புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
5 Posts - 3%
prajai
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
2 Posts - 1%
சிவா
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
441 Posts - 47%
heezulia
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
30 Posts - 3%
prajai
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 04, 2014 12:09 pm

First topic message reminder :

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம்
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...

பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!

 போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!

 எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.

 போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன. 

 2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.

 போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:

ஐரோப்பா (13):

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.

தென்அமெரிக்கா (6):

பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.

வடக்கு, மத்திய அமெரிக்கா (4).

கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.

ஆப்பிரிக்கா (5):

அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.

ஆசியா (4):

ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 10:08 pm

போர்ச்சுக்கலுக்கு மேலும் ஒரு துரதிஷ்டம்! PEPE -க்கு சிகப்பு எச்சரிக்கை அட்டை வழங்கி ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 10:19 pm

முதல் பகுதி ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட 2 நிமிடங்களில் ஜெர்மன் மேலும் ஒரு கோல் அடித்து 3:0 என்று முன்னிலை பெற்றுள்ளது!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 10421419_689178154488618_2926731764301824273_n

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 11:08 pm

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 0srumBZqQKtHaRtuymZl+60x60_goal ஜெர்மனியின் அதிரடி தொடர்கிறது! மேலும் ஒரு கோல்!

ஜெர்மனி 4 : 0 போர்ச்சுக்கல்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 11:23 pm

போர்ச்சுகல் தான் வெற்றிபெறும் என்று உலகமே ஆருடம் கூறியது. ஆனால் ஜெர்மனி அந்த ஆருடத்தை தவிடு பொடியாக்கிவிட்டது! ஆட்ட முடிவில் ஜெர்மன் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 11:58 pm

ரொனால்டோ ஏமாற்றம்; தாமஸ் முல்லர் ஹேட்ரிக்; ஜெர்மனி அதிரடி வெற்றி

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் இன்று ஜெர்மனி அணி போர்ச்சுக்கல் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஹேட்ரிக் கோல்களை அடித்தார்.

தொடக்கத்தில் ஜெர்மனியின் ஆதிக்கம் இருந்தது. ஜெர்மன் வரிசையில் தாமஸ் முல்லர் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளார். போர்ச்சுக்கல் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்போதைக்கு இடது பக்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.

2வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் போடெங் அருமையாக பந்தை தாமஸ் முல்லரிடம் அளிக்கிறார். பெபே அதனை தலையால் முட்டி வெளியே தள்ள ஜெர்மனிக்கு த்ரோ வாய்ப்பு கிடைத்தது. பிறகு கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் ஒன்றும் பயனில்லை.

3வது நிமிடத்திலும் ஜெர்மனி வீரர் குரூஸ் போர்ச்சுக்கலிடமிருந்து பந்தை பிடுங்கிச் சென்று முன்னேறினார். பந்து இடதுபுறத்தில் இருந்த மரியோ கோயெட்சேயிடம் அடிக்கப்படுகிறது. அவர் போர்ச்சுகல் வீரர் ஜோ பெரைராவை ஏமாற்றி பந்தை அடிக்க முற்படும்போது போர்ச்சுகல் தடுப்பு வீரர் பந்தை தன் வசம் கொண்டு வந்தார்.

4வது நிமிடத்தில் இடது புறம் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியே வந்தார். அவர் ஒரு அருமையான பாஸை சக வீரர் ஹியூகோ அல்மெய்டாவுக்கு அடிக்க அவரோ அபாரமாக எடுத்துச் சென்று முன்னேறினார் ஜெர்மனி பெனால்டி அருகே வந்து கோலை நோக்கி ஒரு ஷாட்டை அடிக்க அதில் சக்தி இல்லை அதனை ஜெர்மன் கோல் கீப்பர் மேனுயெல் நியூயர் எளிதாகப் பிடித்து விடுகிறார்.

6வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு ஷாட் வாய்ப்பு கிடைத்தது. அதனை கோல் கீப்பர் அடிக்க அந்தப் பந்தை போர்ச்சுகல் வீரர் ஃபேபியோ கோயெண்ட்ராவோ வென்று இடது புறமாக எடுத்துச் சென்று ரொனால்டோவுக்கு அடிக்கிறார். ரொனால்டோ விறுவிறுவென பந்தை எடுத்துச் சென்று 30 யார்டிலிருந்து ஜெர்மன் கோல் நோக்கி அடிக்க பந்து மேலேயும், வைடாகவும் சென்றது. கோல் முயற்சி வீண்.8வது நிமிடத்திலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ விறுவிறுவென முன்னேறி கோலை நோக்கி அடிக்க நேராக ஜெர்மனி கோல் கீப்பர் கைகளுக்குச் செல்கிறது. அவர் பாஸ் செய்திருக்கவேண்டும் ஆனால் செய்யவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் பந்தை எடுத்துச் சென்றிருக்கலாம்.

இப்போது இருதரப்பிலும் ஆட்டமும் உணர்வும் சூடு பிடிக்க 12வது நிமிடத்தில் ஜெர்மனி கோலை நோக்கி முன்னேற போர்ச்சுகல் வீரர் தவறிழைக்கிறார். அதாவது அன்று குரேஷியா செய்த அதே தவறுதான். ஜெர்மனி வீர்ர் மரியோ கொயெட்சே பந்தை எடுத்து கொண்டு பெனால்டி பகுதியில் முன்னேற போர்ச்சுகல் வீரர் ஜோ பெரைரா அவரை முன்னேற விடாமல் தள்ளுகிறார். உடனே பெனால்டி கிக் என்ற விசில் ஊதப்படுகிறது. மேலும் நடுவர் ஜோ பெரைராவுக்கு மஞ்சள் அட்டைக் காண்பித்து எச்சரிக்க நடுவரைச் சுற்றி போர்ச்சுக்கல் வீரர்கள் மொய்த்து வாக்குவாதம் புரிந்தனர்.

பெனால்டி கிக்கை தாமஸ் முல்லர் எடுத்து கொண்டார். இடது புற மூலையில் கோல் வலைக்குள் செலுத்துகிறார் ஜெர்மனி 1-0 என்று முன்னிலை வகித்தது. இன்னும் கறாரான நடுவராக இருந்திருந்தால் போர்ச்சுகல் வீரர் ஜோ பெரைராவுக்கு சிகப்பு அட்டைக் காண்பித்து வெளியேற்றிருப்பார்.

ஆனால் அதுதான் பிறகு நடந்தது. அதற்கு முன்னதாக ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைக்கிறது. கார்னர் ஷாட் அடித்த ஜெர்மனி வீரர் மிகத் துல்லியமாக அதனை கோலுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஹம்மல்ஸ் அருகே தூக்கி அடிக்க அவர் போர்ச்சுகல் வீரர் பெபேயைக் காட்டிலும் மேலும் எம்பி மிகத் துல்லியமாக் தலையால் முட்ட பந்து கோல் வலைக்குள் சென்றது. கோல் கீப்பர் ஒன்றும் செய்ய முடியாது. அவர் தலைக்கு மேல் கோலுக்குள் பந்து செல்வதை இயலாமையுடன் அவர் பார்க்க நேரிட்டது. ஜெர்மனி 2-0 என்று முன்னிலை வகித்தது.

அதன் பிறகுதான் 37வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விரும்பத் தகாத செயலும் கூட. ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஒரு பந்தை எடுத்துக் கொண்டு வேகமாக போர்ச்சுகல் கோல் நோக்கி முன்னேற இந்த முறை பெபே அவரைப் பிடித்துத் தள்ளியே விடுகிறார். அது மட்டுமல்ல பல்லில் அடிபட்டது போல் முல்லர் தரையில் உட்கார்ந்து முகவாயைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது பெபே அவர் அருகில் சென்று அவர் தலையோடு தன் தலையைக் கொண்டு போய் அச்சுறுத்துகிறார். இது நடுவர் கவனத்திற்கு வர உடனே ரெட் கார்ட் காண்பிக்கப்பட்டு பெபே வெளியேற்றப்படுகிறார்.

ஆனால் உண்மையில் முல்லர் மார்பைப் பிடித்தே தள்ளினார் பெபே, முல்லர் கொஞ்சம் அதிகமாகவே நடிக்க அதில் பெபே கடுப்பாகியிருக்கலாம். அதனால் பக்கத்தில் சென்று தன் தலையால் அவர் தலையை முட்டினாரா அல்லது பதித்தாரா என்று தெரியவில்லை.

10 வீரர்களாகக் குறைந்து போன போர்ச்சுக்கல் ஒரு பலமான டிஃபெண்டரை இழந்த நிலையில் தாமஸ் முல்லர் தனது 2வது கோலை அடித்து ஜெர்மனிக்கு 3-0 என்று இடைவேளையின் போது முன்னிலை பெற்றுத் தந்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையான ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப்போட்டபடி ஓய்வறைக்குச் செல்கிறார்.இடைவேளைக்குப் பிறகு போர்ச்சுகல் உற்சாகமிழந்தே காணப்பட்டது. அவ்வப்போது கார்னர் வாய்ப்புகள் கிடைத்தாலும் கோல் வரவேயில்லை. ரொனால்டோவே ஒரு ப்ரீ கிக் மற்றும் கார்னர் ஷாட்டில் சொதப்பினார். ஜெர்மனி தொடர்ந்து போர்ச்சுகல் கோல் கீப்பருக்கு நெருக்கடி கொடுத்தது.

ஆட்டம் மீண்டும் 68வது நிமிடத்திலிருந்து சூடு பிடித்தது. அந்த நிமிடம் கிடைத்த வாய்ப்பை ஜெர்மனி விரயம் செய்தது. பிறகு 70வது நிமிடத்தில் 4வது கோல் அடிக்க மிக அருகில் வந்து பயனில்லாமல் போனது. ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் 4வது கோல் உண்டு என்றே தெரிந்தது.

இந்த நிலையில் 78வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஆந்த்ரே ஷர்லி வலது புறத்திலிருந்து போர்ச்சுகல் கோல் அருகே நின்றிருந்த தாமஸ் முல்லருக்குத் துல்லியமாக ஒரு பாஸை அடிக்க அதனை முல்லர் கோலுக்கு அருகில் நின்று கொண்டு கோலாக மாற்றுகிறார். ஜெர்மனி 4-0 என்று முன்னிலை பெற்றது. தாமஸ் முல்லர் இந்த உலகக் கோப்பையின் முதல் ஹேட்ரிக்கை அடித்து சாதனை புரிந்துள்ளார்.

அவரது 50வது போட்டியாகும் இது. இதில் அவர் தனது 20வது கோலை அடித்தார். 85வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு ஒர் ப்ரீகிக் கிடைக்கிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ சொத்தை ஷாட்டை நேராக ஜெர்மனி வீரர் காலுக்கே அடிக்கிறார். பிறகு 90 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஃப்ரீ கிக் கிடைக்கிறது ரொனால்டோ இந்த முறை சக்தி வாய்ந்த ஒரு ஷாட்டை ஜெர்மன் கோல் நோக்கி அடிக்க அதனை ஜெர்மனி கோல் கீப்பர் அபாரமாகத் தடுக்கிறார்.

இறுதி விசில் ஊதப்படுகிறது. ஜெர்மனி 4-0 என்று வெற்றி பெற்று 3 புள்ளிகளை அள்ளியது. தாமஸ் முல்லரின் முதல் ஹேட்ரிக் இன்றைய சிறப்பம்சமாகும்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:45 am

மிரட்டுமா நெய்மர்–ஆஸ்கர் கூட்டணி: பிரேசில்–மெக்சிகோ இன்று மோதல்

போர்டலெஜா: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், பிரேசில், மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிரேசில் அணியின் வெற்றிக்கு நெய்மர் மீண்டும் கைகொடுக்கலாம்.

பிரேசிலில், 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயின், அர்ஜென்டினா உள்ளிட்ட 32 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.

போர்டலெஜாவில், இன்று நடக்கும் (ஜூன் 18, இரவு 12.30 மணி) ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், சர்வதேச தரவரிசையில் ‘நம்பர்–3’ இடத்தில் உள்ள பிரேசில் அணி, 20வது இடத்தில் உள்ள மெக்சிகோவை சந்திக்கிறது.

நெய்மர் நம்பிக்கை: ஜப்பான் ‘ரெப்ரி’ நிஷிமுரா வழங்கிய ‘பெனால்டி’ சர்ச்சையை கடந்து, குரோஷியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பிரேசில் அணி வென்றது. இப்போட்டியில் ‘சேம் சைடு’ கோலடித்த மார்செலோ, தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும். தசை பிடிப்பு காரணமாக வெறும் 15 நிமிடங்கள் மட்டும் பயிற்சியில் ஈடுபட்ட ஹல்க் இன்று விளையாடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. குரோஷியாவுக்கு எதிராக இரண்டு கோலடித்த நெய்மர் ‘சூப்பர் பார்மில்’ இருப்பதால், இன்றைய போட்டியிலும் கோல் மழை பொழியலாம்.

ஆஸ்கர் எதிர்பார்ப்பு: ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் கோலடித்த ஆஸ்கர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவருடன், ராமிரெஸ், கேப்டன் தியாகோ சில்வா, டேவிட் லுாயிஸ், பிரெட், டேனி ஆல்வெஸ் உள்ளிட்டோ அசத்தும் பட்சத்தில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்யலாம்.

காமரூனுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் மெக்சிகோ அணி உள்ளது. லண்டன் ஒலிம்பிக் பைனலில் (2012), பிரேசிலை வீழ்த்தி தங்கம் வென்ற மெக்சிகோ அணியில் இடம் பெற்ற 8 வீரர்கள் இன்றைய போட்டியில் விளையாடுவது பலம். காமரூனுக்கு எதிராக கோலடித்த பெரால்டா இன்றும் சாதிக்கலாம். இவரை தவிர, மிகுவல் லேயன், மார்கோ பேபியன், ஹெக்டர் ஹெர்ரேரா, ஜாவியர் ஹெர்ணான்டஸ், கார்லஸ் பெனா, கேப்டன் ரபெல் மார்குயஸ் உள்ளிட்டோர் கைகொடுத்தால், பிரேசிலை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தலாம்.

யார் ஆதிக்கம்

சர்வதேச கால்பந்து அரங்கில் பிரேசில்–மெக்சிகோ அணிகள் 38 முறை மோதின. இதில் பிரேசில் 22, மெக்சிகோ 10 போட்டிகளில் வென்றன. ஆறு போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன.

* இவ்விரு அணிகள் மோதிய 38 போட்டியில், மொத்தம் 107 கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் பிரேசில் 71, மெக்சிகோ 36 கோல்களை பதிவு செய்தன.

* உலக கோப்பை அரங்கில் இவ்விரு அணிகள் மோதிய மூன்று போட்டியிலும் (1950, 54, 62) பிரேசில் அணி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:45 am

பதிலடி வாய்ப்பு

கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக் பைனலில், மெக்சிகோ அணி 2–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது. இத்தோல்விக்கு, கடந்த ஆண்டு நடந்த கான்பெடரேஷன்ஸ் கோப்பை லீக் போட்டியில், பிரேசில் அணி 2–0 என மெக்சிகோவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. இருப்பினும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் நீண்ட நாள் கனவை தட்டிப்பறித்த மெக்சிகோவை, உலக கோப்பையில் பழிதீர்க்க பிரேசில் அணி முயற்சிக்கலாம்.

இதுகுறித்து பிரேசில் வீரர் ஆஸ்கர் கூறுகையில், ‘‘கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் பைனல் வரை வந்து தங்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முயற்சிப்போம். இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் விளையாட மாட்டோம். ஏனெனில் அவ்வாறு விளையாடும் பட்சத்தில், நெருக்கடி தான் உண்டாகும். மெக்சிகோ சிறந்த அணி என்பதால், முழுத்திறமையை வௌிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம்,’’ என்றார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:46 am

ரஷ்யாவை சமாளிக்குமா தென் கொரியா

கயபாவில் இன்று நடக்கும் (ஜூன் 18, அதிகாலை 3.30 மணி) ‘எச்’ பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 19வது இடத்தில் உள்ள ரஷ்ய அணி, 57வது இடத்தில் உள்ள தென் கொரியாவை சந்திக்கிறது. இவ்விரு அணிகள் மோதிய ஒரே ஒரு போட்டியில், ரஷ்யா 2–1 என வென்றது. கடந்த 2002ல் நடந்த உலக கோப்பையில் பங்கேற்ற ரஷ்ய அணி, 2006, 2010ல் நடந்த தொடர்களுக்கு தகுதி பெறவில்லை. 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தகுதி பெற்ற ரஷ்ய அணி வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும்.

கடந்த 2002ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறி 4வது இடம் பிடித்த தென் கொரிய அணி, இந்த இலக்கை எட்டிய முதல் ஆசிய அணி என்ற சாதனை படைத்தது. கடந்த 2010ல் ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்று வரை வந்தது. ‘எச்’ பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்ய அணிகள் இருப்பதால், ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றுக்கு தென் கொரியா தகுதி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

பெலோ ஹரிஜான்டேவில் இன்று நடக்கும் (ஜூன் 17, இரவு 9.30 மணி) மற்றொரு ‘எச்’ பிரிவு லீக் போட்டியில் பெல்ஜியம், அல்ஜீரியா அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 4:14 am

ஈரான் மற்றும் நைஜீரியா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இறுதி வரை இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 17, 2014 11:32 am

எனக்கு பிடித்த அணி  பிரேசில் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் துவக்கியுள்ளது .
வருகிற ஆட்டத்தில் பார்ப்போம் என்ன செய்கிறது என்று.

Sponsored content

PostSponsored content

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக