புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_m10தெரிந்து கொள்வோம்... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Sat Jul 26, 2014 5:51 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம்...

சின்னப்பிள்ளை அம்மாள்..!

தெரிந்து கொள்வோம்... - Page 2 KgbtFJcbTLSuhyne5PAl+7

அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார்.

பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு சாதாரண உறுப்பினராக சேர்ந்து, இன்று அதனுடைய முக்கிய செயலராக விளங்கி கொண்டிருக்கிறார். "களஞ்சியம்" என்பது சிறுசேமிப்பை வலியுருத்தும் ஒரு சேவை அமைப்பு.

அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்களிடையே சேமிப்பின் மேன்மையை வலியுறுத்தி "களஞ்சியத்தை" விரிவுபடித்தியவர்.இதனால் பலனடைந்த குடும்பங்கள் பல.

பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் "ஆரம்பத்தில் பத்து பேரிடம் இருந்து தலா இருபது ரூபாய் பெறப்பட்டு, இப்பொழுது, இந்தியா முழுவதும் சுமார் நான்கு லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது களஞ்சியம். மொத்த சேமிப்பு தொகை நூறு கோடியை எட்டி இருக்கிறது" என்றார்.

இவருடைய சேவையை பாராட்டி இந்திய அரசு "ஸ்திரீ சக்தி" விருதும் தமிழக அரசு "பொற்கிழி விருதும்" வழங்கி கவுரவித்தது. பிரதமரிடம் (வாஜ்பாய்) விருது வாங்கும் பொழுது, இந்தியப்பிரதமரே அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய பெருமை சின்னப்பிள்ளை அம்மாள் அவர்களையே சாரும்......


bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Sun Aug 31, 2014 6:39 pm


தெரிந்து கொள்வோம்... - Page 2 Yk111xyBQmmI1sxQhfyY+2



jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 01, 2014 1:45 pm

அருமையான பதிப்பு... தொடருங்கள்...


bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Tue Sep 23, 2014 6:43 pm

மிக்க நன்றி...

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Tue Sep 23, 2014 7:29 pm

விவேகானந்தர்

தெரிந்து கொள்வோம்... - Page 2 LweSnBxOTCiljnTr2crF+1

பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

சகோதர சகோதரிகள்

சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார்.[1]

இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.

கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்[4].

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!

இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.

என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


நன்றி விக்கிப்பீடியா



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 7:40 pm

நல்ல பகிர்வு பார்த்த சாரதி புன்னகை நன்றி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Wed Oct 08, 2014 7:46 pm

நன்றி...

bparthasarathi
bparthasarathi
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010

Postbparthasarathi Fri Jun 05, 2015 11:49 pm

காமராசரைப் பற்றிய கருத்துக்கள்:


தெரிந்து கொள்வோம்... - Page 2 O8WX8i16QuWIg3a8Dmcd+kamaraj1932


“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு மகாபுருசர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி

"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல் அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வாரென நான் நம்புகிறேன். -நேரு

“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" -பெரியார்.

“காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா காந்தி

"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாகப் பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம் சுப்ரமண்யம்

"காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்

"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கருணாநிதி

"காமராசர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், சுதந்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது." - மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமசு

விக்கிப்பீடியாவில் இருந்து...


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jun 06, 2015 3:13 am

முதல்வர்களே மிகுந்த அஹங்கரதொடு நடமாடும் இந்த களத்தில் ஒரு நாட்டின் பிரதமர் எப்படி நடந்து கொண்டார்.....அவருக்கு அந்த நேரத்தில் அவருடைய பதவியை விட அந்த அம்மாளின் செயலே பெரிதாக தோன்றியது . ..எவளோ பெரிய மனது படைத்த பெரிய மனிதர் வாஜ்பாய் அவர்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 1:38 am

காமராஜரைப் பற்றிய நல்ல பகிர்வு பார்த்த சாரதி.....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 08, 2015 7:25 am

தெரிந்து கொள்வோம்... - Page 2 103459460 தெரிந்து கொள்வோம்... - Page 2 3838410834

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக