புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
1 Post - 50%
heezulia
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
20 Posts - 3%
prajai
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_m10சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 06, 2014 6:30 pm

சிறார்களின் சிறுநீரகப் பிரச்னைகள்!! P46

அன்று யு.கே.ஜி. படிக்கும் அஸ்வினிக்கு திடீரென்று காய்ச்சல். அனலாய்க் கொதித்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டி மாத்திரை மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. உடனே ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துவரும்படி பரிந்துரைத்தார் டாக்டர். பிறகுதான் அந்தப் குழந்தைக்கு சிறுநீரகப் பாதை தொற்று இருப்பது தெரியவந்தது.  
ஏன் இந்த வயதிலேயே சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று? என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது,  பள்ளிக்கூடத்தில் டாய்லெட் செல்ல  விருப்பம் இல்லாமல் சிறுநீரை அடக்கியிருக்கிறாள் அஸ்வினி. ரொம்ப அவசரம் என்றால் மட்டுமே, பள்ளிக்கூட டாய்லெட்டைப் பயன்படுத்தியிருக்கிறாள். அஸ்வினியைப் போல ஏராளமான சிறுவர் சிறுமியர் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக்கொள்ளப் பழகிவிட்டனர். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி திருப்பூரைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரியா விசுவாசத்திடம் கேட்டோம்.

'சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று இருபாலாருக்குமே வரக்கூடிய பிரச்னைதான். ஆனால், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்குதான் இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பு உண்டு. அதிலும், ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்குச் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். சளி, இருமலைப் போன்று இந்தப் பாதிப்பு வெளிப்படையாகத் தெரியக்கூடியது அல்ல என்பதால், கவனமாக இருக்கவேண்டும்.

தொடர் காய்ச்சல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது வலி, எரிச்சல் ஏற்படுதல், சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறுதல், சிறுநீர் நாற்றம் வீசுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதிக்க வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வகுப்பு நேரங்களில் சிறுநீர் வரும்போது அடக்கிவைத்திருத்தல், இடைவேளை நேரங்களில்கூடச் சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற காரணங்களும் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால், ஆறு முதல் ஏழு வயது குழந்தைக்கும் சிறுநீரகத்தில் கல் உருவாகலாம்.  

இது தவிர, 'நெப்ரிடிக் சின்ட்ரோம்’ (Nephritic syndrome) எனப்படும் சிறுநீரகக் கோளாறு மற்றும் வீக்கம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதன், அறிகுறிகளாக அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரின் நிறம் மாறி இருத்தல், கால் மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க கழிப்பறை சுகாதாரமாக இருப்பது மிகமிக அவசியம்.

பெண் குழந்தை மலம் கழித்த பிறகு கழுவிவிடும்போது முதலில் முன் பக்கமாகத் தண்ணீரை ஊற்ற வேண்டும். பின்புறத்திலிருந்து கழுவிவிடும்போது பீய்ச்சி அடிக்கப்பட்ட தண்ணீரானது முன்னோக்கிச் சென்று, பெண்ணின் பிறப்பு உறுப்பில் படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.  இதனாலும், சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படக்கூடும். குழந்தைகளுக்கு இறுக்கமான உள்ளாடை அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவித்தலே நலம்.

ஒவ்வொரு முறை கழிப்பறைக்குப் போய்விட்டு வந்ததும், கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள குழந்தைகளுக்கு அறிவுறுத்தவேண்டும். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு தினமும் இரண்டு லிட்டர் குடிநீரை குடிக்கப் பழக்கப்படுத்த வேண்டும். சிறுநீரக பாதை நோய்த்தொற்றோ, கல் பிரச்னையோ ஓரிரு நாட்களில் குணமாகிவிடக்கூடியவை அல்ல. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.  முழுவதுமாக குணமடைய ஒருசில வாரங்கள் தேவைப்படும். மருத்துவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் தரக்கூடிய மருந்துகளை முழுமையாக முறைப்படி உட்கொண்டால், சிறுநீரகப் பிரச்னையைச் சீக்கிரத்திலே தீர்க்கலாம்' என்றார்.

கவனம் கொள்ளுங்கள் பெற்றோர்களே!!

- தி.ஜெயப்பிரகாஷ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக