புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Poll_c10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Poll_m10கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Poll_c10 
78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:51 am

First topic message reminder :

ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா

தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கத் தவறிய

கருணாநிதி; தனது மைனாரிட்டி ஆட்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது, அதனை வேடிக்கைப் பார்க்கும் அளவுக்கு காவல் துறையை சீரழித்த கருணாநிதி; அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, தனது ஆட்சிக் காலத்தில் அமளிக் காடாக மாற்றிய கருணாநிதி; 1.5.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், மனம் போன போக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

கருணாநிதி தனது அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது என்றும்; ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்று உடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வாய்க்கு வந்தவற்றையெல்லாம் கூறி இருக்கிறார்; எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் ‘armchair critic’ என்ற ஒரு சொலவடை உள்ளது. அதாவது எதைப் பற்றியும் தெளிவுற, அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளாமல்; சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, மனம் போன போக்கில், எதிர்மறை கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இதன் பொருள். கருணாநிதியின் அறிக்கை இதற்கு இலக்கணமாக அமைந்துள்ளது.

தீவிரவாதம் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறையினர் கடந்த

34 மாதங்களாக எடுத்து வருகின்றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட “போலீஸ்” பக்ருதீனை சென்னையிலும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரிலும் அடையாளம் கண்டு, அவர்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதி ஜாகீர் உசேனையும் தமிழகக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், 1.5.2014 அன்று பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் பெங்களூரு-கவுகாத்தி விரைவு ரயில், 1ஙூ மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தவுடன், எஸ் 4 மற்றும் எஸ் 5 ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்து, ஒருவர் உயிரிழந்தார்; 14 பேர் காயமுற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் என்பவை மத்திய அரசினுடைய ரயில்வே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. மாநில ரயில்வே காவல் படை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையத்திற்குள்ளோ அல்லது ரயிலிலோ ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் போது, ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தமிழகக் காவல் துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்வார்கள். அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், எனது உத்தரவின் பேரில், இந்த வழக்கு மாநிலக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட உலோக பைப், மின்கல உறை, கடிகாரத்தின் பகுதிகள் ஆகியவற்றை கொண்டு, எவ்விதமான கருவி பயன்படுத்தப்பட்டது; பயன்படுத்திய வெடிகுண்டின் தன்மை போன்றவற்றை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வெடிகுண்டு எங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராய, ரயில் வண்டி புறப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து சென்னை வந்து சேரும் வரை உள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள காமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆராயப்படுகின்றன. முதல்கட்ட விசாரணையில், காலக்கெடுவுடன் கூடிய வெடிகுண்டாக இருக்கலாம் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இந்த ரயில் குறித்த நேரத்தில் சென்னை வந்தடைந்து, புறப்பட்டுச் சென்று இருக்குமேயானால், காலை 7.15 மணிக்கு ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும் போது வெடித்திருக்கும். இது குறித்தும், மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு எந்த ஓர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் நுண்ணறிவுப் பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களிடமும், இதர சாட்சிகளிடமும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனிடமும் முழுமையான விசாரணையை காவல் துறையினர் அன்றே மேற்கொண்டனர். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ஜாகீர் உசேனிடம் தகவல் பெறப்பட்டு இருந்தால், தமிழகக் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பினை தடுத்து இருப்பார்கள். தமிழகக் காவல் துறை முன் எச்சரிக்கையுடன் தான் செயல்பட்டு வருகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க,

ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று கருணாநிதி கூறி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் பொறுப்பற்ற செயல் ஆகும்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் 1.5.2014 அன்று அளித்த பேட்டியில், “இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிளம்பி ஜோலார்பேட்டை தாண்டியவுடன் தமிழ்நாடு எல்லை வந்து விடுகிறது. எனவே, தமிழ்நாட்டு எல்லைக்குள் எங்கே குண்டு வைக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு காவல் துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கையாகத் தான் இதைக் கருத வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

இந்த விபத்து குறித்து கருணாநிதியும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும் தெரிவிக்கின்ற கருத்துகளைப் பார்க்கும் போது, தீவிரவாதிகளிடமிருந்து இவர்கள் நிறைய தகவல்களைப் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. அப்படி அவர்கள் ஏதாவது தகவல்களைப் பெற்றிருந்தால், அவற்றை உடனடியாகத் தமிழகக் காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை அனுப்ப மத்திய அரசு முன்வந்தது போலவும், அதனை எனது தலைமையிலான அரசு தடுத்துவிட்டது போலவும் தவறான செய்திகள் சில பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. மத்திய அரசின் உள் துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள் துறை செயலாளரை 1.5.2014 அன்று தொடர்பு கொண்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ, வெடிகுண்டினைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்பட்டால் அனுப்புவதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் உள் துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின், உதவியைக் கோருவதாகக் கூறினார். தேசிய பாதுகாப்புக் குழுவின் வெடிவிபத்து குறித்த வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்துள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத கருணாநிதி, இந்த ரயில் வெடிகுண்டு விபத்து குறித்து கருத்து தெரிவிக்கும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு; இந்தக் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களை கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரத் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2014 1:36 am

அடுத்த நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இந்த அறிக்கை என்னும் அக்கப்போர் இருக்காது!

அடுத்த ஆணவத்தனமான அறிக்கைகள் வருவதும், வராததும் நீதிமன்றத்தின் கையில் உள்ளது!

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 1:42 am

நில மசோதாவை ஆதரித்ததில் இரட்டை நிலை இல்லை: கருணாநிதிக்கு ஜெ., பதில்

சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின், நேற்றைய அறிக்கை:பா.ஜ., அரசால் கொண்டு வரப்பட்ட, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, அ.தி.மு.க., ஆதரித்ததற்கு, கற்பனை காரணங்களை தேடி, அற்பமான அறிக்கையை வெளியிட்டு உள்ளார், கருணாநிதி.

தனியார் கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் குறித்து, கருணாநிதி கூறியிருப்பது சரியல்ல. தனியார் கம்பெனிகளுக்கு, தமிழகத்தில் நிலம் எதுவும் கையகப்படுத்தப் படுவதில்லை. எனவே, இதனால், விவசாயிகள் யாரும் எந்தவித பாதிப்பிற்கும் ஆளாக மாட்டார்கள்.கடந்த 2013ல், லோக்சபாவில் பேசும் போது, 'தனியார் நிறுவனங்களுக்காக, நில எடுப்பு செய்யக் கூடாது' என, அ.தி.மு.க., தன் கருத்தை தெரிவித்ததாக, கருணாநிதி கூறியுள்ளார். தற்போதும், அதே கருத்தையே, அ.தி.மு.க., கொண்டுள்ளது.

தற்போது லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, ஐந்து வகை திட்டங்களுக்கு சில விதிவிலக்கு அளிக்க, மாநில அரசுக்கு, அதிகாரம் வழங்கி உள்ளது. மாநில அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்த சட்டத்தை, எதற்காக எதிர்க்க வேண்டும்.கடந்த 2013ல், மசோதாவை அ.தி.மு.க., எதிர்த்து, தற்போது ஆதரவு அளித்தது இரட்டை நிலை என, கருணாநிதி கூறி உள்ளார். மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மசோதாவிற்கு, 2013ல் எதிர்ப்பு தெரிவித்தது. மாநில அரசின் அனுமதி இல்லாமல், மத்திய அரசு நிலம் எடுப்பதை அ.தி.மு.க., எதிர்த்தது. விவசாயிகள் நலன் பாதிக்காமல், மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும், தற்போதைய சட்டத்திருத்தத்தை ஆதரித்துள்ளது. இதில், எவ்வித இரட்டை நிலையும் இல்லை.இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 1:44 am

அ.தி.மு.க., ஆதரவு உலகிற்கு தெரியும்: கருணாநிதி

சென்னை: 'நிலம் கையகப்படுத்தும் மசோதா, லோக்பாவில் ஓட்டெடுப்புக்கு வந்தபோது, பா.ஜ., கூட்டணி கட்சியான, சிவசேனா கூட புறக்கணித்த நிலையில், அ.தி.மு.க., ஆதரவு அளித்த காரணம், உலகிற்கு தெரியும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, 2013ல் கொண்டு வந்தது. அதில், நிலம் கையகப்படுத்த, 80 சதவீத விவசாயிகள் ஒப்புதல் வேண்டும்; விவசாயம் செய்யும் நிலமா என பார்க்க வேண்டும் என்று இருந்தது.இதில், திருத்தம் செய்து, பா.ஜ., அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தில், குறிப்பிட்ட ஐந்து துறைகளுக்கு, நிலத்தை கையகப்படுத்தும்போது, விவசாய நிலமா என பார்க்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கு, விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்ப்பை பொருட்படுத்தாமல், அவசரச் சட்டத்துக்கு, லோக்சபா அனுமதியை, பா.ஜ., பெற்றுள்ளது. இதற்காக நடந்த ஓட்டெடுப்பின் போது, காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பா.ஜ.,வின், கூட்டணி கட்சியான சிவசேனா, ஓட்டெடுப்பை புறக்கணித்துள்ளது. ஆனால், மேலிட உத்தரவை ஏற்று, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், மசோதா நிறைவேற ஓட்டளித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.காங்கிரஸ் ஆட்சியின் போது, இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தது. அதற்கு, பல்வேறு குறைகள் மசோதாவில் உள்ளதாகவும் குறிப்பிட்டது. இப்போது, ஆதரவாக ஓட்டளிக்கும்போது, அ.தி.மு.க., சுட்டிக் காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதா என தெரியவில்லை.இதேபோல், காங்கிரஸ் கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்துவிட்டு, இப்போது ஆதரிக்கிறது. இதன் மூலம், பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. அ.தி.மு.க.,வின் ஆதரவு நிலைக்கான காரணங்கள் உலகிற்கு தெரியும்.இவ்வாறு, அறிக்கை யில் கூறியுள்ளார்.

தி.மு.க., ஆர்ப்பாட்டம்:

'மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை, ரத்து செய்யக் கோரி, வரும், 20ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்து உள்ளார்.

பெரும்பான்மை:

அவரது அறிக்கை: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை, பா.ஜ., அரசு பிடிவாதமாக, தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி நிறைவேற்றி உள்ளது. முதலில், தீவிரமாக எதிர்த்த அ.தி.மு.க., என்ன காரணத்தினாலோ, ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு, திடீரென்று ஆதரவு தெரிவித்து, பார்லிமென்டில் ஓட்டளித்து உள்ளது.தமிழகத்தில், அமைச்சர் ஒருவர் கொடுத்த நெருக்கடி காரணமாக, மூத்த பொறியாளர் முத்துக் குமாரசாமி, மன உளைச்சலால் தற்கொலை செய்துள்ளார். ஏற்கனவே, ஈரோட்டில் வீட்டுவசதி வாரியத்தில் பணியாற்றி வந்த பழனிசாமி என்ற அதிகாரி, நெல்லை யில் ஒரு வட்டாட்சியர், பொதுப்பணித் துறையிலே ஒரு பொறியாளர் என, தற்கொலை பட்டியல் நீள்கிறது.

காயம்:

சென்னையில், புதிய தலைமுறை 'டிவி' அலுவலகத்தில், இருமுறை தாக்குதல் நடைபெற்று, அங்கே பணியாற்றும் பெண் ஒருவர் உட்பட, சிலர் காயமடைந்து உள்ளனர். கோவை மாநகராட்சி கவுன்சிலர் மீனா லோகு, அ.தி.மு.க., வினரால் மனிதாபிமான மின்றி தாக்கப்பட்டு உள்ளார்.

புராணம்:

அ.தி.மு.க., ஆட்சி யில், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா புராணம் பாடும் பேனர்கள் மற்றும் ப்ளக்ஸ் போர்டு களை அகற்றியதற்காக, 'டிராபிக்' ராமசாமியை, வீண் வம்புக்கு இழுக்கும் நோக்கத்தோடு, அவரை கைது செய்துள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, வரும், 20ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 16, 2015 12:12 pm

அக்கப்போர்... கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) - Page 4 3838410834

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக