புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
33 Posts - 42%
heezulia
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
32 Posts - 41%
Balaurushya
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Saravananj
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
399 Posts - 49%
heezulia
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
27 Posts - 3%
prajai
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_m10தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்பூசி ரகசியங்கள்-தொடர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Aug 29, 2014 9:23 pm

First topic message reminder :

தடுப்பூசி ரகசியங்கள்-1
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 P3_6a
நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்!
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 P36
உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், 'தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.

நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; இதற்கு 24 மணி நேரமும் நம்மைக் 'காவல் காக்கும்’ வேலைதான். நாட்டைக் காக்கின்ற ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'கேம்ப் ஆபீஸ்’. ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். 'T’ அணுக்கள், 'B’ அணுக்கள், 'மேக்ரோபேஜ்’ அணுக்கள், 'எதிர் அணுக்கள்’ (Antibodies) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள்.  
தடுப்பூசி ரகசியங்கள்-தொடர் - Page 2 P36a
ரத்தக்குழாய்களும், ரத்தக்குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க்குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள். சரி, யாருடன் யுத்தம்? கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் என்று சொன்னோமல்லவா? அவற்றுடன்தான் யுத்தம். இந்தக் கிருமிகளுக்குள்ளும் பலவிதங்கள் உண்டு. சுருக்கமாகப் பிரித்தால், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும்.

இந்த 'எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப் படை தன்னிடமுள்ள 'சிப்பாய்’களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக் கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்துத் 'தளபதி’க்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை.

இவ்வாறு நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப் படை தருகின்ற சக்திக்கு 'நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது 'நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.

நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள்:

நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. இது எப்படிச் சாத்தியமாகிறது? 'முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம். தடுப்பூசியின் மகிமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.

பொதுநல மருத்துவரான டாக்டர் கு.கணேசன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்.  ஆங்கில மருத்துவச் செய்திகளை எளிமையாக எழுதுவது இவருக்குக் கைவந்த கலை. இதுவரை 28 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழில் தயாரிக்கும் 'மருத்துவக் கலைச்சொல் பேரகராதி’ பணியில் வல்லுனர் குழு உறுப்பினராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் வல்லுனர் குழு உறுப்பினராகவும் உள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 'மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது. இவருக்குக் கிடைத்துள்ள இலக்கியப் பீடம் விருதும், இந்திய மருத்துவக் கழகம் வழங்கியுள்ள 'எழுத்துச் சாதனையாளர் விருது’ம் இவருக்குப் புகழ் சேர்க்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து பெற்றோரிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை உள்ளவர். அதன் வெளிப்பாடுதான் இந்தத் தொடர்!

- போர் ஓயாது...


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 8:44 am

தடுப்பூசி ரகசியங்கள்! - 9
நிமோனியா இனி நெருங்காது!
டாக்டர் கு.கணேசன்,


பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் கொடிய நோய், நிமோனியா. 'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே’ (Streptococus Pneumoniae) என்ற பாக்டீரியா, காற்றின் மூலமாகப் பரவி நுரையீரலைப் பாதிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. நிமோனியா நோயாளி இருமும்போதும், தும்மும்போதும், சளியைக் காறித் துப்பும்போதும் இந்தக் கிருமி, சளியுடன் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் நபருக்கும் தொற்றிக்கொள்ளும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கும், நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம்.

சரியாகத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், புகை அடுப்பில் இருந்து வரும் புகையைச் சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, குறிப்பாக வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை நிமோனியா எளிதில் தாக்கும். நிமோனியா நம்மை நெருங்கவிடாமல் தடுக்க 'நீமோகாக்கல்’ என்ற தடுப்பூசி உள்ளது.

அறிகுறிகள்:

இந்த நோய்த் தொற்று உள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிட மறுக்கும். காய்ச்சல், கடுமையான இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்துப்போதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால், குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; சோர்வாகக் காணப்படும்.

நோய்ப் பாதிப்பு:


நிமோனியா நோய் இருப்பதைக் கவனிக்காமல்விட்டால், நோய்க் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவும் ஆபத்து ஏற்படும். அதிலும் குறிப்பாக, முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும்.

சிகிச்சை:


நிமோனியாவை அதன் தாக்கத்தின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்குச் சிகிச்சை பெற்றால் போதும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இதன் தாக்குதலுக்கு உள்ளானவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக்குழாய்களில் தகுந்த 'ஆன்டிபயாடிக்’ மருந்துகள் மற்றும் குளுக்கோஸை செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்சிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.

தடுப்பூசி வகை:

நிமோனியாவைப் பரப்பும் கிருமியின் செல் உறையிலிருந்து சர்க்கரைப் பொருளைப் பிரித்து எடுத்து, ஒரு புரதப் பொருளுடன் இணைத்து, 'நீமோகாக்கல் இணைப்பொருள் தடுப்பூசி’ (Pneumococcal Conjugate Vaccine) (சுருக்கமாக பி.வி.சி) என்ற தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். இதில் 'பி.சி.வி 10’, 'பி.சி.வி 13’ என்று இரண்டு வகை உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை, பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள்வரை அனைவரும் போட்டுக்கொள்ளலாம்.

'நீமோகாக்கல் கூட்டுச் சர்க்கரைப் பொருள் தடுப்பூசி’ (Pneumococcal Polysaccharide Vaccine) (சுருக்கமாக பி.பி.எஸ்.வி23) என்பது மற்றொரு வகை. இந்தக் கிருமியின் செல் உறையிலிருந்து சர்க்கரைப் பொருளைப் பிரித்து, புரதப்பொருளுடன் இணைக்காமல், அப்படியே அதை ஒரு தடுப்பூசியாகத் தயாரிக்கிறார்கள்.

'பி.சி.வி’ தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்கள் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதற்கு முதன்மைத் தடுப்பூசி என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போட வேண்டும். ஒருமுறை தரப்படும் தடுப்பூசியின் அளவு அரை மில்லி. இந்தத் தடுப்பூசியை மற்ற தடுப்பூசிகளுடன் ஒரே நேரத்தில் போட்டுக்கொள்ளலாம். ஆனால், மருந்தைத் தனித்தனி சிரிஞ்சில் எடுத்து, தொடையில் தனித்தனி இடங்களில் தசைஊசியாகப் போட வேண்டும்.

குழந்தைக்கு 6 மாதங்களுக்குள் இது போடப்படவில்லை எனில், ஒரு மாத இடைவெளியில் 3 முதன்மைத் தடுப்பூசிகளும், 15 மாதங்கள் முடிந்ததும் ஓர் ஊக்குவிப்பு ஊசியும் போடப்பட வேண்டும். 6 மாதம் முதல் ஒரு வயதுக்குள் இது போடப்படவில்லை என்றால், அதற்குப் பிறகு ஒரு மாத இடைவெளியில் 2 முதன்மைத் தடுப்பூசிகளும், 2வது வயதில் ஓர் ஊக்குவிப்பு ஊசியும் போடப்பட வேண்டும். ஒரு வயதிலிருந்து 2 வயதுக்குள்ளும் இது போடப்படவில்லை என்றால், ஒரு முதன்மைத் தடுப்பூசியும் ஓர் ஊக்குவிப்பு ஊசியும் போடப்பட வேண்டும். இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையில் இரண்டு மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இரண்டு வயது முதல் 5 வயதுக்குள் இந்தத் தடுப்பூசியைப் போடவில்லை என்றால், ஒருமுறை மட்டும் இதைப் போட்டுக்கொண்டால் போதும்.

'பி.பி.எஸ்.வி 23’ தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை:


இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இது போடப்பட வேண்டும். சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உறுப்பு மாற்றறு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிற குழந்தைகள், பி.சி.வி13 தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதங்கள் கழித்து பி.பி.எஸ்.வி23 தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்ள வேண்டும். இதன் அளவு அரை மில்லி. இதை இடது புஜத்தில் தசை ஊசியாகப் போட வேண்டும்.

ஊசி போடப்பட்ட பகுதியில் லேசாக வலி, வீக்கம், தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மிதமான காய்ச்சல் வரலாம். இவை எல்லாமே தானாகச் சரியாகிவிடும்.

யார் போட்டுக்கொள்ளக் கூடாது?


இந்தத் தடுப்பூசிகளுக்கும், டி.டி.ஏ.பி (DTap) ஊசிக்கும் அலர்ஜி உள்ளவர்கள் இவற்றைப் போட்டுக்கொள்ளக்கூடாது. டைபாய்டு, மலேரியா போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், நோய் குணமான பிறகு போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்குத் தடுமம், சளி போன்ற சிறிய தொந்தரவுகள் இருந்தாலும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

முதியோரின் உயிர் காக்கும் தடுப்பூசி!

நிமோனியா சில சமயம் வயதில் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகமிகக் குறைவாகவே இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால், உடனடியாக உயிரிழப்பும் நேரிடலாம். இதைத் தவிர்க்க, 50 வயதைக் கடந்தவர்கள் பி.பி.எஸ்.வி23 தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொள்வது நல்லது.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

நிமோனியாவை ஏற்படுத்துகின்ற நீமோகாக்கல் கிருமிக் குடும்பத்தில் 90 வகையான துணை இனங்கள் (Sero Types) உள்ளன. இவற்றில் பல, நிமோனியாவுக்குத் தரப்படும் மருந்துகளையே எதிர்த்து நிற்கும் குணமுள்ளவை என்பதால், உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. ஆண்டுதோறும், உலகம் முழுவதும் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிர் இழக்கின்றனர். இதில் 25 சதவீகிதம் பேர் இந்தியக் குழந்தைகள். ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இந்தத் தடுப்பூசியை முறைப்படி போட்டுக்கொள்பவர்களுக்கு நிமோனியா வருவது இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

'பி.சி.வி10’ தடுப்பூசி என்பது, நீமோகாக்கல் கிருமிகளில் மொத்தமுள்ள 90 துணை இனங்களில், 10 வகைகளால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்கும் தடுப்பூசி. பி.சி.வி13 தடுப்பூசி, 13 வகைகளால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்கிறது. பி.பி.எஸ்.வி23 தடுப்பூசி, 23 வகைகளால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்கிறது. இந்தத் தடுப்பூசிகள் நவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுவதால், இவற்றின் விலை அதிகம். எனவே அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைப் போடுவது இல்லை. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இவை போடப்படுகின்றன.

போர் ஓயாது...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 8:48 am

தடுப்பூசி ரகசியங்கள்! - 10
விரட்டி அடிக்கலாம் ‘ரோட்டா’ வைரஸை!
டாக்டர்.கு.கணேசன்,


குழந்தைகளின் ஆரோக்கி யத்துக்கு அதிகம் வேட்டு வைப் பது இரண்டே இரண்டு நோய் கள்தான். ஒன்று, நெஞ்சுச் சளி, மற்றொன்று, வயிற்றுப்போக்கு. பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா (protozoa) போன்ற கிருமிகள் குழந்தைகளைத் தாக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இவற்றில் 'ரோட்டா’ வைரஸால் ஏற்படும் வயிற்றுப் போக்குதான் மிகவும் கடுமையானது. இது சாதாரண வயிற்றுப்போக்கு போல் இல்லாமல், சிறுநீர் போல மலம் போகும். தொடர்ந்து வாந்தி. காய்ச்சல் ஏற்படும். இதனால், குழந்தை சீக்கிரத்திலேயே நீர்ச்சத்தை இழந்துவிடும். வயிற்றுப்போக்கு நிற்பதற்குச் சில நாட்கள் ஆகும். காலத்தோடு இதைக் கவனிக்கத் தவறினால், குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம், ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்குதான்.

நோய் பரவும் வழி:

சுகாதாரமின்மையே ரோட்டா வைரஸை வீட்டுக்கு அழைத்து வருகிறது. அசுத்தமான சூழலில் வளரும் குழந்தைகளும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளும் இந்தக் கிருமிகளுக்கு எளிதான இலக்கு. சுகாதாரமற்ற உணவு, குடிநீர், பாதிக்கப்பட்ட நோயாளி உபயோகித்த பொருள்கள் ஆகியவை மூலமும் குழந்தைகளை ரோட்டா வைரஸ் தாக்குகிறது. மலம் கழித்துவிட்டு அல்லது மலம் கழித்த குழந்தையை கழுவிவிட்டு கையை சோப் போட்டுக் கழுவாமல், குழந்தை யைக் கொஞ்சுவது ரோட்டா வைரஸைக் குஷிப்படுத்தி, குழந்தைகளைப் பாதிப்படையவைத்துவிடும்.

எப்படித் தவிர்ப்பது?

புட்டிப்பால் கொடுக்கும் முன் ஒவ்வொரு முறையும் ஃபீடிங் பாட்டில், நிப்பிள், பாட்டில் மூடி இந்த மூன்றையும் சுத்தமாகக் கழுவி, குறைந்தது ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைத்த பிறகே பயன்படுத்த வேண்டும். முறையாகக் கிருமி நீக்கம் செய்யாமல் குழந்தைக்குப் பால் கொடுப்பது, பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் பால் தருவது இவற்றைத் தவிர்க்கலாம். குழந்தையின் ரப்பர் நிப்பிள்கள் சுத்தமாக இருக்கிறதா என உறுதிசெய்வது அவசியம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். புட்டிப்பால் மற்றும் பசும்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், இந்த வைரஸோடு எதிர்த்துப் போராட முடியாது.

தடுப்பு மருந்துகள்

ரோட்டா வைரஸை அழிப்பதற்கான மருந்துகள், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக மூன்று வகை தடுப்புச் சொட்டு மருந்துகள் உள்ளன. இதில், 'ஆர்வி1’ (Rv1) என்று அழைக்கப்படும் ரோட்டாரிக்ஸ் (Rotarix) ஒரு வகை. ரோட்டா வைரஸ் கிருமிகளில் பல துணை இனங்கள் உண்டு. இதில் 'ஜி1பி1ஏ’ (G1P1A1) என்ற கிருமியை வீரியம் இழக்கச்செய்து, இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரிக்கி றார்கள். இதில் அமினோ அமிலம், டெக்ஸ்ட்ரான், சார்பிட்டால், சுக்ரோஸ் என்று பல துணைப்பொருட்களையும் சேர்த்துக்கொள்கிறார்கள். இது பவுடராக இருக்கும். இதற்கென்றே உள்ள கரைப்பான் விட்டுக் கரைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் இதைச் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்.

'ஆர்வி5’ (Rv5) என்று அழைக்கப்படும் ரோட்டாடெக் (RotaTeq) அடுத்த வகை. ரோட்டா வைரஸ் துணை இனங்களில் ஜி1, ஜி2, ஜி3, ஜி4, பி1ஏ என்று மொத்தம் ஐந்து வகைக் கிருமிகளை வீரியம் இழக்கச்செய்து இதைத் தயாரிக்கிறார்கள். இதில் சுக்ரோஸ், சோடியம் ஹைட்ராக் சைட், சோடியம் சிட்ரேட் ஆகியவற்றைத் துணைப் பொருட்களாகச் சேர்க்கின்றனர். இதை திரவ மருந்தாகவே தயாரிக்கிறார்கள். அதனால், அப்படியே இதை உபயோகிக்கலாம்.

புதிதாக 'இந்தியன் நியோநேட்டல் ரோட்டா வைரஸ் தடுப்புச் சொட்டு மருந்து’ (indian neonatal Rota Virus live Vaccine) என்ற சொட்டு மருந்தை ஒரு தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு 116 E (116 E) என்று இன்னொரு பெயரும் உண்டு. 'ஜி9பி’ (G9P) என்ற ரோட்டா வைரஸ் துணை இனத்தை வீரியம் இழக்கச்செய்து இதைத் தயாரிக்கிறார்கள்.

'ரோட்டாரிக்ஸ்’ எப்படிக் கொடுப்பது?

குழந்தைக்கு இரண்டரை மாதம் முடிந்ததும் முதல் தவணை மருந்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறினால், 15 வாரங்கள் முடிவதற்குள் முதல் தவணையைக் கொடுத்துவிட வேண்டும். இரண்டாம் தவணை மருந்தை மூன்றரை மாதங்கள் முடிந்ததும் கொடுக்க வேண்டும். தவறினால், குறைந்தது 8 மாதங்களுக்குள் இரண்டாம் தவணையைக் கொடுத்துவிட வேண்டும். இந்த இரு தவணைகளுக்கு இடையில் குறைந்தது ஒரு மாதம் இடைவெளி இருக்க வேண்டும். குழந்தைக்கு எட்டு மாதங்களுக்குப் பிறகு இதைக் கொடுக்கக் கூடாது. ஒருமுறை கொடுக்கப்படும் தடுப்பு மருந்தின் அளவு ஒரு மி.லி வாய் வழியாகக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்து இது.

'ரோட்டாடெக்’ கொடுக்கப்படும் முறை:

குழந்தைக்கு ஒன்றரை மாதம் முடிந்ததும் முதல் தவணை மருந்தைக் கொடுக்க வேண்டும். தவறினால் 15 வாரங்கள் முடிவதற்குள் கொடுத்துவிட வேண்டும். இரண்டாம் தவணையை இரண்டரை மாதங்கள் முடிந்ததும் கொடுக்க வேண்டும். இடையில் நான்கு வாரங்கள் இடைவெளி இருக்க வேண்டும். மூன்றாம் தவணை மருந்தை மூன்றரை மாதங்கள் முடிந்ததும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறினால், குறைந்தது எட்டு மாதங்களுக்குள் மூன்றாம் தவணையைக் கொடுத்துவிட வேண்டும்.

பொதுவாக, இந்தத் தடுப்பு மருந்துகளை தனியாகவோ, மற்ற தடுப்பூசிகள் போடப்படும் போதும் கொடுக்கலாம். இந்தியன் நியோநேட்டல் ரோட்டா வைரஸ் தடுப்புச் சொட்டு மருந்தை 'ரோட்டா டெக்’ மருந்தைக் கொடுப்பது போலவே கொடுக்க வேண்டும். இவற்றில் எந்தச் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டாலும் ஏழு நாட்களுக்குள் மிதமான வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இதனால் குழந்தை சில மணி நேரத்துக்குத் தொடர்ந்து அழலாம். மிக அரிதாகச் சில குழந்தைகளுக்குக் 'குடல்சொருகு நோய்’ ஏற்படலாம்.

யாருக்குக் கொடுக்கக் கூடாது?

மருந்து 'அலர்ஜி’ உள்ள குழந்தைகளுக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கும் இதைக் கொடுக்கக் கூடாது. மிதமான வயிற்றுப்போக்கு இருக்குமானால், இதைக் கொடுக்கத் தயங்க வேண்டாம். எய்ட்ஸ் நோய், 'சிட்’ (SCID) நோய், புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகள், ஏற்கனவே 'குடல்சொருகு’ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்தை ரொம்ப காலம் சாப்பிட்டுவரும் குழந்தைகளுக்கும் இந்த மருந்தை டாக்டர்கள் தருவது இல்லை.

தடுப்பு மருந்தின் முக்கியத்துவம்

பொது சுகாதாரம் குறைவாக உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை ஒவ்வொன்றும் ஒருமுறையாவது ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டிருக்கும். இந்தியாவில், வருடத்துக்கு 20 லட்சம் குழந்தைகள் இந்த வைரஸ் தாக்கி சிகிச்சை பெறுகிறார்கள். ஆண்டுக்கு 5 லட்சம் குழந்தைகள் இந்த வயிற்றுப்போக்கினால் மட்டுமே உயிரிழக்கிறார்கள். சுத்தமும் சுகாதாரமும் நன்றாகப் பேணப்படும் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில்கூட இந்த வயிற்றுப்போக்கின் பாதிப்பு இருக்கிறது. அந்த நாடுகளில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தைக் கொடுக்கத் தொடங்கிய பிறகுதான், இந்த நோயின் தீவிரம் குறையத் தொடங்கியது. ஆக, இந்த நோயைத் தடுக்க வேண்டுமானால், சுத்தமும் சுகாதாரமும் மட்டும் போதாது; குழந்தைக்குத் தடுப்பு மருந்தும் கொடுக்க வேண்டியது அவசியம்.

வயிற்றுப்போக்கு - என்ன செய்வது?


குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்கும்போது, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சி, ஆறவைத்த சுத்தமான தண்ணீரை, அடிக்கடி சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலை, கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூன் மூலம் கொடுக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில், 20 கிராம் சர்க்கரையையும், 5 கிராம் உப்பையும் கலந்து, அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தரலாம். எலுமிச்சைச் சாறு, மோர், இளநீர், ஜவ்வரிசிக் கஞ்சித் தண்ணீர் போன்றவையும் உதவும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். அப்படியும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நிற்கவில்லை என்றால், டீஹைட்ரேட் பாதிப்பைத் தடுக்க, மருத்துவமனையில் உடனே அனுமதிக்க வேண்டும்.

மருந்தும் இலவசம்!

ரோட்டாரிக்ஸ், ரோட்டா டெக் என்ற இரண்டு சொட்டு மருந்துகளுமே அதிக விலை. ஒரு டோஸின் விலை 1,000 ரூபாயைத் தாண்டும். ஆனால், இந்தியன் நியோநேட்டல் சொட்டு மருந்தின் ஒரு டோஸ் விலை 80 ரூபாய்க்குள்தான் அடங்கும். எனவே, இந்தச் சொட்டு மருந்தைக் கூடிய சீக்கிரத்தில் நம் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்க்க இருக்கிறார்கள். அதன் பிறகு அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவே கிடைக்கும்.

போர் ஓயாது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக