புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 9 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 9 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 9 Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:50 am

First topic message reminder :

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

    1. அஸ்வினி
    2. பரணி
    3. கார்த்திகை
    4. ரோகினி
    5. மிருகசீரிஷம்
    6. திருவாதரை
    7. புனர்ப்பூசம்
    8. பூசம்
    9. ஆயில்யம்
    10. மகம்
    11. பூரம்
    12. உத்திரம்
    13. ஹஸ்தம்
    14. சித்திரை
    15. ஸ்வாதி
    16. விசாகம்
    17. அனுஷம்
    18. கேட்டை
    19. மூலம்
    20. பூராடம்
    21. உத்திராடம்
    22. திருவோணம்
    23. அவிட்டம்
    24. சதயம்
    25. பூரட்டாதி
    26. உத்திரட்டாதி
    27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:13 am

இனிமேல் 9ம் வீட்டில் கிரகங்கள் நின்ற பலனைப் பார்ப்போம்.

சூரியன் : பொதுவாக ஒரு கிரகம் எதற்குக் காரகம் வகிக்கிறதோ அந்தக் காரகத்தைக் குறிக்கும் வீட்டில் அந்த கிரகம் இருப்பது நல்லது அல்ல என்று ஜோதிட
உலகம் கூறுகிறது. உதாரணமாக தாயாரைக் குறிப்பது சந்திரன்; 4-ம் வீடும் சந்திரனைக் குறிக்கிறது. ஆக தாயாரைக் குறிக்கின்ற கிரகமான சந்திரன், தாயாரைக் குறிக்கின்ற 4-ம் வீட்டில் இருப்பது தாயாருக்கு நல்லது அல்ல என்று கூறுவார்கள். இதைத்தான் "காரகோ பாவன சாய" என் சமஸ்கிருதத்தில் கூறுவார்கள். அதேபோன்று சகோதரத்தைக் குறிக்கும் கிரகமான செவ்வாய், சகோதரத்தைக் குறிக்கும் 3-ம் வீட்டில் இருப்பது நல்லது அல்ல; களத்திரத்தைக் குறிக்கும் வீடான சுக்கிரன், களத்திரஸ்தானமான 7-ம் வீட்டில்; இருப்பது நல்லது அல்ல; அதேபோல் தகப்பனாருக்குக் காரகம் வகிப்பவரான சூரியன், 9-ம் வீட்டில் இருப்பது நல்லது அல்ல; அதாவது தகப்பனாருக்கு தோஷம் என்றும் கூறலாம். ஆனால் இந்த விதிக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. ஆயுள்காரகனான சனி, ஆயுள்ஸ்தானமான 8-ம் வீட்டில் இருந்தால் தீர்க்க ஆயுள் உண்டு என்று ஜோதிட உலகம் கூறுகிறது. குரு பணத்திற்கு அதிபதி. 2-ம் வீடு தனஸ்தானத்தைக் குறிக்கிறது. "காரகோ பாவன சாயன" விதியின்படி குரு, 2-ம் வீட்டில் இருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அனுபவபூர்வமாகப் பார்க்கும்போது குரு 2-ம் வீட்டில் இருக்கப் பிறந்தவர்கள் நல்ல பண வசதியுடன் இருந்து வருகிறார்கள். இது அனுபவபூர்வமான உண்மை. சரி! நமது பாடத்துக்கு வருவோம்; 9-ம் வீட்டில் சூரியன் இருப்பது தகப்பனாருக்கு நன்மை அல்ல; இதைப் பிதுர் தோஷம் என்றும் கூறலாம். 9-ம் வீடு உயர் படிப்பைக் குறிக்கிறது அல்லவா? இங்கு சூரியனும் புதனும் சேர்ந்து இருக்கப் பிறந்தவர்கள் மிகுந்த புத்திகூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள். படிப்பில் அவர்கள் எதேனும் ஒரு Professional Course-ல் வல்லமை பெற்று இருப்பார்கள். சுறுக்கமாகச் சொல்லப் போனால் 9-ல் சூரியன், புதன் இருக்கப் பிறந்தவர்கள் படிப்பில் வல்லவர்களாக இருப்பார்கள்.

சந்திரன் : இங்கு சந்திரன் இருப்பது நல்லது அதுவும் தாயாருக்கு. நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். இங்கு செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் தாயாருக்கு காயம்படும்.தாயாரை கடும் வார்த்தைகளால் பேசுவர்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:13 am

செவ்வாய் : தகப்பனாருக்கு உபாதைகளைக் கொடுக்கும். குருவோ அல்லது புதனோ இருக்கப் பிறந்தவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாகவும், மத விஷயங்களில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

புதன் : இங்கு இருப்பது ஒருவரை மிக அறிவாளியாக ஆக்கும்.எதையும் அலசி, ஆராய்ந்து பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். குருவும் சேர்ந்து கொண்டால் மிக வேடிக்கையாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் பேசுவர்.

குரு : சட்டப் படிப்பில் முன்னேற்றம் காணமுடியும். தன் சொந்த சகோதரர்களுடன் மிகவும் பிரியமாக இருப்பர். மிகவும் தெய்வபக்தியுடன் வாழ்க்கை நடத்துவர். வெளிநாடு செல்லும் யோகம் இவருக்கு இருக்கும். ஒரு குறிக்கோளுடைய வாழ்க்கை இருக்கும்.

சுக்கிரன் : மிக செளக்கியமான வாழ்க்கை நடத்துவர். அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பர். கலைகளில் திறமைசாலியாக இருப்பர்.

சனி : ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை இருக்கும். தகப்பனருடன் நல்ல உறவு இருக்காது. மேல் படிப்பில் மந்தத்தன்மை இருக்கும். புதனும், சனியும் சேர்ந்தால் இவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருக்கமாட்டார்.

ராகு : தகப்பனாரை தூஷிப்பர். கடவுள் மேலும், அவர் சார்ந்துள்ள மதத்தின் பேரிலும் அவ்வளவு நம்பிக்கை இருக்காது.

கேது : தகப்பனாருடன் நல்லுறவு இருக்காது. மிக்க தைரியம் உள்ளவராக இருப்பர்.

இத்துடன் 9-ம் வீட்டைப் பற்றி முடித்துக் கொள்வோம். இனி அடுத்த பாடத்தில் 10-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:14 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 29

இதுவரை நாம் 9-வீடுகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இப்போது 10-வது வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம். இது மிகவும் முக்கியமான வீடாகும். இது ஒரு கேந்திரஸ்தானம் ஆகும். இதை ஜீவன ஸ்தானம் என்றழைப்பார்கள். ஒருவருக்கு மதிப்பு, கெளரவம் ஆகியவற்றையும் கொடுப்பது இந்த வீடுதானாகும். ஒருவரின் தொழிலைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருடைய பொதுவாழ்வைக் குறிப்பதும் இந்த வீடுதான். (Public Life). ஒருவரின் மதிப்பு, மரியாதை, உலகத்திலுள்ள சுகங்கள், இவைகளையெல்லாம் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவரின் பதவி உயர்வு, வியாபார விருத்தி ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவரின் ஜாதகத்தில் 10-ம் வீட்டில் சனியிருந்து சுபரால் பார்க்கப்பட்டால் ஒருவரின் வாழ்க்கை உயர்வு மெதுவாகவும், நிரந்தரமாகவும் இருக்கும். உயர்வு மெதுவாகத்தான் இருக்கும். சனி சுபரால் பார்க்கப் படாமல் இருந்தால், வலுவில்லாமலும் இருந்தால் மிகச் சாதாரணமான பதவியே வகிப்பர். உயர் நிலைக்கு வருவது கடினம்.

சூரியன் : சூரியன் ஒருவருக்கு நல்லவிதமாக அமைந்துவிட்டால் மதிப்பு, மரியாதை ஆகியனவெல்லம் கிட்டும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். ஏனெனில் அரசாங்கத்தைக் குறிப்பவர் அவர்தான். சூரியன் சம்மநதப் பட்டால் செய்யும் தொழிலில் மரியாதை அல்லது கெளரவம் கிட்டும். சூரியன் மேலதிகாரிகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? அவர்கள் துணையுடன் பதவி உயர்வு பெற்று முன்னேற முடியும். சூரியன் தொழிலில் நிரந்திரத்தைக் கொடுப்பவர். அரசியலுக்கும் இவர் காரகம் வகிப்பதனால் அரசியலில் இவர் முன்னேற முடியும். மற்றவர்கள் இவர்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வார்.

சந்திரன் : பொதுவாக சந்திரனானவர் நிலையில்லாத தன்மை கொண்டவர். அவர் எங்கு இருந்தாலும் மாற்றத்தைக் கொடுப்பார். அதையும் தவிர மக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர். நல்ல கிரகங்கள் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருப்பின் மக்கள் தொடர்பு காரணமாக மிகவும் பிரபலமானவராக இருப்பர். பாவர் சேர்க்கை பெற்றிருப்பின் பொதுவாழ்க்கையில் கெட்ட பெயரே வந்து சேரும். வியாபரத்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். தொழிலில் இருந்தாலும் வருமானத்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டியதுவரும். சந்திரன் சரராசியில் இருந்து 10-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் தொழில் சம்மந்தமாகப் பிரயாணம் செய்ய வேண்டியது வரும். இதை நீர்க்கிரகம் என்பார்கள். நீர் சம்மந்தப்பட்ட தொழிலைக் கொடுப்பார். சிலர் கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் பணிபுரிவர்.

செவ்வாயானவர் தைரியத்தைக் குறிக்கும் கிரகம். போலீஸ், ராணுவம் போன்றவற்றில் தொழில் இருக்கும். தொழிற்சாலைகள், இயந்திரங்கள் போன்றவற்றையும் இவர் குறிப்பதால் இது சம்மந்தமான வேலையையும் இவர் கொடுப்பார். நெருப்புக்கும் இவர் அதிபதியாவதால் நெருப்பு சம்மந்தமான வேலையையும் இவர் கொடுப்பார். நிலம், வீடு போன்ற ஸ்திர சொத்துக்களுக்கும் இவர் அதிபதியாவதால் இது சம்மந்தமான வேலைகளிலும் இந்த ஜாதகர் ஈடுபடுவர். செவ்வாய் நன்கு இருக்கப் பிறந்தவர்கள் வீடு வாங்கி விற்பது போன்ற Real Estate - Business-ல் இருப்பார். செவ்வாய் வலுவற்று இருப்பவர்கள் வீட்டு வீலை செய்யும் தொழிலாளியாக இருப்பார்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:14 am

புதன் பத்தாம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கமிஷன் வியாபாரம், ஏஜென்சித் தொழில் ஆகியவற்றில் இருப்பார். புதன் அறிவு கூர்மையைக் குறிக்கும் கிரகம் அல்லவா? புத்திகூர்மையைக் கொண்டுள்ள தொழில்களில் எல்லாம் இவர் சிறந்து விளங்குவார். ஆலோசனைத் தொழில், ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்ரில் இவர் சிறந்து விளங்குவர். புதன் இரட்டைக் கிரகம் அல்லவா? சிலருக்கு இரண்டுவிதமான தொழில் செய்ய முடியும். பொதுவாக புதன் 10-ம் இடத்துடன் சம்மந்தப் பட்டவர்கள் எஜமானராக இருப்பதைவிட ஒருவருக்குக் கீழ் இருப்பதையே விரும்புவார்கள்.

குரு ஒரு சுபக் கிரகம். அவர் 10-ம் வீட்டில் இருந்தால் புகழையும், பதவியையும் கொடுப்பார். அவர் தனகாரகன் அல்லவா? பணம் புழங்குகின்ற இடத்தில் வேலை கிடைக்கக் கூடும். பேங்குகள், கருவூலங்கள், போன்ற பணம் புழங்குகின்ற இடங்களில் வேலை கிடைக்கும். மிகவும் நியாயமான முறையில் சம்பாதிப்பார். குரு வேதாந்தம், மதங்களைக் குறிக்கிறது அல்லவா? இது சம்மந்தமான வேலையும் கிடைக்கும். பொதுவாக குருவானவர் உயர்ந்த பதவியைக் கொடுப்பார். இவருக்குப் பாவரின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருப்பின் மிகச் சாதாரண பதவியிலேயே இருப்பார்.

சுக்கிரன் : கலைக்கு அதிபதியான கிரகம். 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டால் கலைத் தொழில் சம்மந்தப் பட்ட துறையில் பணிபுரியலாம். வண்டி, வாகனங்களைக் குறிப்பதும் சுக்கிரன்தான். வாகனங்கள் சம்மந்தப்பட்ட துறையிலும் பணிபுரியலாம். சுக்கிரன் பெண்களுக்குக் காரகம் வகிப்பவர். சுபர்கள் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருப்பின் பெண்களால் அனுகூலம் அடைவர். இரண்டாம் வீட்டுடனும் சம்மந்தப்பட்டால் தேனொழுகப் பேசி காரியத்தை முடிப்பர். அழகு சாதனங்களை குறிப்பவரும் அவரே. ஆக அழகு சாதனங்கள் சம்மந்தப் பட்ட தொழிலிலும் இருப்பர்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:14 am

நாம் இதுவரையில் 10-ம் வீட்டை தொழில் ஸ்தானம் என்றும், ஜீவன ஸ்தானமென்றும் கூறி வந்தோம். 10-ம் வீட்டில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் எப்படித் தொழில் அமையும் எனவும் பார்த்தோம். இந்த வீட்டைக் கர்மஸ்தானமென்றும் கூறுவார்கள். அதாவது தாயார், தகப்பனருக்குக் கர்மம் செய்யும் வீடாகும். எப்படி? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 10-ம் வீடு என்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு. 2-ம் வீடு மாரகத்தைக் கொடுக்குமன்றோ! ஆகவே இந்த வீடு தகப்பனாருக்கு மாரகத்தைக் கொடுக்கும் வீடாக அமைந்து விடுகிறது. அதேபோல் 4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது அல்லவா? 10-ம் வீடு என்பது 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடல்லவா? 7-ம் வீடும் மாரக ஸ்தானமன்றோ! ஆக 10-ம் வீடு தாயாருக்கு மாரகஸ்தானமாக அமைந்து விடுகிறது. ஒருவருக்கு 10-ம் வீட்டிலுள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ அல்லது 10-ம் வீட்டிற்குடையவனின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும் போது அவரின் தாயோ அல்லது தந்தையோ மரணமடையலாம். அப்போது அவருக்குக் கர்மம் செய்ய நேரம் வந்து விட்டது எனக் கூறுவார்கள். ஆக 10ம் இடம் ஜீவனத்தை மட்டும் குறிக்கவில்லை. தாய், தகப்பனாரின் மாரகத்தையும் அது குறிக்கிறது. ஆக ஒருவரின் 10-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திகளில் தாய் அல்லது தந்தையை இழக்க நேரிடும் எனத் தெரிந்து கொண்டீர்களல்லவா?

ஒருவருக்குப் "பதவி உயர்வு கிட்டுமா?" - என்ற கேள்வி எழலாம். அதற்கு 10-ம் வீட்டை மட்டும் வைத்துப் பதில் சொல்ல முடியாது. 2-ம் இடமான தன ஸ்தானம், 6-ம் வீடான தொழில் ஸ்தானம், 10-ம் வீடான ஜீவன ஸ்தானம், 11-ம் வீடான லாபஸ்தானம் ஆகியவற்றை வைத்துத்தான் கூறமுடியும். இந்த நான்கு வீட்டையும் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில்தான் ஒருவருக்குப் பதவி, உயர்வோ அல்லது வேலையோ கிட்டும்.

10-ம் வீடென்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு என்று மேலே கூறி இருந்தோம். 2-ம் வீடு தனஸ்தானம் அல்லவா? ஆக தகப்பனாரின் பொருளாதாரம், பணவசதி, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:15 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 30

பத்தாம் வீட்டைப் பற்றி ஓரளவிற்கு நாம் தெரிந்து கொண்டோம். இப்போது மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். முதலில் ஒருவரின் "தொழிலை நிர்ணயிப்பது எப்படி?" எனப் பார்ப்போம்.

10-ம் வீட்டிலுள்ள கிரகம், 10ம் வீட்டைப் பார்க்கும் கிரகம், 10-ம் வீட்டின் அதிபதி, 10-ம் வீட்டின் அதிபதி இருக்கும் நவாம்சாதிபதி ஆகியவற்றை வைத்துத்தான் ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்ய முடியும். உதாரணத்திற்கு சில ஜாதகங்களை கீழே கொடுத்துள்ளோம். அவைகள் உங்களுக்கு மிக்க உதவியாக இருக்கும். ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ராசி : இலக்கினம்-தனுசு; மகரம்-சூரியன், சந்திரன், புதன்; மீனம்-கேது; மேஷம்- குரு, சனி; கன்னி-ராகு; விருச்சிகம்- செவ்வாய்;

நவாம்சம் : இலக்கினம்-தனுசு; மகரம்-செவ்வாய்; மேஷம்-ராகு; ரிஷபம்-சூரியன்; கடகம் - சந்திரன்; சிம்மம் - சனி, புதன், குரு; துலாம் - கேது; விருச்சிகம் - சுக்கிரன்.

10-ம் வீட்டின் அதிபதியார்? புதன்; அவர் நவாம்சத்தில் சூரியனின் வீட்டில் இருக்கிறார்;

10-ம் வீட்டில் ராகு; ராகுவுக்கு சொந்த வீடு எதுவும் கிடையாது. ஆகவே வீட்டின் அதிபதியான புதனின் பலனைத்தான் கொடுப்பார். ஆக புதன், சூரியன் சார்ந்த தொழிலைத்தான் கொடுக்க முடியும்.

1. சூரியன் சம்மந்தப் பட்டதால் அரசு சம்மந்தமான துறையில் வேலை செய்ய முடியும். ஏனெனில் சூரியன் அரசுத்துறைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் Accounts சம்மந்தமான தொழிலைக் கொடுப்பவர். ஆக புதனும் சூரியனும் சேர்ந்து இவரை அரசாங்கத்தில் Accounts சம்மந்தமான தொழிலைக் கொடுத்து இருக்கலாம்.

அல்லது

2. புதன் கமிஷன் தொழிலுக்கு அதிபதி. சூரியன் அரசாங்கத்திக் குறிப்பவர் அல்லவா? ஆக இவர் அரசாங்கம் சம்மந்தப்பட்ட சிறு சேமிப்பிலோ அல்லது பங்குகளிலோ வியாபாரம் செய்து அதற்குண்டான கமிஷன் பெறலாம்.

அல்லது

3. சூரியன் தன்வந்திரி என்றழைக்கப் படுகிறார். அவர் மருத்துவத் தொழிலுக்கு அதிபதி. புதன் எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் புத்தி கூர்மையைக்கொடுக்கின் றவர். ஆக இருவரின் சேர்க்கை இவரை ஒரு மருத்துவராக ஆக்கி இருக்கலாம்.

அல்லது

4. சூரியன் தங்கம், தாமிரம் போன்ற உலோகங்களுக்கு அதிபதி. ஆக இவர் தங்க வியாபாரமோ அல்லது தாமிர வியாபாரமோ செய்பவராக இருக்கலாம்.

இவ்வாறாக பலவிதமான தொழில்களைச் சொல்லலாம். ஆக ஒருவரின் தொழிலைக் கூறுவது என்பது மிகவும் கடினமான காரியம். உண்மையில் இவர் ஒரு அரசாங்க வங்கியில் பணி புரிந்தார். ஆக 10-ம் வீட்டிற்குடைய புதன், நவாம்சாதிபதி சூரியனுடன் சம்மந்தப்பட்டதால் அரசாங்க சம்மந்தமுடைய தொழில் செய்து வந்தார். வங்கித் தொழிலுக்கு வருவதற்கு முன்பு அரசாங்கப் பள்ளிகளில் கணித ஆசிரியராகத் தன்வாழ்க்கையைத் தொடங்கினார். புதன் கணிதத்திற்கும் அதிபதியல்லவா? ஆக இவர் அரசாங்கப் பள்ளிகளில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதனும், சூரியனும் எப்படி இவர் ஜீவனத்தைக் கொடுத்தது பார்த்தீர்களா?

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக