புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 25, 2014 5:04 pm

பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா? Tpgc5k5dRJ6ZrG3uFtaH+images(1)

தமிழக அரசு சின்னங்களில் மாநில மரமாக இடம்பெற்றிருக்கும் பனை மரம் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக வெட்டப்பட்டு அழிவின் விளிம்பினை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

மாநில அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், மாநில மலர் செங்காந்தள், மாநில பறவை மரகதப் புறா, மாநில விலங்கு வரையாடு, மாநில விளையாட்டு சடுகுடு, மாநில நாள்காட்டி திருவள்ளுவர் ஆண்டு, மாநிலத் திருநாள் தைப் பொங்கல் போன்ற மாநில சின்னங்களின் வரிசையில் மாநில மரமாக இருப்பது பனைமரம்.

மக்களின் இயல்பு நிலையை பனை, தென்னை, வாழை என்று 3 மரங்களின் இயல்புடன் ஒப்பிட்டு, திரைப் பாடல் ஒன்று விளக்குகிறது. எந்தவிதப் பயனையும் பெறாமல் பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள் பனை மரத்துக்கு ஒப்பானவர்கள் என விளக்கும் வகையில் உயர்ந்த இடத்தைப் பெற்றது பனை மரம்.

பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா? 8oIWGV9gRMSqpYd0le4k+images

கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 10 கோடி மரங்களும், தமிழகத்தில் சுமார் 5 கோடியும் இதில் தென் மாவட்டங்களில் மட்டும் 50 சதவீதம் உள்ளது. ஓராண்டில் ஒரு மரம் 150 லிட்டர் பதனீர், 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் வழங்குகிறது. இதேபோல் ஒரு மரம் 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்களைத் தருவதாகக் கணக்கிட்டுள்ளது.

1985- 86ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் 6.94 லட்சம் பேருக்கும், மாநில அளவில் 5.87 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கியது. இதில் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் அடங்குவதாக வாரியக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இத்தகைய சிறப்புடைய பனையின் நிலை குறித்து சிவகங்கை சிவப்பு நட்சத்திர மக்கள் இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாவட்டச் செயலர் எல். ஆதிமூலம் கூறியதாவது:

பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா? OoPdZqUNS8yOOsHpSVP1+palm_tamil_nadu-1024x678
கார்த்திகைத் திருநாளில் ஆண் பனையிலிருந்து பாலைகளை வெட்டி குழி தோண்டி தீ வைத்து மூட்டம் போட்டு கரியாக எடுத்து உரலில் இடித்து துணிப்பையில் வைத்து மாவலி சுற்றுவது இளைஞர்களின் வழக்கமாகும். பனை ஓலை குருத்துகளைப் பிரித்தெடுத்து, பகலில் வெயிலிலும், இரவில் பனியிலும் பதப்படுத்தும் முன்பாக ஓலையின் நடுப்பகுதியில் உள்ள ஈக்கியுடன் ஓலையைப் பிரித்தெடுத்தும் ஈக்கியில்லாத ஓலையைத் தனியாக பிரித்து எடுத்து நுட்பமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

அரைப்படி முதல் 5 படி வரை கொள்ளவு கொண்டவை கொட்டான்கள் எனவும், 7 படியிலிருந்து 11 படி வரை கொள்ளளவு உள்ள பெட்டி வகைகள் சீர்வரிசைப் பெட்டிகள் எனவும், 20 படியிலிருந்து 30 படிகள் வரை கொள்ளளவு கொண்ட நார்பெட்டிகள் அரைப்பெட்டிகள் என்றும், 5 மரக்கால் அளவுள்ள பெரிய நேர்த்தியான நார்பெட்டிகள் கடகம் என்றும், நெல் இதர தானியங்களை காற்றில் தூற்றி தரம் பிரிக்கப் பயன்படுத்துபவை தூற்றுப் பெட்டிகள் என்றும், தானியங்களை புடைத்து எடுக்க சொழகு அல்லது முறம் என்றும் சரக்குகளை கட்டி அனுப்ப பனைப் பாய்கள் என அழைத்து அதனைப் பயன்படுத்தி வந்தனர். இதைத் தவிர, மட்டையிலிருந்து நார் எடுத்து மெத்தைகள், பிரஷ்கள், ஆடைகள், கால்மிதிகள், வீட்டு அழகு சாதனப் பொருள்களும் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பதனீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் விருத்தியாகும், நோய் உண்டாக்கும் கிருமி தொற்றுகளைத் தடுக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் பனைமரம் ஏறியவர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர். சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பூமியின் வறட்சி காரணமாகவும், சீமைக் கருவேல் மரங்களின் எல்லையில்லா வளர்ச்சி காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன என்றார்.

பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா? BHN3xM6SMxTUoDqIFng9+images(2)
திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்கொள்வர் பயன் தெரிவார் -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி மனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

ஆர்வலர்களின் விருப்பம் நிறைவேறுமா? (dinamani)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 26, 2014 10:40 am

நம் நாட்டுத் தாவரங்கள் பலதும் இப்படி அழிந்து போயின..சிறந்த நட்புக்கு பனையை உவமையாக காட்டுகிறது நாலடியார்..பனையின் கம்பீரம், எந்த வறட்சியை தாங்கி நிற்கும் தன்மை,,,அதன் அனைத்து பாகங்களுமே மக்களுக்கு பயன் தருதல்...பெரிய பராமரிப்பு எதுவும் தேவையில்லை என்ற நிலையிலுமே இம்மரம் மக்களால் பெரிதாக விரும்பப்படுவதில்லை,,இது ஏனோ புரியவில்லை..

சென்னையைச் சுற்றி நான் பார்த்து விளையாடி வளர்ந்த பல பனங்காடுகள் இன்று ரியல் எஸ்டேட் ஆகிவிட்டது.... ஒரு சில வருடங்களில் காய்க்கும் தென்னையும் வந்துவிட்டது..ஆனால் பல வருடங்கள் வளர்ந்து, பல்லாண்டு பயன் தரும் பனை மரங்களை யாருமே கண்டு கொள்வதில்லையே என்று வருத்தம் எனக்குண்டு...

இக்கட்டுரை எழுதியவருக்கும் அதை பகிர்தமைக்கு நன்றி...



சதாசிவம்
பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon May 26, 2014 11:30 am

பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா? 103459460 பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா? 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon May 26, 2014 6:53 pm

.


முன்பெல்லாம் எனது ஊரில் ஏறக்குறைய எல்லோருக்குமே பனை ஏறத் தெரியும் ..ஆனால் இன்று எனது ஊரைப் பொறுத்தவரை 200 பேரில் ஒருவரால் தான் அது முடிகிறது 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும்..

ஊரில் நானும் எனது நண்பனும் மட்டுமே இப்போது பனை ஏறுவோம் ..மற்ற படி யாரும் ஏறுவது இல்லை



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 26, 2014 10:05 pm

பனை ஒரு பணப்பயிரும் கூட...ஆயினும் நாகரீக உலகம் அதை நாடிச் செல்வதே இல்லை...ஏனோ?...

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 04, 2014 9:28 am

தின மணிக்கும் சாமிக்கும் நன்றி !

பழந்தமிழர்தம் அறிவு வளர்ச்சிக்கு இந்தப் பனைதான் மூலக் காரணம் என்பது பலருக்குத் தெரியாது !

 மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed Jun 04, 2014 9:12 pm

பனை மரங்கள் பாதுகாக்கப்படுமா? 103459460 



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக