புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
441 Posts - 47%
heezulia
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%
prajai
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_m10கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 5:44 pm

இந்திய வீடுகளும் சரி; அரசியலும் சரி... விளையாட்டைப் புறக்கணிக்கவே செய்கின்றன

வேடிக்கையாக இல்லை இது! உலகக் கோப்பைப் போட்டியில் இந்த முறை களம் இறங்கும் 32 நாடுகளில் ஒன்றான போஸ்னியாவின் மக்கள்தொகை வெறும் 38.71 லட்சம். அதாவது, சென்னை மாவட்டத்தைவிடக் குறைவு (சென்னை மக்கள்தொகை 46.46 லட்சம்). இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், இங்கு 312 போஸ்னியாக்கள் இருக்கின்றன. உலகக் கால்பந்து சம்மேளனத்தின் தகுதிப் பட்டியலைப் பார்த்தாலோ 154-வது இடத்தில் இருக்கிறோம்.

இந்தியக் கால்பந்தாட்டத்தின் வயது

உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் கால்பந்து வரலாறு நீண்டது, நெடியது. 19-வது நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பிரிட்டிஷ் ராணுவ வீரர்களிடமிருந்து இந்தியர்களிடம் கால்மாறத் தொடங்கிவிட்டது பந்து. உலகின் மிகப் பழைய கால்பந்து சங்கங்களின் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. சிம்லாவில் 1888-ல் கால்பந்தாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட டியூரன்ட் கோப்பை உலகின் மிகப் பழைய கோப்பைகளில் மூன்றாவது. 1898-ல் உருவாக்கப்பட்ட கல்கத்தா கால்பந்துக் கழகம் ஆசியாவிலேயே பழமையானது மட்டும் அல்ல; உலகின் பழமையான கால்பந்துக் கழகங்களிலும் ஒன்று. 1893-ல் இந்திய கால்பந்துக் கழகம் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் முதன்முதலில் பங்கேற்ற ஆசிய அணி இந்திய அணி. ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரிக் அடித்த முதல் ஆசியர் நெவில் டிசௌசா இந்தியர்.

இந்தியக் கால்பந்தின் பொற்காலம்

1951 முதல் 1962 வரையிலான காலத்தை இந்தியக் கால்பந்தாட்டத்தின் பொற்காலம் என்றுகூடச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் சையது அப்துல் ரஹீமின் கால்வண்ணத்தில் ஆசியாவிலேயே மிகச் சிறந்த அணியாகத் திகழ்ந்தது இந்தியா. 1951-ல் நடந்த ஆசியப் போட்டிகளில் இந்திய அணி சாம்பியன். தொடர்ந்து, கொழும்புப் போட்டிகளிலும் வெற்றி. 1952 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பு. தொடர்ந்து 1953 பர்மா, 1954 கொல்கத்தா, 1955 டாக்கா போட்டிகளில் வெற்றி. 1954-ல் மணிலாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இரண்டாவது இடம். 1956 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடம். இடையில், 1958-ல் ஆசியப் போட்டியில் நான்காவது இடம், 1960 ஆசியக் கோப்பைப் போட்டியில் தகுதிச் சுற்றில் தோல்வி என்று பின்னடைவுகளைச் சந்தித்தாலும், 1962 ஆசியப் போட்டியில் மீண்டும் வெற்றி. அதன் பின்னரோ, அப்துல் ரஹீமின் மறைவு இந்தியக் கால்பந்தாட்டத்தைச் சுருட்டியது.

விலகி நிற்பதின் துயரம்

கால்பந்தாட்டம் என்றில்லை, பெரும்பாலான விளையாட்டுகளில் நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து புதைவையே சந்தித்திருக்கிறோம். ஹாக்கியில் நம் நிலை என்ன?

ஒருகாலத்தில் ஹாக்கி ஆட்டத்தின் முடிசூடா சக்ரவர்த்தி தயான் சந்த். 1928, 1932, 1936 என்று மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்குத் தங்கம் வென்று தந்தவர். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் தயான் சந்த் ஆட்டத்தைப் பார்த்து மிரண்ட ஹிட்லர் தன் நாட்டுக்கே வருமாறு அழைத்தார். ஹாலந்தில் அவருடைய ஹாக்கி மட்டையில் பந்தை ஈர்க்கும் வஸ்து ஏதும் பதிக்கப்பட்டு இருக்கிறதா என்றெல்லாம் உடைத்துப் பார்த்தார்கள். ஆஸ்திரியாவில் அவருக்குச் சிலையே வைத்தார்கள்... நான்கு கைகள், நான்கு ஹாக்கி மட்டைகளோடு. ஒலிம்பிக்கில் எட்டு தங்கங்களை ஹாக்கியில் வென்றோம். 1980-க்குப் பின் என்னவானது?

இந்தியாவின் இன்றைய விளையாட்டுச் சாதனை யாளர்களாக அறியப்படும் பலர் அடிப்படையில் தங்கள் சொந்த பலத்தில் (பண பலத்தையும் சேர்த்துதான்) முன்னே வந்தவர்கள். விஸ்வநாதன் ஆனந்த், கீத் சேத்தி, லியாண்டர் பயஸ், அபிநவ் பிந்த்ரா எல்லோர் கதையும் இதுதான்.

விளையாட்டு என்பது ஒரு தனிக் கலை. நம்முடைய வீடுகளும் பெற்றோரும் அதை ஒரு பகுதிநேரப் பொழுதுபோக்காகவே புரிந்துவைத்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக நம்முடைய பள்ளிக்கூடங்களும் விளையாட்டிலிருந்து குழந்தைகளை விலக்கியே வைக்கின்றன. அரசியல்வாதிகளோ வெட்கமே இல்லாமல், அங்கும் பணம் பண்ணத் திரிகிறார்கள். ஊடகங்களுக்கு கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகள் கண்ணில் தெரிவதில்லை.

சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் திட்டமிடும் செய்திகள் வெளியான 1990-ல் இந்திய அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சம்போல விளையாட்டு ஆர்வம் வந்தது. அந்தோ பரிதாபம்... அந்த ஆர்வமும் போட்டிக்குப் போட்டிகளை நடத்தும் ஆர்வமாக மாற வேண்டுமா? காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் போட்டியிட்டோம். 1991-ல் சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கோதாவில் இறங்கியதும், குறைந்தபட்சம் காமன்வெல்த் போட்டிகளையாவது நடத்த வேண்டும் என்பது நமக்கு வெறியாக மாறியது. 2003-ல் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்து, அப்புறம் சாவதானமாக 2007-ல் நிதி ஒதுக்கீடு செய்தபோது, போட்டியை நடத்துவதற்கான திட்டச்செலவு ரூ. 1,200 கோடி ரூ. 40,000 கோடியாக மாறியது.

அப்புறம் நடந்த கதைகள் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். “ரூ. 960 கோடியில் புனரமைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கக் கட்டுமானப் பணி பல் இளிக்கிறது”, “குர்காவ்னிலுள்ள கடார்பூர் விளையாட்டரங்க மேற்கூரை மழையில் இடிந்து விழுந்தது” என்று தினம்தினம் படித்த செய்திகள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றனதானே?

பெய்ஜிங் அதிசயம்

பெய்ஜிங்கில் 2008-ல் நடந்தது உண்மையிலேயே அதிசயம். 1936-க்குப் பிறகு, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது என்றால், அது 2008-ல்தான். கற்பனைசெய்து பாருங்கள்: 100 பதக்கங்கள்; அவற்றில் 51 தங்கம். எவ்வளவு மகத்தான சாதனை!

ஆனால், இந்தச் சாதனை சாதாரணமாக வந்ததல்ல; நீண்ட காலத் திட்டமிடுதலும் அசாத்தியமான உழைப்பும் சீனர்களின் இந்த வெற்றிக்குப் பின் இருந்தது. சீனா முழுவதும் 6.5 லட்சம் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. 45 ஆயிரம் விளையாட்டுப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. முழுத் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் 25 ஆயிரம் பேர் அங்கு பணியில் இறக்கிவிடப்பட்டனர். தன்னுடைய ஆர்வத்துக்கேற்ற விளையாட்டை தொழில்முறையாகக் கற்பதற்கான வாய்ப்பை சீனக் குழந்தைகளுக்கு ஐந்து வயதிலேயே அந்நாட்டு அரசு கொடுக்க ஆரம்பித்தது. இவையெல்லாம் பல பத்தாண்டுகளாக அந்நாடு தீட்டிய திட்டத்தின், உழைப்பின் வெளிப்பாடுகள்.

நம்முடைய அரசும் திட்டமிடுகிறது; பதக்கங்களைக் குவிக்க. எப்படி என்று பாருங்கள். 2009-ல் விளையாட்டுக்காக இந்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 3,706 கோடி. 2010-ல் இது ரூ. 3,565 கோடியாகக் குறைந்தது. 2013-லோ ரூ. 1,219 கோடியாகச் சுருங்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்கிற அரசு சாராத அமைப்பின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 2,500 கோடி என்கிற தொகையுடன் இதை ஒப்பிட்டுப்பாருங்கள்… நம்முடைய அரசியல்வாதிகள் எவ்வளவு நல்லவர்கள்!

இந்தியாவின் மோசமான கிராமங்களில் ஒன்றிலிருந்து, மிக சாதாரணமான குடும்பம் ஒன்றிலிருந்து சர்வதேசத் தடகள வீராங்கனையாக உருவெடுத்த சாந்தியின் கதை பின்னாளில் என்னவானது என்று யாருக்கேனும் தெரியுமா? ஒருநாள் அவர் செங்கல் சூளையில் வேலைசெய்துகொண்டிருந்த படம் பத்திரிகைகளில் வெளியானதும் அரசாங்கம் போனால் போகிறது என்று அவருக்குத் தடகளப் பயிற்சியாளர் வேலை கொடுத்தது. பிறகு, ஒருநாள் தன் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், சொற்ப சம்பளம் ஐந்தாயிரம் போதவில்லை என்று கூறினார். பின் ஒருநாள் பல முறை முறையிட்டும் யாரும் அவர் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிலையில் அந்தத் தாற்காலிக வேலைலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று நண்பர்களிடம் விசாரித்தேன். பயிற்சியாளர் பணிக்கு விளையாட்டு மட்டும் தெரிந்தால் போதாது; படிப்பும் வேண்டும் என்பதால் இப்போது பிழைப்புக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். இந்த நாடு ஏன் வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது என்று புரிகிறதா?

-சமஸ் @ தி இந்து

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Fri Jun 13, 2014 6:30 pm

பயிற்சியாளர் பணிக்கு படிப்பு மட்டும் போதும். தற்போது விளையாட்டு வீரர்கள் வேலை கிடைக்காத காரணத்தால் பயிற்சியாளர் பணிக்கு படிக்க போகிறார்கள். அவர்களுக்கும் விளையாட்டு திறமையின் அடிப்படையில் வேலை கிடைப்பது இல்லை. நான் கல்லூரியில் படிக்கும் நேரத்தில் 1979 இல் தேசிய ஜூனியர் பிரிவில் உயரம் தாண்டலில் தங்கபதக்கம் பெற்றேன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் என்னக்கு சென்னை துறைமுகத்தில்  வேலை கிடைத்தது. அதனால் எனது பெற்றோர்களுக்கு பாரம் இல்லாமல் என்னது பயிற்சியை தொடர முடிந்தது. 1984 வரை இந்திய அளவில் முதன்மை பெற்றிருந்தேன். அனால் இப்போது உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை. அப்போது இருந்த அரசு வேலை வாய்ப்பும் இப்போது இல்லை.  சில நேரம் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும் அரசு நிறுவனங்களில் வேலை கிடைபதில்லை.   தனியார் நிறுவனங்களும் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்தவத்தை மற்ற விளையாட்டிற்கு கொடுபதில்லை. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை விளையாட்டு பயிற்சிக்கு அனுப்புவதில்லை. அதோடு நமது பள்ளிகளும் மார்க் ஒன்றே முக்கியம் என்று பிள்ளைகளை மார்க் வாங்கும் இயந்திரமாக மாற்றிவிட்டன. இன்னும் சொல்லிகொண்டே போகலாம். நாம் விளையாட்டை விளையாட்டாக பார்க்கிறோம். எனவே நம் வேடிக்கை பார்க்கும் நாடாகவே  இருக்கிறோம். எப்போது விளையாட்டிற்கும் நமது அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறதோ அன்று நாமும் உலக அரங்கில் நிமிர்ந்து உலா வரமுடியும்.
prabatneb
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் prabatneb

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jun 13, 2014 6:47 pm

prabatneb wrote:பயிற்சியாளர் பணிக்கு படிப்பு மட்டும் போதும். தற்போது விளையாட்டு வீரர்கள் வேலை கிடைக்காத காரணத்தால் பயிற்சியாளர் பணிக்கு படிக்க போகிறார்கள். அவர்களுக்கும் விளையாட்டு திறமையின் அடிப்படையில் வேலை கிடைப்பது இல்லை. நான் கல்லூரியில் படிக்கும் நேரத்தில் 1979 இல் தேசிய ஜூனியர் பிரிவில் உயரம் தாண்டலில் தங்கபதக்கம் பெற்றேன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் என்னக்கு சென்னை துறைமுகத்தில்  வேலை கிடைத்தது. அதனால் எனது பெற்றோர்களுக்கு பாரம் இல்லாமல் என்னது பயிற்சியை தொடர முடிந்தது. 1984 வரை இந்திய அளவில் முதன்மை பெற்றிருந்தேன். அனால் இப்போது உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை. அப்போது இருந்த அரசு வேலை வாய்ப்பும் இப்போது இல்லை.  சில நேரம் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும் அரசு நிறுவனங்களில் வேலை கிடைபதில்லை.   தனியார் நிறுவனங்களும் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்தவத்தை மற்ற விளையாட்டிற்கு கொடுபதில்லை. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை விளையாட்டு பயிற்சிக்கு அனுப்புவதில்லை. அதோடு நமது பள்ளிகளும் மார்க் ஒன்றே முக்கியம் என்று பிள்ளைகளை மார்க் வாங்கும் இயந்திரமாக மாற்றிவிட்டன. இன்னும் சொல்லிகொண்டே போகலாம். நாம் விளையாட்டை விளையாட்டாக பார்க்கிறோம். எனவே நம் வேடிக்கை பார்க்கும் நாடாகவே  இருக்கிறோம். எப்போது விளையாட்டிற்கும் நமது அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறதோ அன்று நாமும் உலக அரங்கில் நிமிர்ந்து உலா வரமுடியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1068953

பணம் என்ற பாகுபாடு பாராமல் வீரர்கள் ஏதாவது ஒரு வகையில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.....இவ்வாறு நிகழ்ந்தால் பெற்றோர்களும் இதன் பின் நிற்பார்கள்....வீரர்களும் உத்வேகம் பெறுவார்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 14, 2014 11:26 am

யார் சொன்னது இந்தியா வேடிக்கை பார்க்கிறது என்று

கிரிக்கெட் ஆனாலும் சரி எந்த விளையாட்டு ஆனாலும் சரி

அதில் பெட் கட்டுவதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. எத்தனை ரூபாய் என்று கேட்காதீர்கள் எத்தனை கோடி ரூபாய் என்றளவிற்கு சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது.......

இப்படி இருக்கும் பட்சத்தில் கால்பந்தை வேடிக்கை பார்ப்பதை கூட பணமாக்கி விடுகிறார்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 15, 2014 11:38 am

அநியாயம் எதிர்ப்பு 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 15, 2014 11:54 am

ஊழல் நிறைந்த இந்தயாவில் இனி வரும் காலங்களில்.
எல்லா விளையாட்டிலும் வெளியில் நின்று தான்
வேடிக்கை பார்க்கணும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 15, 2014 5:32 pm

அருண் wrote:ஊழல் நிறைந்த இந்தயாவில் இனி வரும் காலங்களில்.
எல்லா விளையாட்டிலும் வெளியில் நின்று தான்
வேடிக்கை பார்க்கணும்.
மேற்கோள் செய்த பதிவு: 1069143

எனது கருத்தும் இது தான்

கால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Mகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Uகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Tகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Hகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Uகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Mகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Oகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Hகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Aகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Mகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? Eகால்பந்து: இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக