ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

+4
krishnaamma
M.M.SENTHIL
ரா.ரா3275
சிவா
8 posters

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


Last edited by சிவா on Wed Feb 08, 2023 11:28 pm; edited 4 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Fri May 30, 2014 3:48 am

நரேந்திர மோடி அரசின் அடுத்த அதிரடி : மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் ஊக்க ஊதியம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்க நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

6–வது ஊதியக்குழு பரிந்துரை

குறைந்த அளவிலான அரசைக் கொண்டு நிறைவான நிர்வாகத்தை தரவேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ள நரேந்திர மோடி அரசு, பதவி ஏற்ற பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல் திறன் அடிப்படையில் இதுவரை எந்தவொரு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது கிடையாது. ஆனால் இதைச் செய்ய வேண்டும் என்று ஆறாவது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. அதை முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் செயல்படுத்தவில்லை. அதற்குள் அதன் பதவிக்காலமும் முடிவுக்கு வந்து விட்டது.

பா.ஜனதா அரசு கையில் எடுக்கிறது

இப்போது இந்த திட்டத்தை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு கையில் எடுக்க உள்ளது.

செயல்திறன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, விரிவான விளக்கம் அளிக்க உள்ளது.

அப்போது, சிறப்பான நிர்வாகத்துக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிற இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமருக்கு தெரிவிக்கப்படும். அதைப் பிரதமர் பரிசீலித்து, ஒப்புதல் வழங்கிய பின்னர் அதற்கான வழிமுறைகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வகுத்து அளிக்கும்.

பெரிய மாற்றத்தை தரும்

முந்தைய மன்மோகன் சிங் அரசு பதவிக்காலத்தில் இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. அதில் ஒரு முக்கிய அம்சம், அமைப்பின் செயல்திறன், ஊழியர்களின் செயல்திறன் ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது குறித்த கால இடைவெளிகளிலோ கணக்கில் கொண்டு, அதன் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கலாம் என்பதாகும்.

இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் இந்த திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். சிறப்பான பயன் விளையும். இதில் பிரதமர் மேலும் பல்வேறு அம்சங்களை உடன் இணைக்கலாம்’’ என்றார்.

கூடுதலாக கிடைக்கும்

செயல் திறன் அடிப்படையில் ஊக்க ஊதியம் திட்டம் அமலுக்கு வருகிறபோது, அது ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளிலோ வழங்கப்படும். இது தனிப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் அல்லது குழு அளவிலும் அல்லது தொகுப்பாகவும் வழங்கப்படலாம்.

இது வழக்கமான ஊதிய உயர்வு, கிரேடு பதவி உயர்வு, பணிக்கால அளவிலான ஊதிய உயர்வு போன்றவற்றுடன் கூடுதலாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தினால் இதன் மூலம் மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவதோடு, அரசு நிர்வாகம் மேம்பாடு அடையும். அதன்மூலம் மக்களும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Fri May 30, 2014 10:26 am


என்னுடயை வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்

போராட்டமும் வெற்றியும் நாட்டுப்பற்றும் நிறைந்த பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை, சிறுவர்களும் இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க ஏற்கனவே மத்திய பிரதேச அரசு திட்டமிட்டு இருந்தது. அதேபோல், குஜராத் அரசும் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த தகவலை அந்த மாநில கல்வி மந்திரி பூபேந்திரசிங் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில், என்னுடையை வாழ்க்கை வரலாற்றை பள்ளி திட்டங்களில் சேர்க்க வேண்டாம் என்று மத்திய பிரதேச மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, மோடியின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டங்களில் சேர்க்கும் முடிவுக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Sat May 31, 2014 7:01 am

பிரதமர் இல்லத்தில் மாற்றம் கோராத மோடி; அதிகாரிகள் வியப்பு!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார்.

சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடி தனி நபராக குடியேறும் முதல் பிரதமர் ஆகிறார். இதுவரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான் குடியேறினர்.

கடந்தவாரம்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் இல்லத்தை காலி செய்தார். வழக்கமாக முன்னாள் பிரதமர் காலிசெய்துவிட்டு போனபின்னர், புதிதாக அங்கு வரும் பிரதமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, வீட்டில் பலமாற்றங்களை செய்யுமாறு கூறுவதும், புதிதாக பர்னிச்சர்கள், ஆடம்பர அலங்கார விளக்குகள், வண்ணம் பூசுவது என லட்சக்கணக்கான ரூபாய்க்கு செலவு வைத்துவிடுவார்கள்.

பிரதமர் குடும்பத்தினர் இவ்வாறு என்றால், அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களும், அவர்களது குடும்பத்தினர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இருக்காது.

ஆனால் மோடி அதுபோன்ற எதுவும் செய்யுமாறு கோரவில்லை. அவர் வருவதற்கு பிரதமர் பங்களாவில் புதிதாக பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டதாகவும், கட்டில் சோபாக்கள் போன்ற பர்னிச்சர்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும், அவற்றை சுத்தப்படுத்த மட்டுமே செய்ததாகவும், மோடியின் இந்த அணுகுமுறை கடந்த கால பிரதமர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் அணுகுமுறையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் தங்களுக்கு வியப்பை தருவதாக மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோடியின் இந்த எளிமைக்கு அவர் தனது குடும்பத்தினர் யாரையும் அழைத்து வராமல் பிரம்மச்சாரியாகவே குடியேறியதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

வழக்கமாக புதிய பிரதமர் குடியேறுவதற்கு முன்னர் அங்கு செய்யப்பட வேண்டிய அலங்கார மற்றும் ஓவியங்கள் குறித்த யோசனைகளை கேட்டு டெல்லி 'நேஷனல் கேலரி ஆப் மார்டன் ஆர்ட்' டை சேர்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஓலை வரும். ஆனால் இந்த முறை தங்களுக்கு அப்படி எதுவும் வேண்டுகோள் கடிதம் வரவில்லை என்கிறார்கள் அவர்கள்.

மோடியை பொறுத்தவரை அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும், முதல்வர் இல்லத்தில் அவர் இதேப்போன்ற எளிமையுடன்தான் வசித்தார். காந்திநகரில் மாநில கவர்னர் மாளிகையின் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்திருக்கும் அந்த இல்லத்தில் மோடி வசித்தபோது லிவிங் ரூம் எனப்படும் முன்னறையில் வருபவர்கள் அமர 4 நாற்காலிகளும், அதன் மத்தியில் ஒரு மேஜை மட்டுமே போடப்பட்டிருந்தன. அதே எளிமையைத்தான் மோடி தற்போது பிரதமர் ஆன பின்னரும் பின்பற்றுவதாக மோடிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by பாலாஜி Sat May 31, 2014 11:32 am

சிறப்பான செய்தி தொகுப்பு .......  பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 3838410834 பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 103459460 பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 1571444738 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Sat May 31, 2014 9:27 pm

அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் மற்றும் அமைச்சரவை குழுக்களை கலைத்தார் மோடி

புதுடில்லி: அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுக்கள் மற்றும் அமைச்சரவை குழுக்களை கலைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளே விரைவாக முடிவு எடுக்க முடியும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 9 அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்களும், 21 அமைச்சரவை குழுக்களும் இருந்தன. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு முன் எந்த முடிவும் எடுக்கும் முன்னரும், அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழு பரிசீலனை செய்யும். அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் பெரும்பாலனவற்றிற்கு ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த அந்தோணி தலைமை வகித்தார். ஊழல், நதிநீர் பிரச்னை, நிர்வாக சீர்திருத்தம், எரிவாயு மற்றும் டெலிகாம் விலை தொடர்பாக அமைச்சரவை குழுக்கள் அமைக்கப்பட்டன.

தற்போது இந்த குழுக்கள் கலைக்கப்பட்டதன் மூலம், முடிவுகள் விரைவாகவும், நேர்மையாகவும் எடுக்க முடியும் எனவும், இந்த அமைச்சரவை குழுக்கள் முன் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள், தங்கள் ஆலோசனை கூட்டத்தின் போது முடிவெடுத்து கொள்ளலாம் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும் போது, பிரதமர் அலுவலகமும், மத்திய செயலகமும் தகுந்த உதவி செய்யும் எனவும், இந்த அமைச்சரவை குழுக்கள் மற்றும் அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் கலைக்கப்படுவதால் அமைச்சகங்களும், துறைகளும் அதிகாரம் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிர்வாகம் சிறப்பாக செயல்பட, அமைச்சகங்களுக்கு 10 கட்டளைகள் பிறப்பித்து 2 நாட்கள் ஆன நிலையில், மோடி அமைச்சரவை குழுக்களை கலைக்கும் முடிவை எடுத்துள்ளார்.


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by T.N.Balasubramanian Sat May 31, 2014 11:24 pm

Quote.
மேலும், முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும் போது, பிரதமர் அலுவலகமும், மத்திய செயலகமும் தகுந்த உதவி செய்யும் எனவும், இந்த அமைச்சரவை குழுக்கள் மற்றும் அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் கலைக்கப்படுவதால் அமைச்சகங்களும், துறைகளும் அதிகாரம் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. quote.

"எடுக்கின்ற முடிவிற்கு" பொறுப்பை (accountability.) தனதுடமை ஆக்குதல் நல்லதே . விதிமுறைக்கு உட்பட்டு செய்தல் அவசியம் . நேர்மை நிச்சயம் வெளிப்படும்
நல்ல முடிவு
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Thu Jun 05, 2014 3:51 am

தைரியமாக முடிவெடுங்கள்: செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடில்லி: நிர்வாகத்திற்கு இடையூறு செய்யும் பழமையான விதிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் அரசுத்துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தைரியமாக முடிவெடுக்க வேண்டும் எனவும், அவர்கள் பின்னால் நான் இருப்பேன் எனவும் உறுதியளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது இல்லத்தில் 77 அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகளின் கருத்துக்களை மோடி கேட்டறிந்தார். மேலும், தற்போதைய சூழ்நிலையில், தங்களின் உண்மையான திறனை யாரும் கண்டறியாதது குறித்து அதிகாரிகள் மனவேதனை தெரிவித்ததையும் மோடி கவனத்தில் கொண்டார்.

அதிகாரிகள் மத்தியில் பேசிய மோடி, அதிகாரிகள் தன்னை தொலைபேசி, இமெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும், பல்வேறு விவகாரங்களில் தலையிட வேண்டும் என்றாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என கூறினார். நாட்டின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்க அதிகாரிகளின் பொறுப்புணர்வு மற்றும் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், நிர்வாக விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பொது மக்களுக்கு உதவும் வகையில் எளிதாக்க வேண்டும் என கூறினார்.

மேலும் அவர் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள், தற்போது உதவாத வகையில் இருக்கலாம். அவை சிறந்த நிர்வாகத்திற்கு உதவும் வகையில் இருக்காமல், அவை தவிர்க்கக்கூடிய குழப்பத்திற்குகொண்டு செல்லலாம். அது போன்ற விதிமுறைகளை கண்டறிந்தும், பழமையான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஒதுக்கி வைக்க வேண்டும். அதிகாரிகள் தங்களது கருத்துக்கள் மற்றும் தகவல்களுடன் தன்னை அணுகலாம் என்றும், அதிகாரிகள் தைரியமாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய பிரதமர், அவர்களது முடிவுக்கு பின்னால் தான் நிற்பேன் எனவும் கூறினார்.

சிறந்த மற்றும் திறமையான நிர்வாகத்திற்கு தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும் எனக்கறிய பிரதமர், ஜனநாயகத்தில் பொது மக்களின் பிரச்னைகளை தீர்ப்பது மிகவும் முக்கியம் எனவும், இதற்கு தகவல் தொழில்நுட்பம் மிகவும் உதவும் என கூறினார். ஒரு குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக்கூறிய பிரதமர், செயலாளர்கள் அந்த குழுவிற்கு செயல்பட வேண்டும் எனவும், ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான், விரைவான முடிவு எடுக்க முடியும் என கூறினார்.

அதிகாரிகளின் செயல்பாட்டிற்கு மதிப்பளிப்பதாக கூறிய பிரதமர், தனது அரசின் செயல்பாடு, பல்வேறு அமைச்சகங்களை ஒழுங்கு படுத்தியும், வேலை பார்க்கும் இடங்களை மேம்படுத்தியும் இருக்கும் எனவும், இதன் மூலம் சிறந்த பணி மற்றும் திறமையான முடிவுகள் மக்களுக்கு கிடைக்கும் எனவும், தொழில்நுட்பம் மற்றும் துறைகள், நிர்வாகங்கள் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டால், அனைத்தும் ஒரே புள்ளியில் இணையும் வாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி தனது பேச்சுக்கு பின், பிரச்னைகள் பற்றி பேசுமாறு செயலாளர்களை கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் 25 துறை செயலாளர்கள், தங்களது துறை பிரச்னைகள் பற்றி விரிவாக பேசினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Thu Jun 05, 2014 4:07 am

அமெரிக்கா வர மோடிக்கு ஒபாமா அழைப்பு:ஒபாமாவின் கோரிக்கையை ஏற்றார் மோடி

புதுடில்லி: இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்க செப்டம்பர் மாதம் அமெரிக்கா வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

மோடி-ஒபாமா இடையிலான சந்திப்பை செப்டம்பர் 30ம் தேதி வைத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஐ.நா.,வில் மோடி உரையாற்றும் நேரத்தில், செப்டம்பர் 26ம் தேதி இந்த சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Thu Jun 05, 2014 4:10 am

பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்டு வருகிறார். ஆட்சியின் முதல் 100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான திட்டத்தை வகுத்து, செயல்படுத்துமாறு தனது மந்திரிசபை சகாக்களுக்கு உத்தரவிட்டார். குறைவான எண்ணிக்கையிலான மந்திரிகளைக் கொண்டு, நிறைவான நிர்வாகத்தை நடத்தி, மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியானபடிக்கு போய்ச்சேருவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் விருப்பம் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் 10 அம்சத் திட்டம் ஒன்றையும் தீட்டி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், முதல் முறையாக மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களின் செயலாளர்களை அவர் சந்தித்து, திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கலந்து உரையாட விரும்பினார். இந்த சந்திப்பு நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கோபிநாத் முண்டே சற்றும் எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சந்திப்பு இனறு நடந்தது. இந்த சந்திப்புக்கு நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம், உள்துறை செயலாளர் அனில் கோசுவாமி, ராணுவ செயலாளர் ராதாகிருஷ்ண மாத்தூர், வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் உள்ளிட்ட 77 மூத்த அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் திட்டங்களை செயல்படுத்துவதில் தனது விருப்பங்களையும், முன் உரிமைகளையும் பிரதமர் மோடி விளக்கினார் என்றும், அதிகாரிகளிடம் தனக்கு உள்ள எதிர்பார்ப்புக்களையும் அவர் தெரிவித்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Fri Jun 06, 2014 3:20 am

பிரதமராக பொறுப்பேற்ற பின் முதலில் பூடான் செல்லும் மோடி

பாரதப் பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதல் அரசு முறைப் பயணமாக அண்டை நாடான பூடானுக்கு இம்மாத இறுதியில் செல்கிறார்.

மோடி பூடான் செல்ல முடிவெடுத்தது இரு நாடுகளுக்கிடையேயான உறவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இமயமலைப்பகுதி நாடான பூடான் அதிபருடன் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்தும், பிராந்திய விவகாரங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முன்னதாக கடந்த மே 26ந் தேதி நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பூடான் பிரதமரான ஷெரிங் டாப்கே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு விழாவுக்கு பின் பூடான் அதிபருடன் மோடி ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வரும் ஜூலை மாத மத்தியில் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் பிரேசில் நாட்டுக்கு மோடி செல்வார் என தெரிய வந்துள்ளது.


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 3 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
» இன்றுரேடியோவில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
» நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum