புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
91 Posts - 61%
heezulia
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
6 Posts - 4%
viyasan
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
1 Post - 1%
eraeravi
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
283 Posts - 45%
heezulia
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
19 Posts - 3%
prajai
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வன்கொடுமைகள்...! Poll_c10வன்கொடுமைகள்...! Poll_m10வன்கொடுமைகள்...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்கொடுமைகள்...!


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 24, 2014 10:58 am

த்தியூர் விஜயாவின் மரணம், இந்தச் சமூகம் பெண்கள் மீதான வன்முறைகளை எவ்வளவு அலட்சியமாக அணுகுகிறது என்பதற்கு ஓர் உதாரணம். தனது 17-வது வயதில் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, 21 வருடங்கள் கழித்து இறந்துபோகும்போதும் அத்தியூர் விஜயாவின் அடையாளம் அவர் 'வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்’ என்பதுதானே!

குடும்பத்தில், சமூகத்தில் என எங்கும் அவரது அடையாளம் இதுவே. ஒரு பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எப்படிப் போராட வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிற அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் ஏன் போராட வருவது இல்லை என்ற கேள்விக்கும் விடையாக நிற்கிறார் அத்தியூர் விஜயா.

'வன்புணர்வில் இருந்து போராடி மீண்ட அத்தியூர் விஜயா இறந்துபோனார்’ என்ற வரிகளைப் படித்ததும், 'உண்மையிலேயே அவர் மீண்டாரா?’ என்று கேட்டாள் தோழி. 13 வருடங்கள் விடாது போராடியும், தனது வாழ்க்கையை ஒரே இரவில் நரகத்தில் தள்ளியவர்களுக்கு அவரால் தண்டனை வாங்கித் தரவே முடியவில்லை. விஜயாவின் புகைப்படம் பார்க்கும் எவருக்கும், 'என்னை விட்டுடுங்க’ எனக் கதறும் ஒரு பெண்ணைச் சூழ்ந்து நிற்கும் ஆறு போலீஸ்காரர்கள் பிம்பமே நினைவுக்கு வரும். அந்த போலீஸ்காரர்களில் ஒருவர் முகம்கூட நமக்குத் தெரியாது.

யாருக்கோ கணவனாக, அப்பாவாக, அண்ணனாக, மகனாக, மாமனாராக... எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இதே சமூகத்தில் அவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
விஜயாவுக்கு மட்டும் அல்ல... மதுரை அங்கம்மாள், சூர்யநெல்லி பெண் என, தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராகப் போராட வரும் எவருக்கும் இதுவே நடக்கிறது.

தன் கணவரைக் கொன்று, தன்னை வன்புணர்வு செய்த போலீஸாருக்கு எதிராக வழக்குத் தொடுத்து, நீதிமன்றங்களுக்கு வருடக்கணக்கில் நடந்துகொண்டே இருக்கிறார் அங்கம்மாள். அவரது மகனும் வழக்கறிஞர் ஆகிவிட்டார். சினிமாவில் வருவதுபோல் ஒரே சிட்டிங்கில், 15 நிமிடங்களில், அனல் பறக்கும் வாதங்கள் மூலம் அம்மாவுக்கு அவரால் நீதிபெற்றுத் தர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால், தன்னை வன்புணர்வு செய்து, தன் பிறப்பு உறுப்பில் லத்தி நுழைத்தபோது எப்படி வலித்தது என அம்மா சொல்வதை ஒரு மகன் கேட்க வேண்டியிருப்பது எவ்வளவு பெரிய யதார்த்த துயரம்?

போலீஸாருக்கு எதிராகப் புகார் சொன்னதாலேயே, பொய் வழக்கு, சித்ரவதைகள் என இந்தப் பெண்கள் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். காவலர்கள்(?) செய்த கொடுமை என்பதால், இந்தப் பெண்கள் எஃப்.ஐ.ஆர் போடவைப்பதில் இருந்தே தங்கள் போராட்டத்தைத் தொடங்கியாக வேண்டும். கூடவே தங்கள் குடும்பம், சமூகம் என நெருங்கியவர்களை தினம் தினம் சமாளித்தாக வேண்டும்.

அதனால்தானோ என்னவோ, 'ஸோ கால்ட்’ குடும்ப மதிப்பீடுகள் இல்லாத எளிய பெண்களே, இந்தப் பிரச்னைகள் பற்றி பொதுவெளியில் வாய் திறக்கிறார்கள். ஏனெனில், தனக்கு இப்படி அநீதி நடந்தது என வெளியே சொன்ன நிமிடத்தில் இருந்து ஒவ்வொரு நாளையும் நகர்த்துவதற்கு அதீத மனபலம் வேண்டும். இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களுக்குப் பயப்படத்தான் என்ன இருக்கிறது?

மலையாளத்தில் 'அச்சன் உறங்காத வீடு’ என்ற ஒரு படம். மூன்று மகள்களும் அப்பாவும் சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில், மூன்றாவது பெண் கடத்தப்பட்டு தொடர் வன்புணர்வுகளுக்கு ஆளாக்கப்படுவாள். சோர்ந்துபோயிருக்கும் மகளை எப்படிச் சரிசெய்வது எனப் புரியாமல், தன் இளைய மகளிடம் போலீஸும் அக்கம்பக்கத்தாரும் மனச்சாட்சியே இல்லாமல் நடந்துகொள்வதைப் பார்க்கச் சகிக்காமல் அந்தத் தந்தை அழுவது, வெளியே தெரியாமல் இன்றைக்கு எத்தனையோ குடும்பங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

தங்கைக்கு இப்படி நடந்ததால் திருமணமான அக்கா, தன் கணவர் வீட்டில் இருந்து குழந்தை பறிக்கப்பட்டுத் திரும்ப அனுப்பப்படுவாள். இரண்டாவது அக்காவுக்குத் திருமணம் நின்றுபோகும். பாதிக்கப்பட்ட மூன்றாவது பெண்ணை போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், மருத்துவப் பரிசோதனைகள்... என மாறி மாறி அழைத்துச் செல்வார் அப்பா. கடைசியில் துயரம் தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முயற்சிக்கும்போது, போலீஸ் அவர்களைத் தடுத்து தற்கொலை முயற்சிக்காகக் குடும்பத்தோடு சிறைக்கு அனுப்பிவைப்பார்கள்.

அந்தத் தந்தைக்கு மனநிலை பிறழ்ந்துபோகும். கைவிடப்பட்டு யாருக்கும் தண்டனை வாங்கித் தர முடியாத மனநிலை பிறந்த அவர், தன் பெண்ணின் வழக்கு கட்டுகளோடு கோர்ட்டுக்குத் தினமும் போய் உட்கார்ந்திருப்பார்.

பாதிக்கப்பட்ட 'சூர்யநெல்லி’ என்கிற பெண்ணின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்தப் படம். உண்மையில் பாதிக்கப்பட்ட அந்த சூர்யநெல்லி பெண்ணின் குடும்பம், தங்கள் அடையாளத்தை மறைக்க ஊர் ஊராக இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கும் இப்படி அக்காவின் திருமணம் நின்றுபோயிருக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் மனம் பிறழ்ந்து போயிருக்கலாம்.

பாலியல் வன்புணர்வு பற்றி எப்போதும் இரண்டே கருத்துகள்தான் இங்கே முன்வைக்கப்படுகின்றன. 'நடந்தது நடந்துபோச்சு... அதைத் தூக்கிப் போட்டுட்டு வாழணும்’ என்பது ஒன்று. 'போராடணும், கடைசி வரைக்கும் போராடணும்’ என்ற சிலிர்க்கவைக்கும் வாசகம் இன்னொன்று. பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்கள், அந்த நாட்களைக் கடந்து வந்திருக்கலாம். ஆனால், அது தரும் ஆழமான மனபாதிப்புகளில் இருந்து அவர்களால் வெளிவரவே முடியாது. எல்லா காயங்களும் அதன் வடுக்களைப் பதித்துவிட்டே செல்கின்றன!

சென்னையில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் அவளைச் சந்தித்தேன். கல்லூரிக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவள். ஆறு நாட்களுக்குப் பிறகு உடல் முழுக்க காயங்களோடு வீடு திரும்பிய அவளை, குடும்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 'ஓடிப்போயிட்டா!’ என்று அவர்களே முடிவுசெய்திருந்தார்கள்.

அவள் வன்புணர்வு செய்யப்பட்டுத் திரும்பி வந்தது ஓடிப்போனதைவிட அவமானம் தருவதாக இருந்தது. 'நீ போனவ, போனவளாவே இரு!’ என அவளது அம்மாவே அவளை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார். அவளுக்குக் கீழே இரு தங்கைகள் இருந்ததை நினைத்து அம்மாவுக்குப் பயம்.
அவளை நான் சந்தித்தபோது சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழிந்திருந்தன. எந்தத் தவறும் செய்யாமல் எல்லோராலும் தான் தண்டிக்கப்பட்டதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

பேசும்போது அவள் வாய் வெட்டிவெட்டி இழுத்தது. அவளது கை விரல்கள் விடாமல் ஆடிக்கொண்டே இருந்தன. ஒரு பேப்பரைகூட அவளால் பிடிக்க முடியவில்லை. ஒரே நாளில் படிப்பு, குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் இழந்ததும், உடல்ரீதியான வன்முறையும் சேர்ந்து அவளை அவ்வாறு மாற்றி விட்டிருந்தது.

அந்த இல்லத்தில் அவளையும் சேர்த்து அவ்வாறு பாதிக்கப்பட்ட 17 பெண்கள் இருந்தார்கள். அதில் 14 பேர் குடும்பத்தால் உதறப்பட்டவர்கள். நான் சென்ற அன்று, '22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற மலையாளப் படம் அவர்களுக்காகத் திரையிடப்பட்டது. படத்தின் இறுதியில் தன்னை ஏமாற்றிய காதலனின் ஆண் உறுப்பை நாயகி டெஸ்ஸா ஆபரேஷன் மூலம் அகற்றிவிடுவாள். அவன் அதை உணர்ந்து கதறித் துடிக்கிற வேளையில், அங்கிருந்த 17 பெண்களிடமும் வெளிவந்த உணர்வை எந்த வார்த்தைகளாலும், வெளிப்படுத்திவிட முடியாது.

ஒரு பெண் கதறி அழுதாள். ஒருத்திக்கு பயங்கரச் சிரிப்பு. சிலருக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. 'ரேப் பண்றது எல்லாம் ஒரு விஷயமா? கடந்து வரணும் பெண்களே...’ என்று கரிசனத்தோடு அறிவுரை கூறுபவர்களைப் பார்த்து, 'அந்தப் பெண்களோடு அமர்ந்து அந்தப் படத்தை ஒருமுறை பாருங்கள்’ என்று சொல்லத் தோன்றுகிறது.

'உங்க பொண்ணை நாலு பேர் சேர்ந்து ரேப் பண்ணி ரயில்வே டிராக்ல போட்டிருக்காங்க’ என்று போலீஸ் வந்து சொல்லும்போதே, 'அய்யய்யோ... இப்படிக் கிடந்து கஷ்டப்படுறதுக்கு, என் பொண்ணு செத்துப்போயிடலாமே!’ என்றுதான் அந்த அம்மாவால் அழ முடிந்தது. உண்மையில் வன்புணர்வில் பிள்ளைகள் இறந்துபோவதை நம் பெற்றோர் ஆறுதலாகத்தான் பார்க்கிறார்கள். 'நல்லவேளை... உயிரோடு இல்லை’ என்பதாக. எவ்வளவு கொடூர உண்மை இது!

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார்கள்தான். ஆனால், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? இல்லை! ஒவ்வொரு நாளும் குற்றவுணர்வு ஏற்படுத்தும் வார்த்தைகளை அவள் மௌனமாகக் கேட்கவேண்டியிருக்கும். 'அவரோ, அவங்க வீட்லயோ ஏதாவது சொன்னா... என்னால எதிர்த்து ஒண்ணும் சொல்ல முடியாது. என்னைக் கட்டுனதே பெரிய விஷயம்’ என உடன் இருப்பவர்களுக்குத் தியாகி பட்டத்தைத் தந்துவிட்டுத் தன்னைச் சுருக்கிக்கொள்வார்கள்.

ஆனால், வன்புணர்வு செய்த எவன் ஒருவனும் இப்படி தன் குடும்பத்தின் முன், சமூகத்தின் முன் வெட்கித் தலைகுனியவேண்டிய நிர்பந்தம் இங்கு இல்லவே இல்லை. 'ஆமா... செஞ்சேன்!’ என மீசையை முறுக்கிக்கொண்டு போய்க்கொண்டே இருக்க முடிகிறது.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் எனப் போகிற பெண்களுக்குத்தான் பிரச்னைகள் என்று இல்லை. அலுவலகத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து, அங்கே புகார் அளிக்கும் பெண்கள்கூட அதோடு தன் வேலையை மறந்துவிட வேண்டியதுதான். பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்களைப் பெரும்பாலான நிறுவனங்கள் கண்டுகொள்வதே இல்லை. 'தொல்லை பண்ற அளவுக்கு நீ ஏன் நடந்துக்கிற?’ என்ற அதிபயங்கரமான கேள்வி உடனே கேட்கப்படும். அந்தப் பெண் அதன்பிறகு பிரச்னைக்கு உரியவளாகப் பார்க்கப்படுவாள்.

அவளை அங்கே இருந்து வேலை நீக்கம் செய்வதைப் பற்றியே யோசிப்பார்கள். கொடுமையிலும் கொடுமையாக உடன் வேலை பார்க்கும் பெண்களே அந்தப் பெண்ணிடம் இருந்து தங்களை விலக்கிக்கொள்வார்கள்... 'எதுக்கு நமக்கு பிரச்னை..?’ என்பதாக! இது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எவ்வளவு அதிகாரத்தைத் தரும், அது தன் மேலே நாளை பாயலாம் என்பதை எல்லாம் மறந்தவர்கள் போலவே நடந்துகொள்வார்கள்.

ஐந்து வயது குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு ரத்தம் வழியக்கிடக்கும் எத்தனையோ புகைப்படங்களைப் பதற்றத்தோடு கடந்துகொண்டிருக்கிறோம். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அதை எப்படித் தாங்குகிறார்கள் என யோசித்தாலே பதறுகிறது. அதில் தப்பிப் பிழைத்த குழந்தைகள் அந்த உடல் வலியையும் மன வலியையும் எப்படிக் கடந்துபோவார்கள்? தாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டோம், வலித்தது என்பதை எந்த வார்த்தைகளில் இந்தச் சட்டத்தின் முன், போலீஸின் முன் நிரூபித்து நீதி வாங்குவார்கள்?

அரும்பாக்கம் வீடு ஒன்றின் மொட்டை மாடியில் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு குட்டிப் பாப்பா அவள். ஜட்டியோடு வெளியே விளையாட வந்த அந்தக் குழந்தையை ஒருவன் வெறித்துப் பார்த்து, இழுத்து அணைத்துக்கொண்டு குழந்தையின் வெற்றுடலைத் தடவ, ஓடிவந்து குழந்தையை இழுத்த அம்மா, பேய்த்தனமாக அவளை அடிக்க ஆரம்பித்தார். எதற்கு என்று புரியாமல் குழந்தை கதறி அழ, கூடவே இயலாமையில் அம்மாவும் அழுதுகொண்டிருந்தாள்.

இந்தக் காட்சி மனதில் நிழலாடும்போது எல்லாம் பதற்றத்தில் உடல் பதறுகிறது. அந்தப் பாப்பா என்ன தவறு செய்தாள்? எதற்கு அடி வாங்குகிறாள்? தப்பு செய்தவனைத் தட்டிக் கேட்க முடியாத இயலாமையை அந்தத் தாய்க்குள் விதைத்தது யார்?

சமூகமும் யதார்த்தமும் இப்படித்தான் அவநம்பிக்கை சூழ்ந்து இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைந்து கிடைக்கும் நீதிதான், அதேபோல பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தைரியத்தைத் தரும். ஒரு நொடிகூட என் மீதான வன்முறையைச் சகிக்க முடியாது என்ற நிலைதான் குற்றத்தைக் குறைக்க முடியும். ஆனால், யதார்த்தம் தலைகீழாக இருப்பதை என்ன சொல்ல?

இந்த எல்லா அபத்தங்களையும் மீறித்தான், இதே சமூகத்தில் விஜயாவும் அங்கம்மாளும் போராடி இருக்கிறார்கள் என்பதுதான் சற்றே ஆறுதலான செய்தி. அவர்கள் தோற்றுப்போயிருக்கலாம்; ஆனால் போராடியிருக்கிறார்கள். எதன் பொருட்டும் என்னை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதைக் கொஞ்சம் சத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மறைந்து வாழ்வதைவிட, ஒளிந்து ஓடுவதைவிட எதிர்கொள்வது சிறந்தது எனக் கற்றுத் தந்திருக்கிறார்கள். அடர் இருட்டில் சிறு ஒளிதான் இது. ஆனால், இருட்டைவிட துளி ஒளி மேலானது!

நன்றி: விகடன்.




வன்கொடுமைகள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவன்கொடுமைகள்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வன்கொடுமைகள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu Jul 24, 2014 12:36 pm

தோழி உங்களோடு சேர்ந்து நானும் ஆதங்கம் கொள்கிறேன். இதற்கெல்லாம் ஒரு முடிவில்லையா? நம் பெண் சமுதாயத்திற்கு ஒரு விடிவில்லையா? பெண்கள் மடடும் அல்லாது ஏதுமறியா குழந்தைகளையும் .. வெறிப்பிடித்த மிருகங்களை தண்டிக்க யாருமில்லையேää இந்நிலையில் சமூக பொறுப்பில் பெரிய பதவியில் இருக்கும் சிலரே " கடவுளே வந்தாலும் இதெல்லாம் ஒண்ணும் பண்ணமுடியாது " என கூறும் அலட்சியப்போக்கை என்னென்று சொல்வது நாம்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 25, 2014 12:15 am

lakshanika1@gmail.com wrote: இந்நிலையில் சமூக பொறுப்பில் பெரிய பதவியில் இருக்கும் சிலரே " கடவுளே வந்தாலும் இதெல்லாம் ஒண்ணும் பண்ணமுடியாது " என கூறும் அலட்சியப்போக்கை என்னென்று சொல்வது நாம்.

இப்படி சொல்லுபவர்களையும் சுட்டு தள்ளவேண்டும்.

இங்கே, எனக்கு தங்க மீன்கள் - ராம்மின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. "மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல என்று..."

பெண்களை கொண்டாடும் ஆண்கள் நிறைந்த நம் தேசத்தில் தான், சில புல்லுருவிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிலரால் தான் நல்லவர்களையும் சேர்த்து சந்தேகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பது வேதனைக்குரியதாக தான் இருக்கிறது.  

இவர்களை அடியோடு அழிக்க வேண்டுமானால், ஆயுள் மற்றும் தூக்கு தண்டனையெல்லாம் கூடாது. ஏனென்றால், மரண தண்டனை விதித்தால் தான் உடனே அத்தனை அமைப்புகளும் 'பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை தான் தீர்வா...?' என்று கொடி பிடித்து கொள்கிறார்களே...?

ஆகவே, இவர்களை சுதந்திரமாக நடமாட விட்டு விடவேண்டும். ஆம்! வன்புணர்வுக்கு காரணமாயிருந்ததை வெட்டி எரிந்து விட்டு.... இவர்களை சுதந்திரமாக(!) இருக்க விடவேண்டும். இதில் மட்டும் கருணையே காட்டகூடாது. அதிலும் பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையே நஞ்சாக்கி நாசமாக்கி விடும் கயவர்களை விடக்கூடாது, விடவே கூடாது.




வன்கொடுமைகள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவன்கொடுமைகள்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வன்கொடுமைகள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Fri Jul 25, 2014 12:00 pm

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென்று என்பதனை கருத்திற் கொண்டு அரசாங்கம் நம் முடிவை அங்கீகரிக்க வேண்டும் .

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jul 25, 2014 12:21 pm

வன்கொடுமைகள் - பெண்ணிற்கு ஏற்படும் இன்னல்களை தெளிவாய் விளக்கியுள்ளது.. இருப்பினும் இது போன்ற காமுகர்கள் இன்னமும் சமுதாயத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. குற்றம் சாட்டப்பட்ட நபரை (அவன் யாராக இருந்தாலும்), அவன் குற்றவாளி என்று முடிவான பின் கொடுக்கப்படும் தண்டனை மிகக் கொடியதாக இருக்க வேண்டும். மேலும் பாலியல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கப் படவேண்டும். வாய்தா கொடுக்கவே கூடாது.. ஏனெனில் வாய்தாவால் வாழ்ந்து கொண்டிருப்போர் ஏராளம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக