புதிய பதிவுகள்
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
120 Posts - 76%
heezulia
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
1 Post - 1%
Pampu
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
285 Posts - 77%
heezulia
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_lcapடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_voting_barடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 31 Aug 2014 - 21:06

லேசான தலைவலி, இருமல், சளி என சின்னச் சின்ன உபாதைகளுக்குக்கூட மாத்திரைகளை விழுங்கும் காலம் இது. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏற்ப, மாத்திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. மாத்திரைகள் உட்கொள்வதுபற்றிய சந்தேகங்களுக்கு, சென்னை அரசுப் பொது மருத்துவர் டாக்டர் அருள் தரும் தகவல்கள்.

மருத்துவரிடம் போகாமலேயே மாத்திரைகளைக் கடைகளில் வாங்கிச் சாப்பிடலாமா?

பொதுவாக, மாத்திரை சாப்பிடுவதில் இரண்டு வகை. காய்ச்சல், சளி போன்ற தற்காலிக உடல் பிரச்னைகளுக்காக சாப்பிடுவது. மற்றொன்று, சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு, போன்றவைக்குத் தொடர்ச்சியாகச் சாப்பிடுவது... இந்த இரண்டு வகைகளுக்கும் மருத்துவ ஆலோசனை இன்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

உணவுக்கு முன்பு, பின்பு என மருத்துவர் தரும் மாத்திரைகளை மாற்றி சாப்பிட்டால் என்ன ஆகும்?

எந்த ஆபத்தும் வராது. மாத்திரையின் வீரியம்தான் குறையும். ஆனால் உணவுக்குப் பின்பு சாப்பிடுகின்ற மாத்திரையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் வரும்.

 சில மருத்துவர்கள் லேசான காய்ச்சலுக்குக்கூட நாலைந்து மாத்திரைகளைத் தருகிறார்களே?

சிலருக்கு காய்ச்சலுடன், தொண்டைப்புண், தலைவலி, உடல்வலி என கூடுதலாகப் பிரச்னைகள் இருக்கலாம். ஒவ்வொருவரின் உடல் பாதிப்பைப் பொறுத்து மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலட்சியப்படுத்தாமல், மருத்துவரின்மீது நம்பிக்கைவைத்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

ஒரு முறை வந்த காய்ச்சலுக்கு மருத்துவர் தந்த மாத்திரையைச் சாப்பிட்டு சரியானதும், மறுமுறை காய்ச்சல் வந்தால், அதே மாத்திரையைக் கடையில் வாங்கிச் சாப்பிடலாமா?

காய்ச்சலில் பல வகை இருப்பதால், ஒருமுறை பயன்படுத்திய மாத்திரையை திரும்பவும் பயன்படுத்தும்போது, பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மருத்துவரின் ஆலோசனை பெறுவதே நல்லது.

மருத்துவர் எழுதித்தந்த மாத்திரைகள் இல்லையெனில், அதே பிராண்டில் வேறு கம்பெனி மாத்திரைகளைத் தருகிறார்களே?

சாதாரணக் காய்ச்சல், சளி போன்றவைக்கு வேறு பிராண்ட் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது பாதிப்பு இருக்காது. ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வாங்கும்போது மட்டும், மருத்துவர் எழுதித்தந்த மாத்திரைகளின் பிராண்டைத் தவிர, வேறு பிராண்டு மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.

காலாவதியான மருந்துகளைச் சாப்பிடலாமா?

கூடாது. நிச்சயம் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 31 Aug 2014 - 21:08

பால் உறவு, வெண்ணெய் பகை

நம்முடைய பாரம்பரிய உணவு வெண்ணெய், நெய். புராணக் கதைகளில் இருந்தே வெண்ணெய், நெய் போன்றவற்றுக்கு தனி இடம் உண்டு. ஆனாலும், இவற்றை அனைவரும் சாப்பிடலாமா? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? உணவில் நெய் சேர்த்துக்கொள்வதால் கொழுப்பு அதிகரித்து மாரடைப்பு வருமா என்பது போன்ற சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் தேனி பொது மருத்துவர் ராஜ்குமார்.

'எந்தஓர்ரு உணவையும் அளவோடு எடுத்துக்கொண்டால் பாதிப்பு இல்லை. வெண்ணெய், நெய் இரண்டுமே கொழுப்புதான். வளரும் குழந்தைகளுக்கு உணவில் வெண்ணெய், நெய் சிறிதளவு சேர்த்துக்கொள்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கும் செரிமானப் பிரச்னை ஏற்படலாம்.'

குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?

'மிகமிக குறைவாகக் கொடுக்க வேண்டும். பொதுவாக ஐந்து வயது வரை கால் டீஸ்பூன் அளவில் கொடுக்கலாம். இருப்பினும், உடல் பருமனாக உள்ள குழந்தைகளுக்கு முற்றிலும் தவிர்ப்பது நல்லது.'

முதியவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

'50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களில் படிந்து, குழாயின் சுருங்கி, விரியும் தன்மை குறைந்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படலாம். மேலும், உடலில் இதயம், தலை, கால் ஆகிய மூன்றும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். தலையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படலாம். காலில் கொழுப்புக் கட்டிச் சேரும்போது, காலுக்கு தேவையான ரத்த ஓட்டம் செல்லாமல் காலையே எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.'

பால் சத்தான உணவு. ஆனால் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய், நெய் மட்டும் ஏன் உடலுக்கு கேடு?

'பாலில் கால்சியம், வைட்டமின் டி, ஈ மற்றும் தாது உப்புக்கள் அதிகம். குழந்தைகளின் எலும்புக்கும், பல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் இது மிக அவசியம். இதனால்தான் குழந்தைகளையும், பெண்களையும் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் பால் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்தபிறகு கிடைக்கும் மோர்கூடச் சத்தானதுதான். ஆனால், வெண்ணெயும், நெய்யும் கொழுப்புச் சத்து கொண்டவை. சுருக்கமாகச் சொல்வதென்றால் வெண்ணெய் குறைக்கப்பட வேண்டியது, நெய் தவிர்க்கப்பட வேண்டியது.'

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 31 Aug 2014 - 21:18

தலையணை மந்திரம்!

உழைத்த களைப்பு, நல் இரவின் நிம்மதியான தூக்கத்தில்தான் நீங்கும். இன்று பலரும் போதுமான தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். தூக்கம் வராமல் தவிப்பதற்கு, தலையணையும் ஒரு முக்கிய காரணம்.

தலையணை வைக்கலாமா...கூடாதா? எந்த மாதிரியான தலையணையைப் பயன்படுத்த வேண்டும்?.. போன்ற சந்தேகங்களுக்கு

கோயம்புத்தூரைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர் ராமகிருஷ்ணன் விளக்கம் தருகிறார்.

'தலையணை வைப்பது நல்லதா?'


'தலையணை வைப்பது நல்லது, கெட்டது என்பதற்கு எந்த மருத்துவரீதியான நிரூபணமும் இல்லை. ஆனால், ஒரு சிலருக்கு தலையணை வைத்துப் படுப்பதால் சில பிரச்னைகள் வரலாம். உயரம் அதிகம் கொண்ட தலையணை பயன்படுத்துவதால் மட்டுமே பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.'

'தலையணை உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?'

'டர்க்கி டவல் அளவுக்கு மென்மையாகவும், அதை நான்காக மடித்தால் வரும் தடிமன் அளவுக்கு உயரமும் இருந்தால் போதும். அதையும்விட சற்று உயரமாக இருந்தால்கூட பரவாயில்லை. சின்னக் குழந்தைகளின் எலும்புகள் மென்மையாக இருக்கும். மிக குறைந்த உயரம் உள்ள இலவம் பஞ்சு தலையணையைப் பயன்படுத்தலாம். இதனால், குழந்தைக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் வராமல் இருக்கும்.'

'உயரமான தலையணை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?'

'முக்கியமான பிரச்னை, கழுத்துப் பகுதியில் சதைப்பிடிப்பு ஏற்படும். இதனால் மறுநாள் கழுத்தைத் திருப்புவதில் சிரமம் ஏற்படலாம். கழுத்துப் பகுதியில் ,இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் உள்ளது. அதன் ரத்த ஓட்டம் பாதிக்கலாம்.'

'வேறு யாரெல்லாம் தலையணைகளை தவிர்க்க வேண்டும்?'

'குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் உள்ள எலும்பில் சவ்வு விலகியவர்கள் தலையணையை தவிர்த்து சம நிலையில் மட்டுமே படுக்க வேண்டும். மற்றவர்கள் தலையணைப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை!'

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 31 Aug 2014 - 21:19

ஆரோக்கியம் தொடர்பாக ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் நமக்குள் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஒருவர் சரி என்று சொல்லும் முறையை, இன்னொருவர் தவறு என்பார். எதுதான் சரி என்று ஒவ்வொன்றுக்கும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியுமா? நம் அனைவரின் சந்தேகங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்து சகல விஷயங்களையும் ஆராயும் பகுதிதான், 'டாக்டர் எனக்கு ஒரு டவுட்!’
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? P52
'சாப்பிடும்போது நடுநடுவுல தண்ணீர் குடிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே? குறைவா குடிச்சா, உடலுக்குக் கேடு. அதிகமா குடிச்சாலும் ஆபத்துனு அடிக்கடி பேப்பர்ல வருது. இதில் எது சரி... எது தவறு? ஒரு மனுஷன் எப்ப, எந்த அளவுக்குத் தண்ணீர் குடிக்கணும்?’ போன்ற பல சந்தேகங்களைக் களைகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.

''ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.

எவ்வளவு?

 சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.

 கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

 விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது.

எப்படி?

 வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

 சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.

 காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.

 உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.

 அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.

 உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.

 நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும். ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun 31 Aug 2014 - 21:20

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? P52

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக