புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று.... ஜூலை


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 01, 2014 9:42 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 Dbfv5gd7QOKBZ5sqXrye+July-1

1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.

1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.

1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.

1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.

1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.

1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது.

1876 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.

1881 - உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.

1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.

1921 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1932 - ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.

1933 - சீனர்களின் குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது.

1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.

1960 - இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.

1960 - கானா குடியரசானது.

1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது.

1962 - பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி விடுதலை அடைந்தது.

1967 - ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது.

1970 - அதிபர் யாஹ்யா கான் மேற்கு பாகிஸ்தானில் மாகாணங்களை அமைத்தார்.

1976 - மடெய்ரா தீவுகளுக்கு போர்த்துக்கல் சுயாட்சியை வழங்கியது.

1978 - அவுஸ்திரேலியாவின் வட மண்டலம் அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.

1979 - சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.

1990 - கிழக்கு ஜெர்மனி டொச் மார்க்கை தனது நாணய அலகாக ஏற்றுக் கொண்டது.

1991 - பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.

1997 - மக்கள் சீனக் குடியரசு ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.

2002 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

2002 - தெற்கு ஜெர்மனியில் இரண்டு விமானங்கள் வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

2004 - காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.

2006 - கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.



வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 05, 2014 12:00 am

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 VSilI1ZESsWmo9BRCc2s+July-5

1295 - இங்கிலாந்துக்கு எதிராக ஸ்கொட்லாந்தும் பிரான்சும் கூட்டை உருவாக்கின.

1594 – போர்த்துக்கீசப் படைகள் பெதுரோ லோப்பெசு டெ சொயுசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரப்பித்துத் தோல்வியடைந்தனர்

1610 - நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.

1687 - ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.

1770 - ரஷ்யப் பேரரசுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1811 - வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1830 - பிரான்ஸ் அல்ஜீரியாவினுள் நுழைந்தது.

1865 - இரட்சணிய சேனை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1884 - ஜெர்மனி கமரூனை ஆக்கிரமித்தது.

1900 - ஆஸ்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1945 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.

1950 - கொரியப் போர்: அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.

1950 - சியோனிசம்: யூதர்கள் அனைவரும் இஸ்ரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இஸ்ரேலில் கொண்டுவரப்பட்டது.

1951 - சந்தி திரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்.

1954 - பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.

1954 – ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.

1962 - பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.

1970 - கனடிய விமானம் ஒன்று டொரொண்டோ விமான நிலையத்தில் மோதியதில் 109 பேர் கொல்லப்பட்டனர்.

1971 - ஐக்கிய அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.

1975 - போர்த்துக்கல்லிடம் இருந்து கேப் வேர்ட் விடுதலை பெற்றது.

1977 - பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.

1987 - விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.

1992 - இயக்கச்சியில் வை-8 விமானம் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1996 - குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.

1998 - செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஜப்பான் ஏவியது.

2004 - இந்தோனீசியாவில் முதலாவது அதிபர் தேர்தல் இடம்பெற்றது.

2006 - வட கொரியா குறைந்தது இரண்டு குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகளையும், ஒரு ஸ்கட் ஏவுகணையையும் ஒரு நீண்ட தூரம் பாயும் ஏவுகணையையும் சோதித்தது.

2009 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத் தலைநகர் உருமுச்சியில் கலவரங்கள் வெடித்தன.

2009 – ரொஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிசுத் தொடரில் ஆண்டி ரோடிக்கை வென்று 15வது பெருவெற்றித் தொடரைப் பெற்ற் சாதனை புரிந்தார்.



வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 06, 2014 12:00 am

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 ElOxCKhwQ52ofqV1Ehjg+July-6

1044 - புனித ரோமப் பேரரசின் மூன்றாம் ஹென்றி ஹங்கேரி மீது படையெடுத்தான்.

1189 - முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1484 - போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டான்.

1535 - சேர் தோமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தூக்கிலிடப்பட்டார்.

1560 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எடின்பரோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1785 - டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1854 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.

1885 - பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.

1892 - தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1893 - அயோவாவின் பொமெரோய் நகரில் நிகழ்ந்த சூறாவளியினால் 71 பேர் கொல்லப்பட்டனர்.

1908 - ரொபேர்ட் பியரி ஆர்க்டிக்குக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தில் அவர் வட முனையை அடைந்தார்.

1935 - சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.

1939 - ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

1944 - கனெக்டிகட்டில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் கொல்லப்பட்டனர்.

1947 - சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது.

1956 - சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.

1962 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.

1964 - மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1966 - மலாவி குடியரசாகியது.

1967 - நைஜீரியப் படையினர் பயாஃப்ராவினுள் நுழைந்து போரை ஆரம்பித்தனர்.

1975 - கொமொரோஸ் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1988 - வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 167 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

2005 - லண்டன் நகரம் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2006 - 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நது லா பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.



வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 07, 2014 9:17 pm

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 ZaRfGgQtS2SeRabGC9Rq+July-7

1456 - ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.

1543 - பிரான்ஸ் லக்சம்பேர்க்கை முற்றுகையிட்டது.

1799 - பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.

1807 - பிரான்சின் நெப்போலியனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ரஷ்யாவின் டில்சிட் என்ற இடத்தில் எட்டப்பட்டது.

1865 - ஆபிரகாம் லிங்கன் கொலையில் குற்றவாளிகளான நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1896 - இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1898 - ஹவாய் தீவை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் முடிவில் அதிபர் வில்லியம் மக்கின்லி கைச்சாத்திட்டார்.

1917 - ரஷ்யப் புரட்சி: ரஷ்யாவின் இடைக்கால அரசின் பிரதமர் இளவரசர் கியோர்கி லுவோவ் பதவியைத் துறந்தார். அலெக்சாண்டர் கெரென்ஸ்கி பிரதமரானார்.

1937 - பசிபிக் போர்: ஜப்பானியப் படைகள் சீனாவின் பெய்ஜிங் நகரை அடைந்தனர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் தலையீட்டைத் தடுப்பதற்காக அமெரிக்கப் படைகள் ஐஸ்லாந்தில் தரையிறங்கினர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: பெய்ரூட் நகரம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.

1953 - பொலிவியா ஊடாக பெரு, நிக்கராகுவா போன்ற நாடுகளுக்கான தனது பயணத்தை சே குவேரா ஆரம்பித்தார்.

1959 - வெள்ளிக் கோள் ரெகூலஸ் என்ற விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.

1967 - பயாபிராவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1969 - கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்துடன் இணைந்து அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

1978 - சொலமன் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

2005 - லண்டனில் 4 சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - சீனாவில் சுரங்கம் தோண்டுவதற்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.



வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 08, 2014 12:01 am

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 YwCYQebdRCwmH8XST4CN+July-8

1099 - முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.

1497 - வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.

1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் மன்னனைத் தோற்கடித்தான்.

1815 - பதினெட்டாம் லூயி பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னனான். இரு வாரங்களே பதவியில் இருந்த நான்கு வயது இரண்டாம் நெப்போலியன் பதவி இழந்தான்.

1859 - சுவீடன்-நோர்வே மன்னனாக சுவீடனின் பதினைந்தாம் சார்ல்ஸ் முடி சூடினான்.

1889 - வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலாவது இதழ் வெளியானது.

1892 - நியூபவுண்லாந்தின் சென் ஜோன்ஸ் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1982 - ஈராக் அதிபர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.

1985 - திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1990 - ஜெர்மனி ஆர்ஜென்டீனாவை வென்று 1990 கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.

2003 - சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.

2006 - ம. பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.




வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 09, 2014 10:38 pm

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 NSkYjOuESPG3sTYOA7hH+July-9

455 - அவிட்டஸ் மேற்கு ரோமப் பேரரசின் மன்னனானான்.

1357 - புனித ரோமப் பேரரசர் நான்காம் சார்ல்ஸ் பிராகா நகரத்தில் சார்லஸ் பாலத்திற்கு அடித்தளம் நாட்டினார்.

1755 - பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் குடியேற்ற துணை இராணுவக் குழு பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1790 - பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படயினர் ரஷ்யக் கப்பல்களை பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றினர்.

1810 - ஒல்லாந்து நாட்டை நெப்போலியன் தனது பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான்.

1816 - ஆர்ஜென்டீனா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஹட்சன் துறைமுகம் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது.

1868 - அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.

1900 - ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொதுநலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல்
அளித்தார்.

1903 - யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு (YMHA) உருவாக்கப்பட்டது.

1918 - டென்னசியில் நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில்
101 பேர் கொல்லப்பட்டு 171 பேர் படுகாயமடைந்தனர்.

1943 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தனர்.

1948 - பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.

1982 - ஐக்கிய அமெரிக்க போயிங் விமான லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 146 பேரும் தரையில் இருந்த 8 பேரும் கொல்லப்பட்டனர்.

1991 - 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1995 - யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

1995 - யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2002 - ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.

2006 - சைபீரியாவில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - 2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

2006 - அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.




வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 10, 2014 12:04 am

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 N2LgigtJRDecFS2W6TYc+July-10

988 - டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது.

1212 - லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது.

1460 - வோர்விக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தான்.

1553 - லேடி ஜேன் கிறே இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.

1778 - அமெரிக்கப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி பிரித்தானியா மீது போரை அறிவித்தான்.

1796 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.

1800 - உருது, இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை ஊக்கப்படுத்தவென கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1806 - வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.

1890 - வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.

1909 - ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.

1925 - சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.

1925 - இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவாரின் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

1941 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1951 - கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1956 - இலங்கை, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

1958 - அலாஸ்காவில் மிகப் பெரும் சுனாமி அலை (524 மீட்டர் உயரம்) பதியப்பட்டது.

1962 - உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.

1973 - வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

1973 - பஹாமாஸ் பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.

1978 - மௌரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.

1991 - தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட வாரியத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.

1991 - யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.

1992 - போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.

2006 - இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.




வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 10, 2014 2:35 pm

தொடர் பகிர்வுக்கு நன்றி விமந்தினி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 10, 2014 8:50 pm

நன்றி பானு.



வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 11, 2014 12:04 am

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 TUeiYMJ1Ty2fi4giHKKQ+July-11

1346 - லக்சம்பேர்க்கின் நான்காம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசன் ஆனான்.

1576 - மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்.

1735 - புளூட்டோ சூரியனுக்குக் கிட்டவாக ஒன்பதாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்துக்கு இந்நாளில் வந்தாக கணித கணக்கீடுகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது.

1740 - யூதர்கள் சிறிய ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

1750 - நோவா ஸ்கோசியாவின் ஹாலிஃபாக்ஸ் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1776 - கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தான்.

1796 - மிச்சிகனின் தலைநகர் டிட்ராயிட் நகரை பிரித்தானியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா "ஜே உடன்படிக்கை"யின் படி பெற்றுக் கொண்டனர்.

1811 - வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.

1859 - இரு நகரங்களின் கதை என்ற நாவலை சார்ல்ஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார்.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வாஷிங்டன் டிசியைத் தாக்க முயற்சித்தனர்.

1882 - பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாண்டிரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1893 - முதன் முறையாக ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.

1895 - லூமியேர சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படம் ஒன்றைக் காண்பித்தனர்.

1897 - வட முனைக்கு வாயுக்குண்டு மூலம் செல்லுவதற்காக சாலமன் அண்டிரே நோர்வேயின் ஸ்பிட்ஸ்பேர்ஜன் தீவிலிருந்து புறப்பட்டார். ஆனாலும் வாயுக்குண்டு தரையில் மோதியதில் அவர்
கொல்லப்பட்டார்.

1921 - மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.

1936 - நியூயோர்க் நகரில் டிறைபரோ பாலம் திறக்கப்பட்டது.

1943 - போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1973 - பிறேசில் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

1978 - ஸ்பெயினில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.

1979 - ஸ்கைலாப் விண்வெளி நிலையம் பூமிக்குத் திரும்பியது.

1982 - இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3 - 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உலக காற்பந்துக் கிண்ணத்தை வென்றது.

1987 - உலக மக்கள் தொகை 5 பில்லியனைத் தாண்டியது.

1990 - கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.

1991 - ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற டிசி-8 விமானம் சவுதி அரேபியாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் கொல்லப்பட்டனர்.

1995 - வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.

1995 - சேர்பிய இராணுவம் பொஸ்னிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

2006 - மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.




வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 11, 2014 12:07 pm

வரலாற்றில் இன்று.... ஜூலை - Page 2 103459460 

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக