புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :




செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 1:28 am

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை, பாலிவுட் நடிகர் ஆமிர்கான் சந்தித்தார்.

இந்த சந்திப்பு, வெறும் மரியாதை நிமித்தமானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் தெற்குபிளாக்கில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பிரதமர் - ஆமிர்கான் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.



செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 25, 2014 4:33 am

மோடி அரசு பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் 1½ லட்சம் பழைய கோப்புகள் அழிப்பு வரலாற்று புதையல்களும் கிடைத்தன

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதில் ஒன்று, தேங்கிக்கிடக்கும் பல ஆண்டுகால கோப்புகளை அழிப்பது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் உள்துறை அமைச்சகம் மட்டும் 1½ லட்சம் கோப்புகளை அழித்துள்ளது. வடக்கு பகுதி அலுவலகத்தில் உள்ள இரும்பு பீரோக்களில் இருந்த இந்த குப்பைகளுக்கு இடையே சில வரலாற்று புதையல்களும் கிடைத்தன.

அதில் ஒரு கோப்பு, முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு தனது நாட்டுக்கு (இங்கிலாந்து) செல்வதற்காக பயணப்படி மற்றும் அகவிலைப்படியாக ரூ.64 ஆயிரம் ஜனாதிபதி அனுமதி அளித்ததற்கான ஆவணம். இந்த ரூ.64 ஆயிரத்தின் இன்றைய மதிப்பு பல கோடி. மற்றொரு பொக்கிஷம், இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தனக்கு ஓய்வூதியம் தேவையில்லை என்று கூறியதற்கான ஆவணமும், அந்த தொகை அரசின் பேரிடர் நிவாரணத்துக்கு வழங்கப்பட்டதுமாகும்.

அதேபோல பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தனக்கு சம்பளம் வேண்டாம் என்றதால் அந்த தொகையும் அரசின் பேரிடர் நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது தொடர்பான ஆவணமும் இருந்தது. மகாத்மா காந்தி இறப்புக்கு முன்னர் நடந்த மந்திரிசபை கூட்டம் தொடர்பான ஆவணம் உள்பட பல வரலாற்று புதையல்களும் இருந்தன.

தேவையில்லாத பழைய கோப்புகள் துண்டுகளாக கிழிக்கப்பட்டு, குப்பைக்கு அனுப்பப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் தேசிய ஆவண காப்பகத்துக்கு அனுப்பப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதன் பேரிலேயே இந்த தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இனி 6 மாதத்துக்கு ஒரு முறை கோப்புகளை ஆய்வு செய்து தேவையில்லாதவை அழிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கோப்புகள் மட்டுமின்றி உடைந்த மேஜை, நாற்காலி, பீரோ போன்றவைகளும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.




செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 3:12 am


எனக்கு தேனிலவு காலம் என்பதே இல்லை: 30 நாள் அனுபவம் குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்து சரியாக 30 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்த அனுபவம் குறித்து தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எனக்கு தேனிலவு காலம் என்பதே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக மத்தியில் பொறுப்பேற்கும் ஆட்சியாளர்களுக்கு முதல் ஒரு சில மாதங்களை ஊடகங்கள் தேனிலவு காலம் என்று குறிப்பிடுவார்கள். அந்த காலத்தில் பெரிதாக எந்த பொறுப்பும் அவர்களுக்கு இல்லை என்பதால் அவ்வாறு குறிப்பிடுவது வழக்கம்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் சில செய்தியாளர்கள் கடந்த 30 நாட்களில் ஆட்சி அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டனர். அதற்கு தனது வலைப்பக்கத்தில் பதிலளித்துள்ள மோடி, புதிய அரசுகளுக்கு தேனிலவு காலம் என்ற ஒரு சௌகரியம் உண்டு. அதனை சில அரசுகள் 100 நாட்களும், அதை விடவும் கூட அதிக நாட்கள் நீட்டித்துக் கொள்வார்கள்.

ஆனால், எனக்கோ தேனிலவு காலம் என்பதே கிடையாது. பதவியேற்ற 100 மணி நேரத்துக்குள்ளேயே வரிசையாக பிரச்னைகளும், குற்றச்சாட்டுகளும் வரத் துவங்கிவிட்டன. அதில் பல இந்த அரசுக்கு சம்பந்தமே இல்லாதவை.

எதுவாக இருந்தாலும், நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே செயல்படுவதால் இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. அதனால் எனக்கு எனது பணி முழு திருப்தியை அளிக்கிறது.

நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் இருப்பவர்களுக்கு, புரிய வைப்பதுதான் பெரிய சவாலே என்று கூறியுள்ளார்.




செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 28, 2014 2:55 pm

கண்டிப்பாக நல்ல எதிர்காலம் மோடியால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. சிறிது காலம் அவகாசம் கொடுத்து பார்க்கணும்




செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 1:54 am

குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள்: பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக புதிதாக 4 நோய் தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், அனைவருக்கும் சுகாதார வசதிகள் அளிப்பதிலும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

உலக அளவில் போலியோ நோயை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போலியோவை தடுப்பதற்காக இந்தியாவில் குழந்தைகளுக்கு தற்போது சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் உலகில் உள்ள 125 நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ஊசி மூலம் செலுத்தும் போலியோ தடுப்பு மருந்தையும் இந்தியா அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை, ‘ஆயிரமாவது ஆண்டு அபிவிருத்தி திட்டத்தின்’ கீழ், உலக அளவில் நோய்களால் குழந்தைகள் இறப்பை வெகுவாக குறைக்க தீர்மானித்து உள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுக்கும் வகையில் உயிர்காக்கும் புதிய தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.

பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுகுழந்தைகள் வயிற்றுப் போக்கை உண்டாக்கும் ரோட்டாவைரஸ் மற்றும் ருபெல்லா போன்ற நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்டு இறப்பதை தடுக்கும் வகையில் இந்த மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. குழந்தைகளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் இந்த மருந்துகள் உதவியாக இருக்கும். மூளைக்காய்ச்சல் நோயை தடுக்கவும் தடுப்பு மருந்து கொண்டுவரப்பட உள்ளது. அந்த வகையில் மொத்தம் 4 புதிய மருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

பல்வேறு ஆய்வு நிலைகளுக்கு பின்னரும், நோய் தடுப்புக்கான விஞ்ஞான ஆலோசனை குழு, இந்திய தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்தும் இந்த மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்த மருந்துகள் தனியார் ஆஸ்பத்திரிகளில் கிடைக்கின்றன. அங்கு போதிய வசதி உள்ளவர்கள் அந்த மருந்தை பெற்று பயன் அடைய முடிகிறது. சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அந்த மருந்துகளை அரசாங்கம் வழங்க இருக்கிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.



செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 04, 2014 2:51 am

நரேந்திர மோடி - ஜான் கெர்ரி பேச்சு வார்த்தை விவரங்கள்
 


பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கச் செயலர் ஜான் கெர்ரி மற்றும் வர்த்தகப் பிரிவுச் செயலர் பென்னி பிரிட்ஸ்கர், புது தில்லியில் 2014 ஆகஸ்ட் 01 அன்று சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு அமெரிக்கச் செயலர்களும் இந்தியா - அமெரிக்கா இடையே செயல்படுத்த வேண்டிய உத்தேச திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். 

செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 1406964557-1611

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன் உரிமை அளிக்க, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்தைத் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உலக அளவிலான பங்கேற்பு ஆகியவை குறித்தும் இவர்கள் பிரதமருக்குத் தெரிவித்தனர். 2014 செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடைபெற உள்ள மாநாட்டில், புதிய உறவை ஏற்படுத்தும் வகையில் புதிய கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும். இது அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று ஒபாமாவின் விருப்பத்தைப் பிரதமரிடம் தெரிவித்தனர்.
 
இரு நாடுகளுக்கு இடையே கருத்துகளும் ஆர்வங்களும் மிகப் பெரிய அளவில் இருப்பதாகப் பிரதமர், அமெரிக்கச் செயலர்களிடம் தெரிவித்தார். உலக அளவில், இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து உலக அளவில் உள்ள சவால்களைச் சந்திக்கவும், அமைதியை மேம்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார மாற்றங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் இணைந்து செயல்படுவதே இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையாகும்.

செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 1406964604-7571

வர்த்தகம், முதலீடு, தூய்மையான எரிசக்தி, புதிய கண்டுபிடிப்புகள், கல்வி, தொழில் மேம்பாடு, வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல், இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற துறைகளில் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்த நல்லுறவு அமைய வேண்டும். 

வளர்ந்து வரும் நாடுகளில், வறுமை குறித்து சவால்களையும் பொறுப்புகளையும், வளர்ந்த நாடுகள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். சர்வதேச அரங்கில், இது முன் வைக்கப்பட வேண்டும் என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். ஆசிய பசிபிக் மண்டலத்தில், இந்தியாவின் பங்கு, மண்டல பொருளாதார மேம்பாட்டில் தெற்காசியாவின் ஒருங்கிணைந்த முயற்சியில் இந்தியாவின் பங்கு, ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதில் இந்தியாவின் பங்கு, தீவிரவாதத்தை எதிர்கொள்ளத் தேவையான அணுகுமுறை குறித்துப் பிரதமர் விவாதித்தார். 

செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 1406964649-9131

 
இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, வர்த்தகத் துறை செயலர் பிரிட்ஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சிந்தனை மிகுந்த விரிவான கடிதத்தைப் பாராட்டியும் பிரதமர் நன்றி தெரிவித்தார். 

இந்தச் சந்திப்பின் போது வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத் துறை முதன்மைச் செயலர் நிர்பேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் மற்றும் மூத்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 9:26 pm

இரண்டு மாதத்தில் இரு முறை இங்கு வந்துள்ளேன்-காரணம் உங்கள் அன்பு: காஷ்மீரில் மோடி பேச்சு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் லடாக் பகுதி மக்களை ஈர்க்கும் வகையில் பேசிய மோடி அவர்கள் உள்ளங்களை கவர்ந்தார். காஷ்மீர் மக்களின் அன்பின் காரணமாகவே அம்மாநிலத்திற்கு இரண்டு மாதத்திற்குள் இருமுறை வந்துவிட்டதாக மோடி தனது உரையின் போது குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது;-

பாரதப் பிரதமராக இருந்தவர்கள் இம்மாநிலத்திற்கு வராத காலமும் இருந்தது. ஆனால் நான் இங்கு இருமுறை வந்துவிட்டேன். உங்களின் ஈர்ப்பு என்னை இங்கு வரவழைத்திருக்கிறது.

மின்சாரம், சுற்றுச்சூழல் மற்றம் சுற்றுலா ஆகிய மூன்று வளர்ச்சித் திட்டங்கள் இம்மாநிலத்திற்கு மிக முக்கியம் என்று நான் கருதுகின்றேன். இம்மாநிலத்தில் பா.ஜ.க தொண்டராக பணியாற்றிய போது கடினமான சூழ்நிலையில் இப்பகுதி மக்கள் என்னை ஆதரித்தனர்.

தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையை நான் வரவேற்கிறேன். எனவே கூடுமான வரை என்னால் என்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் இப்பகுதி மக்களுக்கு செய்வேன் என்று மோடி பேசினார்.

லடாக் பகுதி மக்கள் அணியும் பராம்பரிய உடையை அணிந்து மோடி மேடைக்கு வந்தது பலரையும் கவர்ந்தது. பிரதமராக பொறுப்பேற்ற பின் கடந்த ஜூலை மாதம் காஷ்மீர் வந்த பிரதமர் மோடி தற்போது இரண்டாவது முறையாக இங்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 9:56 pm


ஷிருடி பயணம் - நரேந்திர மோடிக்கு சாமியார் எச்சரிக்கை

சர்ச்சைக்குரிய சாமியார் சுவரூபாநந்தா பிரதமர் நரேந்திர மோடி ஷிருடி பயணத்தை ரத்து செய்யவேண்டும் என எச்சரிக்கை செய்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஷிருடி சாய் பாபா கோவிலுக்கு வரும்படி சிவ சேனா அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி, ஷிருடிக்கு செல்வாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே சாய்பாபா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சாமியார் சுவரூபாநந்தா, பிரதமர் நரேந்திர மோடி ஷிருடி பயணத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.



செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 12, 2014 9:57 pm


தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டு பாகிஸ்தான் மறைமுகமாக போர்: காஷ்மீரில் மோடி பேச்சு

இந்தியாவை போர்க் களத்தில் நேரடியாக சந்திக்கும் பலம் இல்லாததால், தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டு பாகிஸ்தான் மறைமுகமாக போர் நடத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் லேஹ் மாவட்டத்தில் ராணுவ, விமானப் படை வீரர்கள் மத்தியில் பேசியபோது மோடி இதனை தெரிவித்தார். இந்திய படையினர் போர் முனையில் காயமடைவதைவிட அதிகமாக தீவிரவாதத்தாலேயே காயமடைகின்றனர் எனவும் மோடி கூறினார்.

முன்னதாக, லடாக் மாவட்டம் லேஹ் பகுதியில் இரண்டு நீர் மின் திட்டங்களை அவர் தேசத்திற்கு அர்ப்பணித்தார். லேஹ் - கார்கில் - ஸ்ரீநகர் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்துத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

ஒரு நாள் பயணமாக இன்று காலை தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு - காஷ்மீர் வந்தடைந்தார். அவரை அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, ஆளுநர் என்.என்.நோரா ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

நிகழ்வில் மோடி பேசியதாவது:-

ஜம்மு - காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு தோள் கொடுக்கும். லேஹ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, "முன்பு இருந்த பிரதமர்கள் பலர் ஜம்மு - காஷ்மீருக்கு வருவதை தவிர்த்து வந்தனர். ஆனால் நான் ஆட்சிக்கு வந்த பிறகு 2 முறை இங்கு வந்துள்ளேன். ஜம்மு மக்களின் அன்பு என்னை இங்கு மீண்டும் வர தூண்டியுள்ளது. பிரதமர் பதவி என்ற பொறுப்பை பயன்படுத்தி ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு என்னால் நிறைய நல்லது செய்ய முடியும் என நம்புகிறேன்.

ஜம்மு - காஷ்மீரில் பாஜக தொண்டராக நான் கட்சிப் பணியாற்றி இருக்கிறேன். அதை இப்போது நினைவுகூர்கிறேன். என் மீது காஷ்மீர் மக்கள் காட்டும் அன்பையும், மரியாதையையும் அவர்களுக்கு திருப்பி அளிக்க கடமைப்பட்டுள்ளேன். இப்பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் எனது அன்பை வெளிப்படுத்துவேன்.

லேஹ் வளர்ச்சி காண புதிய மின் திட்டங்களை துவக்குவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியமாகும். லடாக் பகுதியில் சூரிய மின் திட்டங்களை செயல்படுத்த அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 83 திட்டங்களை செயல்படுத்த பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இது தவிர இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது போன்ற சிறப்புத் திட்டங்களை அரசு பரிசீலித்து வருகிறது. காஷ்மீர் சிறப்பான குங்குமப்பூ விளைச்சலை அதிகரிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கும். ஊழலை ஒழிப்பதில் மக்கள் பங்களிப்புடன் அரசு முழு வீச்சில் செயல்படும்" என்று மோடி தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம் லேஹ் மாவட்டத்தில் ராணுவ, விமானப் படை வீரர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, "இந்தியாவை போர்க் களத்தில் நேரடியாக சந்திக்கும் பலம் இல்லாததால், பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டு மறைமுகமாக போர் நடத்துகிறது. இந்திய படையினர் போர் முனையில் காயமடைவதைவிட அதிகமாக தீவிரவாதத்தாலேயே காயமடைகின்றனர்" என்றார்.



செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 8:59 pm

புற்றுநோயை விட கொடியதான ஊழலை நாட்டை விட்டே விரட்டுவோம்: பிரதமர் மோடி

ஹரியாணா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புற்றுநோயைக் காட்டிலும் கொடியதான ஊழலை கட்டுப்படுத்த தவறினால், ஊழலுக்கு நாடே அழிந்து விடும். ஆகையால் ஊழலை நாட்டை விட்டே விரட்டியடிப்போம் என்றார்.

ஹரியாணா மாநிலம் கைத்தாலில் இருந்து ராஜஸ்தான் எல்லை வரை அமைக்கப்படவுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், " நமது உடலில் உள்ள ரத்த நாளங்களைப் போல தான், நம் நாட்டில் உள்ள சாலைகளும். நமது நாட்டின் பல்வேறு பகுதிகளை ரத்த நாளங்களை போல இருக்கும் சாலைகள் இணைக்கின்றன.

ஹரியாணாவில் உள்ள கைதாலில் தேர்தல் பிரசார கூட்டத்தில் நான் பேசினேன். தற்போது தயானந்த சரஸ்வதி பிறந்த மண்ணில் இருந்து பிரதமராக வந்து பேசிக்கொண்டிருக்கிறேன். தயானந்த சரஸ்வதி இங்கு பெரும் மதிப்பிற்குரியவராக கருதப்படுகிறார்.

குஜராத் மக்களை நான் எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளேனோ, அதே அளவு ஹரியாணா மக்களையும் தெரிந்து வைத்துள்ளேன். ஹரியாணா மக்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் என்பதை நான் அறிவேன். இது இம்மண்ணுக்கு உள்ள தனிச்சிறப்பு.

ஹரியாணா மாநில மக்கள், என் மீது வைத்திருக்கும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கண்டிப்பாக இந்த மக்களின் அன்பிற்கு, வட்டியாக அவர்களுக்கு வளர்ச்சியை அளிப்பேன்.

புற்றுநோயை விட மோசமான நோய் ஊழல். ஊழலைக் கட்டுப்படுத்த தவறினால், அவை நாட்டையே அழித்துவிடும். ஆகையால், ஊழலை நாட்டிலிருந்து விரட்டியடிக்க நாம் பாடுபடுவோம். நாட்டு மக்களின் பிரதான சேவகனாக பொறுப்பேற்றுள்ள நான், ஹரியாணா மாநிலத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்துவேன்" என்றார்.



செங்கோல் - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக