புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
29 Posts - 34%
prajai
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
3 Posts - 4%
Jenila
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
7 Posts - 5%
prajai
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
புனித தத்துவப் பாடல்கள் Poll_c10புனித தத்துவப் பாடல்கள் Poll_m10புனித தத்துவப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித தத்துவப் பாடல்கள்


   
   
dr.gnandakumar@gmail.com
dr.gnandakumar@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 28/06/2014

Postdr.gnandakumar@gmail.com Sat Jun 28, 2014 2:14 pm

புனித தத்துவப் பாடல்கள்
எனது சுயஉள்ளுணர்வின் வெளிப்பாட்டுத் தொகுப்புகள்
பதிப்புரிமை : நூலாசிரியர் - கோ.நந்தகுமார்.
-------------------------------------------------------------------
பரப்பிரும்மம் காத்துமழித்திட முதலிலேநீ படைப்பவனானாயே
பள்ளிகொண்டோன் தொப்புள்கொடி மலருள் பிரும்மனானாயே
பரமசிவனேவி பயிரவனோர் தலைகொய்ய நான்முகனானாயே
பரத்தோரின் காலத்தைக் கபாலமெழுதிநீ பிரும்மலிபியானாயே
-கோ.நந்தகுமார்...44
------------------------------------------------------------------
பக்‌ஷிகளின் ராஜனே பரந்தாமன் வாஹனமே!
பாம்பினப் பகைவனே பெரிய திருவடியோனே
பங்காளி அமிழ்தமொடு அன்னை மீட்டவனே!
பஞ்ஜவாயு சொரூபக் கையேந்திப் பெருமாளே
-கோ.நந்தகுமார்...43
------------------------------------------------------------------
சிவபெருமான் நகத்துதித்த காலத்தின் காலபைரவரே
நான்முஹனின் கபாலமதைக் கையில் கொண்டவரே
சர்ப்பமே அணிகொண்ட ஸ்வர்னாகர்ஷண பைரவரே
எட்டுத்திக்கின் காவல் தெய்வமாகிய அஷ்டபைரவரே
-கோ.நந்தகுமார்...42
-----------------------------------------------------------------
தசத்தில் இரண்டாகும் உக்கிர தாராவே
தனது அடியார் தமக்கு நீலசரஸ்வதியே
தமரின் மோட்சநிலை ஞான தத்துவமே
தவிக்குமித் தனயனுக்கும் தந்திடு நீயே
-கோ.நந்தகுமார்...41
-----------------------------------------------------------------
எட்டுக் கைகளில் ஆயுதமேந்திய காளிசொரூபமே
எட்டுத்திக்கின் காவல் தெய்வமே மயானகாளியே
எட்டாத காவியமாய்க் கவிகளே காட்டிடுமரூபமே
எட்டிட்ட கலியில் கட்டம்தீர்த்தீடு கலிகாளியம்மே
-கோ.நந்தகுமார்...40
------------------------------------------------------------------
ஜஹமாகி ஜடமாகி ஜலத்தினுளுறை ஜம்புகேசா!
ஜனனியுடன் ஜனகனே ஜகத்தோருக்கு ஜலகேசா!
ஜனித்த ஜன்மங்களை ஜாதகிக்கும் ஜோதீஸ்வரா
ஜடுதியிலே ஜடம்நீக்கி ஜீவன்முக்திதா ஜடாதரா!
-கோ.நந்தகுமார்...39
------------------------------------------------------------------
நேற்றயப் போகி இன்றய யோகி
இன்றய யோகி நாளைய ஞானி
நாளும் ஞானியின் பக்தி முத்தி
ஒன்றே அவனின் ஜீவன் முக்தி
-கோ.நந்தகுமார்...38
-----------------------------------------------------------------
இதயத்தில் இருக்கும் இருவரையும் இல்லையென்போரே
இவ்வுலகில் இயல்பாக இருப்பதுவே இவைகளென்போரே
இங்குதித்து இல்லாதுபோம் இவை இயங்கச்செய்பவராரே
இதயத்தில் இருந்தே இயக்கிவிடும் இலக்குமிநாராயணரே
-கோ.நந்தகுமார்...37
------------------------------------------------------------------
காலனின் கணக்கு காலத்தைக் காட்டிடும்
காண்பலமும் கல்வியும் கடைவழி ஓடும்
காசும் கடைநிலையே காத்தும் கைவிடும்
காட்டிடும் கண்ணொளி கடவுளை மட்டும்
-கோ.நந்தகுமார்...36
------------------------------------------------------------------
கணங்களின் அதிபதி கணாதிபதி கணபதியே
விக்ன நிவர்த்தி அருள்தரும் விக்னேஸ்வரா
ஜகத்தில் ஜனித்தோர் மூலமான ஆனைமுகா
மாமா விஷ்ணுவின் தளபதி விஸ்வக்‌சேனா!
-கோ.நந்தகுமார்...35
-------------------------------------------------------------------
ஈரேழு பதிநாலு லோகாதிபதி அவளே
ஈதுலகைச் சுழலச் செய்வதும் அவளே
ஈண்டுதித்து வாழ்ந்து வீழச் செய்வளே
ஈயெரும்பு முதல் வாழும் பூமித்தாயே!
-கோ.நந்தகுமார்...34
--------------------------------------------------------------------
நாத்திகனுக்கு கண்கட்டுவித்தை பக்தனுக்கோ பிரும்மவித்யை
நாடுவதுசீரடியோ பாதிவழிபர்த்தியோ இரண்டுமே ஒன்றுகாண்
நாடிடுமருவ வழியோனும் நடுவிலுள்ளோனும் ஒரேவழிசொல்
நாடிட்டோருக்குத் திருநாட்டிலிருந்தே இருவரும் மருவழிகாண்
-கோ.நந்தகுமார்...33
-------------------------------------------------------------------
வீரத்தின் பிறப்பிடமே தீரத்தின் உறைவிடமே
யோகத்தின் முழுவடிவே சீலத்தின் பொருளே
காற்றின் மைந்தனே இராமசீதையின் பக்தனே
சத்யதிரேதா துவாபரகலி கண்டஓர் அனுமனே
-கோ.நந்தகுமார்...32
------------------------------------------------------------------
பிரும்மனின் பத்தினி கலைகளின் வாணிநீ
பிரும்மணியின் மூணில் ஒன்று அன்றோநீ
பாவலரின் நாவில் குடிகொண்ட குணவதிநீ
பரமனைப் பாடிட பக்தர்களின் துணைநீயே!
-கோ.நந்தகுமார்...31
------------------------------------------------------------------
மச்சத்தை முதல்கொண்டு எழுத்தச்சன் ஆசியுடன்
மற்றவையாம் கூர்மமிரு வராகமூண் நரசிம்மநால்
மாவாமனை பரசுராமனார் ராமனேழ் எம்முகுந்தா
மாதவத்தோ னொன்பதுடன் கல்கியோடு கலியிலே..(1)
கலிவரதன் காதயதை குருவாயூரில் குழந்தைமுன்
காவியமாய் பட்டாத்திரி வினைதீர படைத்திட்டதே
கலிமுடிவரை காதினில் நாட்டுக்கார் மோதிடுமோர்
காலத்தில் அழியாத நமனஜ்ஜும் நாராயணீயமாகும்.(2)
-கோ.நந்தகுமார்...30-(1)&(2)
------------------------------------------------------------------
அண்டத்தின் தாயே அரங்கபதி அம்மா
அகிலத்தோர் திருவே ஶ்ரீதேவி அம்மா
ஆதாரத் தரணியானநீ பூதேவி அம்மா
அரவணை துணை நீலாதேவி அம்மா
-கோ.நந்தகுமார்...29
------------------------------------------------------------------
உயிரே உடலுரை உயிரின் சுருளே
உடலில் ஊரும் உருவிலா அருவே
உலகில் உய்யும் உருவோர் கருவே
உற்ற உடலிடை உய்வழிநீ அருளே
-கோ.நந்தகுமார்...28
------------------------------------------------------------------
தத்துவமகாக் கடலில் முத்துக் குளிக்கையில்
தான்கண்ட சிப்பியைத் தனியே பிளக்கையில்
தானே தன்வயமாகிப் பகிர்ந்து அளிக்கையில்
தான்பெறும் இன்பத்துக்கு ஈடுஇணை இல்லை
-கோ.நந்தகுமார்...27
-----------------------------------------------------------------
அவனோ அவளோ அதுவோ எதுவோ
அவனாக அவளாக அதுவாக அதுவே
அவனாய் அவளய் அதுவாய் நினைநீ
அவனின் அவளின் அதுவின் துளியே
-கோ.நந்தகுமார்...26
-----------------------------------------------------------------
அதோஅதுவே பாதையென காட்டியதோர் சீனத்துத்தேவோ
அனைத்துலகவாதை யின்னும் யெங்கும் எதிரெதிர்குவியே
அதுவழி பஞ்சபூதத் தியற்கையொட்டிய இயல்வழிவாழ்வே
அவர்தம்ஞானி லேஓசி தொகுத்ததோ தேவோதசிங்வழியே
-கோ.நந்தகுமார்...25
--------------------------------------------------------------
உருவாதலும் அருவாதலும் அண்டத்தின் சுழலும்பொருள்கள் கருவாதலும் உடலாதலும் பிண்டத்தின் அழிவிலாதஉயிர்கள்
அனாதி பரமாத்மனுள்ளுரை ஜீவனும் எல்லையுள்ளமனங்கள்
அடைநிலையிலே அளவிடமுடியா எல்லையில்லாகடவுளை
-கோ.நந்தகுமார்...24
-------------------------------------------------------------
அனைத்துலகும் அரசாளும் அண்டத்தின் பராசக்தியாத்தா
அவளுடனே சகிபதியாக நடனமாடிடும் பரமசிவனைய்யா
அரங்கத்தின் நாயகியும் திருவாகிய ஶ்ரீபூநீலாதேவியம்மா
அவளைத்தன் மார்பிலுற்ற அரங்கப்பெருமாளே அப்பப்பா !
-கோ.நந்தகுமார்...23
-------------------------------------------------------------
மாமரத்தடி கண்டெடுத்த மட்டிலாஅழகி அம்ரபாலிகை
மாவேந்தர்கள் மதிமயங்கிட அவதரித்த அம்பபாலிகை
மாநகரம் வைசாலிமாந்தர் கண்முன்னே அழியக்கண்டு
மாதவத்தோன் சித்தார்த புத்தன்வழி அண்டிவிட்டாளே
-கோ.நந்தகுமார்...22
-------------------------------------------------------------
பாம்பணைமேல் யோகத் துயில்கொண்ட திருவரங்கன்
பரம ஆத்மாவவன் திருவரங்கம் உரைகொண்டானவன்
பூலோக சகத்திரத்தில் பூரணத்துவ நிலைகண்டிட்டவன்
பூதேவிமூல சரயுநதிமேல் காவேரியாக கொள்ளிட்டான்
-கோ.நந்தகுமார்...21
--------------------------------------------------------------
அன்னைசாரதா தேவிமணாளா ராமகிருஷ்ண பரமஹம்ஸா
அகிலம்போற்றிய ஆனந்த விவேஹரின் பரமார்த்தகுருவே
அண்டசக்தி பராசக்தி அகிலத்தின்நாயகி காளிதேவிபக்தரே
அடியவர்படுதுயர் களைந்திட அருள்வழியைக் காட்டிடுவீரே!
-கோ.நந்தகுமார்...20
---------------------------------------------------------------
சித்தார்த்த கௌதம புத்தா மாயாபுத்ரா
லும்பினி தோன்றிய கயாபோதி ஞானா
பரமனின் தசத்திலே கலிநவ அவதாரா
தமபத தத்துவத்திலோ ஞான விலாசா
-கோ.நந்தகுமார்...19
---------------------------------------------------------------
அருவமாக ஆபிரஹாமை இப்ரஹீமாக ஈண்டுகொண்டாடியே
உருவம்ஊடாக எதுவுமிலா ஏந்தலாக ஐயமிலாஅல்லாமட்டுமே
ஒன்றெனக்கூறிய ஒளடதமொஹமதவர் ஃபாத்திமாதந்தையே
அல்லாஹு அக்பரென குரானேஉலகில் சொல்லாகிகலிமுடிவே
-கோ.நந்தகுமார்...18
---------------------------------------------------------------
ஒட்டகமேலேறி வெள்ளிவழி மேல்திசைபோய் மாகியமூவர்
ஓதியவேதநூலின் கன்னிக்குதித்த நவயுகநாயகன் காட்டினர்
ஒழுக்கவாழ்வை கலியுகமாந்தர் கற்றுப்பெறவே வாழ்த்தினர்
ஓதியவேதநாயகனும் தன்னலமில்லா வாழவழி காட்டிட்டார்
-கோ.நந்தகுமார்...17
----------------------------------------------------------------
அகோபிலமாளும் அஹோபல ஆதிநவ நரசிம்மமே
அக்காரக்கனியாக அனுமனுடன் கடிகாசலச் சீயமே
அரங்கபதிவாழும் அழகிய காட்டுமேட்டுச் சிங்கமே
அடியவர்கள் படுதுயர்களய தூண்பிளந்து வாருமே!
-கோ.நந்தகுமார்...16
----------------------------------------------------------------
மழைமாரி தருந்திரு மகமாயி அம்மா
மணல்வாரி பிணிதணி சக்திநீ அம்மா
மாந்தரின் மூலத்தில் நிலைநீ அம்மா
மாதவனின் சகோதரி மாகாளி அம்மா
-கோ.நந்தகுமார்...15
----------------------------------------------------------------
மோகம் தெளிந்து காமம் தணிந்து
குரோத விரோதம் கூடிப் பணிந்து
போகம் விலக்கி யோகம் கனிந்து
பக்திவழி ஜீவன் முக்தி முடிவது
-கோ.நந்தகுமார்...14
----------------------------------------------------------------
காமம் கடந்திட சக்திசிவம் அண்டிடும்
விரோதம் வென்றிட மார்க்கம் புலப்படும்
போகம் ஒதுக்கிட திரேகம் பலப்படும்
யோகம் தெளிந்திட யாவும் வசப்படும்
-கோ.நந்தகுமார்...13
----------------------------------------------------------------
மாந்தருள் மூவகை முக்குண முடிச்சாம்
மறைமொழி சத்வம் மஹேஸ தத்துவம்
மல்லிடும் ராஜசம் மன்னர்தம் வித்துவம்
மதிகுறை தமசம் கடைவழி கயமையாம்
-கோ.நந்தகுமார்...12
----------------------------------------------------------------
வாழ்வும் வீழ்வும் விதிவழி விழைவே
வாழ்ந்த வாழ்க்கை அதுவழி இழுக்கே
புகழ்வது இகழ்வது நிகழ்வது வழக்கே
கடைவழி தழுவ இடைவழி பிழையே
-கோ.நந்தகுமார்...11
---------------------------------------------------------------
ஆதிபராசக்தியவள் அன்னைவழி மூலமதில் இச்சாசக்தியாகி
அனாதிசிவனும் அவளுடனே முக்கண்ணில் ஞானசக்தியாக
அனாகத்தில் திருமாலும் திருவுடனே கிரியாசக்தியியக்கிட
அண்டதில் அடியவரஅவர் வினைக்கடன் கலிமுடிதீர்ப்பரே
-கோ.நந்தகுமார்...10
---------------------------------------------------------------
ரிஷபமேல் அமர்சிவனும் கருடவாஹன மாலோனும்
ரிஷியாக மாந்தருக்கு மயக்கநிலை போக்கிடவும்
வையகத்தில் வாழ்வோர்க்கு வாழும்வழி காட்டிடவும்
வருமந்திரத்தை யந்திரமேல் தந்திரம் செய்திடவும்
-கோ.நந்தகுமார்...9
----------------------------------------------------------------
நமன் வருங்கால் நாடியதோர் நாரணனும்
நலம்தரும் நமசிவயம் நல்வழி காட்டிடவும்
குலம்தந்த குண்டலனி சக்திசிவம் ஒன்றிடவும்
குணமொடு சடம்விடுத்து நல்லாவி பரமடையும்
-கோ.நந்தகுமார்...8
-----------------------------------------------------------------
அலையாழியோன் திருவோடு அனாகதத்தில் நிலையே
அண்டத்தின் சக்தியவள் குண்டலனியாக குணமொடுகுடியே
ஆதிசிவனவன் முக்கண்னொடு மூளையில் முடிமுடிச்சே
ஆணவமழித்து திருமால் துணையொடு அதன்வழிவெளியே
-கோ.நந்தகுமார்...7
-----------------------------------------------------------------
குண்டியில் நிலையது சக்தி ரீங்காரமே
குவலய மாந்தரின் குணாதி செயலதே
கூம்பு சுரப்பியின் அடைவு தெளிந்தபின்
கூடுமே சக்தி சதாசிவ நிலையந்தமே !!
-கோ.நந்தகுமார்...6
-------------------------------------------------------------------
ஆழியெனும் சுதர்ஸன சக்கரமே திருமழிசையாகி
சங்கெனும் பாஞ்ச சன்னியமே பொய்கையாகி
வில்லெனும் சாரங்கமே திரு மங்கையாகி
திசைவாழி புஷ்பஹ விமானமே விஷ்ணுசித்தனாகி
தண்டெனும் கௌமேத கதயே பூதமாகி
வாளாகிய நந்தக கத்தியே பேயாகி
அண்டமெனும் பூமா தேவியே ஆண்டாளாகி
மோழையெனும் வனமாலையே தொண்டரடிப் பொடியாகி
முடியெனும் கௌஸ்துப கிரீடமே குலசேகரமாகி
பாதமாம் பெரியதிருவடி கருடனே மதுரகவியாகி
அப்பன் விஷ்வக் சேனைமுதலியே நம்மாழ்வாராகி
ஊழியெனும் ஸ்திரீவத்சமாம் பாணமே திருப்பாணாகி
உலகம் உள்ளளவும் நாலாயிரமும் உண்டவாறே
-கோ.நந்தகுமார்...5
-----------------------------------------------------------------
சத்தும் சித்தும் ஆனந்த சோதியே
சதாநிலை சித்தர் அனுபவ விதியே
சிரசொடுகண் விசுத்தி அனாகத பூரகமே
சுவாதி மூலாதார நிலையது விடுமே
-கோ.நந்தகுமார்...4
----------------------------------------------------------------
முகில்வண்ணனும் முக்கண்ணனும் மூவரில் முழுமுதலாகும்
மூன்றிலிருவரும் முயல்வோர் முடிவில் முக்திதருவரே !
-கோ.நந்தகுமார்...3
---------------------------------------------------------------
நீலவண்ணனும் நீலகண்டனும் நீரும் நெருப்புமாம்...நாள் நாளதும் நவிலும் நாவில்..நல்கும் நல்லொர் நலம் நிசமே !
--கோ.நந்தகுமார்...2
---------------------------------------------------------------
அரங்கபதி திருவடி அபயஉபாயம் உபயநாச்சியரே
அம்மூவரில் முன்னவர் ஶ்ரீதேவியருளாம் திருவே
அடுத்தே பின்னவர் பூதேவியாரின் பூதத்துவமே
அதன்பின் தன்னுள் நீளாநிலைதரும் நீலாதேவியே
-கோ.நந்தகுமார்...1
---------------------------------------------------------------------
புனித தத்துவப் பாடல்கள்
Dr.G.Nandakumar-கோ.நந்தகுமார்.(+919443998505)
E Mail ID: dr.gnandakumar@gmail.com
Location : Srirangam;TamilNadu,INDIA
இருப்பிடம் : ஶ்ரீரஙகம்;தமிழ்நாடு,இந்தியா
----------------------------------------------------------------------
Copyright : AUTHOR - Dr.G.Nandakumar (கோ.நந்தகுமார்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:05 am

மிகவும் நன்று!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



புனித தத்துவப் பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dr.gnandakumar@gmail.com
dr.gnandakumar@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 28/06/2014

Postdr.gnandakumar@gmail.com Sun Jun 29, 2014 11:57 am

புனித தத்துவப் பாடல்கள்
எனது சுயஉள்ளுணர்வின் வெளிப்பாட்டுத் தொகுப்புகள்
பதிப்புரிமை : நூலாசிரியர் - கோ.நந்தகுமார்.
----------------------------------------------------------------------------
தொடர் பதிவு
----------------------------------------------------------------------------
மாலவன் வலக்கை ஆட்காட்டி விரல்சுழலாயுதமே
மாலோலன் பின்புலப் பலமுடன் சக்கரத்தாழ்வாரே
முதலை தலைகொய்திட்ட ஆதிமூல அஸ்த்திரமே
முதலாழ்வார் மூவர்பின் வந்த திருமழிசைபிரானே
-கோ.நந்தகுமார்...46
------------------------------------------------------------------------------
அகில அண்டத்தின் ஈஸ்வரி அகிலாண்டேஸ்வரியே
ஆனைக்கா நிலைகொண்ட ஈசனின் பச்சைநாயகியே!
அரக்கர்படை அழித்திடவே அவதரித்திட்ட வராகியே
ஆசையதால் அலைக்கழியும் அவதியைத் தீர்ப்பாயே
-கோ.நந்தகுமார்...45
-------------------------------------------------------------------------------
தொடர் பதிவு
---------------------------------------------------------------------
புனித தத்துவப் பாடல்கள்
Dr.G.Nandakumar-கோ.நந்தகுமார்.(+919443998505)
E Mail ID: dr.gnandakumar@gmail.com
Location : Srirangam;TamilNadu,INDIA
இருப்பிடம் : ஶ்ரீரஙகம்;தமிழ்நாடு,இந்தியா
----------------------------------------------------------------------
Copyright : AUTHOR - Dr.G.Nandakumar (கோ.நந்தகுமார்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 3:24 pm

மேலும் தொடர்கிறதா இத்திரி, மகிழ்ச்சி!

பாடல்கள் அனைத்துமே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள்!

எழுதி முடித்ததும் புத்தகமாக வெளியிடுங்கள்!



புனித தத்துவப் பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dr.gnandakumar@gmail.com
dr.gnandakumar@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 28/06/2014

Postdr.gnandakumar@gmail.com Sun Jun 29, 2014 7:36 pm

அகிலாண்டேஸ்வரி :
-------------------------------
அகில அண்டத்தின் ஈஸ்வரி அகிலாண்டேஸ்வரியே
ஆனைக்கா நிலைகொண்ட ஈசனின் பச்சைநாயகியே!
அரக்கர்படை அழித்திடவே அவதரித்திட்ட வராகியே
ஆசையதால் அலைக்கழியும் அவதியைத் தீர்ப்பாயே
-கோ.நந்தகுமார்...45
---------------------------------------------------------------------------
Transliteration : ஒலிபெயர்ப்பு
Akila aṇdathiṉ īsvari akilāṇdēsvariyē
āṉaikkā nilaikoṇṭa īsaṉiṉ paccaināyakiyē!
Arakkarpadai azhittiṭavē avatarittiṭṭa varākiyē
āsaiyathāl alaikkazhiyum avatiyait thīrppāyē
-kō.Nandakumār...45
---------------------------------------------------------------------------
Translation : மொழிபெயர்ப்பு
Ruler of the total Universe by the name 'Akilandeswari'
Located at Thiruvanaikovil as Green consort of Siva !
Incarnated as Varahi as terminator of Demonic forces
Salvage those of us suffering from desire to overcome
-Dr.G.Nandakumar...45
---------------------------------------------------------------------------
Akilandeswari or Akhilāṇḑeśvarī is one of the main forms of the Hindu goddess, Parvati.The deity's name means: Supreme Goddess ("Eswari") - who rules ("Aand") - the Universe ("Akilam"). Hence, Akilandeswari.
The abode of Akilandeswari is the Jambukeswarar Temple, Thiruvanaikoil.
Akilandeswari, the Mother of the Universe, is said to have worshipped the Lord in this temple. Symbolically even today, at noon the priest, dressed in a saree, performs pooja to Sri Jambukeswara. It is said Sri Adi Sankara Bhagavadpada consecrated the Thotongo (earrings) Chakra, now adorning the ears of the Devi. Sri Adi Sankara installed a Ganapathy Vigraha in front of Sri Akilandeswari and this contained her Ugrakalai -- malignant aspects.
---------------------------------------
பஞ்சபூத தலம் - நீர்த்தலம்
---------------------------------------
திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
----------------------------------------------------------
அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம்
----------------------------------------------------------
திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.
அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
--------------------------------------------
அம்பிகை வழிப்பட்ட லிங்கம்
--------------------------------------------
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
-----------------------------------
வராஹி (தண்டினி) :
-----------------------------------
அகிலாண்டேஸ்வரி தண்டினி அம்சம்
ஆனைக்கா வராஹி (தண்டினி) பீடம் !
மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டுப் பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்
இவளுக்கு பல நாமங்கள் உள்ளன சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.
வராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வராஹி , அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி , லகு வராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் { ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு , மஞ்சள் என்று பல உடைகள் , பல ஆயுதங்கள்
வராஹம் என்றால் என்ன? பன்றி தானே , வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹி தான்.பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம். நம்முடைய குண்டலினியை{ உயிர் சக்தியை } உயர்த்துபவளே வராஹி
அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம் ? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் {ஆழத்தில்} இருப்பதை எடுப்பதற்கு தானே , கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி {இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்} என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை. எழுந்த குண்டலினி மேல் வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல்{ தண்டம்} ஏந்தியவள் அன்னை ..
அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவள் (மூலாதாரம் இருக்கும் இடம்) !
குண்டலினியை ஆக்கினையில் வைத்து வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும், எதிரிகள் குறைவார்கள் {அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது} வராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.

dr.gnandakumar@gmail.com
dr.gnandakumar@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 28/06/2014

Postdr.gnandakumar@gmail.com Sun Jun 29, 2014 7:39 pm

(((SUDARSHAN CHAKRA)))(((O)))(((ஸுதர்ஷன சக்கரம்)))
----------------------------------------------------------------------------
மாலவன் வலக்கை ஆட்காட்டி விரல்சுழலாயுதமே
மாலோலன் பின்புலப் பலமுடன் சக்கரத்தாழ்வாரே
முதலை தலைகொய்திட்ட ஆதிமூல அஸ்த்திரமே
முதலாழ்வார் மூவர்பின் வந்த திருமழிசைபிரானே
-கோ.நந்தகுமார்...46
----------------------------------------------------------------------------
Transliteration : ஒலிபெயர்ப்பு
Mālavaṉ valakkai āṭkāṭṭi viralcuḻalāyutamē
mālōlaṉ piṉpulap palamuṭaṉ cakkarattāḻvārē
mutalai talaikoytiṭṭa ātimūla asttiramē
mutalāḻvār mūvarpiṉ vanta tirumaḻicaipirāṉē
-kō.Nandakumār...46
----------------------------------------------------------------------------
Translation : மொழிபெயர்ப்பு
Spinning in the right index finger of Maha-Vishnu
Strongly backed by Narasimar - Chakrathazhwar
Severed the crocodile head to save the elephant
Came in after 3 Azhwars 4th' Thirumazhisaipiran!
-Dr.G.Nandakumar...46
--------------------------------------------------------------------------------
(((SUDARSHAN CHAKRA)))(((O)))(((ஸுதர்ஷன சக்கரம்)))
--------------------------------------------------------------------------------
The Sudarshana Chakra ( Sanskrit : सुदर्शन चक्र ) is a spinning, disk-like super weapon with 108 serrated edges used by Lord Vishnu(Krishna) . The Sudarshana Chakra is portrayed on the right rear hand of the four hands of Vishnu, who also holds a Shankha (a conch shell) in his left rear hand, a Gada (mace) in his right fore hand, anda Padma (lotus) in his left fore hand.
According to the Puranas, Sudarshana Chakra is used for the ultimate destruction of an enemy. The depiction of Vishnu with Sudarshan Chakra also means that Vishnu is the keeper-owner of the celestial bodies and heavens.
--------------------------------------------------------------------------------
The word sudarshan chakra (सुदर्शन चक्र) is derived from two words, su (सु) and darshan (दर्शन). It means the vision (darshan) of which is auspicious (su). The word chakra is derived from chruhu (चृ:)which means movement and kruhu (कृபுன்னகை which means to do. Thus chakra means that which is mobile. Of all weapons this is the only one which is constantly in motion.
--------------------------------------------------------
Parts of the discus and the implied meaning
--------------------------------------------------------
The middle stable part: It is named bhruvi (equality), bhag (radiance), nirdesh (speed) and sampada (endowed with the nectar of nutrition).
The spokes: It has twenty-seven spokes charged with the run energy of the twenty-seven feminine principles created from Prajapati. These spokes contain the yogini panchak, that is the basic components of the five cosmic elements.
The energy in all feminine principles is beyond the restrictions of direction and time.
Yogini: ‘योगं नियते इति’ means the one who bestows the energy which is unattainable.
Lakshmi: The one who bestows one with the achievement of the target (lakshyam) or the absolute truth.
Narayani: All pervading
Murdhini: Murdha is the linear part included in the longitudinal section between the centre of the eyebrows and the vertebral column.
It is referred to as the line of the head (mastakresha). Murdhini refers to the frequencies which intersect the head directly. These frequencies are present in Murdhini or Murdhivahini refers to that which flows through the murdha.
Randhra: The speed or energy which transforms into the subtlemost.
Parigh: This is constituted by the following eight masculine principles.
Aditya: ‘आदि: अत:’ means the radiance which first came into existence and is still persisting.
Varuni: Varun is the deity of water. Varun exercises control over the dikbhavs, that is those created from the directions. The dikbhavs are the main centres of the directions. Hence no matter in which direction the discus travels, it is never obstructed.
Juhu: The subtlemost speed which is enriched with the radiance (jyoti) derived from the lunar asterisms.
Narayan: The one endowed with the energy of movement of the Navanarayans, the nine serpents { from the universal spiritual energy flow system } (kundalini)
-----------------------------------------------------------------------------------
Size of the discus: It is so tiny that it can be kept on the tip of a
leaf of the tulsi plant and at the same time is so vast that it can encompass the entire universe.
----------------------------------------------------------------------------------
The Sudarshana Chakra was made by the architect of gods, Vishvakarma. Viswakarma's daughter Sanjana was married to Surya, the Sun God. Due to the Sun's blazing light and heat, she was unable to go near the Sun. She complained to her father about this. Viswakarma took the Sun and made him shine less so that his daughter would be able to hug the Sun. The left over Sun "dust" was collected by Viswakarma and he made three things out of it. The first one was the famous aerial vehicle Pushpaka Vimana, the second being the Trishula (Trident) of Lord Shiva, and the third was the Sudarshana Chakra of Lord Vishnu.
---------------------------------------------------------------------------------
The Chakra comprises 10 million spikes in two rows moving in opposite directions to give it a serrated edge.
---------------------------------------------------------------------------------
Prayers-^- to the Lord’s Weapon --^-> (((Sudarsana Chakra)))
---------------------------------------------------------------------------------
chakram yugantanala-tigma-nemi
bhramat samantad bhagavat-prayuktam
dandagdhi dandagdhy ari-sainyam ashu
kaksham yatha vata-sakho hutashaha
Set into motion by the Supreme Personality of Godhead and wandering in all the four directions, the Sudarsana disc of the Supreme Lord has sharp edges as destructive as the fire of devastation at the end of the millennium. As a blazing fire burns dry grass to ashes with the assistance of the breeze, may the Sudarshana chakra burn our enemies to ashes.
--------------------------------
சக்கரத்தாழ்வார் :
--------------------------------
திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்ராயுதம் என்பது விஷ்ணுவின் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தினை சக்கரத்தாழ்வார் என வடிவமிட்டு வைணவர்கள் வணங்குகிறார்கள். சுதரிசனம்,சுதர்சனம் என பல பெயர்களில் இவ்வாயுதம் வழங்கப்படுகிறது.சக்கராயுதத்தின் உருவமான இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்று 16 கைகள் கொண்டவர்.
திருமால் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சந்நிதி உண்டு.
ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர். பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார்.
சுவாமி தேசிகன் சக்கரத்தாழ்வரை { சக்ர ரூபஸ்ய சக்ரிண } திருமாலுக்கு இணையானவர் என்றார். சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார்.
-------------------------------------------------------------------------
சக்கரத்தாழ்வாரின் பதினாறு ஆயுதங்கள் :
-------------------------------------------------------------------------
வலக்கையில் :
சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம்,
சதாமுகாக்கனி, மிஸ்கிரிசம், வேல்.
இடக்கையில் :
பாஞ்ச சண்யம்,சாரங்கம்,பாசம்,கலப்பை
வஜ்ராயுதம்,கதை,உலக்கை,திரிசூலம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 30, 2014 1:04 pm

புனித தத்துவப் பாடல்கள் 3838410834 புனித தத்துவப் பாடல்கள் 3838410834 
-
புனித தத்துவப் பாடல்கள் NJcj6GllTWaBdmK1Ik6Z+index111
-


dr.gnandakumar@gmail.com
dr.gnandakumar@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 28/06/2014

Postdr.gnandakumar@gmail.com Mon Jun 30, 2014 2:35 pm

-------------------------------
-^- கருடாழ்வார் -^- :>
-------------------------------
பக்‌ஷிகளின் ராஜனே பரந்தாமன் வாஹனமே!
பாம்பினப் பகைவனே பெரிய திருவடியோனே
பங்காளி அமிழ்தமொடு அன்னை மீட்டவனே!
பஞ்ஜவாயு சொரூபக் கையேந்திப் பெருமாளே
-கோ.நந்தகுமார்...43
--------------------------------------------------------------------
Transliteration : ஒலிபெயர்ப்பு
Pak‌ṣhikaḷiṉ rājaṉē parantāmaṉ vāhaṉamē!
Pāmpiṉap pakaivaṉē periya tiruvadiyōṉē
paṅkāḷi amizhtamoṭu aṉṉai mīṭṭavaṉē!
Pañjavāyu sorūpak kaiyēndhip perumāḷē
-kō.Nandakumār...43
---------------------------------------------------------------------
Translation : மொழிபெயர்ப்பு
King of all birds and the areal vehicle of Vishnu
Enemy of snake clan & named 'The big footed'
Rescued mother & the share of cousins Nectar
Union of 5 elements>Lord with stretched hands
-Dr.G.Nandakumar...43
-----------------------------------------------------
LEGEND)))))-^-((((( புராணக்கதை :
-----------------------------------------------------
The Garuda (Sanskrit: गरुड़ garuḍa) is a large mythical humanoid bird, the mount (vahana) of the Lord Vishnu. Garuda is the Hindu name for the constellation Aquila & is depicted as having the golden body of a strong man with a white face, red wings, and an eagle's beak and with a crown on his head.
Garuda is known as the eternal sworn enemy of the Nāga serpent race and known for feeding exclusively on snakes. The image of Garuda is often used as the charm or amulet to protect the bearer from snake attack and its poison, since the king of birds is an implacable enemy and "devourer of serpent". Garudi Vidya is the mantra against snake poison to remove all kinds of evil.
An independent Upanishad, the Garudopanishad, and a Purana, the Garuda Purana, is devoted to him. Various names have been attributed to Garuda - Chirada, Gaganeshvara, Kamayusha, Kashyapi, Khageshvara, Nagantaka, Sitanana, Sudhahara, Suparna, Tarkshya, Vainateya, Vishnuratha and others. The Vedas provide the earliest reference of Garuda, though by the name of Śyena, where this mighty bird is said to have brought nectar to earth from heaven. The Puranas, which came into existence much later, mention Garuda as doing the same thing, which indicates that Śyena (Sanskrit for Eagle) and Garuda are the same. Worship of Garuda is believed to remove the effects of poisons from one's body. In Tamil Vaishnavism Garuda and Hanuman are known as "Periya Thiruvadi" and "Siriya Thiruvadi" respectively.
Garuda wears the serpent Adisesha on his left wrist and the serpent Gulika on his right wrist. The serpent Vasuki forms his sacred thread. The cobra Takshaka forms his belt on his hip. The snake Karkotaka is worn as his necklace. The snakes Padma and Mahapadma are his ear rings. The snake Shankachuda adorns his divine hair. He is flanked by his two wives ‘Rudra’ and ‘Sukeerthi’ or (Sukirthi). These are all invoked in Vedanta Desika's Garuda Panchashath and Garuda Dandaka compositions.
Garuda Vyuha is worshiped in Tantra for Abhichara and to protect against Abhichara. The interesting thing is that Garuda is the Sankarshna form of the lord who during creation primarily possesses the knowledge aspect of the lord (among Vasudeva, Sankarshana, Pradyumna and Aniruddha forms). The important point is that Garuda represents the five vayus within us : prana, apana, vyana, udana, samana through his five forms Satya, Suparna, Garuda, Tarkshya, Vihageshwara. These five vayus through yoga can be controlled through Pranayama which can lead to Kundalini awakening leading to higher levels of consciousness.
It is also said that Garuda's wings when flying will chant the Vedas.
With the position of Garuda's hands and palms, he is also called 'Kai Yendhi Perumal', in Tamil.
-------------------------------------------------------------------------
கருடாழ்வார் என்ற கருடன் இந்து சமயப் புராணங்களில் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.
தமிழில் கருடன் என்ற சொல் செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய செம்பருந்து என்ற பறவையைக் குறிக்கும். கருடன் பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது. இப்பறவை வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவிலில் குடமுழுக்கு, வேள்வி மற்றும் பிற சிறப்பு வழிபாடுகள் நடைபெரும்போது போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது.
பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை. இக்கோவிலில் கருடன் சன்னதி அமைந்துள்ள கருட மண்டபம் 212 தூண்கள் உள்ள ஒரு பிரம்மாண்டமான படைப்பு ஆகும் !
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்ற கருட வாகனம். இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார் பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார்.
சுவாமி புறப்பாட்டின்போது இங்கு ஒரு அதிசயம் நடக்கிறது. சன்னதியில் இருந்து புறப்படும்போது இந்த கல் கருடனை 4 பேர் மட்டுமே தூக்குவார்கள். அங்கிருந்து நகர நகர, கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவதால் 8 பேர், 16 பேர் என்று பலர் சேர்ந்து தூக்குவார்கள் !
பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டது.
பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை . பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது !

புனித தத்துவப் பாடல்கள் B1FCLsnJQGGp5few1sul+கருடவாகனம்

புனித தத்துவப் பாடல்கள் GAgfEGptSJqGk0MgzWyi+கல்கருடன்

புனித தத்துவப் பாடல்கள் GJhZZaDSRRmfITAeWAB2+கருடனும்பாம்புகளும்

புனித தத்துவப் பாடல்கள் 0imbNJl8SRuTKCR5Y7p5+gajendra

புனித தத்துவப் பாடல்கள் CpTvOmMsQqS70H3LSed2+கருடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக