புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது

செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Sat Jul 19, 2014 3:15 pm

கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  201407172053491971_Frequently-in-childrens-body-on-fire_SECVPF
கோத்தகிரி அருகே சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது.கலெக்டரின் உத்தரவின் பேரில் வீட்டை சுற்றி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவில் பூசாரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 41). இவருடைய மனைவி பிரியா (38). இவர்களுக்கு ராகுல் (14), கோகுல் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார். மேலும், இவர் ஹெத்தையம்மன் கோவில் பூசாரியாக உள்ளார்.

சீருடையில் தீப்பிடித்தது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல், கோகுல் ஆகியோர் பள்ளிக்கு புறப்படும் போது அவர்கள் அணிந்து இருந்த சீருடையில் திடீரென்று தீப்பிடித்தது. பின்னர் மாணவர்கள் கூச்சலிடவே அவர்களுடைய தாயார் பிரியா தீயை அணைத்தார். இதில் புத்தகப்பை முற்றிலும் எரிந்து சாம்பலானது. பின்னர் அவர்களுடைய உடல்களில் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சிறுவர்களின் வீட்டில் பேய் உருவம் தெரிவதாகவும், வீட்டில் வைத்து இருக்கும் பொருட்கள் அனைத்தும் தானாகவே தூக்கி வீசப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்சினை காரணமாக சிறுவன் ராகுல் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் சங்கர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அந்த சிறுவர்களின் வீட்டின் முன்பு பாதுகாப்பிற்காக 4 போலீசாரை நியமிக்க கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார். இவர்கள் அந்த சிறுவர்களின் வீட்டின் முன்பு தங்கியிருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவுடன் சிறுவர்களின் உடலில் தீப்பிடிப்பது நின்று உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

தந்தை பேட்டி

இந்த சம்பவம் குறித்து சிறுவர்களின் தந்தை சுப்பிரமணி கூறியதாவது:–

கக்குச்சி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் எனது மூத்தமகன் ராகுல் 10–ம் வகுப்பும், இளைய மகன் கோகுல் 8–ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 10–ந் தேதி இரவு ராகுல், கோகுல் ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுடைய படுக்கையில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அந்த தீயை அணைத்தேன். பின்னர் ஜனவரி மாதம் 17–ந் தேதி இரவு 8.30 மணிக்கு அவர்கள் அமர்ந்து இருந்த படுக்கை மற்றும் கம்பளி ஆடைகளில் தீப்பிடித்தது. அப்போது இவர்களுடைய அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர். பின்னர் இவர்களுடைய உடல்களில் பல முறை தீப்பிடித்து காய அடைந்தனர். இதையடுத்து, அவர்களை கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றேன். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களுக்கு உடல் ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை என்று கூறினார்கள்.

பரிகார பூஜையிலும் தீ

இதையடுத்து, கூக்கல் கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் அவர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் கைகளில் வைத்து இருந்த வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தன.

இதைத்தொடர்ந்து எனது மகன்களுடன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாத்தான் மடத்தில் 20 நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது நிலப்பிரச்சினை காரணமாக எனது மகன்களுக்கு சிலர் செய்வினை வைத்து இருப்பதாக மாந்திரீகர் ஒருவர் தெரிவித்தார். இதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்காக பல்வேறு பரிகாரங்கள் செய்யப்பட்டன. அங்கு தங்கி இருந்த போது இவர்களுடைய உடல்களில் தீப்பிடிக்கவில்லை. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் எங்களுடைய வீட்டிற்கு திரும்பினோம். பின்னர் வீட்டில் இருந்த பழைய துணிகள் மற்றும் தீயில் எரிந்து போன பொருட்களை அகற்றி விட்டு வீட்டிற்கு பெயிண்ட் அடித்தோம். அப்போது வீட்டில் பேய் உருவம் போல் சுவற்றில் ஒரு படம் வரைந்து உள்ளது.

மேலும் வீட்டில் வைத்து இருந்த கியாஸ் அடுப்பு தானாக எரிகிறது. இதேபோல் வீட்டில் புதிதாக சமைக்கும் உணவு பொருட்கள் 10 நிமிடங்களில் கெட்டு போய்விடுவதுடன் நிறமும் மாறி விடுகிறது. எனது மகன்களின் உடலில் தீப்பிடித்ததால் சேதம் அடைந்த பொருட்கள் மற்றும் பரிகார பூஜைகளுக்காக ரூ.13 லட்சம் வரை இதுவரை செலவு செய்து உள்ளேன். ஆனால் அவர்களுக்கு இந்த பாதிப்பு மட்டும் குறைய வில்லை.

தாயார் பேட்டி

சிறுவர்களின் தாயார் பிரியா கூறியதாவது:–

எங்களுடைய வீட்டில் கடந்த 8 மாதங்களாக பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ராகுல், கோகுல் ஆகியோரின் உடல்களில் தானாக தீப்பிடித்து வருவதால் வீட்டில் வைத்து இருந்த துணிமணிகள், பீரோ, கட்டில், டி.வி. உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டன. இதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்களுடைய வீட்டில் இந்த சம்பவங்கள் நடைபெறுவதால் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்து பார்த்தோம். ஆனால் அங்கேயும் அவர்களுடைய உடல்களில் தீ பரவியது. ஆரம்ப காலத்தில் நாங்கள் கூறியதை எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாரும் நம்பவில்லை. தற்போது அனைவரும் பீதி அடைந்து உள்ளனர். மேலும் எங்களுக்கு உதவி செய்பவர்களின் வீடுகளிலும் தீவிபத்து ஏற்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களுடைய வீட்டுக்கு வந்த உறவினர் சிக்கன்னன் (வயது 60) என்பவர் எனது மகன்கள் மீது தானாக தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து மயக்கம் அடைந்தார். பின்னர் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதனால் எங்களுடைய வீட்டிற்கு உறவினர்கள் யாரும் வருவதில்லை.

பள்ளிக்கு செல்லமுடியாமல் தவிக்கிறேன்  சிறுவன் ராகுல் கண்ணீர்

உடலில் தீபிடிப்பதால் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் தவிக்கிறேன் என்று பாதிக்கப்பட்ட சிறுவன் ராகுல் கூறினான்.

இதுகுறித்து ராகுல் கண்ணீர் மல்க கூறியதாவது:–

என்னை கண்டாலே பீதி

கடந்த நவம்பர் மாதம் எங்களுடைய வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எனது வயிற்றின் அடிப்பகுதியில் தானாக தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பயத்தில் அலறினேன். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தினால் எனது உடலில் லேசான தழும்பு ஏற்பட்டது. எனது உடலில் பல முறை தீப்பிடித்ததால் அதிர்ச்சி அடைந்த எனது பெற்றோர் பல்வேறு கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்தனர். அப்போது நான் கோவில் பூசாரிகள் கொடுக்கும் பழம், தேங்காய்களை கையில் எடுத்தால் அவை தீப்பற்றி எரியும். இதனால் எங்களுடைய கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என்னை கண்டாலே பீதி அடைந்து வருகின்றனர்.

நான் 10–ம் வகுப்பு படித்து வருகிறேன். ஆனால், நான் பள்ளிக்கு சென்றால் எனது கழுத்தை யாரோ ஒருவர் நெரிப்பதுடன், வாயை பொத்திக் கொள்வது போல் இருக்கும். இதனை மீறி நான் பள்ளிக்கு சென்றால் பள்ளியிலேயே மயக்கம் போட்டு விழுந்து விடுவேன். இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் என்னை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்கள். இதனால் நான் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவன் கூறினான்.

தொடர்ந்து அவனது தம்பி சிறுவன் கோகுல் கூறியதாவது:–

நான் தற்போது 8–ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது உடலில் கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் தீப்பிடிக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தந்தை கேரளாவுக்கு என்னை அழைத்து சென்றார். அங்கு எனக்கு பல்வேறு பரிகாரங்கள் செய்தனர். இதனால் தற்போது எனது உடலில் தீப்பிடிப்பது இல்லை. இதனால் நான் வழக்கம் போலவே பள்ளிக்கு சென்று வருகிறேன்.என்றாலும் எப்போது உடலில் தீப்பிடிக்குமோ என்றுபயமாக இருக்கிறது.

இவ்வாறு கோகுல் பீதியுடன் கூறினான்.

தீப்பிடித்த துணிகளின் ஆய்வறிக்கைக்கு பிறகு மேல் நடவடிக்கை

கலெக்டர் சங்கர் பேட்டி

தீப்பிடித்த துணிகளின் ஆய்வறிக்கைக்கு பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சங்கர் கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:–

ஆய்வறிக்கை

கூக்கல் கிராமத்தை சேர்ந்த ராகுல், கோகுல் ஆகிய சிறுவர்களின் உடல்களில் தானாக தீப்பிடிப்பது இல்லை. ஆனால் அந்த சிறுவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களின் வீடுகளில் தீப்பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த சிறுவர்களின் வீடுகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து அறிய சென்னையில் இருந்து தட அறிவியல் குழுவினர் இங்கு ஆய்வு செய்து உள்ளனர். மேலும் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படும் துணிகளை அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சோதனை அறிக்கை வந்த பிறகே இந்த சம்பவங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் கூறியதாவது:–

மாவட்ட கலெக்டர் சங்கரின் உத்தரவின் பேரில் அந்த சிறுவர்களின் வீட்டு முன்பு 4 போலீசார் இரவு பகல் பராமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் பில்லி, சூனியம் இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. மேலும், இந்த சம்பவங்கள் எப்படி நடைபெறுகின்றன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சிறுவர்களின் வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்த 2 நாட்களில் அவர்களுடைய உடல்களில் தீப்பிடிக்கவில்லை. இந்த சம்பவத்தில் யாருக்கேனும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு டாக்டர்கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஆல்துரைகூறியதாவது:–

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூலி தொழிலாளியின் 2 மாத குழந்தையின் உடலில் தானாகவே தீப்பிடித்தது. இந்த குழந்தைக்கு ‘‘ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்‘‘ என்ற அபூர்வ நோய் இருந்தது. இதேபோல் இந்த சிறுவர்களுக்கும் இந்த நோய் உள்ளதா? என்பதை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இதுகுறித்து அவர்களுடைய பெற்றோருக்கு பல முறை எடுத்து கூறியும் அவர்கள் மருத்துவ பரிசோதனை இதுவரை செய்யவில்லை. மருத்துவ பரிசோதனை செய்தால் தான் இதற்கான காரணம் என்ன என்பது தெரியவரும். பின்னர் அவர்களுக்கு சென்னை அல்லது கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக