புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா Poll_c10சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா Poll_m10சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா Poll_c10 
24 Posts - 69%
heezulia

7 Posts - 20%
kavithasankar

1 Post - 3%
mohamed nizamudeen

Balaurushya

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா Poll_c10சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா Poll_m10சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா Poll_c10 
78 Posts - 80%

7 Posts - 7%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 1:30 am

சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா 564xNxp2_1963460g.jpg.pagespeed.ic.r1vzRNMHln

மகளிர் நோய்க்கான மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள டாக்டர் இந்திரா ஹிந்துஜா, ஒரு காலத்தில் வலி பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள நினைத்தார் என்றால் நம்ப முடிகிறதா?

“நான் எம்.டி. படிப்பை முடித்ததும் எனக்கு மிகக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டு பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குத் துடிதுடித்து வேதனைப்பட்டேன். முதுகுத் தண்டுவடத்தில் ஒரு கட்டி இருப்பதாகவும், உள்ளே எலும்பு அரிக்கப்பட்டுவருவதாகவும் டாக்டர்கள் சொன்னார்கள். மூன்றிலிருந்து ஆறு மாதங்களில் கால்களில் பக்கவாதம் ஏற்படலாம் என்றும் சொன்னார்கள். நான் உண்மையிலேயே உடைந்துபோனேன்” என்று அந்த வேதனையான அனுபவத்தை நினைவுகூரும் டாக்டர் இந்திரா ஹிந்துஜா, வேதனை தன்னை வாட்டியெடுத்ததில் பெரும் மனச் சோர்வுக்கு ஆளானதாகக் குறிப்பிடுகிறார்.

இந்தத் தீராத தொல்லையிலிருந்து விடுபடத் தற்கொலை செய்துகொள்வதுதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். முக்கியமாகத் தனது பெற்றோர்களுக்கு ஒரு சுமையாக இருக்க அவர் விரும்பவில்லை. அந்தச் சமயத்தில்தான் மைலோகிராம் என்ற சோதனையைச் செய்துபார்ப்பது என்று டாக்டர்கள் முடிவுசெய்தனர். இவரது தற்கொலை மனநிலையை நன்கு அறிந்திருந்த இவருடைய தோழிகள் இவரை விட்டு நகராமல் கூடவே இருந்தார்கள்.

மைலோகிராம் சோதனையில் கட்டி எதுவும் இல்லை என்றும், உடல் நிலைமையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. “சாதாரணமாக அந்த வயதில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலிதான் என்றும், மருந்துகள், யோகா போன்றவற்றால் குணப்படுத்திவிட முடியும் என்றும் டாக்டர்கள் சொன்னது என் காதுகளில் தேனை ஊற்றியது போல இருந்தது” என்று சொல்லும் ஹிந்துஜா, இந்தச் செய்தியைக் கேட்டவுடன், அவர் தோழிகள் இவரைத் தழுவி முத்தமிட்டு, மகிழ்ச்சி ஆரவாரத்தில் திணறடித்த தருணத்தை மறக்கவே முடியாது என்கிறார்.

“தற்கொலை செய்துகொள்ள நினைத்த என்னை நான் இப்போதும் ஒரு கோழை என்றே நினைக்கிறேன்” என்று சொல்கிறார். இனப்பெருக்க உயிரியல் (Reproductive Biology) பற்றிய துறையில் இவர் எழுதிய 108 அறிவியல் சார்ந்த வெளியீடுகள், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் உரையாற்றியிருக்கிறார்.

இந்திரா ஹிந்துஜாவுக்குக் கிடைத்துள்ள ஏராளமான பல விருதுகளும் பாராட்டுகளும் பதக்கங்களும் அவருடைய மருத்துவமனை அலமாரிகளை அலங்கரிக்கின்றன. 2011-ல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. மகாராஷ்டிரா ஆளுநர், தன்வந்த்ரி விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறார். இந்தியாவின் சோதனைக் குழாய் முறையிலான முதல் குழந்தை பிறப்பிற்கு முன்னோடியாக விளங்கியமைக்காக ரோட்டரி சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு கோல்டன் மகாராஷ்டிரா விருதுபெற்றோர் வரிசையில் இடம்பெற்ற இவர், இந்திய ஐ.வீ.எஃப். மற்றும் இன்ஃப்ர்டிலிடி துறையிலான முதல் பெண்மணி என்ற சிறப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தான் கட்ச் பகுதியைச் சேர்ந்த மணி சாவ்டா என்ற பெண்மணிக்குச் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பிறக்கச் செய்திருக்கிறார் இந்துஜா.

“அந்தப் பிரசவத்திற்காக மணிசாவ்டா கே.ஈ.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நான் அந்தப் பெண்ணுக்கு சிசேரியன் செய்தேன். சர்ஜரி முடிந்து பெண் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டபோது அது என் காதுகளுக்கு இன்ப கானமாகவே ஒலித்தது. அந்தப் பெண் குழந்தைதான் ஐ.வீ.எஃப். ட்ரான்ஸ்ஃபர் முறையில் உருவெடுத்த முதல் சோதனைக் குழாய் குழந்தை. ஹர்ஷா என்ற அந்தப் பெண் 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி பிறந்தாள். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பொன்னாள்” என்கிறார் ஹிந்துஜா.

இந்தச் சாதனையைச் செய்தபோது ஹிந்துஜாவுக்கு வயது 38. தற்போது 68 வயதாகும் டாக்டர் ஹிந்துஜா, மருத்துவத் துறைக்கே தன்னை முழுமை யாக அர்ப்பணம் செய்துகொண்டதால் திருமணம் செய்துகொள்ளவில்லை. “குழந்தை எதையும் தத்து எடுத்து வளர்க்கிறீர்களா?” என்று கேட்டதற்கு, “இங்கு பிறந்துள்ள அத்தனை சோதனைக் குழாய் குழந்தைகளும் என்னுடையதுதானே” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஹிந்துஜா.

1984-ம் ஆண்டு தொடங்கி இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பதற்கு டாக்டர் ஹிந்துஜா வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார். சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்புக்கான வெற்றி வாய்ப்பு என்பது ஐம்பது சதவீதம்தான் என்றும் இவர் தெரிவிக்கிறார்.

மருத்துவ ஆராய்ச்சித் துறையில், அளவுக்கு மீறிய ஆர்வமும், அதீதமான ஈடுபாடும் கொண்டுள்ள இவர், இனப்பெருக்க மருத்துவ ஆய்வில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். மும்பையில் உள்ள ஹிந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில், இன்கஸ் மையத்தில் ஐ.வி.எஃப் பிரிவின் நிறுவநராக இன்றும் பளிச்சிட்டுவருகிறார் டாக்டர் ஹிந்துஜா.

மருத்துவம் தொடர்பான பல சர்வதேசக் கருத்தருங்குகளில் இவர் கலந்துகொண்டு உரையாற்றிவருகிறார். மகளிர் நோய் மருத்துவம் தொடர்பான பல விஷயங்களையும் தெரிந்துகொள்வதற்காகவே மகளிர் நோய் மருத்துவத் துறை மாணவர்கள் பலர் இவரை அணுகுகிறார்கள்.

பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தைச் சேர்ந்தவரான ஹிந்துஜாவின் குடும்பத்தார் இந்தியப் பிரிவினைக்குப் பின் இந்தியாவில் நிரந்தரமாகவே குடியேறிவிட்டனர். மருத்துவப் புத்தகங்களைப் படிப்பது இவரின் முக்கியமான பொழுதுபோக்கு. சித்தார் வாசிப்பதில் இவர் கைதேர்ந்தவர். இனிய இசையை ஆழ்ந்து ரசிப்பவர்.

வலி பொறுக்காமல் உயிரை விட்டுவிட வேண்டும் என்று ஒரு காலத்தில் நினைத்த இந்திரா ஹிந்துஜா, எத்தனையோ உயிர்கள் பிறக்கக் காரணமாக இருந்துவருகிறார். மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பிய இவர், உயிரின் வலிமையையும் மதிப்பையும் உணர்த்தும் வகையில் செயல்பட்டுவருவதில் ஆச்சரியம் என்ன?

சரோஜ் நாராயணசுவாமி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 24, 2014 11:55 am

கடவுள் மனித உருவில் இருப்பார் என்பதை நம்புகிறேன் இப்போது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 24, 2014 2:14 pm

நன்றி நன்றி 

சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - டாக்டர் இந்திரா ஹிந்துஜா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக