புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
52 Posts - 61%
heezulia
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
1 Post - 1%
viyasan
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
244 Posts - 43%
heezulia
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
13 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_m10வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 01, 2014 11:52 pm

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 1

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் 7c3DrbBsS6y9bjc9NEE6+August---1

கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.

1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.

1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.

1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1800 - பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.

1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.

1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2004 - பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.

2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத்
தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 02, 2014 12:16 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 2

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் D2xcO7SDRgKknBGDOezh+August-2

1610 - ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.

1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1798 - பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.

1870 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

1903 - ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.

1914 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.

1916 - முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.

1918 - முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.

1931 - இராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.

1932 - பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer).

1939 - அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க
அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.

1943 - போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.

1945 - இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நட்பு அணி நாடுகளின் பொட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது.

1968 - பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.

1973 - மான் தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - இத்தாலியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.

1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.

2006 - திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 02, 2014 1:14 pm

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 02, 2014 11:30 pm

Dr.S.Soundarapandian wrote:வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் 103459460

நன்றி ஐயா!



வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Aug 03, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 3

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் TM8acB3XQ90Gp8lFBrV7+August-3

435 - கொன்ஸ்டண்டீனபோலின் ஆயர் நெஸ்டோரியஸ் (நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர்) பைசண்டைன் பேரரசன் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.

1492 - கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார்.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கத்தோலிக்கர்களினால் வெளியேற்றப்பட்டனர்.

1645 - முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் புனித ரோமப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.

1678 - அமெரிக்காவின் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது.

1783 - ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.

1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.

1860 - நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.

1916 – ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் பங்களிப்புகளுக்காக லண்டனில் தூக்கிலிடப்பட்டார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.

1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1975 - மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.

1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1990 - காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில்
இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 8:04 am

இன்றைய சிறப்பு பதிவில் இந்தியாவில் என்ன
நடந்தது என்பதையும் தேடி சேர்த்தால் சுவை கூடும்...!
-
இன்று
-
தீரன் சின்னமலை நினைவு நாள்(1805)
-


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 04, 2014 12:32 pm

ayyasamy ram wrote:இன்றைய சிறப்பு பதிவில் இந்தியாவில் என்ன
நடந்தது என்பதையும் தேடி சேர்த்தால் சுவை கூடும்...!
-
இன்று
-
தீரன் சின்னமலை நினைவு நாள்(1805)
-


நன்றி ஐயா! அதையும் முயற்சி செய்கிறேன்.



வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 04, 2014 12:35 pm

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 4

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் IB3m1vHSiamAjhzOKo5w+August-4

70 - ரோமர்களால் ஜெருசலேம் நகரில் இரண்டாவது கோயில் அழிக்கப்பட்டது.

1578 - மொரோக்கர்கள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துக்கல் மன்னன் செபஸ்டியான் போரில் கொல்லப்பட்டான்.

1693 - சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது.

1704 - ஆங்கில, டச்சுக் கூட்டுப்படைகளினால் கிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது.

1789 - பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

1824 - ஒட்டோமான் பேரரசுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கொஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1860 - இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.

1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.

1906 - சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய இராச்சியம் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.

1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.

1936 - கிரேக்கத் தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தான்.

1946 - வடக்கு டொமினிக்கன் குடியரசில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டு 2,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர், ஆண்ட்ரூ குட்மன், ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். இவர்கள் ஜூன் 21 இல்
காணாமல் போயிருந்தனர்.

1975 - மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் AIA கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.

1984 - அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1987 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.

1991 - "ஓசியானோஸ்" என்ற கிரேக்க கப்பல் தென்னாபிரிக்காவில் மூழ்கியது. அனைத்து 571 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.

2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.

2006 - ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2006 - வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 5

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் Ycikdd4DSVWO8lfMwOSn+August-5

1100 - இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.

1305 - இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

1583 - சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ், நியூபவுண்லாந்தில் அமைத்தார்.

1689 - 1,500 இரக்கேசுக்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர்.

1806 - இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1870 - புருசியர்களுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் புருசியா வெற்றி பெற்றது.

1884 - விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1914 - ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.

1940 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.

1944 - போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.

1949 - எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.

1960 - புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 - 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1963 - ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

1969 - மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3,524 கிமீ) சென்றது.

1979 - ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.

1989 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.

2003 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2006 - வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஆகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 06, 2014 12:08 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 6

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் 2ftJPkWvTtWzzD4LICON+August-6

1661 - போர்த்துக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.

1806 - கடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.

1825 - பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் 10 கடற்படை படகுகள் பிரித்தானியப் படகுகளைத் தாக்கவென வட கடலை நோக்கிப் புறப்பட்டன.

1914 - முதலாம் உலகப் போர்: சேர்பியா ஜேர்மனி மீதும் ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில்
கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.

1952 - இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.

1960 - கியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.

1961 - வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.

1962 - ஜமெய்க்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1964 - அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.

1990 - இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

1991 - உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.

1996 - செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.

1997 - வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் வீழ்ந்ததில் 228 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

2006 - திருகோணமலையில் நோயாளரை ஏற்றி வந்த ஆம்பியூலன்ஸ் வண்டி எறிகணைத் தாக்குதலுக்குள்ளானதில் ஒரு நோயாளி கொல்லப்பட்டார்.




வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக