புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
7 Posts - 4%
prajai
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
16 Posts - 4%
prajai
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஓய்வு! Poll_c10ஓய்வு! Poll_m10ஓய்வு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 10:16 pm

'எங்கே போட்டுருப்பான்...' என, செடி, கொடிகளுக்கு நடுவிலும், பூச்சு வேலைக்காக வாங்கி குவித்திருக்கும் மணல் குவியல் மற்றும் வாயிற்கதவு ஓரமாக வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளுக்கிடையில் என, எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து களைத்து விட்டார் ராமதுரை. எங்கேயும் செய்தித் தாளைக் காணவில்லை.

பொதுவாக பேப்பர் பையன் வீசியெறியும் செய்தித்தாள், படிக்கட்டு மற்றும் அதை சார்ந்த இடங்களில் தான் கிடக்கும்; இத்தனை நாளும், 6:00 மணிக்கே வந்துவிடும் பேப்பர், இன்று, 6:30 மணி ஆகியும் வரவில்லை. சரி... பேப்பர் தான் லேட் என்றால் பார்வதி போட்டுத் தரும் காபியும், இன்னும் கைக்கு வரவில்லை.

பக்கெட் தண்ணீரில் கையை கழுவி, தோளில் தொங்கிய துண்டில் கைகளை துடைத்தபடி, சிட் - அவுட்டில் இருந்த பிரம்பு நாற்காலியில் வந்து அமர்ந்தார். அருகிலிருந்த டேபிளில் ஆடை படிந்திருந்த காபியும், பக்கத்தில் தாறுமாறாக மடிக்கப்பட்ட செய்தி தாளும் இருந்தன.

''பாரு... ஏய் பாரு இங்க வா...'' என்று மனைவியை ஓங்கிய குரலில் அழைத்தார்.
''எதுக்கு இப்படி காலங்காலத்தாலே பாரு... பாருன்னு என்னய ஏலம் விடறீங்க?''
''ஏன் காபி லேட்டு? அப்புறம், இந்த பேப்பர் இங்க எப்படி வந்தது? இத நான் எங்கெல்லாம் தேடுறது!''
''பேப்பர் அப்பவே வந்துடுச்சு... ரமேஷ் அவன் ரூம்ல வச்சு பாத்துகிட்டிருந்தான். முதல் டிகாஷனில் அவனுக்கு காபி கொடுத்ததால, அடுத்த டிகாஷன் இறங்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நீங்க தான் நேத்திலேருந்து ரிட்டயர் ஆயாச்சுல்ல... எதுக்கு இப்படி அவசரப்படுறீங்க... இனிமே எல்லாமே மெதுவாத்தான் நடக்கும்,''என்றாள்.

''ஓ... ரிட்டயராயிட்டேனா?''என்று கேட்டவருக்கு, நேற்று அலுவலகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றது நினைவுக்கு வந்தது. இனிமேல், எக்ஸ் அக்கவுண்டன்ட்! பிரிவு உபசார கூட்டத்தில், 'ராமதுரை இல்லாவிட்டால், இனி ஆபீஸ் எப்படி நடக்கும்... இழுத்து மூடிட்டு எல்லாரும் வீட்டுக்கு போக வேண்டியது தான்...' என்ற ரேஞ்சுக்கு, ஆளாளுக்கு அவரைப் புகழ்ந்து தள்ளி, அவர் பிரிவுக்காக நீலிக்கண்ணீர் வடித்து, மாலை மரியாதை செய்து, வாடகைக்கு எடுத்த இன்னோவா காரில், வீடு வரை கொண்டு வந்து பிரியா விடை பெற்றுச் சென்றனர். அடுத்த தடவை ஆபீசுக்கு, ஏதாவது வேலையாகப் போனால், ஓரக்கண்ணால் பார்த்து, கால் இஞ்ச் உதட்டை விரித்து செயற்கை முறுவல் பூத்து, வேலையில் முழுகிவிடுவர் என்பது ராமதுரைக்கு தெரியும்.

மகன் ரமேஷ் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். பல லட்ச ரூபாய் காபிடேஷன் பீஸ் கொடுத்து விலைக்கு வாங்கிய சீட்! 'உதவாக்கரை... வீட்ல ஒரு வேலை செய்யுறதில்ல; படிக்கிறதும் சுமார்தான்; எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட், சினிமான்னு ஊர் சுத்துறது... மணிக்கணக்கா மொபைல்போன், பேஸ் புக், சேட்டிங்க்ன்னு அவங்க அம்மாகிட்ட திட்டு வாங்கிக்கிட்டு இருக்கற பய... இன்னக்கி எப்படி, முதல் காபி, பேப்பர் என வி.ஐ.பி., ஆனான்...' என, ராமதுரைக்கு ஆச்சரியமாக இருந்தது.

தொடரும்.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 10:18 pm

மதிய சாப்பாட்டின் போது, தட்டில் பாயசம் ஊற்றினாள் பார்வதி. அதில் நிறைய முந்திரி பருப்பு மிதந்தது.
''இன்னக்கி என்ன விசேஷம், பாயசம் செய்திருக்கே?''என்று கேட்டார்.
''நம்ம ரமேசு கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகிருக்கான்... ஏதோ கார் தயாரிக்கிற சோடா கம்பெனியாமே?''
சிரித்தார் ராமதுரை.

''அது, சோடா இல்ல; 'ஸ்கோடா'ன்னு கார் தயாரிக்கிற பெரிய கம்பெனி. ஆமா... இவனை எப்படி அந்த கம்பெனியில எடுத்தாங்க,'' என்றவர் சீரியசாகி, ''அது சரி, துரை இத என் கிட்டே சொல்லவேயில்லையே... அவ்வளவு மரியாதை! ஹூம்...'' என்றார் கடுப்பாக.
''இல்லங்க... நேத்து என்கிட்டே சொல்லும் போதே, அப்பாகிட்டயும் சொல்லிடும்மான்னான்; நாந்தான் மறந்துட்டேன். காலேஜுல சர்டிபிகேட் வந்ததும், அதை அனுப்பினா கம்பெனியிலிருந்து அழைப்பு லெட்டர் வருமாம்.''

தான் ஓய்வு பெற்று, பென்ஷன் மற்றும் மாதாந்திர வங்கி டிபாசிட் வட்டி பெறுபவராக மாறிவிட்டதாலும், ரமேஷ் பெரிய கம்பெனியில் வேலைக்கு போய், கை நிறைய சம்பளம் வாங்க இருப்பதாலும், வீட்டில் தான் இரண்டாம் தரக் குடிமகனாக பதவி இறக்கம் செய்யப்பட்டது புரிந்தது அவருக்கு!

வழக்கமான நேரத்தில் காபியோ, டிபனோ, குளிப்பதற்கோ சென்றால், 'இப்ப என்ன அவசரம்...' என்று படுத்தி எடுத்தாள் பார்வதி. அவர் விரும்பி பார்க்கும் செய்திச் சேனல்களை கூட பார்க்க முடிவதில்லை. 'ஒரே நியூச தான், எல்லா சேனல்களிலும் திருப்பி திருப்பி காட்டறான்... அதையே எத்தன நேரம் கண் கொட்டாம பாப்பீங்க...' என்று கண்டித்து, சேனலை மாற்றி, சீரியல்களை பார்க்க ஆரம்பித்தாள். அத்துடன், 'சும்மாதானே இருக்கீங்க..., காய்கறி அரிஞ்சு கொடுங்க; மூணு விசில் வந்ததும் குக்கரை இறக்கிடுங்க, பத்து பாத்திரத்த வேலைக்காரிக்காக பின்பக்கம் எடுத்துப் போடுங்க, வாஷிங்மிஷின்ல இருக்குற துணிகளை எடுத்து காயப்போடுங்க, குளிச்சுட்டு சாமி விளக்கேத்துங்க...' என்று எல்லா வேலைகளையும் அவர் மீது சுமத்தினாள்.

ஆரம்பத்தில் கடுப்பாக இருந்தாலும், நாளாவட்டத்தில் இந்த புது வாழ்க்கைக்கு முற்றிலும் பழகி விட்டார் ராமதுரை.சில மாதங்கள் கழிந்தன.ஒரு நாள் காலையில் எழுந்து, சிட்- அவுட்டுக்கு வந்தால், மடிப்பு கலையாத பேப்பர், பேப்பரை கையில் எடுத்ததும் ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள் பார்வதி.

''ஏங்க டிபன் ரெடி; குளிச்சுட்டு வந்துட்டீங்கன்னா சூடா பரிமாறுவேன்... இனிமே இந்த பாத்திரம் தேய்க்கிறது, துணி துவைக்கிறது எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்; நீங்க நியூஸ் சேனல பாருங்க. சீரியல் நாடகங்க எல்லாம் ரொம்ப போர் அடிக்குது, '' என்று முற்றிலும் ஒரு புது பார்வதி உதயமானாள்.''என்னம்மா ஆச்சு உனக்கு... பழையபடி முதல் மரியாதை எனக்கு கிடைக்குது?'' என்று, கிண்டலாக சிரித்தபடி கேட்டார் ராமதுரை.நமட்டு சிரிப்பு சிரித்தபடி உள்ளே போய் விட்டாள் பார்வதி.

இரவு சாப்பிடும்போது, ''ஏங்க நம்ம... ரமேசுக்கு இந்த வேலை கிடைக்காது போல இருக்குங்க. அந்த கம்பெனி கார்லாம் ரொம்ப விலை உயர்ந்ததாம்; நம்மூர் பொருளாதாரம் அடிவாங்கினதால, விற்பனை மந்தமா இருக்காம்; அதனால, அப்பாயின்மென்ட் கேன்சலாகிருச்சு. இனிமே அவன் அப்ளிகேஷன் போட்டு, இன்டர்வியூ அட்டெண்டு செய்து, ஏதாவது கம்பெனியில வேலை கிடைச்சாத் தான் உண்டு,'' என்று கூறியவளுக்கு கண்களில் நீர் எட்டி பார்த்தது.''ஓ... அதுதான் மேட்டரா?'' என்று நக்கலாகக் கேட்டவர், உணவுக்குப்பின் ஈசி சேரில் சாய்ந்த ஓய்வெடுத்த போது, சிந்தித்து பார்த்தார்.

'நம்ம நாட்டுல பார்வதி மாதிரி அதிகம் படிக்காத பெண்கள், தங்களோட தனித்தன்மைய இழந்து, வாழ்நாள் முழுவதும் பொருளாதார ரீதியா புருஷனையும் பின், புள்ளயையும் சார்ந்திருக்க வேண்டிய அவல நிலையில தான இருக்காங்க. தங்களுடைய சின்னச் செலவுக்கு கூட கணவனையோ, மகனையோ எதிர்பார்க்க வேண்டிய பரிதாப சூழல் தானே இவங்களுக்கு இருக்கு... இவங்களுடைய ஓயாத உடல் உழைப்பு, மகனுக்கு திருமணமாகிட்டா கூட முடியுறதில்ல; அவன் மனைவிக்கும் சேர்த்து உழைக்க வேண்டிய நிலையில தான் இருக்காங்க. ரிட்டயர்மென்ட் என்பது இல்லத்தரசிகளுக்கு எட்டாக் கனவு தான். ஒரு விதத்தில், இது கொத்தடிமைத்தனம் தான்; பாவம் இந்த பெண்கள்...' என்று நினைத்தவருக்கு, தன் மனைவி மீது இரக்கம் சுரந்தது.

மறுநாள் காலை சற்று தாமதமாக எழுந்த பார்வதி, அரக்க பரக்க பல் தேய்த்து, சமையலறைக்குள் நுழைந்தபோது, ராமதுரை அவளுக்காக காபி போட்டுக்கொண்டிருந்தார். அரிசியை களைந்து, குக்கர் ஏற்றியிருந்தார்; காய்கறியை நறுக்கி தட்டில் தயாராக வைத்திருந்தார். ஆச்சரியமாக பார்த்த மனைவியை நோக்கி, ''என்ன பாரு அப்படிப் பாக்குறே... இத்தனை நாள் நீ எங்களுக்காக கஷ்டப்பட்டுட்டே... இனிமே என்னோட முறை.

இனி இதையெல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்; நீ ஓய்வெடு,'' என்று வாத்சல்யத்துடன், அவள் தோளில் தட்டிக் கொடுத்து தலையைக் கோதி விட்டார். கணவனின் எதிர்பாராத அன்பால், திக்கு முக்காடிப்போன பார்வதியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

ஆர்.ரகோத்தமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக