புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_m10கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொங்கு வேளாளர் திருமண சீர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 20, 2014 10:42 am

First topic message reminder :

திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது.

தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று நாள் திருமணம் மிக அருகி வருகிறது. நெருங்கிய உறவினரை அழைத்துக் கோயிலில் திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு திருமணத்தை முடித்து விடுகின்றனர்.

காதல் மணத்துடன், பெற்றோர் சம்மதத்தோடு நடைபெறும் பிற மத, இன, மொழி, சாதித் திருமணங்கள் பெருகி வருகின்றன. எனவே, திருமணச் சீர்கள் குறைந்தாலும், மறைந்தாலும் சமுதாயப் பண்பாட்டைக் காக்கும் எண்ணத்தோடு சீர்களின் சிறப்புக்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன. இன்னும் விரிவாக இவைகளைப் படத்துடன் ஆவணப்படுத்த வேண்டும். அதற்கு முன் முயற்சியே இச்சீர்கள் பற்றிய தொகுப்பாகும்.

சீர்கள் தொடக்கம்

சங்க அகப்பொருள் இலக்கணங்களில் கூறப்பெறும் ‘களவு’ மணத்தில் சீர்கள் இல்லை. தொன்மை ஆய்வாளர்கள் பண்டைச் சமுதாய வாழ்வில் சீர்கள் இல்லை என்றே கூறுகிறார்கள். முல்லை நில ஆயர் மகள் காளையை அடக்கியவனுக்கு மாலையிட்டார். அங்கும் சீர்கட்கு இடம் இல்லை.

முன்பு வாழ்ந்த இல்லற வாழ்வில் நாளடைவில் ‘பொய்’ ‘வழு’ இவை தோன்றின. எனவே, சமூகப் பெரியவர்கள் அவை ஏற்படா வண்ணம் பலர் சாட்சியோடு, பலர் கூடிச் செய்யும் சில சீர்களை ஏற்படுத்தினர் என்று கூறுகிறார் தொல்காப்பியர்.

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப’

என்பது தொல்காப்பிய நூற்பா. ஐயர் என்பது சான்றோராகிய பெரியவர்களைக் குறிக்கும். கரணம் என்பது சீர்களாகும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 20, 2014 10:47 am

மணமேல் பணம்

மணவறைக்கு மாப்பிள்ளை வரும் வரையில் அவர் அமரும் இடத்தில் முறை மாப்பிள்ளை அமர்வார். அவருக்கு மணமகள் வீட்டார் பணம் தருவர். மாமனுக்குப் பெண்ணைக் கொடுப்பதற்குப் பதிலாகப் பொன்னைக் கொடுப்பது என்பது இதன் அடையாளமாகும். கொங்கு வேளாளர் திருமணச் சீர்களைத் தொகுத்து எழுதிய ஒரு நாளிதழ் இதற்குக் கொடுத்த தலைப்பு ‘முறை மாப்பிள்ளைக்கு முதல் மரியாதை’ என்பதாகும்.

அருமைக்காரர்

நிச்சயதார்த்தம், முகூர்த்தக்கால் போடுதல், வெற்றிலை கட்டல், இணைச்சீர், மாங்கல்ய தாரணம் செய்வித்தல் போன்ற முக்கியமான சீர்கள் அனைத்தையும் முன்னின்று செய்பவர் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த அருமைக்காரர் ஆவார். முன்பு வைதிகத் திருமணம் கொங்கு வேளாளர் மரபில் இல்லை. சமூகப் பெரியவரே சீர்கள் செய்து மணம் செய்விப்பார்’.

எல்லோரும் அருமை செய்ய முடியாது. அருமைக்காரர் ஆவதற்குரிய சீரை அவர் முதலில் செய்து கொள்ள வேண்டும். அருமை செய்து அருமைக்காரர் ஆக விரும்புபவர் மகப்பேறு உடையவராகவும், மனைவியுடன் வாழ்பவராகவும் இருக்க வேண்டும். அவர் தன்னுடைய மகன் அல்லது மகள் திருமணத்தில் அருமை செய்து கொள்ளலாம்.

நெருங்கிய உறவினர்கட்கு முதலில் தன் அருமை செய்து கொள்வதை அறிவிக்க வேண்டும். பின்னர், தன் மககள் திருமணத்திற்கு மூன்று அருமைக்காரர்களை அழைக்க வேண்டும். பிறைமண் எடுத்து வர மூன்று அருமைக்காரர்களும் செல்ல வேண்டும். நீராடிப் புத்தாடை அணிந்து விநாயகரைத் தொழுது பின்னர் மாங்கல்யம் திருப்பூட்டும் போது மற்ற அருமைக்காரர்கள் அருமை செய்த பின் இருவரும் அருமை செய்ய வேண்டும். அப்பொழுதிலிருந்து அவர் அருமைக்காரர் என அழைக்கப் பெறுவார். அருமைக்காரர் மனைவியை ‘அருமைக்காரி’ என்பர். அவரை ‘அருமைப் பெரியவர்’ என மங்கல வாழ்த்துக் கூறும்.

மற்ற சீர்களில் பங்கு பெறும் பெண்கள் பெரும்பாலும் எழுதிங்கள் சீர் செய்து கொண்டவர்களாகவும், சுமங்கலிகளாகவும், மக்கட்பேறு உடையவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் ‘எழுதிங்கள்காரிகள்’ என்றே அழைக்கப்பெறுவர்.

மண அறை

கிழக்கு நோக்கி சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து மண மக்கள் அமரும் வண்ணம் அமைக்கப் பெற்றிருக்கும். பசுமையான தென்னங்கீற்றாலும், மாவிலைத் தோரணங்களாலும், மலர்களாலும் மணவறை அமைக்கப் பெற்றிருக்கும். மேல்புறம் மணமக்கள் அமர பலகை அல்லது இருக்கை போடப்பட்டிருக்கும். பிறை மண்ணால் பிரம்மஸ்தானம் அமைத்து பேய்க்கரும்பு நாட்டப்பட்டிருக்கும் பச்சை மூங்கில் நட்டு அரசிலை சுற்றப்பட்டிருக்கும்.

இரண்டு கரகப்பானைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் நீரும், மற்றொன்றில் நெல்லும் நிரம்பியிருக்கும் கரகப் பானைகள் மேல் மாவிலை, வெற்றிலை, தேங்காய் வைக்கப்பட்டிருக்கும். குத்து விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். ஆயிரப் பெருந்திரி ஏற்றப்பட்டிருக்கும். நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டிருக்கும். கை கோர்வைக்காக அரிசித் தட்டும் அதன்மீது வெற்றிலையும், வெல்லமும் வைக்கப்பட்டிருக்கும்.

ஒரு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம் பழம் வைக்கப்பட்டு அதன் மீது தாலி வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பிள்ளையார் வைக்கப்பட்டிருப்பார். அருகு மணம் எடுக்கப் பாலும் வெற்றிலையும் ஒரு புறம் இருக்கும்.

மண அறையை மங்கல வாழ்த்து பின் வருமாறு வருணிக்கிறது. ‘மாந்துளிரும் பூங்கொத்தும் வண்ணமுள்ள பட்டாடை மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்கும் கட்டியுள்ள அருமையான பந்தலிலே பூவால் அலங்கரித்து நாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டு அம்மி வலமாக அரசாணி முன்பாக ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாக சுத்தமுடன் கலம் விளக்கிச் சோறு, அரிசி, பால், பழமும் பக்தியுடன் அத்தனையும் பாரித்தார் மணவறையில்’ என்பன மங்கல வாழ்த்துத் தொடர்கள்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 20, 2014 10:47 am

மணமக்கள் வருகை

மணமகன் வரும்போது மணமகள் சகோதரி முறைப் பெண்கள் மணமகனுக்கு ஆலாத்தி எடுப்பர். மணமகன் மணவறையைச் சுற்றி வந்து அமர்வார். மணமகளை மாமன்மார் அழைத்து வந்து மாப்பிள்ளைக்கு வலப்பக்கம் அமர வைப்பர். மணமகன் அருகே மாப்பிள்ளைத் தோழரும், மணப்பெண் அருகே தோழியும் இருப்பர். எல்லோரையும் கும்பிட்டு மண அறையில் மணமக்கள் அமர்வர்.

பாத பூசை

மணமகனும், மணமகளும் தங்கள் பெற்றோர்கட்குப் பாத பூசை செய்வர். பாதங்களை நீர் தெளித்துக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வழிபடுவர். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது தமிழ் நாட்டுப் பழமொழியாகும்.

தாரை வார்த்தல்

மணமகனின் வலது கைமேல் மணப்பெண்ணின் இடது கையை வைத்து ஒரு பணம் வைத்துப் பெண்ணின் பெற்றோர் தன் உறவினர்கள் முன்னிலையில் தன் கையால் தண்ணீர் விட்டுத் தாரை வார்ப்பார்கள். பெண் வீட்டார் கொடுத்தோம் என்று சொல்ல மணமகன் வீட்டார் கொண்டோம் என்று சொல்லுவார்கள். இனி மணமகள் பாதுகாப்பு மணமகனுடையதே என்பதை அறிவிக்க நடக்கும் சடங்காகும். தாரை வார்க்கும் நீரில் பொன் வைத்து வழக்கம். ‘தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன் கொடுத்து’ என்கிறது மங்கல வாழ்த்து.

திருப்பூட்டுதல்

தாலி வைக்கப்பட்டிருக்கும் தட்டின் ஓரத்தில் சூடம் கொளுத்தப்படும். அருமைக்காரர் விநாயகரை வணங்கித் தட்டை வாங்கி மணமக்களை வணங்கச் செய்து அந்தத் தட்டைப் பண்டாரத்திடம் கொடுப்பார். பண்டாரம் அவையில் உள்ள அனைவருக்கும் தட்டைக் காட்டுவார் எல்லோரும் வணங்கி ஆசீர்வதிப்பர். முகூர்த்த வேளை நெருங்கினால் தட்டை மணவறை அருகே உயர்த்திக் காட்ட எல்லோரும் இருந்த இடத்திலிருந்தே ஆசீர்வதிப்பர்.

மணவறையில் திருமண நிகழ்ச்சி நடப்பதைக் ‘கைதாரை செய்தல்’ என மங்கல வாழ்த்து அழைக்கிறது. தாலி அணிதலை திருநாண் பூட்டல் என்பர்.

பண்டாரத்திடம் உள்ள தட்டிலிருந்து அருமைக்காரர் தாலியை எடுப்பார். எடுத்து கிழக்கு நோக்கி நின்று சூரியனை அல்லது சூரியன் உள்ள திசையில், வணங்குவார். பெண்ணைக் கிழக்கு முகமாகவும், மணமகனை மேற்கு முகமாகவும் நிறுத்தி மாங்கல்ய தாரணம் செய்விருப்பார். மாங்கல்யத்திற்குச் சந்தனம் குங்குமம் வைக்கப்படும்.

மாங்கல்யம் திருப்பூட்டும்போது சகல வாத்தியம் முழங்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அட்சதை எனப்படும் மஞ்சள் தோய்ந்த அரிசியை வாழ்த்துக் கூறி மணமக்கள் மீது போடுவர். (அட்சதையை மணமக்கள் அருகில் சென்று அவர்கள் மீது படும்படி போடுவதே முறையானதாகும்).




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 20, 2014 10:47 am

விரல் கோர்வை

திருநாண் பூட்டுதல் முடிந்த பின் மணமகனது வலதுகைச் சுண்டு விரலையும், மணமகளது இடதுகைச் சுண்டு விரலையும் இணைத்து இருவர் கையையும் பட்டுத் துணியால் சுற்றி மண அறையைச் சுற்றி வரச் செய்வர். இப்போது இணையும் கைகள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சிலப்பதிகாரம் ‘காதலர்ப் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்’ என்று கூறும். சுண்டு விரலில் தான் இதய நாடி ஓடுகிறது என்பர். இரு இதயங்களும் ஒன்றுபட்டன என்பது இதன் பொருள். பின் மண மக்கள் மாலை மாற்றிக் கொள்வர்.

நலங்கிடல்

பிற சமூகம் போல் நலங்குப் பாடல்கள் பாடுவது கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை. வெற்றிலையில் குங்குமத்தை வைத்துக் குழைத்து மணமகன் மணமகள் ஒருவர் பிறருக்குப் பொட்டு வைப்பது தான் நலங்கிடல் எனப்படுகிறது. மங்கல வாழ்த்து ‘செங்கையினாலே சிகப்பிட்டு இருவருக்கும்’ என்று கூறும்.

குலம் கோதுதல்

இன்ன குலத்தைச் சேர்ந்த இன்னாருடைய பேரன் இன்னாரது மகன் இன்ன குலத்தை சேர்ந்த இன்னாரது பேத்தி இன்னாரது மகளை உங்கள் முன்னிலையில் சூரியர் சந்திரர் சாட்சியாக முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாம நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் சாட்சியாக மணம் முடித்துக் கொண்டனர் என்பதே குலம் கோதுதல் ஆகும். குலம் ஓதுதல்தான் – கோதுதலாக மாறிவிட்டது என்பர்.

அம்மி மிதித்து அருந்ததி காட்டல்

அம்மியைக் கழுவிச் சுத்தம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு வைத்திருப்பர். மணமகள் தன் வலது பாதக் கட்டை விரலை அம்மியில் வைப்பாள். பின் சாலில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் தன் முகத்தைப் பார்ப்பாள். அம்மி போல் உறுதியாகக் கற்புத் தன்மையைக் காப்பேன் என்பது இதன் பொருள்.

அருந்ததி சப்தரிஷிகளில் ஒருவராகிய வசிட்டர் மனைவி. மும்மூர்த்திகளும் அவள் கற்புத் தன்மையைச் சோதித்தும் நிலை குலையாது இருந்தவள். தன் கணவன் ஐயப்பட நட்சத்திர பதம் பெற்று சப்தரிஷி மணடலத்தின் இடையில் உள்ள வசிட்ட நட்சத்திரத்தின் அருகிலேயே இருக்கும் பேறு பெற்றாள். அருந்ததி பார்ப்பது என் கணவனைப் பிரியாமல் இருப்பேன் என்று மணமகள் உறுதி ஏற்பதாகும். அருந்ததியை வடமீன் என்பர். எப்பொழுதும் அது வடக்கிலேயே இருக்கும். துருவ நட்சித்திரம் என்னும் வடமீன் கடல்பயண மாலுமிகட்கு வழிகாட்டியாக இருப்பது.

‘வடமீன்போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்’

‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை’

‘அம்கண் உலகின் அருந்ததி அன்னாளை’ எனக் கலித்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது.

அருகு மணம்

மண அறையில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீரில் உள்ள வெற்றிலையையும், அருகம்புல்லையும் எடுத்துக் கிள்ளி அருமைக்காரர் மணமகனுக்கும், மணமகளுக்கும் பாதம், தோள், தலை இவற்றில் கையை நிறுத்தி மூன்று முறை ஆராதனை செய்வார். இதற்கு ‘அருகு மணம்’ என்று பெயர்.

பரியம் செலுத்தல்

மணமகன் சார்பில் மணமகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு தொகை பரியம் ஆகும். 37 1/2 ரூபாய், 47 1/2 ரூபாய் என ஊருக்கு ஊர் பலவாறு வேறுபடும். சில இடங்களில் பணத்தோடு அரிசியும் கொடுக்கப்படும். மணமகளுக்குப் பொருள் கொடுத்தே முன்பு திருமணம் நடைபெற்றது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

மஞ்சள் துணியில் கட்டிக் கொடுக்கப்படும் பணத்தை முக்காலி வேல் வைத்து எண்ணிப் பார்த்து எவ்வளவு என்று அறிவித்து மணமகள் வீட்டுச் சீர்க்காரப் பெண்ணிடம் இதைக் கொடுக்க அவர் வாங்கிச் சென்று தண்ணீர் நிறைந்துள்ள சாலின் மீது வைத்து மணமகள் வீட்டாரிடம் கொடுப்பர்.

பெண்ணை இவ்வளவு நாள் செலவு செய்து வளர்த்தமைக்காகப் பெண் வீட்டாருக்குக் கொடுக்கும் தொகை என்றும், மணமகளைத் தொடுவதற்காகக் கொடுக்கும் ஸ்பரிசத் தொகை ‘பரியம்’ என மாறி விட்டதென்றும் கூறுவர். அகப்பொருள் இலக்கியங்களில் இது ‘முலைவிலை’ என்று கூறப்படுகிறது. ‘பரிசு’ என்றும் கூறலாம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 20, 2014 10:48 am

பாத அணி அணிதல்

மணமக்கள் மண வீட்டின் வாயிலில் வந்து பண்ணையத்து மாதிகன் எனக் கூறப்படும் மாதாரி அளிக்கும் பாத அணிகளை (செருப்பு) அணிவர். அவருக்கு மனம் குளிரப் பணமும், பொருள்களும் கொடுப்பர். பாத அணிகள் கடையில் வாங்கினாலும் அவரிடம் கொடுத்தே அணிவர். கடை நிலையில் உள்ளாரும் திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என்பது இதன் பொருள்.

புலவர் பால் சாப்பிடுதல்

காணிப்புலவருக்கு விருந்தளித்து அதன் பின் மணவீட்டார் தாங்கள் உண்ணும் வெங்கலவட்டிலில் பாலும், பழமும் கலந்து கொடுத்து உண்ணச் செய்வர். புலவருகக்கு தலை, தோள், இடுப்புக்கு 3 ஆடை அளிப்பர். புலவர் பால் சாப்பிடாத வீடு மதிப்புக் குறைந்த வீடாகக் கருதப்படும்.

கரகம் இறக்குதல்

இணைச்சீர் நடைபெற்ற இடத்திலும், மண அறையிலும் இருந்த கரகங்களை எடுத்து மூடியைத் திறந்து தாம்பூலம் வைத்து மணப் பெண் வீட்டுக்குக் கொண்டு செல்வர். தண்ணீரைக் கூறைமேல் ஊற்றுவர். நெல் உள்ள கரகத்தை உறியில் வைப்பர்.

பின் மணமக்களின் கங்கணங்கள் அவிழ்க்கப் பெறும் அதைக் கூறைமேல் எறிவர் அல்லது பாலில் போடுவர்.

பந்தல் களறிச் செலவு

திருமண ஏற்பாடுகளில் கலந்து கொண்ட அத்துணை குடிபடைகட்கும் தொழிலாளிகட்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப உரிய தொகையை ஒவ்வொருவராக அழைத்து அருமைக்காரரே மணப்பந்தலில் வழங்குவார். பந்தல் போட்டவர், மேளகாரர், நாவிதர், பண்டாரம், பூசாரி, வண்ணார், பறையர், சக்கிலி, மாலைக்காரர், குயவர், ஆசாரி, புலவர், மாணிக்கத்தி என எல்லோருக்கும் பணம் வழங்கப்படும். இதனோடு ஊப்பணமும் வழங்கப் பெறும். அது பழைய கால் ரூபாலய் (25 பைசா) தான். உரிமையோடு அதைப் பெறுவர்.

சட்டுவச்சாதம் கலக்கல்

மணமகனுக்கு மணமகள் அளிக்கும் முதல் உணவாகும். கையில் போடாமல் இரும்புக் கரண்டி, சட்டுவம் போன்றதாலும் (தோசை திருப்பி போன்றது) அன்னக் கரண்டியாலும் போடுவதால் இப்பெயர் பெற்றது.

பின்னர் மணமகன் விட்டுக்குப் பெண்ணை முதலில் மணமகன் வீட்டார் அழைத்துச் செல்வர். பெண்ணுடன் அவள் தம்பி செல்வர். பின் பெண் கூட்டி வர மணமகள் வீட்டார் செல்வர். மாலையில் பெண் வீட்டுப் பிள்ளையார் கோயில் புதுப்பாத்திரத்தில் மணப்பெண் பொங்கல் வைப்பார். இது ‘மடைக்கலப் பானைப் பொங்கல்’ எனப்படும்.

சம்பந்தம் கலக்கல்

திருமணக் கூட்டத்தில் நெருங்கிய உணவினர்களை அறிமுகம் செய்து வைத்து நேரம் இருக்காது. திருமணம் முடிந்து இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கட்கு மட்டும் விருந்தளிக்கப்படும். இது ‘சம்பந்தம் கலக்குதல்’ எனப்படும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 20, 2014 10:48 am

தொடர் நிகழ்வுகள்

குலதெய்வக் கோயில்கட்கும், உள்ளூர் கோயில்கட்கும் ‘கல்யாணப்படி’ என்ற பெயரில் மணமக்களோடு சென்று பூசை செய்து வழிபடுவர். பெண்ணெடுக்கி மாமன்மார்கட்கு விருந்து வைக்க அவர்கள் இல்லங்கட்குச் செல்வர். இணைச்சீர் செய்த சகோதரிக்கு இல்லம் சென்று சிறப்புச் செய்வர். பின் மணமகனுக்கு மணமகன் வீட்டிலும், மணமகளுக்கு மணமகன் வீட்டிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவர்.

சாந்தி முகூர்த்தம் என்பதைப் பிறருக்கு அறிவித்தி விமரிசையாகச் செய்வது கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை.

பல சமூகத்தாரும் திருமணச் சீர்களில் பங்கு பெறுவது கொங்கு வேளாளர் சமூக ஒற்றுமைக்கும், பல குடிமக்களை அவர்கள் கொடை கொடுத்துப் பாதுகாக்கும் தன்மைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திருமண வீட்டில் முன்பு மங்கல வாழ்த்துக்குப் பின் புலவரால் கம்பர் பாடிய வாழி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் ஆகியவை படிக்கப்பட்டது. கொங்கு வேளாளர் திருமணங்கள் இலக்கிய மேடையாகத் திகழ்ந்தன.

கொங்கு வேளாளர் திருமண இல்லங்களில் சிறப்பிக்கப்பெறும் பதினெட்டுக் குடியினர்.

தொண்டைமண் டலவரிசை நாலாறு கோட்டமும்

சோழநாள் முதலாகவே

சொல்பெரிய நாவிதன் குயவன் வண்ணான் ஓலை

சொன்னபடி எழுதும்உவச்சன்

கண்டதொரு கண்ணாளர் ஐவர் வாணியர் மூவர்

கந்தமணி மாலைகாரன்

கலைமீது சரடோட்டு பாணணும் தலைக்குளம்

காவலாகிய வலைஞனும்

பண்டுமுதலாய் ஊரார்க்குக் கண்டுமே உரைத்திடும்

பறையனொடு பள்ளனுடனே

பதினெண்பேர் மணவறையில் மாகாணம் அளவுபோய்

பணிசெய்து பகரும்முறையால்

கொண்டிடும் பரிவட்டம் கட்டியே மிகவாகை

கூறும் வேளாளருக்குக்

குலவயம் தன்னிலே கச்சி ஏகம்பர்தன்

குமுதத்தில் இட்டவரியே.

-பழம்பாடல்.

நன்றி: புலவர் செ. இராசு அவர்கள், ஈரோடு




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 26, 2014 6:14 pm

அருமையானதைத் தந்துள்ளதால், எம்.எம்.செந்தில்- அருமைக்காரர்தான் !

 கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 103459460 கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 1571444738 
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 27, 2014 8:52 pm

Dr.S.Soundarapandian wrote:அருமையானதைத் தந்துள்ளதால், எம்.எம்.செந்தில்- அருமைக்காரர்தான் !

 கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 103459460 கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1070987

நன்றி அய்யா, நான் அருமைக் காரர் இல்லை, கொங்கு இனத்தை சார்ந்தவன் அவ்வளவு மட்டுமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 27, 2014 11:22 pm

கொங்கு வேளாளர் திருமண சீர் பற்றிய அருமையான தகவல்கள்.  புன்னகை
இன்னமும் இந்த சடங்குகளை எல்லாம் பின்பற்றுகிறீர்களா?



கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொங்கு வேளாளர் திருமண சீர்கள் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 28, 2014 7:30 pm

விமந்தனி wrote:கொங்கு வேளாளர் திருமண சீர் பற்றிய அருமையான தகவல்கள்.  புன்னகை
இன்னமும் இந்த சடங்குகளை எல்லாம் பின்பற்றுகிறீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1071138

ஆம், இன்னமும் பின்பற்றுகிறேன். மேலும் இதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லையே?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக