புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
48 Posts - 43%
heezulia
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
414 Posts - 49%
heezulia
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_m10வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 6:25 am

பொள்ளாச்சியில் இரண்டு மாணவிகள் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவிகள் தெருவில் இருந்து அழைத்துச் செல்லப்படவில்லை. வழக்கமாகத் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, பல கோடிகளைக் கொட்டி கட்டப்பட்டிருக்கும் உண்டு உறைவிடப் பள்ளி விடுதி கட்டடங்களை வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலமாகத் திறந்துவைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. புதிதாக ஹாஸ்டல்கள் திறப்பது இருக்கட்டும்... ஏற்கெனவே பள்ளிகளுடன் இணைந்து இருக்கும் மாணவியர் விடுதிகள் எந்த லட்சணத்தில் இருக்கின்றன? தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாணவியர் விடுதிகளின் தற்போதைய நிலை உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல... தமிழக முதல்வரின் பார்வைக்கும்!
 
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் P12
ஆற்றங்கரையில் குளியல்!



ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் கோமுகி அணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிதான் மிகப்பெரிய பள்ளி. பள்ளியோடு இணைந்தது மாணவியர் விடுதி. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது திறந்துவைத்த விடுதி இது. இப்போது இந்த விடுதியில் சுமார் 800 பேர் தங்கிப் படிக்கிறார்கள். வரலாறு சிறப்பாக இருந்தாலும், பள்ளி சிறப்புக்கு உரியதாக இல்லை என்பது பார்த்தாலே தெரிகிறது.
கல்வராயன் மலையில் உள்ள பழங்குடி மக்கள் பிழைப்புக்காக சென்னை, கேரளா போன்ற ஊர்களுக்கு இடம்பெயர்வதால், தங்கள் குழந்தைகளை இந்த விடுதியில் சேர்த்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். விடுதி எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளது என்று கேட்டால், எல்லோரிடமும் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.

இந்த விடுதியில் மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. கழிப்பறையிலும் குளியலறையிலும் தண்ணீர் வருவதே இல்லை. அதனால், குளிப்பதற்காகப் பக்கத்தில் உள்ள கோமுகி அணையின் கரைக்கு மாணவிகள் சென்று வருகிறார்கள். இயற்கை உபாதைகளைக் கழிக்கவும், துணிகளைத் துவைக்கவும் இதே அணைக்கரைதான் உதவுகிறது. மாணவிகள் குளிக்க அணைக்கரைக்குச் செல்லும்போது, கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் வார்டன். ஆனால், அவரும் இரவு நேரத்தில் விடுதியில் தங்குவது இல்லை. இருக்கும் ஒரு வாட்ச்மேனும் உள்ளூர் என்பதால், அவரும் வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறார். சமையல் செய்யும் ஒரு பெண் மட்டுமே மாணவிகளுடன் தங்கியிருக்கிறார்.

கதவு இல்லாத பாத்ரூம்!



திருச்சி, காட்டூர் பாப்பாக்குறிச்சியில் இருக்கும் ஆதிதிராவிட மாணவியர் விடுதிக்குச் சென்றோம். அங்கே இருந்த மாணவிகளிடம் பேச்சு கொடுத்தோம். ''இந்த ஹாஸ்டல்ல 50 பேர் தங்கியிருக்கோம். கேட் பூட்டியிருந்தாலும் பசங்க சுவர் ஏறிக்குதிச்சு உள்ளே வந்து விளையாடிட்டு இருப்பாங்க. எங்க ஹாஸ்டலுக்கு வாட்ச்மேன் யாரும் கிடையாது. ஏதாவது வாங்கணும்னா வெளியில ரோட்டைத் தாண்டிதான் போகணும். வார்டன் காலையில் வந்து அரிசி, பருப்பை எடுத்து சமைக்கிற அக்காகிட்ட கொடுத்துட்டு கிளம்பிடுவார். அதுக்கப்புறம் அந்த அக்கா மட்டும்தான் இருப்பாங்க!'' என்கிறார்கள் வெள்ளந்தியாக.
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் P13
திருச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவிகளுக்கான விடுதிகள் இரண்டு உள்ளன. இரண்டின் நிலையும் பரிதாபம்தான். அதில் கன்டோன்மென்ட்டில் இருக்கும் விடுதி பாழடைந்த பங்களாபோல காட்சியளிக்கிறது. 'பேருக்குதான் பாத்ரூம், டாய்லெட் எல்லாமே! எதையும் பயன்படுத்தவே முடியாது. குளிக்கிறதுன்னா விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சிடணும். ஏன்னா, எந்த பாத்ரூமுக்கும் கதவு இல்லை. ரோட்டுல இருந்து பார்த்தால், ஹாஸ்டல் பாத்ரூம் அப்பட்டமா தெரியும். தண்ணியும் வராது. பல சமயங்கள்ல பக்கத்துல இருக்கும் கல்யாண மண்டபத்துல போய் தண்ணி எடுத்துட்டு வந்துதான் குளிக்கிறோம். இதையெல்லாம் வெளியில சொன்னா ஹாஸ்டலை காலி பண்ண சொல்லிடுவாங்க. என்ன செய்யுறது?'' என்று வருத்தப்படுகிறார்கள் மாணவிகள்.

வட்டமிடும் வல்லூறுகள்!



விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்குச் செல்லும் வழியில் ஆதிதிராவிடர் அரசு மாணவியர் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கே சுமார் 250 மாணவியர்கள் தங்கிப் படிக்கிறார்கள். மாணவிகள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் வசதியாக பெரிய தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்தத் தொட்டி இருக்கும் இடத்துக்கு மேற்கூரை இல்லை. மெயின் ரோட்டில் இருந்து பார்த்தாலே, அந்த இடம் அப்பட்டமாகத் தெரிகிறது. மாணவிகள் குளிப்பதைப் பார்ப்பதற்காகவே சில வல்லூறுகள் காலை நேரத்தில் இந்தப் பக்கத்தில் வட்டமடித்தபடியே இருக்கின்றன. மெயின் ரோட்டில் பஸ்ஸிலோ, காரிலோ செல்பவர்களுக்கும், மாணவிகள் குளிப்பது தெரியும்.

திறந்தவெளியில் கழிப்பறை!



அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் உள்ள அரசு மாணவியர் விடுதிக்கு வார்டன் வாரத்துக்கு இரண்டு நாட்கள் மட்டுமே வருகிறாராம். வாட்ச்மேன் என்று யாரும் இல்லை. விடுதிக்கு எதிரே இருக்கும் சில கடைகள் இரவு நேர பார் போலவே செயல்படுகிறது. குடித்துவிட்டு ஹாஸ்டலுக்குள் கல் வீசிய சம்பவங்களும் நடந்துள்ளன.
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் P15
இரும்புலிகுறிச்சியில் உள்ள மாணவியர் விடுதியில் 55 பேர் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் போதிய கழிப்பறை வசதி இல்லை. அதனால் மாணவிகள் திறந்தவெளியில்தான் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டியிருக்கிறது. குளிப்பதற்கும் பக்கத்தில் உள்ள குளத்துக்குதான் செல்கிறார்கள். இங்கே மாணவிகள் குளிப்பதை சிலர் படம் எடுத்ததாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகார் கிளம்பியது. ஆனால், கழிப்பறை, குளியலறை வசதி இல்லாமல்தான் அந்த விடுதி செயல்பட்டு வருகிறது.

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!



சேலம் மாவட்டம், கருமந்துறை பேருந்து நிலையம் அருகே அரசு மகளிர் விடுதியில் சுமார் 70 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதிக்கு வார்டன், வாட்ச்மேன், காம்பவுண்ட் சுவர் என எதுவும் கிடையாது. சமையலும் இங்கே செய்வது இல்லை. மூன்று வேளையும் மாணவிகள் தட்டு ஏந்தியபடி தொடக்கப்பள்ளி விடுதிக்கு சென்றுதான் சாப்பிட்டு வருகிறார்கள். பேருந்து நிலையத்தையும், எந்த நேரமும் குடியும் சீட்டு விளையாட்டுமாக இருக்கும் சமுதாயக்கூடத்தையும் தாண்டிதான் இவர்கள் அங்கே செல்ல வேண்டும். வெளியாட்கள் சர்வசாதாரணமாக ஹாஸ்டலுக்கு வருகிறார்கள்.

''எங்களுக்கு வார்டன் யாரும் கிடையாது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்தான் எங்களோட வார்டன்னு சொல்றாங்க. அவரு இங்கே வந்ததே கிடையாது. வாரத்துல ஏதாவது ஒருநாள் நட்சத்திரம்னு ஒரு அக்கா வந்து ராத்திரியில எங்களோட படுத்துக்குவாங்க. அவங்க யாருன்னு எங்களுக்குத் தெரியாது. குளிக்கிறதுக்கும் சரி... குடிக்கிறதுக்கும் சரி எங்களுக்கு தண்ணியே கிடையாது. அவசரமா டூ பாத்ரூம் போனாகூட பக்கத்துல இருக்குற பள்ளிக்கூடத்துக்குப் போய்தான் தண்ணி எடுத்துட்டு வரணும். வீட்டுக்கு தூரமாகிடுற சமயத்துல ரொம்பவும் கஷ்டமா இருக்கு'' என்று கலங்கினார்கள் அந்த மாணவிகள்.
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் P18
கணக்கு எடுக்க மட்டும் வார்டன்!



கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர்கள் விடுதி இருப்பது மாவட்டத்தின் எல்லைப் பகுதி என்பதால், கண்டுகொள்ள யாரும் இல்லை. விடுதி வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்துக் குடிக்கிறார்கள். மாலையில் எத்தனை மாணவிகள் இருக்கிறார்கள், காலையில் எத்தனை மாணவிகள் இருக்கிறார்கள் என்று கணக்கு எடுக்க மட்டும் வார்டனும் வாட்ச்மேனும் வருகிறார்கள். இரவில் யாரும் அங்கே தங்குவது இல்லை. உடைந்துபோன கழிப்பறைகள், கதவு இல்லாத குளியலறைகள் என்று ஏராளமான பிரச்னைகள் இங்கேயும் உண்டு.

இங்கே என்ன இருக்கோ அதுதான்!



மதுரை நகரில் உள்ள சொக்கிகுளம் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிக்குச் சென்றோம். அங்கே வாட்ச்மேன் இல்லை. வார்டன் வீட்டுக்குப் போயிருப்பதாக அங்கிருந்த சமையல்காரப் பெண்மணி சொன்னார். குடிக்கவும் குளிக்கவும் மாணவிகள் வெளியில் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். பாதுகாப்பு, சுகாதாரம் இரண்டும் இந்த விடுதியில் கேள்விக்குறிதான்! அண்ணா நகரில் உள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியிலும் வாட்ச்மேன், வார்டன் இல்லை. இங்கேயும் சமையல் பெண்மணியின் கன்ட்ரோல்தான்.

நகரில் இப்படி என்றால் கிராமப்புறங்களில் கேட்கவே வேண்டாம். ''உங்களுக்கு கவர்மென்ட் ஓசியில சோறு போடுறாங்க. தங்குறதுக்கு இடம் கொடுத்திருக்காங்க. இங்கே என்ன இருக்கோ அதுதான். இஷ்டம் இருந்தா இருங்க. இல்லைன்னா பெட்டியைத் தூக்கிட்டு கிளம்புங்க!'' என்று உசிலம்பட்டி ஏரியாவில் ஒரு வார்டன் பகிரங்கமாகவே மாணவிகளிடம் சொல்லியிருக்கிறார். எதற்கு வம்பு என்று அந்த ஏழைக் குழந்தைகள் அமைதியாக இருக்கிறார்கள்.
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் P19
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்...!



ராமநாதபுரம் மாவட்டத்தில் 41 அரசு மாணவியர் விடுதிகள் செயல்படுகின்றன. இதில் ராமநாதபுரம், பரமக்குடி தவிர மற்றவை அனைத்தும் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் இருக்கின்றன. அதில் மஞ்சூர், கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி, காமன்கோட்டை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. இங்கெல்லாம் வெளியாட்கள் சர்வ சாதாரணமாக வந்து போகிறார்கள். இந்த விடுதிகளில் வாட்ச்மேனைக்கூட பார்க்க முடியவில்லை.
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் P19a
கட்டமைப்பு ஓகே... பாதுகாப்பு?



நெல்லை மாவட்டத்தில் நகரங்களில் இருக்கும் பெரும்பாலான விடுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு இருக்கின்றன. நல்ல கட்டமைப்பு வசதியும் பாதுகாப்பும் மிகுந்த விடுதிகளில் தங்குவதற்கு, மாணவிகளிடம் பெரும் வரவேற்பு உள்ளது. இத்தகைய விடுதிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதிலேயே பெற்றோரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக, பாளையங்கோட்டையில் உள்ள அரசினர் மகளிர் விடுதியில் சேருவதற்கு அரசியல் முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளின் பரிந்துரைக் கடிதத்துடன் நிறைய பெற்றோர் முட்டிமோதுகிறார்கள்.
கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்த களக்காடு, நல்லம்மாள்புரம், முன்னீர்பள்ளம் விடுதிகள் மேம்படுத்தப்பட்டு சில தினங்களுக்கு முன்பு முதல்வரால் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் திறக்கப்பட்டன. கட்டமைப்பு வசதிகள் சரிசெய்வது ஒருபக்கம் இருந்தாலும், பாதுகாப்புக்கு வாட்ச்மேன் இருக்க வேண்டும் என்பது மாணவிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

இங்கே நாம் குறிப்பிட்டிருக்கும் மாணவியர் விடுதிகளில் நிலை ஒரு சோறுதான்! கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க இருக்கும் பெரும்பாலான விடுதிகளில் இதே நிலையில் சொல்ல முடியாத துயரத்துடன்தான் மாணவிகள் இருக்கிறார்கள்.

என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஜெயலலிதா?
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Starவேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Starவேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Starவேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் Star
 
விடுதிக் காப்பாளர்கள் வருவதே இல்லை!
 
மதுரை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலரான ஆனந்தராஜ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். ''விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி ஒன்றில் பெண்கள் குளிக்கும் அறை உயரம் ஐந்து அடிக்கு குறைவாக உள்ளது. அங்கே பெண்கள் குளிக்கும் சமயத்தில் சில சமூக விரோதிகள் வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பிறகு, குளிக்கும் காட்சிகளை செல்போனில் படம் எடுத்துள்ளனர். இந்தப் பிரச்னை நீதிமன்றம் வரை வந்தும் இன்னும் தீர்க்கப்படவில்லை.

மதுரையில் உள்ள சொக்கிகுளம் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சில சமூக விரோதிகள் விடுதி வாசலில் வைத்து ஒரு பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மர்மமாக இறந்துபோனார். பிரச்னையை முடிக்க மின்கசிவில் ஷாக் அடித்து இறந்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் சிலருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் பல இன்னும் வெளிவரவில்லை. வெளிவராத பிரச்னைகள் எத்தனையோ முடங்கியுள்ளன. பெரும்பாலான பெண்கள் விடுதிகளில் கழிப்பிட வசதி இல்லை. வெட்டவெளியில் மலம் கழிக்கும் அவலம்தான் உள்ளது. பெரும்பாலான விடுதிக் காப்பாளர்கள் விடுதிக்கு வருவதே இல்லை. சமையல்காரர்களின் கட்டுப்பாட்டில்தான் விடுதி நிர்வாகம் இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஆனந்தராஜ்.
 
 
''13 அம்ச திட்டத்தை முதல்வர் அமல்படுத்த வேண்டும்!''
 
'மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் 'பாடம்’ நாராயணன் நம்மிடம் பேசினார்.

வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் P17''விடுதிகளில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் மிகவும் அபாயகரமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. பொள்ளாச்சியில் இரண்டு குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானது மாதிரியே  விருதுநகர் காப்பகத்தில் அதன் வார்டன், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்தச் சிறுமி இரண்டு முறை கர்ப்பம் ஆனார். அரசு மருத்துவமனை டாக்டர், அவரது தனி கிளினிக்கில் இரண்டு தடவையும் கருவைக் கலைத்துள்ளார். பின், மாவட்ட சமூலநலத் துறைக்கு தகவல் கொடுக்காமலேயே, காப்பக நிர்வாகம் அந்த சிறுமியை உசிலம்பட்டியில் உள்ள இன்னொரு காப்பகத்துக்கு மாற்றி விட்டது. இப்போது, பொள்ளாச்சியில் இந்தக் கோரம் நடந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமையால் இறந்த சிறுமிக்கு  இன்று வரை நீதி கிடைக்கவில்லை. அந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் சேர்த்துள்ளனர். விசாரணையில் முன்னேற்றம் ஒன்றும் இல்லை.

தமிழகம் முழுவதும், மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், காப்பகங்களில் தங்கியுள்ளனர். அதில், பாதிக்கும் மேற்பட்ட காப்பகங்கள் பதிவுசெய்யப்படாமல் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுகின்றன. இந்தியா விலேயே தமிழகத்தில்தான் அதிக குழந்தைகள் காப்பகங் கள் உள்ளன. சிறப்பாக சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் காப்பகங்களும் உள்ளன. அவர்களைப் பாராட்டுகிறோம். அதே நேரத்தில், காப்பகங்களைக் காப்பாற்றுவதற்காகவே குழந்தைகளை எங்கிருந்தோ அழைத்து வருகின்றனர். காப்பகங்களில் குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று, வேறு மாநிங்களில் இருந்து அநாதை குழந்தைகளைக் காப்பகத்துக்குக் கொண்டு வந்து தங்கள் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அதனால், தங்கள் பள்ளிகளையும் நடத்திக் கொள்ளலாம்; அதே நேரத்தில் அநாதை விடுதி நடத்துகிறோம் என்று வெளிநாட்டு நிதியையும் பெற்றுக்கொள்கின்றனர்.

தமிழக அரசின் சமூகநலத் துறைதான் இந்தத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங்களுக்கு முழு பொறுப்பு. மாவட்ட வாரியாக, சமூக நலத் துறை அதிகாரிகள்தான் ஆய்வு செய்து குழந்தை களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். அதை செய்யத் தவறி... வழிகாட்டத் தவறியிருக்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி. தமிழகம் முழுதும் பதிவு செய்யப்படாத, சட்டத்துக்குப் புறம்பான மோசமான குழந்தைகள் காப்பகங்கள் நடப்பதை அனுமதித்த அலுவலர்கள் மீது துறைவாரியாகவும் சட்டப்படியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா காப்பகங்களையும் ஆய்வுசெய்து தரமற்ற காப்பங்களை சிறார் நீதி சட்டத்தையும் விதிகளையும் மீறும் காப்பகங்களை மூட வேண்டும். அவற்றுக்கு வெளிநாட்டு நிதி வருவதையும் தடுக்க வேண்டும். இந்த வகை காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கூடியவரை அவர்களின் குடும்பங்களுடன் இணைத்து அருகில் உள்ள பள்ளிகள் மூலம் அவர்களின் கல்வி தொடர வழிகாண வேண்டும்.
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் P19c
சமூக நல இயக்குநகரகத்துக்கும் சமூக பாதுகாப்பு இயக்குநகரத்துக்கும் இடையில் உள்ள குழப்பங்களைக் களைந்து எல்லா வகை காப்பகங்களையும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் பதிவுசெய்வதை சமூக பாதுகாப்பு இயக்குநகரகத்தின் பொறுப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு பெண்கள் ஆணையத்துக்கு 90 வயதான விசாலாட்சி நெடுஞ்செழியன் தலைவராக உள்ளார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக சரஸ்வதி ரெங்கசாமி உள்ளார். இந்த அமைப்புகளுக்கு தகுதியே இல்லாத ஆளுங்கட்சிக்காரர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். இந்த ஆணையங்கள் உயிரற்று கிடக்கிறது. இதற்கு உயிரூட்ட ஆர்வமிக்க தகுதி வாய்ந்தோரை நியமிக்க வேண்டும். டெல்லியில் நிர்பயாவுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறைக்கு பின் எழுந்த மக்கள் எழுச்சியை அடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2013 ஜனவரி 1-ல் குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு 13 அம்ச செயல்திட்டங்களை அறிவித்தார். அந்தத் திட்டங்களை இனியாவது தீவிரப்படுத்த வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கும் சட்டம் 2012 என்று ஒன்று இருப்பதே காவல் துறையினருக்கு தெரியவில்லை. இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்!'' என்று கேட்டுக்கொண்டார்.
 
வட்டிக்கு வாங்கும் வார்டன்கள்!
 
அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு ஒரு மாத உணவுக்கு ஒரு மாணவிக்கு 650 ரூபாய் அரசு வழங்குகிறது. அந்தப் பணத்தில் அரிசி - 15 கிலோ, கடலைப்பருப்பு - 1/2 கிலோ, சமையல் எண்ணெய் - 300 மில்லி, காய்கறி, கறிவேப்பிலை, கொத்தமல்லி கீரை, பச்சை மிளகாய், இஞ்சி - 5 கிலோ, தக்காளி - 400 கிராம், பால் - 1 1/2லிட்டர், விறகு, எரிவாயு - 3 கிலோ, புளி - 250 கிராம், பொட்டுக்கடலை - 200 கிராம், உப்பு - 1/2 கிலோ, துவரம்பருப்பு - 200 கிராம், பச்சைப்பயறு - 300 கிராம், உளுந்து - 250 கிராம், கறிமசாலா- 5 ரூபாய், முட்டை - 12, ஆட்டு இறைச்சி - 160 கிராம், கோழி இறைச்சி - 200 கிராம், எலுமிச்சை - 4, தேங்காய் - 1, ரவை - 250 கிராம், வறமிளகாய் - 150 கிராம், கொத்தமல்லி - 30 கிராம், மஞ்சள் பொடி - 15 கிராம், மிளகு - 15 கிராம், சீரகம் - 15 கிராம், பூண்டு - 15 கிராம், டால்டா - 30 கிராம், வெங்காயம் - 1/2 கிலோ, பட்டாணி - 50 கிராம், கடுகு - 15 கிராம் வாங்க வேண்டும் என்பது விதிமுறை.

இந்தத் தொகையை ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுதிக்குக் கொடுப்பது இல்லை. அதனால், வார்டன்கள் வெளியில் வட்டிக்கு வாங்கியே செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. மூன்று மாதங்கள் கழித்து அந்தத் தொகை மொத்தமாக வரும்போது, பலருக்கும் கமிஷன் கொடுத்தாக வேண்டும். அதனால், வார்டன்களும் அரசு ஒதுக்கும் தொகையை முழுமையாக செலவு செய்வது இல்லை. வர வேண்டியது வந்துவிடுவதால், வார்டன்கள் செய்யும் தவறுகளையும் அதிகாரிகள் கேட்பது இல்லை.

இதுதவிர, தேங்காய் எண்ணெய், குளியல் சோப், துவைக்கும் சோப், ஷாம்பு, பல்பொடி ஆகியவற்றை அரசே தனியாக வழங்குகிறது.
 
 
வேதனையில் துடிக்கும் அரசு விடுதி மாணவிகள் P19bவிடுதிகள் சூப்பராக இருக்கின்றன!
 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியனிடம் பேசினோம். ''அம்மா ஆட்சியில் விடுதிகள் அனைத்தும் சூப்பராகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அம்மா ஆட்சிக்கு வந்ததும் 1,059 விடுதிகளை மராமத்து செய்ய உத்தரவிட்டார். அந்தப் பணிகள் முடிந்துவிட்டன. இப்போது விடுதிகள் சூப்பராக இயங்குகின்றன. குடிநீர், கழிப்பறை என்று மாணவ, மாணவிகளுக்கும் போதுமான அளவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நானும் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி வருகிறேன். குறை எதுவும் இல்லாமல் மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன'' என்று சொன்னார்.

ஜூ.வி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக