புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
15 Posts - 75%
heezulia
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
2 Posts - 10%
kavithasankar
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
1 Post - 5%
Barushree
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
2 Posts - 2%
heezulia
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
1 Post - 1%
Barushree
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வலுத்தது நிலைக்கும் ! Poll_c10வலுத்தது நிலைக்கும் ! Poll_m10வலுத்தது நிலைக்கும் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலுத்தது நிலைக்கும் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Tue Aug 12, 2014 10:51 pm

450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி என்று இன்று அழைக்கப்படுகிற கிரகம் 7927 மைல் விட்டமுள்ள மிதக்கும் பாறை .இந்தப்பாறையில் கடல்கள் உருவாக 100 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல் உயிரினம் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது . பூமியில் எவ்வாறு உயிரினம் தோன்றியது என்பது குறித்த ஆராய்ச்சி இன்று வரை தொடர்கிறது .சமீபத்தில் கூட சில ஆராய்ச்சியாளர்கள் ,செவ்வாய் கிரகத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு பாறை பூமியின் மீது மோதியதால் தான் உயிரினம் தோன்றியது என்று தெரிவித்துள்ளனர். இப்படித்தான் உயிரினம் தோன்றியது இதுவரை அழுத்தமாக யாராலும் சொல்ல முடியவில்லை .உண்மையான காரணம் இயற்கை மட்டுமே அறியும் .

பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் முதலில் தோன்றின .பரிணாம வளர்ச்சியின் காரணமாக அடுத்ததாக தாவரங்கள் தோன்றின.பரிணாம வளர்ச்சி என்பது உயிரினங்களின் மரபணுக்களில் தேவை, சூழல், தன்னெழுச்சியான  நிகழ்வுகள் சார்ந்து தொடர்ச்சியாக நிகழும் மாற்றங்கள் காரணமாக உயிரினங்களின் தகவமைப்புகளில் ஏற்படும் மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லலாம் .இந்த மாற்றம் நிகழ கோடிக்கணக்கான வருடங்கள் தேவைப்படுகின்றன .உயிரினங்களின் உருவாக்கத்தில் தாவரங்களின் தோற்றம் முக்கியமான நிகழ்வு . பூமியின் ஆதார சக்தியான சூரியஒளியைப் பயன்படுத்தி காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு  மற்றும் நிலத்தில் உள்ள தண்ணீர் உதவியுடன் ஒளிச்சேர்க்கை நடைபெற்று தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தாயாரித்துக்கொள்வதுடன் ஆக்ஸிஜன் வாயுவையும் தாவரங்கள் வெளியிடுகின்றன .

அடுத்ததாக நீர் வாழ்வன ,நில வாழ்வன , நீர் நில வாழ்வன , பறப்பன , ஊர்வன ,நடப்பன என்று தாவரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனை உயிர்மூச்சாக கொண்டு உயிர்வாழும் உயிரினங்கள் தோன்றின . முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினங்களிருந்து பரிணாம வளர்ச்சியின் காரணமாக குட்டி போட்டு பால் கொடுக்கும் உயிரினங்களான பாலூட்டிகள் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகின.அந்தப் பாலூட்டி இனங்களில் ஒன்று தான் குரங்கிலிருந்து உருவான மனித இனம் . மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது . மனித இனத்தில் முதலில் தோன்றியது பெண் தான் . குரங்கிலிருந்து முழு பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறியது 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான்.

அடர்ந்த ஆப்பிரிக்கக் காடுகளில் பல வகை குரங்குகள் வாழ்ந்து வந்தன . வெயிலும் வெப்பமும் மிகுந்த அந்தச் சூழலில் மற்ற குரங்கினங்களால் விரட்டப்பட்ட குரங்கினம் தான் பின்னாளில் மனிதனாக மாறியது . மற்ற விலங்குகளுக்கு இருப்பது போன்ற எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லாத அந்த குரங்கினத்தால் அந்தச்சூழலில் வாழமுடியவில்லை . சுற்றிலும் இருந்த  சிங்கம்,சிறுத்தை,பாம்பு ,கழுகு போன்றவற்றிடமிருந்து தப்பிப்பதே பெரும் போராட்டமாக இருந்தது . எண்ணிக்கையில் குறைவாக இருந்த அந்த மனிதனாக மாறப் போகிற குரங்கினம் அழிந்து போகும் ஆபத்துக்கு உள்ளாகி  "அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் (Endangered Species) " பட்டியலில் சேர்ந்தது .இன்று அதே குரங்கினம் பல உயிரினங்களை Endangered Species ஆக மாற்றிக் கொண்டிருப்பது தான் இயற்கையின் விளையாட்டு .

இயற்கைக்கு இரக்கம் என்பதே துளியும் கிடையாது . " திறமையிருந்தால் பிழைத்துக்கொள், இல்லையேல் அழிந்து போ " என்ற Survival of the Fittest  ( வலுத்தது நிலைக்கும் ) மட்டுமே இயற்கையின் ஒரே விதி . இந்த விதிக்கு உட்பட்டு மிகத் திறமையாக 4 லட்சம் ஆண்டுகளாக இயற்கையின் விளையாட்டில் பங்குபெற்றுள்ள இனம் தான் மனித இனம் . இந்த விளையாட்டில் மனிதன் என்று தோற்கிறானோ அன்றே அழிந்துவிடுவான் . ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து உயிர் பிழைப்பதற்காக வெளியேறிய குரங்கினம் மரக்கிளையில் தொங்கியபடி நடந்த பழக்கத்தில்  இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது . பெரிய குரங்கினங்களைச் சார்ந்து வாழ்ந்த பழக்கத்தில் விட்டுக்கொடுத்து அனுசரித்து கூட்டமாக வாழப் பழகிக் கொண்டன .விதவிதமான பழங்களைத் தேடித் தின்ற பழக்கத்தில் (ஓ..அந்தப் பழக்கத்துல தான் இன்றும் மனிதன் விதவிதமான உணவுகளைத் தேடித்தேடி தின்கிறானோ ?) மாறுபட்ட நிறம் ,மணம், சுவை உணரத் தெரியும் . தங்களை பூமியில் நிலைநிறுத்திக்கொள்ள இந்தத் திறமைகள் மட்டும் போதவில்லை . ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை உண்டானது .

எதிர்பாரதவிதமாக அந்த அதிசயமும் நிகழ்ந்தது .இந்தப் பூவுலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன .இவற்றின் ஒரே பிறவிப்பயன் இனவிருத்தி தான். மற்ற மிருகங்கள் வருடத்தில் சில வாரங்கள் மட்டும்,பருவகாலத்தில் இனம் சேர்ந்து தங்கள் இனத்தைப் பெருக்கும் .இதற்கு நேர் மாறாக காலம்,நேரம் ,பருவம்,உருவம் கருதாமல் வருடத்தின் முன்னூற்றி அறுபத்தைந்தே கால் நாட்களும் தாராளமாக உறவு கொண்டு தங்களது இனத்தை பன்மடங்காக பெருக்கி காட்டியது ( இன்றும் பெருக்கிக் கொண்டே தான் இருக்கிறோம் ) மனித இனம் .

இயற்கையில் ஒரு வட்டம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது . மற்ற பெரிய குரங்குகளாலும் விலங்குகளாலும்  அடித்துவிரட்டப்பட்ட மனித இனம் இன்று அனைத்து விலங்குகளையும் அடித்து விரட்டுகிறது ,ஏன் சக மனிதனையும் விட்டு வைக்கவில்லை . உயிர் பிழைத்திருக்க தான் வாழ்ந்த சூழலைவிட்டு இடம் பெயர வேண்டிய கட்டாயத்தை எல்லா விலங்குகளுக்கும் ஏற்படுத்திய பெருமை பெற்றது ,மனித இனம் .மற்ற விலங்குகள் மனிதனுக்குச் செய்ததை இன்று மனிதன் மற்ற விலங்குகளுக்குச் செய்கிறான் .

மனிதனுக்கு முன்பு வாழ்ந்த எந்த உயிரினமும் பூமியை இந்த அளவிற்கு அக்குவேராக ஆணிவேராக அலசி ஆராயவில்லை . பிறந்தோமா ,உணவைத் தேடித் தின்றோமா ,இனவிருத்தி பண்ணினோமா ,செத்தோமா என்று இருந்தன . பூமியில் என்னென்ன எங்கெல்லாம் இருக்கிறது , என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன ,தனது இனம் எங்கெல்லாம் இருக்கிறது என்ற எந்தவித ஆராய்ச்சியிலும் இறங்கவில்லை .பூமியைத் தாண்டியும் யோசித்து ஆகாயத்தையும் அடைய நினைக்கவில்லை .காரணம், மனிதனைப் போல உயிர் பிழைத்திருப்பதற்கு மிக நீண்ட தொலைவு பயத்துடன் பயணிக்க வேண்டிய தேவை அவற்றிற்கில்லை .அவை இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைத்தன ,அதானால் பெரிதாக எதையும் யோசிக்கவில்லை .மனிதனின் நிலை அப்படி அல்ல ,ஒவ்வொரு விசயத்திற்கும் போராட வேண்டிய கட்டாயம் இருந்தது ,இன்றும் இருக்கிறது .

மனிதன் இன்றும் ஒரு நாடோடி தான் ,பணம் ,பொருளுக்காகவும் ,உயிர் பிழைத்திருப்பதற்காவும் , ஊர் ஊராக ,நாடு நாடாக சுற்றி அழைகிறான் .மற்ற உயிரினங்களுக்கும் ,வளங்களுக்கும் மனிதன் எதிரி என்ற நிலை போய் மனிதனுக்கு மனிதனே எதிரி என்ற நிலை உண்டாகிவிட்டது போல் தோன்றினாலும் , இயற்கையைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி , நல்லது கெட்டது , சரி தவறு , கதாநாயகன் வில்லன் என்ற எந்தப்பாகுபாடும் இல்லை . மனிதனைப் போல அறம் சார்ந்த வாழ்வை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே ஒவ்வொரு விசயத்திலும் அறத்தை மீறும் வழக்கமும் இயற்கையில் இல்லை . " வலுத்தது நிலைக்கும் " - இது ஒன்று மட்டும் தான் இயற்கையின் ஒரே அறம் . இயற்கை ,அன்று ஆப்பிரிக்கக் காடுகளில் மனிதனுக்காகவும் கவலைப்படவில்லை ,இன்று மனிதனால் பாதிக்கப்படும் மற்ற உயிரினங்களுக்காகவும் கவலைப்படவில்லை . இயற்கையின் முன் எல்லா உயிரினங்களும் சமம் தான் .

ஒரு சுழற்சி எங்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . பிரபஞ்சத்தில் இருக்கு இல்லை ,இல்லை இருக்கு தான் தொடர்ந்து நிகழ்கிறது . பால்வீதியில் பெரிய பாறைகளும் , நட்சத்திரங்களும் எதிலாவது மோதி வெடித்துச் சிதறித் தூள் தூளாக மாறுகின்றன . நாளடைவில் சிதறிய துகள்கள் மீண்டும் இணைந்து நட்சத்திரமாகவோ பாறையாகவோ மீண்டும் மாறுகின்றன . இது பால் வீதியில் தொடர்ந்து நிகழ்கிறது ,இது பிரபஞ்சத்திற்கும் பொருந்தும் .அறிவியலின்படி சூரியனிலிருந்து தோன்றியது தான் பூமி . பூமியின் ஆதார சக்தியும் சூரியன் தான் . சூரியஒளி பூமியில் விழாவிட்டால் பூமியின் இயக்கமே நின்றுவிடும் சூழல் உருவாகிவிடும் . பூமியில் ஒளிச்சேர்க்கை நடைபெறாவிட்டால் தாவரங்கள் அழிந்துவிடும் . தாவரங்கள் அழிந்துவிட்டால் ஆக்ஸிஜன் கிடைக்காது . ஆக்ஸிஜன் இல்லையென்றால் எல்லாம் காலி . சூரியனின் அழிவு தான் பூமியின் அழிவும் , சூரியன் இருக்கும் வரை பூமியும் இருக்கும் . சூரியனிலிருந்து உருவான பூமி ஒரு நாள் சூரியனை அடையும் . அதுவரை மனிதன் இருப்பானா எனபது சந்தேகமே !

பூமியில் வாழும் மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை . எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்  இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே  எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கமும் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதனின் இந்த நம்பிக்கையின்மைக்கும் இயற்கையே காரணம் . பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்தன ,வாழ்கின்றன ,வாழும் (சூரியன் இருக்கும் வரை ).உயிரினங்கள் அழிவதும் ,புது உயிரினங்கள் தோன்றுவதும் பூமியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது .இது இயற்கையின் ஒரு அங்கம் .மனிதனின் செயல்பாடுகள் காரணமாக பூமியெங்கும் லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன .இயற்கை , நம்மை வைத்தே இவ்வளவு உயிரினங்களை அழிக்கிறதே, நம்மை அழிக்க என்னவெல்லாம் செய்யும் என்ற பயம் தான் ,இயற்கையின் மீதான நம்பிக்கையின்மைக்குக் காரணம் . அதானால் தான் தொடர்ந்து இயற்கைக்கு எதிராக செயல்பட்டு, இயற்கையின் செயல்கள் அனைத்தையும் செயற்கையாக செய்து பார்த்து இயற்கையை வெல்ல நினைகிறான் . மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்பதை உணர மற(று)க்கிறான் . பூமியில் மனித இனமும் அழிவது உறுதி . எப்போது என்பது தான் தெரியவில்லை .

பரிணாம வளர்ச்சி இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பது உண்மையென்றால் மனிதனிலிருந்து இன்னொரு உயிரினம் கண்டிப்பாக தோன்றியே தீரும் .குரங்கினத்தை குரங்கே ஒடுக்கியதால் மனிதன் தோன்றினான் .மனிதயினத்தை மனிதனே ஒடுக்குவதன் மூலம் யார் உருவாகப் போகிறார் என்று தெரியவில்லை . ஆறறிவுடன் ஒன்று சேர்ந்து ஏழறிவுள்ள உயிரினம் உருவாகலாம் .எல்லாம் காலத்தின் கையில் . வலுத்தது நிலைக்கும் !

இந்தக் கட்டுரை " குறி " சிற்றிதழில் வெளிவந்துள்ளது .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 12, 2014 11:06 pm

நல்ல பகிர்வு

ஏழாம் அறிவு - சூர்யா உருவாகி விட்டார் நம்ம ஊரில் எப்பவோ புன்னகைபுன்னகைபுன்னகை




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 12, 2014 11:34 pm

வலுத்தது நிலைக்கும் ! 103459460 
-
தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும்...!!
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக