புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
3 Posts - 4%
Baarushree
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
2 Posts - 3%
viyasan
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Rutu
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
1 Post - 1%
சிவா
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
1 Post - 1%
manikavi
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று.... ஜூலை

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 01, 2014 9:42 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Dbfv5gd7QOKBZ5sqXrye+July-1

1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.

1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.

1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.

1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.

1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.

1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது.

1876 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.

1881 - உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.

1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.

1921 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1932 - ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.

1933 - சீனர்களின் குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது.

1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.

1960 - இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.

1960 - கானா குடியரசானது.

1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது.

1962 - பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி விடுதலை அடைந்தது.

1967 - ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது.

1970 - அதிபர் யாஹ்யா கான் மேற்கு பாகிஸ்தானில் மாகாணங்களை அமைத்தார்.

1976 - மடெய்ரா தீவுகளுக்கு போர்த்துக்கல் சுயாட்சியை வழங்கியது.

1978 - அவுஸ்திரேலியாவின் வட மண்டலம் அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.

1979 - சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.

1990 - கிழக்கு ஜெர்மனி டொச் மார்க்கை தனது நாணய அலகாக ஏற்றுக் கொண்டது.

1991 - பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.

1997 - மக்கள் சீனக் குடியரசு ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.

2002 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

2002 - தெற்கு ஜெர்மனியில் இரண்டு விமானங்கள் வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

2004 - காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.

2006 - கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 17, 2014 9:55 pm

Syed Sardar wrote:அடுத்த ஜூலை 09 ஆம் தேதி வரை தொடர்ந்து பதித்தால் எளிதில் அடையக்கூடிய ஒரு நல்ல என்சைக்ளோபிடியா நமக்கு கிட்டும். நன்றி விமன்தனி அவர்களே !    

எனது நோக்கமும் அது தான் திரு சையத் அவர்களே. தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி.

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 18, 2014 12:01 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 18

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 WVWdKO2RLmec47Uajmjb+July-18

64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.

1656 - போலந்து, மற்றும் லித்துவேனியப் படைகள் வார்சாவில் சுவீடனின் படைகளுடன் போரை ஆரம்பித்தன. சுவீடிஷ் படைகள் இப்போரில் வெற்றி பெற்றனர்.

1872 - ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

1916 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் கொல்லப்பட்டனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.

1944 - இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பானியப் பிரதமர் ஹிடெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.

1965 - சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.

1966 - நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.

1977 - வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

1982 - குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 மாயன் பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1984 - கலிபோர்னியாவில் மக்டொனால்ட் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர். துப்பாக்கிதாரி ஜேம்ஸ் ஹியூபேர்ட்டி காவற்துறையினரால் கொல்லப்பட்டான்.

1995 - கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே மலை வெடித்ததில் வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎மொன்செராட்டின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.

1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.

1997 - மும்பாயில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

1998 - பப்புவா நியூ கினியில் 23-அடி கடற் சூறாவளியில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2007 - மும்பாயில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 19, 2014 12:36 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 19

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 2gslh20

1545 - இங்கிலாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்" என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.

1553 - 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.

1870 - பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.

1900 - பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.

1912 - அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.

1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.

1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.

1967 - வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.

1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.

1980 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.

1985 - இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர்.

1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.

1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 20, 2014 12:02 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 20

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 2bwT7pYGRg2w3IgB1mGT+July-20

1304 - இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் ஸ்டேர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினான்.

1618 - புளூட்டோ பூமிக்கு மிக அண்மைக்கு வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும்.

1656 - பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவ் மன்னனின் சுவீடனின் படைகள் வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து-லித்துவேனியப் படைகளை வென்றனர்.

1810 - நியூகிரனாடாவின் பகோட்டா (கொலம்பியாவின் தலைநகர்) நகர மக்கள் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.

1871 - பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.

1917 - முதலாம் உலகப் போர்: யூகொஸ்லாவிய இராச்சியம் உருவாக்கப்பட்டது.

1922 - பன்னாட்டு அமைப்பு (League of Nations) ஆபிரிக்காவில் டோகோலாந்து பிரான்சுக்கும், தங்கனீக்கா ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.

1924 - அமெரிக்க உதவி தூதுவர் "ரொபேர்ட் இம்ரி" சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் தெஹ்ரான் நகரில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1935 - இந்தியாவில் லாகூரில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் பலர் கொல்லப்பட்டனர்.

1940 - டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஒருவனால் ஹிட்லர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பித்தார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாம் தீவை அடைந்தன.

1947 - பர்மியப் பிரதமர் ஓங் சான் மற்றும் 7 அமைச்சர்கள் கொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ஊ சோ கைது செய்யப்பட்டார்.

1948 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 12 தலைவர்கள் நியூயோர்க் நகரில் கைது செய்யப்பட்டனர்.

1949 - 19-மாதப் போரின் பின்னர் இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டனர்.

1951 - ஜோர்தானின் மன்னர் முதலாம் அப்துல்லா ஜெருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1953 - யூனிசெப் அமைப்பை நிரந்தரமாக்கும் முடிவு ஐநாவில் எட்டப்பட்டது.

1954 - வியட்நாமை இரண்டாகாப் பிரிக்கும் உடன்பாடு ஜெனீவாவில் எட்டப்பட்டது.

1960 -இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் தலைவராகத் தெரிவான முதற் பெண் ஆவார்.

1960 - கொங்கோவில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த பெல்ஜியம் ஐநா பாதுகாப்பு அவையில் வாதாடியது. கொங்கோ அரசு சோவியத் உதவியை நாடியது.

1962 - கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

1964 - வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் "காய் பே" நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 30 குடிமக்களையும் கொன்றனர்.

1969 - அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் சந்திரனில் காலடி வைத்தனர்.

1969 - உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் கொந்துராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆரம்பித்த 6-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1974 - சைப்பிரசில் அதிபர் மூன்றாம் மக்காரியோசுக்கு எதிராக இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து துருக்கியப் படைகள் அங்கு முற்றுகையிட்டன.

1976 - வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தாய்லாந்தில் இருந்து முற்றாக வெளியேறினர்.

1976 - வைக்கிங் 1 சந்திரனில் இறங்கியது.

1979 - இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

1980 - இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.

1982 - ஐரியக் குடியரசு இராணுவத்தினரினால் லண்டனில் நடத்தப்பட்ட இரு குண்டு வெடிப்புகளில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொது மக்கள் படுகாயமடைந்தனர்.

1989 - பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1996 - ஸ்பெயினில் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 21, 2014 12:01 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 21

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Q7qfZySiT62oNlr6uxfm+July-21

கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

1545 - ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.

1718 - ஒட்டோமான் பேரரசுக்கும் வெனிஸ் குடியரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.

1774 - ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகஸ்ட் 10 இல் இது நிறைவடைந்தது).

1954 - ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1961 - நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.

1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.

1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.

1972 - வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.

1977 - நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.

2007 - ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 21, 2014 1:36 pm

ஜூலை 21
-
நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம்
அமரர் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்
-

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 22, 2014 12:01 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 22

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 Pcyv8dZvTGCTgUQq2F8q+July-22

1499 - புனித ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.

1587 - வட கரோலினாவின் ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றவாதிகள் வந்திறங்கினர்.

1812 - வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.

1916 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

1933 - வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.

1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது.
போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.

1962 - நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.

1999 - விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

2003 - ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.

2009 - சூரிய கிரகணம், ஜூலை 22: 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 22, 2014 10:04 am

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 103459460 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 22, 2014 11:49 pm

Dr.S.Soundarapandian wrote:வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 103459460 

நன்றி ஐயா.

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 12:03 am

வரலாற்றில் இன்று - ஜூலை' 23

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 CxJT8KkFTauAzkxOlra1+July-23

1632 - நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர்.

1793 - புரூசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.

1829 - ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1840 - கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1874 - இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28,

1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.

1929 - இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது.

1942 - நாசி ஜெர்மனியரினால் போலந்தில் டிரெப்லின்கா வதை முகாம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டது.

1952 - எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜெனரல் முகமது நக்கீப் ஆரம்பித்தார்.

1961 - நிக்கராகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.

1962 - லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ்
உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது.

1967 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும்
அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.

1970 - ஓமானின் காபூஸ் அவரது தந்தை சாயிட் பின் தாமூரின் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் சுல்தானாகப் பதவியேற்றார்.

1983 - திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1983 - கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.

1988 - பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.

1992 - ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.

1995 - ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.

1999 - சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.

1999 - மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.

2005 - எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக