புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
77 Posts - 36%
i6appar
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_m10 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 2:40 am


ஆஸ்த்ரேலிய இலக்கியத்தின் மிகவும் முக்கியமான எழுத்தாளர் ஹென்றி லாசன். இவர் மக்களின் படைப்பாளி என்றே பெரும்பான்மையான நேரங்களில் அழைக்கப்படுகிறார். இவரின் கதைகள், கவிதைகள் பெரும்பாலும் பூர்வ ஆஸ்த்ரேலியா மக்களின் வாழ்க்கையை பேசுபவன். கொம்புகாரனின் மனைவி (The Drover’s Wife) எனும் இந்த கதை மிகவும் முக்கியமான ஒரு ஆக்கம். ஆங்கிலேயர்களின் வரவுக்கு பின்னான பூர்வ குடிகளின் அழிக்கப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசும் இந்த கதை, எதார்த்ததில் மிகவும் இயல்பாக கடந்து செல்லும் அதே நேரம் தினம் தினம் தனிமையில் போராடும் ஒரு ஆஸ்த்ரேலிய பூர்வ குடி பெண்ணின் வாழ்க்கையை பேசுகிறது.

தமிழ் மொழிபெயர்ப்பு : ஆர்த்தி வேந்தன்


இரண்டு அறைகளை கொண்ட அந்த வீடு வட்ட மரபலகைகளாலும், தட்டையான மரத் துண்டுகளைக் கொண்டும் கட்டப்பட்டிருந்தது, தரைத்தளம் -வெட்டிய மரத் துண்டுகளால் வேயப்பட்டிருந்தது. வீட்டின் ஒரு முனையில் தனித்திருக்கும் மரப்பட்டைகளினாலான சமையலறை, தாழ்வாரத்தையும் உள்ளடக்கிய வீட்டின் அளவை விட பெரிதாக இருந்தது.

வீட்டைச் சுற்றிலும் புதர், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த ஒரு மலைத் தொடர்களையும் காணமுடியவில்லை. சமதளமான அந்த பகுதி முழுவது புதர் மண்டியே கிடந்தது.குத்துச்செடிகளோ, வேறு தாவரங்களோ இல்லை, அந்த புதர் முழுவதும் வளர்ச்சியற்ற, அழுகிய ஆப்பிள் மரங்களால் நிரம்பியிருந்தது.கண்களுக்கு ஆறுதலாக, தண்ணீர் வற்றிப்போன ஓடையின் அருகே ஆங்காங்கே அசைந்தாடும் பச்சையான கருவாலி மரம் தவிர வேறு எதுவும் இல்லை. நாகரீகத்தின் சுவடுகளை காண, ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் தனித்துக் கிடக்கும் அந்த சிறு குடிசையிலிருந்து பத்தொன்பது மைல் தூரத்தை கடக்க வேண்டும்

அவன் ஒரு கொம்புக்காரன் – ஆடு,மாடுகளை நீண்ட தூர சந்தைகளுக்கு கால் நடையாக ஓட்டிச்செல்வதை தொழிலாக செய்து வருபவன். ஆட்டு மந்தைகளுடன் வெகு தொலைவில் இருக்கும் ஒரு சந்தைக்கு சென்றிருக்கிறான்.சில வருடங்களுக்கு முன் கால்நடைகளையும் அவைகளுகான மிகப்பெரிய மேய்ச்சல் நிலத்தையும் சொந்தமாக கொண்டிருந்தவன் அவன். அவன் மனைவியும் நான்கு குழந்தைகளும் தனிமையில் அந்த சிறு குடிசையில் தான் வாழ்கிறார்கள் .

கிழிந்த ஆடைகளுடனும், வறண்டு போன முகத்துடனும் நான்கு குழந்தைகளும் வீட்டைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.திடீரென்று ஒருவன். ‘’அம்மா… பாம்பு, பாம்பு…’’ என்று கத்தினான்.

மெலிந்த உடலும், சூரிய வெப்பத்தால் பழுப்பேறிய தோலுமாய் இருந்த அந்த தரிசு நில பெண் சமையயிலிருந்து பாய்ந்து கொண்டு வெளியே வந்தாள்.தரையில் கிடந்த தன் கடைசி குழந்தையை இடப்பக்க இடுப்பில் தூக்கி வைத்தப்படி கம்பை தேடினாள்.

எங்கே இருக்கு?

’’இதோ! மரக்கட்டைகள் அடியில் இருக்கு. அங்கேயே நில் அம்மா, பின்னாடி நின்று வேடிக்கை பார், அதை நான் பார்த்து கொள்கிறேன்’’ என்று கத்தினான் கூர்மையான முகத்தை கொண்ட பதினொரு வயதான அவளின் குறும்புக்கார மூத்த மகன்.

‘’டாம்மி, இங்க வா! அது கடித்துவிடும், நான் சொன்ன உடனே இங்க வா, குட்டி சாத்தான்!’’

அவனை விட பெரிதாக இருந்த அந்த கம்பை தூக்கி கொண்டு , அரைமனதுடன் அம்மா வின் அருகில் வந்த டாம்மி.

“இதோ வீட்டிற்கு அடியில் போகிறது” என்று ஆர்பாரித்தப்படி கையிலிருந்த குச்சியை தூக்கிபடிதவாறு பாம்பின் வழித்தடத்தில் ஓடினான். அதேநேரம் அங்கு நடந்து கொண்டிருந்தவைகளில் முழுமையான ஈடுப்படுடன் பங்கேற்று குரைத்துக்கொண்டிருந்த கருமையான மஞ்சள் கண்களை கொண்ட அந்த பெரிய நாய், சங்கிலியை உடைத்துக்கொண்டு பாம்பின் பின்னால் ஓடியது. மர இடுக்குகளினுடே மறைந்துக்கொண்டிருந்த பாம்பின் வாலை கடிக்க பாய்ந்து ஒரு கன நொடியில் தவறவிட்டது, அதே நேரம் பாம்பினை அடிக்க ஓங்கிய டாம்மியின் குறி தவறி அவனின் நீண்ட தடி நாயின் மூக்கை பதம்பார்த்தது. அதை சிறிதும் சட்டை செய்யாத அந்த நாய், தொடர்ந்து பாம்பு ஓடி மறைந்த சின்ன மர சந்தில் புக முயற்சி செய்துக்கொண்டிருந்தது .அதை இழுத்து பிடித்து மீண்டும் சங்கிலியில் பிணைந்தாள் டாம்மியின் அம்மா, ஒரு பாம்பினை சாகடிக்கும் பொருட்டு தனிமையில் வாழும் தங்களின் ஒரே பாதுகாவலனையும் இழக்க விரும்பவில்லை அவள்.

நாய் கூன்டினருகே குழந்தைகளை ஒன்றாக நிற்க வைத்து விட்டு, பாம்பை எதிர்நோக்கி அது சென்ற மர இடுக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள் கொன்புக்காரனின் மனைவி. பாம்பை வெளியே வர வைப்பதின் ஒரு முயற்சியாக இரண்டு சிறிய பாத்திரங்களில் பாலை உற்றி , சுவரின் அருகே வைத்தாள். ஒரு மணி நேரம் கடந்தும் அது வெளியே வந்த பாடில்லை.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 2:40 am

சூரிய கதிர்கள் அடிவானில் மறைந்துகொண்டிருந்தன, இடியும் மின்னலும் சுழன்றடித்துக்கொண்டிருந்தது.பெருமழை வருவதற்குள் குழந்தைகளை வீட்டிற்குள் அழைத்து வரவேண்டும். தரையின் விரிசல்கள் வழியாக பாம்பு எந்நேரமானாலும் வரக்கூடும் என்று அவளுக்கு தெரியும் அதனால் பிள்ளைகளை வீட்டிற்குள் அனுமதிக்காமல் கைநிறைய மரக்கட்டைகளை எடுத்து கொண்டு குழந்தைகளுடன், வீட்டின் முனையில் தனியாக இருந்த சமையல் கூடத்திற்குள் சென்றாள். மர அடித்தளம் இல்லாத மண்னாலான அடித்தளத்தை கொண்ட சமையலறை அது.(இந்த பகுதியின் பேச்சு வழக்கில் “தரைத்தளம்” என்று அழைக்கப்படுகிறது). அறையின் நடுவே பெரிய, அதே நேரம் பெயரளவில் மேசை என்று சொல்லும்படியான மேசை ஒன்று இருந்தது.குழந்தைகளை அதில் உட்கார வைத்தாள். இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள், நால்வருமே பச்சிளம் பிள்ளைகள்! அவர்களுக்கு இரவு உணவை பரிமாறினாள். எந்த நொடியிலும் பாம்பை எதிர்க்கொள்ள கூடும் என்ற எதிர்ப்பார்ப்பில், இருட்டுவதற்கு முன்பாகவே வீட்டிற்குள் போய் தலையணைகளையும் போர்வைகளையும் எடுத்துக்கொண்டு வந்தாள். சமையலறை மேசையிலேயே குழந்தைகளுக்கு படுக்கையை விரித்து அவர்களை படுக்கவைத்துவிட்டு, இரவு முழுவதும் மேசைக்கு கீழே அமர்ந்த படி பாம்பை எதிர்நோக்கி கொண்டிருந்தாள்.

அடிக்கடி அவளின் பார்வை அறையின் மூலைகளை நோக்கிப்படியே இருந்தது.தடிமனான பச்சை தடியை ஆயத்த நிலையில் தன்னருகே வைத்திருந்தாள்.மேலும் அவளின் தையல் பெட்டியையும், யங் லேடிஸ் ஜர்னலயையும் (Young Ladies’ Journal) தன்னருகே வைத்துக்கொண்டாள்.நாயயையும் வீட்ற்குள் அழைத்து வந்துவிட்டாள்.

தான் இரவு முழுதும் விழித்திருபதாகவும்…..அந்த குருட்டு பாம்பை தான் அடித்து கொல்லப்போவதாகவும் அம்மாவை எதிர்க்கும் தொனியில் கூறினான் டாம்மி.

பெரிய மனுஷனை போல் பேசாதே, என்று எத்தனை முறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன் என்று கோபப்பட்டாள் அம்மா.

தன் தலையனையின் அருகிலேயே தான் தன் குச்சியை டாமி வைத்திருந்தான்.

”அம்மா! இவன் குச்சியை வைத்து என்னை பயமுறுத்துகிறான், அதை தூக்கி போட சொல் ’’ என்றான் ஜாக்கி

ஏய்! குட்டி பயலே வாயை மூடு டா! உன்னை பாம்பு கடிக்க வேண்டுமா? என்றான் டாம்மி

ஜாக்கி வாயை மூடி கொண்டான்.

அது உன்னை கடித்தால், சிறிது இடைவெளி விட்டு தொடங்கினான் டாம்மி, உடலெல்லாம் வீங்கி விடும், துர்நாற்றம் வரும், சிவப்பு, பச்சை, ஊதா என்று உடல் மாறி கொண்டே போகும், ஆமாம் தானே அம்மா?

அவனை சும்மா பயமுறுத்தாதே, போய் தூங்கு, என்றாள் அம்மா.

இருவரும் தூங்க சென்றனர், அவ்வபோது எழுந்து, தான் நசுக்கபடுவதாக புகார் செய்துகொண்டே இருந்தான் ஜாக்கி.அவனுக்கு படுக்கையில் அதிக இடம் தரப்பட்டது.”அம்மா, நீ எப்போதும் இந்த சின்ன குரங்குகள் சொல்வதையே கேள், அவர்களின் கழுத்தை நெரிக்கப்போகிறேன்” என்று டாம்மி தொடங்கினான்.

“ஆனால் அவை யாருக்கும் எந்த தீங்கும் செயாது” என்று அரை தூக்கத்தில் டாம்மியை எதிர்ப்பதான பாவனையில் முனங்கினான் ஜாக்கி.

”பார் நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல, ஜாக்கியும் உன்னை பார்த்து அசட்டுதனமாக பேச கற்று கொள்வான் என்று.” என்று நகைப்புடன் டாம்மியை நோக்கி சொன்னாள் அம்மா.

அம்மா அவர்கள் கங்காருவை விடுவித்துவிடுவார்கள் என்று நினைக்கிறாயா? என்று உவமையாக கேட்டான் டாம்மி

கடவுளே! எனக்கு எப்படி தெரியும், போய் தூங்கு

பாம்பு வெளியே வந்தால் என்னை எழுப்புவியா?

சரி! போய் தூங்கு.

இரவு நடு சாமத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.குழந்தைகள் அனைவரும்ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். அவள் துணிகளை தைப்பதும், யங் லேடிஸ் ஜர்னலயை படிப்பதுமாக மாறி மாறி செய்துக்கொண்டிருந்தாள் அடிக்கடி தரையை பார்த்து கொண்டே இருந்தாள். ஒவ்வொரு முறை சத்தம் வரும்போதும் குச்சியை கையில் எடுத்தாள்.சுவர்களின் விரிசல்களினூடாக புகுந்து புயல் காற்று மெழுகுவர்த்தியை அனைப்பது போல் அச்சம் காட்டியது.மெழுகுவர்த்தியை பாதுகாப்பாக மேசையின் மீது வைத்து அதை சுற்றி பழைய நாளிதளை வைத்தாள்.இடியின் வெளிச்சம் மரப்பலகையின் மீது படும்போதெல்லாம் அது மெருக்கூட்டிய வெள்ளியினை போல் மினுமினுத்தது.



 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 2:41 am

அலிகேட்டர் தன் முழு நீளத்துக்கும் தரையில் நீண்டு படுத்தபடி கண்களை சுவரில் இருந்த இடுக்கிலே நிலை நிறுத்தியிருந்தது.பாம்பு இன்னும் வீட்டிற்குள் தான் இருக்கிறது என்பதை நாயின் செயல்பாடுகள் உறுதி செய்தன.

அவள் கோழை அல்ல, ஆனால் சமீபதிய நிகழ்வுகள் அவள்நரம்புகளையும் நடுங்க செய்தன.தன் கணவனுடைய சகோதரனின் சிறு வயது மகன் பாம்பு கடித்து இறந்து போனான்.மேலும் அவள் கணவனிடமிருந்து ஆறு மாதமாக எந்த தகவலும் இல்லை, அவனை குறித்து கவலையுற்றிருந்தாள்.

கொம்புக்காரனான அவன்,திருமனத்துக்கு பின் இப்போது குடிசை இருக்கும் அவ்விடத்தையும், அதை சுற்றிய சிறு மேய்ச்சல் நிலத்தையும் தானதாக்கிக் கொண்டுஅதைதன் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்தான். ஆனால் 18களின்பஞ்சம் அவன் வாழ்வை முழுமையாக அழித்தது,மந்தைகள் முழுவதையும் இழந்த அவன் மீண்டும்கால்நடைகளை தொலைவான இடங்களுக்கு ஓட்டி செல்ல ஆரம்பித்தான், மீண்டும் கொம்புக்காரனானான். தொழில் முடிந்து திரும்பி வரும்போது எப்படியேனும் தன் குடும்பத்தை அருகில் இருக்கும் நகரத்தில் குடியமர்த்தமுடிவு செய்திருந்தான். இதற்கிடையில் நெடுஞ்சாலையிலிருந்தஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்த அவனின் சகோதரன் மாதம் ஒருமுறை வீட்டிற்கு தேவையானதை வாங்கி தந்து விட்டு அன்னியையும், குழந்தைகளையும் பார்த்துவிட்டு செல்வான். கொம்புக்காரனின் மனைவியிடம் 2-3 மாடுகளும், ஒரு குதிரையும், சில ஆடுகளும் மிச்சமிருந்தன. அவள் கணவனின் சகோதரன் ஒவ்வொரு முறை வரும்போதும் அதில் ஒன்றை கொன்று அவர்களுக்கு சிறிது கறியை கொடுத்துவிட்டு, மீதியை வீட்டு பொருட்களுக்கான விலையாக எடுத்துக் கொள்வான்.

அவள் தனிமையில் வாழ பழகி கொண்டாள்.இதற்கு முன் ஒரு முறை இது போல் பதினெட்டு மாதங்கள் தனிமையில் தான் இருந்தாள்.பெண்னுக்கே உரித்தான கற்பனைளை கொண்டு அரன்மனைகளை காற்றிலே கட்டினாள். ஆனால் எப்போதும் போல் அவளுடைய கணவுகளும் , ஆசைகளும் பல காலங்களுக்கு முன்னமே கரைந்து போயின. அவளுக்கான எல்லா மகிழ்ச்சிகளும், பொழுதுபோக்குகளும் யங் ஜர்னல் பத்திரிகையின் வாயிலாக மட்டுமே கிட்டின.

அவளின் கனவன்பூர்விக ஆஸ்த்ரேலியஇனத்தை சார்ந்தவன், அவளும் தான்.பொறுப்பில்லாதவன் ஆனால் மிகவும் நல்ல கனவன்.அவனுக்கு பண வசதி இருந்திருந்தால் தன் மனைவியை நகரத்தில் ராணி போல் வைத்திருந்திருப்பான்.அவர்கள் பிரிந்து இருக்க பழகிகொண்டார்கள், அவள் மட்டுமாவது பழகியிருந்தாள் என்று சொல்லலாம். வருந்தி ஒரு பயனும் இல்லை என்பாள். பல நேரங்களில் தனக்கு திருமனமானதையே அவன் மறந்துவிட்டவனாக தான் திரிவான்.ஆனால் கையில் என்றைக்காவது பணம் இருந்தால் பெரும்பான்மையானதை மனைவியிடம் தந்துவிடுவான்.பணம் இருக்கும் போது பல முறை தன் மனைவியை நகரத்திற்கு கூட்டி சென்றுள்ளான்.ரயில்களில் படுக்கை வசதிகொண்ட இருக்கைளை முன்பதிவு செய்து அவளை அழைத்து செல்வான்.சிறந்த ஹோட்டலில் தங்குவார்கள்.அவளுக்கு குதிரை வண்டியை கூட வாங்கி தந்தான். ஆனால் காலத்தின் பஞ்சத்துக்கு அவற்றுடன் மற்ற எல்லாவற்றையும் கொடுத்தாக வேண்டியதாயிற்று.

கடைசி இரண்டு குழந்தைகளும் அந்த புதரின் மத்தியில் தான் பிறந்தனர். ஒரு குழந்தை, குடிகார மருத்துவரை வலுக்கட்டாயமாக அழைத்து வரும் முன்னமே பிறந்தது.அவள் அந்த தருணத்தில் வலிமையிழந்து போய், தனியாக இருந்தாள்.காய்ச்சலால் வேறு சோர்வுற்று இருந்தாள்.தனக்கு உதவியாக யாரையாவது அனுப்புமாறு கடவுளிடம் வேண்டினாள்.

ஒரு சமயம்அவள் தனியாக இருந்த போது ஒரு குழந்தை இறந்து போனது.இறந்த குழந்தையை தூக்கி கொண்டு பத்தொன்பது மைல்கள் உதவி வேண்டி ஓடினாள்.மணி கிட்டதட்ட இரவு ஒன்று அல்லது இரண்டு இருக்கும்.கனப்பில் நெருப்பு மெதுவாக எரிந்துகொண்டிருந்தது.தன் பாதங்கள் மீது தலையை இருத்தியப்படி படுத்திருந்த அலிகேட்டர் கண்களை சிமிட்டாமல் சுவரையே பார்த்துக்கொண்டிருந்தது.அவர்களின் அந்த நாய் அழகானதாக இருக்கவில்லை, அதன் மீது பாயும் நிலா வெளிச்சம்உடலெங்குமிருக்கும்புண் வடுக்களின் முடி வளராத இடங்களை பளிச்சன்று காட்டியது. பூமியில் இருக்கும் அல்லது பூமிக்கு அடியில் இருக்கும் எதன் மீது அதற்கு பயம் இல்லை. எருமை மாட்டை எதிர்க்கொள்வதிலும், ஒரு ஈயை எதிர்க்கொள்வதிகும் எந்த வித்தியாசமும் இல்லை அதற்கு.கங்காருக்களையும், நாய்களையும் தவிர வேறு எல்லா வற்றையும் அது வெறுத்தது.அதனின் நண்பர்கள் மீதும் சொந்தங்கள் மீதும் எதிர்ப்பு உணர்வை கொண்டிருந்தது.எப்போவாவது அந்நியர்களிடம் நட்பு கொண்டது.அந்த நாய் எப்போதும் பாம்புகளை வெறுக்கவே செய்தது, நிறைய பாம்புகளை அது கொன்றும் உள்ளது. என்றைக்காவது ஒரு நாள் அது பாம்பினால் கடிப்பட்டு இறக்க கூடும், பெரும்பாலான பாம்பு- நாய்களின் முடிவு இப்படியானதாக தான் இருக்கும்.

அவ்வப்போது அவள் செய்துக்கொண்டிருந்த தையல் வேலை அப்படியே போட்டுவிட்டு, சுவர் இருக்குகளை பார்த்து கொண்டும், வெளியே வரும் சிறு சப்தங்களை கேட்டுக்கொண்டும்,அவள் வாழ்க்கையில் இருக்கும், இருந்த சிலவற்றை பற்றி யோசித்துக் கொண்டுமிருந்தாள், அதை தாண்டி யோசிப்பதற்கு வேறு எதுவும் அவளிடம் இல்லை.

மழை நீர், புதர் மேலும் செழிப்பாக வளர்வதற்கு வழி வகுக்கும்.ஒரு முறை கணவன் இல்லாத நேரத்தில் வெக்கையினால் புதர் முழுவதும் நெருப்பு மூண்ட போது அதை எப்படி எதிர்கொண்டாள் என்பது அவளின் நினைவுக்கு வந்தது.வறண்ட நீளமான அந்த புதரில் இருந்து வந்த நெருப்பு அவளை முழுவதும் விழுங்கிவிடுவதை போல் இருந்தது.கணவனின் பழைய காற்சட்டையை போட்டு கொண்டு, மரக்கிளைகளால் நெருப்பை அணைக்க முற்பட்டாள்.அம்மாவை காற்சட்டையில் பார்த்த டாம்மிக்கு சிரிப்பு முட்டி கொண்டு வந்தது.ஹீரோவை போல், அம்மா அருகில் நின்று கொண்டு அவனும் செயல்பட்டான்.உள்ளே தூங்கி கொண்டிருந்த குழந்தை பயத்தில் ‘அம்மா அம்மா’ என்று அலறியது.சரியான நேரத்தில் அந்த நான்கு தரிசு நில ஆண்கள் வந்திருக்காவிடில் நெருப்பு அப்போதே அவளை வென்றிருக்கும்.அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்க சென்றாள், கறுப்பான உருவத்தை பார்த்து மேலும் அதிர்ச்சியுற்று அழுதது அக்குழந்தை. நாயோதன் சுயவுனர்வை காட்டிலும் குழந்தையின் அழுகையை நம்பி தவறுதளாகமுதளாளின் மீது வேகமாய் பாய்ந்தது. பாம்பை பிடிக்கப்போகும் உந்துதலில் அவளின் குரலை நாயால்அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை (மேலும் வயதானதால் காதும் மந்தமாகிவிட்டிருந்தது). ஒரு தட்டையான வாரை கொண்டு டாம்மி அதை அடிக்கும் வரை அவளை விடவில்லை. அசட்டுதனத்தையும், செய்த தவறை உணர்ந்ததின் சாட்சியாக தொடர்ந்துநிலையில்லாமல் ஆடிக்கொண்டேயிருந்ததுநாயின் வால், அந்த பெரிய முகத்தில்12 அங்குலம் வரை நீண்டு கொண்டிருந்ததுஅதன் அசட்டு சிரிப்பு. குழந்தைகளுக்கு மறக்க முடியாத நாளாகாவும், பல வருடத்திற்கு மீண்டும் மீண்டும் நினைத்து சிரிக்க கூடிய நாளாகவும் இச்சம்பவம் அமைந்தது.



 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 2:41 am

தன் கணவன் இல்லாத ஒருபொழுதில் வெள்ளத்தை சமாளித்ததை நினைவுகொண்டாள்.நீண்ட நேரமாக கொட்டும் மழையில் நின்றுகொண்டு ,சிற்றோடைக்கு அருகில் இருந்த தடுப்பணையை பாதுகாக்க வேண்டி வடிநீர்க்கால்வாயை தோன்டினாள். ஆனால் அவளால் அணை உடைவதை தடுக்க முடியவில்லை.ஒரு தரிசு நில பெண் செய்ய முடியாதவை என்று சில இருக்கதான் செய்கிறது.அடுத்த நாள் அணை உடைந்து போனதும் அவளின் மனதும் உடைந்தது.தன் கணவன் வீடு வந்தும், ஒரு வருடத்தின் உழைப்பு முழுவது வீண் போயிருப்பதைபார்க்கபோவதைபதை நினைத்து அழுதாள்.

மிச்சமீதி இருந்த கால்நடைகள் நிமோனியாநோய் தாக்கப்பட்டு வாயில் ரத்தம் வழிய இறந்துக்கொண்டிருந்த போதும் அவற்றை காப்பாற்ற தனியொருவளாக பெரிதும் போராடினாள். அவள் மிகவும் விரும்பி வளர்த்த இரண்டு மாடுகள் இறந்த போது மீண்டும் அழுதாள்.

இன்னொரு முறை, முரட்டு எருது ஒன்று அவள் வீட்டை ஒரு நாள் முழுவதும் முற்றுகையிட்ட போது அதை எதிர்த்து சண்டையிட்டாள். சில தோட்டாக்களை பழைய துப்பாக்கி ஒன்றில் நிரப்பி பலகையில் இருக்கும் பிளவுகளில் வைத்து சுட தொடங்கினாள்.அடுத்த நாள் காலை அந்த முரட்டு எருது அவள் தாக்குதலில் இறந்துப்போனது.அதனின் தோலை உரித்து விற்று பதினெழு டாலர்கள் மற்றும் ஆறு பெனிக்களை பெற்றாள்.

தன் கோழி குஞ்சுகளின் மீது கண்னு வைக்கும் கழுகு மற்றும் காக்கைகளை எதிர்த்தும் சண்டையிடுவாள்.அவளின் திட்டம் அசலானது. பிள்ளைகள், ‘அம்மா காக்கா, காக்கா’ என்று கத்துவர், உடனே வெளியே ஓடி போய் விளக்குமாறு குச்சியை துப்பாக்கி போல் பிடித்து கொண்டு பறவையை நோக்கியபடி ‘பங்க்க்க்’ என்று கத்துவாள். அவை உடனே பறந்துவிடும்.காக்கை சூத்திரமானது தான், ஆனால் அதைவிட பெண்களின் சூத்திரம் பெரியது.

சிலசமயம் பயங்கரமான உருவத்துடன் இருக்கும் தரிசு நிலகாரர்களோ அல்லது குடிகாரனோ தனிமையில் இருக்கு அவளருகில்வந்து உயிர் பயத்தை தந்து செல்வர்.தன் கணவனை பற்றி தெரியாதவர்கள் விசாரிக்கும் போது, தந்திரமாக தன் கணவனும் இரண்டு மகன்களும் கீழே உள்ள அணையில் வேலை பார்பதாக சொல்வாள்.

கடந்த வாரம்,தூக்கு மேடையின் தோற்றத்தை ஒத்த முக அமைப்பை கொண்ட ஒரு மூட்டைகாரன் வீட்டில் ஆண் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு , தன் மூட்டையை திண்ணையில் போட்டுவிட்டு உணவு தருமாறு அவளை வற்புறுத்தினான். அவளும் சாப்பிட கொஞ்சம் உணவு தந்தாள்.பின்பு இரவு தங்க அனுமதிக்குமாறு வற்புறுத்தினான்.பொழுது அந்திவானில் இறங்கிக் கொண்டிருந்தது.ஒரு கையில் பழைய சோபாவின் உடைந்த மர துண்டையும், மறு கையில் நாயினையும் பிடித்து கொண்டு அவனை எதிர்கொண்டாள்.’இப்போதே போ’ என்றாள்.அவளையும் நாயையும் மாறி மாறி பார்த்து விட்டு தாழ்வான குரலில் ’சரி’ என்று சொல்லி சென்றான் அவன். அவள் உறுதியான தோற்றத்தை உடைய பெண், நாயின் மஞ்சள் நிற கண்கள் வெறுப்பை உமிழ்வதாக இருந்தது. மேலும் அருவை இயந்திரத்தை போன்றதான தோற்றம், அதற்கு அவர்கள்வைத்திருந்த அலிகேட்டர் (முதலை) எனும் பெயரை ஒத்ததாகவே இருந்தது.



 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 2:44 am

பாம்பு வருவதை தடுப்பதற்கு தீ மூட்டி, தனிமையில் இருக்கும் அவளுக்கு மகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்ள சில சந்திரப்பங்கள் இருக்கவே செய்தன.எல்லா நாட்களும் அவளுக்கும் ஒரே மாதிரிதான், பெரிய வித்யாசங்கள் ஏதும் இல்லை. ஆனால் ஞாயிறு மதியம் மட்டும் நல்ல உடைகளை அனிந்துக்கொண்டு தன்னை நன்கு அலங்கரித்துக் கொள்வாள், பிள்ளைகளை குளிப்பாட்டி சுத்தபடுத்துவாள், குழந்தையையும் அலங்கரிப்பாள், புதர்களின் பாதையில் தனிமையில் நடந்து செல்வாள். எல்லா ஞாயிறும் இதை செய்வாள்.ஏதோ நகரத்தை மொத்தமாக அடைத்தபடி ஊர்வலம் போவது போல் அவளும் குழந்தைகளும் அழகாக அலங்கரித்து கொள்ள மெனக் கெட்டுவாள்.அவ்வழியில் பார்பதற்கு கூட ஒன்றும் இல்லை, எதிரில் ஒரு மனிதரும் வரமாட்டார்கள். நீங்கள் தரிசு நிலகார்களாக இல்லையென்றால் 20 மைல் தூரம் கூட எந்த ஒரு குறிப்பிட்ட முற்று புள்ளியும் இல்லாமல் தொடர்ந்து நடக்கலாம். காரனம் அந்த வழித்தடமெங்கும் முடிவில்லாமல் விரிந்து கிடக்கும் ஒன்றுபோலான குட்டை மரங்களும், அதை சுற்றியான புதர் வெளிகளும் மனிதனை ஒரு ரயில் போகும் தூரமளவு கூட நடக்க வைக்கும், ஒரு கப்பல் பயணிக்கும் தூரத்தை காட்டிலும் அதிகமான தூரம் கடக்க வைக்கும்.

ஆனால் தரிசு நில பெண்னான இவளே பலகாலமாய் இந்த தனிமைக்கு தன்னை பழக்கபடுத்திக் கொண்டவள். இளமை காலங்களில் அவள் இந்த தனிமையை வெறுத்தாள், ஆனால் இப்போதெல்லாம் இத்தனிமையை விட்டு விலகிபோனால் விசித்திரமாக உணர்வாள்.

கணவன் வீடு திரும்பும் போது அவள் மகிழ்ச்சி அடைவாள், ஆனால் அது குறித்து அவளுக்கு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.சாப்பிடுவதற்கு எதாவது நல்லதாக தயாரிப்பாள், குழந்தைகளை சுத்தபடுத்துவாள்.குடும்பத்துடன் முழு பொழுதையும் களிப்பார்கள்.

அவள் மிகவும் திருப்தியாகவே வாழ்கிறாள், அவள் குழந்தைகளை பெரிதும் நேசிக்கிறாள் ஆனால் அதை வெளிப்படுத்த அவளுக்கு நேரம் இருப்பதில்லை.அவர்கள் மீது எப்போதும் கடுமையாக இருப்பது போலவே நடந்துக்கொள்கிறாள்.அவளின் ‘பெண்மையை’, அன்பை வெளிப்படுத்துவதற்கு அவர்களின் சுற்றமும் சூழலும் உகந்ததாக இருக்கவில்லை.

இப்போது நேரம் அதிகாலையாக இருக்க வேண்டும், ஆனால் கடிகாரம் வீட்டின் உள்ளே உள்ளது. மெழுகுவர்த்தியும் எரிந்து முடியும் நிலையில் உள்ளது.வேறு மெழுகுவர்த்தி இல்லை என்பது அவள் மறந்துவிட்டாள்.தீயை மூட்டுவதற்கு இன்னும் சில மர பலகைகள் தேவை என்பதால் நாயை உள்ளே காவலுக்கு வைத்துவிட்டு விறகுகள் இருக்கும் இடத்தை நோக்கி போனாள்.மழை நின்று விட்டிருந்தது.அடுக்கி வைத்திருந்த விறகுகளில் இருந்து சிறிய குச்சி ஒன்றை எடுத்தாள், அடுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தமும் சட சடவென்று சருக்கி விழுந்தது.

நேற்று, அவர்களின்புதரருகில் அலைந்து கொண்டிருந்த ஒரு கருப்பினத்தவரிடம்சில விறகுககளை எதுத்து வந்து தருமாறு பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.சம்மதித அவன் விறகுகளை வெட்டிக்கொண்டிருந்த நேரத்தில் காணாமல் போன தன் பசுவை தேடி சென்றாள்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து தான் வந்தாள். அவன் வெட்டி வைத்திருந்த விறகுககளை பார்த்து அசந்து போனாள். ஒரு மணி நேரத்தை நன்றாக பயன்படுத்தியதற்காக அவனை பாராட்டி, இன்னும் கொஞ்சம் மிகுதியாக புகையிலை தந்தாள்.தலையையும் மார்ப்பையும் நிமிர்த்தி கொண்டு நன்றி சொல்லிவிட்டு போனான் அவன்.அவன் இனத்தில் அவன்ஒருவன் மட்டும் தான் மிஞ்சியிருந்தான், அக்குழுவுகுக்குதலைவனும் அவன் தான். இருப்பினும் அத்தனை விறகுகளையும் வெட்டி அந்த மர குவியலை அடுக்கிவிட்டு தான் சென்றான்.

அவள் இப்போது மனமுடைந்து போனாள், கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது, மேசை அருகே உட்கார்ந்தாள்.கண்ணீரை துடைத்து கொள்ள கைகுட்டையை எடுத்தாள், ஆனால் கைகுட்டை முழுவதும் ஒட்டையாக இருந்தது. ஒரு ஓட்டையில் கட்டை விரலையும் இன்னொரு ஓட்டையில் ஆள்காட்டி விரலையும் நுழைத்து கண்களை துடைக்க முற்பட்டு, விரல்களால் கண்களை குத்தி கொண்டாள். அது அவளுக்கு சிரிப்பை வரவளைத்தது.நாய் ஆச்சரியபட்டு பார்க்கும் அளவிற்கு சிரித்தாள். தன்னை தானே ஏளனம் செய்து கொள்ளும் கூர்மையான, மிக கூர்மையான நகைச்சுவை ஆற்றல் அவளிடம் இருந்தது. சில சமயங்களில் கதைகளை சொல்லி அருகில் இருக்கும் மற்ற தரிசு நில மனிதர்களையும் சிரிக்க வைப்பாள்.

காலை சூரியன் தொடுவானை விட்டு வெளியேறிய காலை பொழுதை நேரம் நெருங்கியிருந்தது.கனப்பில் தீ எரிந்துக்கொண்டே இருப்பதால் அறை சூடாகவே இருந்தது. அலிகேட்டர் சுவரையே வெறித்து பார்த்து கொண்டிருந்தது. திடிரென்று ஆர்வம் கொப்பளிக்கசுவரின் விரிசலை நோக்கி ஓடிய, அதன் உடம்பில் ஏதோ ஒரு அதிர்வு தெரிந்தது. கழுத்துக்கு பின்னால் இருக்கும் அதன் முடி சிலிர்த்து நின்றது.ஒரு யுத்த வெளிச்சம் அதன் மஞ்சள் கண்களில் பளிச்சிட்டது.இதற்கான அர்த்தம் அவளுக்கு தெரியும்.பிரம்பை அழுத்தமாககையில் பிடித்து கொண்டாள்.இரண்டு பக்கமும் பெரிய ஓட்டைகளை கொண்ட அந்த மரபலகையின் விரிசலின் கீழ் சிறிய, தீமையின் பிரகாசம் நிறம்பிய முத்து போன்ற இரண்டு கண்கள் மினுமினுத்தன.கருமையான அந்த பாம்பு தலையை மேலும் கீழும் ஆட்டிய படி மெதுவாக வெளியே வந்தது.நாய் அமைதியாக அதை பார்த்தபடி உட்கார்ந்திருந்தது,மந்தரித்து விட்டது போல் அவளும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.மேலும் ஒரு அடி தூரம் நெருங்கி வந்தது.அவள் தடியை பலமாக ஓங்கினாள், தனக்கு நேரவிருக்கும் ஆபத்தை உனர்ந்த அந்த சர்ப்பம் மரபலகையின் இன்னொறு மூலையில் இருந்த ஓட்டை வழியாக தலையைநூலைத்து தப்பிக்க முயற்சித்தது.தனது பெரிய வாயை திரந்தப்படி பாம்பின் மீது அலிகேட்டர் பாய்ந்தது, ஆனால் பாம்பு அதனிடமிருந்து தப்பி ஓட்டைக்குள் விரைந்தது.விடாமல் மீண்டும் பாயிந்தது அலிகேட்டர், இப்போது பாம்பின் வால் வசமாக அதன் வாயில் மாட்டிக்கொண்டது,விடாமல் பாம்பினை வெளியே இழுத்தது.இறுதியில் 5 அடி நீலமான அந்த கருப்பு பாம்பு வெளியே வந்தது.நாயின் மீது சீருவதற்காய் தன் தலையை உயர்த்த முயற்சித்து தோற்றது அந்த பாம்பு.அலிகேட்டர் பாம்பின் கழுத்தை அழுத்தமாய் பிடித்திருந்ததால் அதனால் அசையக்கூட முடியவில்லை.மிகவும் வழுவாக பாம்பை தாக்க ஆரம்பித்தது அலிகேட்டர்.சப்பத்தை கேட்டு, தூக்கம் களைந்த மூத்த மகன் டாம்மி, தன் தடியை பிடித்தப்படி படுக்கையை விட்டு எழ முயற்சித்தான், ஆனால் அவனை வெளியெர விடாமல் மிரட்டி அடக்கினாள் அம்மா. அவளின் கடுமையான விளாசலில் பாம்பின் பின்பக்கம் முழுவது கிழிந்து தொங்கியது. இறுதி அடியில் அதன் தலை சுக்கு நூறாக சிதறியது, மீண்டும் ஒரு முறை அவளின் கம்பு அலிகேட்டரின் மூக்கை பதம் பார்த்தது.

முழுமையாக சிதைக்கப்பட்ட அந்த சர்பத்தின் மறித்த உடலை, தன் குச்சியை கொண்டு தூக்கி, கனப்பு நெருப்பில் வீசினாள்.அருக்கில் இருந்த கட்டையின் மீது அமர்ந்த படி அது எரிவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.நாயும், பையனும் அவள் அருகில் நின்றபடி அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.அவள் தன் கைகளை கொண்டு நாயை தடவிகொடுக்க ஆரம்பித்தவுடனே அதன் மஞ்சள் கண்களில் கொப்பளித்த கோபமும், வெறியும் தானாக அடங்கி சாந்தமானது.அந்த கலோபாரத்தில் விழித்துக்கொண்ட குழந்தைகளை அமைதிபடுத்தி மீண்டும் படுக்க சொன்னாள்.மூத்த மகன் மட்டும் அங்கேயே நின்றபடி நெருப்பையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கண்களில் வழியும் கண்ணீரை பார்த்த அவண் அவள் கழுத்தை இருக்க கட்டியபடி

”அம்மா, நான் எப்போதும் கொம்புக்காரனாகமாட்டேன், அப்படி செய்தால் நீ என்னை நன்றாக அடி” என்றான்.

அவனை தன் மார்புடன் இருக்க அனைத்து முத்தமிட்டாள் அவள்.அவர்கள் வெகு நேரம் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள், காலையின் சூரிய கதிர்கள் அந்த புதர் நிலம் முழுவதிலும் படர ஆரம்பித்தது.

ஆங்கிலத்தில் படிக்க::




 கொம்புக்காரனின் மனைவி: ஹென்றி லாசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக