புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
62 Posts - 63%
heezulia
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
254 Posts - 44%
heezulia
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவலை! - சிறுவர்கதை Poll_c10கவலை! - சிறுவர்கதை Poll_m10கவலை! - சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலை! - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 2:15 am


மன்னர் கிருஷ்ண தேவராயரும், மதியூகி அப்பாஜியும் அடிக்கடி நகர்வலம் செல்வர். அப்போது மாறுவேடம் அணிந்தே செல்வர்.

ஒருநாள் காலை வேளையில் இருவரும் வீதி வழிச் சென்று கொண்டிருந்தபோது, பள்ளிச் சிறுவர்கள் சிலர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள், "சடுகுடு' விளையாட்டில் தீவிரமாக அக்கறை காட்டிக் கொண்டிருந்த போது, கோவில் யானை ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அது பழக்கப்பட்ட யானையானதால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் யாருமே பயப்படமாட்டார்கள்.

அன்று அந்தப் பிள்ளைகள் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த யானை அவர்களுடைய விளையாட்டினூடே வேண்டுமென்றே புகுந்து வந்தது. ஆகவே, மற்றப் பிள்ளைகள் அனைவரும் ஒதுங்கி வழிவிட்டு நிற்கவும், ஒரு சிறுவன் மட்டும் அதைப் போக விடாமல், அதன் தந்தம் இரண்டையும் பிடித்து உந்தித்தள்ளி அதைப் பின்புறமாகத் தள்ளிக் கொண்டே சென்றான்.

அந்த யானை என்னதான் முயன்றும் அது வெற்றி பெற முடியவில்லை. ஆம், அது தோல்வியே அடைந்தது. ஆகவே, வேறு வழியின்றி ஓரமாகச் சென்றது.

இவ்விதம் வீரமுடன் அந்த யானையை எதிர்த்து நின்று வெற்றி கண்ட அச்சிறுவனைப் பலர் பார்த்து மகிழ்ந்ததைப் போல, மன்னர் கிருஷ்ண தேவராயரும், அப்பாஜியும் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

மன்னர், அப்பாஜியிடம், ""பார்த்தீர்களா அப்பாஜி அவன் எவ்வளவு துணிகரமாக நின்று வெற்றி பெற்று விட்டான்! அது பழகிய யானையாக இருந்தாலும் கூட அது வெற்றி பெறுவதற்கு எவ்வளவோ முயன்றது. ஆனால், அந்த யானையால் வெற்றி பெற முடியவில்லையே!'' என்றார்.

""உண்மைதான் அரசே, அவன் வெற்றி பெறுவதற்கு அவனிடமுள்ள துணிவுதான் முதல்காரணம்; இரண்டாவது காரணம் அவனுடைய ஆற்றல். வெறும் துணிவு மட்டும் இருந்தால், அவனால் வெற்றி பெற முடியாது. ஆற்றலும் வேண்டும்,'' என்றார்.

அந்தச் சிறுவன் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகத் தான் காணப்பட்டான். அவனுடைய உடையும், தோற்றமும் வறுமை நிலையிலுள்ளவன் என்பதையே காட்டின.

""இவ்வளவு வறுமை நிலையில் இருந்தாலும் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான் பாருங்கள். உண்மையில் அவனைப் பாராட்டத்தான் வேண்டும்,'' என்றார் மன்னர்.

அதைக் கேட்ட அப்பாஜி புன்னகையுடன், ""மன்னர் அவர்களே, இன்னும் ஒரே வாரத்தில் இவனுடைய இந்த ஆற்றலை இல்லாமல் செய்து விடட்டுமா?'' என்று கேட்டார்.

""என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்விதம் அவனுடைய ஆற்றலை ஒரு வாரத்திற்குள் அழிக்க முடியும்?'' என்று கேட்டார் மன்னர்.

""இன்னும் ஒருவாரம் பொறுத்துப் பாருங்களேன். இதே கோவில் யானை இவனைப் தூக்கிப் பந்தாடப் போகிறது பாருங்கள்,'' என்றார் அப்பாஜி சிரித்த வண்ணம்.

அன்று மாலையே அப்பாஜி அந்தப் பையனுடைய இருப்பிடத்தையறிந்து அங்கு சென்றார். அவனுடைய ஏழைத்தாயாரைக் கண்டு பேசினார்.

""தாயே, உன் மகன் என்ன செய்கிறான், படித்துக் கொண்டிருக்கிறானா? எந்த வகுப்பில் படிக்கிறான்?'' என்று கேட்டார்.

""அவனைப் படிக்க வைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. எவ்விதம் அய்யா முடிகிறது. நாலு வீடுகளில் வேலை செய்து அவனுக்குச் சோறு போடுகிறேன். அப்பன் இல்லாத பிள்ளையாயிற்றே, இன்னும் கொஞ்சம் வளர்ந்து விட்டால், ஏதாவது வேலை செய்ய அனுப்பிடலாம்,'' என்றாள்.

""அம்மா சொல்லுகிறேன் என்று தப்பாக எண்ணாதே, இந்த வயதில் நீ இவ்வளவு கஷ்டப்பட்டு அவனுக்குக் கஞ்சி ஊற்ற வேண்டாம். இந்தப் பருவத்திலேயே அவனுக்குத் தன்னுடைய பொறுப்பை, கடமையை உணர்த்த வேண்டும். நாலுகாசு சம்பாதிக்கும் ஆர்வத்தையும் இப்போதே உண்டு பண்ண வேண்டும். அப்போதுதான் அவன் கொஞ்சம் வளர்ந்த பின்னர் சிறப்புடன் திகழ்வான். இப்போது அவனுக்குக் கொடுக்கப்படும் பயிற்சி அவனுக்குப் பெரிதும் உதவும்,'' என்றார்.

""ஆமா ஐயா... நீங்கள் சொல்வது சரிதான். அப்போது தான் அவனுக்குப் பொறுப்பு வரும் என்பது உண்மைதான்,'' என்றாள் அந்த விதவைத் தாயார்.

அன்று அவன் மத்தியான வேளையில் வந்து சேர்ந்தான். என்றும் அவனுக்கு என்று எடுத்து வைக்கப்படும் உணவை அவன் தாயார் எடுத்து வைக்கவில்லை.

""என்னம்மா, இன்று எனக்குக் கஞ்சி எதுவும் இல்லையா அம்மா?'' என்று கேட்டான்.

""இல்லையேயப்பா. எத்தனை நாளைக்குத் தான் நான் கஷ்டப்படுவது? என்னால் இன்று எங்கும் செல்ல முடியவில்லை. நாளையிலிருந்து நீ ஏதாவது வேலைக்குச் சென்று காசு கொண்டு வந்தால்தான் கஞ்சி வைக்க முடியும். உன் வயதுப் பிள்ளைகள் எல்லாரும் வேலைக்குப் போய் தானே அவர்களுடைய அம்மா, அப்பாமார்களைக் காப்பாற்றுகின்றனர். நீயும் எங்காவது சென்று வேலை செய்து கொஞ்சமாவது காசு கொண்டுவா. என்னால் முடியவில்லை, அதனால்தான் உன்னிடம் சொல்லுகிறேன்,'' என்றாள் அந்தத் தாயார்.

அவன் அவ்விதமே உட்கார்ந்துவிட்டான். அதுவரை அவன் வேலை பற்றி எண்ணியே பார்த்ததில்லை. வயதான தாயாரின் உழைப்பில் எதையோ சாப்பிட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.

எங்கெங்கோ சுற்றினான். நினைத்தவுடன் வேலை கிடைக்கவா செய்யும்?

மண் வெட்டியுடன் சிலர் கழனிகளில் வேலை செய்யச் சென்றனர். அவ்விதம் சென்று வேலை செய்வதற்கு அவனிடம் மண் வெட்டியும் கிடையாது. மண் வெட்டியை இரவலாகப் பெற்றுச் சென்றாலும் அவன் அதுவரை மண் வெட்டி பிடித்து, வேலை செய்து பழகவுமில்லை. என்ன செய்வான் பாவம்!

மாலை வேளையில் சோர்ந்து போய் வந்தான். இருந்த உணவைத் தன் மகனுக்குக் கொடுத்துவிட்டு, அவள் பட்டினியாக இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிப் பிள்ளைகள் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் அந்தப் பையனும் வந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அன்று அரசரையும் அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் அங்கு நின்று கொண்டிருந்தார் அப்பாஜி. கோயில் யானை வரும் நேரம்.

மன்னரிடம் அந்தப் பையனைப் பற்றிக் கூறி, அவனுடைய செயலைப் பற்றியும் கூறி, அவனைக் கவனிக்கச் சொன்னார்.

கோவில்யானை தலையை ஆட்டிய வண்ணம் வந்து கொண்டிருந்தது. சாதாரணமாக அந்த யானையின் தந்தங்களைப் பற்றிப் பிடித்துப் பின்னால் தள்ளி விளையாடும் அவன் அன்றும் ஆவலுடன் சென்று அதனை தள்ள முயன்றான்.

"அது அவனைச் சட்டை செய்யாமல் அவனைத் தள்ளிக் கொண்டு சென்று விட்டது. உடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கைகொட்டி அவனைக் கேலி செய்தனர். அதுவரை அந்த யானையை அடக்கி வந்த அவனால் அன்று, வெற்றி கொள்ள முடிய வில்லையே...' என்ற கவலையால் அவ்விதமே இருந்துவிட்டான்.

இவைகளையெல்லாம் மாறுவேடத்தில் பார்த்துக் கொண்டு இருந்த மன்னர், அப்பாஜியின் கரங்களைப் பற்றி, ""நீங்கள் சொன்னது போன்று செய்து விட்டீர்களே, என்ன மாயம் செய்தீர்?'' என்று கேட்டார்.

""ஒரு மாயமும் செய்யவில்லை,'' என்று கூறிய அப்பாஜி, அந்தப் பையனுடைய விதவைத் தாயாரிடம் சென்று கூறிய விஷயத்தைச் சொன்னார். தாயார் தன் மகனிடம் கூறிய வண்ணம் "தனக்கு ஒரு வேலை கிடைக்க வில்லையே...' என்ற கவலைதான் அவனுடைய ஆற்றல் அழியக் காரணம்,'' என்றும் கூறினார்.

""உண்மைதான் அப்பாஜி, நாம் அவனிடம் முன்னர் கண்ட கட்டான உடலமைப்பு இப்போது இல்லை. ஆனால், நீங்கள் சொன்னபடிக் கவலைதான் அவனுடைய ஆற்றல் முழுவதையும் அழித்துவிட்டது. இத்தகையவர்களை நாம் அழைத்து வந்து வாய்ப்புக் கொடுத்தால், நமக்கு உதவியாக இருப்பர்,'' என்றார் மன்னர்.

அப்பாஜியும் அதை ஒப்புக் கொண்டார். அன்று மாலையே சேவகன் ஒருவனை அழைத்து அந்தப் பையனுடைய இருப்பிடம் பற்றிக் கூறி அம்மாவையும், மகனையும் அழைத்து வரச் செய்தார் மன்னர்.

அந்தப் பையனுக்குத் தங்கள் படைப் பிரிவில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டது. பயிற்சியின் போது ஓரளவு ஊதியமும் கொடுக்கப்பட்டது. வயதான அந்தத் தாயார், அவர்கள் இருவரையும் கையெடுத்துக் கும்பிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றாள். அந்தப் பையனும் நல்ல உண்மையான வீரனாகத் திகழ்ந்து வந்தான்.

***
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக