புதிய பதிவுகள்
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
35 Posts - 43%
heezulia
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
2 Posts - 2%
prajai
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
1 Post - 1%
Saravananj
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
399 Posts - 49%
heezulia
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
26 Posts - 3%
prajai
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_m10மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 4:46 pm

''பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கௌஹாத்தி செல்கிறது அந்த ரயில், ஆந்திர மாநிலத்தின் சில ஊர்கள் வழியாக செல்லும். பெங்களூருவில் 30-ம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மே 1-ம் தேதி காலையில் 5.40-க்கு வர வேண்டும். ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. அதில்தான், காலை 7.25 மணிக்கு குண்டு வெடித்துள்ளது. அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதம் ஆகவில்லை என்றால், ஆந்திர எல்லைக்குள் போய்க்கொண்டு இருக்கும்போது வெடித்திருக்கும். ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதிகள் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்தில் இருப்பதால், அவருக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே இதனைச் சொல்கிறார்கள். ரயில் தாமதம், உயிர் சேதத்தைக்கூட குறைத்துவிட்டது. நின்றுகொண்டு இருந்த ரயிலில் வெடித்ததால் ஒரு உயிர், பலர் காயம் என்பதோடு முடிந்தது. ரயில் ஓடிக்கொண்டு இருக்கும்போது வெடித்திருந்தால், பல உயிர்ச்சேதங்களை தவிர்க்க முடியாமல் போயிருக்கும் என்கிறார்கள்!''

''நரேந்திர மோடிக்கு வைக்கப்பட்ட குறியா இது?''

''அப்படித்தான் சொல்கிறார்​கள். 30-ம் தேதி திருப்பதி வந்த நரேந்திர மோடி அங்குள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் இரவு 10 மணிக்கு நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் தனி காரில் திருமலைக்குச் சென்றனர். ஆதித்யா பிர்லா மாளிகையில் மோடி, பவன் கல்யாண் ஆகியோர் தங்கினர். பத்மாவதி தாயார் விடுதியில் சந்திரபாபு நாயுடு தங்கினார். நரேந்திர மோடி, மே 1-ம் தேதி காலை 7.20 மணிக்கு ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், வெங்கையா நாயுடு ஆகியோரும் மோடியுடன் ஏழுமலையானைத் தரிசித்தனர். 7.55 மணிக்கு தரிசனம் முடித்து வெளியே வந்தனர். பின்னர், பிர்லா மாளிகைக்குப் போய்விட்டு 8.30 மணிக்குத்தான் திருமலையை விட்டு கீழே இறங்கினார் மோடி. அப்போதுதான் அவருக்கு சென்னை ரயிலில் குண்டு வெடிப்பு நடந்த தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.''

''7.20 மணிக்கு இந்த ரயில் ஆந்திர எல்லைக்குள் இருக்கும். தாமதம் ஆனதால் சென்னையில் வெடித்தது. ஆந்திராவில் மோடி இருக்கும்போது அச்சுறுத்தலுக்காக இது நடத்தப்பட்டது என்று இதை வைத்துத்தான் சொல்கிறார்கள்!''

''இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்குமே?''

''ஆந்திராவில் மோடி கலந்துகொண்ட ஐந்து பொதுக்கூட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. திருப்பதியில் இருந்து திருமலை வரும் வரை இரவு ஒன்றரை மணி நேரம் மலைக்கு வரும் வாகனங்களுக்கு 30-ம் தேதி தடை போடப்பட்டது. அதேபோல மறுநாள் காலையில் 8.30 மணிக்கு திருமலையில் இருந்து மோடி கீழே இறங்கும்போதும் ஒரு மணி நேரம் மலையில் இருந்து மற்ற வாகனங்கள் கீழே வரத் தடை போட்டிருந்தனர். ஆனால், நடைபாதை வழியாக வந்த பக்தர்கள் வழக்கம்போல அனுமதிக்கப்பட்டனர். திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் மெயின் நுழைவாயில் அருகே உள்ள கடைகள் அனைத்தும் காலை 10 மணிக்கு மேல்தான் திறக்க அனுமதிக்கப்பட்டது. தரிசனம் குறித்து மோடி தனது ட்விட்டரில், 'நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக வேண்டிக்கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார். திருப்பதி தரிசனம் முடிந்த மோடி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார். சிறப்பு பூஜையும் செய்தார். அந்த வழிநெடுகிலும் வாகனங்கள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது!''

''இந்தியாவில் நடக்கும் தேர்தலை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இங்கு ஒருவேளை ஆட்சி மாற்றம் நடந்தால் அது இந்தியாவின் சிந்தனை மாறுதலை, முகத்தை மாற்றிவிடும் என்பதில் உலக நாடுகள் இப்போதே கவனமாக இருக்கின்றன. 'அமைதியான, அனைத்துக்கும் தலையாட்டும் காங்கிரஸை இதுவரைக்கும் உலக நாடுகள் பார்த்தன. ஆனால், பி.ஜே.பி. அரசு, அதுவும் நரேந்திர மோடி அப்படி இருக்க மாட்டார்’ என்று அந்த நாடுகள் நினைக்கின்றன. அமெரிக்காவுக்கும் மோடிக்குமான மோதல் இரண்டு ஆண்டுகளாக நடப்பதுதான். அவருக்கு விசா தராமல் இழுத்தடித்ததில் ஆரம்பித்த விவகாரம் அது. இப்போது பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு நாடுகளையும் மோடி விமர்சித்துப் பேசி வருகிறார். 'அருணாசலப்பிரதேசம் எங்களுக்கே முழுமையாகச் சொந்தம்’ என்று சொல்லி சீனாவையும், 'இங்கு பலவீனமான மத்திய அரசு இருப்பதால்தான் அந்நிய ஊடுருவல் இருக்கிறது’ என்று பாகிஸ்தானையும், 'இந்திய மீனவர்களைத் தாக்குவதை இலங்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மீனவன்கூட தாக்கப்பட மாட்டான்’ என்று இலங்கையையும் மோடி விமர்சித்து வருகிறார். இதனை அந்த நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.

இலங்கையில் நடந்த இனப்படு​கொலையின்​​போது சீனாவும் பாகிஸ்தானும்​தான் அந்த நாட்டுக்கு முழுமையான ஆயுத உதவியைச் செய்தது. இவை அனைத்தையும் கோர்த்துப் பார்த்தால் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். சென்னையில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி, இலங்கை குடியுரிமை பெற்றவர் என்பதால்தான் இந்தப் பெயர்கள் அதிகமாக அடிபடுகின்றன. மேலும்...!''

''சமீபத்தில், தாவூத் இப்ராஹிம் குறித்து மோடி சொன்ன கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 'பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமை கண்டுபிடித்து இந்தியாவுக்கு கொண்டுவருவோம்’ என்று பேசினார். இதனை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் அலிகான் விடுத்துள்ள அறிக்கையில், 'பாகிஸ்தானுக்குப் பகைமை ஏற்படுத்தும் வகையில் எல்லை மீறி மோடி பேசி வருகிறார். மிரட்டல்கள் மூலமாக எங்களை அச்சுறுத்த முடியாது. மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால், பிராந்திய அமைதியைச் சீர்குலைத்துவிடுவார்’ என்று சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு அண்டை நாடுகள் பீதியில் உள்ளன. அதனால்தான் பன்னாட்டு சதிவலை இதில் பின்னப்பட்டு உள்ளது என்ற சந்தேகம் காவல் துறைக்கு வந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றம் பாகிஸ்தானைவிட இலங்கைக்குத்தான் அதிகமான அச்சுறுத்தலாகச் சொல்லப்படுகிறது. இதுவரை இலங்கைக்கு முழுமையாக ஆதரவைத் தந்துவந்தது காங்கிரஸ் அரசு. இந்த ஒத்துழைப்புக் கிடைக்காமல் போனால் அவர்களுக்கும் சிரமம். அதனால் அவர்களும் இங்கே அரசியல் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து பல காரியங்களை நடத்திக்காட்டத் துடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது!''

[thanks] ஜூனியர் விகடன் [/thanks]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 4:49 pm

''பெங்களூரு வழக்கைத்தான் ஜெயலலிதா கவலையுடன் கவனித்து வருகிறார். 'இப்படியே போனால் விரைவில் தீர்ப்பு வந்துவிடும்’ என்றே ஆளுங்கட்சியினர் சொல்ல ஆரம்பித்து உள்ளனர். எனவே புதிய மனுக்களைத் தயாரித்து பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.''

''ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா முன்னிலையில் நடந்து வருகிறது. அரசு வழக்கறிஞர் பவானி சிங் உடல்நிலை காரணமாகத் தொய்வு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு அபராதம் விதித்தார் நீதிபதி. சில நாட்களில் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜெயலலிதா மீதான வழக்கின் முழுமையான விவரங்களைக் கொட்ட ஆரம்பித்தார். 60 கோடி ரூபாய் அன்றைய மதிப்பு என்றால், இன்று அதனுடைய மதிப்பு பல்லாயிரம் கோடி என்பதை புள்ளிவிவரங்களுடன் சொன்னார் பவானி சிங். இதனைத் தொடர்ந்து எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் பதில் சொல்லும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இது முடிந்துவிடும் என்றே சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரே நாளில் 18 புதிய மனுக்கள் நீதிபதி முன்னால் 29-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ், ஜெயா ரியல் எஸ்டேட், ஜெயா கண்ட்ரக்ஷன்ஸ், ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ், கோபால் புரமோட்டர்ஸ், ஜெயா ஃபாம் ஹவுஸ் உள்ளிட்ட 12 நிறுவனங்களின் சார்பில் இந்த 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்து உள்ளார்கள். சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் இந்த மனுக்களை ஒவ்வொன்றாக வழக்கறிஞர்கள் கொடுத்தார்கள். ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து நீதிபதி வாங்கிக்கொண்டார். இவை அனைத்துக்கும் முடிவுகள் எடுக்க வேண்டும். அது சம்பந்தமான சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரைக்கும் போவார்கள். அடுத்த இழுபறிக்கான காரணமாக இவை ஆகிவிடும் போலத் தெரிகிறது!''

''ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கு என்றாலே கர்நாடக உயர் நீதிமன்றம் கறாராக நடந்து​கொள்ளத் தொடங்கி உள்ளது. ஜெயலலிதா மீதான வழக்கில் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் டெவலப்மெண்ட் என்ற நிறுவனம் புகார் அடிப்படையில் சேர்க்கப்பட்டு இருந்தது. இவர்கள் தங்கள் நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்; எங்கள் மனு மீது முடிவுகள் எடுக்கும் வரை சொத்துக்குவிப்பு வழக்கையே விசாரிக்காமல் தடை செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். 'உங்கள் நிறுவனத்தை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நான் விசாரிக்கிறேன். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கை நடத்த தடை கோருவதை ஏற்க முடியாது’ என்று சொல்லி அந்த நிறுவனத்துக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அந்த லெக்ஸ் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அப்பீல் போனது. நீதிபதி சத்திய நாராயணா முன்பு இது விசாரணைக்கு வந்தது.''

''தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று லெக்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் வாதிட்டார். அத்தோடு நிறுத்தாமல், 'சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையையே நிறுத்த வேண்டும்’ என்றும் சொன்னார். இதனை அரசு வழக்கறிஞர் பவானி சிங் மறுத்தார். 'அரசு தரப்பில் இறுதிகட்ட வாதம் நடந்துள்ளது. இந்த நேரத்தில் இப்படி கோரிக்கை வைப்பது மொத்த வழக்கையும் இழுத்தடிக்கும் நோக்கம்தான்’ என்றார் பவானி சிங். உடனே நீதிபதி சத்திய நாராயணா, 'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்டது இந்த நீதிமன்றம். எனவே விரைந்து வழக்கை முடிக்க வேண்டும். வழக்கை இழுத்தடிப்பதற்காகவே பல மனுக்கள் போடப்படுகிறது. எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல. நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதால் 10 ஆயிரம் ரூபாயை சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இது குறைவு. இதனை 10 மடங்கு ஏற்றி 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்’ என்று நீதிபதி கடுமை காட்டியிருக்கிறார். இதை வைத்துப் பார்த்தால் ஒவ்வொரு நிறுவனத்தின் சார்பிலும் வரிசையாக மனுக்கள் போடுவார்கள் என்று தி.மு.க. தரப்பு நினைக்கிறது. எப்படி இருந்தாலும் சொத்துக்குவிப்பு சுழல் தன்னை மூன்று மாதங்களுக்குள் நெருங்கும் என்று ஜெயலலிதா நினைக்கிறாராம். கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ். அவர்களையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி அமையுமானால் அவர்களையும் பகைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறாராம்'' என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரான கழுகார்,

''அமைச்சர் கே.பி.முனுசாமி தலை எப்போது வேண்டுமானால் உருளலாம். கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் காப்பாற்றவில்லை என்பதே தலைமைக்கு அவர் மீதான கோபமாம்''

மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 4:50 pm

திரும்புகிறார் முதல்வர்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததைக் கேள்விப்பட்டதும் ஆடிப் போய்விட்டாராம் முதல்வர். 'எத்தனை வருடம் ஆனாலும் இதனைச் சொல்லிக்கொண்டே இருப்பார்களே’ என்று வருத்தப்பட்டாராம். இந்த நேரத்தில் கொடநாடு பங்களாவில் தங்கி இருப்பது சரியல்ல என்று நினைத்தவர் உடனடியாக சென்னை திரும்பலாம் என்று சொல்லி விட்டாராம். மே 14-ம் தேதி சித்ரா பௌர்ணமி என்பதால் அன்றைய தினம் வழக்கம்போல ஸ்ரீசத்தியநாராயணா பூஜையை போயஸ்கார்டனிலேயே நடத்துவார் என்றும் சொல்கிறார்கள்.

'நமக்கு 33 நிச்சயம்!’

'33 இடங்கள் நிச்சயம் கிடைக்கும்’ நம்பிக்கையுடன் சொல்கிறாராம் முதல்வர் ஜெயலலிதா. அவரது கணக்குப் படி ஏழு இடங்கள்தான் மற்ற கட்சிகள் ஜெயிக்குமாம். 'நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு தொகுதிகள் தி.மு.க-வுக்கும், கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய இரண்டு தொகுதிகள் பி.ஜே.பி-க்கும் கிடைக்கும். விருது​நகரில் வைகோ, தர்மபுரியில் அன்புமணி ஆகிய இருவரும் ஜெயிப்பார்கள். புதுவையை என்.ஆர்.காங்கிரஸ் பிடிக்கும். இந்த ஏழு தொகுதிகள் நீங்கலாக அனைத்திலுமே இரட்டை இலைதான் ஜெயிக்கும்’ என்று சொல்லிவருகிறாராம் முதல்வர்!

மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 4:50 pm

கசியும் கறுப்பு ரகசியங்கள்!

வெளிநாட்டில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களது பெயரை வெளிச்சத்துக்கு கொண்டுவர பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இப்போது​தான் லேசான பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. முடிந்த அளவுக்கு இந்த விவகாரத்தை மூடி மறைக்க மத்திய அரசு துடித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் போட்ட கிடுக்கிப்பிடி காரணமாக மத்திய அரசு என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல்.டட்டு, ரஞ்சனா தேசாய், மதன் பி.லோக்குர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் மத்திய அரசு கடந்த 29-ம் தேதி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்கள். அதில் ஜெர்மனி நாட்டு லீச்டென்ஸ்டெயில் நகரில் உள்ள எல்.எஸ்.டி. வங்கியில் கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படும் 18 பேர் பட்டியலைத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் பெரும்பாலும் அறக்கட்டளைகளின் பெயரே உள்ளது. 2009-ம் ஆண்டு பெறப்பட்ட பட்டியலாம் இது. எட்டு பேர் பெயர்களை மூடிய கவரில் மத்திய அரசு கொடுத்துள்ளதாம். இதனை வெளியிட வேண்டாம் என்றும் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. '2009-ம் ஆண்டு கிடைத்த பட்டியலை மத்திய அரசு இதுவரை வெளியிடாமல் இருந்துள்ளது. இப்போதும் சில பெயர்களை மட்டுமே வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் ஆதரவு ஆட்களின் பெயரைத் திட்டமிட்டு மறைத்திருக்கிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு மறைக்க முடியும்?

மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக