புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க தான் வில்லன் நம்பர் 1 Poll_c10நீங்க தான் வில்லன் நம்பர் 1 Poll_m10நீங்க தான் வில்லன் நம்பர் 1 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நீங்க தான் வில்லன் நம்பர் 1 Poll_c10நீங்க தான் வில்லன் நம்பர் 1 Poll_m10நீங்க தான் வில்லன் நம்பர் 1 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நீங்க தான் வில்லன் நம்பர் 1 Poll_c10நீங்க தான் வில்லன் நம்பர் 1 Poll_m10நீங்க தான் வில்லன் நம்பர் 1 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க தான் வில்லன் நம்பர் 1


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 04, 2009 4:56 pm

[You must be registered and logged in to see this image.]

எல்லோருக்குமே தன்னை ஒரு ஹீரோவாகப் பாவிப்பதில்
தான் ஆசையும், சிலிர்ப்பும். அதனால் தான் வில்லன்களைக் காணும் போது
கோபமும் எரிச்சலும் பீறிட்டுக் கிளம்புகிறது நமக்கு. எப்படியாவது வில்லனை
வீழ்த்தி நமது ஹீரோயிசத்தை நிலைநாட்டுவதே நமது கனவாய் இருக்கும். ஆனால்
நாமே சில விஷயங்களில் வில்லனாகத் தான் இருக்கிறோம் என்பது தான் உண்மை.
கோபப்படாம படிங்க.பிளாஸ்டிக்

ஆடித்
தள்ளுபடிக்கு இரண்டு கைகளிலும் பத்து பிளாஸ்டிக் பைகளை அள்ளி வருகிறோம்.
இந்த பிளாஸ்டிக் பைகள், நாளை, அடுத்த மாதம், அடுத்த ஆண்டு, அடுத்த
ஐந்தாவது ஆண்டு என்ன நிலையில் இருக்கும் என நினைத்துப் பார்த்ததுண்டா.


ஆகஸ்ட் பதினைந்திற்கு எல்லோருடைய கைகளிலும்
ஒன்றுக்கு இரண்டாக கொடிகள். பெரும்பாலும் பிளாஸ்டிக் கொடிகள். தேசப் பற்று
எனும் பெயரில் தேசத்தின் முதுகில் எத்தனை டன் பிளாஸ்டிக் இறக்கி
வைக்கிறோம். நமக்கிருக்கும் வேலையில் இதையெல்லாம் யோசிக்க ஏது டைம் என
நினைக்கும் போது சட்டென வில்லனாகிவிடுகிறோம்.

உலகில் பல நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடையும் வரிகளும் விதித்திருக்கின்றன. இருந்தாலும் நிலமை [You must be registered and logged in to see this image.]சீரடையவில்லை.
உலகின் வளர்ந்த நாடான யூ.கேவில் ஒரு ஆண்டு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்
பைகளின் எண்ணிக்கை 13 பில்லியன். உலகில் ஒரு நாள் சேரும் பிளாஸ்டிக்
குப்பைகள் சுமார் ஐயாயிரம் டன் !

சகட்டு மேனிக்கு வாட்டர் பாட்டில்கள்
வாங்குவதையும், குப்பை போட உதவும் என ஒன்றுக்கு இரண்டாய் பிளாஸ்டிக் பைகள்
வாங்குவதையும் நிறுத்தினாலே போதும் பிளாஸ்டிக்கைக் கட்டுப்படுத்த.

அடுத்த முறை பிளாஸ்டிக் பை ஒன்றைக் கையில்
எடுக்கும் போது நினைவில் கொள்வோம். ஒரு பை அழிய எடுத்துக் கொள்ளும் காலம்
ஆயிரம் ஆண்டுகள்.
குளோபல் வார்மிங்
என்றவுடன் இதெல்லாம் தலைவர்கள் சமாச்சாரம் என்று ஒதுங்கிவிடுவது தான் நமது
இயல்பு. உண்மையில் இது தலைவர்கள் சமாச்சாரமே கிடையாது. நீங்களும் நானும்
சம்பந்தப்பட்ட விஷயம் தான் இது. பூமியை மாசுபடுத்துவது, காற்றை
மாசுபடுத்துவது, நதிகளை மாசுபடுத்துவது இவையெல்லாம் தான் குளோபல்
வார்மிங்கின் முக்கியமான காரணிகள்.

வெள்ளப்பெருக்கு, சுனாமி, சுழல்காற்று, உணவுப் பற்றாக்குறை, கடல் மட்டம் உயருதல், துருவங்கள் உருகுதல் என இதன் [You must be registered and logged in to see this image.]விளைவுகள்
படுபயங்கரமானவை. இது தேச பாதுகாப்புக்கும் மாபெரும் வில்லனாக வந்து
நிற்கிறது என கடந்த வாரம் அமெரிக்கா தெரிவித்திருந்தது. குளோபல் வார்மிங்
நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என அமெரிக்கா சொல்லியிருப்பது
இதுவே முதல் முறை !

இன்றைய இதே நிலையில் போனால் 2040ல் பூமி
உதவாக்கரையாகிவிடும். அதன் பின் பூமியைத் திருப்பி பழைய நிலைக்குக் கொண்டு
வருவது கூட சாத்தியமற்றதாகி விடுமாம். இப்போதே காலநிலையில் நிலவும்
ஒழுங்கற்ற மாற்றங்களால் விவசாயிகளின் பாடு திண்டாட்டமாகியிருக்கிறது.
இதைத் தடுக்க அமெரிக்கா துவங்கி உலக நாடுகளெல்லாம் கரம் கோர்த்து நிற்க,
நாமும் நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும்.

அட ! அணில் கூட மண் சுமக்கலையா ?
இ-வேஸ்ட்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செல்போனை மாற்றுவது
தான் இப்போதைய இளசுகளின் டிரெண்ட். வாங்கி நான்கு வருடங்களாகிவிட்டால்
கம்ப்யூட்டரும் குப்பைக்கு. இருக்கும் பிரச்சினை போதாதென்று சிடிக்கள்,
வயர்கள், எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் என பூமிக்குப் பாரமாய்
எலக்ட்ரானிக் குப்பைகள். உலகில் ஆண்டு ஒன்றுக்கு சேரும் எலக்ட்ரானிக்
வேஸ்டின் எடை மட்டுமே ஐந்து கோடி டன் ! இன்னும் இரண்டே ஆண்டுகளின் இந்த
கணக்கு மூன்று மடங்கு அதிகரிக்குமாம்.




[You must be registered and logged in to see this image.]இந்த
எலக்ட்ரானிக் பொருட்களில் சுமார் ஆயிரம் வகையான நச்சுப் பொருட்கள் உண்டு.
அலர்ஜி முதல் கான்சர் வரை பல்வேறு நோய்களின் தாய் இந்த எலக்ட்ரானிக்
வேஸ்ட். இதைப் புதைத்தால் பூமி மாசுபடும், எரித்தால் விஷப் புகை வந்து
காற்றை மாசுபடுத்தும். இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் தேவை முடிந்து
விட்டால் மறு சுழற்சிக்கு ஒப்படைப்பது மட்டுமே தீர்வு.

அடுத்த முறை எதையும் சும்மா எறியாதீங்க.

அழகுசாதனப் பொருட்கள்


இதைப் பூசுங்கள். ஆறே வாரங்களில் நீங்கள் உலக அழகி
ஆகிவிடுவீர்கள். என களத்தில் குதிக்கும் அழகுசாதன நிறுவனங்களை நம்புவது
நமது வாடிக்கையாகிவிட்டது. ஆறுவாரம் அழுத்தி அழுத்தித் தேய்த்தும் நமது
நிறம் மாறவில்லையே என யோசிக்கும் போது அடுத்த விளம்பரம் வரும். இதோ புதிய
பார்முலாவில் அதே கிரீம் !

உண்மையில் இந்த அழகுசாதனப் பொருட்களால் ஏதேனும்
நன்மை உண்டா என்றால் பெரும்பாலும் உதட்டைப் பிதுக்க வேண்டியது தான்.
அப்புறம் ஏன் கண்ணுக்கு ரெண்டு, மூக்குக்கு மூணு, காலுக்கு நாலு என அழகு
சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் ?

இந்த அழகுசாதனப் பொருட்களில் இருக்கக் கூடிய அமிலங்கள் பல்வேறு அலர்ஜி நோய்களைத் தரும். இந்த அழகு சாதனப்[You must be registered and logged in to see this image.]
பொருட்களில் இருக்கும் பி.பி.டி எனும் நச்சுப் பொருள் கொடுமையானது.
சமீபத்தில் பதினைந்து வயதான கர்லா ஹாரிஸ் எனும் சிறுமி ஹேர் டை ஒன்றை
உபயோகித்ததில் மரணம் வரை சென்று திரும்பியிருக்கிறார். இது லோரியல் எனும்
புகழ்பெற்ற அழகுசாதனப் பொருள் தயாரிப்பு என்பது குறிப்பிடத் தக்கது. உலகப்
புகழ் நிறுவனத்தின் தயாரிப்பே இப்படியெனில், மேட் இன் சைனாக்கள் எப்படி
இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ? அழகு சாதனப் பொருட்கள்
உபயோகிப்பவர்களில் 7.1 சதவீதம் பேருக்கு ஏதோ ஒரு பிரச்சினை வந்து
விடுகிறது என்கிறது கடந்த ஆண்டைய ஆய்வு ஒன்று.

எதுக்கும் இன்னொரு தடவை யோசிங்க !

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 05, 2009 11:28 am

தண்ணீர் பிரச்சினை
தண்ணிக்கு என்னப்பா பிரச்சினை ? கிணறு வெட்டினா வந்துடப் போவுது.
அல்லது பணம் குடுத்தா லாரில வந்துடப் போகுது என நினைக்கும் ஆசாமியா நீங்க
? கொஞ்சம் முழிச்சுக்கோங்க சாமி. தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் உலகம்
பாலை நிலமாகப் போகிறது. அச்சுறுத்துவது நான் அல்ல ஐ.நா.


[You must be registered and logged in to see this image.]ஆண்டு
தோறும் தண்ணீர் தேவை அதிகரிக்கும் என்பது தெரிந்ததே. கடந்த ஒரு நூற்றாண்டை
மட்டும் எடுத்துப் பார்த்தாலே உலகின் தண்ணீர் தேவை ஆறு மடங்கு
அதிகரித்திருக்கிறது ! உலகம் சென்று கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தால்
இன்னும் சில பத்தாண்டுகளில் தண்ணீர் இல்லாமல் மானுடம் தவிக்க வேண்டியது
தான் என்கிறார் உலக தண்ணீர் மேலாண்மை நிறுவன இயக்குனர் பிராங்க் ரிஜர்ஸ்பன்

ஆசிய பசிபிக் பகுதியில் வாழும் மக்களில் சுமார்
110 கோடி மக்களுக்கு இப்போதே நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை ! அதனால் தான்
அரசுகள் தண்ணீர் சேகரிப்பு, மழை நீர் சேகரிப்பு, மரங்களை நடுதல்,
தண்ணீரைச் சிக்கனமாகச் செலவு செய்தல் என முழங்கிக் கொண்டிருக்கின்றன.

தண்ணீர் சேமிப்பு ரொம்ப முக்கியங்க. அடுத்த முறை குழாயைத் திறக்கும் போது மனசையும் சேர்த்தே திறப்போம்.உடலை அழிக்காதீங்க

ஒவ்வொரு முறை புகையை ஆழமாய் உள்ளிழுத்து வெளிவிடும் போதும் உங்க
உடலுக்கு நீங்களே வில்லனாகிறீர்கள். உலக அளவில் புகைக்கு அடிமையானவர்களில்
10 சதவீதம் பேர் நமது நாட்டிலுள்ளவர்கள் ! மேலை நாடுகளெல்லாம் புகைப்
பழக்கத்தை குறைத்துக் கொண்டிருக்க வளரும், மற்றும் வளர்ந்த நாடுகள் தான்
விட முடியாச் சிக்கலில் கிடக்கின்றன. இதே நிலை நீடித்தால் அடுத்த
நூற்றாண்டில் புகைக்கு அடிமையாகியிருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 100
கோடி !
இன்னும் இருபது ஆண்டுகள் கழிந்து புகைக்குப் பலியாவோரில் 80 சதவீதம் பேர் பின் தங்கிய மற்றும் வளரும் நாடுகளில்[You must be registered and logged in to see this image.]
தான் இருக்கப் போகிறார்கள் . உலக அளவில் “தம்” பழக்கத்தால் இறந்து போகும்
மக்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 15,000. காரணம் உலக அளவில்
புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு போதுமானதாய் இல்லை என்பது தான்.
மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் என எங்கு வேண்டுமானாலும் புகைத்துக்
கொள்ளுங்கள் என்னும் நிலமை தான் 74 நாடுகளில் இருக்கிறது என்றால்
பார்த்துக் கொள்ளுங்கள்..

அடுத்த முறை ஒரு தம் ஒன்றைப் பற்ற வைக்கும் போது நினைவில் கொள்ளுங்கள், உலகின் ஐந்து மரணங்களில் ஒன்று புகையினால் வருகிறது !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக