புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_m10ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும்


   
   
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Sun Jul 20, 2014 6:53 pm

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0

பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 26.07.2014 சனிக்கிழமை

அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் புனர்பூசம் நட்சத்திரம் அமைந்திருப்பதால் மிகவும் சிறப்பானதாக

கணிக்கப்பெறுகின்றது.





வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும்

நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும்

பூமி, சூரியனையும் சுற்றி வருவதானதுநாமும் உறுண்டு கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்ற நிகழ்வாகும்.

சந்திரன் பூமியை வலம் வருவதோடு பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருவருகின்றமையால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. பூமி

தனது அச்சில் 231/2 பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன.





சில இரவுகளில் பூமியில் உள்ளோருக்கு சந்திரனைக் காண முடிவதில்லை. காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும்

இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வருகின்றது. அப்போது பூமியில் உள்ளோருக்கு சந்திரன்

தெரிவதில்லை. வேறு விதமாக கூறுவதாயின் சந்திரன் தானாக ஒளிர்வதில்லை சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பதனால் ஒளிர்வது

போல் தோற்றமளிக்கின்றது. அதனால் பூமிப்பக்கம் இருக்கும் சந்திரனின் சூரியஒளி படது இருப்பதனால் எம்மால் சந்திரனைப் பார்க்க

முடிவதில்லை. அன்றைய தினமே அமாவாசை திதி என அழைக்கப்பெறுகின்றது.





ஆனால் சில இரவுகளில் சந்திரனின் முழுத் தோற்றத்தையும் பூமியில் உள்ளோரால் பார்க்க முடிகிறது. காரணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சஞ்சரித்த சந்திரன் சுமார் 15 நாட்களில் பூமியின்மறுபக்கத்திற்கு சென்று விடுகின்றது, அதாவது; சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருகின்றது. இப்போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. அதனால் சந்திரன்பூமியில் உள்ளோருக்கு பிரகாசமாகத் தோற்றமளிக்கின்றது. இந் நாளை பூரணை அல்லது பௌர்ணமி திதி என்று அழைக்கப்பெறுகின்றது.





சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால்

மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சூரியனைப் "பிதிர் காரகன்" என்றும்,

சந்திரனை "மாதுர் காரகன்" என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும்

தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்..





இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடிகின்றனர்.





அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.





அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.





இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.





அதேபோல், சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் அமைவதால், அந்த மாதத்தில் வரும் அமாவாசைத் திதியும் பிதுர் வழிபாட்டிற்கு சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது. ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் ய தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.







இந்துக்களின் நம்பிக்கை:





பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம்

என்பது இந்துக்களின் நம்பிக்கை.





ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.





அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.





இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.





இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதிகளாக எம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி

பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும்

என்பது ஐதீகம். யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில்

"வீட்டுக்குப் படைத்தல்" என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையி யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப்

படைத்து பிதிர்களை மகிழ்விப்பர்.





சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.





அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும், சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும் சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.





யாழ்ப்பாணத்தில் மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்திலும் (கீரிமலைக் கேணி, கடல்), திருவடிநிலை தீர்த்தக்

கரையில் தீர்த்தமாடியும்; மட்டக்களப்பு வாழ் மக்கள் மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடியும்; திருகோணமலை வாழ்

மக்கள் கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடியும்; மன்னார் வவுனியா மக்கள் திருக்கேதீஸ்வரம் பாலாவியில் தீர்த்தமாடியும்; கொழும்பு வாழ்

மக்கள் மோதர-முகத்துவாரம்-கடலில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தி வருகின்றனர்.





இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.





இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.





எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.





சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.





மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.





ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக

அமாவாசை, பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை

மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து

வரலாம்.





திருவள்ளுவர் திருக்குறளில்,





தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்

தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை





என்கிறார் திருவள்ளுவர்.





“தென்புலத்தாராகிய முன்னோர், கடவுள், விருந்தினர், உறவினர், தன் குடும்பம் ஆகிய ஐந்து பேரையும் இல்லறத்தில் இருப்பவர் காப்பாற்ற

வேண்டும்…’ என்பது இதன் பொருள்.





இதில், முதலிடத்தை முன்னோருக்கு தருகிறார் வள்ளுவர். இதிலிருந்தே நம் முன்னோருக்கு வாரிசுகள்

செய்ய வேண்டிய கடமை தெளிவாகிறது. அவ்வகையில், தை அமாவாசையையும், ஆடி அமாவாசையையும் “முன்னோர் திருநாள்’ என்றே

அழைக்கலாம். இந்த நன்னாளில், நம் முன்னோரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.





சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் மனித உருக் கொண்டு, பூலோகத்திலுள்ள புஷ்பவனக் காட்டுக்கு வந்தன. இவை, அங்கு மலர் பறித்து, இத்தலத்து சிவனைப் போற்றி வழிபாடு செய்தன. கலியுகம் பிறந்தவுடன், “இனி, நல்லதுக்கு காலம் இல்லை. அதனால், பூலோகத்தில் இருப்பது நல்லதல்ல…’ என்று இறைவனிடம் கூறிவிட்டு, இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச்சென்று விட்டன. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து, இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர், இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி, கதவை திறந்தனர்.





வேதங்கள் இங்கு தங்கியிருந்து இறைவனை வணங்கியதால், இவ்வூர், “வேதாரண்யம்’ என்று பெயர் பெற்றது. திருமறைக்காடு என்று தமிழில் சொல்வர். கடற்கரை ஓரத்தில் கோவில் இருக்கிறது. சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான நாவுக்கரசரும்,

ஞானசம்பந்தரும் சிவத்தலம்தோறும் சென்று, சிவனைப் போற்றி, பதிகம் பாடி வந்தனர். அவர்கள் ஒரே சமயத்தில் வேதாரண்யம்

வந்தடைந்தனர். மக்கள் பக்கத்து வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று வழிபட்டதைக் கண்ட அவர்கள் வருத்தமடைந்தனர்.





நாவுக்கரசர் பத்து பாடல்கள் (பதிகம்) பாடியவுடன், கதவு திறந்தது. பின்னர் கதவை மூடுவதற்கு ஒரே ஒரு பாடலை சம்பந்தர் பாட, கதவு மூடிக்

கொண்டது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய

நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த

பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம். பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும்

என்பது ஐதீகம்.





பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம். இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்தக் கடல் தீர்த்தம். இதில், ஒருமுறை நீராடுவது ராமேஸ்வரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பர்.





ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி மாத, மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். இவ்வூர் அருகிலுள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிக விசேஷமானது. அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாடு செய்வோர் மட்டுமின்றி, மற்றவர்களும் புனித நீராடலாம்.





இங்கே சுவாமியும், அம்பாள் வேதநாயகியும் மணமக்களாக எழுந்தருளியுள்ளனர். கருவறையில் லிங்க வடிவத்தின் பின்புறம் இந்த திருமணக் காட்சியைக் காணலாம். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, நோயற்ற வாழ்வு பெற இவர்களை வணங்குவர். நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது.


நன்றி



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 20, 2014 7:20 pm

ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் 103459460 ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் 3838410834 ஆடி அமாவாசையும்(26.07.2014) அதன் மகிமையும் 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 12:57 pm

நல்ல விவரம் புன்னகை







http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக