புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி மாத ராசி பலன்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:29 pm

மேஷம்: எல்லோரும் எல்லாம் பெற வேண்டுமென்று நினைப்பவர்களே! சீர்த்திருத்த சிந்தனை அதிகமுள்ள நீங்கள், வீட்டு நலனை விட, நாட்டு நலனில் அதிக அக்கறை காட்டுபவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியும், பூர்வ புண்யாதிபதியுமான சூரியன் இந்த மாதம் முழுக்க தன் சொந்த வீடான 5ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைகளெல்லாம் விலகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் முடியும். மகனுக்கும் வேலை கிடைக்கும்.

26ந் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் அமர்ந்து ராகுவுடன் சேர்வதால் பழைய நண்பர்களுடன் கருத்து மோதல் வரும். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் தொடர்ந்து சாதகமாக இல்லாததால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். யூரினரி இன்பெக்ஷன், முதுகு வலி, கால் வலி வந்து நீங்கும். சகோதர வகையிலும் அலைச்சல்கள் அதிகமாகும். கேது 12ல் மறைந்திருப்பதால் குல தெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். புண்ணிய தலங்களுக்கும் சென்று வருவீர்கள். எதிர்ப்புகள் குறையும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தை விட்டு விட்டு படிப்பில் அக்கறை காட்டுங்கள். சக மாணவர்கள் என்ன நினைப்பார்கள் என் றெல்லாம் யோசிக்காமல் சந்தேகத்தை உடனுக்குடன் கேட்டுக் கொள்வது நல்லது.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். சிலருக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். தடைபட்ட திருமணம் கூடி வரும். விடுபட்ட கல்வியை மீண்டும் தொடரும் அமைப்பு உருவாகும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்கள் தீரும். மக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கட்சியிலும் பெரிய பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ராகு சாதகமாக இருப்பதால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடனுதவியும் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உங்களுடைய புதிய திட்டங்கள், செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்களையெல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உணவு, கமிஷன், கட்டுமானப்பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

கடையை நல்ல இடத்திற்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களும் வரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். ஆனால், குருபகவான் 4ம் வீட்டில் அமர்ந்து உத்யோக ஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். என்றாலும், சக ஊழியர்கள் மத்தியில் சலசலப்புகள் வரும். நேர் அதிகாரி உங்களுக்கு எதிராக செயல்பட்டாலும், உங்களுக்கு மேல்மட்ட மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லைகள் குறையும். தண்ணீர் பிரச்னையும் தீரும்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடை, தாமதம் நீங்கும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். புதிய வாய்ப்புகளும் கூடி வரும். வளைந்து கொடுத்துப் போவதாலும் அறிவுப்பூர்வமான முடிவுகளாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 19, 20, 22, 25, 28, 29, 30 செப்டம்பர் 6, 7, 8, 9, 15.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 1ந் தேதி காலை 9 மணி முதல் 2 மற்றும் 3ந் தேதி மதியம் 2 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:30 pm

ரிஷபம்: கனவு காண்பதில் வல்லவர்களான நீங்கள், அது நனவாகும் வரை கடினமாக உழைப்பவர்கள். மற்றவர்களின் நிறை குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டுவதுடன் தீர்வு சொல்வதிலும் வல்லவர்கள். உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். கடந்த ஒரு மாத காலமாக உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் முடங்கிக் கிடந்த சூரியன் இப்போது சுக ஸ்தானத்தில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 5ம் வீட்டில் ராகு நிற்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். எதிர்மறை எண்ணங்களும் வரும்.

உறவினர்களில் சிலர் உங்களை பாராட்டிப் பேசினாலும், சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். உங்களுடைய ராசிக்கு 6ல் செவ்வாய் நிற்பதால் மாதத்தின் முற்பகுதி மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, கழுத்து வலி, மூட்டு வலி வந்து நீங்கும். 1ந் தேதி முதல் செவ்வாய் 7ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர இருப்பதால் மனைவியின் உடல் நிலை சீராகும். சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல், அலைச்சல்கள், செலவினங்களெல்லாம் விலகும். 3ம் வீட்டிலேயே குரு தொடர்வதால் சின்னச் சின்ன காரியங்கள் கூட தடைப்பட்டு முடிவடையும். ஆனால், நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பிலே முன்னேறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் வெல்வீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு வெளிநாடு, வெளிமாநிலம் சென்று படிக்கும் வாய்ப்பு உண்டாகும். கோபம் குறையும். தாயாருடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். காதல் விவகாரங்களில் இருந்த பிரச்னைகள் தீரும். திருமணம் கூடி வரும்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 6ல் சனி நிற்பதால் வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். எண்ணெய், உணவு, எலெக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர்ஸ், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் பணிவார்கள். புதிய முயற்சிகளை ஆதரிப்பார்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

நல்ல அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உத்யோக ஸ்தானத்தை சூரியன் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிர்பார்த்து ஏமாந்துபோன பதவி உயர்வு, சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். இடமாற்றமும் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

விவசாயிகளே! மரப் பயிர்கள், எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துகளால் ஆதாயமடைவீர்கள்.

கலைத்துறையினரே! வயதில் குறைந்த கலைஞர்கள் மூலமாக நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். படைப்புகள் வெற்றியடையும். எதிர்பாராத திடீர் திருப்பங்களும், புதிய முயற்சிகளில் வெற்றியும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24, 31, செப்டம்பர் 2, 8, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 3ந் தேதி மதியம் 2 மணி முதல் 4 மற்றும் 5ந் தேதி மாலை 5.30 மணிவரை நாவடக்கத்துடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: சென்னை - மயிலாப்பூர் கற்பகாம்பாளை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:31 pm

மிதுனம்: உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதை விரும்பாதவர்களே! புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதது போல தன்மானம் மிக்க நீங்கள், யார் சொத்துக்கும் ஆசைப்பட மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலேயே குரு நிற்பதால் சமயோஜிதமாகப் பேசி சாதிப்பீர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து உங்களை கோபப்பட வைத்த சூரியன் இப்போது 3ல் நுழைந்திருப்பதால் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். பிரச்னைகளை பக்குவமாக அணுகி வெற்றி பெறும் வித்தையைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உங்களுக்குப் பிறக்கும்.

உங்களுடைய ராசிநாதன் புதன் 26ந் தேதி முதல் உச்சம் பெற்று அமர்வதால் அழகு, இளமை கூடும். சோம்பல், அசதி விலகும். ஆனால், புதன் ராகுவுடன் சேர்வதால் மூச்சுத் திணறல், தூக்கமின்மை, எதிலும் ஒரு சந்தேகம் வந்து நீங்கும். 1ந் தேதி முதல் செவ்வாய் 6ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளும் சுமுகமாக முடிவடையும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ராசிக்கு 5ம் வீட்டிலேயே சனிபகவான் நிற்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பூர்வீக சொத்து பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.

மாணவ-மாணவிகளே! உங்களின் மதிப்பெண் கூடும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர்கள், சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பெற்றோர் உங்களுடைய ஆசைகளை, எண்ணங் களை நிறைவேற்றி வைப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். திருமணம் கூடி வரும்.

அரசியல்வாதிகளே! ராஜ தந்திரத்தை கற்றுக் கொள்வீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களுடன் இணக்கமாக செல்வீர்கள். கடந்த மாதத்தை விட இந்த மாதம் வியாபாரம் சூடுபிடிக்கும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களையும், சீர்த்திருத்தங்களையும் செய்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் சிடுசிடுவென பேசும் பணியாளை நீக்கி விட்டு அன்பாக அரவணைப்பாக பேசும் வேலையாட்களை நியமனம் செய்வீர்கள். ஸ்டேஷனரி, மருந்து, கெமிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். ஆனால், 10ம் வீட்டில் கேது நிற்பதால் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை கிடைக்கும்.

விவசாயிகளே! மரப் பயிர்கள் மூலமாக லாபமடைவீர்கள். பூச்சுத் தொல்லை, எலித் தொல்லை குறையும்.

கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் வரும். தள்ளிப் போன ஒப்பந்தமும் கையெழுத்தாகும். பணத்தட்டுப்பாடு நீங்கும். திடீர் யோகங்களும், செல்வாக்கும் அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 23, 24, 26, 27, 28 செப்டம்பர் 2, 3, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 5ந் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மற்றும் 7ந் தேதி மாலை 6.30 மணி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம்: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் பாதையிலுள்ள திருப்புலிவனம் சிம்மகுரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வாருங்கள்.விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:32 pm

கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்களே! ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், யார் மனதையும் புண்படுத்தும்படி பேசமாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை கோபப்பட வைத்தார் சூரிய பகவான். எப்போது பார்த்தாலும் ஒரே படபடப்பாக பேசுவீர்கள். படபடப்புடன் இருப்பீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பையெல்லாம் இழந்தீர்கள். யாரும் உங்களை மதிப்பதில்லையென்றெல்லாம் நீங்களே நினைத்துக் கொண்டீர்கள். குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகளையும், பணப்பற்றாக்குறையையும் ஏற்படுத்திய சூரியன் இப்போது உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார்.

தனாதிபதியான சூரியன் தன ஸ்தானத்திலேயே அமர்வதால் இந்த மாதம் முழுக்க பணவரவு திருப்திகரமாக இருக்கும்.. உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குரு தொடர்வதால் அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். 3ம் வீட்டிலேயே ராகு நிற்பதால் வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கடந்த ஒன்றரை மாதமாக உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்து சனியுடன் சேர்ந்து உங்களை நாலாவிதத்திலும் நிம்மதியில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கும் செவ்வாய் 1ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5ல் அமர்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! உயர் கல்வி ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் மறதி அதிகமாகும். பெரிய கேள்விகளுக்கு சில குறியீடுகளை அமைத்துக் கொண்டு படிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! சோர்ந்து விடாதீர்கள். இந்த மாதம் முழுக்க உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்களால் ஏற்பட்ட மனஉளைச்சலிருந்து விடுபடுவீர்கள். தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளே! கடந்த மாதம் ஏடாகூடமாகப் பேசி சிக்கிக் கொண்டீர்களே! ஆனால், இந்த மாதம் புள்ளி விவரங்களுடன் பேசி எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். எதிர்க்கட்சியினர் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். மாதத்தின் முற்பகுதியில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். போட்டிகள் குறையும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். என்றாலும் 4ம் வீட்டில் சனி நிற்பதால் இரண்டு நாட்கள் வியாபாரம் நன்றாக இருந்தால் மூன்றாவது நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும். பிறகு சூடுபிடிக்கும். கட்டுமானப் பொருட்கள், பெட்ரோ-கெமிக்கல், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.

விவசாயிகளே! நெல், கரும்பு வகைகளாலும், வெண்டை, கத்தரி போன்ற தோட்டப் பயிர்களாலும் லாபமடைவீர்கள்.

கலைத்துறையினரே! கோபத்தை குறையுங்கள். உங்களை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் திறமைகளை மதிக்கத் தவறாதீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 19, 25, 28, 29, 30, செப்டம்பர் 4, 5, 6, 13, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 7ந் தேதி மாலை 6:30 மணி முதல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வீண் செலவுகள் அதிகமாகும்.

பரிகாரம்: புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள பேரையூர் நாகநாதரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:33 pm

சிம்மம்: எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவதில் வல்லவர்களே! எல்லோரும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாறுபவர்களே! மன்னிக்கும் குணத்தால் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுபவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 12ல் மறைந்திருந்த உங்கள் ராசிநாதன் சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் ஆட்சி பெற்று நுழைந்திருப்பதால் அலைச்சல் குறையும். வீண் செலவுகள், திடீர் பயணங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜிதமாகப் பேசி சாதிப்பீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள்.

ஷேர் மூலம் பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ராகு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அவ்வப்போது பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். யதார்த்தமாகப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். பிரபல யோகாதிபதி செவ்வாய் இந்த மாதத்தின் முற்பகுதி வரை சனியுடன் சேர்ந்து பலவீனமாக இருப்பதால் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் தாமதமாக முடியும்.

சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். எல்லோருமே எதிர்பார்ப்புகளுடன் பழகுகிறார்களே! என்பதை நினைத்து அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். 1ந் தேதி முதல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்குகள் சாதகமாகும். சகோதரருடன் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். சிலர் வீடு கட்டி புது மனை புகுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும். 12ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மாணவ-மாணவிகளே! கணிதப் பாடத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். சிலருக்கு புது நிறுவனத்தில் வேலை அமையும். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல் குறையும். எதிர்க்கட்சியினரால் பாராட்டப்படுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள். ஸ்டேஷனரி, கமிஷன், பெட்ரோ-கெமிக்கல், மருந்து வகைகளால் லாபம் உண்டு. வேலையாட்களை மாற்றுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு வெளிமாநிலம் அல்லது அயல்நாடு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும்.

கலைத்துறையினரே! புதியவர்கள் மூலமாக புது வாய்ப்புகள் கிடைக்கும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். புகழ், கௌரவம் ஒருபடி உயரும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 18, 19, 20, 29, 30, 31, செப்டம்பர் 6, 7, 8, 15.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் திட்டமிட்டவை தாமதமாகி முடியும்.

பரிகாரம்: மேல்மருவத்தூருக்கு அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம் எனும் தலத்தில் அருளும் ஆட்சீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:33 pm

கன்னி: சகதியில் கல்லை விட்டெறிந்தால் அது தன் மேலே தான் தெறிக்கும், என்பதை உணர்ந்து கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கி விடுவீர்கள். சமாதானத்தை எப்போதும் விரும்புபவர்களே! 12ம் வீட்டிலேயே மறைந்து கிடக்கும் உங்களுடைய ராசிநாதன் புதன் 26ந் தேதி முதல் உங்களுடைய ராசிக்குள் உச்சம் பெற்று அமர்வதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். ராசிக்குள் 12ம் வீட்டிலேயே சூரியன் நுழைந்திருப்பதால் புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும்.

ஆனால், மாதத்தின் பிற்பகுதியில் செலவினங்கள் கூடிக் கொண்டே போகும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிட்டும். உங்களுடைய ராசிக்குள்ளேயே ராகு நிற்பதாலும், ஏழரைச் சனி நடைபெற்று கொண்டிருப்பதாலும் யூரினரி இன்ஃபெக்ஷன், முதுகு மற்றும் மூட்டு வலி வந்து போகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அசிடிட்டி பிரச்னை வரக்கூடும். எனவே வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். தூக்கம் குறையும். செவ்வாயின் போக்கு சாதகமாக இல்லாத தால் சகோதரங்கள் உங்களை புரிந்துக் கொள்ளாமல் உங்களை வேறு அர்த்தத்தை எடுத்துக் கொள்வார்கள். 1ந் தேதி முதல் செவ்வாய் 3ம் வீட்டில் நுழைவதால் சகோதர வகையில் இருந்து வந்த பகைமை நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும்.

மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கன்னிப் பெண்களே! ஸ்கின் அலர்ஜி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். புதிய நண்பர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் நாட்டம் பிறக்கும்.

கலைத்துறையினரே! ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களால் புது வாய்ப்புகள் வரும்.

அரசியல்வாதிகளே! செல்வாக்கு கூடும். ஆனால், ஏழரைச் சனி நடப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் அதிகரிக்கும்.

விவசாயிகளே! மாதத்தின் பிற்பகுதியில் வருமானம் உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். குருபகவான் லாப வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களாலும் வியாபாரத்தில் உதவிகள் உண்டு. கமிஷன், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். கடையை அழகுபடுத்துவீர்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். உங்களை தவறாகப் புரிந்து கொண்ட அதிகாரியின் மனசு மாறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலைச்சுமை குறையும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். இயக்கம், சங்கம் இவற்றில் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால், ஏழரைச் சனி நடைபெறுவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வெளியில் பரவும். செலவுகளும், அலைச்சல்களும் துரத்தினாலும் அதீத தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22, 23, 31, செப்டம்பர் 3, 4, 5, 8, 9, 10, 11, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 17 மற்றும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள்.

பரிகாரம்: செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள சிங்கப்பெருமாள்கோவில் தலத்தில் அருளும் நரசிம்மரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:34 pm

துலாம்: மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்களே! பிறர் செய்ய முடியாத காரியங்களைக்கூட சவாலாக ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். உங்களுடைய ராசியிலேயே சனியும், செவ்வாயும் நிற்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். சின்னச் சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். ஏழரைச் சனியும் நடப்பதால் தன்னம்பிக்கை குறையும். அடுத்தடுத்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திப்பாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். உங்களுடைய ராசிக்கு தனாதிபதியான செவ்வாய் 1ந் தேதி முதல் 2ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர இருப்பதால் வருமானம் உயரும்.

உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். 1ந் தேதி முதல் சுக்கிரன் பாதகாதிபதியான சூரியனுடன் சேர்வதால் தொண்டை வலி, காது வலி வரக்கூடும். உங்களுடைய ராசிக்கு 10ம் வீட்டிலேயே குரு நிற்பதால் வேலைச்சுமை அதிகமாகும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் உங்கள் உள்மனதில் இருந்து கொண்டிருக்கும். உங்களுக்குள் திறமைகள் குறைந்து விட்டதாக நீங்களே நினைத்துக் கொள்வீர்கள். 10ம் வீட்டில் குரு நிற்பதால் பிரபலங்களுடன் கருத்து மோதல்கள் வரும். அவர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது.

மாணவ- மாணவிகளே! வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்ப்பது நல்லது. விடைகளை எழுதிப் பாருங்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் வயிற்று வலி வந்து நீங்கும். கணிதப் பாடம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! முற்பகுதியில் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் இருந்தாலும் மாதத்தின் பிற்பகுதியில் நிம்மதி கிடைக்கும். கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் வியாபாரம் தழைக்கும். ரெட்டிப்பு லாபம் உண்டாகும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உங்களுடைய ராசிக்கு 6ல் கேது நிற்பதால் வேற்று மாநிலத்தவரால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கவும் விரிவுபடுத்தவும் நல்ல வாய்ப்புகள் கிட்டும். உணவு, ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

பங்குதாரர்களுடன் சின்ன சின்ன கருத்து மோதல் வரும். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வேலையாட்களால் பிரச்னைகள் அவ்வப்போது வெடிக்கும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உத்யோகத்தில் அவ்வப்போது மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழும். குரு 10ல் நிற்பதால் விரும்பத்தகாத இடமாற்றம் வரும். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அந்தரங்க விஷயங்களையும் வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

கலைத்துறையினரே! சின்ன வாய்ப்புகளாக இருந்தாலும் அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள்.

விவசாயிகளே! தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். பக்கத்து நிலக்காரருடன் இருந்த வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். பழைய சிக்கல்களில் இருந்து விடுபடும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 23, 24, 25, 27, செப்டம்பர் 3, 4, 5, 6, 7, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 18, 19, 20ந் தேதி காலை 7 மணி வரை மற்றும் செப்டம்பர் 14, 15, 16ந் தேதி மதியம் 2 மணி வரை எதிலும் பொறுமையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:35 pm

விருச்சிகம்: பிரச்னைகளைக் கண்டு அலட்டிக் கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க ஒருபோதும் தயங்கமாட்டீர்கள். பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் பகை பெற்று சூரியன் அமர்ந்திருந்தார் அதனால் குடும்பத்தில், கணவன் - மனைவிக்குள் வாக்குவாதங்களும், பிரச்னைகளும், பிரிவுகளும் வந்து போனது. தந்தையாருடன் மனத்தாங்கலும் வந்தது.

சேமிப்புகளும் கரைந்தது. செலவினங்களும் அதிகமானது. பணப்பற்றாக்குறையும் ஏற்பட்டது. இப்போது சூரியன் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12ல் மறைந்து சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் அலர்ஜி, இன்ஃபெக்ஷன், மூச்சுத் திணறல், கட்டை விரலில் அடிபடுதல் போன்ற சம்பவங்கள் நிகழும்.

பயணங்களின் போது கவனமாக இருங்கள். அவசர முடிவுகள் வேண்டாம். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். ஆனால், 1ந் தேதி முதல் செவ்வாய் ஆட்சி பெற்று உங்களுடைய ராசிக்குள் நுழை வதால் அதுமுதல் கவலைகள் நீங்கும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சொத்துப் பிரச்னையும் சுமுகமாகும். வழக்குகளும் சாதகமாகும்.

மாணவ- மாணவிகளே! படிப்பிலே ஆர்வம் பிறக்கும். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வரன் அமையும்.

அரசியல்வாதிகளே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாற்றுக் கட்சியினரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். உணவு, மருந்து, இரும்பு வகைகளால் லாபம் அதிகரிக்கும். குருவும் சாதகமாக இருப்பதால் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்த உதவிகள் கிடைக்கும். புதிய வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வியாபார சங்கங்களில் மரியாதை கூடும்.

உத்யோகத்தில் கடந்த ஒரு மாதகாலமாக இருந்து வந்த மரியாதைக் குறைவான சம்பவங்கள், நிகழ்வுகளெல்லாம் இந்த மாதத்தில் மாறும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். நீங்கள் நெடுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடமாற்றமும் கிடைக்கும். இந்த மாதம் முழுக்க அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். மூத்த அதிகாரிகள் உங்களுடைய ஆலோசகளை ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு அயல்நாட்டிலும் வேலை கிடைக்கும்.

கலைத்துறையினரே! எதிர்பார்த்து ஏமாந்துப் போன வாய்ப்புகளும், தொகையும் கைக்கு வரும். பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.

விவசாயிகளே! தோட்டப் பயிர்கள், மரப்பயிர்கள் லாபம் தரும். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 19, 25, 28, 29 , செப்டம்பர் 4, 5, 12, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 20ந் தேதி காலை 7 மணி முதல் 21, 22ந் தேதி மாலை 5 மணி வரை மற்றும் செப்டம்பர் 16ந் தேதி மதியம் 2 மணி முதல் மற்றவர்களுக்காக சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

பரிகாரம்: திருத்தணி முருகனை தரிசித்து வாருங்கள். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:35 pm

விருச்சிகம்: பிரச்னைகளைக் கண்டு அலட்டிக் கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க ஒருபோதும் தயங்கமாட்டீர்கள். பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் பகை பெற்று சூரியன் அமர்ந்திருந்தார் அதனால் குடும்பத்தில், கணவன் - மனைவிக்குள் வாக்குவாதங்களும், பிரச்னைகளும், பிரிவுகளும் வந்து போனது. தந்தையாருடன் மனத்தாங்கலும் வந்தது.

சேமிப்புகளும் கரைந்தது. செலவினங்களும் அதிகமானது. பணப்பற்றாக்குறையும் ஏற்பட்டது. இப்போது சூரியன் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12ல் மறைந்து சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் அலர்ஜி, இன்ஃபெக்ஷன், மூச்சுத் திணறல், கட்டை விரலில் அடிபடுதல் போன்ற சம்பவங்கள் நிகழும்.

பயணங்களின் போது கவனமாக இருங்கள். அவசர முடிவுகள் வேண்டாம். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். ஆனால், 1ந் தேதி முதல் செவ்வாய் ஆட்சி பெற்று உங்களுடைய ராசிக்குள் நுழை வதால் அதுமுதல் கவலைகள் நீங்கும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சொத்துப் பிரச்னையும் சுமுகமாகும். வழக்குகளும் சாதகமாகும்.

மாணவ- மாணவிகளே! படிப்பிலே ஆர்வம் பிறக்கும். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வரன் அமையும்.

அரசியல்வாதிகளே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாற்றுக் கட்சியினரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். உணவு, மருந்து, இரும்பு வகைகளால் லாபம் அதிகரிக்கும். குருவும் சாதகமாக இருப்பதால் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்த உதவிகள் கிடைக்கும். புதிய வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வியாபார சங்கங்களில் மரியாதை கூடும்.

உத்யோகத்தில் கடந்த ஒரு மாதகாலமாக இருந்து வந்த மரியாதைக் குறைவான சம்பவங்கள், நிகழ்வுகளெல்லாம் இந்த மாதத்தில் மாறும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். நீங்கள் நெடுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடமாற்றமும் கிடைக்கும். இந்த மாதம் முழுக்க அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். மூத்த அதிகாரிகள் உங்களுடைய ஆலோசகளை ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு அயல்நாட்டிலும் வேலை கிடைக்கும்.

கலைத்துறையினரே! எதிர்பார்த்து ஏமாந்துப் போன வாய்ப்புகளும், தொகையும் கைக்கு வரும். பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.

விவசாயிகளே! தோட்டப் பயிர்கள், மரப்பயிர்கள் லாபம் தரும். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 19, 25, 28, 29 , செப்டம்பர் 4, 5, 12, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 20ந் தேதி காலை 7 மணி முதல் 21, 22ந் தேதி மாலை 5 மணி வரை மற்றும் செப்டம்பர் 16ந் தேதி மதியம் 2 மணி முதல் மற்றவர்களுக்காக சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

பரிகாரம்: திருத்தணி முருகனை தரிசித்து வாருங்கள். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:36 pm

தனுசு: மன்னிக்கும் குணம் அதிகமுள்ளவர்களே! பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் மறக்கமாட்டீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் இந்த மாதத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்கு 8ல் மறைந்திருந்த உங்களுடைய பாக்யாதிபதியான சூரியன் இப்போது 9ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பணப்பற்றாக்குறை நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்தை சரி செய்வீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சனி நிற்பதால் வேற்றுமொழி, மதத்தை சார்ந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். கோபம் குறையும். சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும்.

அவர்களின் கல்யாணப் பேச்சு வார்த்தைகளும் சற்றே தாமதமாகி முடியும். ஆனால், 1ந் தேதி முதல் 12ல் மறைந்தாலும் ஆட்சி பெற்று அமர்வதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பழைய சொத்தையும் விரிவுபடுத்துவீர்கள். ராசிநாதனான குரு உங்கள் ராசிக்கு 8ல் நிற்பதால் பணப்பற்றாக்குறை உண்டாகும். செலவுகள் கூடிக் கொண்டேபோகும். வி.ஐ.பி.களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் ஏற்படும். இடம், பொருள், ஏவலறிந்து பேசப் பாருங்கள். நீங்கள் யதார்த்தமாக பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும்.

மாணவ-மாணவிகளே! புதனும், சனியும் சாதகமாக இருப்பதால் படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டு, கட்டுரைப் போட்டிகளிலும் பரிசு, பாராட்டுகள் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். காதல் இனிக்கும். உயர்கல்வியிலும் முன்னேறுவீர்கள். சிலர் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சேருவீர்கள்.

அரசியல்வாதிகளே! பொதுக் கூட்ட மேடைகளில் சிறப்பாக பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கடந்த மாதத்தைவிட இந்த மாதம் வியாபாரம் சூடுபிடிக்கும். லாபமும் அதிகமாகும். கமிஷன், ஏற்றுமதி - இறக்குமதி, இரும்பு, வாகன வகைகளால் ஆதாயமடைவீர்கள். புது பங்குதாரர்கள் சேருவார்கள். உத்யோகத்தில் இருந்து வந்த இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட மூத்த அதிகாரியின் பிடிவாதப் போக்கு மாறும். அவர் உங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்குவார். மாதத்தின் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். சில நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வீர்கள். வீண் விவாதங்களும் நீங்கும். சிலருக்கு வெளிநாட்டு தொடர்புள்ள நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

கலைத்துறையினரே! தள்ளிப்போன வாய்ப்புகள் மீண்டும் தேடி வரும். மகிழ்ச்சி உண்டாகும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! நவீன ரக உரங்களை பயன்படுத்துவீர்கள். உளுந்து, எள், ஆமணக்கு, சவுக்கு போன்ற வகைகளால் லாபம் உண்டு. அடிப்படை வசதிகள், வாய்ப்புகள் பெருகும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 19, 20, 21, 27, 28, 29, 30, 31, செப்டம்பர் 6, 7, 8, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 22ந் தேதி மாலை 5 மணி முதல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விட்டு வாருங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக