரத்துடன் விளக்குவார்'' என்று அனுப்பி வைத்தார்.

அதன்படி, நாரதர் நேராக துர்வாசரிடம் வந்து, ''நைஷ்டிக பிரம்மசாரி யார்?'' என்று கேட்க, ''பகவான் ஸ்ரீகிருஷ்ணனே! பதினாயிரம் கோபியர்கள் அவனைச் சூழ்ந்திருந்தாலும், அவர்களின் நடுவே அவன் பரப்பிரம்மமாக வாழ்கிறான். கோபியர்கள் அவனை நேசிக்கிறார்கள். அவனிடம் ஈடுபாடு கொள்கிறார்கள். ஆனால், கிருஷ்ணன் பற்றற்ற நிலையில் எல்லா ஜீவாத்மாக்களையும் நேசிக்கிறான். அவன் பாசம், நேசம் ஆகிய பந்தத்தில் கட்டுப்படுவதில்லை. அவன்தான் நைஷ்டிக பிரம்மசாரி!'' என்றார். நாரதருக்கு கிருஷ்ணப் பிரேமையின் தத்துவம் புரிந்தது.

அங்கிருந்து துவாரகை சென்று, ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி, ''பரந்தாமா, நித்திய உபவாசி துர்வாசர் என்கிறார் பிரம்மதேவர். பசி பொறுக்காமல் பலமுறை உணவருந்தும் அவரை நித்திய உபவாசி என்று எப்படிக் கூறமுடியும்?'' என்று கேட்டார் நாரதர்.

''நாரதரே, அது உண்மைதான். துர்வாசர் எப்போதும் எதையும் தனக்காகச் சாப்பிடுவது இல்லை. எதைச் சாப்பிட்டாலும் 'கிருஷ்ணார்ப்பணம்’ என்று கூறி, தண்ணீர் அருந்திவிடுகிறார். எல்லாம் என்னை வந்து சேர்ந்துவிடுகிறது. சாப்பிடுவது அவர்; பசியைத் தீர்த்துக்கொள்பவன் நான். இப்போது கூறுங்கள், அவர் நித்திய உபவாசம் இருப்பவர்தானே?'' என்றார் பகவான். தொடர்ந்து, ''செயல்கள் முக்கியமல்ல; அவற்றில் அடங்கியுள்ள சிந்தனைதான் முக்கியம். கர்மம் முக்கியம்தான். அதே நேரம், கர்ம பலன் யாரைச் சேர்கிறது என்பதில்தான் கர்மத்தின் தன்மை புலனாகிறது'' என்று கூற, நாரதர் தெளிவுபெற்றார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக