புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
2 Posts - 18%
heezulia
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
372 Posts - 49%
heezulia
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - செப்டம்பர்

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Sep 02, 2014 5:15 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - செப்டம்பர்' 1

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 GoLohB9yTVqr6kskVjDj+Sept---1

1715 - பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.

1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.

1798 - இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில்
தாக்கினர்.

1894 - அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் கொல்லப்பட்டனர்.

1897 - வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

1902 – முதலாவது அறிவியல் புனை திரைப்படம் (A Trip to the Moon) பிரான்சில் திரையிடப்பட்டது.

1914 - ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1914 - கடைசி பயணிக்கும் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.

1923 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் கொல்லப்பட்டனர்.

1928 - அகமெட் சோகு அல்பேனியா நாட்டை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.

1939 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.

1951 - ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சஸ் ஒப்பந்தம்) செய்து கொண்டன.

1961 - எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது. ஹமீட் இட்ரிஸ் அவாட்டெ என்பவர் எதியோப்பியக் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

1969 - அல் கடாஃபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1970 - ஜோர்தான் மன்னர் உசேன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1972 - ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக்க்க் சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி ஃபிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்னத்தை வென்றார்.

1979 - நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

1981 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1983 - பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர்.

1984 - யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1985 - அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1991 - உஸ்பெகிஸ்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது.

2004 - ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.

2007 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 10, 2014 5:37 pm

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 103459460 வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 10, 2014 11:53 pm

உமேரா wrote:வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 3838410834 வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 103459460

பகிர்வுக்கு நன்றி அக்கா..

நன்றி உமேரா.

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 10, 2014 11:53 pm

Dr.S.Soundarapandian wrote:வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 103459460 வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 1571444738

நன்றி நன்றி

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Sep 11, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - செப்டம்பர்' 11

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 BpOpvNH5SJKyfQEdJFIo+September-11

1297 - ஸ்டேர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.

1541 - சிலியின் சண்டியாகோ நகரம் மிச்சிமாலொன்கோ தலைமையிலான பழங்குடிகளினால் அழிக்கப்பட்டது.

1609 - ஹென்றி ஹட்சன் மான்ஹட்டன் தீவைக் கண்ணுற்றார்.

1649 - ஒலிவர் குரொம்வெல்லின் இங்கிலாந்து நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.

1708 - சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்ல்ஸ் மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை ஸ்மொலியென்ஸ்க் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன.

1709 - பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன.

1802 - பிரான்ஸ் சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.

1857 - யூட்டாவில் மெடோஸ் மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டனர்.

1889 - யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் (The Hindu Organ) என்ற ஆங்கிலப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.

1893 - முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.

1897 - எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னன் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினான்.

1906 - மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.

1914 - ஆஸ்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகளை வெளியேற்றினர்.

1916 - கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

1919 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஹொண்டுராசினுள் நுழைந்தனர்.

1926 - பெனிட்டோ முசோலினி மீதான கொலைமுயற்சி தோல்வியடைந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பக்கிங்ஹாம் அரண்மனை ஜேர்மனியினரின் வான் தாக்குதலில் சேதமடைந்தது.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..

1945 - இரண்டாம் உலகப் போர்: போர்ணியோ தீவில் ஜப்பானியரினால் அடைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆஸ்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட
2,000 பேர் செப்டம்பர் 15இல் கொல்லப்படவிருந்தனர்.

1961 - டெக்சாசை 4ம் கட்ட சூறாவளி கார்லா தாக்கியது.

1968 - பிரான்சில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் கொல்லப்பட்டனர்.

1973 - சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. சனாதிபதி சல்வடோர் அலெண்டே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் ஆகுஸ்டோ பினொச்சே ஆட்சியைக் கைப்பற்றி 17
ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.

1974 - வட கரோலினாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

1978 - அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், எகிப்திய அதிபர் அன்வர் சதாத், இஸ்ரேல் பிரதமர் பெகின் ஆகியோர் மத்திய கிழக்கு அமைதீ முயற்சிகளை முன்னெடுக்க காம்ப் டேவிட்டில் சந்தித்தனர்.

1982 - பாலஸ்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூட் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.

1989 - ஹங்கேரிக்கும் ஆஸ்திரியாவுக்குமான எல்லை திறந்து விடப்பட்டதில் ஆயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனி மக்கள் தப்பியோடினர்.

1992 - ஹவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.

1997 - ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை அமைக்க ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தன்னர்.

2001 - நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 12, 2014 11:36 am

வரலாற்றில் இன்று - செப்டம்பர்' 12

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 7jrjGPgRSCbw6RkW0BEo+September-12

கிமு 490 - கிரேக்கம் மரதன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்தது. பிடிப்பிடஸ் என்ற கிரேக்க வீரன் இவ்வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க நெடுந்தூரம் ஓடினான். மரதன் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.

1609 - ஹென்றி ஹட்சன் ஹட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.

1683 - ஒட்டோமான் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.

1759 - பிரித்தானியப் படையினர் கியூபெக் நகரைக் கைப்பற்றினர்.

1848 - சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.

1857 - வட கரொலைனாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 426 பேர் கொல்லப்பட்டனர். இக்கப்பலில் 13-15 தொன் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.

1890 - ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.

1933 - அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.

1940 - நியூ ஜேர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள், மற்றும் பொதுமக்களை
ஏற்றிச் என்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் ஜெர்மனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.

1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி வீட்டுக்காவலிலிருந்து ஜெர்மனிய படைத்தளபதி "ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.

1948 - முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1953 - நிக்கிட்டா குருசேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1959 - லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1974 - எதியோப்பியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மன்னர் ஹைலி செலாசி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1977 - தென்னாபிரிக்காவின் நிறக்கொள்கைக்கெதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.

1980 - துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1992 - நாசாவின் எண்டெவர் விண்ணோடம் கருப்பு-அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2001 - ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான ஆன்செட் ஆஸ்திரேலியா மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.

2005 - இஸ்ரேல் காசாப் பகுதியில் இருந்து தனது படைகளை முற்றாக விலக்கியது.

2005 - ஹொங்கொங்கில் ஹொங்கொங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது.

2006- திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது "தீங்கு விளைவிக்கிற
மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்" என்று தெரிவித்தார். இதற்கு இஸ்லாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 12, 2014 11:48 am

செப்டம்பர் 11 எங்கள் தந்தையார் எங்களை விட்டு பிரிந்த நாள். எங்கள் குடும்பத்தில் ஒரு மறக்க முடியாத நாள்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 12, 2014 12:28 pm

அருமையான தொடர் பதிவிற்கு நன்றி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 1:54 pm

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Sep 13, 2014 8:27 pm

வரலாற்றில் இன்று - செப்டம்பர்' 13

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 IBh4PBykTYVUKKVUwig7+September-13

1503 - மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற டேவிட் என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.

1609 - ஹென்றி ஹட்சன் பின்னர் ஹட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.

1759 - கனடாவின் கியூபெக் நகருக்கருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.

1788 - நியூயோர்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது.

1791 - பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான்.

1814 - பிரித்தானியர் மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

1847 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர்.

1898 - ஹனிபல் குட்வின் செலுலோயிட் புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.

1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1923 - ஸ்பெயினில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.

1939 - கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.

1943 - சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.

1948 - இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.

1949 - இலங்கை, இத்தாலி பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐநாவில் அங்கத்துவம்
பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.

1953 - நிக்கிட்டா குருஷேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

1968 - அல்பேனியா வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

1971 - நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் டெஸ்மண்ட் டூட்டு தலைமையில் இடம்பெற்றது.

1993 – நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத்துக்கும் இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.

1994 - யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது.

1999 - மாஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Sep 14, 2014 12:38 pm

வரலாற்றில் இன்று - செப்டம்பர்' 14

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 Pj227tDJRvWXKf5135H3+September-14

81 - டைட்டசு என்ற தனது சகோதரன் இறந்ததை அடுத்து டொமீசியன் உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.

1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.

1812 - நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.

1829 - உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.

1846 – யாங் பகதூர் ராணாவும் அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.

1847 - மெக்சிக்கோ நகரத்தை "வின்ஃபீல்ட் ஸ்கொட்" தலைமையிலான அமெரிக்கப் படைகள் கைப்பற்றினர்.

1886 - தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.

1901 - அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி செப் 6இல் இடம்பெற்ற கொலைமுயற்சியின் பின்னர் இறந்தார்.

1917 - உருசியா அதிகாரபூர்வமாகக் குடியரசானது.

1944 - இரண்டாம் உலகப் போர்: மாஸ்ட்ரிக்ட் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்ட முதலாவது டச்சு நகரம் ஆனது.

1954 - சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1959 - சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.

1960 - எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.

1962 - கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு பிரதமர் பத்திரிசு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்.

1979 - ஹஃபிசுல்லா அமீனின் கட்டளைப் படி ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.

1982 - லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

1984 - ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

1999 - கிரிபட்டி, நௌரு, டொங்கா ஆகியன ஐநா அவையில் இணைந்தன.

2000 - எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.

2000 - விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.

2003 - சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

2003 - ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2005 - நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

2008 - உருசியாவின் ஏரோபுளொட் விமானம் பேர்ம் கரை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் அனைத்துப் 88 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - செப்டம்பர் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக