புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
34 Posts - 43%
heezulia
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
1 Post - 1%
jothi64
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
400 Posts - 49%
heezulia
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
27 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 01, 2014 11:52 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 1

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 7c3DrbBsS6y9bjc9NEE6+August---1

கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.

1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.

1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.

1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1800 - பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2004 - பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.

2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத்
தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்.

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 19, 2014 2:38 pm

Dr.S.Soundarapandian wrote:வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 103459460 :நல்வரவு: 

 நன்றி நன்றி 

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 20

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Rr9CyMCiRAyW5BKVijAb+August-20

636 - அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

1000 - ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.

1866 - அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.

1917 - இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.

1940 - மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.

1948 - "இலங்கை குடியுரிமை சட்டம்" இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள்
ஆக்கப்பட்டனர்.

1953 - ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

1960 - செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

1968 - பனிப்போர்: 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.

1975 - நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

1977 - நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

1988 - ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.

1991 - எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.

1997 - அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும்
அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.

2006 - நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 20, 2014 12:17 am

பொது அறிவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி தொடருங்கள்

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 Power-Star-Srinivasan
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 20, 2014 11:38 pm

பிளேடு பக்கிரி wrote:பொது அறிவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி தொடருங்கள்

 நன்றி நன்றி நன்றி 

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 21, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 21

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 RQGVK4Y6TuCTyZIKKf1Q+August-21

1770 - கப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.

1821 - ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1831 - கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.

1842 - டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.

1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.

1911 - லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.

1920 - சேர் ஏ. கனகசபை இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் ஆரம்பமானது.

1945 - இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது.

1959 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1963 - தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.

1968 - சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.

1969 - ஆஸ்திரேலியனான மைக்கல் டெனிஸ் ரொஹான் என்பவன் ஜெருசலேமின் அல் அக்சா மசூதிக்குத் தீ வைத்தான்.

1983 - பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.

1986 - கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1991 - லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 - சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

2007 - சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 22, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 22

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 2szPkmCRaS3CgE2o35q2+August-22

1639 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னை) அமைத்தார்கள்.

1642 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் ஆங்கில நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தான். ஆங்கில உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1717 - ஸ்பானியப் படைகள் சார்டீனியாவில் தரையிறங்கினர்.

1770 - ஜேம்ஸ் குக் தனது ஆட்களுடன் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை அடைந்தான்.

1780 - கப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல் (HMS Resolution) இங்கிலாந்து திரும்பியது. (ஹவாயில் குக் கொல்லப்பட்டான்).

1798 - ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் தரையிறங்கினர்.

1831 - வேர்ஜீனியாவில் நாட் டர்னர் தனது தாக்குதலை ஆரம்பித்தான். 50 வெள்ளையினத்தினரும், பல நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.

1848 - நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1860 - பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் கரிபால்டியின் படைகள் சிசிலியில் இருந்து இத்தாலியின் பெரும்பரப்பினுள் நுழைந்தனர்.

1864 - 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

1875 - சக்காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.

1910 – கொரியா-ஜப்பான் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

1911 - பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில், பிரித்தானியாவும் ஜேர்மனியும் முதன் முதலில் நேரடியாகப் போரில் ஈடுபட்டனர்.

1926 - தென்னாபிரிக்கா, ஜோகானஸ்பேர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1932 - தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மன் படைகள் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கை அடைந்தனர். லெனின்கிராட் மீதான முற்றுகை ஆரம்பமானது.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி மீது பிரேசில் போரை அறிவித்தது.

1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ருமேனியாவைக் கைப்பற்றியது.

1949 - கனடாவில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.

1962 - பிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

1972 - ரொடீசியா ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1978 - சண்டினீஸ்டா படைகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.

1989 - நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட்டது.

1991 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Aug 22, 2014 12:14 pm

பிறந்தநாள் சென்னை
 சூப்பருங்க 

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 22, 2014 2:28 pm

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 3838410834 வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 3838410834 வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 3838410834 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 23, 2014 11:51 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 23

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 CPcoJCOlQIGzv3APaEvn+August-23

1305 - ஸ்கொட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் வில்லியம் வொலஸ், இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னனால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

1541 - பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார்.

1555 - நெதர்லாந்தில் கால்வினிஸ்துகளுக்கு முழுமையான உரைமைகள் வழங்கப்பட்டன.

1784 - மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை.

1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1839 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைக் கைப்பற்றியது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜெர்மனியுடன் போரை அறிவித்தது.

1929 - பாலஸ்தீனத்தில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி அவர்களில் 133 பேரைக் கொன்றனர்.

1939 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டனர். பின்லாந்து, உக்ரைன், போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும்
இரகசிய முடிவெடுக்கப்பட்டது.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பாடசாலை ஒன்றின் மேல் வீழ்ந்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்.

1948 - ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.

1952 - அரபு லீக் அமைக்கப்பட்டது.

1966 - லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது.

1973 - இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.

1975 - லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது.

1990 - ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

1990 - மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன.

2000 - பஹ்ரேய்னில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 23, 2014 1:07 pm

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 103459460 வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 4 1571444738 சூப்பருங்க 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக