புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Rutu
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
1 Post - 2%
manikavi
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
2 Posts - 9%
viyasan
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
1 Post - 4%
Rutu
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
1 Post - 4%
manikavi
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 01, 2014 11:52 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 1

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 7c3DrbBsS6y9bjc9NEE6+August---1

கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.

1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.

1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.

1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1800 - பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2004 - பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.

2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத்
தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 07, 2014 12:25 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 7

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 TnM4PsGQIyIUkQsRrTuv+August-7

கிமு 322 - மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1461 - மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

1819 - கொலம்பியாவின் "பொயாக்கா" என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

1832 - இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1898 - யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

1927 - ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

1944 - திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் I) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1955 - சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.

1960 - கோட் டி ஐவரி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 - வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

1998 - தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 - இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 07, 2014 4:51 am

ஆகஸ்ட் 7
-
1941 - இரவீந்திரநாத் தாகூர், மகாகவி, நோபல் பரிசு பெற்றவர்
நினைவு நாள் - (பி. 1861)
-
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 D4UE8ctTiy00mJabcews+22

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 07, 2014 12:41 pm

தேசிய கீதம்,தேசியக்கொடி இரண்டும் பிறந்தது வங்க மண்ணிலா?
இன்று தாகூரின் நினைவு நாள் உபரித்தகவளுக்கு நன்றி ராம் அண்ணா.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 12:37 pm

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 8

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 H25Fr24dSCSMFBfCi1Q8+August-8

1509 - கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.

1768 - ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.

1848 - மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.

1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜோன்ச்ன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆபிரிக்க அமெரிக்கர்களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.

1908 - வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார்.

1942 - இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.

1945 - ஐநா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐநாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.

1947 - பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.

1963 - இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் தொடருந்துக் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு 2.6 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன் பணத்தைக் கொள்ளையடித்தது.

1967 - ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.

1973 - தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்.

1974 - வாட்டர்கேட் ஊழல்: ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.

1988 - மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.

1989 - ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.

1990 - ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1992 - யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.

2000 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

2006 - திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 - நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 12:38 pm

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 9

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 XLZyh8ZQQvK618LQdOKm+August-9

கிமு 48 - ஜூலியஸ் சீசர் பம்பீயை சமரில் தோற்கடித்தான். பம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.

378 - ரோமப் பேரரசன் வேலென்ஸ் தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர்.

1048 - 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசஸ் இறந்தார்.

1173 - பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.

1655 - ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.

1842 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ரொக்கி மலைகளின் கிழக்குப் பகுதியில் எல்லைகளுக்கான உடன்பாடு எட்டப்பட்டது.

1892 - தோமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.

1902 - ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.

1902 - யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.

1907 - இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.

1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை
அதே இடத்தில் கொன்றது.

1965 - சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.

1965 - ஆர்கன்சசில் டைட்டான் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 53 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1974 - வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.

1991 - யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும்

2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

2006 - திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 12:38 pm

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 10

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 Zag5yACxQPi2TZgAUOiW+August-10

கிமு 612 - அசிரியப் பேரரசன் சின்சரிஷ்கன் கொல்லப்பட்டான்.

610 - முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், "லாய்லாட் ஐ-காதர்" நாள் எனப்படுகிறது.

955 - புனித ரோமப் பேரரசன் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தான்.

1519 - மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவில் நகரில் இருந்து புறப்பட்டன.

1675 - ரோயல் கிறீனிச் வானாய்வகத்துக்கான அடிக்கல் லண்டனில் நாட்டப்பட்டது.

1680 - நியூ மெக்சிகோவில் ஸ்பானிய குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது.

1741 - குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடனான போரில் டச்சுத் தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் என்பவனைச் சிறைப்பிடித்தார்.

1776 - அமெரிக்காவின் விடுதலைப் பிரகடன செய்தி லண்டனைப் போய்ச் சேர்ந்தது.

1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.

1809 - குவிட்டோ (தற்போதய ஈக்குவாடோரின் தலைநகர்) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1821 - மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.

1904 - ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.

1913 - பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் ந்கரில் அமைதி உடன்பாட்டை எட்டின.

1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1948 - ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.

1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது (www.ibiblio.org தரவின் படி).

2003 - யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமனம் புரிந்த முதலாவது மனிதர்.

2006 - திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 12:39 pm

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 11

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 9DU4FduQ36J1xk1fczq7+August-11

கிமு 2492 - ஆர்மீனியா அமைக்கப்பட்டது.

கிமு 480 - பாரசிகர்கள் கிரேக்கர்களை கடற்சமரில் வென்றனர்.

கிமு 586 - ஜெருசலேமில் சாலமோன் மன்னனால் கட்டப்பட்ட முதலாவது ஆலயம் பாபிலோனியர்களினால் அழிக்கப்பட்டது.

355 - நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியஸ் சில்வானஸ் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.

1786 - மலேசியாவில் பெனாங்க்கில் கப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவனால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.

1804 - இரண்டாம் பிரான்சிஸ் ஆஸ்திரியாவின் முத்லாவது மன்னன் ஆனான்.

1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.

1898 - அமெரிக்கப் படைகள் புவெர்ட்டோ ரிக்கோவின் மயாகெஸ் நகரினுள் நுழைந்தன.

1920 - லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது.

1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.

1960 - பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது.

1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.

1972 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.

1975 - போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் "மாரியோ லெமொஸ் பிரெஸ்" தலைநகர் டிலியை விட்டுத் தப்பினார்.

1984 - வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".

1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.

2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.

2003 - ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.

2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 12:39 pm

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 12

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 GFaKkxfNQyG2BdSAO1rj+August-12

கிமு 30 - மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.

1281 - மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.

1480 - ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.

1499 - வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.

1833 - சிக்காகோ அமைக்கப்பட்டது.

1851 - ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.

1877 - அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.

1883 - கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.

1914 - முதலாம் உலகப் போர்: பிரித்தானியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.

1952 - மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

1953 - சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

1960 - எக்கோ I என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.

1964 - இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.

1978 - ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவு, அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1981 - ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.

1985 - ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.

1985 - ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1990 - வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990 - அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

2000 - கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.

2005 - ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.

2005 - மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.

2005 - இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

2006 - இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவரான கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 12:40 pm

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 13

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 BTHPKTRQTyDaYYa27tuL+August-13

கிமு 3114 - மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது.

1415 - நூறு ஆண்டுப் போர்: இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் 8000 பேருடன் பிரான்சை அடைந்தான்.

1516 - புனித ரோமப் பேரரசன் ஐந்தாம் சார்ல்ஸ் நேப்பில்சையும் பிரான்சின் முதலாம் பிரான்சிஸ் மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1536 - ஜப்பானில் கியோட்டோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் கியோட்டோவில் இருந்த 21 நிச்சிரன் கோயில்களைத் தீக்கிரையாக்கினர்.

1849 - யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.

1913 - ஹரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார்.

1920 - போலந்து - சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.

1937 - ஷங்காய் சமர் ஆரம்பமானது.

1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.

1960 - மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1961 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு பேர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜேர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பேர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.

2004 - கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

2004 - புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 - 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.

2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 13, 2014 1:13 pm

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 103459460 வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் - Page 2 1571444738 :நல்வரவு: 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக