புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10 
69 Posts - 58%
heezulia
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10 
111 Posts - 60%
heezulia
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை)


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:12 am

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) 100/70 பணமழை கொட்டும்!

எல்லோரிடமும் நட்புடன் பழகும் மேஷ ராசி அன்பர்களே!

இது வரை ராகு, கேதுவும் சாதகமற்ற இடத்தில் இருந்து பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ராகு ராசிக்கு 7ல் துலாமில் இருந்து இன்னலைத் தந்து கொண்டிருந்தார். இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பார். தரம் தாழ்ந்தவர்களோடு நட்பு கொள்ள வைத்து செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது 6-ம் இடமான கன்னிக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம். இதனால் இடர்பாடு அனைத்தும் நீங்கி விடும்.  கேது இது வரை ராசியில் இருந்து உடல் உபாதை, அரசால் பிரச்னையைத் தந்திருப்பார். முயற்சியில் தடை பல வந்திருக்கலாம். இப்போது கேது ராசிக்கு 12-ம் இடமான மீனத்திற்கு போகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால், கடந்த கால பிற்போக்கான நிலை மறையும் என்றாலும், பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதை உண்டாகலாம். வாழ்வில் முன்னேற்றம் உண்டாக ராகு துணை நிற்பார். குடும்ப வகையிலும் நன்மை அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருப்பதால், பொருளாதாரம் பன்மடங்கு மேலோங்கும். தடைபட்டு வந்த செயல்கள் மளமளவென நடந்தேறும். நீண்ட நாளாக எதிர்பார்த்த ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கும். கணவன், மனைவி இடையே இருந்த மனக்கசப்பு அடியோடு மறைந்து ஒற்றுமை மேம்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். புதிய வீடு,வாகனம் வாங்க யோகம் கூடிவரும்.

தொழில், வியாபாரம்: எதிரிகளின் இடையூறுகளில் இருந்து விடுபடுவீர்கள். தடையின்றி இனி முன்னேறலாம். வீண் விரயம் நீங்கி, சேமிக்கவும் வாய்ப்புண்டாகும். அதிர்ஷ்டகரமாக திடீர் வருமானம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. தொழில் விஷயமாக ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகாது. இரும்பு, மற்றும் தரகு தொடர்பான தொழில் நன்கு வளர்ச்சி அடையும். புதிய தொழில் முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கலாம்.

பணியாளர்கள்:  சக ஊழியர்கள் உதவி கரமாக செயல்படுவர். வீண் அலைச்சல் இருக்காது. அப்படியே வெளியூர்ப்பயணம் மேற்கொண்டாலும் ஆதாயத்துடன் வருவீர்கள்.  புதிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு பாராட்டு, விருது போன்றவையும் கிடைக்கும்.

கலைஞர்கள்: குறுக்கிட்ட பிரச்னை நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் காணலாம். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கப் பெறுவர். வருமானம் சிறப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் பண விஷயத்தில் தேவை விரைவில் நிறைவேறும்.

மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நன்மையளிக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர விடாமுயற்சி தேவைப்படும். கடந்த காலத்தில் நட்பினால் பிரச்னைக்கு உள்ளானவர்கள் இனிநல்ல புத்தியோடு செயல்படுவதற்கான காலம் ஆரம்பமாகும்.

விவசாயிகள்: முன்னேற்றமான பலனைக் காணலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. அதற்கான சூழ்நிலை தானாகவே அமையும். எள், கரும்பு, உளுந்து, மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். வழக்கு விவகாரத்தில் திருப்தியான முடிவு கிடைக்கும்.

பெண்கள்: வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடை போடுவர். கணவர், குடும்பத்தாரின் அன்பு முழுமையாக கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரப் பாடல்!

எனை நாடி வந்த கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும்- குமரேசரிரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. நாளென் செயும் வினைதான் என்செயும்

கீழப்பெரும்பள்ளம் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். திருச்செந்தூர் முருகனை வழிபடுவதும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். விநாயகர்  வழிபாட்டின் மூலம்  பிரச்னைகளிலிருந்து தப்பிவிடலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:13 am

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2)

100/75 முயற்சியில் வெற்றி!

திட்டமிட்டு செயல்படும்ரிஷப ராசி அன்பர்களே!

ராகு இதுவரை 6-ம் இடமான துலாமில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். உடல் ஆரோக்கியம், செயலில் வெற்றியை வழங்கிக் கொண் டிருந்தார். தற்போது ராகு 5-ம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால், குடும்பத்தில் பிரச்னை உருவாக இடமுண்டு. அவ்வப்போது இனம் புரியாத வேதனை மனதை ஆட்டிப் படைக்கலாம். அதே நேரம் சாதகமற்ற இடத்தில் இருந்த கேது நன்மை தரும் இடத்துக்கு மாறுகிறார். 12-ம் இடமான மேஷத்தில் இருந்து பொருள் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவர், இப்போது 11-ம் இடமான மீனத்திற்கு சென்று நல்ல வளம், உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்ப வாழ்வில் மேன்மையைக் கொடுப்பார். எடுத்த புது முயற்சிகளை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் வழங்குவார். கேதுவின் பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. கையில் எப்போதும் பணப்புழக்கம் இருந்து கொண்டேயிருக்கும். முயற்சியில் இருந்த தடையனைத்தும் விலகும். பகைவர்களின் தொல்லையில் சிக்கி அலைக்கழிந்தவர்கள் இனி தைரியமாக செயல்படும் துணிச்சலைப் பெறுவீர்கள். எனவே எடுத்த எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். 2014 டிசம்பருக்கு பிறகு சனிபகவான் சாதகமற்ற இடத்திற்கு செல்வதால் பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அன்றாடத் தேவை அனைத்தும் எளிதில் நிறைவேறும். கணவன், மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருப்பது அவசியம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் காலதாமதம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பும் சரிவர கிடைக்காது. அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையளிக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். உடல்நலம் சிறப்படையும். மருத்துவச் செலவு பெருமளவில் குறையும். நீண்ட காலமாக சிகிச்சை பெறுபவர்கள் கூட தற்போது வீடு திரும்புவர்.

தொழில், வியாபாரம்: நல்ல வளர்ச்சியும், அதற்கேற்ப லாபமும் உண்டாகும். வியாபாரம் விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் சென்று வர வேண்டியிருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மையைத் தற்போது எதிர்பார்க்க முடியாது. யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. புதிய வியாபார முயற்சியில் ஓரளவே நன்மை பெறுவீர்கள். பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும். மனைவி பெயரில் உள்ள தொழிலில் லாபம் பன்மடங்கு கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியில் சீரான பலனை காணலாம். வேலைப்பளு அவ்வப்போது அதிகரித்தாலும் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இடமாற்றப் பீதி சிலருக்கு உருவாகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. பெண்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். அது உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.

அரசியல்வாதிகள்: சமுக நல சேவகர்கள் மக்கள் நலப்பணிக்காக விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பில்லை. பொருளாதார வளம் சிறக்கும். ஆன்மிகப்பணியில் ஈடுபடுபவர்கள் நல்ல பெருமையை அடைவீர்கள். தன்னலமற்ற சேவைக்கு நல்ல மரியாதையும், கவுரவமும் கிடைக்கும்.

மாணவர்கள்: அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்குத் துணை நிற்கும்.

விவசாயிகள்: பணிகள் சிறப்பாக அமையும். குறைந்த பண முதலீட்டில் விவசாயம் செய்யவும். மானாவாரி பயிர்களில் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகவே இருக்கும்.

பெண்கள்: குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். புதிய ஆடை, நகைகள், அழகு சாதன பொருட்களை விரும்பிய வகையில் வாங்க முடியும்.

பரிகாரப்பாடல்!

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாகி ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

வெள்ளியன்று ராகு காலத்தில் காளிக்கு எலுமிச்சை தீபமேற்றுங்கள். அபிஷேக வேளையில் பைரவரைத் தரிசியுங்கள். பிரதாஷத்தன்று சிவாலயம் öல்லுங்கள். ராகு காலத்தில் எலுமிச்சை தீபமேற்றி துர்க்கையை வழிபடுங்கள். இயன்றால் திருநாகேஸ்வரம் சென்று வழிபடுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு தடையை அகற்றும்.



ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:14 am

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

100/65 உடல்நலனில் கவனம்!

செயல்திறத்துடன் பணியாற்றும் மிதுனராசி அன்பர்களே!

இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்காது என்றாலும் இந்த காலம் உங்கள் வாழ்வைத் தழைக்கச் செய்யும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை. ராகு இதுவரை 5-ம் இடமான துலாமில் இருந்து குடும்பத்தில் பிரச்னையை தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் 4-ம் இடமான கன்னி ராசிக்கு வந்து விட்டதால் அந்த பிரச்னை நீங்கும். அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் வீண் அலைச்சல், பணவிரயம் போன்றவை உருவாகலாம். நிழல் கிரகமான கேது இது வரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மேஷத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தந்திருப்பார். அவர் இப்போது 10-ம் இடமான மீனத்திற்கு சென்றுள்ளார். இது சிறப்பானது என்று சொல்லமுடியாது. இங்கும் அவர் உடல் உபாதைகளைத் தரலாம். ஆனால் கேது பிற்பகுதியில் செயல் வெற்றியைக் கொடுப்பார். குடும்பத்தின் நிலையில் மேம்பாடு உண்டாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனமாக இருப்பது நல்லது. எனவே சற்று கவனமாக இருக்கவும். உடல் நலம் சுமாராகவே இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது நல்லது. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.

தொழில், வியாபாரம்: நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். லாபம் சீராக இருக்கும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கலாம். எப்போதும் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சாமர்த்தியமாகச் செயல்பட்டால் அதை முறியடித்து வெற்றி காணலாம். புதிய தொழில் தொடங்க அதிக பணம் போட வேண்டாம். பண முதலீட்டைவிட அறிவு முதலீட்டை போட்டு தொழில் செய்வது நன்மைக்கு வழிவகுக்கும். பொருள் விரயம், பணம் மாயம் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

பணியாளர்கள்: பணியில் சிறப்பான நிலையில் இருப்பர். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். சிலருக்கு எதிர்பாராமல் சம்பள உயர்வும் கிடைக்கும். சாதாரண பணியில் இருப்பவர்கள் கூட அந்தஸ்து, அதிகாரம் மிக்க பதவிக்கு உயர வாய்ப்புண்டாகும். படிப்பை முடித்து விட்டு பணிக்காக காத்திருப்பவர்கள் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கப் பெறுவர்.

கலைஞர்கள்: சிறப்பான பலனைக் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ், பட்டம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் தொடர்ந்து சிறப்புநிலை அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

மாணவர்கள்: கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரலாம். பாடம் பெறலாம். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.

விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. நெல், கோதுமை, கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழல் அமையும். ஆனால் புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்: உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காண்பீர்கள். விருந்து,விழா என சென்று வருவீர்கள். குடுபத்தினரிடம் சற்று விட்டுக் கொடுத்து போக வேண்டும்.

பரிகாரப் பாடல்!

அருமறை முதல்வனை ஆழி மாயனைக் கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத் திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.

ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காளி, துர்க்கை கோயிலில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு நடத்துங்கள். பாம்பு புற்றுள்ள கோயில்களுக்கு சென்று நாகரை வணங்கி வாருங்கள். ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடுங்கள். கிருஷ்ணரை வணங்கி வாருங்கள். விதவை பெண்களுக்கு உதவுங்கள்.



ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:15 am


கடகம்: (புனர்பூசம் 4, பூரம், ஆயில்யம்)

100/70 குடும்ப மகிழ்ச்சி!

மதிநுட்பத்துடன் பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!

இது வரை ராகு 4-ம் இடமான துலாமில் இருந்து இருந்து வீண் கலகம், அலைச்சலை உருவாக்கி இருப்பார். இப்போது ராகு 3-ம் இடமான கன்னி ராசிக்கு வருவதால் நன்மையை வாரி வழங்குவார். குறிப்பாக காரிய அனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் கொடுப்பார். கேது இதுவரை 10-ம் இடமான மேஷத்தில் இருந்து உடல் உபாதை தந்திருப்பார். இனி அவர் 9-ம் இடமான மீனத்திற்கு போகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்ல. இருந்தாலும், உடல் உபாதை நீங்கி ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் கேதுவால் பொருள் இழப்பு, காரிய தோல்வி உண்டாகலாம். ராகுவால் செயல் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். கேதுவால் வரும் தடைகளை குருவின் பார்வையால் முறியடிக்கலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குருவின் பார்வை கைகொடுக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த திருட்டு பயம் அடியோடு மறையும். விருந்து, விழா என் சென்று வருவீர்கள். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். நோய்நொடி அனைத்தும் நீங்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்து வந்த பயணப்பீதி மறையும்.

தொழில், வியாபாரம்: பழைய கடன்கள் அடைபடும் விதத்தில் வருமானம் வரும். பண விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அரசிடம் இருந்து உதவி கிடைக்க தாமதம் ஆகலாம். குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்க ஏற்ற காலகட்டம். இரும்பு, இயந்திரம், அச்சுத் தொழில், தரகு போன்ற தொழில் சிறந்து ஓங்கும். பழைய பொருட்களை வாங்கி விற்றல் போன்றவற்றிலும் அதிக வருமானம் கிடைக்கும். கேதுவால் உங்கள் முயற்சியில் சில தடைகள் வரத்தான் செய்யும். ஆனால் அதைக் கண்டு சோர்ந்து விட வேண்டாம். ராகு பக்கபலமாக இருப்பதால் எந்த தடையையும் முறியடித்து வெற்றி காணலாம்.

பணியாளர்கள்: சீரான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு இருக்கும். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ப வருமானம் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். சிலர் வீண் மனக் குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருக்க வாய்ப்புண்டு. உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் இருப்பது அவசியம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பார்க்கும் சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், நன்மையாகவே முடியும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் பெற விடா முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள்: கட்சித் தொண்டர், மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையாது. நல்ல பொருளாதார வசதியுடன் இருந்து வருவர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதமாகலாம்.

மாணவர்கள்: அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலனை குருவின் பார்வை மூலம் பெறலாம். ஆசிரியரின் வழிகாட்டுதல்உதவிகரமாக இருக்கும்.

விவசாயிகள்: நல்ல பல முன்னேற்ற பலனைக் காணலாம். புதிய தொழில் நுட்பத்தைக் கடைபிடித்து வருவாயை அதிகரிக்கலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. கரும்பு, எள், கொள்ளு, மானாவாரி போன்ற பயிர்கள் நல்ல மகசூலைக் கொடுக்கும். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தாரிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து பாசம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணிச்சுமையைச் சந்திப்பர்.

பரிகாரப்பாடல்!

விறகில் தீயினன் பாலிற் படுநெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல் நட்டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.

கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள். ஏழைக்குழந்தை படிக்க உதவுங்கள். கீழப்பெரும்பள்ளம் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். திருநாகேஸ்வரத்தில் ராகுவுக்கு பாலபிஷேகம் செ#யலாம். சந்திரபகவானுக்கு அர்ச்சனை செ#து மனபலம் பெறலாம்.




ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:16 am


சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)

100/55 சிரமமான சூழ்நிலை

வெற்றி மேல் வெற்றி குவிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான துலாமில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அதாவது காரிய அனுகூலத்தையும், நல்ல வருவாயையும் தந்திருப்பார். அதன் மூலம் நல்ல பொருளாதார வளத்தைக் கண்டிருக்கலாம். பல்வேறு முன்னேற்றத்தையும் பெற்றிருக்கலாம். இப்படி நன்மை தந்த ராகு, இப்போது 2-ம் இடமான கன்னி ராசிக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளையும், துõரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். ராகுவுக்கு இணையான இன்னொரு கிரகம் கேது இதுவரை 9-ம் இடமான மேஷத்தில் இருந்து வந்தார். அவரால் பொருள் இழப்பையும், காரியத்தில் தோல்வியையும் கண்டிருக்கலாம். அவர் இப்போது 8-ம் இடத்திற்கு மாறுவதன் மூலம் இந்த கெடுபலன்கள் நடக்காது. அதேநேரம் அவர் மீனத்திற்கு மாறுவதும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண், தோல், தொடர்பான நோய் வரலாம். சற்று கவனம் தேவை. லேசான பாதிப்பு வந்தால்கூட உடனே சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் மருத்துவ செலவு குறையும்.

தொழில், வியாபாரம்: நல்ல வருமானம் கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவார்கள். பங்குதாரர்கள்இடையே ஒற்றுமை ஏற்படும். டிசம்பருக்கு பிறகு அதிக அலைச்சல் இருக்கும். கடின உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். எதிரிகளின் இடையூறுகள் வரலாம். அவர்கள் வகையில் ஒருகண் இருப்பது நல்லது. புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. தொழிலில் போட்டி உருவாகும். பண விஷயத்தில் சற்று அக்கறை தேவை. பணத்தைவிட உங்கள் அறிவை பயன்படுத்தி எத்துறையிலும் சிறப்படையலாம். பத்திரிகை தொழில், தானியம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய கிளைகள் துவங்குவதை மிகுந்த கவனத்தின் பேரில் செய்யுங்கள்.

பணியாளர்கள்: கடந்த காலத்தைப்போல அனுகூலங்கள் இருக்கும் என்று எண்ண வேண்டாம். அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியிருக்கும். வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். எதிர்பார்த்த சலுகைகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படலாம்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.

அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைப்பது சிரமம். தலைமையிடம் அனுசரிப்பும், தொண்டர்களிடம் கண்டிப்பும் காட்டுவது பதவிக்கு வரும் இடையூறைத் தவிர்க்கும்.

மாணவர்கள்: முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு போட்டிகளில் வெற்றி கிடைப்பது அரிதாகும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.

விவசாயிகள்: கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காவிட்டாலும் உழைப்புக்கு தகுந்த வருமானம் வரும். அதிக முதலீடு செய்யும் விவசாயத்தை தவிர்க்கவும். நெல், கோதுமை, கேழ்வரகு பயிர்களில் நல்ல மகசூல் பெறலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்: கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். நகை, ஆடம்பரப்பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேற தாமதமாகும்.

பரிகாரப்பாடல்!

ஆடிப் பாடி அகம் கரைந்து இசைப் பாடிப் பாடி கண்ணீர் மல்கி நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ்வாணுதலே

ராகு, கேதுவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். திருநாகேசுவரம், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, சங்கரன் கோவில், நாகர்கோவில் ஆகிய தலங்களில் ஏதாவது ஒன்றுக்கு சென்று வரலாம். துர்க்கை வழிபாடு முன்னேற்றத்திற்கு துணை நிற்கும். நரசிம்மரை வழிபடுவதன் மூலம் வருகின்ற சிரமங்களைத் துõள் துõளாக்கி விடலாம்.




ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:17 am


கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)

100/60 எதிரிகளால் பிரச்னை!

கடமை உணர்வு மிக்க கன்னி ராசி அன்பர்களே!

இதுவரை ராகு உங்கள் ராசிக்கு 2ம் இடமான துலாமில் இருந்து குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளையும், திருட்டு சம்பவத்தையும் ஏற்படுத்தி இருப்பார். இனி அவரால் அந்த நிகழ்வுகள் ஏற்படாது. அதாவது ராகு உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம்.ராகுக்கு நேர் எதிரே இருக்கும் கேது, இதுவரை 8-ம் இடமான மேஷத்தில் இருந்து உடல் உபாதைகளை தந்திருக்கலாம். இப்போது அவர் 7-ம் இடமான மீனத்திற்கு வந்திருக்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்ததுபோல் கெடு பலன்கள் நடக்காது. 7-ல் கேது இருக்கும்போது மனைவி வகையில் பிரச்னைகளையும், அலைச்சலையும் தரலாம். மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்னை வரத்தான் செய்யும். உடல் நலம் சுமாராக இருக்கும்.ராகு-கேது சாதகமாக இல்லையே என்பதற்காக கவலை கொள்ள வேண்டாம். இதனால் ஏற்படும் தடைகள், பிற்போக்கான நிலையை குரு பார்வையால் முறியடிக்கலாம். அதன்மூலம் பணம், பொருள் விரயம் தடுக்கப்படும். வீண்விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தாரிடம் மதிப்பு கூடும்.குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மனைவி வகையில் அவ்வப்போது கருத்துவேறுபாடு வரலாம். உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். சற்று விலகி இருப்பது நல்லது. வீடு-மனை வாங்க சில காலம் பொறுத்திருப்பது நல்லது. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கேதுவால் சிற்சில உடல்நலபாதிப்புகள் வந்தாலும் மருத்துவத்தின் பேரில் மறைந்துவிடும்.

தொழில், வியாபாரம்: அதிகமாக உழைக்க வேண்டிஇருக்கும். பணவிஷயத்தில் யாரையும் நம்பி விட வேண்டாம். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். அரசிடம் இருந்து எதிர்பார்த்த கோரிக்கைகள் கிடைக்காமல் போகலாம். சிலருக்கு வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்காது. குருவின் 7, 9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். பண விஷயத்தில் கவனம் தேவை.

பணியாளர்கள்: வேலையில் இருந்து வந்த தடைகள், திருப்தியின்மை போன்றவை அடியோடு மறையும். வேலையில் புதிய தெளிவு பிறக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.பத்திரிகையாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். இது வரை கிடைக்காத பாராட்டு, விருது போன்றவை வரும்.

அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பலனைப் பெறலாம். மக்களிடையே நற்பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.

மாணவர்கள்: கல்வி ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கப்பெறுவீர்கள். படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் பெறுவர்.

விவசாயிகள்: அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகத்தான் இருக்கும். சமரசபேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்லது.

பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அக்கம்பக்கத்தாரிடம் வளவள பேச்சு வேண்டாம். ஆடம்பரப்பொருள் வாங்குவதை தவிர்க்கவும். பிறந்த வீட்டில் இருந்து வெகுமதிகள் வரலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்.

பரிகாரப்பாடல்!

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனேமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.

விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் போன்ற ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வாருங்கள். அல்லது அருகில் இருக்கும் புற்றுள்ள கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமியை வணங்கி வாருங்கள்.




ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:18 am


துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)

100/65 வரவும் செலவும் சரி!

பிரச்னைகளைத் துணிச்சலுடன் சமாளிக்கும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த ராகு-கேது பெயர்ச்சி மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்க உள்ளது. அதுவும் தற்போது கேது மிகமிக நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். அவர் இதுவரை 7-ம் இடமான மேஷத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உடல் உபாதைகளையும் தந்திருப்பார். இப்போது 6-ம் இடமான மீனத்திற்கு வந்திருப்பதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.கேது நன்மை தரும் அளவுக்கு ராகுவால் நற்பலனை தர இயலாது. அவர் இதுவரை உங்கள் ராசியில் இருந்து உறவினர்கள் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். இப்போது அவர் இடம்மாறி 12-ம் இடமான கன்னி ராசிக்கு வந்துள்ளார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், துõரதேச பயணத்தையும், இடமாற்றத்தையும் கொடுப்பார். கேது தரும் பொருள் வளத்திற்கேற்ப இவர் செலவைக் கொடுத்து விடுவார்.கேது சாதகமாக நின்று பல்வேறு நன்மைகளைத் தருவார். இதன் மூலம் நீங்கள் எடுத்த செயல் வெற்றிகரமாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம். வீடு, மனை வாங்க சிற்சில தடைகளை மீறித்தான் அனுகூலம் பிறக்கும்.

தொழில், வியாபாரம்: தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசு வகையில் எந்த சலுகையையும் எதிர்பார்க்க முடியாது. பணவிரயம், திருட்டு போன்றவை தடுக்கப்படும். வெளியூர் பயணம் அனுகூலத்தைத் தரும். கம்ப்யூட்டர் தொழில், அச்சுத் தொழில், தரகு, ஆன்மிகம் தொடர்பான தொழில்கள் சிறப்படையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தாரின் பெயரில் ஆரம்பிக்க வேண்டும்.

பணியாளர்கள்: சீரான பலனை எதிர்பார்க்கலாம். வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் அதிக செலவை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையின்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும்.

கலைஞர்கள்: சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். பதவிக்காக காத்திருப்பவர்கள் பொறுமை காக்க வேண்டும்.

மாணவர்கள்: அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் ஓரளவு கிடைக்கும். சிலர் முயற்சி எடுத்து வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.

விவசாயிகள்: நல்ல பல முன்னேற்றங்களைக் காணலாம். நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். புதிய நிலம் வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்பு வந்து கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். ஆனால், புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்: குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். ஆடம்பர பொருட்கள், புத்தாடை ஆபரணங்கள் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், சக பணியாளர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

பரிகாரப்பாடல்!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே! சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே ராமா என்று இரண்டெழுத்தினால்!

ராகுவும், சனிபகவானும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு உதவிகரமாக இருக்கும். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து அதை காக்கைக்கு போடுங்கள். ஸ்ரீராமஜெயம் மந்திரம் சொல்வது நன்மை தரும்.




ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:19 am


விருச்சிகள்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

100/75 ஏழரையிலும் நன்மை!

கண்ணியம் மிக்க விருச்சிக ராசி அன்பர்களே!

ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடமான துலாமில் இருந்ததால் பண இழப்பையும், சில துயர சம்பவங்களையும் சந்தித்திருக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளும் ஏற்பட்டு இருக்கும். இனி இந்த இடர்பாடுகளுக்கு விடை கொடுக்கலாம். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கன்னி ராசிக்கு செல்வது மிகச்சிறப்பானது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். உபரியாகக் கிடைக்கும் பணத்தைச் சேமிப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பணமுடையில் இருந்து பாதுகாப்பு தரும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.ராகு நன்மை தந்தாலும் கேதுவால் நன்மை கிடைக்காது. அவர் இதுவரை 6ம் இடமான மேஷத்தில் இருந்து பொன்னையும், பொருளையும் தந்தார். இப்போது 5-ம் இடமான மீனத்திற்கு வந்துள்ளதால் அரசு வகையில் சில பிரச்னைகளைத் தரலாம். திருட்டு பயமும் ஏற்படலாம். ராகு, குருவால் தடைகள் அனைத்தும் விலகும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

தொழில், வியாபாரம்: அதிக வருமானம் காணலாம். கடந்த கால நஷ்டம் இருக்காது. ஓரளவு சேமிப்பு இருக்கும். இது ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். போட்டியாளர்ள் தொல்லை இருக்கத்தான் செய்யும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும்.

பணியாளர்கள்: மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் விரும்பிய இடத்துக்கு டிரான்ஸ்பர் பெறுவர். திறமை பளிச்சிடும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். வேலையோடு பக்கத் தொழில் செய்பவர்கள் நல்ல வளத்தோடு இருப்பர்.

கலைஞர்கள்: வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும்.

அரசியல்வாதிகள்: பதவியும், பணமும் கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தோல்வி இனி இருக்காது. பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிறப்பைக் காணலாம். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றிபெறவும் வாய்ப்பு உண்டு. விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவும் சிலர் வாய்ப்பு பெறலாம்.

விவசாயிகள்: நல்ல வளத்தை காணலாம். புதிய சொத்து வாங்கலாம். எள், பனை பொருள், நெல், சோளம் மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

பெண்கள்: மகிழும் வகையிலான பலனைக் காண்பர். வருகின்ற சிரமங்களை சாதுரியத்தால் எளிதில் முறியடித்து வெற்றி காண்பீர்கள். மதிப்பு-மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.கணவரின் அன்பு கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

பரிகாரப்பாடல்!

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான்- விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.

சனியும், கேதுவும் சிறப்பாக காணப்படவில்லை. அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஊனமுற்ற ஏழைகளுக்கு இயன்றதை தானம் செய்யுங்கள். விநாயகருக்கு திங்கள் தோறும் அருகம்புல் மாலை ‹ட்டுங்கள். கேதுவின் அனுக்கிரகம் பெறும் வகையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது நன்மையைக் கொடுக்கும்.




ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:20 am


தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)

100/50 தீயவர்களிடம் சிக்காதீர்!

காரியம் சாதிக்கும் திறனுள்ள தனுசு ராசி அன்பர்களே!

இதுவரை 11ம் இடமான துலாமில் இருந்து பொருளாதார வளத்தையும், பெண்களால் அனுகூலத்தையும் காடுத்து வந்த ராகு, 10-ம் இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள் இழப்பையும், சிறு சிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார். கேது இதுவரை மேஷத்தில் அதாவது 5-ம் இடத்தில் இருந்தார். அங்கு இருந்த அவர் உடல் நலப்பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்னைகளையும் தந்து இருக்கலாம். இப்போது கேது 4-ம் இடமான மீனத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்னை வரும்.ஆனால் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். உங்கள் கவுரவத்திற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் நடந்து கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. பொறுமையே இந்தக் காலத்தைக் கடக்க உதவும். டிசம்பருக்குப் பிறகு பொருளாதார இழப்பு வரலாம். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். கேதுவால் சிற்சில உடல் உபாதைகள் வரலாம். ஆனால், அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது.

தொழில், வியாபாரம்: பணம் விரயம் ஆகலாம். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கலாம். அதேபோல் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். எனவே அந்த வகையில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். பெண்கள் வகையிலும் பிரச்னை வரலாம்.

பணியாளர்கள்: வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். உங்கள் செல்வாக்குக்கு எந்த குறையும் இருக்காது. சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். சோம்பல் அல்லது உடல்நிலை காரணமாக வேலையில் அவ்வப்போது சிரமங்களைச் சந்திக்கலாம். அவர்கள் குருவுக்கு அர்ச்சனை செய்து வந்தால் இந்த சிரமங்களில் இருந்து விடுதலை பெற்று விடலாம்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களை முயற்சியின் பேரில் பெறலாம். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு கிடைக்காமல் போகலாம்.அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். அனாவசியமாக எந்த துறையிலும் ஈடுபட வேண்டாம்.

மாணவர்கள்: தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண முடியும். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே, இந்த ராசி பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கடுமையாகக் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயம்: அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். சிலருக்கு பாதகமான தீர்ப்பு வரலாம். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரனிடம் சமரசமாக போகலாம் என்ற நிலையை கையாள்வதன் மூலம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு விடலாம்.

பெண்கள்: குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியிருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கையில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். ஆடம்பர செலவைக் குறைத்துக் கொள்ளவும்.

பரிகாரப்பாடல்!

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடி படுதமருகங்கை தரித்ததோர் கோலகால பைரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே.

ராகுவும், கேதுவும் சாதகமற்ற நிலையில் உள்ளதால், காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடும், பைரவர் வழிபாடும் தடைகளை கடந்து உங்களை முன்னேற்றும். ஏழைகளுக்கு நீலம் மற்றும் பல வண்ணம் நிற புத்தாடைகளைத் தானம் செய்யுங்கள். பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்.




ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 1:21 am


மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

100/80 ஆன்மிக யோகம்!

சமுதாயத்தில் மதிப்பு மிக்க மகர ராசி அன்பர்களே!

இதுவரை இந்த 2 கிரகங்களும் திருப்தியற்ற நிலையில்தான் இருந்தன. அதாவது ராகு 10-ம் இடமான துலாமில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உங்கள் திறமை மற்றும் புகழில் பங்கத்தையும் கொடுத்திருப்பார். இப்போது 9-ம் இடமான கன்னி ராசிக்கு மாறுவார். இது சிறப்பான இடம் இல்லை என்றாலும், பலாபலன்கள் மாறுபடும். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. ஆனால், செயல்பாடுகளில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். கேது 4-ம் வீடான மேஷத்தில் இருந்து உடல் உபாதைகளையும், பிள்ளைகளால் தொல்லைகளையும் தந்திருக்கலாம். இந்தபிரச்னைகளுக்கு எல்லாம் விடைகொடுக்கும் காலம். அதேநேரம், கேது 3-ம் இடமான மீனத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறைஅருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். கேதுவின் பலத்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சிறப்பாகவும் அமையும். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். பிள்ளைகள் நலம் மேம்படும்.குடும்பத்தில் குதுõகலம் இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பூசல்கள், கருத்துவேறுபாடு மறையும். கோயில்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையும் கிடைக்கப் பெறுவீர்கள். புத்தாடை அணிகலன்கள் வந்து சேரும். சிலர் தொழில் காரணமாக குடும்பத்தையே வேறு ஊருக்கு மாற்ற வேண்டி வரலாம்.

தொழில், வியாபாரம்: வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டியாளர்களால் இடையூறு வரத்தான் செய்யும். அவர்கள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். குறிப்பாக கம்ப்யூட்டர், அச்சுத்துறை, பூஜைபொருட்கள், ஆன்மிகப்புத்தகங்கள் தொழில் சிறந்து விளங்கும்.

பணியாளர்கள்: தடைபட்டு வந்த பதவி உயர்வு இனி கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

கலைஞர்கள்: சிறப்பான பலனைக் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு போன்றவை வரும். நல்ல பணப்புழக்கமும் இருக்கும்.

அரசியல்வாதிகள்: முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.

மாணவர்கள்: நல்ல அனுகூலத்தைக் காணலாம். கடந்த ஆண்டு படித்த படிப்புக்கான முழு பலன்களும் இப்போது கிடைக்கும். நல்ல மதிப்பெண் எடுக்கலாம். போட்டிகளில் வெற்றி பெறலாம்.

விவசாயிகள்: நெல், கோதுமை, பழவகைகள், கடலை பயிர்களில் அதிக வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்புகள் சாதகமாக அமையும்.

பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை உயரும்.

பரிகாரப் பாடல்!

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

கால பைரவர், துர்க்கை வழிபாடு உங்களை மேம்படுத்தும். காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம், சங்கரன்கோவில் சென்று வாருங்கள். விநாயகருக்கு திங்கள் கிழமை தோறும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவதன் மூலம் மனதைரியம் அதிகரிக்கும். திருநாகேஸ்வரம் ராகுவுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள்.




ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக