புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிறுகதை - விமந்தனி I_vote_lcapசிறுகதை - விமந்தனி I_voting_barசிறுகதை - விமந்தனி I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - விமந்தனி


   
   

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 11:50 am

காதலி...!

‘ர்ர்ரர்ர்ர்ர்........’ பாக்கெட்டில் செல் போன் அதிர்ந்தது. எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளே மங்கலாக பூரணியை காட்டியது.

“ஹல்லோ!” – நான்.

“என்னங்க.. வர லேட்டாகுமா?” – பூரணி.

“ஏன்... என்னாச்சு..?”

“கொழந்தை உங்களை கேட்டு ஒரே அழுகை... அதான்.... கிளம்பிட்டீங்களா?”

“கிளம்பிட்டேன்! இன்னும் கால்மணி நேரத்துல வந்துடுவேன்.” கைபேசியை அனைத்து மறுபடியும் பாக்கெட்டில் வைத்து விட்டு பார்க்கிங்கை நோக்கி நடந்த போது,

“சரவ….ணா...?” – என்றழைக்கும் குரல் கேட்டு உடலெங்கும் மின்வேட்டு பாய்ந்தது போன்று அதிர்ந்து நின்றேன். நாடி நரம்பெங்கும் ஊடுருவி வியாபித்திருக்கும் என்னுள் உறைந்த குரல் அல்லவா....
சட்டென்று திரும்பி பார்த்தேன்.

அவள் தான்... அவளே தான்... என் உயிரில் கலந்து விட்டிருந்த என் தீபா.

என் அனுமதி இல்லாமலே, என் உடலெங்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக்கொண்டது. பார்த்து பத்து வருடங்கள் ஆகியிருக்குமா? முன்னைக்கும் இப்போது உடம்பு பூசினாற் போல் இன்னும் அழகாய் தெரிந்தாள்.

ஆர்வமாய் அவளை எதிர்கொள்ள எத்தனித்த போது தான் கவனித்தேன், அவளருகே அவள் கணவனும் வருவதை. கூடவே அவள் கையை பிடித்தபடி ஒரு குட்டி பையன். நடந்து வரும் போதே சேட்டை..

எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றிருந்த என்னருகில் அவள் வந்து விட்டாள்.

“என்ன சரவணா... ஞாபகம் இல்லையா...?” – தீபாவின் குரல் தான் என்னை மறுபடி மீண்டு வரச்செய்தது.

“ம்... இல்ல.. இல்ல..” – ஆனாலும் இயல்பாக இருக்க முடியவில்லை.

“என்ன மிஸ்டர். சரவணன்...? எப்படியிருக்கீங்க...?” – அவள் கணவன் என் கையை குலுக்கியதும் என்னுள் இருந்த பதட்டம் கொஞ்சமாய் நீங்கியது.

“ஹோ.. ஃபைன்...! நீங்க நல்லா இருக்கீங்களா அருண்..?” – இயல்பாய் கேட்டேன். அப்படித்தான் நினைக்கிறேன்.

சம்பிராதாய பேச்சுக்களுக்கு இடையே, “வாங்க சரவணன் அப்படி உட்கார்ந்து பேசுவோம்.” – என்றழைத்தான் அவள் கணவன்.




சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 11:52 am

காதலி...!  (தொடர்ச்சி)

திரும்பவும் அதே ரெஸ்டாரென்டுக்குள் நுழைந்து ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து காபி மட்டும் ஆர்டர் செய்து விட்டு உட்கார்ந்தோம்.

“அப்புறம் சரவணன்..? பார்த்து ரொம்ப நாளாச்சு.. எங்க கல்யாணத்துல பார்த்தது.   எப்படியிருக்கீங்க? அதுக்கு முன்னால ஐ’ம் ஸாரி.. உங்க கல்யாணத்துக்கு எங்களால வரமுடியல... அபிஷியலா ஆஸ்ட்ரேலியா  போகவேண்டியதா போச்சு... மறுபடியும் ஸாரி.” – மிக, மிக இயல்பாய் பேசினான் அருண்.

“அதனால என்ன பரவாயில்லை.. அதுக்கு போய் எதற்கு ஸாரி எல்லாம்...?” – வார்த்தைகள் மட்டும் இயல்பாய் தான் வந்து விழுந்தது. மனம் மட்டும் அவள் முகம் பார்க்க விழைந்தது. இவனை எதிரில் வைத்துக்கொண்டு அவளை ஏறிட்டு பார்க்கவும் கண்கள் சங்கடப்பட்டது.

“உங்களுக்கு எத்தனை குழந்தைங்க.. சரவணன்?” – அருண்.

“ஒரு பெண் குழந்தை அருண். ஒன்றரை வயதாகிறது அவளுக்கு.”

“பேர் என்ன..?”

அதற்குள் காபி வந்துவிடவே, “காபி சாப்பிட்டுகிட்டே பேசலாமே...” என்றேன் நான்.  

“அப்பா... எனக்கு அது வேணும்...!” அந்த குட்டி பையன் தான். டாடி என்றழைக்காமல் ‘அப்பா...!’ என்றழைத்தது, தீபாவின் தமிழ் பற்றை காட்டியது.

இல்லை.. தீபா மாறவே இல்லை. இன்னமும் பழைய தீபாவாக தான் இருக்கிறாள். ‘மொழின்றது அறிவை வளர்க்க தானே தவிர, நம்ம கலாச்சாரத்தை மாத்திக்க இல்ல சரவணா...’ தீபாவின் குரல் இன்னும் என் காதில் ஒலித்து கொண்டிருந்தது.

தீபாவை பார்த்தேன். அதே புன்சிரிப்பு மாறாமல் இருந்தது அவள் முகத்தில். அந்த புன்னகையில் போலித்தனம் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை.

“தீபா... நீ பேசிட்டு இரு... வந்துடறேன்...” என்ற அருண், அவன் பிள்ளையை அழைத்து கொண்டு, “எக்ஸ்கியுஸ் மீ...” என்று என்னிடம் அனுமதி பெற்றுக்கொண்டு எழுந்து போனான்.

அருண் போனதும் எனக்கு ஒருவகையில் நல்லதாய் தான் தோன்றியது. தீபாவிடம்... என் தீபாவிடம் சில வார்த்தைகள் பேசினால் இன்னும் சில காலங்களை அந்த நினைவிலேயே கழிக்கலாமே...

என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. ஏதோ ஒரு குறுகுறுப்பு என்னுள் இருந்து கொண்டே இருந்தது.




சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 11:54 am

காதலி...! (தொடர்ச்சி)

“என்ன சரவணா... பேசாமலே இருக்கே...” – தீபாவின் மென்மையான குரல்.

“ம்ம்... ஒண்ணுமில்ல தீபா... திடீர்ன்னு உன்ன பார்த்ததுல... எனக்கு ஒண்ணுமே புரியல... நீ எப்படி இருக்கே தீபா? நல்லா இருக்கியா...?” – அவள் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள் என்பதை அவள் சொல்லி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லாமல் தான் இருந்தது. இருந்தாலும் ஏதோ பேசவேண்டுமே என்பதற்காக கேட்டு வைத்தது.

“நான் நல்லா இருக்கேன் சரவணா... நீ எப்படி இருக்கே...?’

“உம்... இருக்கேன்...” வேண்டுமென்றே சுரத்தில்லாமல் சொன்னேன். பின்னே, அவளை இன்னும் மறக்கவில்லை என்பதை எப்படி அவளுக்கு தெரிவிப்பது?

“குழந்தை இருப்பதாக சொன்னாயே சரவணா... எப்படி இருக்கிறாள்?” – பேச்சினை திசை திருப்புகிறாளோ என்று எனக்கு தோன்றியது. அவளை பார்த்தவுடன் எனக்குள் ஏற்பட்ட பரவசம் போல் எதுவும் அவளிடம் காணவில்லையே. ‘நீயே என் உயிராய்....’ என்று எனக்காக கவிதை படித்தவளை காணவில்லையே.... ஏதோ உடன் படித்தவனிடம் பேசுவது போல வெகு இயல்பாய் பேசுகிறாளே...? ஒருவேளை என்னிடம் மறைக்கிறாளா... அல்லது நடிக்கிறாளா...?

“அவ நல்லா இருக்கா தீபா. என்னோட குழந்தைக்கு உன் பேரு தான் வச்சிருக்கேன்.” – என்ன சொல்ல போகிறாள் என்று ஆர்வமுடன் அவள் முகத்தை ஏறிட்டுகொண்டிருந்தேன்.

அவளோ, அதை கேட்டு பூவாய் புன்னைத்தாள். அதே சிரிப்பு.... கள்ளம், கபடம் இல்லாத அவளுக்கே உரித்தான அதே புன்னகை. பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது எனக்கு.

“என்ன தீபா சிரிக்கறே... நம்பலியா...நீ?”

“அதில்ல சரவணா... உன் குழந்தை பேரை அருண் கேட்ட போதே “தீபா”-ன்னு சொல்லியிருக்கலாமே..?” என்றாள்.

“அது வந்து...” – அதானே? ஏன் நான் சொல்ல தயங்கினேன்? உன் மனைவியின் பெயரை தான் என் குழந்தைக்கு வைத்திருக்கிறேன் என்று சொல்ல எங்கிருந்து வரும் தைரியம்?

தீபாவே பேசினாள், “இங்க பார் சரவணா... இன்னும் உன்னை நீயே ஏமாத்திட்டு தான் இருக்கே போலிருக்கு?”

“நீ மட்டும் என்னை மறந்துட்டியா...?” – மாட்டிக்கொண்டாள் என்று நினைத்தேன்.

“மறந்துட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, முதல்ல நீ ஒன்னு புரிஞ்சிக்கணும் சரவணா... மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உன்னை நம்பி உன் மனைவி, குழந்தை இருக்காங்க.... அவங்களை காதலிச்சு பாரு.... என்னோடு நீ பழகிய போது இருந்த நாட்களை விட அழகானதாய் இருக்கும். ” – என்றாள்.




சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 11:57 am

காதலி...! (தொடர்ச்சி)

“தீ...பா...!” – அவள் முடிப்பதற்குள், அவளை இடைமறித்தேன்.

“ஸாரி சரவணா...! உனக்கு எப்படி புரியவெக்கறதுன்னு தெரியலை. அதான்... ஸாரி...” – புரியவைப்பதா? அடிப்பாவி... அதற்காக இப்படியா...? ரோலர் கோஸ்டரில் ஒரு சுற்று சுற்றி, நின்றது போலிருந்தது எனக்கு.  மனதிற்குள் என்னை சிலுப்பிக்கொண்டேன்.

யாரோ சம்மட்டியால் அடித்தது போல சற்றே பொறி கலங்கியது. உண்மை தான், பூரணி என்னைப்போல் அனுபவப்பட்டிருந்தால்.... கடவுளே.... நினைக்க கூட முடியவில்லையே.... நான் மட்டும் எப்படி இந்த துரோகத்தை அவளுக்கு செய்து கொண்டிருக்கிறேன்? இப்போது, தீபா மட்டும் சுட்டி காட்டி இருக்காவிட்டால், இந்த பாவத்தை பூரணிக்கு தொடர்ந்து செய்து கொண்டுயிருந்திருப்பேனே..... எப்படி இந்த கோணத்திலிருந்து யோசிக்காமல் விட்டேன். ஒருவேளை இதுவும் ஆணாதிக்கத்தின் வெளிபாடோ...?

சட்டென்று என்னிடத்திலிருந்து எழுந்தேன். நான் எழவும், அருண் அவன் குழந்தையுடன் அருகே வரவும் சரியாக இருந்தது.  

“என்ன சரவணன்.. அதுக்குள்ள கிளம்பிட்டீங்க...?”

“ஸாரி அருண்! நா வீட்டுக்கு வர்ற வரைக்கும் என் குழந்தை தூங்காம காத்திருப்பா... அதான்... “ – நான்.

“இட்ஸ் ஒகே...சரவணன்.”

ஏதோ நினைவு வந்தவனாக அருணிடம், “ஆங்... நீங்க கேட்டீங்க... நான் சொல்லவே இல்லையே... என்னோட குழந்தையோட பேர் மீனா! மீனாட்சி – ன்ற எங்கம்மா பேரை சுருக்கி வச்சிருக்கேன்.” – சொல்லிவிட்டு தீபாவை பார்த்தேன். இந்த முறை அவளை பார்க்கும் போது மனதில் பழைய குறுகுறுப்பு இல்லை. அவளும் அழகாய் புன்முறுவலித்தாள். எனக்குள் ஜில்லென்று ஏதோ ஒன்று பரவிற்று.

“அட.. எங்க பையனுக்கும் என் தாத்தாவோட பேரான சுந்தரேஸ்வரரை சுருக்கி சுந்தர்னு வச்சிருக்கேன்.” – என்றான் அருண்.

அவர்கள் இருவரிடமும் விடை பெற்று கொண்டு பார்க்கிங்கிலிருந்து காரை எடுத்துக்கொண்டு ரெஸ்டாரெண்டை விட்டு மெயின் ரோட்டிற்கு வந்தேன்.

‘நாளை முதல் வேலையாக குழந்தையின் பெர்த் சர்டிபிகேட்டில் உள்ள பேரை திருத்த வேண்டும்.’ மனம் மட்டும் அடுத்து செய்யவேண்டிய வேலையை அசைபோட்டு கொண்டு வந்தது.

‘ரர்ர்ர்ர்.......’ மறுபடியும் சட்டை பாக்கெட்டில் கைபேசி அதிர்ந்தது. எடுத்து பார்த்தேன். பூரணி தான். ஆனால், இம்முறை பூரணி டிஸ்ப்ளேயில் பளிச் என்று தெரிந்தாள்.

முற்றும்




சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 05, 2014 12:16 pm

வாவ் ! இதுவும் உங்க கதை யா விமந்தினி, படித்து விட்டு பிறகு பின்னுட்டம் போடுகிறேன், முதலில் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் புன்னகை  சூப்பருங்க அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 12:23 pm

நன்றி கிருஷ்ணாம்மா. அன்பு மலர்



சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Aug 05, 2014 12:33 pm

கதை அருமை,உங்களுடைய சொந்த படைப்பா???
10/10

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 12:42 pm

ஹர்ஷித் wrote:கதை அருமை,உங்களுடைய சொந்த படைப்பா???
10/10

ஆமாம். சமீபத்தில் எழுதியது.
நன்றி!



சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 05, 2014 1:07 pm

ரொம்ப அருமையான கதை விமந்தினி புன்னகை சூப்பர் !  அன்பு மலர் ரொம்ப இயல்பாக எழுதி இருக்கீங்க ; நிறைய எழுதுங்க , படிக்க காத்திருக்கோம் புன்னகை  ரிலாக்ஸ் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 05, 2014 2:18 pm

அழகான கதை, ஆனாலும் காதலி என்ற ஒருத்தி நம் வாழ்வில் நுழைந்து வெளியேறி இருப்பின் அவளின் ஞாபகம் இல்லாமல் இருப்பத்தென்னவோ கொஞ்சம் கடினம்தான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக