புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குப் பெயரா “பெண்களுக்குப் பாதுகாப்பு”? : கலைஞர் அறிக்கை Poll_c10இதற்குப் பெயரா “பெண்களுக்குப் பாதுகாப்பு”? : கலைஞர் அறிக்கை Poll_m10இதற்குப் பெயரா “பெண்களுக்குப் பாதுகாப்பு”? : கலைஞர் அறிக்கை Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குப் பெயரா “பெண்களுக்குப் பாதுகாப்பு”? : கலைஞர் அறிக்கை Poll_c10இதற்குப் பெயரா “பெண்களுக்குப் பாதுகாப்பு”? : கலைஞர் அறிக்கை Poll_m10இதற்குப் பெயரா “பெண்களுக்குப் பாதுகாப்பு”? : கலைஞர் அறிக்கை Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குப் பெயரா “பெண்களுக்குப் பாதுகாப்பு”? : கலைஞர் அறிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 11, 2014 4:20 am

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

அ.தி.மு.க. ஆட்சி வந்தாலும் வந்தது; சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை, வாரம் ஒரு கற்பழிப்பு என்று செய்திகள் நம்மைச் செந்தேளாய்க் கொட்டு கின்றன. அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அ.தி.மு.க. அரசினரோ, தங்களுக்கு அதிலே எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்பதைப் போலவும், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைப் போலவும் ஒரு நாடகம் நடத்தி, தங்களையும் ஏமாற்றி தமிழக மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் காவல் துறை மீதான விவாதம் நடைபெறும். அது இந்த ஆண்டு ஒரு நாளாகச் சுருக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இந்த ஆட்சியில் ஜனநாயகம் எந்த அளவுக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

காவல் துறை மானியத்தின் மீதான விவாதத் திற்குப் பதில் கூறிய முதல் அமைச்சர் ஜெயலலிதா, “இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்ற மாநிலம் தமிழகம்தான்” என்று கூறியதாக அனைத்து நாளேடுகளும் வெளியிட்டிருக்கின்றன. ஒருவேளை; ஆண்கள் பாதுகாப்பாக தமிழகத்திலே இல்லை என்பதைக் கூற முடியாமல், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. பெண்கள் எந்த அளவுக்கு தமிழகத்திலே பாதுகாப்பாக இருக் கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்களை முன் வைக்கத்தான் இந்த மடல்!

அ.தி.மு.க. ஆட்சியில், பொள்ளாச்சியில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். நன்னிலம் அருகே விமலா -கோயம்பேட்டில் இளம் பெண் மலர் என நீளும் பட்டியலில் - கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வெற்றிலைக் கொடிக்காலுக்குள் ப்ளஸ் 2 படித்து முடித்த தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவி வினிதா கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் தமிழகத்திலே கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டவர் களின் ஒரு சிறு பட்டியல் :-

* வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து ஆண்டியப்பன் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி காயத்ரி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை. 29-12-2012

* சிவகிரியில் நந்தினி என்ற பெண் கற்பழித் துக் கொலை. 22-1-2013

* சைதாப்பேட்டையில் விஜயா என்ற பெண்ணின் சடலம். 11-1-2013 தினத்தந்தி

* தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 13 வயது சிறுமி, பள்ளி மாணவி புனிதா கற்பழிக்கப்பட்டுக் கொலை. 22-12-2012 தினமணி

* நாகை மாவட்டத்தில் 11 வயது தலித் இனத்தைச் சேர்ந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து கற்பழித்தனர். 23-12-2012 தினமணி

* விருதாசலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் சுகந்தி என்கிற இளம் பெண் கற்பழிக் கப்பட்டார். 27-12-2012 தினமணி

* சிதம்பரம் அருகில் மஞ்சக்குழி கிராமம், சந்தியா என்கிற இளம்பெண், கற்பழிக் கப்பட்டு 3வது மாடியிலிருந்து வீதியிலே எறியப்பட்டாள். 27-12-2012 தீக்கதிர்

* தர்மபுரியில் அரூர் தாலுக்காவில் தாதரா வலசை கிராமத்தில் மேனகா என்கிற இளம்பெண் திருமணமானவர் கற்பழித்துப் படுகொலை. 30-12-2012 தினமணி

* தூத்துக்குடி மாநகரில், மாதாநகர் 2வது தெருவில் மாரியம்மாள் என்கிற இளம்பெண் கணவனைப் பிரிந்து 3 குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். விடியற் காலையில் வீடு புகுந்து கற்பழிக்கப்பட்டாள். 29-12-2012 தினமணி

* விழுப்புரம் வானூர் ருக்மணிபுரம் பள்ளி மாணவி கல்கி என்பவள் கற்பழிக்கப்பட்டு சவுக்குத் தோப்பில் பிணமாகத் தொங்க விடப்பட்டாள். 5-1-2013 தினத்தந்தி

* உடுமலையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்தாள்.

* நாமக்கல்லில் 18 வயது இளம்பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.6-1-2013 தினத்தந்தி

* வேலூர் மாவட்டம், ஆர்க்காடு அருகில் திமிரி என்கிற ஊரில் அபிநயா என்கிற 17 வயது பெண், அச்சுறுத்தல், மிரட்டல் காரண மாக, கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தீக்குளித்து தற்கொலை. 6-1-2013 தினத்தந்தி

* அம்பத்தூரில் முகப்பேர் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவியை வீடு புகுந்து கற்பழித்திட முயற்சி. 6-1-2013 தினத்தந்தி

* சென்னை, பொழிச்சலூரில் பிரேமலதா கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு காட்டில் பிணமாக வீசப்பட்டுக் கிடந்தாள். 6-1-2013 தினத்தந்தி

* திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் திருமணமான மீனா என்கிற இளம்பெண் தன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று கற்பழிப்பு.

* சென்னை கோயம்பேட்டில் வீட்டு வேலை செய்து வந்த பெண் கண்ணம்மாவை வீட்டு உரிமையாளர் கற்பழித்தார். 7-1-2013 தினத்தந்தி

* ஒரத்தநாடு, புதூரில் 6ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமி, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது கற்பழிக்கப்பட்டார். 4-1-2013 தினத்தந்தி

* ராணிப்பேட்டை அருகில் சுடுகாட்டில் சிறுமி கொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். 13-1-2013 தினத்தந்தி

* சென்னை ஆதம்பாக்கம் செல்வி ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் பெண் கற்பழிப்பு 4-1-2013 தினத்தந்தி

* 6-2-2013 அன்று மைலாப்பூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் - தப்பியோடிய டிரைவரின் தாய் தற்கொலை.

* 17-2-2013 அன்று தர்மபுரியில் 16 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் - இப்படி பட்டியல் முடிவின்றி நீண்டு கொண்டே போகிறது.

இதோ “இந்து” 25-6-2014 ஆங்கில நாளேடு இந்தப் பாலியல் கொடுமை சம்பந்தமாக ஒரு நீண்ட கட்டுரையே வெளியிட்டுள்ளது. அதற்குத் தலைப்பே, “Crime against Women, especially against Dalits has been quite frequent in the Central Districts in the past few years; while the Police are tardy in registering complaints, the indifference of authorities to the plight of the marginalised sections continues - HURT and MUTE” அதாவது “பெண்களுக்கு எதிரான குற்றம் - குறிப்பாக தலித்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் அடிக்கடி நிகழ்கின்றன - ஆனால் காவல் துறையினர் அந்தக் குற்றங்களைப் பதிவு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர் - விளிம்பு நிலை மக்களின் துயரங்களைப் பற்றி அதிகாரவர்க்கத்தினர் சிறிதும் கவலை கொள்ளவில்லை - காயம்பட்டவர்கள் ஊமையாக” என்பதாகும்.

பெப்ரவரி 2012இல் ஆமூரில் 19 வயதான மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
மார்ச் 2012இல் பன்னிரண்டே வயதான ஒரு தலித் பெண் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள். டிசம்பர் 2012இல் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறில் எட்டு வயதான தலித் பெண் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். ஜனவரி 2014இல் புதுக்கோட்டை மாவட்டம், நகுடி காவல் நிலைய எல்லையில் 17 வயதான பெண் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் 2014இல் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண் யத்தில் 8 வயதான மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு “இந்து” நாளிதழ் பட்டியலிட்டுள்ளது.

பாலியல் குற்றங்கள் மட்டுமா? அ.தி.மு.க. ஆட்சியில் எந்த அளவுக்கு கொள்ளைகள் நடை பெறுகின்றன என்பதைப் பற்றி கடந்த 20-6-2014 தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

கவனத்தைத் திசை திருப்பி, கொள்ளையடித்து வரும் ஒரு கும்பலை தமிழ்நாடு போலீசாரால் இன்ன மும் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்திரமாகக் கொள்ளை அடிக்கும் இந்தக் குழுவினர் 2013 முதல் இதுவரை 180க்கும் அதிகமான சம்பவங்களில் பவுன் நகைகளையும், 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த வகையில் 2013இல் நடத்தப்பட்ட வழக்குகளில் 85 வழக்குகள் வரை இன்னமும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் உள்ளன.

சென்னையில் அப்பாவிகள் கவனத்தை திசை திருப்பி நடத்தப்பட்ட 25 கொள்ளைகளில் ஒன்று கூடத் தீர்வு காணப்பட வில்லை” என்றெல்லாம் “டைம்ஸ் ஆப் இந்தியா” வெளியிட்டுள்ளது.

ஆனால், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாட்டின் தொடக்க உரையில் முதலமைச்சர் ஜெயலலிதா “சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை இங்குள்ளோர் அனைவரும் பெருமையும், திருப்தியும் கொள்ளும் நிலையில்தான் உள்ளது” என்று பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேசிய போதும், “எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிடிநநாட்டிலே சட்டம், ஒழுங்கு, அமைதி இவைகள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

சட்டம், ஒழுங்கு இந்த ஆட்சியில் எவ்வாறு இருக்கிறது என்பதற்கு ஒரு சில சம்பவங்களை நினைவுபடுத்தினாலே புரிந்து கொள்ள முடியு மென்று நம்புகிறேன்.

வாடிப்பட்டி அருகே உருட்டுக்கட்டையால் தாக்க வந்த அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமையி லான கும்பலுக்குப் பயந்து சோழவந்தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கருப்பையா, ஓட்டல் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டதால் உயிர் தப்பினார். 2013 நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி.

பேரவையில் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவுக்கு தே.மு.தி.க.வினர் காரணம் என்று கூறிய ஜெயலலிதா அ.தி.மு.க. வினரும் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவுக்குக் காரணமாக இருந் திருக்கிறார்கள் என்பதை ஏனோ மறைத்து விட்டார் அல்லது மறந்து விட்டார்!

2013, நவம்பர் முதல் வாரத்தில், திருச்சி, தஞ்சை, நாகையில் மட்டும் ஒரே நாளில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது.

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றைய அவருடைய பதிலுரையில், “தமிடிநநாட்டில் அதிகப்படியான போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றால், மக்கள் அத்தகைய சூடியநிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள் என்று பொருள் அல்ல; இங்கே தாராள மனதுடன், உண்மையான ஜனநாயகக் கோட்பாட் டின்படி யார் போராட்டம் நடத்த விரும்பினாலும், அவர்களுக்கு அனுமதியைத் தருகிறோம்” என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு இந்த ஆட்சியில் தாராள மனதுடன் அனுமதி தருகிறார்கள் என்பதற்கும் சில உதாரணங்கள் இதோ :-

தே.மு.தி.க. சார்பில் கடலூரில் 2013 நவம்பர் மாதத்தில் பொதுக்குழுத் தீர்மானங்களை விளக்கு வதற்காகப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியபோது போலீசார் சட்டம், ஒழுங்கைக் காரணமாகக் காட்டி அனுமதி மறுத்து விட்டனர். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நேரத்தில், நீதிபதி சசிதரன், “சட்டம், ஒழுங்கைக் காரணம் காட்டி பொதுக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தது தவறானது. பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்புத் தருவது போலீசாரின் கடமை; எனவே பொதுக் கூட்டம் நடத்த அனுமதி தரவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாஸ் அவர்களை நுழையக்கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஓர் உத்தரவு பிறப்பித்தார்; கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்; விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தின் தலைவர் தொல். திருமாவளவனை விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; அதுபோலவே தர்மபுரி மாவட்டத்திற்கே 144 தடை என்றெல்லாம் இந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு, ஜனநாயக நடவடிக்கைகள் முழுவதுமாய் நசுக்கப்பட்டன.

16.2.2013 அன்று சேலம் நாடாளுமன்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்காகவும், இக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிடவும், காவல்துறை அனுமதி வேண்டி 30.1.2013 அன்று மனுக் கொடுக்கப்பட்டது. அனுமதி கொடுக்க வில்லை.

தி.மு.க. சார்பில் சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி, “தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தை யாரும் தடுக்கக்கூடாது” என உத்தரவிட்டார். 15-12-2012 அன்று கரூரில் கழகப் பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த கூட்டத் திற்கும் அ.தி.மு.க. அரசு தடை விதித்து, அதனை எதிர்த்து 11-12-2012 அன்று மதுரை உயர் நீதிமன் றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மனுவினை விசாரித்த நீதியரசர் சு. சுப்பையா அவர்கள், அதே இடத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். 28-12-2012 அன்று தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தொகுதிச் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கேயும் ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், கூட்டம் நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதியரசர் ரவிச்சந்திரபாபு, குறிப்பிட்ட இடத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடத்திட அனுமதி அளித்தார். ஜனநாயகத்தின் அடிப்படையான பேச்சுரிமையும், கூட்டம் கூடும் உரிமையும், சர்வாதிகார மனப்பான்மையோடு மறுக்கப்பட்டிருக்கின்றன.

கழக நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமல்ல; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதா? நடிகர் விஜய் பிறந்த நாள் கூட்டத்திற்கு அனுமதி தரப்பட்டதா? ஏன்? “டெசோ” மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டதா? கிடையாது.நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற முடிந்தது.

இவ்வளவுதானா? “தினத்தந்தி” நாளேட்டிலேயே - “சென்னையில் ஒரே மாதத்தில16 கொலைகள்” என்ற தலைப்பில் “சென்னையில் ஒரே மாதத்தில் 16 கொலைகள் நடந்துள்ளன. இதில் 5 கொலையில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நுங்கம்பாக்கம் வங்கிப் பெண் அதிகாரி கொலையில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்” என்றெல்லாம் செய்தி வந்தது.

ஜெயலலிதாவின் பொறுப்பிலுள்ள போலீசா ருக்கு நீதிமன்றம் அளித்த மற்றொரு சான்றிதழ் இதோ :- The Madras High Court Bench here came down heavily on police officers “who think they are a law unto themselves just because they are vested with certain powers under the Code of Criminal Procedure and that the common people are at their mercy” (The Hindu 14-2-2012) இவ்வாறு அ.தி.மு.க.ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியாகவோ. முறையாகவோ பராமரிக்கப்பட வில்லை என்பதற்கான சம்பவங்களை எழுத வேண்டுமேயானால் நேரமும் போதாது, பத்திரிகை யில் இடமும் இருக்காது. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா, அது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு என்றாலும் - ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதில் அளிப்பதாக இருந்தாலும், காவல் துறை மானியக் கோரிக்கையாக இருந்தாலும் தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தமிழகம் பெருமை மிகு மாநிலமாகத் திகழ்கிறது என்று சொல்லிக் கொள்வதும், அதைத் தமிழக நாளேடுகள் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் வெளியிடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஒரே பொய்யை, திரும்பத் திரும்பச் சொல்லி விளம்பரப்படுத்திக் கொள்வதாலேயே, அந்தப் பொய் மெய்யாகிவிடுமா?

ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதற்கு ஆதாரப் பூர்வமாக விளக்கம் கூற வேண்டுமே யானால், அ.தி.மு.க. ஆட்சியின் மூன்றாண்டுகளில் ஏடு களிலே வெளிவந்த கொலைகள் மாத்திரம் 3,525 - கொள்ளைகள் 1,352 - வழிப்பறி மோசடிகள் 1,023 - செயின் பறிப்புகள் 1,120!

“என்றைக்கு ஒரு பெண் உடல் முழுவதும் நகைகளை அணிந்து கொண்டு, நள்ளிரவில் எவ்வித அசம்பாவிதமும் நேராமல், தனியாக நடந்து செல்ல முடிகிறதோ, அன்றுதான் இந்தியாவுக்கு உண்மை யான சுதந்திரம் கிடைத்ததாகப் பொருள்” என்று அண்ணல் காந்தி அடிகள் சொன்னார்.

சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஓடி விட்டன. காந்தியடிகள் கண்ட கனவு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது நிறைவேறியிருக்கிறதா?

ஒரு பெண் நகைகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் நடந்து செல்ல முடியுமா? ஏன் சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கிறோமே, ஒவ்வொரு நாளும் ஆறு இடங்களில் செயின் பறிப்பு, ஒன்பது இடங்களில் செயின் பறிப்பு, பட்டப் பகலில் காவல் நிலையத்திற்கு எதிரே பெண்ணின் சங்கிலிப் பறிப்பு என்று எத்தனை நிகடிநச்சிகள்? இதுதான் தமிழகத்திலே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற இலட்சணமா?

அதுமாத்திரமல்ல; 21-12-2012 தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழில் தமிழகத்தில் “கற்பழிப்புக்” குற்றங்களைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை வெளி வந்தது. அதன் தலைப்பு என்ன தெரியுமா? “செப்டம்பர் வரை 500க்கு மேற்பட்ட வழக்குகள் இந்த ஆண்டு பதிவு செடீநுயப்பட்டுள்ளது - தமிடிநநாட்டில் கற்பழிப்புக் குற்றங்கள் 9 சதவிகிதம் அதிகம்” என்பதாகும். தமிழ்நாடு போலீஸ் பற்றிய வலைதளத் தில், 2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் 484 கற்பழிப்புக் குற்றங்கள் என்பதற்கு மாறாக; 2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 528 கற்பழிப்புக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 528 குற்றங்களில், 75 கற்பழிப்புக் குற்றங்கள் சென்னை மாநகரில் மட்டும் பதிவாகியுள்ளன. பெண்களைப் போற்றிடும் இலட்சணமா இது?

2013ஆம் ஆண்டில் 923 வழக்குகள் கற்பழிப்பு என்ற பிரிவில் தாக்கல் ஆகியுள்ளன என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததற் கான அடையாளமா? ஆனால் இதை மறைக்கும் வகையில் கற்பழிப்பு வழக்குகளில் வேறு வழக்கு களும் பதிவு செய்யப்பட்டதால்தான் எண்ணிக்கை அதிகம் என்று முதலமைச்சர் சமாளிக்கிறார்! வேறு வழக்குகளை இந்தத் தலைப்பில் பதிவு செய்தது யாருடைய குற்றம்? ஜெயலலிதாவின் பொறுப்பிலே உள்ள காவல் துறையினர் தானே இந்த வழக்கு களைப் பதிவு செடீநுதவர்கள். அவர்கள் மீது பழியைப் போட்டு முதல்வர் தப்பிக்க எண்ணுகிறாரா?

தர்மபுரியில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் பேருந்தில் சென்ற போது, தீ வைத்துக் கொல்லப்பட்ட வழக்கில், தர்மபுரி செஷன்ஸ் நீதிபதி கடுமையாகக் கூறிய போது, “வழக்கில் தொடர்புடை யவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவ்வழக்கை அனாதைக் குழந்தையைப் போல போலீஸ் அதிகாரிகள் நடத்தியுள்ளனர். போலீஸ் மீதான நம்பிக்கை நன்மதிப்பைக் குலைக்கும் வகையில் அவர்கள் நடந்துள்ளனர். இந்த இமாலயத் தவறுக்காக உள்துறைச் செயலாளர், சி.பி., சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி.யை இந்த நீதிமன்றம் கண்டிக்கிறது.அரசுத் தரப்பு சாட்சியங்களைக் கலைப்பதற்கு அனுமதி அளித்த குற்றத்துக்காக சி.பி., சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி. மீது, அதன் ஐ.ஜி., ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வேதனை தெரிவித்தார். மாணவியரைத் தாங்களே தீயிட்டுக் கொளுத்தி விட்டு, பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று பேசுவது எப்படிப்பட்ட பசப்பு வார்த்தைகள்!

திருச்சியில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் பரஞ்சோதி என்பவர் மீது டாக்டர் ராணி என்பவர் கொடுத்த வழக்கில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப் பணித்தும், பல நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இன்னும் பரிகாரம் கிடைத்தபாடில்லை!

1-1-2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டுச் சென்ற பிறகு, அவர் பெயரால் ஒரு நீண்ட அறிவிப்பு வந்துள்ளது.பெண் களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கிட 13 அம்சத்

திட்டம் என்ற பெயரால் வெளியாகியுள்ள அந்த அறிவிப்புக்கு எப்போதும் போலப் பாராட்டுகள் -பளபளப்பான விளம்பரங்கள்! பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை முதலமைச்சர் ஆக்கிவிட்டார் என்றே மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்.

முதலமைச்சர் அறிவித்துள்ள 13 அம்சத் திட்டங் களில் முதல் மூன்று திட்டங்கள் பாலியல் வன்முறை வழக்குகளை - இனி நடப்பவை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை - யார் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றிய நிர்வாக அறிவிப்பு களாகும். நான்காவது அம்சம்தான் “குண்டர் தடுப்புச் சட்டம்” - ஏற்கனவே இந்த ஆட்சியில் இந்தச் சட்டம் முறைதவறிப் பயன்படுத்தப் பட்டுப் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. தங்க ளுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, அவர்கள் எல்லாம் நீதிமன்றங்களின் மூலமாக நியாயம் பெற்று வருகிறார்கள். அடுத்து, பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத் திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம். இது முதலமைச்சரின் அறிவிப்பில் ஒரு அம்சம்.பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்கான செலவை ஏற்பதும் ஒரு திட்டமாகும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட அந்த 13 அம்சத் திட்டங்கள் எல்லாம் பிறகு என்ன வாயிற்றோ? மற்ற பல அறிவிப்புகளைப் போல, இந்த அறிவிப்புகளும் “ஏட்டுச் சுரைக்காய்” என்ற அளவிலே நின்றுவிட்டதோ; என்னவோ? என அவர் கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக