புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
1 Post - 6%
Guna.D
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
17 Posts - 4%
prajai
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
9 Posts - 2%

jairam
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_m10சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:41 pm

சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் - சினிமாவில் செல்லுபடியாகுமா குழந்தைத் தொழிலாளர் சட்டம்?

சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் P6

சினிமாவில் 18 வயதுக்குக் குறைவான பெண்களைக் கதாநாயகிகளாக நடிக்க வைப்பதற்குத் தடை கேட்டு, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை கடந்த 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும், அந்த மனு உன்னிப்பாக கவனிக்க வேண்டியதே!

மனு தாக்கல் செய்த தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளரும் ஆசிரியருமான முத்துச்செல்வி என்ன சொல்கிறார்?

''குடும்பம், பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள் என்று பெண்கள் பல இடங்களில், பல நேரங்களில் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிக்கொண்டுதான் வருகிறார்கள். இதை எல்லாம் தாண்டி, சினிமாவில்தான் பெண்கள் மிக அதிகமான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதுவும் இளவயது சிறுமிகள், மாணவிகள் அதிகமான தொந்தரவுக்கு இலக்கு ஆகிறார்கள். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்தும், அமைதியாகவே இருக்கிறோம். காவல் துறையும் நீதிமன்றமும் இதுவரை அமைதியாகத்தான் இருந்து வருகிறது. அப்படியானால், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லையா என்ற கேள்வி எழலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தங்கள் வாழ்வில் தங்களைக் காத்துக்கொள்ள ஓரளவான அறிவு முதிர்ச்சியுடனாவது இருப்பார்கள்.

ஆனால், 18 வயதுக்குக் குறைவான நடிகைகளோ சினிமா என்ற மாய வலையில் சிக்கி, சினிமாவின் ஏற்ற இறக்கங்கள் தெரியாமல், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பின்னர், உறவுகளாலும் துறையில் பணிபுரிபவர்களாலும் ஏமாற்றப்படுகின்றனர். இது அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் வருந்தக்கூடிய விஷயம். அந்த வயதை மீறிய கதாபாத்திரங்களில் கவர்ச்சியாகக் காட்டப்படுகின்றனர். அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இதனால்தான், 21 வயதுக்கு மேலான பெண்களைத்தான் நடிகையாக நடிக்க வைக்க வேண்டும் என்ற அறிக்கையை மத்திய அரசு, திரைப்பட தணிக்கைக் குழு, தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பினோம். ஆனால், கடைசி வரை எவ்வித பதிலும் அவர்கள் தரவில்லை என்பதால்தான் நீதிமன்றம் சென்றோம்.

சமூகத்தில் 18 வயதுக்குக் குறைவானவர்கள் பணியில் அமர்த்தப் பட்டால், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தச் சட்டம் அல்லது இப்படியான ஒரு சட்டம்கூட சினிமாவுக்குப் பொருந்தவில்லையே! இதனால்தான் முழுவதும் வணிகமான சினிமாவை, கலை என்று சொல்லி பலர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 18 வயதுக்குக் குறைவான நடிகைகளை ஒப்பந்தம் செய்வதைத் தடுக்க, சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். ஏனென்றால் வெகுஜன ஊடகமான சினிமாதான் சமூகத்துக்கு நற்கருத்துகளை சொல்லிட வேண்டும். வயது குறைவான நடிகைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களும் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல், தங்கள் பள்ளிக்குக் கிடைத்த அங்கீகார விளம்பரமாகவே பார்க்கின்றன. அவர்களின் பெற்றோர்களும் மெத்தனமாகவே இருக்கின்றனர்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர் 'திரைத் துறையில் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் நடிப்பதற்குத் தடை செய்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை’ என்று வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். அரசியல் சாசனத்தில் இதற்கு இடம் இல்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், இதற்கான தனிச்சட்டத்தை இயற்றும் வரை பொதுமக்களிடம் இதுகுறித்தான விழிப்பு உணர்வுகளை பல களங்களில், பொதுக்கூட்டங்களில், சமூக வலைதளங்களில் தெரியப்படுத்திக்கொண்டே இருப்போம்'' என்றார் உறுதியாக.

சில சமூக ஆர்வலர்களோ, ''இயக்குநர் மணிரத்னம் தனது 'கடல்’ திரைப்படத்தில் நடிகை துளசியை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது 'கோ’ திரைப்படத்தின் மூலம் கார்த்திகாவை அறிமுகப்படுத்தினார். நடிகை ராதாவின் மகள்களான துளசியும் கார்த்திகாவும் 18 வயதுக்குள் நடிக்க வந்தவர்களே.

'கும்கி’, 'சுந்தரபாண்டியன்’ என்று ஆரம்பித்து இப்போது நட்சத்திர கதாநாயகர்களுடன் நடித்து வரும் லட்சுமிமேனன், 'காதல்’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற சந்தியா, 'களவாணி’ படம் மூலம் அறிமுகமான ஓவியா, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஸ்ரீதிவ்யா என்று அனைவருமே 18 வயதுக்குள் நடிக்க வந்தவர்கள்தான்.

அதோடு, பள்ளி மாணவிகளைக் காதலிப்பதாகவே ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. ஹரி இயக்கத்தில் வெளிவந்த 'சிங்கம் 2’ திரைப்படத்தில் பள்ளி மாணவியான ஹன்சிகா, உடற்கல்வி ஆசிரியரைக் காதலிப்பதாக வரும் காட்சிகள், பள்ளி வளாகத்திலேயே காட்டப்படுகின்றன. இந்த மாதிரியான பள்ளிச் சீருடை காதல் திரைப்படங்கள்தான் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. இதைப் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்கள் சொந்த யதார்த்த வாழ்வில் பரிசோதித்துப் பார்த்து பதராகப் போகின்றனர். திரைப்படங்களில் கதாநாயகர்கள் வயது அதிகமாகத் தோற்றமளித்தாலும், நாயகிகள் பள்ளி படிக்கும் பருவங்களிலேயே அவர்களிடம் காதல் வயப்பட்டாக வேண்டும் என்ற நியதியினை வகுத்துள்ளனர். மேற்கண்ட திரைப்படங்களில் பல படங்கள் தமிழ் சினிமாவுக்கு மைல் கல்லாகவும், சமூகத்திடம் கவனம் பெற்றதாக இருந்தாலும், பெரும்பாலானோர் சினிமாவில் இருந்து நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம்'' என்றனர்.

தமிழ் சினிமாவுக்கு அடையாளமாகத் திகழும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள், சமூகம் ஒழுங்குபடுவதற்கான நல்லெண்ணங்களைக் காட்சிப்படுத்தி, விதைக்க மறந்தால் சமூகம் நாளடைவில் இன்னும் ஆற்றமுடியாத காயத்தைப் பெறும்.

சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:42 pm

'எங்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது!’

இந்த விவகாரத்தை சினிமா துறையினர் எப்படிப் பார்க்கிறார்கள்? இயக்குநர் சமுத்திரக்கனியிடம் பேசினோம். ''ஒரு படத்துக்கு என்ன வயதுடைய கேரக்டர் தேவைப்படுகிறதோ அந்த வயதுடையவர்களைத்தான் காட்ட முடியும். ஒரு படத்தின் கதையைப் பொறுத்தே வயதை தீர்மானிக்க முடியும். உதாரணத்துக்கு, பிறந்த குழந்தையைக் காட்ட வேண்டும் என்றால் குழந்தையைத்தான் காட்ட வேண்டும். அதற்கு 21 வயது பெண்ணையா காட்ட முடியும்? வயது முதிர்ந்த கேரக்டர் என்றால் அந்த வயதில் இருப்பவரைத்தான் காட்ட முடியும். ஏற்கெனவே சினிமாவில் ப்ளூ கிராஸ் தலையிட்டு படத்தில் ஒரு நாய் குறுக்கே ஓடுவதைக் காட்டினால்கூட அதற்குச் சான்றிதழ் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அதனால் தற்போது சினிமாவில் ஒரிஜினல் விலங்குகளைப் பெரும்பாலும் காட்டுவதில்லை. இந்தச் சூழ்நிலையில் கதாநாயகிகளையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் காட்ட வேண்டும் என்ற தடை வந்துவிட்டால் சினிமா இயக்குவதே கேள்விக்குறியாகி விடும். என்னுடைய அடுத்த படத்தில் 13 முதல் 46 வயதுடைய ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்துதான் கதை உருவாக்கியிருக்கிறேன். 18 வயதுக்கு மேல்தான் பெண்களை நடிக்க வைக்க வேண்டும் என்றால் நான் 13 வயதுடைய பெண்ணை எப்படி காட்ட முடியும்?

அதே நேரத்தில் இளம்பெண்களை சிலர் தரம் தாழ்ந்து திரையில் காட்டுவதால்தான் இந்தப் பிரச்னை வருகிறது. நான் இதில் இருந்து மாறுபடுகிறேன். இளம்பெண்களை கவர்ச்சிக்காகப் பயன்படுத்துவதை நானும் ஏற்க மாட்டேன். இயக்குநர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. நடிகைகளை நம் வீட்டில் இருக்கும் பெண்களில் ஒருவராக நினைக்க வேண்டும்'' என்று நிதானமாகச் சொன்னார்.

விகடன்

சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 27, 2014 10:54 pm

சமுத்திரக்கனியின் பதிலும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. மேலும், சினிமா என்பது ஒரு தொழில், அதில் வயது வித்தியாசம் தேவையில்லை என்பதே என் கருத்து. அதே சமயம், இளம் வயதுடைய பெண்களை ஆபாசம் இல்லாமல் காண்பிக்க வேண்டிய பொறுப்பும் திரைத்துறைக்கு இருக்கிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக