புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
68 Posts - 41%
heezulia
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
1 Post - 1%
prajai
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
319 Posts - 50%
heezulia
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
21 Posts - 3%
prajai
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_m10கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலையுலக இமயம் சிவாஜி கணேசன்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2009 11:50 pm

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Sivaji10

இயற் பெயர்: விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்

பிறப்பு: அக்டோபர் 1 1927 தமிழ்நாடு, சீர்காழி, இந்தியா

இறப்பு: ஜூலை 21 2001 (வயது 74) சென்னை

தாய்: ராஜாமணி அம்மாள்

தந்தை: சின்னையா மன்றாயர்

துணைவியார்: கமலா அம்மாள்

குழந்தைகள்: சாந்தி, தேன்மொழி, ராம்குமார், பிரபு.

அண்ணன்: வி.சி.தங்கவேலு

தம்பி: வி.சி.சண்முகம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 05, 2009 11:57 pm

விழுப்புரத்தில் ரெயில்வே ஒர்க்ஷாப்பில் பாய்லர் செய்யும் பிரிவில் பொ.சின்னையா (சிவாஜியின் தந்தை) பணிபுரிந்து வந்தார்.

தாயின் மணிவயிற்றில் தமி ழகத்தின் ஒப்பற்ற நடிகர் கணேசன் எட்டுமாதமாக இருக்கும் போது அவரது தந்தை சின்னையா காங்கிரசில் சேர்ந்து, இந்திய விடுதலைப்போரில் குதித்தார். நெல்லிக்குப்பத்தில் அவர் மறியலில் ஈடுபட்டார். அந்நிய அரசு அவரை கைது செய்தது.

தந்தைக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட அன்றுதான்... அன்னை தமிழுக்குப் பெருமை சேர்க்க கணேசன் பிறந்தார்.

அவருடன் பிறந்தவர்கள் எட்டுபேர். கணேசன் நான்காவது மகனாக பிறந்தார்.

நடிப்பே படிப்பானது

பள்ளிக்கு கல்வி கற்க அனுப்ப பெற்றோர் எவ்வளவோ முயன்றனர். படிப்பில் அவருக்கு நாட்டம் இல்லை. படிப்பிற்கு பதிலாக நாடகம், பஜனை கோஷ்டியைக் கண்டு ரசிப்பதென்றால் அதிக ஆசை அவருக்கு. பஜனைகளில் கலந்து கொண்டு இனிமையாக பாடுவது மட்டுமல்ல, கட்டபொம் மன் நாடகம் எங்கே நடந்தாலும் சென்று பார்த்தார். நடிப்பையே படிப்பாகக்கொண்டு மனம் மகிழ்ந்தார்.

நாடக வாழ்க்கை

1935 ஏழாவது வயதில் நாடக அரங்கில் நடிக்கத் தொடங்கினார். 17 ஆண்டுகள் நாடகத் தாய் சிவாஜிகணே சனை சீராட்டினாள். பட்டை தீட்டி கோகினு}ர் வைரமாக கொடுத்தாள். முதன் முதலில் ராமாயணம் நாடகத்தில் சீதாவாக நடித்தார். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடககம்பெனி, எம்.ஆர்.ராதா கம்பெனி, என்.எஸ்.கே. சபா, கே.ஆர்.ராம சாமி நாடககம்பெனி, சக்தி நாடக சபா ஆகியவைகளில் தனது நடிப்புத் திறமையால் பிரகாசித்தார்.

1945 தந்தை பெரியார் முன் னிலையில் பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ;யம் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடித்தார். அவருடைய சிறப்பான நடிப்பைக்கண்டு பாராட்டி, வி.சி. கணேசன் இன்றுமுதல் சிவாஜி கணேசன் ஆகிறார் என்று தந்தை பெரியார் கூறினார்.

1951 ஏவி.எம். படப்பிடிப்பு நிலையத்தில் காலடி எடுத்து வைத்தார்.

தயாரிப்பாளர் பெருமாள், இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு, ஒளிப்பதிவாளர் மாருதி ராவ், ஒலிப்பதிவாளர் ஜிவா, புகைப்பட நிபுணர் நாகராஜ ராவ் ஆகிய குறிப்பிட்ட சிலர் மட்டுமே இருந்தனர். (டெஸ்ட்) சோதனை ஒப்பனை போடப் பட்டது. என் தங்கை நாடகத்தில் குடிகாரனாக நடித்த காட்சியை மாருதிராவ் பட மாக்கினார். படத்தை போட்டுப் பார்த்தனர். அனைவருக்கும் நிறைவாக இருந்தது. முதன் முதலாக சிவாஜிகணேசன் பராசக்தி படத்தில் நடித்த காட்சி... பைத்தியக்காரனைப் போல் சுமைதாங்கி அருகில் சக்சஸ் என்று செல்வது தான். திரையுலகில் அந்த வெற்றி பின்னாளில் அவருக்கு நிலைத்து விட்டது. அவரால் திரையுலகம் ஒளி வீசுகிறது.

1952„ கமலா அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.

1952-1997„ கடந்த 45 ஆண்டுகளில் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் 301.

காவல் துறையினருக்காக உங்கள் நண்பன், தேசிய பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட செய்திப்படமான தாய்நாடு, சிங்க நாதம் கேட்குது ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ளவை விவரம்:

தமிழில் - 270
தெலுங்கில் -8
மலையாளத்தில் -1
இந்தி-2


கவுரவ வேடத்தில் 19 படங்களில் ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள படங்களில் பெரும்பாலானவை தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, வங்காள மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

* தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரில் கட்டினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2009 12:00 am

சிலை வடித்து நிலையான புகழ் கொண்டார்

* வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு கயத்தாறு எனும் அவன் மாண்ட இடத்தில் சிலை அமைத்தார்.

* பம்பாயில் வீர சிவாஜிக்கு சிலை அமைப்பதற்கான தொகையை வழங்கினார்.

* உலகத் தமிழ்மாநாட்டின் போது வள்ளுவருக்கு சிலையமைத்து வழங்கினார்.


நிதியாய் வாரி வழங்கியவை (அறிந்தவை)

* தேசப் பாதுகாப்பு நிதிக்காக தமிகத்தின் சார்பில் ரூ.5 லட்சம் வசூலித்து வழங்கினார்.

* பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் கமலா அம்மையார் போட்டிருந்த தங்கநகைகள், தனது தங்க பேனாவையும் கொடுத்தார். ரூ.17 லட்சம் மீண்டும் வசூலித்துக்கொடுத்தார்.

* மத்திய உணவு திட்டத்திற்காக நேருவிடம் ரூ.1 லட்சம் வழங்கினார்.

* நேரு நினைவு நிதிக்காக நாடகத்தின் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார்.

* சீனப் படையெடுப் பின்போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ரூ.25 ஆயிரம் வழங்கினார். தனது இந்திய தயாரிப்பான ராக்கி படத்தின் ஒருநாள் வசூலை கொடுத்தார்.

* ரூ.32 லட்சத்தை வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் மூலம் வசூல் செய்து, பல கல்விக்கூடங்களுக்கு உதவினார்.

* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது குடியரசுத்தலைவர் ஜாகிர்உசேனிடம் ரூ.50 ஆயிரம் அளித்தார்.

* பெங்களூரில் நாடக அரங்கம் கட்ட, கட்டபொம்மன் நாடகத்தின்
மூலம் ரூ.2 லட்சம் நன்கொடை.

* பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ.15 லட்சம் நிதி.

* கோவையில் உலகத் தமிழ் மாநாட்டிற்காக நாடகம் நடத்தி ரூ.5 லட்சம் நிதி.

* தென்னிந்திய திரைப் பட தொழிலாளர்கள் சங்க கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகம் மூலம் ரூ.30 ஆயிரம் நிதி.

* சென்னை தீ விபத்து நிதிக்காக ரூ.11 ஆயிரம்.

* அமெரிக்க குழந்தைகளுக்கு யானையும், லட்சம் ரூபாய் நிதியும் வழங்கினார்.

* வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம்
வீடு நாடகத்தின் மூலம் ரூ.2 லட்சம் நிதி.

* ஆந்திர மக்கள் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரம்.

* நேசமணி சிலை அமைப்பு நிதியாக ரூ. 5 ஆயி ரம்

* கட்டபொம்மன் சிலை பாதுகாப்புப் பணிக்கு ரூ.10 ஆயிரம்.

* எகிப்து அதிபர் நாசருக்கு சென்னையில் வரவேற்பு வழங்கி
சிறப்பு செய்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2009 12:15 am

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Moth_rajaamani
அன்புத் தாய் ராஜாமணி அம்மாளுடன் சிவாஜி

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Withfather
தந்தை சின்னனையாவுடன் சிவாஜி, அருகில் கலைஞர்.

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Valiant_bros
சகோதரர் வி.சி.சண்முகம், தங்கவேலுவுடன் சிவாஜி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2009 12:17 am

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Withwife
மனைவி கமலாவுடன் சிவாஜி

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Daugh_shanthi
அருமை மகள் சாந்தியுடன் சிவாஜி

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Mas_prab_ramku
மகன்கள் ராம்குமார்- பிரபுவுடன் சிவாஜி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2009 12:19 am

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Withfamily
படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Withwife
மனைவி கமலாவுடன் நடிப்புலக சகாப்தம்

கலையுலக இமயம் சிவாஜி கணேசன் Family
மனைவி கமலா, மகள்கள் சாந்தி, தேன்மொழி, மகன்கள் ராம்குமார், பிரபு,
மருமகன்கள், பேரன்-பேத்திகளுடன் நடிப்பு இமயம் சிவாஜி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2009 12:27 am

பராசக்தி என்ற தனது முதல் படத்திலேயே கதாநாயகனாக தோன்றிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சாதனைகள்.
மனோகரா, ராஜாராணி, இல்லறஜோதி, திரும்பிப்பார், அன்னையின் ஆணை படங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் வசன நடிப்பு.

உத்தமபுத்திரன் படத்தில் யாருமே செய்து காட்ட இயலாத ஸ்டைல் நடிப்பு.

பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பழனி படங்களில் அப்பாவி நடிப்பு.

பார் மகளே பார், உயர்ந்த மனிதன் படங்களில் செல்வந்தராக மிடுக்கான நடிப்பு.

தெய்வப்பிறவி, மங்கையர்திலகம், பெண்ணின் பெருமை, நான் பெற்ற செல்வம் என்று மறக்க முடியாத பல குடும்பக் கதைகளில் காவியமான நடிப்பு.


அம்பிகாபதி தொடங்கி திருவிளையாடல், தவப்புதல்வன் என்று பல படங்களில் இடம்பெறும் கர்நாடக இசைப் பாடல்களுக்கேற்ப அசத்த வைக்கும் வாயசைப்பு.
நவராத்திரி, தெய்வமகன், உத்தமபுத்திரன், கட்டபொம்மன் படங்களில் இமாலயச்சாதனை.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, மணமகன் தேவை, சபாஷ்மீனா, பலேபாண்டியா கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு, ராமன் எத்தனை ராமனடி, சுமதி என் சுந்தரி, பாரத விலாஸ், மனிதரில் மாணிக்கம், அன்பே ஆருயிரே படங்களில் நகைச்சுவை நடிப்பு.

கப்பலோட்டிய தமிழன், இரத்தத்திலகம், தாயே உனக்காக, நாம் பிறந்த மண் படங்களில் தேசபக்தியூட்டும் நடிப்பு. கர்ணன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை படங்களில் பக்தி சிரத்தையான நடிப்பு.

உத்தமபுத்திரன், பெண்ணின் பெருமை, கூண்டுக்கிளி, திரும்பிபார் படங்களில் வில்லன் நடிப்பு.


சிவந்த மண்ணில் தீவிரவாதியாகவும்,

மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் பெரியார் தொண்டனாகவும்

வளர்பிறையில் ஊமையாகவும்,

பாகப்பிரிவினையில் உடல் ஊனமுற்றவராகவும்,

பாலும் பழமும் படத்தில் இடைவேளைக்கு பின் கண் தெரியாத நிலையிலும்

அதே போல் ஆலயமணியில் கால் செயல் இழந்தவராகவும்

படிக்காதமேதை, படித்தால் மட்டும் போதுமா படங்களில் படிப்பறிவு இல்லாவிடினும் பண்பாளராகவும்,

அன்னையின் ஆணையில் பழிக்குப்பழி வாங்கும் இளைஞனாகவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2009 12:28 am

பராசக்தி, விடி வெள்ளி, பாசமலர், பச்சை விளக்கு, அன்புக்கரங்கள், தங்கை, தங்கைக்காக, என் தம்பி, அண்ணன் ஒரு கோவில் படங்களில் பாசம் மிக்க அண்ணனாகவும்

பார்த்தால் பசி தீரும் படத்தில் படை வீரனாகவும்,


அதே படத்திலும் கை கொடுத்த தெய்வம் படத்திலும் ஆலயமணியிலும் உற்ற நண்பனாகவும்

முரடன் முத்து, ஞானஒளி படங்களில் முரட்டுக்குண முள்ளவராகவும்

பாலும் பழமும் படத்தில் சிறந்த டாக்டராகவும்

அருமை மனைவியை எண்ணி வாடும் அன்புக் கணவராகவும்

கவுரவம் படத்தில் சிறந்த கிரிமினல் வழக்கறிஞராகவும்

ராஜபார்ட் ரங்கதுரையில் சிறந்த நாடக நடிகராகவும்

சம்பூர்ண இராமாயணம் படத்தில் அன்புத் தம்பி பரதனாகவும்

திருவிளையாடல் படத்தில் சிவபெருமானின் அத்தனை கோலங்களிலும்

அமரதீபம், இரும்புத்திரை படங்களில் தொழிலாளர் தலைவனாகவும்

பதிபக்தி, நான் சொல்லும் ரகசியம், பாபு படங்களில் ரிக்ஷா தொழிலாளியாகவும்,

காவல்தெய்வம் படத்தில் பனை மரம் ஏறும் தொழிலாளியாகவும்

தில்லானா மோகனாம்பாள், மிருதங்க சக்ரவர்த்தி படங்களில் வித்வானாகவும்

தங்கப்பதக்கம் படத்தில் கடமை தவறாத காவல்துறை உயர் அதிகாரியாகவும் அதே படத்திலும் கல்தூண் படத்திலும் மகனை திருத்தும் தந்தையாகவும்

எங்க மாமாவில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் அன்பு மாமாவாகவும்

எங்கிருந்தோ வந்தாள் படத்தில் மனநோயாளியாகவும்

இருவர் உள்ளம், வசந்த மாளிகை, தீபம் படங்களில் பெண்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்து திருந்தியவராகவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2009 12:29 am

பாவமன்னிப்பு, அறிவாளி, எல்லாம் உனக்காக, சவாலே சமாளி போன்ற படங்களில் பொதுநலத்தொண்டராகவும்

திருடன், புதிய பார்வை, நீதி, ஞானஒளி, ராஜா போன்ற படங்களில் குற்றவாளியாகவும்

பாவமன்னிப்பு, நான் வணங்கும் தெய்வம், நவராத்திரி, தெய்வமகன் படங்களில் அறுவெறுப்பான முகத்தோற்றத்திலும்

புனர்ஜென்மம் படத்தில் குடிகாரனாகவும்

நவராத்திரி, குங்குமம், எங்கமாமா, ராஜபார்ட் ரங்கதுரை, திருவிளையாடல், திருவெருட்செல்வர், திருமால்பெருமை போன்ற படங்களில், ஒரே படத்திலே பல வேடங்களிலும்

பாசமலர், ஆண்டவன் கட்டளை, என் தம்பி, ராமன் எத்தனை ராமனடி, ஞானஒளி, எங்கள் தங்கராஜா, மகாகவி காளிதாஸ், சரஸ்வதிசபதம் போன்ற படங்களில் ஒரே வேடத்தையே இருவேறு மாறுபட்ட பாத்திரங்களாக மாற்றியும்,


இரட்டை வேடங்கள்
வியட்நாம் வீடு, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் முறையே பிராமணத் தந்தையாகவும்

இரண்டு குடும்பத்திற்கு தலைவராகவும் அவன் ஒரு சரித்திரம் படத்தில் கொடுத்து அழிந்த சீமானாகவும்

இரு நாயகிகளுக்கிடையே தவிப்பவராக இரு மலர்கள், பாவைவிளக்கு, பாலாடை, செல்வம், தேனும்பாலும், குல மகள்ராதை, புதியபறவை படங்களில் அசத்தியவரும் அவரே.

பேராசிரியராக ஆண்டவன் கட்ளையில்,

உத்தமபுத்திரன், அன்;னையின் ஆணை, எங்க ஊர் ராஜா, என்மகன், என்னைப்போல் ஒருவன், கௌரவம், மனிதனும் தெய்வமாகலாம் படங்களில் இரட்டை வேடங்களிலும்

பலேபாண்டியா, தெய்வமகன், திரிசூலம் படங்களில் மூன்று வேடங்களிலும்,

நவராத்திரி படத்தில் நவரசம் கலந்த ஒன்பது மாறுபட்ட வேடங்களில் மிகச்சிறப்பாக நடித்து உலக சாதனை படைத்தவர் நடிகர் திலகம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2009 12:30 am

ஒப்பனை இன்றி நடிப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் தி.மு.க.வை சேர்ந்த கலைஞர், அரங்கண்ணல், கோவைசெழியன், எஸ்.எம். கருப்பசாமி போன்றவர்கள் தயாரித்த படங்களில் நடித்துள்ளார்.

படம் முழுக்க ஒப்பனையே செய்யாமல் நெஞ்சிருக்கும் வரை (கறுப்பு வெள்ளை), மூன்று தெய்வங்கள் (கலர்) படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணன்-பஞ்சு தொடங்கி பீம்சிங் , பந்தூலு, ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், திருலோக்சந்தர், மாதவன், முக்தா சீனிவாசன் போன்ற பழம்பெரும் இயக்குநர்களோடு பாலசந்தர் (எதிரொலி), பாரதி ராஜா (முதல்மரியாதை), பாக்கியராஜ; (தாவணிக்கனவுகள்), துரை(துணை), பரதன் (தேவர் மகன்), கே.எஸ்.ரவிக்குமார் (படையப்பா) என்று புகழ் பெற்ற இயக்குநர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடித்த பெருமையும் சிவாஜிக்கு மட்டுமே.

நாடகங்கள் நடத்தியவர்

பழைய நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், மேஜர்சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ள சிவாஜி, அதற்கும் முன்னர் எம்.கே.ராதா, கே.ஆர்.ராமசாமி, எம்.ஜி.ஆர்.(கூண்டுக்கிளி) ஆகியோருடனும் பின்னர் ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன், சிவக்குமார், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் போன்ற நடிகர்களுடனும் பின்னர் கமல், ரஜினி, பிரபு, விஜயகாந்த், சத்யராஜ;, பாண்டியராஜன், பாண்டியன், ரகுமான், கார்த்திக், முரளி, விஜய், அர்ஜுன், அஜய் ஆகிய இன்றைய நாயகர்களுடனும் நடித்து வரலாறு படைத்துள்ளார். காட்டிலே வேட்டைக்கு சென்றுள்ள சிவாஜி காடுமலை கடந்து அய்யப்பன் கோவிலுக்கும் சென்றுள்ளார். பல படங்களை சொந்தமாக தயாரித்ததுடன் பிசியாக இருந்த காலத்திலும் தனது நாடக மன்றத்தை தொடர்ந்து நடத்தினார் சிவாஜி.

விருதுகள் பெற்றவர்

புராணகால நாடகத்தி லிருந்து தங்கப்பதக்கம் வரை நாடக நடிகராகவும் திகழ்ந்த நடிகர்திலகம் சொந்தமாக சாந்தி திரையரங்கையும் நடத்து கிறார். (திரையரங்கத்திற்கான பரிசையும்பெற்றுள்ளார்). சொந்த வாரிசான பிரபுவை கலையுலகத்திற்கு அளித்துள்ளார்.

செவாலியர் விருதையும், பத்மபூசண் விருதினையும், டாக்டர் பட்டத்தையும் பெற்ற சிவாஜி கலைஞரின் வசனத்தில் அதிகப்படங்களில் நடித்ததுடன் அவரது வசன காவியங்களுக்கு உயிரூட்டிய பெருமையும் சிவாஜிக்கே.

நடிகர் சங்கத்தலைவராக இருந்த நடிகர் திலகம் ஒரு மாநில கட்சியின் தலைவராகவும், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார்.

நாவலாசிரியர்களின் கல்கியின் கதைகளான கள்வனின் காதலன் படத்திலும், அகிலனின் பாவைவிளக்கு, வாழ்வு எங்கே, குலமகள்ராதை படங்களிலும் அண்ணாவின் ரங்கோன்ராதாவிலும், கலைஞரின் புதையல் படத்திலும், லட்சுமி (திரிபுரசுந்தரி)யின் பெண்மனம், (இருவர் உள்ளம்) படத்திலும் சிவாஜி நடித்துள்ளார்.

பதிபக்தி தொடங்கி பாதுகாப்பு வரை பீம்சிங்் இயக்கிய எல்லா படங்களிலும் சிவாஜிதான் படநாயகன். இது தவிர ஒரே நடிகையுடன் அதாவது பத்மினியோடு மட்டும் ஜோடியாக 25 படங்களுக்கு மேல் நடித்த நாயகன் என்ற தனிப்பெருமையும் சிவாஜிக்குத்தான்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக