புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
63 Posts - 40%
heezulia
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
314 Posts - 50%
heezulia
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
21 Posts - 3%
prajai
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_m10போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 5:51 am

போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் 10626881_724932844246482_4221590832367029035_n

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா அமுதம் அங்காடி, அம்மா விதைகள், அம்மா பேபி கேர் கிட்.... என எல்லா இடத்திலும் அம்மா.

அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள, 'அம்மா பேபி கேர் கிட்’ திட்டப்படி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு 16 பொருட்கள் தரப்படுகின்றன. புதுத் துண்டு, குழந்தை உடை, குழந்தைப் படுக்கை, பராமரிப்பு வலை, நாப்கின், எண்ணெய் டப்பா, ஷாம்பு, சோப்பு, சோப்புப்பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, கை கழுவும் திரவம், கை கழுவும் சோப்பு, தாய்க்கு சுண்டிலேகியம்... இவ்வளவையும் வைத்துக்கொள்ள ஒரு பெட்டி ஆகியவற்றைக்கொண்டதாக அது இருக்கப் போகிறது. சாமான்ய மக்களுக்கு இவை கைக்குக் கிட்டாத அதிசயப் பொருட்கள். சிலருக்கு இதில் ஏதாவது ஒன்றிரண்டு பொருட்களை வாங்கும் சக்தி இருக்கலாம். மொத்தமாக அனைத்தும் வாங்க இயலாது. இவ்வளவையும் மொத்தமாக வாரிக்கொடுப்பது வரவேற்கவேண்டியதே.

ஆனால், எல்லோரும் தன்னைப் போற்றும்விதமாக அல்லது மரியாதை நிமித்தமாக அழைக்கும் 'அம்மா’ என்ற பதத்தையே, தாம் உருவாக்கும் திட்டங்களுக்குப் பெயராகச் சூட்ட வேண்டுமா?

''பெரியவர் முதல் சிறியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் என்னை, 'அம்மா’ என்று அழைக்கிறார்கள். இதைவிட எனக்கு என்ன வேண்டும்?'' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேட்ட ஜெயலலிதா, இன்னும் வேண்டும், வேண்டும் என்று 'அம்மா’ பெயர் சூட்டிக்கொள்வது அவசியமா?

கேட்டால், ' 'அம்மா’ என்பது பொதுச்சொல்தானே!’ என்று விளக்குகிறார்கள். 'கலைஞர்’ என்பதும் பொதுச்சொல்தான். சினிமா முதல் சின்னத்திரை வரை எல்லோருமே கலைஞர்கள்தான். ஆனால், கலைஞர் என்றதும், கரகரக் குரலும் கறுப்புக் கண்ணாடியும் நினைவுக்கு வருவதைப்போல, அம்மா என்றதும் ஜெயலலிதாதானே மனதில் வந்துபோகிறார்.

அ.தி.மு.க தலைமைக் கழகத்தாலோ, தனது சொந்தப் பணத்திலோ ஓர் அறக்கட்டளை ஆரம்பித்து அம்மா பஜனை பாடினால், அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அரசாங்கப் பணத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தரப்பட்டுள்ள அந்தஸ்தை வைத்து, மக்கள் வரிப் பணத்தில் நிறைவேற்றப்படும் அரசு நலத் திட்டங்களுக்கு 'அம்மா’ என்று பெயர் சூட்டுவது அபத்தம்; ஆபத்து; அருவறுக்கத்தக்கது!

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவர் செய்த தீமையை ஒருவர் மாற்றித் தடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், நன்மைகளையும் மாற்றுவதில் குறியாக இருப்பவர்கள். அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்து (அந்த நம்பிக்கை கருணாநிதியிடமே இப்போது இருக்கிறதா என்பது வேறு விவாதம்!) இந்தத் திட்டங்களின் பெயரை மாற்றினால் பரவாயில்லை. திட்டமே 'அம்மா’ பெயரை நினைவுபடுத்துகிறது என்று நிறுத்திவிட்டால், ஜெயலலிதாவின் நோக்கமே சிதைந்துபோகும். முதல்வரின் நோக்கம், தன் பெயரைச் சூட்டுவதா, திட்டம் உருவாக்குவதா என்பதை முதலில் முடிவுசெய்ய வேண்டும்.

பெயர் சூட்டுவதால் எந்தப் பெருமையும் இல்லை. மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் தனது பெயரையும், சத்துணவு திட்டத்துக்கு எம்.ஜி.ஆர் தனது பெயரையும் சூட்டிக்கொள்ளவில்லை. 'காமராஜர் அன்றைக்கு சோறு போட்டதால்தான், நான் படித்து முன்னேறினேன்’ என்றும், 'எம்.ஜி.ஆர் சாப்பாடு போடாவிட்டால், நான் பள்ளிக்கூடத்துக்கே போயிருக்க மாட்டேன்’ என்று இன்றும் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இழைத்து, இழைத்து வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதி கட்டினார். திறப்புவிழா நடக்குபோது அவரது ஆட்சி கலைக்கப்பட்டு இருந்தது. அதற்காகக் கோட்டத்தைக் கட்டியது அப்போதைய கவர்னர் கே.கே.ஷா என்று யாராவது நினைப்பார்களா என்ன? கல்லணை கட்டியது யார் என்றும், தஞ்சை பெரிய கோயில் அமைத்தது யார் என்றும் மக்களுக்குத் தெரியும். திட்டம் சிறப்பானதாக இருந்தால், மக்கள் மறக்க மாட்டார்கள். பயனற்ற பதராக இருந்தால், மறுநாளே மறக்கப்படும்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய நெல் ரகம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு 'ஜெ.ஜெ.ரகம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. நெல் ரகங்களுக்கு அதன் பெயர்தான் அடையாளம். CO49 என்றால் கோவை வேளாண் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. ADT49 என்பது ஆடுதுறையிலும், K1 என்பது கோவில்பட்டியிலும், TKM 13 என்பது திருவூர்குப்பம் பண்ணையிலும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது இதன் பொருள். ஆனால், ஜெ.ஜெ ரகம் சுயநலப் பண்ணைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு காணாமலும்போனது. காரணம் அதன் நோக்கம், மக்கள் பசியாறுவது அல்ல; துதி பாடுவது!

ஆனால், இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதிதான். கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பருப்பு ரகத்துக்கு தன் 'அம்மா’ அஞ்சுகம் பெயரை கருணாநிதி சூட்டியதில் இருந்து இது ஆரம்பித்தது. மாணவன் உதயகுமாரின் உயிர் விளையாட்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் தரப்பட்டது. அண்ணாவுக்கு ஒரு நகர் இருக்கிறது, நமக்கு வேண்டாமா என்று கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்) பெயர் சூட்டப்பட்டது. அதில் இருந்து ஆரம்பித்து கடைசியாக 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ வரை அந்தப் பெயர் சூட்டும் பணி தொடர்ந்தது. ஜெயலலிதா வந்ததும் பெயரையும் மாற்றி, கம்பெனியையும் மாற்றி, அப்போது வாங்கப்பட்ட அட்டையும் செல்லாது என்று ஆக்கி... ஒரே நேரத்தில் பல்வேறு கத்திகளைச் செருகினார்!

கருணாநிதிக்கு எதற்கு டாக்டர் பட்டம்? மூன்று பிஹெச்.டி வாங்கியவர்களால்கூட, 'மனசாட்சி உறங்கும் நேரம் பார்த்துதாம், மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று கருணாநிதி எழுதிய மூன்று வரிகளைக்கூட எழுத முடியாது. 'நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?’ என்று கருணாநிதியிடம் கேட்கப்பட்டது. 'M.A P.F' படித்திருக்கிறேன்’ என்றார். 'அப்படி ஒரு பட்டமே இல்லையே’ என்றதும், 'மெட்ரிகுலேஷன் அட்டெம்ப்ட், பார்ட் ஃபெயில்’ என்றார். இந்தப் புத்திசாலித்தனத்தைவிடவா கௌரவ டாக்டர் பட்டம் பெருமை சேர்த்துவிடப்போகிறது? அவர் ஆரம்பித்தது எம்.ஜி.ஆரில் தொடர்ந்து, ஜெயலலிதாவில் மலையெனக் குவிந்தது. ஜெயலலிதாவும் 'டாக்டர்’ ஆகிவிட்டார் என்றதும், கருணாநிதி 'டாக்டர்’ என்று போட்டுக்கொள்வது இல்லை.

'தனக்குத்தானே பட்டங்கள் கொடுத்துக்கொள்வதும், தனது பெயரைத் தானே சூட்டிக்கொள்வதும், தன்னைப் பார்த்து தானே மோகம்கொள்வதற்கு ஒப்பானது’ என்பார் சிக்மண்ட் ஃப்ராய்டு. ஆற்றங்கரையில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஒருவன் நீரில் தெரியும் பிம்பத்தைப் பார்த்து, 'தன்னைவிட அழகாக இருக்கும் இவன் யார்?’ என்று திகைத்து நிற்பான். அந்த இடத்தில் அவனைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். தான்தான் இவ்வளவு அழகாக இருக்கிறோமா என்று தன்னுடைய பிம்பத்தைக் காதலிப்பான். ஃப்ராய்டு குறிப்பிடும் இந்த மனோபாவம் அரசியலிலும் சினிமாவிலும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேபோகிறது.

2001-2006ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெயலலிதா இப்படி இல்லை. திட்டங்களுக்கு தன் பெயரைச் சூட்டும் ஆர்வம் அவரிடம் துளியும் இல்லை. முந்தைய தேர்தலில் (1996) வாங்கிய அடி, அதற்குக் காரணமாக இருக்கலாம். 1991-1996ம் ஆண்டு காலகட்டத்தில் 'டாக்டர் புரட்சித் தலைவி மருத்துவ நலத் திட்டம்’, 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டம்’, 'பெண் குழந்தைகளுக்கான புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா திட்டம்’, 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்’, 'ஜெ.ஜெயலலிதா நகர் (ஜெ.ஜெ.நகர்)’... எனப் பலவும் அப்போதைய அமைச்சர்களால் ஆராதிக்கப்பட்டுப் பூஜிக்கப்பட்டது. அந்தப் பூசாரிகளில் பலர் இப்போது அ.தி.மு.க-விலேயே இல்லை.

அன்று புரட்சித் தலைவி... இன்று அம்மா! அவ்வளவுதான் வித்தியாசம். ஆளும் கட்சியாக வந்துவிட்டோம் என்ற பெருமை ஆட்டுவித்தது அன்று. இன்று மூன்றாம் முறை முதலமைச்சர் என்பதால், அந்த மயக்கம் இருக்காது. ஆனால், தன்னை எதிர்க்க யாருமே இல்லை, கேள்வி கேட்க எவருமே இல்லை என்ற நினைப்பே இன்று ஜெயலலிதாவை இப்படிச் செயல்பட வைக்கிறது.

சமீபமாக, கருணாநிதிக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையைவிட, தி.மு.க தலைவர் பதவியைத் தக்கவைக்க வேண்டும் என்ற பதற்றம்தான் பாடாய்ப் படுத்துகிறது. ஏதோ தி.மு.க வென்றுவிட்டது மாதிரியும், புதிய அமைச்சரவை பதவியேற்கக் காத்திருப்பது மாதிரியும், கோட்டைக்கு கான்வாய் தயாராக இருப்பது மாதிரியும்... கோபாலபுரத்தில் இருக்கும் ஒருவர் மட்டும்தான் அதற்குத் தடையாக இருப்பது மாதிரியும்... ஸ்டாலின் யோசிக்கிறாரே தவிர, அவருக்கு ஜெயலலிதாவைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை. தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மாற்றாகப் புறப்பட்ட பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தேய்ந்து, முடிவுகளுக்குப் பிறகு முடங்கிவிட்டன. ராமதாஸ் மட்டும்தான் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட நான்கைந்து பக்கங்களுக்கு அறிக்கைவிடுகிறார். 'தான் எதிர்த்த சோனியாவைவிட மோசமான நிலைப்பாடுகளை எடுக்கிறார், தான் ஆதரித்த மோடி,’ என்ற நினைப்பு வைகோவை வாட்டிக்கொண்டு இருக்கிறது. உடலையும் கட்சியையும் சேர்த்துக் கவனிக்க விஜயகாந்த் திணறி வருகிறார். பா.ஜ.க-வுக்கு டெல்லிதான் முக்கியமே தவிர, தமிழ்நாடு ஒரு பொருட்டே இல்லை. 'எவ்வளவு குறைவாகக் கொடுத்தாலும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி’ என்று கமலாலயத்தில் கண்சிமிட்டல் பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. இல்லாத முதலமைச்சர் நாற்காலியை இருட்டு சத்தியமூர்த்தி பவனில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தேட ஆரம்பித்துள்ளார்கள். பாலன் இல்லம் கட்டிய பெருமிதமும், அதற்கு வாடகைக்கு ஆள் வர வேண்டுமே என்ற கவலையும்தான் இந்திய கம்யூனிஸ்ட் தலைமைக்கு. மத்திய அரசு மட்டும்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு. எதிர்த்துக் களமாடவேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்க, இப்போதைக்கு கல்வி உரிமை போதும் எனத் தன்னார்வத் தொண்டராக மாறிவிட்டார் தொல்.திருமாவளவன். இப்படி எல்லாக் கட்சிகளும் தங்கள் கட்சிகளைத் தக்கவைக்கவே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அம்மா பஜனையைப் பற்றி கேள்வி கேட்கக்கூட இங்கே ஆள் இல்லை!

'நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிகத் திறமைசாலிகள்’ என்று 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் பாட்டுக்கு நடுவே ஒரு வசனம் வரும். அது மந்திரிகளுக்கு மட்டுமா... தமிழக மக்களுக்கும் சேர்த்தா 'அம்மா’?

விகடன்

போதும் அம்மா நாமம்! - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 24, 2014 7:52 am

குழந்தையே பெறாத இந்த நடிகை எல்லாம் அம்மாவா? தமிழகத்திற்கும் தாய்குலத்திற்கும் கேவலம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 24, 2014 10:04 am

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

இதுவே அம்மா திமுகவின் தேசிய கீதம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Aug 24, 2014 3:19 pm

தமிழ் நாடு "அம்மா நாடு" எப்போது????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 7:03 pm

M.M.SENTHIL wrote:தமிழ் நாடு "அம்மா நாடு" எப்போது????
மேற்கோள் செய்த பதிவு: 1081991

ஐயோ..............நீங்க வேற ஐடியா தாராதீங்க செந்தில் புன்னகை  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக