புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
426 Posts - 48%
heezulia
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
29 Posts - 3%
prajai
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_m10இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :




இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2023 4:35 pm

இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Y1khfBb
இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 IYBsTpV

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாடி வருகிறார்.

இன்று 98-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் மனதின் ஆற்றலை நீங்கள் அறிவீர்கள். அதேபோல் சமூகத்தின் சக்தியுடன் நாட்டின் சக்தி எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பார்த்தோம். புரிந்து கொண்டோம், அனுபவித்தோம்.

சர்தார்பட்டேலின் பிறந்தநாளான ஒற்றுமை நாள் அன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் தேச பக்தி பாடல்கள், தாலாட்டு மற்றும் ரங்கோலி ஆகிய போட்டிகளை பற்றி பேசினோம். இதில் நாடு முழுவதிலும் உள்ள 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியோர் ஆர்வத்துடன் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் அனுப்பப்பட்டன. தாலாட்டு போட்டியில் முதல் பரிசை கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் வென்றுள்ளார். 2-வது பரிசை அசாமின் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் கோவாலா வென்றார்.

ரங்கோலி போட்டியில் முதல் பரிசை வென்ற பஞ்சாப்பை சேர்ந்த கமல் குமார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் ஆகியோர் முழு ரங்கோலியை உருவாக்கினர். மகாராஷ்டிராவை சேர்ந்த சச்சின் நரேந்திர அவ்சாரி, கோவாவை சேர்ந்த குருதத் வந்தேகர் காந்தி ஆகியோரும் வென்றுள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த மாலதி செல்வம் பல சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் ரங்கோலியை அனுப்பி உள்ளார். தேச பக்தி பாடல் போட்டியில் ஆந்திராவை சேர்ந்த விஜயதுர்கா வெற்றி பெற்றார்.

சில நாட்களுக்கு முன் இசை மற்றும் கலைத்துறையில் வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரங்கார் வழங்கப்பட்டுள்ளது. இதில் வி.துர்கா தேவி பண்டைய நடனமான கரகாட்டத்துக்காக வென்றுள்ளார்.

கால அவகாசம் காரணமாக விருதுபெற்ற அனைவரையும் பற்றி இங்கு பேச முடியாமல் போகலாம். ஆனால் அவர்களை பற்றி கண்டிப்பாக படிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்வதில் பல்வேறு செயலிகள் பெரும் பங்குவகிக்கின்றன. அது போன்ற ஒரு செயலி இ-சஞ்சீவனி.

சுகாதாரத்துறையின் இ-சஞ்சீவனி திட்டம், டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் செயலியாக இ-சஞ்சீவனி மாறி உள்ளது.

மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பைகளை மாற்றி துணி பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பொதுமக்கள் (பை...பை) சொல்ல வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொரு வரும் உணறும் காலம் வரும்.

ஒரு நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் ஒருவகை பறவை, ஒரு உயிரினம் காப்பாற்றப்பட்டது. அது உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. இப்படி பல பாரம்பரியங்கள் நம் நாட்டில் மறைந்து மக்கள் மனதில் இருந்தும், இதயங்களில் இருந்தும் அழிந்து போயிருந்த போதிலும் இப்போது மக்கள் பங்கேற்ற சக்தியுடன் அவற்றை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹோலி பண்டிகை சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இதை உள்ளூருக்கான குரல் என்று உறுதியுடன் நாம் விழாவை கொண்டாட வேண்டும்.

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதற்கு திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2023 4:40 pm

இ-சஞ்சீவனி திட்டத்தில் 10 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி



இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Pmmodi_0081425

மனதின் குரல் நிகழ்ச்சியில், #இ-சஞ்சீவனி செயலி குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை(பிப்.26) 98 ஆவது 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை #மனதின்_குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். அதில் அந்த மாதம் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், சாமானிய மக்களின் சாதனைகள், நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்பட பல்வேறு கருத்துகளை பிரதமா் பகிா்ந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) காலை 11 மணிக்கு மனதின் அகில இந்திய வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

வேகமாக முன்னேறி வரும் நமது தேசத்தின் டிஜிட்டல் இந்தியாவின் பலம் பல இடங்களில் காணப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை வீடுகள் தோறும் அடையாளம் காணும் வகையிலே பல்வேறு செயலிகள் பெரும் பங்காற்றி வருகின்றன.

அதில், இ-சஞ்சீவனி செயலி வாயிலாக தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. அதாவது காணொளி ஆலோசனை மூலமாக, மருத்துவர்களிடம் தங்கள் நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெற முடிகிறது.

இந்தச் செயலியைப் பயன்படுத்தி, இதுவரை தொலைபேசி ஆலோசனை செய்வோரின் எண்ணிக்கை பத்து கோடி என்ற எண்ணிக்கையையும் கடந்து விட்டது.

இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தச் சாதனைக்காக, நான் மருத்துவர்கள் மற்றும் இந்த வசதியால் பயனடைந்த நோயாளிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா காலத்தில் இ-சஞ்சீவனி செயலி வாயிலாக தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டது. இது எத்தனையோ பேர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்று பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 3:13 pm

“நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்” - பிரதமர் மோடி


மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய வெபினர் உரையில் அவர் இன்று, ‘நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சுகாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “இந்தியாவில் நகரமயமாகி வருவது வேகமாக நிகழ்ந்து வரும் நிலையில், எதிர்காலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமானதாகும்.

நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களே இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். திட்டமிடல் சிறப்பானதாக இருக்கும்போது நமது நகரங்கள் காலநிலையைத் தாங்கும் வகையிலும், நீர்ப் பாதுகாப்பு மிக்கதாகவும் மாறும்.

நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வளர்ச்சி என்பது, மாநிலங்களில் நகர்ப்புற திட்டமிடுதல் சூழலை எவ்வாறு வலுப்படுத்துவது, தனியார் துறைகளில் இருக்கும் நிபுணத்துவத்தை எவ்வாறு நகர்ப்புற திட்டமிடலுக்கு பயன்படுத்துவது, நகர்ப்புற திட்டமிடலை புதிய நிலைக்கு கொண்டுசெல்ல இந்த மையங்களின் திறமைகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது ஆகிய மூன்றும் நகர்ப்புற திட்டமிடுதலின் முக்கியமான தளங்களைக் கொண்டது” என்று பிரதமர் பேசினார்.

மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகளை, திறமையாக செயல்படுத்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெறுவதற்காக இந்திய அரசு இதுபோன்ற வெபினார்களை உருவாக்கியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 4:00 pm

இந்தியாவின் UPI உலக நாடுகளை ஈர்க்கிறது: பிரதமர் மோடி


இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 951591
டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பமான UPI
உலக நாடுகளை ஈர்த்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தும் மான் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. பிரதமரின் இந்த 98வது மான் கி பாத் உரையை, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இருந்தவாறு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கேட்டனர். இந்த வானொலி உரையில் பிரதமர் மோடி பேசியதாவது: ''டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பமான UPI உலக நாடுகளை ஈர்த்து வருகிறது.

இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இடையே பணபரிவர்த்தனை நிகழ்த்துவதற்கான திட்டம் சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. தற்போது இரு நாட்டு மக்களும் தங்கள் மொபைல் போன் மூலமாகவே பணபரிவர்த்தனையில் ஈடுபட முடியும்.

இதேபோல், இ சஞ்சீவனி செயலி, இந்திய மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன்மூலம், மருத்துவ ஆலோசனைகளை மக்கள் வீட்டில் இருந்தபடியே பெற முடிகிறது. இந்த செயலி மூலம் இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொழில்நுட்பங்களை இந்தியா எவ்வாறு வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றி இருக்கிறது என்பதற்கு இவை மிகச் சிறந்த சான்றுகளாக உள்ளன.

இந்திய பொம்மைகள் சர்வதேச அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. பொம்மைகள் தொடர்பாக நான் மான் கி பாத் உரையில் பேசும்போது, சக இந்தியர்கள் அதனால் உற்சாகமடைகிறார்கள். தற்போது இந்திய பொம்மைகளுக்கான தேவை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.'' இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது மான் கி பாத் உரையில் தெரிவித்தார்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 02, 2023 3:51 pm

உலகில் அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி: இத்தாலி பிரதமர் புகழாரம்



இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 1677748298-3807
உலகில் அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி:
இத்தாலி பிரதமர் புகழாரம்


உலகின் அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் இந்திய பிரதமர் மோடி என இந்தியா வந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ள நிலையில் அவருக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு கொடுத்தார். இந்த நிலையில் ஜார்ஜியா மெலோனி செய்தியாளர்களிடம் பேசிய போது அரசியல் வர்த்தகம் மற்றும் பொருளாதார குறித்து இந்திய பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றும் உலகம் முழுவதும் அனைத்து தலைவர்களாலும் அதிகம் விரும்பப்படுபவர்களில் ஒருவர் பிரதமர் மோடி என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் உலகின் ஒரு மிகப்பெரிய தலைவராக இருக்கிறார் என்பது உண்மையாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜார்ஜியா மெலோனியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 05, 2023 4:06 pm

தமிழர்களின் கட்டடக்கலை குறித்து பிரதமர் பெருமிதம்!



இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 SQ31jpI


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 12, 2023 7:54 pm

நான் ஏழை மக்களுக்காக உழைக்கிறேன்; காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவதில் ஆர்வமாக செயல்படுகிறது: பிரதமர் மோடி


இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 PTI03_12_2023_000187A

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தனக்கு குழி தோண்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், தான் நாட்டின் வளர்ச்சிக்கும் ஏழை மக்களின் நலனுக்காவும் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களது ஆசிர்வாதம் தனக்குப் பெரிய பாதுகாப்பு அரணாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள கர்நாடகத்துக்கு சென்று பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார்.

கர்நாடகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி 6-வது முறையாக கர்நாடகத்துக்கு வந்துள்ளார்.

பெங்களூரு-மைசூரு இடையேயான 118 கிலோமீட்டர் நீளமுள்ள விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

விரைவுச் சாலையை தொடங்கி வைத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் பேசியதாவது: மாநிலத்தின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு என்பது அவசியம். இரட்டை என்ஜின் அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைத்து வரும் நிலையில் காங்கிரஸும் அதன் கூட்டணிகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எனக்கு குழி தோண்டுவது குறித்து கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். மோடி பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை கட்டமைக்கும் நேரத்தில் காங்கிரஸானது மோடிக்கு குழி தோண்டுவதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. மோடி ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் மோடிக்கு குழி தோண்டுவதில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது குறித்து கனவு கண்டு கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. மக்கள் தான் எனக்கான மிகப் பெரிய பாதுகாப்பு அரண்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மத்தியில் கூட்டணித் தலைமையிலான அரசு பலரின் ஆதரவோடு ஆட்சி செய்து வந்தது. அவர்கள் ஏழை மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனுக்காக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக செலவிட வேண்டிய கோடிக்கணக்கான பணம் காங்கிரஸ் அரசினால் கொள்ளையடிக்கப்பட்டது. காங்கிரஸ் ஒருபோதும் ஏழை மக்களின் துயரங்கள் குறித்து வருந்தியதில்லை. அவர்களது வலியும் காங்கிரஸுக்கு புரிந்ததில்லை. 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தீர்கள். எனது தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் பாடுபட்டது. ஏழை மக்களின் வலியினை எனது அரசு புரிந்து கொண்டது.

ஏழை மக்களின் துயரினைப் போக்க பாஜக அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்வில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாண்டியா நாடாளுமன்ற உறுப்பினர் சுமலதா அம்பிரீஷ் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 16, 2023 4:00 pm

சீர்காழி யோகா மாணவிக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!


இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Yoga_stud

சீர்காழியை சேர்ந்த யோகா மாணவி சுபானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு காசியில் நடைபெற்ற தமிழ் சங்கத்தில் மாணவி சுபானு அவர் தாய் சீதாவுடன் பங்கேற்று யோகாவில் சிவதாண்டவம் ஆடி அனைவரது பாராட்டைப் பெற்றார்.

இந்நிலையில், மாணவி சுபானுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து செய்தியை அனுப்பி உள்ளார்.

இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 Page

அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், காசி தமிழ் சங்கமத்தில் நீங்கள் ஆர்வத்தோடு பங்கேற்றது குறித்து உங்களது கடிதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க காசியில் தமிழர்களின் வளமையான கலாசாரம் மற்றும் பாராம்பரியத்தின் கொண்டாட்டத்தைக் காணும் இனிமையான அனுபவம் கங்கை, காவேரி போன்ற புனித நதிகளில் நீராடுவதைப் போன்றது.

ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் அதாவது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது ஒரு சொற்றொடர் மட்டுமல்ல பன்முகத் தன்மையைக் கொண்டாடும் இந்தியா போன்ற நாட்டிற்கு தனித்துவமான ஒரு வாழ்க்கை முறையாகும்.

சங்க இலக்கியத்தின் தென்மையான காலகட்டத்தில் இருந்து நவீன கால காசி தமிழ் சங்கமம் வரை, அத்தகைய உடைக்க முடியாத ஒற்றுமை இழைகளால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம்.

காசியும், தமிழகமும் பூகோள ரீதியாக ஒன்றுக்கொன்று தொலைவில் இருக்கலாம். ஆனால், அவை காலசார மற்றும் ஆன்மீக ரீதியாக, ஒற்றுமையாகப் பிணைந்துள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் உள்ள மக்கள் வெவ்வேறு மொழிகளை பேசலாம், ஆனால் அவர்களின் இதயங்கள் ஒரே மாதிரியான உணர்ச்சிகளுடன் துடிக்கின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நமது உயரிய நோக்கத்தின் வேராக இந்த உணர்வுகள் அமைந்துள்ளன.

காசி தமிழ் சங்கமத்தில் முழு மனுதுடன் பங்கேற்ற தங்களின் பங்கு நமது தனித்துவமான சமூக கலாசார ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது.

இதுபோன்ற நமது முயற்சிகள், பல்வேறு பகுதிகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் மனதில் உள்ள ஆழமான உணர்வுகளை வெளிக்கொண்டுவந்து நமது தாய் நாட்டை மெய்யாகவே தனித்துவப்படுத்தும்.

உங்களின் வாழ்த்து செய்தி காசி தமிழ் சங்கமத்தின் மீதான உங்கள் அன்பையும், பாசத்தையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளன. உங்களின் இந்த அன்பு, தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மேலும் வலுப்படுத்த, அயராது பாடுபட என்னுள் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.

காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டு காசி விசுவநாதர் ஆலயத்தில் சிவதாண்டவம் ஆடிய சுபானுக்கு, தமிழக ஆளுநர் சென்னை ஆளுநர் மாளிகைக்கு வரவேற்று ஆளுநர் மாளிகையில் சிவதாண்டவம் செய்வதற்கான வாய்ப்பையும் அளித்து பாராட்டுகளை தெரிவித்து விருந்தளித்திருந்தார்.

மாணவி சுபானு உலக அளவில் பல்வேறு யோகா போட்டியில் பங்கேற்று 250-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 16, 2023 4:09 pm

I have to go... मुझे चलते जाना है... நான் போக வேண்டும்...




நான் போக வேண்டும் என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விவரிக்கும் அனிமேஷன் விடியோ ஒன்றை பாஜக வெளியிட்டிருக்கிறது.



பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியது முதல், பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து இன்று பல திட்டங்களை மக்களுக்கு அளித்திருப்பதாக, பாஜக வெளியிட்டிருக்கும் விடியோ தெரிவிக்கிறது.

ஒரு உயரமான படிகட்டுகளை பல தடைகளைத் தாண்டி ஏறிச் சென்று கொண்டே இருப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அனிமேஷன் விடியோவுக்கு நான் போக வேண்டும் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தேசிய அரசியலுக்குள் நுழைந்தபோது, அவர் ரயிலில் தேநீர் விற்றவர் என்றும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர் என்றும், 100 தலை ராவணன் என்றும் பல விமரிசனங்களை எதிர்க்கட்சியினர் முன் வைத்தனர். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி, 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றுக் கொண்டதாக அனிமேஷனில் விளக்கப்பட்டுள்ளது.

பிறகு, அமெரிக்க அதிபரே, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் சோனியா, எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோரின் அனிமேஷன் உருவங்களும் இடம்பெற்றுள்ளன.

பிறகு, அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல அஸ்திரங்களை எய்தாலும், அதையெல்லாம் தாண்டி, நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பல நல திட்டங்களை அதாவது, தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், இலவச சிலிண்டர், ஏழைகளுக்கு மானியத்தில் கோதுமை மற்றும் பருப்பு, ஜன்தன் கணக்கு, பிரதமரின் வீட்டு வசதி திட்டம், குடிநீர் திட்டம், விவசாயிகளுக்கு மானியம் என பல திட்டங்களை அறிமுகப்படுத்தியதை அனிமேஷன் விடியோ சொல்கிறது.

ரஃபேல் ஊழல், பிபிசி ஆவணப்படம் போன்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் தாண்டி, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி பயணிப்பதாக அந்த விடியோ நிறைவு பெறுகிறது.

இந்த அனிமேஷன் விடியோவை ஆயிரக்கணக்கானோர் ரீடிவீட் செய்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் விரும்பியிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் இது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 29, 2023 9:55 pm


இந்தியா - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 9 -3-30-10
ஜனநாயகத்தின் தாய் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்


புதுடில்லி: இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பல சவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இருப்பது என்பது, ஜனநாயகத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிககோ, ஜாம்பியா அதிபர் ஹகைன்டே ஹிசிலிமா, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே மற்றும் தென் கொரிய அதிபர் யுன் சக் இணைந்து நடத்திய ஜனநாயகம் தொடர்பான மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இது ஜனநாயகத்திற்கும், உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஜனநாயகத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிறது.

தங்களது தலைவரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது, உலக நாடுகளில் வருவதற்கு முன்னரே, பழங்கால இந்தியாவில் வழக்கத்தில் இருந்துள்ளது. மகாபாரதத்தின்படி, குடிமகனின் முதல்கடமை, தங்களது தலைவரை தேர்வு செய்வது எனக்கூறப்பட்டு உள்ளது.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி நமது புனித வேதங்கள் பேசுகின்றன.

இந்தியா உண்மையில் ஜனநாயகத்தின் தாய். ஜனநாயகம் என்பது கட்டமைப்பு அல்ல. அது இந்தியாவிற்கு ஆன்மாவாகவும் உள்ளது. ஒவ்வொரு மனிதனின் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் அனைத்தும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது.

வாழ்க்கை முறை மாற்றம் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, சேமிப்பு மூலம் தண்ணீரை பாதுகாப்பது, அனைவருக்கும் சுத்தமான சமையல் எரிவாயு வழங்குவது என அனைத்து நடவடிக்கைகளும், மக்களின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக மேற்கொள்ளப்படுகிறது.

கோவிட் காலகட்டத்தில் இந்தியாவின் கடமைகளானது மக்களால் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் தடுப்பூசி கொள்கையும், 'ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம் ' என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக