புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எபோலா: முதல்வரின் நேரடி கவனத்திற்கு...!!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 9:16 pm


உலகமே பீதியில் ஆழ்ந்திருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகொண்டிருக்கிறது எபோலா. மக்களும் சரி, அந்த நாடுகளின் அரசுகளும் சரி, என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக் கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில்தானே இந்த அபாயம் என்று உலக நாடுகள் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கினி நாட்டின் தென்கிழக்கு வனப் பகுதியில் யாரும் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் 2013 டிசம்பரில் இந்தக் காய்ச்சல் முதலில் தலைதூக்கியது. அங்கிருந்து லைபீரியா, நைஜீரியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. ஆகஸ்ட் 6-ம் தேதி வரையில் 1,779 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கிறது. அவர்களில் 961 பேர் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டனர். இதற்கு முன்னர் எபோலா தாக்கியபோது இந்த அளவுக்கு அதிகம் பேர் உயிரிழக்கவில்லை. எனவே, வைரஸ் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பது தெரிகிறது. எபோலா காய்ச்சல் ஏற்பட்டால் மரணம் என்பது 70-90 சதவீதம் உறுதி!

இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டு-தசை வலி, திடீர் குளிர், சோர்வு ஆகியவை ஏற்படும். நோய் தீவிரம் அடைந்தால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, கண் சிவத்தல், தோல் கொப்புளங்கள், மார்பில் வலி, கடுமையான இருமல், வயிற்றில் வலி, திடீர் எடையிழப்பு போன்றவையும், கண், மூக்கு, ஆசனவாய் போன்ற வற்றில் ரத்தக் கசிவும் ஏற்படும்.

இந்த வைரஸ் உடலில் புகுந்தால், விளைவுகள் வெளியில் தெரிய 2 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை ஆகும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் காப்பாற்றுவதற்குச் சாத்தியங்கள் உண்டு. காலம் கடந்துவிட்டால் ஆபத்து. இந்த வைரஸ் காற்றுமூலம் பரவுவதாக இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. அதே சமயம், காய்ச்சல் வந்தவரின் சளி, தும்மல், உமிழ்நீர், சிறுநீர் போன்ற உடல் திரவங்கள் மூலம் எளிதில் பரவிவிடும் என்பது உறுதியாகிவிட்டது. இந்தக் காய்ச்சல் வந்தவருக்கு உதவுவோர், சிகிச்சை அளிப்போர்கூட எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அவர்களுக்கும் காய்ச்சல் பரவிவிடும்.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர், அது தெரியாமல் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவர் மூலம் இந்தக் காய்ச்சல் அங்கே பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மருத்துவமனைகளுக்கு வரும் ஒரு நோயாளியிடமிருந்து இன்னொரு நோயாளிக்குத் தொற்றும் வாய்ப்பு இருக்கிறது. கையுறைகள், முகக் கவசம், சுத்திகரிப்புத் திரவம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், சாதாரண உடையில் சிகிச்சை தரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்களுக்கு இது தொற்றும் வாய்ப்பு அதிகம். நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துவருகிறவர், வீட்டில் வைத்துப் பராமரிக்கிறவர்களுக்கும் தொற்ற வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம்.

இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, அங்கீகரிக்கப்பட்ட ஊசி மருந்தோ, மாத்திரைகளோ இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, சிகிச்சை தருவது மிகவும் சிக்கலாகிறது. அமெரிக்காவில், பிராணிகளுக்கு மட்டுமே கொடுத்துப் பரிசோதிக்கப்பட்ட தடுப்பு மருந்தை இரண்டு அமெரிக்க நோயாளிகளுக்குப் பரிசோதனை முறையில் கொடுத்துப் பார்த்ததில், அவர்களுடைய உடல் நிலையில் சற்றே முன்னேற்றம் தெரிந்தது. அப்படியும் அவர்கள் உட்கொண்ட மருந்தை மற்றவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், அந்த மருந்து மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போதைக்கு இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அறிகுறி களுடன் உள்ளவரை பிற பயணிகள் செல்லும் விமானங்களில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மருத்துவமனைகளிலும் தனி வார்டுகளில் இவர்களை வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

கினி, லைபீரியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளில் சுமார் 5,000 இந்தியர்களும்... நைஜீரியாவில் சுமார் 40,000 இந்தியர்களும் வசிக்கின்றனர். அவர்கள் இந்தியா வந்துபோக வாய்ப்பிருக்கிறது. இவர் களைக் கண்காணிக்கவும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது, ஆறுதலைத் தருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, நமது கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, சிக்குன்குனியா, டெங்கு ஆகிய இரண்டையுமே நமது அரசு அணுகிய விதம் குறித்து நாம் திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது. நோய்த் தடுப்புக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு, செய்தி பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையே நமது சுகாதாரத் துறை அதிகம் மேற்கொண்டது. சிக்குன்குனியா போலவோ, டெங்கு போலவோ எபோலாவிடம் மாயவிளையாட்டு ஆட முடியாது. விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டாக வேண்டும். ஆனால், சுகாதாரத் துறையை மிரட்டுவதன் மூலம் நாம் எபோலாவை எதிர்கொள்ள முடியாது. தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் நம்மை விடவும் முன்னணியில் இருக்கும் கர்நாடகத்தை நாம் கவனிக்க வேண்டும். எபோலா உள்ளிட்ட வைரஸ்களைக் கண்டறியக்கூடிய அதிநவீன ஆய்வுக்கூடங்களை தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் நிறுவ வேண்டும். மத்திய அரசின் முழு உதவியையும் பெற்று, தயார் நிலையில் இருந்தால் மட்டுமே எபோலாவை எதிர்கொள்ள முடியும். இல்லையெனில், வேதனையான விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரலாம்.

கினி நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய தேனி மாவட்ட இளைஞர் ஒருவர், எபோலா சந்தேகத்தில் பரிசோதனைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இதுபோல் எத்தனை பேர் நாடு திரும்புவார்கள் என்று தெரியாது. இனியும் தாமதிக்க முடியாது.

முதல்வர் அவர்களே, உடனடியாக உயர்நிலைக் குழுவை அமைத்து, சுகாதாரத் துறைக்கு வழிகாட்டுங்கள்! அத்துடன் மக்களிடமும் விழிப்புணர்வை ஊட்டி, நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!

[thanks]தி இந்து[/thanks]

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 13, 2014 4:50 pm

இந்திய போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இது பரவினால் கட்டுபடுத்துவது இயலாத காரியம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 13, 2014 4:55 pm

பாலாஜி wrote:இந்திய போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இது பரவினால் கட்டுபடுத்துவது இயலாத காரியம்


மக்கள் தொகையில் பாதி காலியாகிவிடும் தல!  சோகம்



எபோலா: முதல்வரின் நேரடி கவனத்திற்கு...!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 13, 2014 5:36 pm

சிவா wrote:
பாலாஜி wrote:இந்திய போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இது பரவினால் கட்டுபடுத்துவது இயலாத காரியம்


மக்கள் தொகையில் பாதி காலியாகிவிடும் தல!  சோகம்

அதுமட்டும் அல்ல தல , தமிழ் நாட்டில் மக்கள் தொகை பாதி காலியாகி விட்டால் , டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் எனவே தமிழக அரசு விழிப்புடன் இருக்கும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 13, 2014 5:46 pm

எபோலாவை அடக்கிய அம்மா வாழ்கன்னு
ரத்தத்தின் ரத்தங்கள் ப்ளெக்ஸ் ரெடி பண்ணுறாங்களாம்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 13, 2014 5:55 pm

யினியவன் wrote:எபோலாவை அடக்கிய அம்மா வாழ்கன்னு
ரத்தத்தின் ரத்தங்கள் ப்ளெக்ஸ் ரெடி பண்ணுறாங்களாம்

ஆமாம், அம்மா மருந்தகத்தில் அம்மா மாத்திரை வாங்கி அம்மா வாழ்க என்று சாப்பிட்டால் எபோலாவையே எமலோகம் அனுப்பலாம் என்று நாஸ்டர்டாமஸ் ஒரு குறிப்பில் எழுதியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது!



எபோலா: முதல்வரின் நேரடி கவனத்திற்கு...!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 13, 2014 5:55 pm

பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:இந்திய போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இது பரவினால் கட்டுபடுத்துவது இயலாத காரியம்


மக்கள் தொகையில் பாதி காலியாகிவிடும் தல!  சோகம்

 அதுமட்டும் அல்ல தல , தமிழ் நாட்டில்  மக்கள் தொகை பாதி காலியாகி விட்டால் , டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் எனவே  தமிழக அரசு விழிப்புடன்   இருக்கும்

நீங்க எப்பவுமே கிங் தான் தல! கரெக்டா பாயிண்ட பிடிச்சீங்க பார்த்தீங்களா!!!



எபோலா: முதல்வரின் நேரடி கவனத்திற்கு...!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 13, 2014 6:08 pm

பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:இந்திய போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இது பரவினால் கட்டுபடுத்துவது இயலாத காரியம்


மக்கள் தொகையில் பாதி காலியாகிவிடும் தல!  சோகம்

அதுமட்டும் அல்ல தல , தமிழ் நாட்டில் மக்கள் தொகை பாதி காலியாகி விட்டால் , டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் எனவே தமிழக அரசு விழிப்புடன் இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1079262

உங்க அறிவைக் கண்டு வியக்கிறேன்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 13, 2014 7:45 pm

சிவா wrote:
யினியவன் wrote:எபோலாவை அடக்கிய அம்மா வாழ்கன்னு
ரத்தத்தின் ரத்தங்கள் ப்ளெக்ஸ் ரெடி பண்ணுறாங்களாம்

ஆமாம், அம்மா மருந்தகத்தில் அம்மா மாத்திரை வாங்கி அம்மா வாழ்க என்று சாப்பிட்டால் எபோலாவையே எமலோகம் அனுப்பலாம் என்று நாஸ்டர்டாமஸ் ஒரு குறிப்பில் எழுதியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1079267 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக