புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
6 Posts - 20%
viyasan
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேரில்லா மரம்! Poll_c10வேரில்லா மரம்! Poll_m10வேரில்லா மரம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேரில்லா மரம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 8:06 pm

வேரில்லா மரம்! UC5crteqRlGB7FExEFqo+E_1399460472

அடுப்பிலிருந்த சாம்பாரை தாளித்து, இறக்கி வைத்தாள் வத்சலா.
ஹாலில் மகள் அபியும், கணவன் மாதவனும் சிரிக்கும் சப்தம், கேட்டது. கையை டவலால் துடைத்தபடி வந்தாள்.
''அப்பா, இந்த ப்ராஜெக்ட இன்னும் ஒரு வாரத்தில முடிச்சாகணும்.''
அப்பாவும், மகளும், லேப் - டாப்பில் தலையைக் கவிழ்த்திருந்தனர்.
''என்ன செய்றீங்க,'' என்று கேட்டாள் வத்சலா.

''டவுன்லோடு செய்துகிட்டு இருக்கோம்,'' கண்களை எடுக்காமல், பதில் சொன்னான் மாதவன்.
''அப்படின்னா என்னங்க?''''ஐயோ அம்மா... நீ வேற, 'தொண தொண'ன்னு. உனக்கு இதைப்பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?''மகளின் பதிலில், முகம் வாடிப் போக, ''சரி, சமையல் ரெடியாயிடுச்சு, பசிச்சா சொல்லுங்க. எடுத்து வக்கிறேன்,'' என்றாள் வத்சலா.

''என்ன வழக்கம் போல சாம்பார், பொரியல் தானே செய்திருக்கப் போற... புதுசா எதுவும் ட்ரை செய்ய மாட்டே.''
கணவன் கூறியதைக் கேட்டு, மேலும் முகம் சுருங்கிப் போனாள். மெல்ல மகனின், அறை நோக்கி நடந்தாள்.
காதில், ப்ளூடூத்தை மாட்டிக் கொண்டு, யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் மகன் குணா.
''குணா, சாப்பிட வர்றியாப்பா?''

'வேண்டாம்...' என, கையாலயே சைகை செய்தான்.
''காலையிலயும் சாப்பிடலை; வந்து, ஒரு வாயி சாப்பிட்டுட்டுப் போடா.''
''ஜஸ்ட் ஒன் மினிட்,'' என்று கூறியவன், திரும்பி, அம்மாவைப் பார்த்தான்.
''உனக்கெதாவது அறிவிருக்காம்மா... ஸ்கைப் லாக் இன் செய்து, லண்டனில் இருக்கிற, என் நண்பனோட பேசிட்டு இருக்கேன். குறுக்கே வந்து பேசற.''
''தெரியலடா... நீ ஏதோ செய்துட்டு இருக்கேன்னு நினைச்சேன்.''

''ஐயோ அம்மா... உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது; நீ முதல்ல கிச்சனுக்கு போ. அரை மணி நேரத்துல வரேன்.''
'நான் ஒரு மக்கு; எட்டாவது தான் படிச்சிருக்கேன். இவங்க அளவுக்கு படிப்பறிவில்லை...' என்று நினைத்த வத்சலாவுக்கு, தன் அறியாமையை நினைத்து, மனம் வலித்தது.
சிறிது நேரத்தில், மூவரும் சாப்பிட அமர்ந்தனர். அவர்களுக்கு பரிமாறிய வத்சலா, சமையலறையில், காய்ந்து கொண்டிருந்த எண்ணெயில், அப்பளத்தைப் பொரித்து எடுத்து வந்து, மூவருக்கும் தட்டில் வைத்தாள்.
''அப்பா... அம்மாவுக்கு, மொபைல் போன் வாங்கிக் கொடுத்ததே வேஸ்ட்ப்பா,'' என்றான் குணா.
''ஏன்டா அப்படிச் சொல்றே.''

''மொபைல்ல எல்லா நம்பரையும், 'சேவ்' செய்து கொடுத்திருக்கேன். ஆனாலும், 'எனக்கு, அதில எல்லாம் பாக்கத் தெரியாது; நோட்டு புக்கில எழுதி வை'ன்னு சொல்றாங்க,''என்று கூறி, சிரிக்க, மற்றவர்களும் சிரித்தனர்.
''ஏய் வத்சலா, நீ எந்த உலகத்தில இருக்கே... மகள் சாப்ட்வேர் இன்சினியர், பையன் மெக்கானிக்கல் இன்சினியர், நான் ஒரு லாயர். நீ மட்டும் எதுவும் தெரியாததால, சுத்த வேஸ்ட்டா இருக்கியே... எது எப்படியோ, நீ வச்சிருக்கிற சாம்பார் சூப்பர்!''

''இத்தனை வருஷமா சமைக்கிறாங்க; அதை கூட நல்லா செய்யாட்டி எப்படி!''
குணா சொல்ல, திரும்பவும் அங்கே சிரிப்பு.
ஆத்திரமும், ஆற்றாமையுமாய் அடுப்பறைக்குள் நுழைந்தாள் வத்சலா. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
மாலையில், குளித்து ஈரத் தலையுடன், பூஜை அறையில், சுவாமிக்கு விளக்கேற்றி அமர்ந்தவளின் கண்களில், கண்ணீர் அருவியாய் கொட்டியது.

'கடவுளே... என்னை ஏன் எதுவும் தெரியாத தற்குறியாய் படைச்சே... நான் பெத்த பிள்ளைகளே என்னைக் கேலியும், கிண்டலும் செய்ற அளவுக்கு ஆயிட்டேனே... இவங்க கிட்ட இருந்து, நான் மட்டும் தனிச்சு விடப்பட்டது போல இருக்கே...' என்று புலம்பியவள், ஈரத் தலையை துவட்ட மனமில்லாமல் படுத்தவள், அப்படியே தூங்கி விட்டாள்.
''அப்பா... அம்மாவுக்கு உடம்பு அனலாகக் கொதிக்குதுப்பா,''என்று பதற்றத்துடன் அபி சொல்ல, அடுத்த நிமிடம், வத்சலாவை அழைத்துக் கொண்டு, டாக்டரிடம் சென்றனர் மாதவனும், குணாவும்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும், வத்சலாவை படுக்கையில் படுக்க வைத்த குணா, ''அக்கா, அம்மாவுக்குப் சூடா பால் காய்ச்சி எடுத்துட்டு வா,'' என்றான். அபி கொண்டு வந்த பாலை, பதமாக ஆற்றி, அம்மாவிடம் கொடுத்தான் குணா.
''அம்மா, இந்த மாத்திரைய போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கம்மா சரியாயிடும்.''
''ஆமாம், வத்சலா; எல்லாத்தையும், நாங்க பாத்துக்கிறோம், நீ நிம்மதியா தூங்கு,'' என்று, கைகளை பிடித்தபடி, அருகில் அமர்ந்தார் மாதவன்.

''அப்பா, கொஞ்ச நாளா, அம்மா முகமே சரியில்லப்பா. நாம சிரிச்சு பேசினா கூட, அவங்க சிரிக்கிறதில்ல. தனக்கும், அதுக்கும் சம்பந்தமில்லைங்கிறது மாதிரியே உட்கார்ந் திருப்பாங்க,'' என்றாள் அபி.
மறுநாள், தனக்கு தெரிந்ததைச் சமைத்தாள் அபி.

''அப்பா, நீங்களும், அக்காவும் ஆபிசுக்கு கிளம்புங்க; நான் இன்னக்கி லீவு எடுத்துட்டு, அம்மாவ பாத்துக்கிறேன்,'' என்றான் குணா.''அம்மாவுக்குக் கஞ்சி வச்சுக் கொடுக்கணும்; உன்னால முடியுமாடா?'' என்று மாதவன் கேட்க,''எல்லாம் முடியும்; நீங்க கிளம்புங்க,'' என்றான்.

அவர்கள் அலுவலகம் கிளம்பி சென்ற பின், கஞ்சி காய்ச்சி எடுத்து வந்தான் குணா.
''அம்மா எழுந்திரு; சூடா கஞ்சி கொண்டு வந்திருக்கேன். குடிச்சுட்டு மாத்திரை சாப்பிடு,'' என்றவன், வத்சலாவின் கையை வாஞ்சையாக பற்றி, ''இப்ப காய்ச்சல் எப்படிம்மா இருக்கு,''என்றான்.
''பரவாயில்லைப்பா; நீ வேலைக்குப் போகலையா?''
''எப்படிம்மா, உன்னை இந்த நிலையில விட்டுட்டு, போக முடியும்.''
''சாரிப்பா... என்னால உங்க எல்லாருக்கும் கஷ்டம்.''
''என்னம்மா இது... ஏன் இப்படிப் பேசற?''
''இல்லை. உனக்கு எத்தனையோ வேலை இருக்கும்.''

கஞ்சி டம்ளரை, டேபிளில் வைத்தவன், அம்மாவைப் பார்த்து, ''உனக்கு என்னம்மா பிரச்னை; எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லு,'' என்று கேட்டு, அம்மாவின் முகவாயைப் பிடித்து நிமிர்த்த... அவள் கண்களில் கண்ணீர்.
''அம்மா... என்ன இது... எதுக்கு அழறே?''

''நான் படிக்காதவ; உங்க அளவுக்கு, என்னால எதையும் தெரிஞ்சுக்க முடியல. நீங்க மூணு பேரும், அதைக் காரணமாக வச்சு, என்னை எதுக்குமே லாயக்கில்லாதவள்ன்னு நினைச்சு சிரிக்கிறது, கேலி பேசறது, ஒதுக்கிறதை, என்னால தாங்க முடியலடா குணா. எனக்கு தெரிஞ்சதெல்லாம், நான் உங்க மேலே வச்சிருக்கிற அன்பு ஒண்ணு தான்,''என்று கூறி, கண்ணீரை சிந்தினாள்.

''ஐயோ... என் மக்கு அம்மா, நீ எங்கள புரிஞ்சுக்கிட்டது, இவ்வளவுதானா... இப்பப்பாரு, நீ இரண்டு நாளா படுக்கையில இருக்க. எங்க யாருக்கும், ஒரு வேலையும் ஓடல. அக்கா முடிச்சுக் கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட், அப்படியே இருக்கு. கேட்டா, 'அம்மாவுக்கு முடியலை, அதே நினைப்பா இருக்கு'ன்னு சொல்றா.

''அப்பா... இந்த வாரம், இருந்த இரண்டு கேசையும், அடுத்த வாரம் தள்ளிப் போட்டுட்டாரு. 'மனசு ஒரு நிலையில இல்லை; அம்மா எழுந்து நடமாடட்டும்'ன்னு சொல்றாரு. லண்டனில் இருந்த என் க்ளோஸ் ப்ரண்டுக்கு இன்னைக்கு பர்த்-டே. அவனுக்கு எப்பவுமே நான்தான் முதல்ல வாழ்த்து சொல்வேன். ஆனா, இப்ப வரைக்கும், அவன்கிட்ட பேசல.
''எல்லாத்துக்கும் காரணம் நீதான்மா. உன்னைச் சுத்தி தான், நாங்க இயங்கிட்டு இருக்கோம். உன் அன்பும், பாசமும் தான் எங்கள இயக்கி கிட்டு இருக்கு. உங்கிட்டேயிருந்து வந்தவங்கம்மா நாங்க. இந்த அறிவும், புத்திசாலித்தனமும் நீ கொடுத்தது. நீதான் எங்கள ஆணிவேராக இருந்து வளர்க்கிறே. நாங்க பேசினது, எங்க செல்ல அம்மாவை
வருத்தப்பட வச்சிருந்தா, எங்களை மன்னிச்சிடும்மா. உன் மேல, எங்களுக்கு இருக்கிற அபரிமிதமான அன்பினால் தான் பேசறோமே தவிர, உன்னை என்னைக்குமே ஒதுக்கமாட்டோம்மா,''என்றான் குணா.
கண்களைத் துடைத்துக் கொண்டு, பெருமிதம் பொங்க மகனை அணைத்தாள் வத்சலா.

பரிமளா ராஜேந்திரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 9:02 pm

சூப்பர் ல ? புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 12, 2014 12:42 pm

அன்பை புரிந்துக் கொண்டவர்கள் கதை அருமைமா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக