புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
85 Posts - 79%
heezulia
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
250 Posts - 77%
heezulia
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கயா' யாத்திரை !

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 7:48 pm

First topic message reminder :

'கயா' யாத்திரை !
'கயா' யாத்திரை !  - Page 5 KXNVXwN6RWqJUFE6krT9+download

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் புன்னகை
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு சோகம் மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி சோகம் )

'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 11:53 am

ஆச்சு அம்மாக்கு 16 பிண்டங்கள் போட்டாச்சு, மிச்சம் இருப்பதை நான் முன்பே  சொன்னது  போல இங்கு நம் பித்ருக்களுக்கு  மட்டும் இல்லை.............. தாய், தந்தை, உறவினர், வம்சத்தில் நற்கதி பெறாதவர், துர்மரணம் எய்தவர், தனிஷ்டா பஞ்சமி இன் போது இறந்தவர்கள் , விபத்தில் இறந்தவர்கள்,  பல் முளைத்திடாத சிசுக்கள், வன விலங்குகளால் மரணமுற்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், பசி- தாகம் இவற்றால் மரித்தவர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வளர்ப்பு பிராணிகள், இன்னலுற்றபோது உதவியோர், நிழல் கொடுத்த மரங்கள், வழி காட்டியவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மொத்தத்தில் யார் வேண்டுமானாலும், இறந்த எவருக்காகவும் போடலாம்.

எனவே , வாத்தியார் " நீங்க கொண்டுவந்துள்ள லிஸ்ட் படி மத்த எல்லோருக்கும் பிண்டம்  வையுங்கோ"  என்று சொல்லி அமர்ந்தார். நான் முன்னமே சொன்னேன் இல்லையா, நாம் யாருக்கு வேண்டுமானாலும் கயாவில் பிண்டம்   போடலாம் என்று, அது யார் யார் என்று எழுதி  கை இல் வைத்துக்கொள்வது நல்லது. அங்குள்ள பதட்டத்தில் யாரையாவது விட்டு விட்டால்? .....எனவே ஒரு லிஸ்ட் ஆக எழுதி எடுத்துக்கொள்வது நல்லது. நாங்களும் அப்படி ஒரு லிஸ்ட் வைத்திருந்தோம். அதன்படி கிருஷ்ணா அப்பா மற்றும் அனைவரும் அவரவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பிண்டம் வைத்தார்கள்.

'கயா' யாத்திரை !  - Page 5 85IabWVdSmWNXA0FYsEM+mukthinath5b

எல்லோரும் பிண்டம் வைத்தானதும் அவற்றை இலைகளில் எடுத்துக்கொள்ள சொன்னார்கள். ராம் மந்திர் அருகில் இருந்த 'விஷ்ணு பாதம்' கோவிலுக்கு அழைத்து சென்றார்கள். அங்கு இருந்த 'கயா ப்ராம்ஹனரிடம்' தக்ஷனை கொடுத்து அனுமதி பெற்றுக்கொண்டு, கோவிலுக்கும் அன்ன தானத்துக்கும் பணம் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று அங்கு நட்ட நடுவில் இருந்த 'விஷ்ணு பாதத்தில்' இந்த  பிண்டங்களை சமர்ப்பிக்க சொன்னார்கள். அப்படியே செய்தோம். அந்த பாதத்தை தொட்டு  வணங்கினோம்.  

'கயா' யாத்திரை !  - Page 5 BhUVSMNzRdCt3pyZi8J1+Vishnu-Padam-Temple-SMR044
(இதுவும் நெட் இல் எடுத்த போட்டோ தான், நான் எடுக்கலை புன்னகை )

அழகாக வெள்ளி கவசம் சார்த்தி வைத்திருக்கிறார்கள். சுற்றிலும் பகவான் விஷ்ணு கதாதரராய் நிற்கும் மூர்த்தம் , மஹாலக்ஷ்மி போல நிறைய விக்ரகங்கள் இருந்தது. ஆனால் நின்று பார்க்கத்தான் முடியலை. அங்கிருந்த பண்டாக்கள் - கோவில் பூசாரிகள்   எல்லோருமே பணமே குறியாக இருக்கா. நாம ஓரு செகண்ட் நின்னா போறும், பெருமாள் மேலே இருந்து ஒரு மாலை அல்லது ஒரு புஷ்பம் எடுத்து போட்டு அல்லது கொடுத்து விட்டு 50 ருபாய் கேட்கறா. எனக்கும் அப்படி ஆச்சு, மகா லக்ஷ்மி மேலே இருந்து ஒருமாலை எடுத்து எனக்கு போட்டுவிட்டு, பணம் கேட்டார், மீற முடியாமல் தந்தோம். எங்களை கூப்பிட்டுகொண்டு வந்த மாமா, இதுக்கு த்தான் சொன்னேன் சீக்கிரம் வாங்கோ என்று, நிக்காதிங்கோ  என்கிறார். பின் எப்போதான் அந்த சுவாமிகளை எல்லாம் பார்க்கிறது? புரியாமல் அப்படியே அவர் பின் வந்துட்டோம் சோகம்  

பிறகு அவர் சொன்னார் வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் அல்லது ஜூஸ் குடியுங்கோ , நீங்க சாப்பிட சாயங்காலம் ஆகும் என்று. எனவே நாங்கள் 'ஜில்' என்று தண்ணீர் குடித்தோம். எனக்கு கொஞ்சம் மயக்கம் போல வந்தது , தண்ணீர் குடித்ததும் சரியாச்சு.

மீண்டும் அனைவரும் ராம் மந்திர் சென்றோம். அங்கு மறுபடியும் எல்லோரும் வரிசையாக அமர்ந்து,' ஹிரண்ய ஸ்ரார்த்தம்' என்று சொல்லக்கூடிய அக்னி வளர்த்து ஸ்ரார்த்தம் செய்தார்கள். பிறகு எல்லோருமாக கிளம்பி காலை சென்ற சத்திரத்துக்கு போனோம். அங்கு ஒவ்வொரு தம்பதிகளுக்கும் 2 பேர் வீதம் 'ப்ராம்னாரத்தம் '  என்று சொல்லக்கூடிய 2 பிராமணர்களை ஏற்பாடு செய்திருந்தார் சீனா மாமா. அவர்கள் வருவதற்குத்தான் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. 2 மணி சுமாருக்கு அவர்கள் வந்தார்கள். அவர்கள் எல்லோருமே கயா பிரமணர்கள் நாம் அவர்களுக்குத்தான் கால் அலம்பி, வேஷ்டி கொடுத்து சாப்பாடும் போடணும்.

வேஷ்டிகள் மற்றும் உத்ரீயங்கள்   நாங்கள் இங்கிருந்தே வாங்கி சென்றிருந்தோம். எனவே, அவர்கள் வந்ததும் நமக்காக  வந்திருந்த
பிரமணர்களை வரித்து, உள்ளே அழைத்துச்சென்று , அவர்களின் கால் அலம்பி, துடைக்க துணி கொடுத்து, வேஷ்டி உத்ரீயம் தந்து, இலை இல் அமரச்செய்தோம். நான் முன்பு சொன்னதை போல நாம் இங்கு கயா பிரமணர்களை மட்டுமே 'ப்ராம்னாரத்தம் '  என்று வரிக்க முடியும். எனவே குட்டி குட்டி பசங்க கூட வருவா. எங்களுக்கு ஒரு பெரியவரும் ஒரு குட்டி பையனும் வந்தார்கள்.

அந்த பையன் உள்ளே வரும்போதே , அது இட்டுக்கொண்டிருந்த 'கோபி சந்தனமும், கொஞ்சம் தூக்கின பல்லும்' எனக்கு ரொம்ப பிடித்து விட்டது, 'ஆஹா என்ன லக்ஷணமாய் இருக்கான், இவனே நமக்கு வந்தால்...............' என ஆசையாக இருந்தது. பார்த்தால் பகவத் சங்கல்பம் அவனே - அந்த குட்டி பையனே - எங்களுக்காக வந்துட்டான் . எனக்கு ரொம்ப   சந்தோஷமாக இருந்தது. புன்னகை

தொடரும்.........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 24, 2014 5:34 am

பேஷ் பேஷ் , கயா போய் வந்தீர்களா , நல்ல காரியம் .
உங்கள் தொடரை இன்று தான் பார்த்தேன் . இனிமேல் தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும் . பஹாமாஸ் தொடரில் சிறிது மும்முரமாக இருந்து விட்டேன் .
எனது அண்ணன் ,மன்னி , எங்கள் தாயாரோடு சென்று ,காசி ,கயா எல்லாம் சென்று ஸ்ரார்தங்கள் செய்து , சுமங்கிலி பூஜை ,முடித்துக் கொண்டு வந்தார் , 1980 இல்
கூடிய சீக்கிரத்தில் உங்கள் தொடரை படிக்கிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 24, 2014 12:38 pm

T.N.Balasubramanian wrote:பேஷ் பேஷ் , கயா போய் வந்தீர்களா , நல்ல காரியம் .
உங்கள் தொடரை இன்று தான் பார்த்தேன் . இனிமேல் தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும் . பஹாமாஸ் தொடரில் சிறிது மும்முரமாக இருந்து விட்டேன் .
எனது அண்ணன் ,மன்னி , எங்கள் தாயாரோடு சென்று ,காசி ,கயா எல்லாம் சென்று ஸ்ரார்தங்கள் செய்து , சுமங்கிலி பூஜை ,முடித்துக் கொண்டு வந்தார் , 1980 இல்
கூடிய சீக்கிரத்தில் உங்கள் தொடரை படிக்கிறேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1075513

ஆமாம் ஐயா, ஜூன் 26 அங்கு - கயாவில் ஸ்ரார்தங்கள் செய்து வந்தோம். நாங்கள் ( வைஷ்ணவர்கள்) கயாவில் மட்டுமே பிண்டங்கள் போடுவது வழக்கம் . எனவே, கயா மட்டும் சென்று வந்தோம் புன்னகை .
.
பொறுமையாக படியுங்கள் ஐயா புன்னகை உங்கள் தொடர் சூப்பர் !  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 25, 2014 12:54 am

ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் பிண்டங்களை உருட்டி இருக்கிறீர்கள். கட்டுரை மிக நன்றாக இருக்கிறது. உங்களுடனேயே நானும் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. பல்குனி நதியின் சாபக்கதையையும் மறக்காமல் சொல்லுங்கள்.

ப்ராம்னாரத்தம் - எதற்காக அந்த பாத பூஜை?

'கயா' யாத்திரை !  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 25, 2014 6:40 am

படித்து விட்டேன் . நன்றாக இருக்கிறது .
படங்களும் ,அதன் விபரங்களும் அருமை . தொடருங்கள் .
கல்கத்தா , பாட்னா போய் வந்துள்ளீர்கள் .
அந்த பக்கத்து famous ரபடி டேஸ்ட் பார்த்தீர்களா ?
கிரிகெட் என்று நீங்கள் கூறும் பூச்சி நம்மூர் " சுவர் கோழியோ ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 25, 2014 1:09 pm

T.N.Balasubramanian wrote:கிரிகெட் என்று நீங்கள் கூறும் பூச்சி நம்மூர் " சுவர் கோழியோ ?
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஐயா! பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

'கயா' யாத்திரை !  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 25, 2014 6:41 pm

T.N.Balasubramanian wrote:படித்து விட்டேன் . நன்றாக இருக்கிறது .
படங்களும் ,அதன் விபரங்களும் அருமை . தொடருங்கள் .
கல்கத்தா , பாட்னா போய் வந்துள்ளீர்கள் .
அந்த பக்கத்து famous ரபடி டேஸ்ட் பார்த்தீர்களா ?
கிரிகெட் என்று நீங்கள் கூறும் பூச்சி நம்மூர் " சுவர் கோழியோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1075658

நன்றி ஐயா புன்னகை
.
இங்கு ரபடி சாப்பிடலை, ஆனால் ராஜஸ்தானில் சாப்பிட்டு இருக்கேன், எனக்கும் கிருஷ்ணா க்கும் மிகவும் பிடித்த இனிப்பு அது புன்னகை
.
ரொம்ப சரி ஐயா ! நம்மூர் சுவர் கோழியேதான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 25, 2014 6:56 pm

விமந்தனி wrote:
ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் பிண்டங்களை உருட்டி இருக்கிறீர்கள். கட்டுரை மிக நன்றாக இருக்கிறது. உங்களுடனேயே நானும் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. பல்குனி நதியின் சாபக்கதையையும் மறக்காமல் சொல்லுங்கள்.

ப்ராம்னாரத்தம் - எதற்காக அந்த பாத பூஜை?

நன்றி விமந்தினி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
.
டோன்ட் வொர்ரி, பல்குனி நதி கதைதான் கிளைமாக்ஸ் புன்னகை
.
ப்ராம்னாரத்தம் என்பது, நாங்கள் வருடா வருடம் வீடுகளில் ஸ்ரார்த்தம் செய்யும்போது கூட செய்வது தான். பிரமணர்களுக்கு சாப்பாடு போடுவது என்று அர்த்தம். நீங்களே பிராமணா, நீங்க எதுக்கு வேற ஒரு பிராமணருக்கு  சாப்பாடு போடும் என்று கேட்டால், அதற்கான பதில் இதோ புன்னகை

அதாவது, நாம் நம் வீட்டில் ஸார்த்தம் செய்யும்போது, நாம் நம் முன்னோர்களை அவர்கள் ரூபத்தில் வரிப்பதாக அர்த்தம். எனவே, நாம் கர்த்தா வாகிறோம், அதாவது ஸார்த்தம் செய்பவர்கள், நாம் எப்படி வீட்டில் விசேஷம் என்றல் வெற்றிலை பாக்கு மதத்தவர்களை அழைத்து தருகிறோமோ அது போலத்தான் இதுவும். நாம் கர்த்தா, நாம் வேறு ஒரு பிராமணரை 'வரித்து' அழைத்து அவருக்கு வஸ்த்திரம் தந்து, குளிக்க சொல்லி, சாப்பிட சொல்லி தட்டில்  பணம் வைத்து தந்து அவரை திருப்த்தியாக கவனித்து அனுப்பனும். அவருக்கு எந்த விதமான மனக்குறையும் இல்லாமல் பர்த்துக்கொல்லனும். அவர் 'திருப்தி' முக்கியம்.

அவர் மனப்பூர்வமாக வாழ்த்தனும் நம்மை புன்னகை அவ்வாறு சாப்பிடுபவர்கள் அன்று வேறு எதுவும் சாப்பிடமட்டர்கள் . ஒரேவேளை நம் ஆத்தில்  தான் சாப்பிடுவா, அதனால் நாங்கள் ஸ்பெஷல் ஆக சமைப்போம். 'ஸார்த்த தளிகை' என்றே தனியாக இருக்கு விமந்தினி.

இது போல நாங்கள் 2 பேர் ஐ வரிப்போம், சிலபேர் 3 பேரை கூப்பிடுவா . ஸ்ரார்த்தம் போது மஹாவிஷ்ணு இலை என்று ஒன்று போடுவோம். வீட்டு மாப்பிள்ளைகள் அதில் உட்காரலாம். பேரன்கள் உட்காரலாம் ...............இது போல நிறைய இருக்கு. உங்களுக்காக சுருக்கமாக சொன்னேன், ஓரளவு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் புன்னகை இல்லாவிட்டால் மீண்டும் கேளுங்கள் புன்னகை சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 25, 2014 7:30 pm

ஆச்சு, அந்த இரண்டு பிராமணர்களையும்  உள்ளே அழைத்துச்சென்று , அவர்களின் கால் அலம்பி, துடைக்க துணி கொடுத்து, வேஷ்டி உத்ரீயம் தந்து, இலை இல் அமரச்செய்தோம். நாங்க அன்று 10 தம்பதிகள் இருந்ததால் 20 பேர் சாப்பிட உட்கார்ந்து இருந்தார்கள்.  அந்த இடம் சின்னதாக இருந்ததால், நாம் உள்ளே போய் பரிமாற்ற முடியலை சோகம் என்றாலும் வெறுமன தொட்டு கொடுக்க சொல்லிவிட்டு , 'பரிஜரகரே' எல்லோருக்கும் பரிமாறினார். அவர்களை விசாரிக்க இவர் நின்று கொண்டார்.

சீனா மாமாவின் ட்ரிப் இல் அவர் தன்னுடனேவே  'பரிஜாரகர்கள்  ' சிலரையும் அழைத்து வந்திருந்தார். அவர்கள்  நன்கு சமைத்து வைத்திருந்தர்கள். அவாளே எல்லோருக்கும் சூப்பர் ஆக பரிமாறினா , இவாளும் திருப்தியாக சாப்பிட்டா  புன்னகை

அவா சாபிட்டானதும், கை அலம்ப தண்ணி கொடுத்து, அவாளை கொஞ்சம் உட்கார சொல்லி , சிரமப்பரிகாரம் செய்து கொள்ள சொன்னோம். 'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டே' புன்னகை நாங்கள் (பெண்கள் ) போய் இலை எடுத்து விட்டு வந்தோம். பிறகு அவர்களை தம்பதிகளாக சேவித்தோம். அவர்கள் எங்களை அக்ஷதை போட்டு ஆசிர்வதித்தார்கள்.

அவர்களை 'திருப்தியா' ? என்று கேட்டோம் . 'ரொம்ப திருப்தி' , 'சந்தோஷம் 'என்றனர். மேலும் கொஞ்சம் அக்ஷதை தந்து வீட்டில் இருப்பவர்களுக்கு போட வைத்துக்கொள்ளுங்கள் என்றார்கள். சரி என்று வாங்கிக்கொண்டோம். கிருஷ்ணா வுக்கும்  ஆர்த்திக்கும்  வேண்டுமே  புன்னகை

இந்த அக்ஷதை, சாதாரண அரிசி போல் வெள்ளையாகத்தான் இருக்கும். நம் கல்யாண அக்ஷதை போல மஞ்சளாக இருக்காது. திவசம் மற்றும் ஸ்ரர்தத்தில் மஞ்சளுக்கு இடம் இல்லை. அது சுப காரியங்களுக்குத்தான் பயன்படும். புன்னகை

ஒருவாராக எல்லோரும் அடுத்து 'அக்ஷய வடம்' கிளம்பினோம்.

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 25, 2014 8:27 pm

அக்ஷய வடம் என்ற ஆலமரம் கயாவிலிருக்கு. அதன் வேர் ப்ரயாகை(அலஹாபாத்)  நடு உடம்பு காசி,  இலைகளுள்ள  நுனிபாகம் கயாவிலிருக்குன்னு  ஐதீகம். இது தான் அந்த மரம் புன்னகை

'கயா' யாத்திரை !  - Page 5 8rZoUEY0TnOziDBYv2dw+akshaya-vadam

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக