புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
59 Posts - 46%
ayyasamy ram
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
52 Posts - 41%
mohamed nizamudeen
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
3 Posts - 2%
prajai
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
418 Posts - 48%
heezulia
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
295 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
28 Posts - 3%
prajai
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_m10சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 3:05 pm


சிவ... சிவ... சிவ...
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் P105

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஒப்பற்ற ஸ்தோத்திரங்களில் குறிப்பிடத்தக்கது, சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம். நான்கு பாதங்கள் கொண்ட ஒவ்வொரு ஸ்லோகத்திலும், வேத மத்தியில் சிறந்து விளங்கும் பஞ்சாக்ஷர மஹாமந்திரத்தை ஒவ்வொரு பாதத்திலும் வைத்து நக்ஷத்ர மாலையெனும் 27 சுலோகங்களாக அருளியுள்ளார் பகவத் பாதாள்.

மிகப் பரிசுத்தமான பஞ்சாக்ஷரத்தைச் சொல்பவரும், ஸ்ரீபரமேஸ்வரனை மனத்தில் தியானிப்பவரும் மறுபிறவி அடையமாட்டார்கள் என்பது ஞானநூல்களின் கருத்து. அப்படியான பஞ்சாக்ஷரத்தையே வைத்து ஸ்லோகமாய் தந்திருக்கும் ஸ்ரீஆதிசங்கரரின் இந்தத் துதியைப் படிப்பவர்கள் இம்மைப் பயனையும், பேரின்பத்தையும் நிச்சயம் அடைவார்கள். மேலும், 27 நட்சத்திரங்களில் எதில் பிறந்திருந்தாலும், இந்த ஸ்லோகங்கள் எல்லா நட்சத்திரக்காரர்களும் படித்து, சிவனருள் பெற ஏதுவாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.

அற்புதமான இந்த ஸ்லோகங்களுக்கு பெரியோர்கள் பலரும் விளக்கவுரை தந்திருக்கிறார்கள். அந்த வகையில், ஸ்ரீசங்கர பக்த ஜன சபாவின் 1966-ம் ஆண்டு ஸ்ரீசங்கர ஜயந்தி மலரில் வெளியான

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திர ஸ்லோகங்களும், அதற்கு பி.என்.நாராயண சாஸ்திரி எழுதிய விளக்கங்களும் இங்கே உங்களுக்காக...

அசுவினி


ஸ்ரீமதாத்மநே குணைகஸிந்தவே நம:சிவாய

தாமலேசதூத கோகபந்தவே நம:சிவாய

நாம சேஷி தாநமத் பவாந்தவே நம:சிவாய

பாமரேதர ப்ரதாநபந்தவே நம:சிவாய

கருத்து: ஐஸ்வர்யம் மிகுந்தவரும் குணக்கடலும், தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரும், தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு பந்துவாகவும், ஞானிகளுக்கு பிரதான பந்துவாகவும் விளங்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரம் (இது நான்கு முறை சொல்லப்படுகிறது).

பரணி

காலபீத விப்ரபால பாலதே நம:சிவாய

சூலபின்ன துஷ்டதக்ஷ பாலதே நம:சிவாய

மூலகாரணாய கால காலதே நம:சிவாய

பாலயதுநா தயலவாலதே நம:சிவாய (2)

கருத்து: யமனுக்குப் பயந்திருந்த அந்தணக் குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரும், வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரும், அனைத்திற்கும் மூல காரணமானவரும், காலத்துக்கு மேம்பட்டவரும், கருணைக்கு இருப்பிடமுமாக விளங்கும் உமக்கு வணக்கம். இப்போது என்னைக் காப்பாற்றும்.

கிருத்திகை

இஷ்டவஸ்து முக்யதாந ஹேதவே நம:சிவாய

துஷ்டதைத்யவம்ச தூமகேதவே நம:சிவாய

ஸ்ருஷ்டிரக்ஷணாய தர்மஸேதவே நம:சிவாய

அஷ்டமூர்த்தயே வ்ருஷேந்த்ரகேதவே நம:சிவாய (3)

கருத்து: இஷ்டப்பட்ட சிறந்ததான பொருளைக் கொடுப்பதில் காரணமானவரும், முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரும், படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரும், பூமி, ஆகாயம், ஜலம், தேஜஸ், காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டையும் தன் உருவாய்க் கொண்டவரும், ரிஷபக் கொடியோனும் ஆகிய சிவனுக்கு வணக்கம்.

ரோகிணி

ஆபதத்ரிபேத டங்கஹஸ்த தே நம:சிவாய

பாபஹாரி திவ்யஸிந்து மஸ்த தே நம:சிவாய

பாபஹாரிணே லஸந்நமஸ்த தே நம:சிவாய

சாபதோஷகண்டந ப்ரசஸ்த தே நம:சிவாய (4)

கருத்து: மலை போன்ற ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவ நதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவமுமாகிய உமக்கு வணக்கம்.

மிருகசீரிடம்

வ்யோமகேச திவ்யபவ்ய ரூபதே நம:சிவாய

ஹேமமேதிநீ தரேந்த்ர சாபதே நம:சிவாய

நாமமாத்ர தக்த பாபதே நம:சிவாய

காமநைகதாநஹ்ருத்துராபதே நம:சிவாய

கருத்து: ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், 'சிவ’ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் உடையவருக்கு அடையமுடியாதவருமாகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம:சிவாய

ஜிம்ம கேந்த்ரகுண்ட லப்ரஸித்ததே நம:சிவாய

ப்ரம்மணே ப்ரணீத வேதபத்ததே நம:சிவாய

ஜிம்மகால தேஹதத்த பத்ததே நம:சிவாய (6)

கருத்து: ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்கள் கொண்டவரும், பெரிய பாம்பினை குண்டலமாகக் கொண்டவரும், வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவமானவரும், யமனுக்கு உயிர் கொடுத்தவருமான சிவனுக்கு வணக்கம்.

புனர்பூசம்

காமநாசநாய சுத்தகர்மணே நம:சிவாய

ஸாமகாந ஜாயமாந சர்மணே நம:சிவாய

ஹேமகாந்தி சாகசக்ய வர்மணே நம:சிவாய

ஸாமஜாஸுராங்கலப்த சர்மணே நம:சிவாய

கருத்து: தன்னலம் கருதாது செய்யப்படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் சௌக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் சௌக்கியமுற்றவருமான சிவனுக்கு வணக்கம்.

பூசம்

ஜந்ம, ம்ருத்ய கோரதுக்க ஹாரிணே நம:சிவாய

சின்மயைகரூப தேஹதாரிணே நம:சிவாய

மன்மநோரதாவ பூர்த்தி காரிணே நம:சிவாய

ஸன் மநோகதாய காம வைரிணே நம:சிவாய

கருத்து: பிறப்பு- இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானத்தையே ஒரே உருவமாயுடையவரும், என் மனத்தின் இஷ்டத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவனுக்கு வணக்கம்.

ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம:சிவாய

தக்ஷபாணி சோபி காஞ்சநாலவே நம:சிவாய

பக்ஷிராஜ வாஹ ஹ்ருச்சயாலவே நம:சிவாய

அக்ஷிபால வேதபூததாலவே நம:சிவாய

கருத்து: யக்ஷர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரும், தயையுடையவரும், பொன் மயமான வில்லை வலக் கரத்தில் கொண்டவரும், கருட வாகனம் உள்ள ஸ்ரீமகாவிஷ்ணுவின் இருதய தாபத்தைப் போக்குபவரும், நெற்றிக்கண்ணரும், மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தான் அந்ததந்த ஸ்லோகங்களைப் படிக்கவேண்டும் என்பதில்லை. அனைத்து நட்சத்திரக்காரர்களும் அத்தனை ஸ்லோகங்களையும் படிப்பதே சரி!

(இன்னும் வரும்)

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 02, 2014 3:10 pm

நன்றி
சதயம் நட்சத்திரம் எனக்கு
காத்திருக்கிறேன் உங்கள் பதிவிற்கு



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 3:12 pm

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்

ஒப்புயர்வு இல்லாத, அனைத்து நட்சத்திரக்காரர்களும் படித்து வழிபடுவதற்கு உகந்த சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரத்தின் அடுத்த ஒன்பது ஸ்லோகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்.

மாத சிவராத்திரி, பிரதோஷ காலம் உட்பட சிவ வழிபாட்டுக்கு உகந்த புண்ணியமிகு தருணங்களில், ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரை வழிபட, நல்லன யாவும் கைகூடும்.

மகம்

தக்ஷஹஸ்த நிஷ்ட ஜாதவேதஸே நம:சிவாய

அக்ஷராத்மநே நமத் பிடௌஜஸே நம:சிவாய

தீக்ஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம:சிவாய

உக்ஷராஜவாஹதே ஸதாம் கதே நம:சிவாய

பொருள்: வலது கையில் அக்னியை வைத்திருப்பவரும், 'அக்ஷரம்’ எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், சிவ பஞ்சாக்ஷர தீ¬க்ஷ பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரும், தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரும், சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

பூரம்

ராஜதாசலேந்த்ரஸாநு வாஸிநே நம:சிவாய

ராஜமாநநித்யமந்த ஹாஸி நே நம:சிவாய

ராஜகோரகா வதம்ஸபாஸிநே நம:சிவாய

ராஜராஜமித்ரதா பரகாசிநே நம:சிவாய

பொருள்: வெள்ளி மலை என்று பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரும், புன்சிரிப்புடன் கூடியவரும், ராஜஹம்ஸம் எனும் பட்சி மாதிரி சிறந்து விளங்குபவரும், குபேரனின் தோழன் என்பதை வெளிப்படுத்துபவருமான சிவனுக்கு வணக்கம்.

உத்திரம்

தீநமாநவாலி காமதேநவே நம:சிவாய

ஸ¨நபாண தாஹக்ருத் க்ருசாநவே நம:சிவாய

ஸ்வாநுராக பக்த ரத்நஸாநவே நம:சிவாய

தாநவாந்தகார சண்டபாநவே நம:சிவாய

பொருள்: ஏழைகளுக்குக் 'காமதேனு’ எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேரு மலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குக் கடுமையான கதிரவன் போன்றவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

அஸ்தம்

ஸர்வமங்களாகுசாக்ர சாயிநே நம:சிவாய

ஸர்வதேவதாகணா திசாயிநே நம:சிவாய

பூர்வதேவ நாசஸம் விதாயிநே நம:சிவாய

ஸர்வமந்மநோஜபங்க தாயிநே நம:சிவாய

பொருள்: ஸர்வமங்களை எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவனுக்கு வணக்கம்.

சித்திரை

ஸ்தோப பக்திதோபி பக்த போஷிணே நம:சிவாய

மாகரந்தஸாரவர்ஷி பாஷிணே நம:சிவாய

ஏகபில்வ தாநதோபி தோஷிணே நம:சிவாய

நைகஜந்ம பாபஜால சோஷிணே நம:சிவாய

பொருள்: குறைந்த அளவு பக்தி செய்யும் பக்தர்களையும் வளர்ப்பவரும், குயில் மாதிரி பேச்சு உடையவரும், ஒரு வில்வத்தைக் கொடுத்தாலே மகிழ்ச்சி அடைபவரும், பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவருமான சிவனுக்கு வணக்கம்.

சுவாதி

ஸர்வஜீவரக்ஷணைகசீலிநே நம:சிவாய

பார்வதீப்ரியாய பக்தபாலிநே நம:சிவாய

துர்விதக்ததைத்ய ஸைன்யதாரிணே நம:சிவாய

சர்வரீ சதாரிணே கபாலிநே நம:சிவாய

பொருள்: எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களைக் காப்பவரும், தப்புக் காரியங்களில் ஈடுப்படும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடையவரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவனுக்கு வணக்கம்.

விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞதேஹதே நம:சிவாய

தேஹிமேவரம் ஸிதாத்ரிகேஹதே நம:சிவாய

மோஹதர்ஷி காமிநீஸமூஹதே நம:சிவாய

ஸ்வேஹிதப்ரஸன்ன காமதோஹதே நம:சிவாய

பொருள்: உமாதேவியின் மனத்துக்கு உகந்த சரீரத்தை உடையவரே, என்னைக் காப்பாற்றும். வெள்ளியங்கிரியில் இருப்பவரான ஈசனே, எனக்கு வரம் அருளும். மஹரிஷிகளின் மனைவிகளை மோகிக்கச் செய்தவரும், தன்னிடம் வேண்டியதைக் கொடுப்பவருமான சிவனுக்கு வணக்கம். (குறிப்பு: தாயுடன் கூடிய தகப்பனாகிய ஈஸ்வரனே பக்தர்களுக்கு மகிழ்ச்சியுடன் வேண்டியதைக் கொடுப்பார் என்பது விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.)

அனுஷம்

மங்களப்ரதாய கோதுரங்கதே நம:சிவாய

கங்கயாதரங்கிதோத்தமாங்கதே நம:சிவாய

ஸங்கரப்ரவ்ருத்த வைரிபங்கதே நம:சிவாய

அங்கஜாரயே கரே குரங்கதே நம:சிவாய

பொருள்: மங்களத்தைச் செய்பவரும், ரிஷப வாகனத்தை உடையவரும், அலைமோதும் கங்கையை தலையில் உடையவரும், போரில் இறங்கிய சத்ருக்களை ஒழிப்பவரும், மன்மதனுக்கு சத்ருவும், கையில் மானை உடையவருமான சிவனுக்கு வணக்கம்.

கேட்டை

ஈஹிதேக்ஷண ப்ரதாநஹேதவே நம:சிவாய

ஆஹிதாக்நிபாலகோக்ஷகேதவே நம:சிவாய

தேஹகாந்திதூத ரௌப்யதாதவே நம:சிவாய

கேஹதுக்க புஞ்ஜதூமகேதவே நம:சிவாய

பொருள்: பக்தர்கள் வேண்டியதைக் கொடுப்பவரும், யாகம் செய்பவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் உடற்காந்தி (உடலில் ஒளியை) உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

ந்தந்த நட்சத்திரக்காரர்கள் தான் அந்தந்த ஸ்லோகங்களைப் படிக்கவேண்டும் என்பதில்லை. அனைத்து நட்சத்திரக்காரர்களும் அத்தனை ஸ்லோகங்களையும் படிப்பதே சரி!

(இன்னும் வரும்)

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 3:24 pm

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம்!

நட்சத்திரத் தேவதைகளின் படங்கள் இங்கே தரிசனத்துக் காகவே தவிர, அந்தந்த நட்சத்திரக்காரர்கள் மட்டும்தான் அந்தந்த ஸ்லோகங்களைப் படிக்கவேண்டும் என்பதில்லை. அனைத்து நட்சத்திரக் காரர்களும் அத்தனை ஸ்லோகங்களையும் படிப்பதே சரி!

உன்னதமான  பஞ்சாட்சர மந்திரத்தை தனக்குள் பொதிந்து, எல்லையில்லா சிவனருளை வெளிப்படுத்தி நம்மை ரட்சிக்கும் மிக அற்புதமான சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரத்தின் முதல் 18 ஸ்லோகங்களை  பார்த்தோம். இனி கடைசி ஒன்பது ஸ்லோகங்களை பார்ப்போம்.
சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் P113



சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் P114



சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் P115



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 11:03 pm

திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய




பொருள்: சுவர்க்கத்துக்குத் தலைவரும், விஷ்ணுவால் நமஸ்கரிக்கப்பட்டவரும், ஒழுக்கமுள்ள அந்தணர்களின் இதயக்குகையில் சஞ்சரிப்பவரும், தானே பிரும்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவராகவும், புலன்களை அடக்கியவரும், பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரும், உலகத்தை ஜெயிப்பவருமான சிவனாருக்கு நமஸ்காரம்.


நான் திருவோணம்.

பகிர்வுக்கு நன்றி தமிழ் நேசன்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக