புதிய பதிவுகள்
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:08

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10 
18 Posts - 50%
ayyasamy ram
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10 
13 Posts - 36%
Anthony raj
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10 
2 Posts - 6%
VENKUSADAS
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sat 5 Jul 2014 - 1:46

First topic message reminder :

தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும்.
9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் எனவும், 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர்.  முற்காலச் சோழர்களில் கரிகால் சோழனும், பிற்காலச் சோழர்களில் , முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் ஆண்ட காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது.

இராஜேந்திர சோழன் ஆட்சியில் சோழ சாம்ராஜ்ஜியம் கி.பி. 1030
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 V1Ad4vU6TtISfndl5oV8+map-1050-chola

இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழ சாம்ராஜ்யத்தில் ஆட்சி செலுத்திய அரசர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள்.

கரிகால் சோழன் – இரண்டாம் நூற்றாண்டு.

முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:

முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014

முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1012 – கி.பி.1044:

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:

பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. இறுதியாக சோழ அரசர்களில் முதலாம் குலோத்துங்கனின் ஆட்சிக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.

இனி,

இதில் சோழர்களின் சிறப்பு, இலக்கியம், சமயம் மற்றும் சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள் குறித்து ஆராய்வோம்.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 8 Jul 2014 - 23:21

கரிகாலன் கட்டிய கல்லணை

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 Hog4XLUeQuGq0V8M7mck+கல்லணை

இந்த கல்லணை மட்டும் கரிகாற் சோழனால் கட்டப்படாமல் போயிருந்தால்.... இந்த வீரமிகு சோழமன்னனும் பத்தோடு ஒன்று பதினொன்றாக தான் வரலாற்றில் இருந்திருப்பார்.

தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படும் இந்த அணை இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கரிகாற்சோழனால் கட்டப்பட்டது.

கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.

காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தார் கரிகாற்சோழன். ஆனால், ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதென்பது சாதாரண விஷயம் அல்லவே. அதற்க்கு ஒரு கண்டுபிடித்தார்கள் நம்மவர்கள்.

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் .

இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன், கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறன் மற்றும் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Wed 9 Jul 2014 - 0:06

கல்லணையை பற்றி எளிமையான பதிவு வாழ்த்துக்கள்

வெல்க தமிழ் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 9 Jul 2014 - 4:57

வடக்கிருந்து உயிர் நீத்தல் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன் விமன்தனி...

கல்லணை பற்றி நறுக் குறுக் வரிகள் அருமை... தொடருங்கள்,......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed 9 Jul 2014 - 12:44

இரா.மூர்த்தி wrote:கல்லணையை பற்றி எளிமையான பதிவு வாழ்த்துக்கள்

நன்றி திரு.மூர்த்தி அவர்களே. புன்னகை 

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed 9 Jul 2014 - 12:50

பிஜிராமன் wrote:வடக்கிருந்து உயிர் நீத்தல் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன் விமன்தனி...

கல்லணை பற்றி நறுக் குறுக் வரிகள் அருமை... தொடருங்கள்,......

நன்றி பிஜி.

(தெரிந்த) கேள்விகளுக்கு பதில் சொல்வது கூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது. நீ கேட்காமல் இருந்திருந்தால் நானும் பதிலை தேடியிருக்க மாட்டேன். நான் தெளியவும், உன்னுடைய கேள்வி தான் உதவிற்று. மறுபடியும் நன்றிகள்.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 9 Jul 2014 - 18:09

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 103459460 நன்றி 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 10 Jul 2014 - 22:21

Dr.S.Soundarapandian wrote:வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 103459460 நன்றி 

நன்றி ஐயா.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 10 Jul 2014 - 22:36

விசயாலய சோழன் கி.பி. 850-871

சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் விசயாலய சோழன் ஆவானர். விசயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்ற இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர் ஆவார்.

விஜயாலய சோழ மன்னன் - பழையாறை மாநகரம்
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 MHoSD3mUTd2gV832gnOt+vijayalayan

கி.பி 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினார். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது.

சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த போர், திருப்புறம்பயம் போர். இந்த போரே பிற்கால சோழ சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டது எனவும் கூறலாம். திருப்புறம்பயம் அல்லது திருப்புறம்பியம் என்பது கும்பகோணத்துக்கு அருகிலுள்ளதோர் ஊர். அங்கு நடைபெற்ற போர் திருப்புறம்பியப்போர் என்று குறிப்பிடப்படும்.

இந்த ஊர் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க ஊர். தமிழகத்தின் வரலாற்றையே மாற்றிவிட்ட போர் தான் இங்கு நடைபெற்றது. மூன்று பேரரசுகளின் விதி, அந்தப் போரில் நிர்ணயிக்கப்பட்டு புதிய பேரரசு ஒன்றினுக்கு வித்திடப்பட்டது.

இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.

இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும், பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர். அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.

இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக போரிட்டான். அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.

அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்ட தோல்வியடைந்து  பாண்டியர்களிடம் சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90)  இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார். இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது. கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில் வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.

திரு. கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனில் இச்சம்பவத்தினை மிக அழகாக சொல்லியிருப்பார். நான் ரசித்த பகுதிகளில் இதுவும் ஒன்று.

தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழ மன்னனை திருப்புறம்பயம் போரில்  இறக்கியது, "புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்" என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது.  விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவு கூடக் காணவில்லை.

கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது. ஆனால் தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தவர் விசயலாய சோழரே ஆவார்.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 15 Jul 2014 - 16:02

திருபுறம்பியம் போர் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி விமன்தனி.....தொடருங்கள்.... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed 16 Jul 2014 - 0:21

பிஜிராமன் wrote:திருபுறம்பியம் போர் பற்றி தெரிந்து கொண்டதில்  மகிழ்ச்சி விமன்தனி.....தொடருங்கள்.... புன்னகை

நன்றி பிஜி!

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக