புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
Page 8 of 10 •
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .
என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.
பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ் முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன் 7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம் என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய் விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள் பாஸ்போர்ட் அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id இருந்தால் போதுமானது .
எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.
(கப்பல் மேலும் முன்னேறும் )
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075470krishnaamma wrote:இன்று தான்படித்தேன் ஐயா அருமையான நடை, தொடருங்கள் படிக்க காத்திருக்கோம்
உங்களுடைய உள்நாட்டு புனித யாத்திரை நன்றாக உள்ளது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:M.M.SENTHIL wrote:T.N.Balasubramanian wrote: நம்மை பழக்கப்படுத்தி , கவிதை ரூபத்தில் தன் கதை கூறி, நம்மை உருக வைத்த MM செந்தில் . சிறப்பு கவிஞர் , மனத்திரையில் தோன்றினார்.
ரமணியன்
அய்யா, நன்றி.
ஈகரையில் என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்த நீங்கள், கடல் வழி உல்லாச பயணத்திலும் நினைத்துள்ளீர்கள் எனும் போது மகிழ்ச்சி.. ஒரு குடும்ப நபராய் பெருமைப் படுகிறேன்.
சில விஷயங்கள் அடி மனதில் பதிந்து இருக்கும் .
சமயம் வரும்போது கிளர்ந்து மேலெழும் .
அது போல் தான் இதுவும் .
ஈகரையுடன் இணைய முடியாது இருந்த நாட்கள் .
கண்ணில் (கணினி ) இருந்து மறைந்து இருந்தாலும் ,
கருத்தில் இருந்து மறையா ஈகரையும் உறவுகளும்
நன்றி .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:நார்வேஜியன் கெட்டவே - பிரமிப்பு + பிரம்மாண்டம்.உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா விடை அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ என நினைத்துக் கொண்டேன்) .
ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே
நன்றி விமந்தினி ,
வர்ணனை ,மிகை ஒன்றும் இல்லை என நினைக்கிறேன் .
ரமணியன்
தங்களது யதார்த்தமான வரிகளில் எதுவும் மிகையாய் தெரியவில்லை. அதனால் தான் "அருமை" என்ற ஒற்றை வார்த்தைக்கு மேல் வேறெதுவும் எழுத எனக்கும் தெரியவில்லை ஐயா!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075663T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1075470krishnaamma wrote:இன்று தான்படித்தேன் ஐயா அருமையான நடை, தொடருங்கள் படிக்க காத்திருக்கோம்
உங்களுடைய உள்நாட்டு புனித யாத்திரை நன்றாக உள்ளது .
ரமணியன்
நன்றி ஐயா
யினியவன் wrote:கானா பாலா மாதிரியே நம்ம சிவாவும் நல்லாவே கானா பாடுவார் அய்யா - நீங்க கேட்டதில்லையா?
வார இறுதியில் சுருதி சேர்த்து தாளம் தப்பாம நல்லா பாடுவார் - திங்கள் முதல் வெள்ளி வரை இவரை தபலா போல பாவித்து வாசிக்க ஒரு கூட்டமே கூடிடும் டும் டும் டும்...
ம்ம்ம்ம்.. அப்புறம்...! சொல்லுங்க தல.! கேட்க ஆவலுடன் ஓடோடி வந்துள்ளேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
]b]மாஹோ கடற்கரையும்
இளவரசி ஜூலியானா விமானதளமும்
[/b]
தினம் தினம் ,இரவு 12மணி கழிந்து ஓரிரு நிமிடங்களில் , புதிய நாள் உருவாகும் நேரத்தே , இன்றைய வரலாறு பதிவை உருவாக்கும் விமந்தினி போல் , தினம் தினம் கப்பலில் , மாலையில் ,ப்ரீ ஸ்டைல் டெய்லி வருகிறது .மறு நாளைய நிகழ்ச்சிகள் இடம் பெறுவதுடன் , கப்பல் நிற்குமிடத்தில் பார்க்கவேண்டிய முக்கிய இடங்களை பற்றிய குறிப்புகள் , வாகன வசதிகள் , தவிர்க்கப்படவேண்டிய பொருட்கள் என்று விலாவாரியாக இருக்கும் .
செயின்ட் மார்டீனில் அதிக நேரம் கடலில் குளிப்பதற்கும் , குளித்துக்கொண்டே விமானங்கள் இறங்குதலையும் , கிளம்புவதையும் பார்க்கலாம் என்று தீர்மானித்தோம் . இது மாதிரி அரிய காட்சிகள் காண , ரசிக்கவே மாஹோ பீச் வரும் கூட்டம் அதிகம் .
4ம் நாள் .காலை . கப்பல் செயின்ட் மார்டீன் என்னும் டச்சு அரசு செய்யும் Philipsburg துறைமுகத்தில் நின்றது. இங்குதான் மக்கள் பார்க்க விரும்பும் மாஹோ கடற்கரையும் அதை ஒட்டி இளவரசி ஜூலியானா சர்வ தேச விமானதளம் உள்ளது .
செயின்ட் மார்டீன் ஒரு பகுதியை(மேற்கு ) டச்சு அரசும் , மற்றொரு பகுதியை (கிழக்கு ) France இம் ஆட்சி செய்கின்றன .Marigot துறைமுகம் இவர்களுக்கு சொந்தம் .மொத்தமே 87 சதுர கிலோமீட்டர் உள்ள இந்த தீவை 60:40 என்ற விகிதத்தில் பங்கிட்டு , எல்லைப்புற வழிப்பாடுகள் இல்லாமல் சுமுகமாகவே வாழ்கிறார்கள் . ஆதி காலத்தில் கரிபியன் தீவுகளில் " லுகாயன் இந்தியன்ஸ் " என்ற இந்திய வம்சாவளியினர் இருந்ததாக வரலாறு . இப்போது Bhoolchand ஜுவல்லரி மார்ட் , ஆனந்த் உணவகம் , யோகேஷ் கம்ப்யுடர் சென்டர் முதலியவைகளில் இந்தியர்கள் கண்ணில் படுகின்றனர் .
காலை உணவை முடித்துக் கொண்டு ,ஸ்விம்மிங் ட்ரஸ் ,Trunk, பீச் டவல் எடுத்துக்கொண்டு வெளி வந்தோம் .5 நிமிட நடை .இந்த துறை முகத்தில் இருந்து லிட்டில் பே (Little Bay ) என்ற மறு கரை போக / வர water Taxi சர்வீஸ் . 7 டாலர் டிக்கட் வாங்கினால் அன்றைய தினம் பூராவும் உபயோகப்படுத்தலாம் . அங்கிருந்து மாஹோ பீச்சுக்கு ஷேர் டாக்ஸி என்கிற பஸ் .
Water Taxi யில் கொடுக்கும் டிக்கட் அக்ரிலிக் பேண்ட் போல் கையில் சுற்றி விடுகின்றனர் . கடலில் குளித்தாலும் ,அவை பிய்த்துக்கொண்டு வருவதில்லை. தேதியும் அழிவதில்லை .
எல்லா இடத்திலும் டிப் தருவது வழக்கத்தில் உள்ளது . படகில் NO TIPS என்ற போர்ட் இருக்கிறது . இறக்கி விடுமுன் , விளையாட்டாக கூறுகிறார்கள் . " நீங்கள் டிப்ஸ் கொடுத்தால் , நீங்கள் எங்களை இன்சல்ட் பண்ணுவதாக நினைக்கமாட்டோம்." அதன் அர்த்தம் புரிந்ததுதானே நமக்கு .
ஷேர் டாக்சியில் 20 நிமிட பயணம் மலை வழி பயணம் ஒரு 10 மைல் இருக்கும் .பார்ப்பதற்கு மனோரம்யமான காட்சிகள் .
கடற்கரையும் விமான தளமும் :
இளவரசி ஜூலியானா சர்வதேச விமானதளத்தின் இறங்குபாதை பீச்சை ஒட்டியே உள்ளது .
இறங்கும் (touch down ) புள்ளியில் இருந்து 100 அடியில் 12 அடி உயர வேலி ,விமானதள எல்லை என்று காண்பிக்க .அந்த வேலியில் இருந்து 8அடி X 2 இரு பாதைகள் கார்கள் போக வசதியாக .உடனே பீச் ஆரம்பம் .10 அடி தூரம் மணல். பிறகு கடல் ஆரம்பம் . turquoise blue என்கிற வெளிர் நீல நிறம் கொண்ட தெளிவான கடல் நீர் .அமைதியாக அழைக்கும் அலைகள் .
குளிக்க குளிக்க குதுகலம் ஊட்டும் ,குளுமையான நீர் . ஹரித்வாரில் கங்கை நீரின் சிலுசிலிர்ப்பு , இங்கு அனுபவிக்க முடிந்தது . ஆனால் நீரின் வெளியில் ,கண்கள் கூசும் வெயில் . cap உடன் கூலிங் க்ளாஸ் ,சிறிது உஷ்ணத்தின் தாக்கம் குறைந்தது போல் தோன்றுகிறது
குளிக்கும் போதே , தலை மீது , நம்மை தொட்டுக்கொண்டு செல்லும் , சிறிதும் பெரிதுமான பல வகை விமானங்கள் . பார்ப்பதற்கு ரொம்ப திரில்லிங் .புது மாதிரியான அனுபவம் . ரசிக்கும் படியான அனுபவம் அனுபவித்தால்தான் அருமை புரியும் . விமானம் இறங்கும் போது ஏற்படும் அனுபவம் , விமானம் கிளம்பும் போதும் , வெளியேறும் காற்றின் விசையை எதிர்கொள்ளமுடியாது . வேலியோரம் வந்து ,நின்று இன்ஜின்களை ஒட்டி, exhaust gas வெளியேறும்போது ,அந்த இடத்தில் நிற்கமுடியாது . மணல் வாரி அடிக்கும் .ஒல்லியானவர்கள் நிற்க தடுமாறுவர் . கடல் பக்கம் தள்ளப்படுவர் .இருந்தாலும் திரும்ப திரும்ப அனுபவிக்க ஆசை .
சில படங்கள்
இந்த வீடியோ வை பாருங்கள் . ஜூம் பண்ணிப் பார்த்தால் மிகவும் ரசிக்கலாம் . Take off போது விமானி கை அசைத்து வாழ்த்து கூறுவதையும் பாருங்கள் .
youtube
கடை வீதியில் கொய்யா தோட்டத்தே சேகரித்த Guava Honey மிகவும் பிரசித்தம் மிகவும் ருசியாக இருக்கிறது. தேனுடன் கொய்யா பழ வாசனை வருகிறது
கடலில் நீந்தி , விமானங்களை பார்த்து ,துறைமுகத்திற்கு திரும்பிவந்தால் , 500 அடி முன்னால் , நம்மை வரவேற்று , குளிர்ந்த கைதுண்டுகளை கொடுக்க , நாம் களைப்படைந்த முகத்தை துடைத்துக்கொண்டு ,அவர்கள் கொடுக்கும் ,குளிர்பானம் அருந்தி,10 அடி முன்னேறினால் , ஈரமான பீச் துண்டை வாங்கிக்கொண்டு , புதிய துண்டை நம் உபயோகத்திற்கு கொடுக்கிறார்கள் குழந்தைகளை வரவேற்க டிஸ்னி உருவங்களும் உண்டு .
கப்பலில் வந்து மற்ற பொழுதுபோக்கு வழக்கம் போல் தொடர்ந்தது
நினைவு தெரிந்த நாள் முதலாய் .தினத்தந்தி நாளிதழில் வந்து கொண்டு இருக்கும் , முடிவே பெறாத , "கன்னித்தீவு "
நாளை அமெரிக்க கன்னித்தீவு/ பெயர் காரணம் பார்க்க போகலாமே

செயின்ட் தாமஸ்
மாலையில் கிளம்பி கடல் வழியே காலையில் .வந்தடைந்தோம் செயின்ட் தாமஸ் என்கிற தீவிற்கு. சார்லட் அமலி தான் அதன் துறைமுகம் .
இந்த தீவை US விர்ஜின் ஐலண்ட் என்கின்றனர் . இது US இற்கு சொந்தம் .இதன் பக்கத்தில் செயின்ட் ஜான் , செயின்ட் க்ராக்ஸ் போன்ற சுற்றுலா தளங்களும் இருக்கின்றன .டச்சுக்கு முதலில் சொந்தமாக இருந்து பிறகு US வசம் வந்துள்ளது . இருப்பினும் டச்சுடன் நல்லதோர் நட்பு கடை பிடிக்கிறார்கள் .
{இதன் பக்கத்தில் இன்னும் 60 தீவுகள் . .அது பிரிட்டிஷாருக்கு சொந்தம் அதை பிரிட்டன் கன்னித்தீவு (BVI) என்கின்றனர் .அது பிரிட்டனுக்கு சொந்தம் .இதை செயின்ட் ஜான்னில் இருந்து
ferry மூலம் கடலில் சென்று அடையலாம் நீங்கள் கார் வைத்து இருந்தால் காரையும் ferry இல் ஏற்றி , BVI இல் உபயோகபடுத்திக்கொள்ளலாம் . போகாத இடம் என்பதால் , அதிகம் விவரிக்கவில்லை }.
நாம் சுற்றுலா வந்த இடங்கள் யாவும் கரிபியன் கடலில் இருக்கின்றன . தெளிவான , கடல் கரை ஓரங்களில் .நீச்சல் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடும் சிறுசிறு அலைகள் .குட்டி அலைகள் .நீச்சல் தெரியாதோரும்
தைரியமாக இறங்கலாம் .கடற்கரைகளில் , நீச்சல் அடிக்க லைப் பெல்ட் கிடைக்கிறது . surf போர்டு இருந்தால் surf பண்ணலாம் . snorkel என்று சொல்லக்கூடிய முகமூடி அணிந்து நீரின் அடியில் இருக்கும் மீன் குடும்பங்களை
கண்டுகளிக்கலாம் .செயின்ட் தமஸ் ,செயின்ட் ஜான் , செயின்ட் கிராக்ஸ் முன்றும் முறையே 32,19,84 சதுர மைல்கள் . ஜனத்தொகை 1 .1 லக்ஷம்.
ஏற்கனவே மாஹோ பீச் பார்த்து இருந்ததால் , தாமசில் மலை உச்சி பார்க்க தீர்மானித்தோம் . போகும் வழி எல்லாம் அடர்ந்த பசுமை நிறைந்த காட்சிகள் கிடைக்கும் .மலை உச்சியில் இருந்து பார்த்தால் , BVI தெரியும் என்றார்கள் .
ஆகவே , காலை உணவை முடித்துக்கொண்டு , துறை முகம் வெளியே வந்து , டாக்ஸி வைத்துகொண்டு மலை வழி பாதையில் , இயற்கையை ரசித்துக்கொண்டே சென்றோம். நம்ம ஊர் போலவே வாழை , மா ,பலா எல்லாம் காய்த்து தொங்குகின்றன . விதவிதமான கிளிகள் பறவைகள் .
மலை உச்சி போனால் , கடற்கரை , அங்கே நங்கூரம் இட்டுள்ள கப்பல்கள் , வாழ்கையை அனுபவிக்கவே பிறந்துள்ளோம் என்பது போன்று நூற்று கணக்கான Yatch என்னும் தங்களுக்கு சொந்தமான சொகுசு படகுடன் வந்துள்ள குடும்பங்கள் .
மலை உச்சிக்கு ரோப் கார் மூலம் வரலாம் , ஆனால் இயற்கையை ரசிக்க , டாக்ஸியே சுகம் . மலை உச்சி view point இல் இருந்து இயற்கையை ரசிக்கலாம் அங்கிருந்து பார்த்தல் BVI தெரிகிறது .
இங்கு வாழைபழ கலவையால் தயாரிக்கப்படும் ரம் மிகவும் பிரசித்தம். Banana Daiquiri என்பர் .
செயின்ட் மாற்டீனில் கொய்யா கலவை ரம் பிரசித்தம் .
இவைகளை பார்த்து ரசித்து , மலை அடிவாரம் வந்து , மார்கெட்டை ஒரு அலசு அலசினோம் .வாங்கும் படியாக ஒன்றும் இல்லை
பெண்களும் , நவீன ஆண்களும் தங்கள் முடிகளை braiding பண்ணிக்கொள்கிறார்கள் . நல்ல பிசினெஸ் .
ALLURE என்கிற பெரிய கப்பல், 5000 பயணிகள் பயணிக்கக் கூடிய கப்பல் , நாங்கள் சென்ற சமயம் அங்கே நங்கூரம் இட்டு இருந்தது .
அதன் போட்டோ பார்வைக்கு
நம்ம ஊர் ஷேர் ஆட்டோக்கள் மாதிரி இங்கே ஷேர் டாக்ஸி மிகவும் பிரபல்யம்
படம்
மாலை கப்பலை அடைந்தோம்
அன்றைய இரவும், அடுத்து ஒரு நாள் பிரயாணம் செய்து புகழ்மிக்க பஹாமாஸ் தீவுகள் அடைந்தோம் .
எவ்வளவு தீவுகள் பஹாமாசில் ??
10 இல்லை 50 ------100------ 1000 ------2000-----3000------?????
நாளை பார்க்கலாம்
ரமணியன் .
=====================================================================

படங்களும் வீடியோவும் ரொம்ப அருமை ஐயா உங்கள் எழுத்தை பற்றி தனியே ஏதும் சொல்ல வேண்டாம் தொடருங்கள் ...............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1076336krishnaamma wrote:படங்களும் வீடியோவும் ரொம்ப அருமை ஐயா உங்கள் எழுத்தை பற்றி தனியே ஏதும் சொல்ல வேண்டாம் தொடருங்கள் ...............
, கிருஷ்ணம்மா !
நேரில் மிக thrilling ஆக இருக்கிறது .
பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பஹாமாஸ் தீவுகள்
வெள்ளி அன்று காலை பஹாமாஸ் தீவுகளின் முக்கியமான ,இடமான க்ராண்ட் பஹாமாஸ் வந்து அடைந்தோம் .
காலை உணவை முடித்துக்கொண்டு ,வெளியில் போகலாம் என்று மேல் தளம் போனால் வாவ் ,
உலக புகழ் பெற்ற அட்லாண்டிஸ் ஹோட்டல் , வாட்டர் பார்க் ,
கடலில் காணாம போன , மறைந்து போன கிரேக்க நாட்டு கலை வண்ண நகரத்தை , மறுபடியும் 150 மில்லியன் டாலரில்
உருவாக்கி நம் கண் முன் கொண்டு நிறுத்தி உள்ளனர் . அதன் போட்டோ .
Miss Universe 2009 ,உலக அழகிகள் போட்டி இந்த ஹோடேலில் தான் நடை பெற்றது .
உலகிலேயே அதிக அறை வாடகை இந்த ஹோடேலில் தான் .
இதை விட ,சிறிது அதிக செலவில் துபாயில் ஒரு அட்லாண்டிஸ் ஹோட்டல் II இருப்பதாக அறிந்தேன் .
அதன் உள்ளே சிறிது தூரம் வரை சென்று பார்க்க அனுமதி உண்டு வாட்டர் பார்க், மற்றும் சுற்றுலா செல்வதற்கு ,கப்பலிலேயே ஏற்பாடு பண்ணுகிறார்கள் .
அட்லாண்டிஸ் வாட்டர் பார்க் --1/2 நாள்
அட்லாண்டிஸ் வாட்டர் பார்குடன் ,டால்பின் விளையாட்டுகள்
அதோள் தீவில் snorkel
அரைநாள் சுற்றுலாவே தலைக்கு 75 us $.
அட்லாண்டிஸ் பற்றி பின்னொரு நாள் எழுதலாம் .
காலை உணவு உண்டு , வெளியில் வந்தோம் , ,பஹமாஸ் .கஸ்டம் வழியாக ,இமிக்ரேஷன் . பாஸ்போர்டை பார்த்து ,ஆள் முகத்தை பார்த்து ஓகே போகலாம் என்று சொல்கிறார்கள் . தேவை இல்லாமல் விஸா , வாங்குவதற்கு பணம் செலவழித்தோமோ என்று தோன்றியது .
பெரிதாக போர்ட் வைத்து இருக்கிறார்கள் . துறைமுக இடம் " SOLICITING IS PROHIBITED " என்று இருக்கிறது .
பஹாமாஸ் கிட்டத்தட்ட 3000 தீவுகளை கொண்டது . சின்னது ,பெரியது என்று பல வித பரப்பளவுகள் .600 மைல் தூரம் .நீண்ட கயிறாய் தோற்றமளிக்கும் இது தாம்புகயிரை போல் சில இடத்தில் , சணல் கயிறு போல் சில இடத்தில் , வேறு படுகிறது .தீவுகளின் சங்கிலி தொடர் கூட்டம் . இதில் ஜனங்கள் குடி இருப்பதோ 20 இல் தான் . பஹாமாஸ் என்றாலே மனதில் தோன்றுவது அழகு சாந்தம் மன அமைதி .
நாங்கள் இறங்கியது "கிராண்ட் பஹாமாஸ் " நசாவு ( NASSAU ) துறை முகம் . கிராண்ட் பஹாமாஸ் 96 மைல் நீளம் அகலமான இடம் 17 மைல், மற்ற இடங்களில் ஏறுமாறாக இருக்கிறது .
டாக்ஸி ஒன்று பிடித்துக்கொண்டு பஹாமாசை ஒரு ரவுண்டு வர நினைத்தோம் . எங்களுக்கு கிடைத்த டிரைவர் , Lewis H Outten .நன்றாக கலகலப்பாக பேசி , கூற வேண்டிய விஷயங்கள் , நகைச்சுவையாய் பேசி , பார்க்க வேண்டிய இடங்களை காண்பித்தார் .
சில சாம்பிள்கள் :
பஹாமாஸ் பணக்கார நாடு அதே சமயம் ஏழை நாடு ( இந்தியா போல்தான் என்று நினைத்துக்கொண்டேன் .) பெரிய பெரிய வில்லாக்களும் இருக்கின்றன . சிறிய குடில்களும் இருக்கின்றன . இயற்கை வளம் நிறைந்தது . பெட்ரோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி . பஹாமாஸ் டாலரும் அமெரிக்க டாலர் மதிப்பும் ஒன்றே , பஹாமாசில் . பெட்ரோல் ஆறரை டாலர் காலனுக்கு .அதே பெட்ரோல் அமெரிக்காவில் மூணேகால் டாலர் ,எனக் கூறி சாமான்கள் விலை எல்லாம் இரு மடங்கு இருப்பதில் அதிசயம் இல்லை என்றார் .
தனியாக வருமானத்திற்கு வரி கிடையாது என்றார் . பரவாயில்லையே என்று நினைக்கையில் , வாங்கும் ஒவ்வொரு சாமானுக்கும் 30% வரி உண்டு . அதை மக்கள் நலனுக்குகாக உபயோக படுத்துகிறார்கள் என்றார் . சோசியல் செக்யூரிட்டி யாக முதியோர்கள் ,மணமாகாத மாதாக்கள் , குழந்தைகளுக்கு பண உதவி பெரிய அளவில் செய்கிறார்கள் .அவர்களுடைய பெரிய ப்ராப்ளமே "UNWED MOTHERS ". தவிர்க்க முடியவில்லையாம் .அவர்களுக்கு எல்லாம் இலவசமாம் . ஏழ்மை ஒரு பக்கம் விலைவாசிகள் ஒரு பக்கம் வருகின்ற உல்லாச பயணிகள் மிகவும் அதிகம். அதனால் அரசுக்கு வருமானம் அதிகம் .உல்லாசம் விரும்புவர்களுக்கு சொர்க்க பூமி . சுலபமாக சம்பாதிக்கும் வழி -பாதிக்கும் வாழ்வு . இரு தலை கொள்ளியோ அரசுக்கு
பஹாமாசில் , பஹாமா மாமா மிகவும் பிரபலம் . அதே போல் conch salad ,fruit punch ரொம்ப பிரபலம். பஹாமா மாமா --தப்பாக நினைக்கவேண்டாம் , conch salad , fruit பஞ்ச் சாப்பிடும் சலாடும் இல்லை , உண்ணும் பழ ரசமும் இல்லை . இந்த மூன்றும் பஹாமசின் சென்ட் வகைகள் .
சணல் தயாரிப்புகளும் பிரபலம் .
தென்னை மரங்கள் அதிகம் கோகோனட் daiquiri எனப்படும் ரம் கலந்த இளநீர் +இலேசான வழுக்கையுடன் தருகிறார்கள் .
3 இளநீர் ,10 us $. அமெரிக்காவை விட இந்த ஒரு ஐட்டம் தான் விலை மலிவு .அமெரிக்காவில் ஒரு இளநீர்10$.
கடைக்காரர் , இளநீரை சீவி , straw போட்டு எப்படி குடிப்பது என்று கூற முற்பட்டார் . அவரிடம் நாங்கள் எல்லாம் indians , straw இல்லாமலும் குடிப்போம் , straw வுடனும் குடிப்போம் என்றோம் . அதற்கு அவர் oh , I like Indians , indian films என்றார் . அவருக்கு பிடித்த படம் "slumdog millionaire " என்றார் .இந்தியாவில் இளநீர் என்ன விலை என கேட்க , ஒரு டாலருக்கு 2 இளநீர் என்றேன் . அடுத்த முறை வரும்போது 25 டாலருக்கு வாங்கி வருகிறீர்களா என்று கேட்டார் ? கொண்டு வரும் செலவு 500 டாலர் ஆகுமே என்றதும் ஒரு நட்பு புன்னகை .
அங்கு மார்க்கெட் place இல் ப்ரீ wireless . அமர்ந்து இணைய தளத்தில் இணையும் மக்கள் .
அதன் பக்கத்தில் பீச் . அமைதியான கடல் தெளிவான கடல் நீர்
அட்லாண்டிஸ் ஹோட்டல் ,பார்ப்பதற்கே அவ்வளவு அழகு .அங்கு உள்ளே சென்று பார்த்தோம் . பெரிய casino . கடைகள் .ஒரு குறிப்பிட்ட எல்லை வரை சென்று வர முடியும். அங்கு எடுத்த சில போட்டோக்கள் பார்வைக்கு
மில்லியன் டாலர் throne என்று ஒரு ஆசனம் வைத்து இருக்கிறார்கள் . அதில் உட்கார்ந்து எல்லோரும் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்
ஹோடெல்லை ஒட்டிய தோட்டத்தில் ஒரு கடை .ரம் கேக் இங்கு ரொம்பவே famous .
எல்லா இடத்திற்கும் டாக்ஸி டிரைவர் Lewis நல்ல முறையில் அழைத்து சென்றார் .நன்றி கூறி , பணம் கொடுத்தவுடன் தனது விசிட்டிங் கார்டையும் கொடுத்தார் .அதில் அவர் பெயர் Dr Peeper. என்று குறிப்பிட்டு இருந்தது . டாக்டரா என்று கேட்கையில் , இங்கு யார் வேண்டுமானாலும் Dr போட்டுக்கலாம் .தப்பாக நினைக்கமாட்டார்கள் . நான் அடிக்கடி காரில் horn உபயோகப் படுத்துவேன் . அதனால் நண்பர்கள் என்னை பீப்பர் என்று கூப்பிடுவார் . ஆகவே நானே Dr Peeper என்று வைத்துக்கொண்டேன் என்றார் . அமெரிக்காவில் , சிமிண்ட் தளம் போடுபவர் தன்னை Grout Doctor என்று போட்டுக் கொள்வது நினைவிற்கு வந்தது .
நம் நாட்டிலும் 5 கிளாஸ் படித்து அரசியலில் புகுந்து கல்லூரிகள் அமைத்து .அதை பல்கலை கழகமாக்கி தங்களுக்கு தாமே கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கொள்வதும் நினைவிற்கு வந்தது .அவர்களுக்கு சளைத்தவர் நாங்கள் இல்லை என்று நடிக,நடிகையர்களும் , (பண உதவி செய்தோ ), கௌரவ டாக்டர் பட்டம் வாங்கி கொள்கிறார்கள் . Dr . Peeper க்கும் இவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன் .
பஹாமாசில் இனிதே கழிந்த சில மணி நேரங்கள் .
கப்பலில் கடைசி இரவு , மேல் தளத்தில் வான வேடிக்கைகள் இரவு 1030 மணிக்கு .தளமே வர்ண ஒலி,
ஒளியால் தீபாவளி ஆனது .
பஹாமாசுக்கு பய், பய் சொல்லிவிட்டு , கப்பல் மியாமி நோக்கி புறப்பட்டது .
அறைக்கு படுக்க வருகையில் , கேப்டனிடம் இருந்து ஒரு கடிதம்
நாளை .-------------

- Sponsored content
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 10